எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

10 நேத்திரனை ஆளும் பௌர்ணமி!

priya pandees

Moderator

அத்தியாயம் 10

குஹனும் பௌர்ணமியும் அறைக்கு வந்ததும், "டின்னர் போய்ட்டு வந்தப்றம் நீ வொர்க் ஸ்டார்ட் பண்ணா சரியா இருக்குமா சித்து? எவ்வளவு நேரம் எடுத்துப்ப?" என்றான் குஹன்.

"என்ன தனியா விட்டா வேலை சீக்கிரம் முடியும். நீங்க மூணு பேரும் போய் உங்களுக்கு பிடிச்சதாவே சாப்பிட்டுட்டு வாங்க. இனி அதுலயும் என் கண்ட்ரோல் உங்களுக்கு வேணாம்" என்றாள் அலட்சியமாக.

"நீயும் வா சித்து. நா உனக்கு ட்ரஸ் ஆல்ட்ரேஷனுக்கு ஹெல்ப் பண்றேன்" என குஹன் கூற, புருவம் உயர்த்தி தான் பார்த்தாள். அவளை மீண்டுமாக அவன் அழைப்பதும் புதிது, அவளுக்கு உதவுகிறேன் என கூறுபவனும் புதியவனாக தான் தெரிந்தான் அவளுக்கு.

"நிஜம்டி. உன் வொர்க் தெரியாது தான் பட் உன்ன சியரப் பண்றேன்" என அவன் கூறிய விதத்தில் வாயை சுளித்தாள் பௌர்ணமி.

"என்னடி?"

"என்ன பிரச்சினை உங்களுக்கு?"

"நீதான் பிரச்சினை. வரலாமே நீ? நாந்தான் ஹெல்ப் பண்றேன்னு சொல்றேனே?"

"என் வேலைய எனக்கு பார்த்துக்க தெரியும். நீங்க ப்ளீஸ் போங்க"

அதற்கு மேல் அவனுக்கும்‌ கெஞ்ச வரவில்லை. சில நொடிகள் பார்த்து நின்றவன், "ஓகே சித்து பை" என கிளம்பி, "ஹரிணி, கிருத்தி ரெடியா?" என அவர்களை அழைக்கச் செல்ல, இருவரையும் கிளம்ப சொல்லிவிட்டு அறைக்குள் சென்று திரும்பி வந்தவன் முன் சென்று நின்றாள் பௌர்ணமி.

"நாளைக்கு நா வெகேட் பண்ணணும். சைன் எப்ப பண்ணுவீங்க?" என கேட்க,

"என் டிமாண்ட் எப்ப கிடைக்கும்?" என்றான் அவனும் திமிராக.

"ம்ச் இது ஜோக் இல்ல குஹன். எனக்கு கண்டிப்பா டிவோர்ஸ் வேணும்"

"எனக்கும் ப்ராப்பர் ரீசன் வேணும் ப்ளஸ் என் டிமாண்ட்டும்" விட்டு கொடுக்க மாட்டேன் என தான் நின்றான்.

"டிவோர்ஸ் பண்ண போறீங்களா?" என்றாள் அவன் பின்னிருந்து ஹரிணி.

"ம்ம் அம்மாக்கு வேணுமாம்" என்றுவிட்டான் சாதாரணமாக. அதிர்ந்து மறைத்து வைக்க முயன்றதாக எதுவும் காண்பிக்கவில்லை அவன்.

"ஏன்மா? அப்படி பண்ணா நாம தனிதனியா தானே இருக்கணும்?" என்றாள் பௌர்ணமியிடம்.

"அல்ரெடி அப்படி தானே இருக்கோம் ஹரிணி. எப்பவாவது தான் உங்கப்பாவ மீட் பண்றீங்க? இனியும் அப்படியே பண்ணலாம் நீங்க" என்றாள் பௌர்ணமி.

அவளையே குறுகுறுப்புடன் பார்த்து நின்றான் குஹன். பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த பெரிதாக எதுவும் செய்யாமல் எளிமையாக முயல்கிறாள் என புரிய பார்த்து நின்றான்.

"பட் என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் கொஸ்டீன் பண்ணுவாங்களே?" என்றாள் ஹரிணி முகத்தை சுருக்கி கொஞ்சம் யோசனையான பாவத்தில்.

"நீ கண்டிப்பா ஆன்ஸர் பண்ணணும்னு இல்ல ஹரிணி. தேட்ஸ் தெயர் டிசிஷன்னு சொல்லிடணும்" என பௌர்ணமி சொல்லிதர,

"ம்ச் இல்லம்மா. என் ஃப்ரெண்ட் ஷெரிஃப் இருக்கான்ல அவங்க அம்மாவும் அப்பாவும் டிவோர்ஸ் பண்ணிட்டாங்க. அப்ப எல்லாரும் அவன்ட்ட ஏன் பண்ணாங்க எதுக்கு பண்ணாங்கன்னு கேட்டாங்க, அப்ப நானே கேட்டேன். சோ இப்ப என்ட்ட கொஸ்டீன் வர்றப்போ நா ஆன்ஸர் பண்ணாம இருக்க முடியாது. நா சொல்ற ஆன்சர் ரொம்ப நீட்டா அவங்க அக்ஷப்ட் பண்ணிக்குற‌ மாதிரி இருக்கணும். நீங்க ரீசன் என்னன்னு எனக்கு சொல்லுங்க" என பல்வேறு பாவனையில் கேட்டவளை கண்டு குஹன் உதட்டுக்குள் சிரிக்க, பௌர்ணமி திடுக்கிட்டு விழித்தாள்.

'டிவோர்ஸ்!' எனும் வார்த்தை ஒரு பத்து வயது பெண்ணிற்கு அவ்வளவு பழக்கத்தில் உள்ள ஒன்றா? எளிதாக ஏற்று அதை கடக்க முயல கூடிய ஒன்றாக இருக்கிறதா? என படபடவென்று அடித்து கொண்டது அவள் உள்ளம். அவள் மகளை இது பெரிதாக பாதிக்க கூடாது என எண்ணித்தான் சாதாரணமாக அவள் கூறியது ஆனால் அவளைவிட சாதரணமாக ஹரிணி அதை திருப்பி கேட்கையில் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருவர் முகத்தையும் பார்த்தவன், "ம்ச் அம்மா சும்மா என்ன டீஸ் பண்ண விளையாடுறா ஹரிணி. டோன்ட் மேக் சென்ஸ் ஆஃப் இட்" என்றான் சமாதானம் போல்.

"சுயரா ப்பா?" இன்னுமே அவளிடம் குழப்பம் இருந்தது.

"எஸ்டா" என ஹரிணி தோளில் தட்டியவன், "நீ டின்னர் வரலையா?" என்றான் மறுபடியும் பிள்ளைகள் முன் ஒருமுறை பௌர்ணமியிடம்.

முறைத்து பார்த்தவள், "பிடிச்சத சாப்பிடுங்க பட் லிமிட்டா ஓகேவா? கிருத்தி கவனம் ஹரிணி" என மகளிடம் மட்டும் பதில் கூறி விலகி நின்றாள் பௌர்ணமி.

"ரொம்ப ஓவரா தான்டி பண்ற. காரணம் மட்டும் தெரியட்டும் மொத்தமா வச்சுக்குறேன் உன்ன" என அவளிடம் முனங்கி கொண்டே தான் கடந்துச்‌ சென்றான் குஹன்.

மூவரும் கிளம்பி சென்ற சற்று நேரத்திலேயே அஞ்சா நம்பி தேவையான பொருட்களுடன் வந்துவிட, அவள் வேலையில் அமர்ந்து கொண்டாள் பௌர்ணமி. தையலுக்கு தேவையான அதி நவீன இயந்திரம் கூட வாடகைக்கு வாங்கி வந்திருந்தான். இது அவர்கள் துறையில் வழக்கம் தான் என்பதால் தான் குஹனும் அவ்வளவு எளிதில் அவளை வரவழைத்திருந்தான்.

இங்கு குஹன், ஹரிணி, கிருத்தி மூவரும் கிளம்பி வெளியே வந்து டேக்சிக்கு காத்து நிற்க, அலட்டலான அழகில் கிளம்பி வந்து தானும் டேக்சிக்கு காத்து நின்றாள் பல்லவி.

"அவுட்டிங்கா பல்லவி?" என குஹனே தான் கேட்டான்.

"ஆமா சார். நாளைக்கே ரிட்டர்ன் ஆகுறேன்ல சோ சில காஸ்மெட்டிக்ஸ் இங்க ப்ராண்ட்டா சீப்பா கிடைக்கும். அது வாங்கிடலாம்னு கிளம்பிட்டேன்"

"ஓகே. சீக்கிரம் வந்து ரெஸ்ட் எடுத்திடுங்க. நாளைக்கு கண்டிப்பா ஷுட் முடிக்கணும். சித்து எதும் ட்ரெஸ் ஆல்ட்ரேஷன் கரெக்ஷன்கு கால் பண்ணா கனெக்ட் பண்ணிக்கோங்க"

"கண்டிப்பா சார். நீங்களும் அவுட்டிங்கா?"

"ம்ம் டின்னர்"

"ஓ! நானும் ஜாயின் பண்ணிக்கவா? டின்னர் முடிச்சுட்டு தான் நா ஷாப்பிங் போகணும். குளிச்சதும் ரொம்ப பசி இங்க வேணாம்னு தான் வெளில பாத்துக்கலாம்னு கிளம்புறேன். ஃபேமிலி டைம்னா நோ இஷ்யூஸ் நா வேற எங்கேயும் மேனேஜ் பண்ணிப்பேன் சார்"

அவள் அவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகு மறுக்க தோன்றாமல், மகளையும் மகனையும் பார்த்தான், அவர்களுக்கு அதில் உடன்பாடு இருக்க வேண்டும் என்பதற்காக அவன் பார்வை பறிமாறிக் கொள்ள, சின்ன சிரிப்புடன் அதையும் பார்த்து நின்றாள் பல்லவி.

"வரட்டும் ப்பா" என ஹரிணி சொல்ல, கிருத்தி தலையசைக்க, அவரவருக்கு வந்த காரில் நால்வரும் ஒரே உணவகத்தில் சென்று இறங்கினர்.

அது ஒரு இந்திய உணவகம், நிறைய இந்தியர்களை பார்க்க முடிந்தது. கூட்டம் கூடாமல் மிக நேர்த்தியாக குஹனோடும் பல்லவியோடும் கைகுழுக்கி, சுயமி எடுத்துக் கொண்டு நகர்ந்தனர் சிலர்.

பிள்ளைகளிடம் இருவருக்கும் பிடித்ததை அவர்களிடமே வாங்கி கொள்ள சொன்னவன், அவனுக்கும் அவனே சொல்லி கொள்ள, பல்லவியிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை, அதனால் அவளே அவளுக்கானதை வரவழைத்து உண்ண தொடங்கினாள்.

"சிமி எதுவும் சொன்னாங்களா சார்?" என்றாள் சற்று நேரம் அமைதிக்கு பின்.

"எதைபத்தி?" என்றான் அவனும் சாப்பிட்டவாறே,

"ஸ்விம்மிங் ஃபூல்ல வச்சு நாங்க பேசிட்டத பத்தி?"

"ஏன் அவங்க என்ன சொல்லணும்? நீங்க என்ன எக்ஸ்பெக்ட் பண்றீங்க?" என்றான் எதையும் தெரியும் தெரியாது என காட்டிக்கொள்ளாமல்.

"நானா? நா எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணல சார். பட் கிசுகிசுலாம் ரொம்ப ஈசியா எடுத்துக்க வேண்டிய விஷயம். இதுக்காகலாம் டிவோர்ஸ்னு போறது ரொம்ப பெரிய டிஷிஷென் இல்லையா? அவங்களும் இதே ஃபீல்டுல இருக்காங்க, அவங்களே இத என்கரேஜ் பண்ற மாதிரி நடந்தா நல்லா இல்லைன்னு சொன்னேன். இதுதான் ரீசனான்னு தெரியல பட் மீடியால என் நேம் வந்துட்டு அதுக்கு அப்புறமு நா அவங்கள பார்த்துட்டு சும்மா கடந்து போனா தான் கில்ட்டா இருக்கும். அதான் பேசுனேன். ஆனா என்ன நினைச்சாங்கன்னு கடைசி வரை சொல்லவுமில்ல காட்டிக்கவுமில்ல. என்னால அவங்க என் பேச்ச கேட்டு கோச்சுட்டாங்களா தப்பா நெனச்சாங்களா, உன் விளக்கம் தேவையில்லன்னு மீன் பண்ணாங்களான்னு ஒன்னுமே புரியல. அப்படி ஒரு பார்வை பார்த்துட்டு நின்னாங்க. நீங்களாவது சொல்லுங்களேன் சிமி கோச்சுகிட்டாங்களா?"

"ம்கூம்!" என மட்டும் தலையை அசைத்தான் குஹன். அவள் கேட்டதற்கு பதில் அவ்வளவே என முடித்துக்கொண்டான்.

"நீங்க எங்க டாடிய செகென்ட் மேரேஜ் பண்ணிக்க போறீங்களா?" என்றாள் இருவரின் பேச்சையும் கவனித்திருந்த ஹரிணி.

அதிர்ந்த பல்லவி, "நோ நோ! ஏன் அப்படி கேட்குறீங்க? அம்மா சொன்னாங்களா அப்படி? சார் நா இப்படி எதுவுமே மீன் பண்ணி பேசல" என பல்லவி பதறிவிட,

"ஹரிணி!" என அதட்டிய குஹன், "ஒரு தேர்ட் பெர்சன்ட்ட இப்படி தான் கொஸ்டீன் பண்ணுவாங்களா? ரூம்ல அப்பா உன்ட்ட என்ன சொன்னேன்?" என்றான் மகளிடம்.

"இல்லப்பா. சாரி பல்லவி மேம். ஆக்சுவலி ப்பா. என் ஃப்ரெண்ட் ஷெரிஃப் அப்பா இப்படிதான் இன்னொரு மேரேஜ் பண்ணிட்டாங்க. அப்றம் உங்களுக்கு தெரியுமே ஷன்வி அவளோட அம்மா அப்பாவும் டிவோர்ஸ் பண்ணிக்க போறதா சொன்னா. ஸ்கூல் ஓபன் பண்ணப்றம் போய் கேட்டா தான் பண்ணிட்டாங்களா இல்லையா தெரியும். பட் அவ அப்பாவும் இன்னொரு லேடிய மேரேஜ் பண்ணிக்க போறாங்கன்னு சொன்னா. இப்ப இவங்களும் உங்க டிவோர்ஸ் பத்தி பேசுறாங்க தானே அதான் கேட்டேன்?"

"இதுவே தப்பு தான் ஹரிணி. ஷெரிஃப், ஷன்வி, ஃபேமிலி மேட்டர தெரிஞ்சுக்கவா ஸ்கூல் போற நீ? அதெல்லாம் அவங்க வீட்டு பெரியவங்க டிசைட் பண்ணுறது அதைப்பத்தி நீங்க உங்களுக்குள்ள டிஸ்கஸ் பண்றதே தப்பு"

"அதெப்படி தப்பாகும்? உங்கள கேட்காம நாங்க எப்படி ஒரு டிஷிஷன் எடுக்க கூடாதோ சேம் நீங்களும் எங்கள கேட்காம எடுக்க கூடாது தானே?"

"நா உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன். பட் வித் அவர் மாம் இத நாம டிஸ்கஸ் பண்ணலாம். இப்ப இங்க வேணாம்" என கூறிவிட. அந்த குரலுக்கு அமைதியாகிவிட்டாள் ஹரிணி.

"சாரி சார்" என பல்லவி சொல்ல,

"நத்திங் பல்லவி. நா இத சால்வ் பண்ணிப்பேன். ரூமர் அஸ்யூஸ்வல் நீங்க கடந்து போயிடுங்க பெட்டர்"

"சுயர் சார். நா கிளம்பவா?" என எழுந்து கொண்டாள். உண்மையில் அவளுக்கு பயமாக இருந்தது. தன்னால் என எந்த பிரச்சனையும் வந்துவிட வேண்டாம் என மட்டும் நினைத்து கிளம்பி விட்டாள்.

"ஓகே பல்லவி. பை" என குஹன் முடித்துக் கொண்டான். மற்ற இருவருக்கும் கூட சொல்லிவிட்டே விடை பெற்றாள் பல்லவி.

நால்வரும் ஒரே மேசையில் அமர்ந்தது, சிரித்து பேசியவாறு உண்டது பின்னர் கிளம்பிச் சென்றது என அனைத்தும் பல கோணங்களில் படமெடுக்க பட்டு அங்கிருந்த சிலர் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது.

இங்கு உடையில் மாற்றம் செய்ய கவனத்தில் இருந்தவளுக்கு, அந்த உடையில் இடதுபக்க இடுப்பு வளைவில் வரும் இடம் முழுவதும், வெறுமையாக இருப்பதுபோல் தோன்ற, அதில் ஏதாவது டிசைனிங் வேலை செய்ய அவள் வரைபடங்களில் ஒன்றை தேடினாள். எதுவும் திருப்தியாக இல்லாமல் போக, யோசித்து அமர்ந்திருந்தவளுக்கு, திடீரென மகள் உடையில் அவள் தற்காலிகமாக போட்டு தந்த பேட்டர்ன் நினைவில் வர, வேகமாக குஹன் அறையை தேடிச் சென்றாள். அங்கு தான் மகள் ஹரிணியின் உடைகள் இருந்தது.

அங்கு சென்று அதை தேட தொடங்கியதுமே அவள் தேடாமலே கிடைத்தது, குஹன் அன்று வாங்கி வைத்திருந்த பெயிண்ட்டிங்.

அவளும் அவனும் காதலிக்கையில் கூட இவ்வாறு தீவிர காதலுடன் அமர்ந்திருந்ததில்லை.

அவள் மடியில் அவன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதும், அவள் அவனை காதல் ததும்ப ரசிப்பதுமான பாவனையில் இருந்த வரைபடத்தை பார்க்க பார்க்க உள்ளுக்குள் அவளுக்கு பூகம்பமே வெடித்தது. 'அவள் அப்படி ஒன்றை அவனுக்கு கொடுக்கவே இல்லை என்பதை காட்டத்தான் இந்த வரைபடத்தை வாங்கி வைத்திருக்கிறானா?' என விடாமல் கேள்வி கேட்டது அவள் உள்ளம்.

அந்த வரைபடத்தை அப்படியே வைத்துவிட்டு தலையை தாங்கி குனிந்து அமர்ந்து கொண்டாள். அவள் தன்மானத்துடன் அவளது சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் அவனுடைய சுதந்திரத்தையும் பறிக்காமல் வாழ்ந்ததாக நினைத்திருக்க, அவ்வாறு இருந்தால் அங்கு காதல் எவ்வாறு இருக்கும் என கேட்பது போலிருந்தது அந்த வரைபடம்.

காதல் கல்யாணம், அழகான இரு குழந்தைகள், பிடித்த வேலை, பரபரப்பான வாழ்க்கை, இவர்கள் இப்படி தான் என புரிந்து ஏற்றுக் கொண்ட சொந்தங்கள், இதெல்லாம் அவள் அவ்வாறு சரியாக நடந்ததால் தானே என பூரித்திருக்க, இதில் எங்கு தவறினோம்? ஏன் இந்த எல்லாம் வெறுத்த நிலை? ஏன் இந்த மன உளைச்சல்? ஏன்? ஏன்? என யோசித்தாலே எப்போதும் போல் இப்போதும் தலையெல்லாம் கிறுகிறுத்தது.

"வேற எதுவும் வேணுமா மேடம்?" என வந்து நின்ற அஞ்சாநம்பி அவளை மீட்க, அந்த வரைபடத்தை அப்படியே வைத்துவிட்டு எழுந்து வந்து, மிக எளிதான ஒரு ஆர்ட் வேலையை எம்ப்ராய்டரி செய்து அவனிடம் நீட்டிவிட்டாள்.

"பல்லவிட்ட ஒருக்கா ட்ரை பண்ணிட சொல்லுங்க. சேஞ்ச் இருந்தா கொண்டு வாங்க" என கொடுக்க, அவன் பல்லவிக்கு அலைபேசியில் அழைத்தவாறு சென்றுவிட்டான்.

மீண்டும் யோசித்து குழப்பிக் கொள்ள மனமில்லாமல், ஒரு தூக்க மாத்திரையை விழுங்கி விட்டு படுத்துவிட்டாள். தைத்து கொடுத்ததை சரிபார்த்து திரும்ப வாங்கி வர சொல்லியிருக்கிறோம் என்பதை சொன்ன நொடியே மறந்துவிட்டு மாத்திரையை விழுங்கி படுத்திருந்தாள். அவ்வளவு அயன்றிருந்தது அவள் மனமும் மூளையும்.

குஹனும் பிள்ளைகளும் திரும்பி வந்தபோது அஞ்சாநம்பி, பௌர்ணமி அறை வாசலிலேயே நின்றான்.

"என்னாச்சு நம்பி?"

"மேடம் ட்ரெஸ் ஸிடிட்ச் பண்ணி கொடுத்துட்டாங்க. பல்லவிட்ட சரிபார்க்க சொன்னாங்க, பல்லவியும் ஃபிட்டிங் ஓகேன்னு சொல்லிட்டாங்க, அதான் நா அத மேடம்ட்ட சொல்லிட்டு ரென்ட்டுக்கு எடுத்த எல்லாத்தையும் ரிட்டர்ன் பண்ணிட்டு வந்திடலாம்னு வந்து காலிங் பெல் அடிக்கிறேன் மேம் திறக்கவே இல்ல சார்" என்றான்.

"தூங்கிட்டாளா என்ன?" என நேரத்தை கைபேசியில் பார்த்தவாறே அவள் எண்ணுக்கு அழைக்க அழைப்பு முழுவதும் சென்று நின்றது அவள் ஏற்கவில்லை.

"நானும் ட்ரை பண்ணேன் சார்" என்றான் அஞ்சாநம்பி தன் கைபேசியை எடுத்துக்காட்டி.

சுருங்கிய புருவத்துடன், லாக்கில் கைவைத்து சுழற்ற அது திறந்து கொண்டது. பிள்ளைகள் இருவரும் உள்ளே ஓட, வேகமாக சென்றவனும் மனைவி இருந்த அறையை சென்று பார்த்தான். நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என பார்த்ததும் தெரிந்தது.

வெளியே வந்தவன், "தூங்கிட்டா நம்பி. நீ எடுத்துட்டு போ. மார்னிங் பேசிக்கலாம்" என்றதும் அஞ்சாநம்பியும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

"ஹரிணி, கிருத்தி ப்ரஷ் பண்ணிட்டு, பாடி வாஷ் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு படுக்கணும்" என அவர்கள் அறைக்குள் செல்ல, இரண்டும் குளியலறைக்குள் அடிவைத்து கொண்டிருப்பது கேட்டது, அங்கே விரைந்தவன், கிருத்தியை முதலில் கை கால்களை தண்ணீரில் நனைத்து வெளியே தூக்கி வந்துவிட, ஹரிணியும் சுத்தப்படுத்தி கொண்டு வர, இருவரையும் தூங்க வைத்து விட்டே மீண்டும் மனைவியை தேடி வந்தான்.

அவளருகில் படுக்கச் சென்றபோது தான் தூக்க மாத்திரை அவன் கண்ணில் பட்டது. பத்து மாத்திரை இருக்கும் அட்டையில் மூன்று காலியாகியிருந்தது, பெரு மூச்சுடன் அதை பார்த்தவன், அவள் தலையை கோதி கொடுத்து, "சித்து!" என அழைத்து பார்த்தான்.

பின், "ஏன்டி? என்ன குழப்பத்துல இருக்க நீ?" என கேட்டான், அவளின் ஏறியிறங்கும் மூச்சே பதிலாக கிடைத்தது.

வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவனுக்கு தூக்கம் மட்டும் வர மறுத்தது. அவள் விவாகரத்து கேட்டதெல்லாம் அவனுக்கு அவ்வளவு பயத்தையோ கோபத்தையோ தரவில்லை, ஆனால் அவளுள் இருக்கும் குழப்பம் அதை சொல்லமாட்டேன் என பிடிவாதமாக இருப்பதும் காரணத்தை சொல்லமாட்டேன் ஆனால் விவாகரத்து வேண்டும் என அடம் பிடிப்பதும் தான் அவனுக்குள் எரிச்சலை உண்டு பண்ணி கொண்டிருந்தது.

அவனுக்கு தெரிய கூடாது ஆனால் அவன் ஈகோவை சீன்டிவிட்டால் உடனே விவாகரத்து கொடுத்துவிடுவான் என கணித்து தான் அவள் நேரடியாக ட்வீட் செய்ததும் என நன்கு புரிந்திருந்ததால் தான் அமைதியாக அவளை வம்பிழுத்து கடந்து கொண்டிருக்கிறான்.

அவன் இன்னும் காரணத்தை வெளியே தேடவில்லை. நிச்சயமாக காரணம் அவளுக்கும் அவனுக்கும் இடையே தான் இருக்க வேண்டும் என தீர்க்கமாக நம்பினான்.

இப்படியே யோசித்திருந்ததில் அங்கு ஓரத்தில் மேசையில் அவள் கைபேசி கண்ணில் பட்டது. இதுவரை அதை அவன் எடுத்த பார்த்ததில்லை. அதுவும் அவர்கள் ப்ரைவசியில் ஒன்றானது. அவள் பொருட்களை அவன் எடுத்து பார்க்க கூடாது அவனிதை அவள் எடுத்துப் பார்க்க மாட்டாள். அப்படி இதுவரை எடுத்து பார்க்காததை இப்போது அவள் அறியாமல் எடுத்துப் பார்க்கவே அவனுக்கு யோசனையாக தான் இருந்தது.

"எடுத்து பார்த்தேன்னு தெரிஞ்சா வக்கீல் வாய்தான்னு எதுவும் இல்லாம ஸ்ட்ரைட்டா டிவோர்ஸ் தான்" என யோசித்தே அதை எடுத்து பார்த்தவனுக்கு அங்கு அவனை மூன்று நாட்களாக யோசனையில் வைத்திருந்த காரணம் காத்திருந்தது.

இந்தியாவில் மறுநாள் காலையில், விசாலாட்சி குடும்பம் அவர் மகன் பற்றிய செய்தியில் தான் எழுந்தது. இன்ஸ்டா, ஃபேஸ்புக் முழுவதும் குஹனும், பல்லவியும், பௌர்ணமியும் தான் தலைப்பாக இருந்தனர். அவர்கள் இருவரையும் பற்றி மாறி மாறி பேசி அவரவர் யூடியூப் பக்கத்தின் வியுவ்ஸை ஏற்றிக் கொண்டிருந்தனர் நெட்டிசன்கள்.

இதை கண்டு குஹனின் அக்காவும் அண்ணனும் அவரிடம் சண்டைக்கு செல்ல, விசாலாட்சி, விஸ்வநாதரையும் இழுத்துக் கொண்டு காலையிலேயே பௌர்ணமி வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்.

அங்கு நிலன், வெளியே தோட்டத்தில் சிறுவர்களுக்கான புத்தகத்தை வைத்து கொண்டு ஏதோ யோசனையில் இருந்தவனை, விசாலாட்சி வந்த வேகத்தில் முதுகில் பட்டென்று ஒன்றை வைத்திருந்தார்.

"ம்மா!" என முதுகை தேய்த்து கொண்டே திரும்ப, முறைத்து கொண்டு நின்றார் விசாலாட்சி.

"ஏன்?" என பாவமாக கேட்டவன், "வாங்க மாமா!" என்றான் விஸ்வநாதரிடம்.

"அ'ன்னா ஆ'வன்னா படிக்கிறியாக்கும் இப்பத்தான்?"

"பாப்பா புக்கு அத்த குடுத்துட்டு ஓடிட்டா" என அவனும் முறைத்தான்.

"ஓஹோ அப்படி என்னத்த அதுல தெரியுதுன்னு கார் வந்த சத்தம் கூட கேட்காம தீவிர யோசனையில இருந்த?"

"அவனுக்கும் கவலை இருக்கும்ல விசாலா சும்மா நீயும் எதாவது பேசி டென்ஷன் பண்ணாத" என்றார் விஸ்வநாதர்.

"நீங்க வேற செத்த சும்மா இருங்க. இப்ப அவனே சொல்லுவான். கவலை படுற முகரைய அப்றம் சேர்ந்து பாராட்டுவோம்" என எரிச்சலாக அவரிடம் கத்திவிட்டு, "நீ சொல்லு நிலா" என்றார் அவனிடம்.

சலிப்பாக பார்த்தவன், "இந்த ஈ எழுத்து இருக்குள்ள? அது உயிரெழுத்துல முதல்ல வந்ததா இல்ல ஈக்கு வச்சப்றம் உயிரெழுத்துல சேர்த்துட்டாங்களான்னு யோசிச்சுட்ருந்தேன். போதுமா? அதையும் நா பெத்த பிள்ளை தான் என்ட்ட கேட்டுட்டு போனா அதான் என்ன பதில் சொல்லலாம்னு யோசிச்சுட்ருக்கேன். உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க அவகிட்ட சொல்லிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிடுறேன்" என்றான் கடுப்புடன்.

"இப்ப ஈ பிரச்சினை தான் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை?"

 

priya pandees

Moderator

"இல்ல தான். அதான் காலைலயே கிளம்பி வந்திருக்கீங்களே உங்களைவிட வேற எந்த பிரச்சனையும் முக்கியமே இல்ல தான்" என பேசிக்கொண்டிருக்க, அவன் அம்மா வந்துவிட்டார்.

"வாங்கண்ணா, வாங்க மதினி" என அவர் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் செல்ல, கையோடு நிலன் கையையும் பிடித்திழுத்து கொண்டு தான் உள்ளே சென்றார் விசாலாட்சி.

"அங்க என் புள்ளைய அவ பிள்ளைகளையும் சேர்த்து எவகூடவோ கூத்தடிக்க விட்டுட்டு உன் சிலுப்பட்ட அக்கா என்னடா செய்றாளாம்? இதுக்கு தான் அவ்வளவு அவசரமா கிளம்பி போனாளாமா? புது குடும்பத்துடன் ட்ரைக்டர் குஹன்னு ந்யூஸ்ல போடுறளவுக்கு இருக்குடா அவன் ஆட்டம்" என அவர் அவனிடம் கடிக்க,

"தெரியலையே அத்த. உங்க புள்ள எப்ப என்ன பண்ணுவாருன்னு உங்களாலயே கண்டுபிடிக்க முடியலனா நா பாவம் இல்ல?"

"மண்ணாந்த மண்ணாந்த" என அவன் தலையில் தட்டி, "நா சொன்ன வேலை என்னாச்சு. அவங்கள முதல்ல அங்க இருந்து கிளப்பணும்னு சொன்னேன்ல?" என கேட்க,

"நா என் ஃப்ரெண்ட்டுட்ட பேசிட்டேன். அவன் தான் இனி எதாவது செய்யணும்"

"எப்ப செய்வானாம்? ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்கிட்டு போனப்றமா?"

"அக்கா வாழ்க்கை கொஞ்சம் சீக்கிரம் பாருடான்னே சொல்லிட்டேன் அத்த" என்றவன், "இருங்க உங்க முன்னயே பேசுறேன் பாருங்க" என்றவாறு அவர் முன்னவே அவன் நண்பனுக்கு அழைத்து பேச,

"ஆஃபிசியல் மெயிலும், ஃபோன் காலும் இன்னைக்கு போயிடும்டா. அவங்க மூணு நாள்ல எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணியே ஆகணும். அதுக்காகவே அவங்க ரெண்டு பேரும் நாளைக்கு அங்க இருந்து கிளம்பியாகணும்" என நிலன் பேசும் முன்னரே கூறிவிட்டான் டேக்ஸ் துறையில் இருக்கும் அவன் நண்பன்.

"போதுமா கேட்டுகிட்டீங்களா?"

"வரட்டும்டா. இன்னும் ரெண்டு வருஷத்துல பிள்ளை வயசுக்கு வந்திடுமேன்னு பயமில்லாம விளையாட்டு காட்றாங்களா? இந்த விசாலாட்சி யாருன்னு நா காட்றேன் ரெண்டு பேருக்கும்" என அவர் சபதம் எடுக்க, "க்கும்!" என தொண்டையை செருமி சரி செய்து கொண்டான் நிலன்.
 
Top