எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அசுரப்புனிதனின் காதலடிமை - கருத்துத் திரி

NNO7

Moderator
#டீசர்

#அசுரப்புனிதனின்_காதலடிமை

“போயும் போயும் வேலைக்காரியையும் விட மோசமான அடிமையை நீ கல்யாணம் பண்ணி இருக்க ஆதி. இதுக்கான காரணம் எனக்குத் தெரிஞ்சே ஆகணும்” என்று தன் பிடியில் நின்றான் அகில்.

சில கணங்கள் மெளனமாக இருந்த ஆதி, பின் அதனைக் கலைத்துவிட்டு, “வெண்பா” என்றான் ஒற்றை வரியில்.

“ஆங்... என்ன சொன்ன? இப்ப நீ வெண்பான்னா சொன்னா?” என்று கேட்ட அகிலின் நியாபக இடுக்குகளில், அன்று அந்த ஊரே தீப்பிடித்து எறிந்ததும், வீதிகளில் எல்லாம் ரத்த வெள்ளம் ஓடி, அந்த இடமே பிணக்காடாய்க் கிடந்ததும் தான் நியாபகத்திற்கு வந்தது.

அது தந்த வேதனையில் அவன் கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு, மூச்சை இழுத்து வெளியிட்டவன், “இப்ப எதுக்காக அந்தப் பெயரை நியாபகப் படுத்துற ஆதி” என்றவன் குரலில் இன்னும் நடுக்கம் குறையவே இல்லை.

அதற்கு அசட்டாக சிரித்துவிட்டு, கண்களில் தீப்பொறி பறக்க, “நான் கல்யாணம் செய்ததே அவளைத் தான்” என்று ஆதி சொல்லி முடித்ததும், அகிலின் இதயமே நழுவிக் கீழே விழுவது போல் இருந்தது.

அகிலுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட வார்த்தைகளைக் கடினப்பட்டு வெளியே எடுத்துப் பேச ஆரம்பித்தான்.

“உன்னுடைய ஒரே எதிரியான விமலின் மனைவி வெண்பாவைத் தான் நீ சொல்றியா?” என்று அவன் கேட்டதிற்கு, ஆதி, “ஆம்” என்று குரோதமாய் தன் தலையை ஆட்ட, அகில் தான் அதனைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரோடிருக்கும் சவமாய் ஆனான்.

(ஹாய் டியர்ஸ்! அசுரப்புனிதனின் காதலடிமை, அண்டர்வேல்ட்டில் தங்களுக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்து ஆளும் மாபியாக்களின் கதை. குடும்பம் மற்றும் ரொமாண்டிக் த்ரில்லர் நிறைந்தது.

வழக்கம் போல், ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து தினமும் யூடி பதிவிடப்படும். கதையைப் படித்துப் பார்த்து, தங்களது நிறைகுறை கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
 
Top