வாங்க அகல்யா.
சார் என் டேபிள்ல இந்த செக் இருந்துச்சு. அப்புறம் ஒரு பொக்கே கூட இருந்துச்சு.
அது உங்களுக்குதான்.
எனக்கு எதுக்கு சார்.
ஏபி சார் உங்களுக்கு அனுப்பினது.
ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏபி சார் எனக்கா? எதுக்கு சார்.
நேத்து உங்க வொர்க் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதான், அதற்கான பரிசு. இனி எல்லா பார்ட்டிக்கும் உங்களையே கோஆர்டினேட் பண்ண சொல்லியிருக்கார்.
சார் என்னால நம்பவே முடியலை நிஜமாவா.
ஆமா. உங்க ப்ளான் நல்லா இருக்குன்னு சொன்னார்.
சார் நான் அவரைப் பார்க்கலாமா?
இல்ல அவர் இன்னைக்கு இங்க வரமாட்டார். எங்கிட்ட விஷயத்தை சொல்லி தரசொன்னார்.
சார் நேத்து என்ன 11.30 வரைக்கும் வேலை செய்ய சொன்ன போது நான் கூட ஏபி சாருக்கு என் மேக கோபம் போல அதான்,
இப்பயெல்லாம் பண்றார் என்று தப்பா நினைச்சிட்டேன்.
ஆனால் நான் தான் அவரை தப்பா நினைச்சிட்டேன் போல,
இல்ல நீங்க நினைச்சது சரிதான்.
அப்படின்னா புரியலை சார்.
அதை எப்படி நான் உங்ககிட்ட சொல்றது அகல்யா.
இல்ல சார் அவருக்கு என் வேலை பிடிச்சிருக்குன்னா, அப்புறம் எதுக்கு என்ன தேவையில்லாமல் உட்கார வைக்கணும்.
அது, அவருக்கு உங்க வேலை பிடிச்சிருக்கு, ஆனால் அவர் ப்ளானை மாத்தினது பிடிக்கலை.
என்ன அர்த்தம் எனக்கு புரியலை.
அதாவது சார்க்கு எப்பவும் அவரை குறை சொன்னா பிடிக்காது, ஆனால் உங்க ப்ளான் பிடிச்சிருக்கு.
குறிப்பா கடைசியா நீங்களே போய் வாஷ்ரூம் செக் பண்ணிட்டு வந்த விஷயத்தை சொன்னார்.
ஆனால் அதெல்லாம் அவருக்கு எப்படி தெரியும்.
அது, அங்க இருந்தவங்க யாராவது அவருக்கு சொல்லி இருக்கலாம்.
ஆனால் சார் அப்ப அங்க யாருமே இல்லையே. ஹவுஸ் கீப்பிங்க் மட்டும்தான் இருந்தாங்க. அப்படி?
ஏபி சார் நினைச்சா எல்லாம் முடியும்.
சார் நான் அவரைப் பார்க்கணும், எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு. அதை நான் கேக்கணும்.
அகல்யா நீங்க நினைக்கும் போதெல்லாம் அவரைப் பார்க்க முடியாது. அவர்தான் அதை முடிவு பண்ணனும்.
அடுத்த பார்ட்டி டேட் வந்ததும் நான் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன். அது வரைக்கும் எப்பவும் போல உங்க வேலையை பண்ணலாம்.
அகல்யாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எவ்வளவு திமிர் அவனுக்கு. வேலை பிடித்திருக்கிறது ஆனால் அவன் சொன்னதை கேடகவில்லை என்ற கோபமும் உள்ளது.
என்ன மாதிரியான மனிதன் இவன். அனைத்திற்கும் மாறாக இருக்கிறானே. இப்போது அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமானது.
யோசனையுடன் தன் இருக்கைக்கு வந்தாள். செக்கை திருப்பி திருப்பி பார்த்தாள். இப்போதைய சூழ்நிலையில் இந்த பணம் அவளுக்கு மிகவும் தேவைதான்.
ஆனாலும் சுயமரியாதை தடுத்தது. இதை பாராட்டிக் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் மாறாக தண்டனை கொடுத்து பாராட்டியது மனதை உறுத்தியது.
எவ்வளவு கொடூர எண்ணம் இருக்க வேண்டும். இப்படியும் ஒருவன் இருக்கிறான்.
அம்மாவிடம் இருந்து கால் வந்தது. கையில் பணம் இருப்பதை சொல்லவில்லை. வீட்டுக்குப் போய் சொல்லிக் கொள்ளலாம்.
அகல்யா வீட்டுக்கு கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா.
என்ன விஷயம் மா, எதுவும் பிரச்சனை இல்லையே.
சீக்கிரம் வரசொன்னா ஏதாவது பிரச்சனைன்னு அர்த்தமா?
காரணம் சொல்லாம வான்னா, பின்ன எப்படி நினைக்கறதாம்.
சும்மா கோயிலுக்குப் போலாம்னு.
சரி பார்க்கறேன்.
கண்டிப்பா வரணும்.
சரிம்மா போனை வைக்கறேன்.
கையில் இருந்த பணத்தை பார்த்தவளுக்கு இந்த பணத்தில் ஸ்கூட்டிக்கு முன் பணமாக கொடுத்து வாங்கி விடலாம். இனி பஸ்ஸில் வந்து சிரமப்பட வேண்டியதில்லை.
பிங்க் வண்ணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். மனதுக்குள் வண்டியை ஓட்டுவது போல் கற்பனை செய்து பார்த்தாள். சந்தோஷமாக இருந்தது.
மாலை ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டாள்.
வெளியே வர, ஸ்வாதியில் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
அகல்யாவைப் பார்த்தவுடம் போனை வைத்தவள்,
என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பற.
அம்மா சீக்கிரம் வரசொன்னாங்க ஸ்வாதி.
என்ன ஏதாவது என இழுக்க.
என்ன?
இல்ல அம்மா கால் பண்ணி வரசொல்லி இருக்காங்க, மௌனராகம் ஸ்டைல்ல, மாப்ள வெயிட் பண்றாரா என்ன?
எங்க வீட்டு நிலைமை தெரிஞ்சும் ஏண்டி இப்படியெல்லாம் பேசற.
அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடக்கும் போது எல்லாம் நடந்தே தீரும்.
அது நடக்கும் போது நடக்கட்டும், விடு சொல்லியவள் முகம் வாடியிருந்தது.
ஆமா கேக்க மறந்துட்டேன், நேத்து வேலையை முடிச்சிட்டு எப்ப வீட்டுக்குப் போன.
இங்கிருந்து கிளம்பும் போதே, மணி 11.30
அவ்வளவு நேரம் அப்படியென்னடி வேலை?
அவசரமெல்லாம் கிடையாது, ஆனாலும் செய்ய வச்சிட்டாங்க. இதோ என செக்கை காண்பித்தாள்.
எதுக்கு இது?
நேத்து நான் பார்த்த வேலைக்கு ஏபி சார் கிப்ட்.
அப்ப லேட்டா போனது.
அது அவனோட திமிர். பணத்திமிர்
என்ன சொல்ற, எனக்கு புரியலை.
நல்லா வேலை செஞ்சதுக்கு பணம், அப்புறம் அவன் சொன்னதைக் கேக்காததுக்கு தண்டனை.
நீ வேலை இருக்குன்னு சொன்ன போதே நான் நினைச்சேன், எல்லாம் ஏபி சார் வேலைதான் என்று.
நிஜமாவே அவன் அரக்கனை விட மோசமானவன் ஸ்வாதி, அவனை மட்டும் பார்த்தேன், கன்னத்துல பளார்ன்னு விடுவேன்.
நினைப்புதான் மேடம்க்கு.
எவ்வளவு கோபம் வருது தெரியுமா.
நம்மள மாதிரி ஆளுங்களுக்கு கோபம் வரக்கூடாது அகல்யா, வந்தா நமக்குதான் பிரச்சனை.
விடு, அவர் உன்னை பாராட்டினதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு. மனுஷன் எல்லாரையும் திட்டிதான் பார்த்திருக்கேன். அந்த விஷயத்தில நீ அதிஷடசாலி தான் தெரியுமா.
என்ன அதிஷ்டமோ போ.
சரி வீட்டுக்குதான போற. போற வழியில ஏதாவது சாப்பிட்டுட்டு போலாமா.
இல்ல ஸ்வாதி. அம்மா வரசொல்லி இருக்காங்க என்னன்னு தெரியலை, போனாதான் தெரியும். அம்மாவுக்கு உடம்பு ஏதாவது பிரச்சனையான்னு கூட தெரியலை.
சரி வா போற வழியில உன்னை இறக்கி விட்டுட்டு போறேன். இருவரும் கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வர, அப்பாவின் செருப்பு இருந்தது. என்ன இந்த நேரத்தில் அப்பா வீட்டில் என்ற யோசனையோடு உள்ளே போனாள்.
அப்பா டீ குடித்துக் கொண்டு இருந்தார்.
வா அகல்யா. சுஜாதா, அகல்யா வந்துட்டா பாரு அவளுக்கு டீ கொண்டா.
அவ என்னைக்கு டீ குடிச்சா, காபி தான் குடிப்பா, இருங்க கலந்து கொண்டு வரேன் என கொண்டு வந்து கையில் கொடுத்தாள்.
அம்மா என்ன எதுக்கு வரசொன்னா, அதை முதல்ல சொல்லு. உனக்கு உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே.
அதெல்லாம் எதுவும் இல்ல.
அப்புறம் என்ன?
எல்லாம் நல்ல விஷயம்தான்.
அப்படியென்ன நல்ல விஷயம் சொல்லலாமே. அப்பா இன்னைக்கு வீட்டில இருக்காங்க என்ன ஸ்பெஷல்.
ஏங்க நீங்களே அவகிட்ட சொல்லுங்க.
இரண்டு பேரும் அகல்யாவைப் பார்த்து சிரிக்க.
என்னம்மா சஸ்பென்ஸ் அதிகமா இருக்கு யாராவது எனக்கும் சொல்லலாமே.
சுஜாதா அவள் கைகளைப் பிடித்து பின்னால் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.
அங்க பாரு என சொல்ல,
அகல்யாவால் நம்ப முடியவில்லை.
அம்மா இது?
உனக்கு தான் நல்லா இருக்கா?
பிங்க் கலரில் அழகிய ஸ்கூட்டி பெப் நின்றது.
தினமும் பஸ்ல போய் கஷ்டப்படறல்ல, அதான் அப்பாகிட்ட காலையில எங்கிட்ட இருக்கற பணத்தைப்பத்தி சொன்னேன்.
அப்பா உனக்கு வண்டி வாங்கிடலாம்னு சொன்னார். காலையில போய் வாங்கிட்டு வந்துட்டோம். உனக்கு பிடிச்சிருக்கா.
அம்மா நீ சொன்னா நம்பமாட்ட. நான் கூட வீட்டுக்கு வந்து இதைதான் சொல்லணும்னு நினைச்சேன்.
பேகில் இருந்த இருபதாயிரம் ரூபாய்க்கான செக்கை சுஜாதாவிடம் காண்பித்தாள். நேத்து வேலை செஞ்சது எனக்கு கிடைச்ச பணம்.
உங்ககிட்ட சொல்லி ஸ்கூட்டி வாங்கணும் என வந்தேன். ஆனா நீங்க நான் நினைத்தேனோ அதே கலரில் வானியிருக்கிங்க.
ரொமப் தேங்க்ஸ் மா.
என்னடி மூணாவது மனுஷனுக்கு சொல்ற மாதிரி தேங்க்ஸ் எல்லாம். உனக்கு பிடிச்சிருந்தா அதுவே போதும்.
அம்மா முன்பணம் எவ்வளவு கட்டுனிங்க.
முப்பதாயிரம் ரூபாய். ஒன்றரை வருஷத்துக்கு லோன் போட்டிருக்கு. என்ன இந்த பணத்தையும் போட்டிருந்தா இன்னும் கொஞ்சம் தொகை குறைவா இருந்திருக்கும்.
இல்லம்மா இந்த பணத்தை எப்பவும் போல அக்கௌண்ட்ல போட்டுடு. என்னைக்காவது உதவும்.
சரி அகல்யா. இந்த வண்டி சாவி என தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்தைக் கொடுத்தாள். வண்டியை ஓட்டிப்பாரு. வண்டி நம்பர் வர இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.
ஒரு ரவுண்ட் போயிட்டு வா, பக்கத்துல இருக்கற கோயில்ல போய் பூஜை போட்டுட்டு வந்திடலாம்.
சரிம்மா என மனம் முழுக்க சந்தோஷத்தோடு வண்டி அருகில் போனாள்.
மகாதேவனும் சுஜாதாவும் சிரித்த முகத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த வீட்டிலிருந்தே ஒன்பது மணிக்கு தான் கிளம்பினாள். வேகமாக போனதில் இருபது நிமிடத்தில் ஹோட்டலை அடைந்தாள்.
ரிசப்சனில் ஸ்வாதி இவளைப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.
ஸ்வாதி இங்க வா என வெளியே பார்க்கிங்க்கு அழைத்து வந்தாள்.
எப்படி இருக்க என தனது புது ஸ்கூட்டியை காட்டினாள்.
ரொம்ப நல்லா இருக்கு அகல்யா, இதுக்கு அம்மா உன்ன வரசொன்னாங்களா.
ஆமா.
சூப்பர், இனி பஸ் போய் கஷ்டப்பட வேண்டாம்.
ஆமாண்டி.
சரி புது ஸ்கூட்டிக்கு எப்ப ட்ரீட் தர,
இப்ப இல்ல, முதல் மாசம் சம்பளம் வாங்கினதும் போலாம். எனக்கு இதெல்லாம் கிடைக்க காரணமே நீதான். அதனால உனக்கு இல்லாமலா.
இருவரும் சிரித்தபடி உள்ளே போனார்கள்
அகல்யாவுக்கு மனம் முழுக்க வண்டி மேல்தான் இருந்தது. வண்டியை ஓரமா விட்டுவிட்டு வந்தேனே. யாராவது இடித்து விடுவார்களோ.
மதிய வேளை போய் மறுபடியும் வண்டியை காலி இடத்தில் நிறுத்திவிட்டு வந்தாள்.
அந்த வாரம் முழுக்க அப்படியொரு சந்தோஷம். புது வண்டியில் ரெக்கை கட்டி பறந்து கோண்டிருந்தாள்.
அம்மா இன்னைக்கு நான் வரலேட்டாகும்.
ஏன் என்ன?
இன்னைக்கு சேலரி டேட் மா. ஸ்வாதி ட்ரீட் கேட்டிருக்கா. அவளை நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும்.
அப்படியா சரி, அவளை ஒரு நாள் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா.
சரிம்மா அவகிட்ட சொல்றேன்.
ஹோட்டலுக்கு எப்போதும் விட நேரமாக வந்துவிட்டாள். வாட்ஸப்பில் ஸ்வாதிக்கு செய்து அனுப்பினாள்.
ஸ்வாதியிடமிருந்து ஸ்மைலி ஒன்று திரும்ப வந்தது.
அன்று மாலை பார்க்கிங்கில் ஸ்வாதி, அகல்யாவுக்காக காத்திருந்தாள்.
என்ன அகல்யா இவ்வளவு நேரம்.
போற நேரத்துல வேலை கொடுத்திட்டாங்க, அதான் முடிச்சிட்டு வந்தேன்.
ஸ்வாதி உன்னோட வண்டியை இங்கேயே விட்டுடு. இன்னைக்கு நான் உன்ன வீட்டில ட்ராப் பண்றேன்.
அப்படியா அப்ப சரி, எனக்கு பெட்ரோல் செலவு மிச்சம்.
சரி வா போலாம் என இருவரும் கிளம்பினார்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, தெரியாத நமபரில் இருந்து அகல்யாவுக்கு கால் வந்தது.
யாருன்னு தெரியலையே என யோசித்தபடி போனை காதில் வைத்தாள்.
உன் தம்பி போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கான்.
மொட்டயாக சொல்ல, அகல்யவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
யார் நீங்க என்ன சொல்றிங்க.
நான்தான் மாரி, உன் தம்பிபத்தி கேட்டியே மறந்துட்டியா.
ஆமா அண்ணா மன்னிச்சிடுங்க, தம்பி போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கான்னு சொன்னதுதான், பதட்டமாயிட்டேன்.
இன்னைக்கு காலையிலதான் அவனை போலிஸ் பிடிச்சிருக்காங்க, எங்கிட்ட வாங்கினா பொருளை விக்கப் போயிருக்கான், அப்ப மாட்டிக்கிட்டான் போல.
எந்த ஸ்டேஷன் அண்ணா?
பக்கத்துல தான் பி2. போய் ஜாமின் கிடைக்குமான்னு முயற்சி பண்ணிப்பாரு.
சரிண்ணா என போனை வைத்தாள்.
யார் அகல்யா?
அகல்யா மொத்த விசயத்தையும் அவளிடம் சொன்னாள்.
சரி அகல்யா நீ மொதல்ல கிளம்பு, ஸ்டேஷன் போய் என்ன பண்ணணும்னு கேளு.
ஆனா ஸ்வாதி, உங்கிட்ட வண்டி இல்லையே. எப்படி போவா. நான் வேற?
அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் டாக்சி பிடிச்சு போயிக்குவேன்.
நீ முதல்ல கிளம்பு. தினேஷ் அங்க என்ன நிலைமையில இருக்கானோ. நீ போனாதான் சரியா இருக்கும்.
சரி ஸ்வாதி நீ வீட்டுக்கு போ நான் கிளம்பறேன். நடந்தவள் திரும்பி சாரி ஸ்வாதி.
அய்யோ அதெல்லாம் பரவாயில்லை போ முதல்ல.
அம்மாவிடம் எப்படி சொல்வது என்ற யோசனையோடு உள்ளே வந்தாள்.
என்ன அகல்யா லேட்டாதான் வருவேன்னு சொன்ன, எப்பவும் போல வந்துட்டியே. ஸ்வாதி இன்னைக்கு வரலையா என்ன.
அம்மா அது? மாரி எனக்கு போன் பண்ணினான்.
என்ன கண்டபடி பேசினானா, நான்தான் அப்பவே சொன்னேல்ல, அவனுக்கு நம்பரெல்லாம் கொடுக்காதன்னு, கேட்டியா.
அய்யோ அம்மா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல,
வேற என்ன?
தம்பி போலிஸ் ஸ்டேஷன்ல இருக்கானாம்.
என்னடி சொல்ற, அப்படியா சொன்னான்.
ஆமாம்மா பி2 ஸ்டேஷன், அதான் நான் உடனே வந்துட்டேன்.
என்ன பண்றது அகல்யா. அப்பாகிட்ட?
அம்மா முதல்ல நாம போய் பார்க்கலாம், அதுக்கப்புறம் என்ன நிலவரம் என்று பார்த்துட்டு அப்பாவுக்கு சொல்லலாம்.
அதுவும் சரிதான் வா போலாம்.
போலிஸ் ஸ்டேஷம் போனபோது மணி ஆறாகி விட்டது. தினேஷ் ஒரு ஓரமாக உட்கார வைக்கப்பட்டிருந்தான். நன்றாக அடித்திருப்பார்கள் போல, முகம் வீங்கி இருந்தது.
ஆங்காங்கே இரத்த கோடுகள். சுஜாதா பதறியபடி அவனிடம் செல்ல, அம்மா இரும்மா இன்ஸ்பெக்டர்கிட்ட பேசணும். எங்கயும் போகாத.
சார் நான் அகல்யா, தினேஷ் அக்கா.
தினேஷ்னா.
அவந்தான் என காண்பித்தாள்.
ஓ இந்தா கஞ்சா பார்ட்டியோட அக்காவா, நீ என்ன பிசினஸ் பண்ற.
அவன் கேட்ட கேள்வியே சரியில்லை, இருந்தாலும் அகல்யா பொறுமையாக பதில் சொன்னாள்.
சார் நான் ஒரு பெரிய ஹோட்டல்ல அட்மின்ல வேலை பார்க்கறேன். தம்பி ஒரு மாசத்துக்கு முன்னாடி எங்ககிட்ட சண்டை போட்டுட்டு வெளிய போயிட்டான்.
நாங்க எங்க தேடியும் கிடைக்கலை.
இப்பதான் ஏரியாவுல இருந்தவங்க சொன்னாங்க, அதான் பார்க்க வந்தேன். அவனை வெளிய எடுக்கணும்.
அவன் என்ன மிட்டாயா வித்தான் கூட்டிட்டு போறேன்னு சொல்ற, வித்தது போதைப் பொருள். அப்படியெல்லாம் விடமுடியாது.
குழப்பத்தோடு வெளியே வந்தார்கள்.
இப்ப என்ன் பண்றது அகல்யா, ஏதாவது வக்கீல் பார்த்து ஜாமின்ல எடுக்கணும்மா.
அப்பாகிட்ட சொல்லிடலாமா அகல்யா.
சொல்லிதான் ஆகணும் வேற வழி இல்லைம்மா.
சுஜாதா தன் கணவனுக்கு கால் செய்து அனைத்து விசயத்தையும் சொன்னாள்.
அவனை எப்படி வெளிய கொண்டு வர்றது அகல்யா. அவன் முகத்தைப் பார்த்தியா வீங்கிப் போய் இருக்கு. அடிச்சிருப்பாங்க போல.
பார்த்தாலே எனக்கு மனசு பதறுது. சின்ன வயசுல இருந்து நாங்க கூட அவனை அடிச்சதே இல்லை. ஆனால் இன்னைக்கு என அழ ஆரம்பித்தாள்.
அதான்ம்மா நீங்க பண்ணின பெரிய தப்பு, அடிச்சு வளர்த்திருந்தா, இன்னைக்கு இவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்க மாட்டான்.
நாம அடிக்கலை, அதான் கண்டவங்ககிட்ட அடி வாங்கறான்.
இப்ப பேசு என்ன அகல்யா பண்றது.
அதுவும் சரிதான்ம்மா, அவனை எப்படி வெளிய எடுக்கணும்ன்னு யோசிக்கலாம் வாங்க என்றவள் யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
ஸ்வாதிக்கு கால் செய்தாள்.
ஸ்வாதி வீட்டுக்கு போயிட்டியா.
இப்பதான் வந்தேன், தம்பி பிரச்சனை என்ன ஆச்சு.
ஜாமின்ல எடுக்க சொல்றாங்க, எனக்கு வக்கீல் யாருமே தெரியாது. உனக்கு யாராவது தெரியுமா?
எங்க அண்னண் பிரெண்ட் வக்கீல்தான். அவர்கிட்ட பேசிட்டு சொல்றேன் என போனை வைத்தாள். அதற்குள் மகாதேவனும் அங்கு வந்து சேர்ந்தார்.
என்னம்மா எங்க அவன்?
உள்ளதான் இருக்கான், ஆனால் பேச விடமாட்டேங்கறாங்க.
இவனால நமக்கு என்னைக்கு தொல்லை தான், எத்தனை முறை சொன்னோம் ஒரு முறையாவது கேட்டானா. எல்லாம் நம்ம தலையெழுத்து.
மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, கான்ஸ்டபிள் ஒருவர் அருகில் வந்தார்.
என்னம்மா உள்ள இருக்கறது உன் தம்பியா.
ஆமா அண்ணா.
என்ன சொன்னார் சாரு.
ஜாமின்ல எடுக்க சொன்னார்.
எல்லார் முன்னாடியும் அதெல்லாம் அப்படிதான் சொல்லுவாங்க, நாமதான் என்ன பண்ணனும்னு கேக்கணும்.
என்ன அண்ணா பண்ணனும்.
எல்லாம் பணம் தான்.
பணம் கொடுத்தா, ஜாமினெல்லாம் எதுக்கு, இப்பவே கூட்டிட்டு போலாம்.
எவ்வளவு கொடுக்கணும் என சுஜாதா கேட்க.
கஞ்சா கேசு, எப்படியும் முப்பது வரைக்கும் கேட்பாங்க.
முப்பதாயிரமா என சுஜாதா கேட்க.
ஆமா பின்ன இல்லையா, உங்க புள்ள சின்ன வேலையா பண்ணியிருக்கான். கேஸ் ஸ்ராங்கா இருக்கு. பொருளோட பிடிச்சிருக்காங்க.
எப்படி மூணு இல்ல நாலு வருஷம் தண்டனை கிடைக்கும்.
மூவருக்கும் ஒர் நிமிடம் ஒன்றும் புரியவில்லை. சுஜாதா அழ ஆரம்பித்தாள்.
அம்மா அழாத ஏதாவது பண்ணலாம்.
அண்ணா எங்கிட்ட இருபதாயிரம் இருக்கு. இன்ஸ்பெக்டர் பேசி பார்த்துட்டு சொல்றிங்களா.
இருபதாயிரம் பத்தாது தான். ஆனா உங்க மூணு பேரையும் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. அதனால அவர்கிட்ட பேசிப்பார்க்கறேன்.
ஆனா ஒத்துப்பாரான்னு தெரியலை.
அண்ணா ப்ளீஸ், தம்பி இனி இப்பெடியெல்லாம் பண்ண மாட்டான், அதுக்கு நாங்க பொறுப்பு, அவர்கிட்ட பேசி வெளிய விட சொல்லுங்கண்ணா.
இரும்மா பேசிட்டு வரேன் என கான்ஸ்டபிள் உள்ளே போனார்.
என்னடி நீ பாட்டுக்கு இருபதாயிரம் தரேன்னு சொல்லிட்ட.
வேற வழியில்லம்மா கொடுத்தாதான் விடுவாங்க. இன்னைக்கு வாங்கின சேலரி பதினெட்டாயிரம் இருக்கு.
மகாதேவன் தன் பேக்கட்டில் இருந்த ரூபாயைக் கொடுத்தார்.
இதைக் கொடுத்து அவனைக் கூட்டிட்டு போயிடலாம்மா. வீட்டு செலவுக்கு அன்னைக்கு நான் கொடுத்த பணத்தை வச்சிக்கலாம்.
அம்மா அழாத, உன் உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது. அப்புறம் நம்ம நிலைமை இன்னும் கஷ்டமாயிடும்.
பத்து நிமிடத்துல் அந்த கான்ஸ்டபிள் வெளியே வந்தார்.
அண்ணா என்ன சொன்னார்?
இருபதாயிரம் ரொம்ப கம்மியா இருக்குன்னு சொல்றார். இன்னும் ஒரு ஐந்தாயிரம் வேணுமாம்.
கொடுத்தா இப்பவே அனுப்ப சரின்னு சொல்லிட்டார்.
மகாதேவன் சம்பளப் பணத்தைக் கொடுத்தார். கான்ஸ்டபிள் பணத்தை வாங்கிக் கொண்டு தினேஷை அழைத்து வருவதாக உள்ளே சென்றார்.
வந்தவர் ஏம்மா உள்ள வா உன்ன இன்ஸ்பெக்டர் கூப்பிடறார்.
அம்மா இங்க இரு நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.
தனியாவா போற, அப்பாவை கூட்டிட்டு போ.
சரிப்பா வாங்க போகலாம் என இருவரும் உள்ளே போனார்கள்.
இது யாரு என மகாதேவனைப் பார்த்து கேட்க.
சார் இது எங்க அப்பா.
ஓ சரி கூட்டிட்டு போ, இந்த முறை போனா போகுதுன்னு அனுப்பறேன். அடுத்த முறை அவன் மாட்டினா, பெரியா கேசா போட்டு ஆயுசுக்கு உள்ள இருக்கர மாதிரி பண்ணிடுவேன், புரியுதா.
புரியுது சார், இனி அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்.
போ கூட்டிட்டு போ.
தினேஷால் எழுந்திருக்க முடியவில்லை. அகல்யாவும் மகாதேவனும் தாங்கிப் பிடித்தபடி நடக்க வைத்தார்கள்.
அக்கா ரொம்ப வலிக்குதுக்கா என தினேஷ் சொல்ல, அகல்யாவுக்கு அழுகையே வந்துவிட்டது.
எல்லாம் சரியாயிடும் வா என கூட்டிச் சென்றார்கள்.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள். தினேஷ் வலியால் துடித்துக் கொண்டிருந்தான்.
சுஜாதா அவனைப் பார்த்து கண் கழங்கியபடி நின்றாள்.
ஸ்வாதி அழைப்பு வந்தது.
அண்ணா பிரெண்ட் இப்ப ஊர்ல இல்ல, அவருக்கு தெரிஞ்ச லாயர் நம்பர் தந்தாங்க. நான் அனுப்பறேன்.
இல்ல வேண்டாம் ஸ்வாதி, தம்பியை கூட்டிட்டு வந்துட்டோம்.
எப்படி?
பணம் கொடுத்து.
பணம் கொடுத்தா, ஆனா ஏன்?
வேற வழியில்ல, ஜாமின் கிடைச்சாலும் அவன் வீட்டுக்கு வர ரெண்டு நாள் ஆகும். அதனால இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து அவனை கூட்டிட்டு வந்தோம்.
அப்புறம் வீட்டு செலவுக்கு என்ன பண்ணுவ அகல்யா.
அதான் உங்க ஏபி சார் குடுத்த பணம் இருக்குல்ல, அது போதும்.
சரி அகல்யா தம்பியை பார்த்துக்க, ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளு.
சரி ஸ்வாதி நாளைக்குப் பார்க்கலாம்.
தினேஷ் ரொம் வலிக்குதா.
ஆமாக்கா.
அம்மா பக்கத்துல யார்க்கிட்டையாவது பணம் ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு வாங்க. அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடலாம்.
சரி அகல்யா என சுஜாதா வெளியில் கிளம்ப.
இல்லக்கா வேண்டாம், எல்லாம் என்னன்னு கேப்பாங்க, எல்லாருக்கும் என்ன பதில் சொல்றது. வெளிய வரவே எனக்கு வெட்கமா இருக்கு.
இதெல்லாம் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். இப்ப அவமானப்பட்டு என்ன பிரயோஜனம்.
இல்லக்கா இனி நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். எல்லாரும் சேர்ந்து என்ன மட்டும் மாட்டி விட்டுட்டாங்க.
நான்தான் எல்லாம் பண்ணினேன்னு சொல்லிட்டாங்க. போலிஸ்காராங்க என்ன காலையில இருந்து எவ்வளவு அடிச்சாங்க தெரியுமா.
நடக்க முடியலை. உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது. வலி தாங்க முடியாமல் தினேஷ் அழ ஆரம்பித்தான்.
அகல்யாவுக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
அக்கா நீ எனக்கு எத்தனை முறை புத்தி சொல்லியிருக்க, நான்தான் கேக்கலை. உங்க எல்லாரையும் உதாசினப்படுத்தி பேசினதுக்கு இப்பதான் நான் நல்லா அனுபவிக்கறேன்.
சரி விடுடா அப்புறம் பேசிக்கலாம்.
இல்லக்கா நான் பேசினதை நினைச்சா எனக்கே ரொம்ப கூச்சமா இருக்கு. எனக்கு எல்லாம் வேணும்.
மகாதேவன் என்ன சொல்லி அவனைத் தேற்றுவது என தெரியாமல் நிற்க.
டேய் விடுடா, எல்லாம் சரியாயிடும்.
அப்பா என்ன மன்னிச்சிடுங்க, என காலில் விழுந்து கதறினான்.
அப்பா இனி நான் தப்பான வேலைக்கும் போக மாட்டேன். எல்லாத்தையும் விட்டுடப் போறேன். இனி திருந்தி வாழப் போறேன்.
எதாவது நல்ல வேலைக்குப் போய், வீட்டை நானே பார்த்துக்கறேன்.
இதைத்தானடா நானும் சொன்னேன்.
இல்லப்பா, பிரெண்ட்ஸ் எல்லாத்தையும் நான் ரொம்ப நம்பினேன், ஆனால் அவங்க எல்லாம் என்னை கைவிட்டுட்டாங்க.
அவங்களை நம்பி உங்க எல்லாரையும் நான் எவ்வளவு தப்பா பேசிட்டேன். ஆனா எனக்கு பிரச்சனைன்னு வந்தபோது நீங்கதான் எனக்காக வந்திங்க.
ஒருத்தனுக்கு குடும்பம்தான் பெரிய பலம் என்று இன்னைக்கு தான் எனக்கு புரிஞ்சது.
சரி பரவாயில்ல விடு போய் தூங்கு எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.
ஒரு வழியாக தினேஷை சமாதனப்படுத்தி தூங்க வைத்தார்கள்.
அம்மா தம்பி மாறிட்டாம்மா, இனி எல்லாம் சரியாயிடும் பாருங்க.
எனக்கு அப்படிதான் தோணுது, கெட்டதுலையும் ஒரு நல்லது நடந்திருக்கு இல்ல அகல்யா.
ஆமாம்மா பணம் போன போகட்டும், ஆனா தினேஷ் மாறிட்டான், அதுதான் பெரிய சந்தோஷம்.
அவனை உடனே நம்பிடாதிங்க என சொல்லிக் கொண்டு மகாதேவன் வந்தார்.
ஏம்பா அப்படி சொல்றிங்க, அவன் சொன்னதெல்லாம் கேட்டிங்கல்ல, அவன் முன்ன மாதிரி இல்லப்பா. நிறைய மாற்றம் தெரியுது.
இதப்பாரு இப்ப இருக்கற நிலைமையில கூட அவன் அப்படி பேசியிருக்கலாம். ஆனாலும் அவனை என்னால நம்ப முடியலை.
இல்லப்பா இந்த மாதிரி நேரத்துல அவனுக்கு நாமதான் துணையா இருக்கணும், அதை விட்டுட்டு நாமளே இப்படி பேசினா எப்படிப்பா.
சரிதான், அவன் விஷயத்துல எதையும் உடனே முடிவு பண்ண வேண்டாம். என்ன பண்றான்னு பார்க்கலாம்.
சரிப்பா நீங்க சொன்னபடி இருக்கட்டும், அவன் உடம்பு முதல்ல குணமாகட்டும், பிறகு எல்லாம் பாத்துக்கலாம்.
சரிம்மா ரொம்ப நேரமாயிடுச்சு, சாப்பிட்டுட்டு போய் படு.
வாங்கப்பா எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம் வாங்க என சொல்ல அனைவரும் சாப்பிட உட்காந்தாள்.
அன்று மனம் நிறைவாக இருந்தது.
தன் தம்பி தனக்கு மீண்டும் கிடைத்து விட்டான். இனி வீட்டின் நிலைமை மாறிவிடும். இதைதான் கடவுளிடம் தினமும் வேண்டிக் கொள்வாள்.
அடுத்த நாள் உற்சாகமாக கிளம்பினாள். அப்போது தினேஷ் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அக்கா போற வழியில என்ன கிறக்கி விட்டுட்டு போறியா.
எங்கடா போகணும்.
காந்திபுரம் கா.
அதான் எதுக்குன்னு கேக்கறேன்.
பிரெண்ட் அங்க வரேன்னு சொன்னான்,
அகல்யா முகம் மாற,
இல்லக்கா நீ நினைக்கற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல. அவன் வேலை பார்க்கற கம்பெனியில வேலைக்கு ஆள் எடுக்கறாங்களாம். அதான் இன்டர்வியூக்கு வர சொன்னான்.
சரி போ, ஆனா இப்ப வேண்டாம், உன்னால சரியா நடக்ககூட முடியலை, எப்படி போவ.
இல்லக்கா இப்ப வலி கொஞ்சம் பரவாயில்ல.
முகமெல்லாம் காயமா இருக்கு, அவங்க அங்க கேட்டா என்ன பதில் சொல்லுவ.
ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுன்னு சொல்லிக்கறேன் கா.