எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 24

Privi

Moderator

நாட்கள் மெல்ல நகர்ந்தது ராமனின் வீடு புதுப்பிக்கும் வேலையை ருத்ரன் ஆரம்பித்து விட்டான். உமையாளும் ருத்ரனும் கூட அவர்களின் ஒப்பந்தம் பொருட்டு பேச தொடங்கியவர்கள் இப்போதெல்லாம் நன்றாகவே பேசி கொள்கிறார்கள்.​

அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு, அப்போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் வாய்ப்போர் நடத்துவார்கள். கடைசியில் யாரவது ஒருவர் விட்டு கொடுக்கும் படி வரும் இதில் என்ன அதிசயம் என்றால் பெருபாலும் ருத்ரன் தான் விட்டு கொடுப்பான்.​

ருத்ரனுடன் மட்டும் இல்லாமல் அவர்களின் உறவு பார்வதி அம்மாவுடனும் நல்லபடியாகவே சென்றது. நீலனுக்கும் தனது தாய் மேல் இருக்கும் அதே பாசம் பார்வதி மேல் இருந்தது. தாய் இல்லாதவர்களுக்குத்தானே ஒரு தாயின் அருமை தெரியும்.​

ருத்ரனும் முன் போல் பார்வதியிடம் பாராமுகமாக நடந்துகொள்வது இல்லை. அம்மா என்று அழைக்க வில்லையே தவிர இப்போதெல்லாம் அவன் நல்ல படியாக தான் பேசுகிறான்.​

ருத்ரனுக்கும் மகிழுக்கும் ஆழமான ஒரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது. உமையாளுக்கு அது உறுத்தலாக இருந்தாலும் அதனை தடுத்து நிறுத்த வழி தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்.​

இப்படியே சென்று கொண்டிருந்த தருணம், உமையாளுக்கு ஒரு அழைப்பு வந்தது, அது வேறு யாரும் இல்லை கயலின் அன்னைதான்.​

"ஹலோ உமையாள்.....:​

"சொல்லுங்கம்மா…. என்ன விஷயம்? கயல் இப்போதுதான் வீட்டிற்கு புறப்பட்டாள்." என அவர் கேட்காத கேள்விக்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள் உமையாள்.​

"உமையாள் உன்னிடம் பேசத்தான் அழைத்தேன், அனால் இது திறன் பேசியில் பேசும் விஷயம் இல்லை. நாளை கொஞ்ச நேரம் வீட்டிற்கு வர முடியுமா?" என கேட்டார்.​

"கண்டிப்பா வருகிறேன் மா" என கூறினாள் உமையாள்.​

நீலன் வேளையில் இருப்பதால் அவனுக்கு அழைத்து தொந்தரவு செய்ய விரும்பாமல் நாளை விபரம் தெரிந்தபின் கூறிக்கொள்ளலாம் என நினைத்து விட்டு விட்டாள்.​

மறுநாள் கயல் வீட்டிற்கு உமையாள் சென்றிருந்தாள்.​

“வாம்மா உமையாள்...என உமையாள் வரவேற்று அவர்கள் வீட்டு நீல்விருக்கையில் அமர சொல்லி உபசாரம் செய்தார்.” கயலின் தாயார்.​

"எதற்கு என்னை பார்க்கணும்னு கூறினீர்கள் அம்மா? என்னிடம் என்ன பேச வேண்டும்?" என சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வந்தாள் உமையாள்.​

ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டு கயலின் தாய் கூற ஆரம்பித்தார்,​

"வயசுப்பொண்ணும்மா கால காலத்துல கல்யாணம் செய்து வைக்கணும் என்று தானே எந்த அம்மாவும் நினைப்பாள். அப்படித்தானேம்மா நானும். கல்யாணத்தை பற்றி பேசினாலே வேண்டாம் என்பதுதான் பதிலாக இருக்கிறது.​

நானும் ஒன்றும் நலமாக இல்லை. என் உயிர் என் உடலில் இருக்கும் போதே அவளை ஒருவன் கையில் பிடித்து கொடுத்து விட்டால், நான் நிம்மதியாக போய் சேருவேன்." என அவரது உரையாடலை முடித்தார்​

"அம்மா... என்ன பேச்சு இது"​

"உண்மைதானே மா..."​

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே கயல் வீட்டினுள் நுழைந்தாள், உமையாளை தன் வீட்டில் கண்ட கயலுக்கு கண்கள் விரிந்தது...​

"வந்துட்ட பாருமா..." என்றார் கயலின் தாயார்.​

உமையாள் அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டே " சரிம்மா நாளை அவள் வேலைக்கு வரும்போது அவளிடம் நான் பேசுறேன்.” என கூறி அங்கிருந்து புறப்பட்டாள்.​

அவள் சென்றவுடன் தனது தாயிடம் "அக்கா ஏன் இங்க வந்தாங்க? அவங்களிடம் என்ன சொன்னீங்க?" என கேட்டாள்.​

அதற்கு அவள் தாயோ "ஹ்ம்ம் நீ பண்றத சொன்னேன். கல்யாணத்திற்கு சம்மதிக்க வில்லை என்றும் சொன்னேன்." என்றார்.​

"ஏன் மா இப்படி செய்தீர்கள்? உங்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை?" என்றால் கோவமாக.​

"ஆமாம்டி… ஒத்த புள்ளையை வச்சிட்டு நல்ல படிய நான் உயிரோடு இருக்கும் போதே அவளை கரை சேர்க்கணும்னு நினைக்கிற நான் கெட்டவள் தான்" என புலம்ப ஆரம்பித்து விட்டார்.​

" நான் எப்போமா உங்களை கெட்டவள் என்று கூறினேன்" என்று கேட்டாள்.​

அதற்கு அவரோ "இப்போ கோபமாக என்னிடம் பேசுனியே" என்றார்.​

“அதற்கு” என கயல் கேட்க​

"அடுத்து நான் கெட்டவள் என்று தானே கூற போகிறாய்." என அவரும் வராத கண்ணீரை இழுத்து பிடித்து வரவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.​

"அம்மா ஆளை விடு நீ ஆரம்பித்துவிட்டாய், அதற்கு நான் ஆள் இல்லை." என கூறிக்கொண்டே அங்கிருந்து அகன்று அவளின் தனி அறைக்குள் சென்று விட்டாள்.​

அறைக்குள் வந்தவள் நீலனுக்கு "கால் மீ அர்ஜென்ட். ஐ நீட் டு டாக் டு யூ." என திறன் பேசி மூலம் ஒரு குறுந்தகவலை அனுப்பி விட்டாள்.​

அவன் வேலையை மனதில் வைத்துதான் அவனுக்கு முதலில் அழைக்காமல் குறுந்தகவல் அனுப்புவாள். அவன் வேளையில் இருந்தால் அதனை முடித்து விட்டு பிறகு அழைப்பான்.​

வேலை இல்லை என்றால் உடனே அழைப்பான். அன்றும் இருந்த வேலைகளை முடித்து விட்டு, அவன் தங்கி இருக்கும் அறைக்கு வந்து, தன்னை சுத்தம் செய்தபின்னே கயலுக்கு அழைத்திருந்தான்.​

அவனின் அழைப்பை ஏற்றவள்​

"என்னப்பா பிஸி ஆஹ்!" என கேட்டிருந்தாள்.​

"ஆமாம் டி இன்று செம்ம வேலை, ரொம்ப அசதியாக உள்ளது. அதை விடு என்னடி பிரச்சனை? கால் மீ அர்ஜென்ட் என்று குறுந்தகவல் அனுப்பி வைத்திருந்தாய்." என்று கேட்டான்.​

அதற்கு அவளோ " இன்று அக்கா என் வீட்டுக்கு வந்திருந்தாங்க." என்றாள்.​

"எதற்கு டி?" என்று கேட்டான் அவன்.​

"நான் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூற அம்மா அக்காவை அழைத்திருக்காங்க.​

" அய்யய்யோ என்னடி இப்படி சொல்ற... இப்போது என்ன செய்வது?"​

“என்னை கேட்டாள். நாளை இதை பற்றி என்னிடம் பேசுவாங்க என்று நினைக்கிறன்." என்றாள்.​

"அக்கா கண்டிப்பா எனக்கும் அழைப்ப. அவளுக்கு முதலில் ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு உன்னை உன் வீட்டிலிருந்து கடத்தலாம் என்று பார்த்தால் முடியாது போலயே...​

சரி விடு நான் பார்வதி அம்மாவிடம் இதனை பற்றி பேசி ஒரு முடிவு செய்கிறேன். அதன் பிறகு என் தங்கையை திருமணம் செய்கிறேன்." என கூறினான்.​

கயலோ "என்ன தங்கையை?" என ஆச்சரியமாக கேட்டாள்.​

"ஆமாம் தங்கையே தான். நீ தான் என் அக்காவை அண்ணி என்று அழைக்காமல் அக்கா என்று அழைக்கிறாயே அப்போது நீ என் தங்கை தானே" என கூறினான்.​

அதற்கு அவளோ "கிண்டல் உங்களுக்கு, அது நான் அவங்களை அக்கா என்றே கூப்பிட்டு பழகிவிட்டேன் சட்டென்று அண்ணி என்று அழைக்க வரமாட்டுது. சரி இனி பழகி கொள்கிறேன்" என சொன்னவள்,​

பின் ஏதேதோ கதைகளை பேசியபின் இருவரும் தொடர்பை துண்டித்தனர். அவளிடம் பேசி வைத்தவன் நாளை முதல் வேலையாக பார்வதியம்மாக்கு அழைக்க வேண்டும் என நினைத்து கொண்டே உறங்கி போனான்.​

மறுநாள் மருத்துவமனைக்கு சென்றவன் அவன் வேலைகளை முடித்து விட்டு பார்வதி அம்மாவை சந்திக்க அவர்கள் வீட்டை நோக்கி புறப்பட்டான். வீட்டிற்குள் சென்றவன்,​

பார்வதியிடம் " டார்லிங் உங்களை பார்க்கதான் வந்தேன்." என்றான்.​

பார்வதி "சொல்லுப்பா" என்று சொல்ல,​

"நேற்று கயல் அம்மா கயலின் திருமணத்தை பற்றி என் அக்காவிடம் பேசியுள்ளார்கள்." என அவன் கூற​

"அட நல்ல விஷயம் தானே டா, வாழ்த்துக்கள்." என வாழ்த்தினார் பார்வதி.​

அதற்கு நீலன் அவரை அழுத்தமாக பார்த்து "அக்காவுக்கு முதல் நான் எப்படி டார்லிங்... அவளுக்கு ஒரு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்காமல் நான் மட்டும் எப்படி கல்யாணம் கட்டுவது." என்றான்.​

அதற்கு பார்வதி "இவர்கள் திருமணத்தை எப்படி நடத்துவது என்றே தெரிய வில்லை. இருவருமே மிகுந்த அழுத்தகாரர்கள். நீயே ஒரு நல்ல யோசனை சொல்லடா." என்று அவனிடமே ஐடியா கேட்டார் பார்வதி.​

இவர்கள் இப்படி இங்கு சிந்தித்து கொண்டிருக்கும்போது அங்கு உமையாளோ காயலிடம் "கயல் உங்க காதல் அம்மாவுக்கு தெரியாத?" என கேட்டாள்.​

அதற்கு கயல் "தெரியாது அண்ணி, நான் இன்னும் சொல்ல வில்லை." என கூறினாள். சரி நான் நீலனிடம் பேசி ஒரு முடிவு எடுத்து உன் வீட்டிற்கு வருகிறேன்." என கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டில் அழைப்பு மணி அடித்தது.​

வந்தது ருத்ரன் தான். உள்ளே வந்தவன், உமையாள் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். உன் அலுவல் அறைக்கு செல்லலாமா?" என கேட்டான். அதற்க்கு அவளோ சம்மதனாக தலை அசைத்து அலுவல் அறையை நோக்கி சென்றாள்.​

அறையினுள் நுழைத்தவள் அவள் இருக்கையில் அமர்ந்து எதிர் இருக்கையை அவனுக்கு காண்பித்து அமர சொன்னாள். அவனும் அமர்ந்து வந்த காரணத்தை கூறலானான்.​

"உமையாள் என்னுடைய வாடிக்கையாளருடைய அம்மாவுக்கு ஓம் வடிவில் ஏதாவது ஒரு கைவினை பொருள் வேண்டுமா அது தனித்துவமாக இருக்க வேண்டுமா." என கூறினான்.​

அதற்கு அவளோ சிறிது நேரம் யோசித்து விட்டு , சம்மதமாக தலை அசைத்தாள். அதற்கான வடிவமைப்பை கூட அவள் மனதில் உருவாக்க ஆரம்பித்து விட்டாள்.​

அவள் சம்மதம் தெரிவித்த பின்னர் ருத்ரன் "மேலும் வாசலில் மீன் குளம் ஒன்று கட்ட விருப்பப்படுகிறார்கள். அதற்கு மயிலினால் வடிவமைக்க பட்ட நீர் ஊற்று வேண்டுமாம். நானும் அது நன்றாக இருக்காது என கூறுகிறேன்.​

ஆனால் எந்த பயனும் இல்லை. அவர்கள் என் சொல்லை கேட்கவில்லை. கேட்டால் அவர் அம்மாவிற்கு அந்த டிசைன் பிடிக்குமாம்." என அதை கூறும்போது முணுமுணுத்து கொண்டான்.​

அதை கூறும்போது அவன் முகம் கடு கடுவென இருந்தது. இவை அனைத்தும் உமையாளுக்கு தெளிவாக கேட்டது. மூணு முணுத்தது உட்பட. அம்மாவை பற்றி பேசியவுடன் எனோ உமையாளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.​

உடனே அவள் "சிலர் அம்மாவுக்கு பிடிக்கும் என்று நிறையவே செய்வார்கள். அதெல்லாம் உங்களுக்கு எங்கே புரிய போகிறது. அம்மாவை வெறுக்கும் பிள்ளை தானே நீங்கள்." என கட்டமாகவே கூறினாள்.​

அதை கேட்ட அவனுக்கும் கண்கள் சிவந்தது. கோபம் தலைக்கு மேல் வந்தது. உடனே அவன் 'யூ டோன்ட் டாக் அபௌட் மை பர்சனல்" என வார்த்தைகளை கடிந்து துப்பினான்.​

பின் "என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி. என்னையும் என் அம்மாவையும் பற்றி பேச உனக்கு நான் எந்த உரிமையும் தரவில்லையே. என சீறினான்.​

உடனே அதற்கு அவளோ "இங்கு யாரும் யாருக்கும் உரிமை தர தேவை இல்லை. அக்கறை இருந்தால் போதும்." என்றாள்.​

அதற்கு அவனோ அவனின் ஒற்றை புருவத்தை உயர்த்தி “அக்கறையா?.... என் மேல்?... என கேட்டான். ஏனோ அந்த வரி அவனுக்குள் எழுந்த அனலை கொஞ்சம் குறைக்க செய்தது.​

 
Top