Lufa Novels
Moderator
அவனோடு இனி நானா!
அத்தியாயம் 23
ஆசை இல்லாத வாழ்க்கை இருக்குமா? இருக்காது. ஆசை அந்த ஆசை தான் சிலருக்கு அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும். தீவிரமாக முன்னேறும் வழியைக் காட்டும். ஆனால் அதே ஆசை தான் சிலரின் வாழ்க்கையை தவறான பாதையில் வழிநடத்தும், பொறாமையை உண்டாக்கும், நற்குணங்களை இழக்க வைக்கும், சுயநலத்தை உச்சத்திற்க்கே கொண்டுசென்று அழிவையும் உண்டாக்கும்.
இங்கு இந்த பிரணவிகாவின் ஆசை.. கனவு நாயகனின் ஆசை.. அவளை இந்த நிலையில் கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது. நன்மை எது தீமை எது எனப் புரியாமல் பளபளப்பாக அழகாக இருக்கும் பாம்பைக் கையில் எடுத்து என்ன செய்வதென அறியாமல் முழித்துக் கொண்டு நிற்க வைத்தது.
கண்மூடித் தனமான ஆசை.. அவளை ஒரு தேவதையாகத் தாங்க வேண்டுமென்ற ஆசை.. ஆசையாய் சிரித்து பேசி அவளைச் சிரிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை.. கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த ஜோடியெனக் காண்போரை பேசவைக்க வேண்டுமென்ற ஆசை..
இத்தனை ஆசைகளையும் நிறைவேற்றும் படி ஒருவன் கண்முன் வந்து அவளை தேவதை போல உணர வைக்கவும் அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.. ஆனால் அவனோ பல பெண்களுடன் சல்லாபித்த ஜகஜால கில்லாடி, பல பெண்களுடன் பழகிப் பெண்களின் நாடி பிடிக்கத் தெரிந்த சூழ்ச்சிக்காரன், தொழில் பிரச்சனையைப் பெண்ணைக் கொண்டு தனக்கு சாதகமாக மாற்றும் வஞ்சகன் என அறியாமல் போனாள்.
அவள் ஆசையில் அவன் நல்லவனகாக இருக்க வேண்டும்.. ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும்.. தனக்கும் தன் குடும்பத்திற்கும் மரியாதை தருபவனாக இருக்க வேண்டும்.. கடிந்தாலும் அது தன் நலனுக்குத் தானென நினைத்திருந்தால் அவளையே உயிராய் நினைத்து அவள் பின்னால் வந்தவனை எட்டி உதைத்திருப்பாளா?
அவளின் முட்டாள் தனம் இப்போது கண்முன் வந்து கெக்கலி கொட்டிப் பலமாகச் சிரித்தது. முதன் முதலாகத் தன் செயலால் அவமானமாக உணர்ந்தாள். இதுவரையுலும் சின்ன சின்ன சேட்டைகள் செய்திருக்கிறாள் தான், அதற்காகப் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஏன் நண்பர்களிடம் கூடப் பேச்சு வாங்கி இருக்கிறாள் ஆனால் அப்போதெல்லாம் அதைத் தூசு போலத் தட்டி சென்றவள் முதன்முதலாய் அவமானமாக, அருவருப்பாக, கழிவிரக்கமாக உணர்ந்தாள்.
உலகம் அவள் முன் தட்டாமாலை சுற்றியது. தான் பிரின்ஸ் பிரின்ஸ் எனத் தலைக்கு மேல் தூக்கி வைத்தவன் பொய்த்து போனதாலா? அல்லது அவன் கொடுத்த பானத்தைக் கொஞ்சமேனும் குடித்ததாளே அதனாலா? என அவளுக்கே விளங்கவில்லை. ஆனால் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
அவன் அதன் பிறகும் கூடப் பேசிக் கொண்டே தான் இருந்தான் ஆனால் இவளுக்குத் தான் அவன் பேசியது எதுவுமே காதிலும் விழவில்லை, கருத்திலும் பதியவில்லை.. அவள் அதிர்ச்சியில் உறைந்து போய் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆனால் அவள் நின்ற நிலையைப் பார்த்தவனுக்கு அவள் குடித்த பானத்தின் விளைவால் மோகமாகத் தன்னை பார்க்கிறாளென நினைத்தவன் அவளை நெருங்கினான்.
அவன் தன்னை நோக்கி வருவது கூட உணரவில்லை. அவளது கனவுக் கோட்டை அவள் கண்முன் சரசரவெனச் சரிவதை தாங்க இயலாமல் நின்றாள். உண்மையில் அவளால் அக்கணத்தை எவ்வாறு கையாள வேண்டுமெனவும் தெரியவில்லை. உள்ளுக்குள் கடலில் பேரிரைச்சல், கத்தி அழுக நினைக்கிறது மனம் ஆனால் உள்ளம் சொல்வதை செயலாற்றும் திறன் தான் அவள் மூளைக்கு இல்லை. அவள் முன் வந்தவனோ அவளைக் கட்டி அணைத்தான்.
*******
சென்னை போக்குவரத்து நெரிசலில் எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்ட முடியுமோ அவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான் விஹான். அவனுக்கோ உள்ளுக்குள் அத்தனை ஆத்திரம். எந்தத் தைரியத்தில் இவள் அவன் வீட்டுக்குச் சென்றாள் என்று.
சாத்விகா பிரணவிகாவைப் பற்றிக் கூறியபோது அவர்கள் இருவரும் எங்காவது வெளியில் சந்திக்க கூடுமென நினைத்தவன் கல்லூரியில் தனக்கு விஸ்வாசமான ஒருவனை பிரணவிகா பின்னால் அனுப்பிவைத்தான் அவள் எங்குச் செல்கிறாளெனக் கண்காணிப்பதற்கு.
சற்று நேரத்துக்கு முன் அந்த நபர் அழைத்து அவள் சூர்யான்ஷ்ஷின் வீட்டிற்கு சென்றதையும், வீட்டில் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருக்கிறதென்றும், ஏன் வேலையாட்கள் கூட யாரும் இருப்பதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தவுடன் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.
விளையாட்டு தனமாக, நல்லது கெட்டது அறியாத, சூது வாது தெரியாத அந்தப் பேதை, ஒரு பொல்லாத நரியைச் சந்திக்க தனிமையில் சென்றால் அவள் நிலைமை என்னவாகும் என்பதை அந்த நரியின் குறுக்குபுத்தியைப் பற்றி நன்கு அறிந்தவனுக்கு தெரியாமலா இருக்கும்? அவளை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று சூர்யான்ஷ்ஷின் வீட்டுக்குக் கண்மண் தெரியாத வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான்.
இதோ வந்துவிட்டான் வீட்டுக்கு ஆனால் காவலாளியோ அவனை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. எவ்வளவோ பேசிப் பார்த்தும் பிரயோஜனம் இல்லாமல் அவனைத் தாக்கிவிட்டு, அவன் மயங்கவும் வீட்டிற்குள் புகுந்தான் அவன் நல்ல நேரம் வீட்டின் கதவுகள் பூட்டியிருக்கவில்லை.
******
அதிர்ந்து நின்றவளை கட்டி அணைத்தான் சூர்யான்ஷ். இதற்கு முன் அவளிடம் முதன் முதலாகத் தன் காதலை தெரிவித்த அன்றே அவன் கையணைவில் தான் அவள் இருந்தாள். அன்று இனிமையாக இருந்தது இன்று அவன் கட்டியணைத்ததும் உடலெங்கும் கம்பளி புழு ஊறியது போல அருவருப்பு, தன் பலம் கொண்ட மட்டும் அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
“ஹே பியூட்டி குயின் என்னாச்சு?” என்றான் தள்ளாடியபடியே.
அவளுக்கோ கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. வார்த்தை வரவில்லை. குரல்வளை அடைத்தது. மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது. ஆழ்ந்த மூச்சுகளை இழுத்து இழுத்துவிட்டாள். அதற்குள் மீண்டும் வந்து அணைக்க, இம்முறை இன்னும் பலமாகத் தள்ளத் தடுமாறி அங்குள்ள படுக்கயில் விழுந்தான் சூர்யான்ஷ்.
“ஹே குயின்.. என்ன அவசரம்.. உடனே பெட்க்கு கூப்பிடுற.. நான் உன்னை ஃபீல் பண்ணனும்.. நீயும் என்னை ஃபீல் பண்ணனும்.. அதுக்குள்ள மெயின் மேட்டருக்கு போனா நல்லா இருக்காது செல்லம்” என மோகமாகக் கூற, காதை இறுக மூடிக் கொண்டாள். எதையாவது எடுத்து மண்டையில் போட்டு அவன் மண்டையை பிளக்கும் ஆத்திரம் அவளுக்கு.
மீண்டும் அவளருகில் அவளை அணைக்க அவன் வர,
“டோண்ட் டச் மீ. யூ ஆர் அ சீட்டர்” என்றாள் முதன்முறையாக வாயைத் திறந்து.
“ஹே குயின்.. வாட் ஹேப்பன்?”
“ச்சீ. நீ இவ்ளோ மோசமானவனா இருப்பனு நான் யோசிக்க கூட இல்ல.. என் அத்தானை பழிவாங்க என்னை யூஸ் பண்ணிருக்க இல்ல.. நான் தான் லூசு மாதிரி உன் பின்னால பல்ல காட்டிட்டு வந்துருக்கேன். ச்சை என்னை நினைச்சா எனக்கே அருவருப்பா இருக்கு”
“வாட்.. கம் அகெயின்” எனக் கோபமாகக் கேட்டான் இப்போது.
“யூ ஆர் அ வுமனைஷர்.. யூ ஆர் அ சீட்டர்.. ஐ ஹேட் யூ.. இட்ஸ் ஆல் ஓவர் பிட்வின் அஸ்” எனக் கத்தினாள். அவனோ கோபத்தில் இடி இடியெனச் சிரித்தான்.
“யெஸ் ஐ ஆம் அ வுமனைஷர்.. ஐ ஆம் அ சீட்டர்.. எனக்கு எதுலயும் நான் தோற்க கூடாது. எனக்கு எல்லாமே சக்ஸஸாஹ் தான் இருக்கனும்.. விஹான் வந்த அப்புறம் என் பிஸ்னஸ் ஃபுல்லா லாஸ். என் டேட் என் மூஞ்சில துப்புறார். எனக்கு ஷரா காஸ்மெட்டிக்ஸ் வேணும் அதுக்கு நீ வேணும்”
“ச்சீ இவ்ளோ மோசமானவனா இருப்பனு நினைக்கவே இல்லை. குட் பாய்” என அவள் வெளியே செல்லப் போக, அவள் கையை இறுக்கி பிடித்தவன்,
“நீ டாட்டா காட்டிட்டு போறதுக்கா இவ்ளோ வேலை பார்த்தேன்? நீ எனக்கு வேணும்.. உன்னை வச்சி விஹானை என்னென்னலாம் பண்ண பிளான் பண்ணிருக்கேன். இவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுருவேனா?” எனப் போதையில் வாய் குளற பேசியவன்,
“ஆமா நீயும் தான ஜூஸ் குடிச்ச, எப்படி இவ்ளோ தெளிவா இருக்க? அப்போ நீயும் சீட் பண்ணிருக்க? ஆம் ஐ ரைட்?”
“நல்ல வேளை அதை நான் குடிக்கல.. அதுல என்னத்தடா கலந்த?” எனக்கேட்க, சத்தமாகச் சிரித்தவன்,
“டரக்ஸ்”
“அந்தப் பழக்கம் வேறயா இருக்கு உனக்கு? ச்சீ நல்ல வேலை உன்னைப் பத்தி எல்லாம் இப்போவே தெரிஞ்சது. விடுடா என்னை” எனத் தன் கையை அவனிடமிருந்து பிரிக்க முயன்றாள்.
வார்த்தையில் தான் குளறலாக வந்ததே ஒழிய அவனது பிடி இறுக்கமாக இருந்தது.
“விடு.. விடுடா என் கைய” எனக் கத்தினாள். அவனோ இன்னும் இன்னும் அவள் கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தான்.
“என்னை விடுடா.. பொறுக்கி என்னை விடுடா” என அவள் இன்னும் சத்தமாகக் கத்த,
“புவர் கேர்ள்” எனச் சிரித்து அவளை ஒரே இழுவையாக இழுத்து இறுக்கி அணைக்க, அவனிடமிருந்து துள்ளி விடைபெறப் போராட, மறுகையால் அவள் பின்னந்தலையை இறுக்க பிடித்து முத்தமிட ஆரம்பித்தான் அவள் இதலில்.
அருவருப்பு, ஆத்திரம், கோபம் எல்லாம் சேர்த்து மனதில் அவனிடமிருந்து எப்படியாவது விடுபடவேண்டுமென்ற நினைப்பு, போராட வேண்டிய கட்டாயம், போராடவில்லையெனில் அவனிடம் தன் மானத்தை இழக்கும் சூழல். துணிந்து செயல்பட வேண்டிய காலம் என நினைத்துத் தான் போட்டிருந்த குதிங்கால் செருப்பால் அவன் காலில் ஓங்கி மிதிக்க வலியில் அவளை விட்டான்.
*******
வெளியே கதவு திறந்திருக்க அவளைத் தேடி உள்ளே வந்த விஹானை வெறும் வீடு தான் வரவேற்றது. அவனும் சுத்தி சுத்தி அவளைத் தேடினான்.
“பிரணி” எனச் சத்தமிட்டு அழைத்தான். ஆனால் அவன் அழைப்பு தான் அவளிடம் சென்று சேரவில்லை. தரைத்தளம் முழுவதும் ஓடி ஓடித் தேடினான் ஆனால் யாரையும் அங்குக் காணவில்லை.
மாடியேறி சென்றான் அங்கு ஒரே ஒரு அறை தான் இருந்தது. மாடியேறி வரும் போதே அவன் காதுகளில் அவள் சத்தம் கேட்டது.
“என்னை விடுடா.. பொறுக்கி என்னை விடுடா” என அவள் சத்தம் கேட்க, அவன் இதயம் நின்று தான் துடித்தது.
தன்னவளின் குரல் கேட்டு அவ்விடம் விரைய, இந்தக் கதவோ தானாக மூடும் (ஆட்டோ லாக்) வகையான கதவு. சூர்யான்ஷூம், பிரணவிகாவும் உள்ளே வந்த அடுத்த நொடியே அது பூட்டிக் கொண்டது.
இவன் வெளியிலிருந்து தன்னால் ஆகமட்டும் கதவைத் தட்டி தள்ளினான். “பிரணி.. கதவ திறடி” எனக் கத்த, அது அவள் காதில் விழுந்தால் தானே!
அவளோ அந்தப் பெரிய அறைக்குள் இருக்கும் சின்ன அறையில் அவனிடமிருந்து தன்னைக் காக்க போராடிக் கொண்டிருந்தாள். கடைசி முயற்சியாகத் தான் அவள் குதிங்கால் செறுப்பால் அவனை மிதித்துத் தள்ளிவிட்டு உள் அறையிலிருந்து வெளிஅறைக்கு வர,
“பிரணி கதவ திற டி” என விஹானின் சத்தம் கேட்க, மனதின் பலம் எவ்வாறு படபடவென உயர்ந்ததோ, சூர்யான்ஷ் கையில் சிக்கிவிடக்கூடாதென வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாகக் கதவை நோக்கி ஓடியவள், உள்ளிருந்து திறக்கக் கதவும் திறந்துகொண்டது.
கதவு திறந்த வேகத்தில் தன் முன்னால் நிற்பவனை காற்று கூடப் புக முடியாத அளவுக்கு இறுக்கி அணைத்திருந்தாள். சூர்யான்ஷ் அணைத்தபோது அருவருத்து நின்றவன் இப்போது அட்டையாய் விஹானை அணைத்துக் கொண்டு நின்றாள். அவனுக்கும் அப்போது தான் மூச்சே வந்தது.
இருவரும் கட்டிப்பிடித்தபடி நிற்க அவ்விடம் தள்ளாடிய படி வந்த சூர்யான்ஷ்ஷோ “வாடா ரோமியோ! உன்னோட ஜூலியட் பின்னாடியே திரியுவ போல? அவ தான் உன்னை வேணாம்னுட்டு என்கூட வந்துட்டாளே! அப்புறம் ஏன் டா எங்க பின்னாடியே வர? விடுடா என் குயினை” கடுப்பாகக் கேட்டு அவளை பிடிக்க வர.
“ஹவ் டேர் யூ டச் மை கேர்ள்” என அவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். அதில் வலிக்க எடுக்கவும், ஏற்கனவே எடுத்திருந்த போதை வஸ்துகளின் தாக்கத்தாலோ என்னமோ சூர்யான்ஷ்க்கு வந்த கோபத்தில் விஹானை மூர்க்கமாகத் தாக்க ஆரம்பித்தான்.
விஹானும் அவனுக்கு ஈடு கொடுத்து இருவரும் அடிதடியில் இறங்க, பிரணவிகா தான் பயந்து போனாள். பயந்தவள் “அத்தான் வாங்க.. போகலாம்.. வேணாம்.. வாங்கத்தான்” என விஹானின் பின்னால் சென்று அவன் கையைப் பிடித்து இழுத்தபடி கூறினாள்.
எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்த சூர்யான்ஷ்.. “என்ன பியூட்டி அவன போய் அத்தான் அத்தான்னு கொஞ்சிட்டு இருக்க எனக்கு பிடிக்கல.. நீ இரு.. நான் அவன கொன்னுட்டு வரேன்” என அவளை விட்டுவிட்டு மீண்டும் விஹானிடம் வர,
“அய்யோ விடுங்கத்தான்.. நாம போகலாம்.. வாங்க” என மீண்டும் விஹானிடமே வந்து நின்றாள்.
இரண்டு பேரும் சரிக்கு சரி மல்லுக்கு நிற்க, ஒரு கட்டத்தில் சூர்யான்ஷ்
“பியூட்டி அவன் கூட போகாத. நான் தான உன்னோட பிரின்ஸ். உன் பிரின்ஸ விட்டுட்டு போவியா? நீ எனக்கு தான். உன்னை என்னானாலும் நான் விட மாட்டேன்” எனக்கூறிக் கொண்டே மயங்கிவிட, விஹானை இழுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.
“வேகமா வாங்கத்தான் போய்டலாம்.. அவன் வந்துரப்போறான்” என அவசர அவசரமா விஹானை இழுத்துக்கொண்டு வந்து அவன் வண்டியிலும் ஏறிவிட, வண்டியும் அவ்விடமிருந்து நகர்ந்தது.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவளுக்குப் பயம் உடம்பெல்லாம் வெளிப்படையாவே நடுங்க ஆரம்பித்தது. அவனுக்கு ஆத்திரம்..
‘ஏன் இந்த பெண் இப்படி இருக்கிறாள்? இவள் மீது எதற்காக நான் இந்த அளவுக்குக் காதலை வைத்து இப்போது வருந்துகிறேன்? அவனால் அவளை விட்டு இருக்கவே முடியாது என இந்த கொஞ்ச நாட்களில் அவனுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.
அவன் யார்? எப்படிப்பட்டவன்? என எதுவுமே அறியாமல் பார்த்ததும் எப்படி காதல் வருகிறது? எப்படி இந்தப் பெண்களுக்கு அவன் வீடுவரை சென்று அவனைத் தனியே சந்திக்க துணிவு வருகிறது? அதே காதலுடன் தானே நானும் இவள் பின்னால் சுற்றுகிறேன்.. காதலைத் தேன் தடவிய வார்த்தையால் சொன்னால் தான் இந்தப் பெண்களுக்கு அதைக் காதல் என்று புரிந்து கொள்ளமுடியுமா?
ஏன் என் கண்களில் காதல் தெரியவில்லையா? என் அக்கறையில் காதல் தெரியவில்லையா? என் கண்டிப்பு கூட ஒரு வகையான காதல் தான.. அவள் நன்மைக்காகத் தான அவளைக் கண்டித்தேன் அது கூட அவளுக்குப் புரியவில்லையா?
இந்தக் காதல் எப்படி என் மனசுக்குள்ள வந்ததுன்னே எனக்குத் தெரியல.. அத எப்படி அவ கிட்ட வெளிப்படுத்துறதுன்னும் புரியல.. இப்படிப்பட்ட எனக்கு இந்தக் காதல் வராமலே இருந்திருக்கலாம்.. நானும் இவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க மாட்டேன்’
என நினைக்க நினைக்கக் கோபத்தில் வண்டி தாறுமாறாகப் போக ஒரு கட்டத்தில் ஆளில்லாத பாதையில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி வெளியே சென்று காற்றை இழுத்து சுவாசித்தான். பின்னத்தலையை தடவி கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்.
வண்டி நின்றதும் தான் அவளுக்கு நிதானமே வந்தது. அவனைப் பார்த்தால் அவன் நின்ற நிலையே அவன் கோபத்தை கட்டுப்படுத்த தான் நிற்கிறானெனத் தெளிவாகப் புரிந்தது. மெல்ல வண்டியிலிருந்து இறங்கினாள். அவனுக்குத் தன்னை புரியவைக்க வேண்டிய தேவையில்லையென அவளின் மூளை கூற மனமோ அவனுக்குத் தன்னை புரிய வைத்து மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைத்து அவனருகில் வந்தாள்.
“அத்தான்.. சாரித்தான்” எனச் சொப்புவாய் திறந்து கூற, அவன் பளாரென விட்ட அறையில் நிலை தடுமாறி அவனையே பிடித்துக் கொண்டு நின்றாள்.
இனி என்ன ஆனது எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.