Mr D devil
Moderator
முதலில் ஓர் தந்தையாய் மகளின் செயலை ரசிக்கவே செய்தார் பிறை. ரசித்தது மட்டுமல்ல இனி மகளை எண்ணி வீணாக கவலைக் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்தார். பாவம் அந்த அந்த முடிவிற்கு ஆயுள் காலம் என்பது சில நிமிடங்கள் மட்டுமே என அப்போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகளின் பேச்சில் மலர்ந்த புன்னகையுடன் காட்ஸிடம் அறையை கண் காட்டிவிட்டு மகளைப் பார்த்தார். அவளின் தள்ளாடிய நடையும் சிவந்தக் கண்களும் முகிலின் நிலையை சொல்லாமல் சொல்லியது.
உடனே அவளை நோக்கி செல்ல முகிலோ லிஃப்ட்டில் ஏறியிருந்தாள். சிறிதும் தாமதிக்காமல் பிறை படிகளில் இறங்கி சென்றார். அவர்
கீழ் இறங்கி வருவதற்குள் தன் வாகனத்தை உயிர்ப்பித்து இருந்தாள்.
"குட்டிமா... டோண்ட் மூவ்.. நீ ட்ரைவ் பண்ணாத அப்பா வரேன்..." என பிறை கத்தியதெல்லாம் துளியும் காதில் வாங்கி கொள்ளாமல் தன் வாகனத்தை ஓட்டி சென்றாள் முகில்...
"டேமிட்.." என தரையில் காலை உதைத்தவர் வேக நடையுடன் தன் வாகனத்தை நோக்கி நடந்தார்.
"கோபால் அண்ணா அம்முவைப் ஃபாலோ பண்ணுங்க..." எனக் கூறியவரின் பதட்டம் நிறைந்த முகத்தை பார்த்த டிரைவரோ
"பாப்பாவை சீக்கிரம் ஓவர் டேக் பண்ணிடலாம் சார் நீங்க டென்ஷன் ஆகாம இருங்க..."என சொல்ல "ஹிம்ம்..." என்றவரின் கவனம் முழுவதும் அதீத வேகத்தில் செல்லும் மகளின் மேல் தான்.
சென்னை வாகன நெரிசலை பற்றியும் அதனால் உண்டாகும் விபத்துக்கள் பற்றியும் தெரியும் என்பதால் அவரின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது... மனமோ அதற்கு நேர் மாறாக 'அம்மா சொல்லும் போதே வந்திருந்தா அம்முக்கு இப்படி ஆகறதுக்கு முன்னாடியே நீ இங்க வந்து இருக்கலாம் இப்ப பாரு என்னாச்சுன்னு...'எனக் குற்றம் சாட்டியது.
தன் தாயின் பயம் எதற்கென புரிந்தாலும் மனைவியை மீறி அவரால் சட்டென முடிவெடுக்க முடியவில்லை... அதற்காகவே மனைவி பேசும் போது அமைதியாக நின்றிருந்தார். இருந்தும் மனைவியின் தீர்க்கமான பேச்சு இவருக்கு கலக்கத்தை கொடுத்தது... உடனே தேவியின் அடிபட்டப் பார்வையை மீறி வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தார் பிறை... மனைவியா? மகளா? என்கையில் அன்று போல் அல்லாமல் இன்று பெண்ணரசியே கண் முன் நின்றாள்..
வீட்டிலிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே காவல் அதிகாரியிடம் முகிலின் அலைபேசி இலக்கத்தை வைத்து ட்ரேக்கிங் செய்யக் கட்டளையிட்டார்... சில நிமிடங்களிலேயே அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவல் வர அவ்விடத்தை நோக்கி பயணித்தார். அதே சமயம் தேவா அனுப்பிய காட்ஸும் கிளப்பிற்கு வந்திருந்தனர்.
சில நிமிடங்களுக்குள் மகள் சென்ற இடத்தை கண்டுப் பிடித்தவருக்கு தற்போது அவளிருக்கும் அறையை கண்டுப் பிடிக்க நாழிகள் தேவைப்படவில்லை... அதற்கு பின் நடந்தது தான் மேற்கண்டவை...
******
வாகனத்தை உயிர்ப்பித்து சிலடி தூரம் சென்றதுமே தலைச்சுற்ற ஆரம்பித்து இருந்தது முகிலுக்கு... தலையை உலுக்கி போதையில் சொக்கிய கண்களை சிமிட்டி பார்த்தவளின் எண்ணம் முழுவதும் எப்படியாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. அதனாலேயே வாகனத்தின் வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றாள்...
நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவளுள் செலுத்திய போதை மருந்து நன்றாகவே வேலை செய்தது. உடலும்,மனமும் ஆகாயத்தில் பறப்பது போல் ஓர் அழகிய மாயை தோன்றியது. செந்தாமரையாய் சிவந்திருந்த கண்களை இறுக மூடி அந்த அழகிய மாயைக்குள் மூழ்கும் நேரம்... திசைமாற்றியை (ஸ்டீயரிங் விலை) இறுக பற்றியிருந்தவளின் கைகளில் இறுக்கம் சற்றே தளர்ந்த நேரம் அவளின் உள்ளுணர்வு ஏதோ எச்சரிக்கை உணர்த்த அதை அவள் முழுவதும் உணர்ந்து கொள்ளும் முன்பே, சில அடி தூரத்தில் டேங்கர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.. அதன் மேல் தன் வாகனம் மோதாமல் இருக்க சட்டென திசை மாற்றியை வலது புறம் திருப்பினாள் இருந்தும் அவள் உள்ளுணர்வு உணர்த்தியதை நிரூபிக்கும் வகையில் வாகனம் நிலை தடுமாறி உருண்டது.
எப்படியும் மகளை தடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவளின் பின்னால் வந்து கொண்டிருந்தவருக்கு இந்த எதிர்பாரா விபத்து மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது... கிழே விழுந்த வேகத்தில் வாகனத்தின் உதிரி பாகங்கள் அனைத்தும் தக்காளியை போல் நசுங்கி தான் போனது... வாகனத்தின் நிலையே இப்படியென்றால் வாகனத்தை இயக்கியவளின் நிலை? அதை நினைக்க கூட முடியவில்லை அவரால்... அவரின் இதயத் துடிப்பு அவருக்கே கேட்கும் அளவிற்கு துடிக்க ஓரிரு நாழிகள் திக் பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்து விட்டார்.
"ஐயோ பாப்பா, தம்பி பாப்பா..."என்ற கோபாலின் குரலில் தன்னிலைக்கு வந்தவர் படபடக்கும் இதயத்தோடு முகிலை நோக்கி ஓடினார்..
****
அதே நேரம் சென்னை ஜன நெரிசலுக்கு ஏற்ப வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாகவே இருந்தது அதற்கு தகுந்தாற்போல் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டான் ஆகாஷ்...
சிக்னலிலோ அல்லது வாகன நெரிசலிலோ எப்போது மாட்டிக் கொண்டாலும் அவனின் நினைவுகளில் ஆட்சி செய்வது நறுமுகிலாக தான் இருப்பாள்... இப்போதும் கூட அவனின் நினைவுகள் முழுவதும் அந்த நாளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது..
மதிய வெயிலில் நடு ரோட்டில் பத்து நிமிடங்களுக்கு நின்றுக் கொண்டிருந்தது ஒரு வித எரிச்சல் என்றால் அவனுக்கு பின்னால் விடாமல் கேட்கும் வாகனத்தின் ஹாரன் சத்தம் மென்மேலும் எரிச்சலை க்கூட்டியது...
"சிக்னலில் நின்னுட்டு எதுக்கு இந்த தேவையில்லாத ஹாரன் ஆணி..." என முனகி கொண்டே பின்னால் திரும்பி
"என்ன...?? கைக் கூந்த*** வைச்சட்டு சும்மா இருக்க முடியாத..."என்ற வார்த்தை காரில் அமர்ந்திருந்தவளை பார்த்ததும் அப்படியே நின்றது.
இவன் பார்வைக்கு காத்திருந்தவள் போல ஜன்னலின் வழியே தலையை வெளி விட்டு "ஹாய் மிஸ்டர் ஆகாஷ் வானவராயன்..." என ஆர்ப்பாட்டமாக கத்தி அழைத்தாள்... விடாது ஹாரன் அடித்த எரிச்சலில் சைட் மிரரை பார்க்காமல் திரும்பி பார்த்து விட்டேனே என நொந்து கொண்டவன் அவளின் அழைப்பிற்கு பதில் பேசாது சட்டென திரும்பி கொண்டான்... அவன் திரும்பியதும் மீண்டும் காரின் ஹாரனை விடாமல் அடித்தாள். 'நீ என்னவோ பண்ணிக்கொள்..' என்பதை போல் நின்று கொண்டவனின் பொறுமையை நன்றாகவே சோதித்து பார்த்தாள்.
விடாது ஒலிக்கும் ஹாரன் சத்தத்தில் அவனது பொறுமை எல்லையை கடக்கவும் பச்சை சிக்னல் விழவும் சரியாக இருந்தது. "ஹப்பா..." என வாய்விட்டு கூறவில்லை என்றாலும் மனதில் தன்னாலேயே ஆசுவாசம் எழ வாகனத்தில் முடிந்த மட்டும் வேகத்தை கூட்டினான்...
எத்தனை வேகமாய் சென்றாலும் சில நிமிடங்களுக்குள் அவனின் ராயல் என்பீல்டு பைக்கை வழி மறைத்து நின்றது அவளின் உயர் ரக கார்...
கண்கள் இரண்டும் செங்காந்தள் போல் சிவக்க எதிரிலிருந்த வாகனத்தை வெறித்து பார்த்தான்... அவனின் கனல் பொழியும் பார்வையை சிறு இதழ் வளைவோடு பார்த்தவள் காரிலிருந்தப்படியே "கார்ல ஏறு..." என்றாள்.
அவளின் கூச்சமில்லா அழைப்பில் முகம் இறுக 'நீயெல்லாம் பொண்ணே இல்லை...' என்பதை போல் பார்த்தான்.. அவனின் பார்வையின் அர்த்தம் இவளுக்கு புரிந்து இருக்க வேண்டும் சட்டென இதழ் பிரித்து நன்றாகவே சிரித்தவள்
"திடீர்னு உன் வண்டி பத்திக்கிட்டு எரிஞ்சா என் கூட வருவ தானே..." என சிரிப்பு மாறாமல் கேட்டாள். அவளை ஏளன சிரிப்போடு பார்த்தவன் அவளை நோக்கி நடந்தான்...
அவன் தன்னை நெருங்கி வருவதை கண்களில் வெற்றி சிரிப்போடு பார்த்தவள் "என்ன மிஸ்டர் ஆகாஷ் வானவராயன் பயந்துட்டீங்க போல..." எனக் கேட்டாள்..
"பயபடறதா? நானா?..." என கேட்டு ஏளன சிரிப்பை உதிர்த்தவன்
"இத்தனை நாள் அமைதியா போனது உனக்கு பயந்து தான்னு நினைச்சா அது உன்னோட தப்பு... யூ நோ வாட் நான் அப்படி அடங்கி போற ரகம் நான் இல்லை..." என திமிராக கூறியவன்
"என் ஸ்டேட்டஷுக்கு உன்கிட்ட நின்னு பேசறதே அசிங்கமா நினைக்கிறேன்..." என்றவனை
"அப்படியா..." என்பதை போல் பார்த்தாள். அவளின் பார்வையில் பற்களை நறுநறுவெனக் கடித்தவன்
வலது கையை மடக்கி ஒவ்வொரு விரலாக சொடக்கெடுத்தான்...
அவன் கோபத்தை அடக்குவது நன்றாகவே அவளுக்கு புரிந்தது... அவனின் கோபத்தை ரசித்து பார்த்தவள்
"என்னைக்காவது எல்லாத்தையும் விட்டுட்டு என்னை தேடி நீ வர தான் போற..." என்றாள் மென்மையாக
"அது கனவுல கூட நடக்காது..." என்றவனை நக்கல் தொனிக்க பார்த்தவள்
"அதையும் தான் பார்க்கலாமே..." என்று தன் வாகனத்தை உயிர்ப்பித்தாள்...
அவளின் பேச்சில் கோபம் வந்ததே ஒழிய வெறுப்பு வரவில்லை... சொல்லபோனால் அவளின் உண்மையான குணம் இதுவல்ல என தோன்றிக் கொண்டே இருந்தது அவனுக்கு...
"தம்பி...தம்பி..." என்ற அழைப்பில் தன் நினைவிலிருந்து வந்தவன்
"என்னாச்சு ண்ணா..." என கடிகாரத்தை பார்த்தபடியே கேட்டான்...
"ஏதோ ஆக்சிடென்ட் போல தம்பி எப்படியும் ட்ராஃபிக் கிளியர் ஆக கால் மணி நேரம் ஆகும்..." என டிரைவர் சொல்ல "ஹ்ம்ம்..." என்று மணியை பார்த்தான்...
"நான் கொஞ்சம் இம்போர்ட்டண்ட் வொர்கா வெளிய வந்துட்டேன் ஆகாஷ்... நான் ஆஃபீஸ் ரீச்சாக லேட் ஆகும் போல சோ ஆபிஸ் மீட்டிங்கை நீயே ஹேண்டில் பண்ணிடு..." என தந்தைக் கூறியது இப்போதும் நினைவு வந்தது. அவர் கூறிய நேரத்தை விட அதிகமாகும் என நினைத்தவன் தந்தைக்கு அழைத்தான் அவர் அழைப்பை ஏற்காது போகவும்
"ஷீட் "என தலை முடியை அழுத்தி கோதியவன் வெளியில் எட்டிப் பார்த்தான். விபத்தில் தக்காளியை போல் நசுங்கி கிடந்த வாகனத்தை அப்புற படுத்தும் வேலையில் இருந்தனர்.. பெரிய விபத்து போல என நினைத்தப்படி மீண்டும் தந்தைக்கு அழைத்தான்... அழைப்பு சென்றதே தவிர எதிர்புறம் அழைப்பை ஏற்கவில்லை...
இனி தந்தையை நம்பி பயனில்லை என நினைத்தவன் தன் பி. ஏ விற்கு அழைத்து மீட்டிங் நடக்கும் நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு தள்ளி வைக்க கூறிவிட்டு அழைப்பை த்துண்டித்தான்.
சிறிது நேரம் வாகனத்திலயே அமர்ந்திருந்தவன் என்ன நினைத்தானோ கீழ் இறங்கி நின்றான்... உன் கேசத்தை கலைத்து விளையாடவே காத்திருந்தேன் என்பதை போல அவனின் அலையலையான கேசத்தை கலைத்து விளையாடியது வெப்பக் காற்று.. காற்றிலாடும் கேசத்தை அழுத்தி கோதியவன் விபத்து நடந்த இடத்தை தூரத்தில் இருந்தப்படியே பார்த்தான்.
இதயம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது. மனமோ அங்கு சென்று பார் என கட்டளை விதித்தது... மனதின் கட்டளையை மீற முடியாமல் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடந்தான்..
அவனின் இதயம் கொடுத்த எச்சரிக்கை உணர்வு சரியென்பதை போல் விபத்தில் நொறுங்கி கிடந்த முகிலின் வாகனத்தை கண்டான்... படப்படக்கும் இதயத்தோடும் பரிதவிக்கும் மனதோடும் முகிலின் வாகனத்தை அப்புற படுத்திக் கொண்டிருந்த காவலர்களை நோக்கி நடந்தான்...

Last edited: