எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

என்னை ஆளும் காதலே 18

S.Theeba

Moderator
மாலை வரை அலுவலகத்தில் வேலை நெட்டித் தள்ள எந்தவித சிந்தனையுமின்றி வேலையில் மூழ்கியிருந்தான் தனஞ்சயன். தன் மனதின் ரணத்தை ஆற்றும் மருந்தாக அவன் வேலையையே எடுத்துக் கொண்டான். ஒரு முதலாளியாக இருந்து எல்லோரையும் வேலை வாங்கிக் கூடியவன் மற்றவர்கள் செய்ய வேண்டியதையும் சேர்த்து தானே செய்தான். தினமும் மதியம் வரை தங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு நேரில் சென்று நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்தான். பிற்பகலில் தங்கள் பிரதான அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பான்.

இன்றும் வழமை போலவே தன்னை மறந்து வேலைகளில் மூழ்கி இருந்தவனை அவனது அலைபேசி அழைத்தது. திரையில் தெரிந்த தாயாரின் எண்ணைப் பார்த்ததும் யோசனையுடன் அழைப்பை ஏற்றான்.
“ஹலோ அம்மா, சொல்லுங்க”
“தனா எங்கே நிற்கிறாய்?”
“நம்ம ஹெட் ஆபிஸில் தான்யா”
“அப்போ நீ இன்னும் புறப்படலையா?”
“ஏன்மா?”
“என்ன தனா இப்படிக் கேட்கிறாய்? இன்று உனக்கும் மிருணாவுக்கும் என்கேஜ்ட். என்னப்பா நீ அதைக் கூட மறப்பாயா?”
“அம்மா…. பிளீஸ்… அது… நான்… மிருணாவுக்கும் எனக்கும் ஒத்துவராதும்மா… அவள் திமிரெல்லாம்..”
“தனா, நான் உன் அம்மா.. எது செய்தாலும் உன் நல்லதுக்கு மட்டும்தான் செய்வேன். மிருணா நம்ம வீட்டுப் பொண்ணு. அவள் அப்பா கூட சேர்ந்து சில பழக்கங்கள் மாறியிருக்கலாம். மற்றப்படி அவள் நல்லவள் தான். நம்ம வீட்டுக்கு வந்ததும் நான் அவளை நம்க்கேற்ற மாதிரி மாற்றிடுவேன். ஏன் தனா என் மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்று தாய் குரலில் வருத்தத்தைக் காட்டிக் கேட்கவும் பதறிவிட்டான். அவன் இப்போது உலகத்தில் நம்பும் ஒரே ஜீவன் அவன் தாய் மட்டுமே. உயிராய் அவன் நம்பியவள் அற்ப காரணத்துக்காக அவன் நம்பிக்கையை உடைத்தெறிந்துவிட்டுச் சென்றுவிட்டாள். இதற்குமேல் அன்பு, நம்பிக்கை போன்ற வார்த்தைகள் அவனை அண்டாது என்பதே அவனது நிலை. எனினும் தாய் மட்டும் விதிவிலக்கா? தன் தாய் வருத்தத்துடன் கேட்பது பொறுக்காமல்
“அம்மா இந்த உலகத்தில் உங்களை விட்டால் வேறு யாருக்கும்மா என் நலனில் அக்கறை இருக்கப் போகின்றது. நீங்கள் எனக்காக எது செய்தாலும் அது எனக்கு சம்மதமே” என்றான்.
“ அப்போ நீ வேறு எதைப்பற்றியும் யோசிக்காத. இப்போ பேச நேரம் இல்லை. இங்கே ஃபங்ஷனுக்கான எல்லா ஏற்பாடும் ஓகே. நீ உடனேயே புறப்பட்டு வா” என்று விட்டு தனது அழைப்பைத் துண்டித்து விட்டார் சுபத்திரா.
என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தான் தனஞ்சயன்.
நிஷாந்தினி அவனை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து விட்டாள்தான். ஆனாலும் அவனால் அவளை மறக்க முடியவில்லை. இதை நினைக்கும் போதெல்லாம் அவன் மீது அவனுக்கே வெறுப்பு உண்டானது.
“ஏண்டி ஏன்? என் காதல் உனக்கு கசந்தது எதனால்? உன்னையே நான் நினைத்துக் கொண்டு இருக்க நீ வேறொருவனுடன் என்னை மறந்து வாழத் தயாராகி விட்டாயே? எப்படியடி உன்னால் முடிந்தது? என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டு நீ மட்டும் சந்தோஷமாக வாழ உன்னால் முடிகின்றதே? என் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் நிச்சயம் உன்னைப் பழிவாங்கி இருந்திருப்பான். பட், என்னால் முடியலையே… உன்னை வெறுக்கவும் முடியவில்லை.. மறக்கவும் முடியவில்லை” என்று மனதிற்குள் புலம்பி உழன்றான்.
ஒருத்தி தன் அன்பைத் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றே விட்டாள். ஆனால், தான் அவளையே நினைத்துக் கொண்டு இருக்கிறேனே என்று எண்ணும் போதே அவனுக்கு வாழ்க்கை வெறுத்து விடுகின்றது.

சில நிமிடங்கள் கழித்துப் புறப்பட்டு வீட்டிற்கு வந்தவன் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வுகளை நிறுத்த முடியாது தன்னுள்ளே உழன்றபடி சாவி கொடுத்த பொம்மை போலவே சடங்குகளில் பங்கெடுத்தான்.

இன்னும் ஒரு மாதத்தில் வரும் முகூர்த்தில் திருமணம் என் நாள் குறித்தனர். வீட்டில் எல்லோருமே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் இருவரைக் தவிர. ஒருவன் தனஞ்சயன்.. அவன் நிலைதான் நமக்குத் தெரியுமே.. மற்றையவன் பிரசாந்த்.

ஆம் தனஞ்சயனின் தம்பி பிரசாந்த் தான். அவனுக்கு இந்தத் திருமணத்தில் ஆரம்பத்தில் இருந்து அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் தாயின் விருப்பத்திற்கு மாறாக எதையும் சொல்ல முடியாது என்பதால் பட்டும் படாமலும் இருந்துவிட்டான். நிச்சயதார்த்தத்திற்கென அவன் சார்பாக அவனுடன் படிக்கும் நண்பர்களை அழைத்தான். அவனது நெருங்கிய நண்பன் ராகேஷையும் அழைத்திருந்தான். ராகேஷ் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படிக்கிறான். ஏனைய நண்பர்கள் நேரத்திற்கே வந்துவிட்டனர். அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவன் கண்ணும் மனமும் ராகேஷையே தேடின. தன் உற்ற நண்பனை இன்னும் காணலையே என்ற ஆதங்கத்தில் இருந்தவன் சற்று நேரம் பொறுத்து விட்டு அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
அப்பொழுதே அவன் வராததுக்கான காரணம் தெரிந்தது. அவன் பெங்களூரில் ஒருத்தியைக் காதலித்துள்ளான். அவளுக்கு இன்று நிச்சயதார்த்தமாம். அதுவும் இங்கே சென்னையில் தானாம்.
“மச்சி, பேர் அட்ரஸ் எல்லாம் சொல்லுடா. இப்போவே போறோம். அவளைத் தட்டித் தூக்கிட்டு வருவம். நம்ம பசங்க எல்லோரும் இங்கதான் இருக்கம். எல்லோருமே புறப்பட்டு வாறோம்.” என்றான் பிரசாந்த்.
ராகேஷ் தான் லவ் பண்ணியவளின் பெயர் மிருணாளினி எனக் கூறியதும் திகைத்த மனதைத் தட்டி அடக்கினான். உலகத்தில் எத்தனை ஆயிரம் பேருக்கு இந்தப் பெயர் இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப் படுததியவன்,
“மச்சி, நீ கவலைப்படாதடா… நாங்க ஃபிரண்ட்ஸ் என்று எதுக்கு இருக்கம். உன் லவ்வரை நாங்க உன்கூட சேர்த்து வைக்கிறோம்டா… நீ அவ வீட்டு அட்ரஸைச் சொல்லு. நாங்க இப்பவே போறோம். நம்ம ஜாக்கி கூட இங்கதான் இருக்கான். எதாவது பிரச்சினை என்றால் அவன் அப்பா மூலம் பார்த்துக்கலாம். அவர் ஏசி தானே. அப்புறம் சிஸ்டர் கிட்ட… அதான் உன் லவ்வர் கிட்ட சொல்லிடு… நாங்க வர்றோம் என்று” என்று இடையில் குறுக்கிட்ட ராகேஷ் பேச்சை அவன் கவனிக்கவில்லை.
“மச்சான்… முதல்ல நான் சொல்றதைக் கேளுடா… என் லவ்வில் வேறு யாராலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் லவ் பண்ணியவள் தான் ப்ராப்ளம்.”
“என்னடா சொல்ற? அவளால் என்ன ப்ராப்ளம்?”
“அவள் என்னை லவ் பண்ணலையாம்”
“டேய் டேய் வன் சைட் லவ்வாடா? நீ லவ் பண்ணியது அவளுக்குத் தெரியாதா?”
“அப்படி இல்லடா… என்னை லவ் பண்ணுனாள்டா. ஃபெர்ஸ்ட் லவ் புரபோஸ் பண்ணியதே அவள்தான். வன் அன்ட் என்று ஹாவ் இயர்ஸ் சின்சியரா லவ் பண்ணினோம்”
“அப்புறம் ஏண்டா…?”
“லவ் பண்ணும்போது என் ஸ்டேடஸ் தெரியலை. இப்போ அவளுக்கு ஸ்டேடஸ் முக்கியமாம். எங்க அப்பா சாதாரண கவர்ன்மென்ட் ஜொப்பாம்… எனக்கென்று எந்த சொத்தும் இல்லை. என்னைக் கட்டிக் கிட்டா மாத சம்பளத்துக்கு வாழ்க்கையை நட்த்தணுமாம்…”
“சோ… அதுக்கு என்ன செய்யணுமாம்?”
“தன்னை மறந்திடச் சொல்லிட்டாள். அவள் மாமா பையன் பெரிய பிஸ்னஸ் ஆளாம். பரம்பரை பணக்காரனாம். அவனைக் கட்டிக்கிட்டா தான் கனவு கண்ட லைவ் ஸ்டைலில் வாழலாமாம். அதனால் என்னை மறந்திடு என்று சொல்லிட்டு இங்கே வந்திட்டாள். அவளைத் தேடித்தான் இங்கே வந்தேன். அவள் அட்ரஸைத் தேடி இன்றுதான் கண்டுபிடிச்சேன். பட் இன்று அவளுக்கு எங்கேஜ்ட்மென்டாம்”
“மச்சி எனக்கு என்ன சொல்றதென்றே தெரியலை. பட் அவள்தான் உன்னை விட்டுப் போயிட்டாளே… அவளை மறந்திடேன்…”
“இல்லடா என்னால் மீடியலைடா… அவளை நான் சின்சியரா லவ் பண்ணுறேன் டா. அவள் இல்லாவிட்டால் நான் செத்திடுவேன்”
“டேய் டேய் என்னடா இப்படியெல்லாம் பேசுறாய். நீ ரொம்பத் தைரியசாலி ஆச்சே. மச்சி நீ அவ அட்ரசைச் சொல்லு நாங்க போய் பேசிப் பார்க்கிறோம்.”
“இப்போ அவ வீட்டில் இல்லடா. இன்று அவளுக்கு எங்கேஜ்ட்மென்ட். அவங்க மாமா பையன் வீட்டிலையாம். அவன் அட்ரஸைத் தான் இப்போ விசாரிச்சிட்டு இருக்கேன். தனஞ்சயனாம்.. மிகப் பெரிய பபிஸ்னஸமானாம்… வேறு எதுவும் தெரியலைடா” என்றான் மறுமுனையில் இருந்த ராகேஷ். அவனுக்கு தனஞ்சயனைத் தெரியும். ஆனால், பிரசாந்த் அழைப்பது போல தனா அண்ணா என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால் அவனது முழுப் பெயர் தெரியவில்லை. மிருணாளினியும் தன் உறவினர் குறித்து எந்த விவரமும் கூறவில்லை. அவளது அப்பா ரவிச்சந்திரனை மட்டுமே நேரில் கண்டிருக்கிறான். அதுவும் தனது நண்பன் என அவருக்கு அறிமுகப்படுத்தப்படுத்தினாள்.

இந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்த பிரசாந்தின் மனம் பெரும் பதட்டத்தை அடைந்தது. குரலில் தனது பதட்டத்தைக் காட்டாது
“மச்சி… உன்கிட்ட அந்த மிருணா… மிருணாளினியின் போட்டோ இருக்காடா”
“நிறையவே இருக்கு. நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு நெருக்கமாய் இருந்தோம்.. ம்கூம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் இந்த போட்டோக்களே சாட்சி சொல்லும்டா?”
“எனக்கு அவள் போட்டோ ஒன்றை வாட்சப்புக்கு சென்ட் பண்ணி விடடா. நான் விசாரிச்சுப் பார்க்கிறேன்”
“ஓகே மச்சான்… இதோ இப்பவே சென்ட் பண்ணுறேன். எனக்கு இப்போதான் நிம்மதியாய் இருக்கு.. நீயும் நம்ம ஃபிரண்ட்ஸூம் என்கூட இருந்தால் நிச்சயம் என் மிரு எனக்குக் கிடைச்சிடுவாள். இப்பவே சென்ட் பண்ணிடுறேன்”
என்றவன் தொலேபேசி அழைப்பைத் துண்டித்தான்.
அரை நிமிடம் நேரத்துக்குள்ளயே பிரசாந்தின் வாட்சப்பிற்கு மெசேஜ் ஒன்று வந்ததற்கான கிளிக் ஒலி கேட்டது. அந்த அரை நிமிட நேரத்தையே படபடக்கும் மனதுடன் கடந்திருந்தான் பிரசாந்த்.
மெசேஜை ஓபன் செய்து பார்த்தான். அவன் நினைத்தது சரியாகவே இருந்தது. அந்தப் படத்தில் ராகேஷூம் மிருணாளியும் மிக மிக நெருக்கமாக அணைத்தபடி செல்ஃபி எடுத்திருந்தனர்.
அதைப் பார்த்ததும் பிரசாந்த் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான். தன் நண்பனைக் காதலித்து அவனை ஏமாற்றிவிட்டு தனக்கே அண்ணியாக வர நினைக்கிறாளே? இவளை அம்மா நல்லவள் என்று எண்ணி அண்ணாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாரே… இதோ நிச்சயதார்த்தமும் முடிந்து கல்யாணத்திற்கு நாளும் குறிச்சாச்சு. இதை எப்படி தடுப்பது? எல்லோருக்கும் இவளைப் பற்றி தெரியப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய ஆரம்பித்தான்.

???

அழகு சூழ்ந்த சோலையூர் கிராமம் நிஷாந்தினியை வாவென்று இரு கரம் நீட்டி பாசத்தோடு வரவேற்றது. கிராமத்தின் பசுமையும் மண்ணின் மணமும் அவள் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்தன. எங்கு பார்க்கிலும் பச்சைப் பசேலென இருந்த வயல்வெளியும் தோட்டங்களும் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் இதத்தைத் தந்தன.

பஸ்ஸில் சந்தித்த தாரணியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறியிருந்தாள். பயணத்தின் இடையில் திடீரென
“நிஷா… நீ இவ்வளவு நாளும் சென்னையிலேயே வாழப் பழகிட்டாய். எங்க ஊர் உனக்கு வசதிப்படாதுதான். பட் அட்ஜஸ்ட் பண்ணி இருப்பாய்தானே?” என்று சந்தேகம் கேட்டாள் தாரணி.
“கிராமத்தின் அழகும் அமைதியும் எந்த நகர வசதியிலும் கிடைக்காது. அது சரி உன் ஊர் எனக்கு ஏன் வசதிப்படனும்?”
“என்னடி கேள்வி இது?நீ இருக்கப் போகும் ஊர் உனக்கு வசதிப்படனும்தானே?”
“அது… அது… நான்”
“அப்புறம் மெடம் எங்கே போனாய் உத்தேசம்…? வாயை மூடிக்கொண்டு வந்து எங்க வீட்டில் இருக்காய்” என்றவள் அவளை வேறு பேச விடவில்லை.

தங்கள் ஊருக்கே நிஷாந்தினியை அழைத்து வந்து விட்டாள். வழியில் வரும்போதே தன் வீட்டிற்கு அழைத்து நிஷாந்தினியைத் தான் அழைத்து வரும் விடயத்தை சொல்லிவிட்டாள். தன் தமக்கையிடம் நிஷாந்தினியையும் குழந்தை பற்றியும் சுருக்கமாகக் கூறினாள்.

அவள் வீட்டிற்கு வந்ததும் அன்புடன் வரவேற்று உபசரித்து தாரணியின் வீட்டினர் அவளைத் தங்களுடனேயே தங்க வைத்தனர். அங்கேயே இருந்தபடி தபால்மூலக் கல்வியில் தனது படிப்பைத் தொடர்ந்தாள் நிஷாந்தினி. தனக்கும் குழந்தைக்குமான செலவுக்கென வீட்டில் டியூசன் வகுப்பெடுக்க ஆரம்பித்தாள். படிப்பு முடித்த கையோடு ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தாள். தாரணியும் விண்ணப்பித்திருந்தாள். இருவருக்கும் ஒரே தடவையிலேயே ஆசிரியர் பணி கிடைத்தது.


வேலை கிடைத்த உடனேயே தனியாக வீடு பார்த்து தங்க ஆரம்பித்தாள். தாரணியும் அவளது வீட்டினரும் எவ்வளவோ தடுத்தும் உறுதியாக இருந்து வெளியேறினாள். இதுவரை நாளும் அவர்கள் செய்ததே பெரும் உபகாரமாய் இருக்கும்போது இன்னும் அவர்களுக்கு பாரமாய் இருக்க முடியவில்லை அவளால்.
 
Last edited:
Top