Lufa Novels
Moderator
அவனோடு இனி நானா!
அத்தியாயம் 24
விஹான் பளாரென விட்ட அறையில் நிலை தடுமாறி அவனையே பிடித்துக் கொண்டு அதிர்ந்து நின்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவள் கண்களில் தெரிந்த பயமும், அவள் முகத்தில் தெரிந்த வலியும் அவனுக்கு மேலும் மேலும் கோபத்தை தான் வரவழைத்தது. அவளைத் தன்னிடமிருந்து பிரித்துத் தூர நிறுத்தியவன்,
“எப்படி உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு? என்ன நினைச்சு நீ அவன் வீட்டுக்குத் தனியா போன?”
“அது.. நா.. நான்..” எனத் தடுமாறியவளுக்கு வார்த்தை தான் வரவில்லை.
“அன்னைக்கும் இப்படி தான் சி.ஐ.டி வேலை பார்க்குறேனு அந்த பிரின்ஸிபால் வீட்டுக்குத் தனியா போய் நின்ன.. சரி அதுவாது ஷிம்ரித் அண்ணாவும், நிஹாரிகாவும் வந்து உன்னைக் காப்பாத்துவாங்கனு நம்பி போன.. ஆனா இப்போ எந்தத் தைரியத்துல நீ போன?
ஒவ்வொரு முறையும் நீ இப்படி மாட்டிட்டு நிக்கிறப்ப ரொம்ப வலிக்குதுடி.. இங்க இங்க வலிக்குது” எனத் தன் நெஞ்சை தொட்டுக் காட்டினான்.
(சிறையாடும் மடக்கிளியே கதையில் இந்த சீன் வரும். பிரணவிகா படிக்கும் கல்லூரியில் நடக்கும் சில தவறுகளைக் கண்டுப்பிடிக்க கலெக்டர் ஜோடியான ஷிம்ரித்துக்கும், நிஹாரிகாவுக்கும் உதவியாக இதுபோல ஒரு பிரச்சனைக்குள் சென்றாள் ஆனால் உரிய பாதுகாப்போடு)
அன்றும் அவளிடம் இப்படி தான் விஹான் கோபமாகக் கத்தினான். “உனக்கு எதுன்னா ஒன்னுன்னா எப்படி டி நான் தாங்குவேன்” என. அப்போதே கவின் வீட்டினர் அனைவருக்கும் விஹான் பிரணவிகா மேல் கொண்டுள்ள காதல் இலைமறைக் காயாய் தெரியும்.
இன்றும் அதே கோபத்தோடு தான் அவள் முன் நிற்கிறான். அன்று அவனது கோபம் மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்தது அதன் பின் உள்ள காதலை அவள் புரிந்து கொள்ளவே இல்லை ஆனால் இன்று அந்தக் காதல் அப்பட்டமாய் தெரிகிறது ஆனால் அதை ஏற்று மகிழும் நிலையில் தான் அவள் இல்லை.
அவன் காதலுக்கு அவள் தகுதியானவே இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்கு புரிந்தது. இந்தக் காதலை தான் உதறிவிட்டு அந்தக் கயவன் பின்னால் சென்றாள்.
பளபளவென இருப்பதால் கண்ணாடிக்கல் வைரம் ஆகிவிடாது.. அதே போல் பட்டை தீட்டாமல் இருப்பதால் வைரம் வெறும் கல்லாவும் மாறிவிடாது என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டாள் மங்கை. கண்களில் கண்ணீர் மட்டுமே! வேறென்ன செய்ய முடியும் அவளால்?
விஹான் “அப்படி எந்த விதத்துல டி அவன் என்னைவிட உசத்தியா போய்ட்டான் உனக்கு?” எனக் கேட்டேவிட்டான் அவன் மனதில் உள்ள இரணத்தினை.
ஆனால் இந்த வார்த்தையை இன்று காலை அவன் கேட்டிருந்தால் கூட ஆயிரம் காரணம் கூறி சூர்யான்ஷ் தான் தனக்கு நிகரானவன்.. தன் மனம் கவர்ந்தவன் எனக் கூறியிருப்பாள் ஆனால் இப்போது என்ன காரணம் அவள் கூறிவிட முடியும்? ஏமாந்து போய் அல்லவா நிற்கிறாள்?
“சாரித்தான்” என அழுது கொண்டே குனிந்து நின்றாள். அவளின் நாடியை ஒற்றை விரலால் தூக்கி கண்ணோடு கண் கலந்து,
“என் காதல் உனக்குப் புரியவே இல்லையா டி” என ஒட்டுமொத்த வலியையும் குரலில் காட்டி கேட்டான்.
என்ன பதில் கூறுவாள் இந்தக் கேள்விக்கு. அவளுக்கு இவன் காதல் புரியாமல் இல்லையே! நன்கு புரிந்ததே! ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் மனம் இல்லாமல் அவன் காதலை ஒதுக்கி வைத்தாள். அதற்கு மிக முக்கிய காரணம் அவன் தாய் தான். அவர் அவளையும் அவள் தாயையும் தரைகுறைவாகப் பேசித் தன் மகன் பக்கமே திரும்பக் கூடாது எனக் கூறியதும் அவளை அவன் புறம் சாயாமல் தடுத்துவிட்டதெனக் கூறவும் முடியாமல் அழுதபடி நின்றாள்.
அவள் பதில் பேசாமல் மீண்டும் தலை குனிவதை பார்த்தவன்,
“அப்போ புரிஞ்சு தான் இருக்கு. சரிதான?” என்றான் ஆனால் பதில் இல்லை அவளிடம்.
அவள் மனமோ ‘ஐயோ என்னை விட்டுடேன் டா.. அவன் ஏமாத்தியத கூட நான் தாங்கிடுவேன் போல ஆனா நீ என்னை நிக்க வைச்சு கேட்க்குற கேள்வி தான் உள்ளுக்குள்ள அறுக்குது’ எனக் கத்த வேண்டும் போல் இருந்தது.
“பதில் பேசு டி. ஊமைக்கொட்டான் வேஷம் மட்டும் போடாத.. இப்போ கூட நீ மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு தான இருப்ப?” எனச் சரியாகக் கேட்டுவிட, அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இ.. இல்ல..”
“நான் உன்னைக் கட்டி பிடிச்சிருக்கேன்ல.. முத்தம் கூடக் கொடுத்தேன்ல.. அப்போ கூடவா நான் உன்னை விரும்புறேன்னு உனக்குத் தெரியல?” எனக் கேட்கவும் மீண்டும் அதிர்வு அவளிடம்.
ஆமாம் தானே அவன் கூட அவளிடம் இந்த சில்மிஷங்கள் எல்லாம் செய்திருக்கிறான் தானே! ஆனால் அப்போது கோபமும், அழுகையும் தானே வந்தது.. இன்று சூர்யான்ஷ் தன்னிடம் வரும்போது இருந்த அருவருப்பு விஹான் தொட்டபோது அவளிடம் இல்லையேயென அதிர்வு அவளிடம்.
“போடி.. உன்னால எனக்கு வலியும், வேதனையும் மட்டும் தான் மிச்சம்.. ஏன் டி என் மனசுக்குள்ள வந்த? அதுவரை நிம்மதியா தான நான் இருந்தேன்.. இப்போ தினம் தினம் இந்தக் காதல் என்னைச் சாகடிக்குது.. அதுக்கும் மேல நீ.. எங்கயாவது யாருக்கும் சொல்லாம ஓடிரலாமான்னு இருக்கு..” எனத் தலையைக் கோதியபடி அவளுக்கு முதுகுகாட்டி திரும்பி நின்றான் கண்களின் கண்ணீரை மறைக்க.
“போய் வண்டில ஏறு” எனக் கரகரப்பாய் வந்தது குரல். ஆனால் அவள் அசைவதாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தவன் “போ” என்றான்.
“சாரி அத்தான்.. என.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. நான்.. நான் தப்பு பண்ணிட்டேன்..” எனக்கூறவும் ஒரு நொடி விஹானின் உடல் விரைத்தது. அதைப் பார்த்தவள்,
“ஐயோ அந்த தப்பு பண்ணல.. அவன பத்தி தெரியாம புரியாம காதலிச்சு தப்பு பண்ணிட்டேன்” என்றவள் தயங்கி,
“அப்புறம் இன்னைக்கு சூர்யான்ஷ் என்னைக் கட்டி பிடிச்சான்.. நீங்க குடுத்தது போல முத்தம் கூடக் கட்டாயப்படுத்தி கொடுத்தான்.. அப்போ அருவருப்பா இருந்துச்சு.. ஆனா நீங்க குடுக்கும் போது அப்படி நான் உணரல” எனக் கூற, அந்த வேதனையிலும் மீசைக்கடியில் விஹானின் இதழ்கள் விரிந்தது.
“அதே போல உங்கள பார்த்தாலும் எனக்கு உங்க மேல காதல் உணர்வு வரல.. பயம் தான் வந்தது.. அது ஏன்னும் எனக்குத் தெரியல.. சின்னதுல இருந்தே அப்படி தான்..
உங்களுக்கு நான் தகுதியானவளே கிடையாது த்தான். நான் தப்பான பொண்ணு. உங்க காதல் எனக்குப் புரிஞ்சும் அதைக் கொஞ்சம் கூட நான் மதிச்சது இல்ல.
எல்லாருக்கும் என்னால கஷ்டம் மட்டும் தான். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்கும்.. நான் உங்களுக்கு வேணாம்..”
“பெரிய தியாகி.. ஓங்கி இன்னொன்னு விட்டா தெரியும்”
“இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் அடிங்க. நான் உங்களுக்குப் பண்ணினதுக்கு பனிஷ்மெண்ட்டா எடுத்துக்கிறேன். இன்னைக்கோட என்னைத் தலைமுழுகிட்டு உங்க வாழ்க்கையை பாருங்க..
அப்புறம் எனக்கு இன்னொரு ஹெல்ப் மட்டும் கடைசியா பண்ணுங்கத்தான் ப்ளீஸ்.. சாத்விக்கு பெங்களூர்ல இண்டர்ன் பண்ண இடத்துலயே எனக்கும் இண்டர்ன் பண்ண ஹெல்ப் பண்ணுங்க.. அங்கயே படிப்ப முடிச்சுட்டு அப்படியே அங்கயே இருந்துக்கிறேன்..
என்னால உங்க யாரையும் ஃபேஸ் பண்ண முடியல.. ரொம்ப கில்டியா இருக்கு. நான் இங்க இல்லனா நீங்களும் என்னை மறக்க வாய்ப்பிருக்கு இல்லையா? இல்ல இல்ல நான் செத்துட்டேன்னு நினைச்சு என்னை மறந்துட்டு” எனத் தொடங்கிய வாக்கியத்தை முடிக்கும் முன் மீண்டும் ஒரு முறை அறைந்திருந்தான் விஹான்.
“கொன்னுடுவேன் ராஸ்கல்..” என்றவனுக்கு உச்சக்கட்ட கோபம்.. ‘அவளை விட்டு விலகுவிடு’ எனக் கூறியதையையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் அவள் செத்துட்டேன்னு சொன்னால் உயிரே போய்விட்டது அவனுக்கு. உதடு குவித்து உஷ்ண பெருமூச்சை இழுத்து விட்டவன்,
“இங்க பாரு இதுவரை உனக்காக உன்னை விட்டுவச்சது போதும்.. இனியும் நான் விட்டுட்டு இருந்தா அடுத்து அடுத்து நீ செய்ற செயலால எனக்குத் தான் உயிர் போகும். இனி நான் சொல்றத தான் நீ பண்ற.. என்னை மீறி முரண்டு பிடிச்ச நானே உன்னைக் கொன்னுடுவேன்..”
என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து வண்டியில் அமர்த்தியவன், யாருக்கோ கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பினான். சில நிமிடத்தில் அழைப்பு வந்தது அந்தப் பக்கமிருந்து. வெளியில் சென்று பேசினான். என்ன பேசிகிறார்கள் எனக் காரின் உள்ளே அமர்ந்திருப்பவளுக்கு கேட்கவில்லை. ஆனால் வெளியில் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தான் விஹான்.
சிறிது நேரத்தில் வண்டிக்குள் வந்து அமர்ந்தவன் மீண்டும் அவன் மேனேஜருக்கு அழைத்தான், ”நான் உனக்கு அனுப்பின டீடெய்ல்ஸ் எல்லாம் காலேஜ்ல இருக்கும். அதெல்லாம் எடுத்துட்டு உடனே நான் அனுப்பின அட்ரெஸ்க்கு வா” என்றவன் வண்டியைக் கிளப்பினான்.
வண்டி நேராகச் சென்றது சார்பதிவாளர் அலுவலகத்துக்குத் தான்.
“இங்க எதுக்கு வந்துருக்கோம்?” எனத் தயங்கியபடி கேட்டாள். இவ்விடத்திற்கு எதற்காக வருவார்கள் என்று தெரியாதவள் அல்லவே! அவளுக்கும் அங்குத் திருமண பதிவுகள் நடைபெறும் என்று நன்றாகவே தெரியுமே!
அவளைத் திரும்பி ஒர் முறைப்பு தான் முறைத்தான் அமைதியாக அமர்ந்தவளுக்கு பதட்டமாக இருந்தது. அப்போது தான் அங்கே வந்தது ஷிம்ரித்தின் கார் அதிலிருந்து இறங்கினர் ஷிம்ரித்தும் நிஹாரிகாவும்.
அவர்களைப் பார்க்கவும் பிரணவிகாவுக்கு ஒருபக்கம் நிம்மதியாகவும், மறுபக்கம் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நிஹாரிகா கையிலிருந்த அஃஷராவைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து காரிலிருந்து இறங்கி நிஹாரிகாவை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடினாள்.
“என்ன பிரணி பண்ணி வச்சிருக்க? இத உன் கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவே இல்ல” எனக் கோபமாகக் கேட்டாள் நிஹாரிகா. மீண்டும் பிரணவிகா தலைகுனிந்து நிற்க,
ஷிம்ரித் “நிஹா எதுவா இருந்தாலும் கார்ல உட்கார்ந்து பேசு.. வெளியே வேண்டாம். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன். விஹான் வாடா” எனக்கூறி விஹானை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, நிஹாரிகா பிரணியை இழுத்துக்கொண்டு விஹானின் காரில் பின் இருக்கையில் அமர்த்தித் தானும் அமர்ந்தாள்.
அஃஷரா நிஹாரிகாவிடமிருந்து பிரணவிகாவிடம் தாவ, குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். கழுத்துமுட்ட நின்ற அழுகையை குழந்தையை வைத்துச் சமாளித்தாள்.
நிஹாரிகா “பிரணி என்ன நடந்தது விஹான் என்னென்னமோ சொல்றார்?”
அமைதியாக அமர்ந்திருந்தாள். எப்போ வேண்டுமானாலும் வெடித்து அழுதுவிடும் நிலையில் இருந்தாள்.
நிஹாரிகா “எப்போத்துல இருந்து இது நடக்குது?” எனக் கேட்டாள். அதற்கும் பதிலளிக்கவில்லை, குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“நான் வீட்டுல இருக்குற வரைக்கும் கூட உன் வாய்ல இருந்து இந்தக் காதல்ற வார்த்தையே வந்ததில்லையே? ரொம்ப கிளவரா எல்லா வேலையும் பார்த்திருக்க என்ன?”
பதில் இல்லை அவளிடம்.
“இப்போ நீ அன்ஸர் பன்றியா? இல்லையா? இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கா நாங்க அவசர அவசரமா கிளம்பி வந்தோம்? பதில் சொல்லு பிரணி? இல்ல அப்பாவ கூப்பிடவா?” எனக்கேட்க,
“அப்பா அம்மா கிட்ட சொல்லாதீங்கக்கா..” என்றாள் படாரென.
நிஹாரிகா “அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?”
“இது இப்போ ஒரு மாசமா தான். என் பர்த் டே ல இருந்து”
நிஹாரிகா “எதே! ஒரு மாசம்.. அதுக்குள்ள எப்படி இந்த அளவுக்கு வந்த பிரணி?” எனக் கேட்டவளுக்கு அவ்வளவு ஆதங்கம்.
“சாரிக்கா. தெரியாம பண்ணிட்டேன் சாரிக்கா.. இனிமே நான் யார் கூடவும் பேசமாட்டேன், பழகமாட்டேன்.. சாத்வி கூட பெங்களூர் போயிடுறேன்.. இனி கவனமா, ஒழுக்கமா இருக்கேன்.. அம்மா அப்பாக்கிட்ட மட்டும் சொல்ல வேண்டாம். எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு.. இங்க எதுக்கு வந்துருக்கோம்? நம்ம வீட்டுக்குப் போகலாமாக்கா? எனக்குப் பயமா இருக்கு”
“விஹான் உன்கிட்ட ஒன்னும் சொல்லலயா?” என்றாள் அதிர்ச்சியாக.
“இல்லையே ஒன்னும் சொல்லல”
“ச்சை.. ஷிம்ரித்..” எனக் கடுப்பாகக் கத்தியவள், ஷிம்ரித்துக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவும் “விஹான் இவ கிட்ட கேட்காம எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்காரா? என்ன நடக்குது இங்க? முதல்ல நீங்க இரண்டு பேரும் காருக்கு வாங்க” எனக் கத்தினாள்.
“என்ன ஏற்பாடுக்கா?” எனத் தயங்கி தயங்கி கேட்டாள். அவள் எதை நினைத்து அப்படி இருக்கக் கூடாது எனப் பயந்து கேட்டாளோ அதே பதிலைத் தான் நிஹாரிகா கூறினாள்.
“விஹான் உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறேன்னு தான் எங்கள கூப்பிட்டார். இரண்டு பேரும் லவ் பண்றீங்களாமே! எங்க எல்லார் முன்னாடியும் சண்டை போடுற மாதிரியும், பயப்படுற மாதிரியும் ஆக்ஷன் பண்ணிட்டு, இப்படி வீட்டுக்குத் தெரியாம அவசர கல்யாணம் தேவையா என்ன?” எனக்கேட்க, பிரணவிகாவுக்கு மயக்கம் வராத குறை தான்.
ஆமாம் விஹான் ஷிம்ரித்திடமும், நிஹாரிகாவிடமும் அப்படித்தான் கூறினான். எந்த இடத்திலும் சூர்யான்ஷ் பற்றி மூச்சு கூட விடவில்லை. தன்னவளை எந்த இடத்திலும், யாரிடமும் விட்டுக் கொடுக்க மனமில்லை.
பிரணவிகா அதிர்ந்து அமர்ந்திருக்க ஷிம்ரித்தும், விஹானை அழைத்துக் கொண்டு வந்தான்.
“என்ன விஹான் நீங்க ஒன்னு சொல்றீங்க இவ ஒன்னு சொல்றா?” என நிஹாரிகா கேட்க,
“என்ன சொன்ன?” என அதிர்ந்து பிரணியைப் பார்த்துக் கேட்டான். அவள் தன் தவறைப் பற்றி வெளியே மூச்சு கூட விடமாட்டாளென அவளைப் பற்றி ஆதியும் அந்தமும் அறிந்ததால் தான் பிரணவிகாவை நிஹாரிகாவிடம் விட்டுவிட்டு உள்ளே சென்றான்.
“இன்னைக்கு நீங்கக் கல்யாணம் பண்ண போறதே அவளுக்குத் தெரியாதுங்கிறா?”
“அப்படியா சொன்ன? நேத்து நைட் போன்ல பேசும்போது சொன்னேனே! தூங்கிட்டியா என்ன? சரி விடு.. இப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா என்ன? சொல்லு?” எனக்கேட்க, என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முழிக்க, ‘பண்ணுவேன்னு சொல்லு’ எனக்கூறும்படி அவன் கண்கள் கட்டளை இட்டது.
அவனைப் பார்க்கவே பயமாகவும் இருந்தது. அதே சமயம் தான் செய்த தவறை அவன் யாரிடமும் கூறவில்லை.. இப்போது அவன் கூறுவதற்கு மாறாகத் தான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருந்தாள்.
தன்னை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாத்தி அழைத்து வந்தவன், தன் மேல் அத்தனை காதலை வைத்திருப்பவன் அவன் பேச்சை மீற மனமும் வரவில்லை இந்தப் புதிய பிரணவிகாவுக்கு.
பழைய பிரணவிகாவாக இருந்திருந்தால் இந்நேரம் விஹானுடன் திருமணம் என்ற பேச்சை எடுத்திருந்தாளே கடல் கடந்து கண்டம் கடந்து ஓடியிருப்பாள்.
நிஹாரிகா “உனக்கு விஹான கல்யாணம் பண்றதுக்கு ஓ.கே தான?” என பிரணவிகாவிடம் கேட்க, அவள் தலை தன்னால் ஆமாமென அசைந்து விஹானின் நெஞ்சில் பாலை வார்த்தது.
அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? காதலித்து திருமணம் செய்தவர்கள் இவர்களின் காதலுக்கா தடையாக இருப்பார்கள். வீட்டில் சொல்லித் திருமணம் முடிக்கலாமென முன்னரே இருவரும் அலைபேசியில் விஹானிடம் மல்லுக்கட்டினர்.
ஆனால் விஹான் ‘அவன் தாய் இத்திருமணத்திற்கு எந்நாளும் சம்மதிக்க போவதில்லை, அவர் சம்மதிக்காமல் கவினும் சம்மதிக்க போவதில்லை. அதனால் தான் இந்தப் பதிவுத் திருமணம் அவசியம்’ எனக்கூறவும், கவிதாவின் குணம் பற்றி முழுதாய் அறிந்த நிஹாரிகாவும், ஷிம்ரித்தும் இந்தத் திருமணத்திற்கு பச்சை கொடி காடடினர்.
விஹானின் மேனேஜர் பதிவு திருமணத்திற்கான சான்றிதழ்களை கல்லூரியிலிருந்து எடுத்து வந்திருந்திருக்க, இதோ ஷிம்ரித், நிஹாரிகா தலைமையில் திருமணமும் சிறப்பாக முடிந்தது.
இரண்டு ஜோடியும் ஒன்றாகத் தான் வீட்டுக்கு வந்தனர் ஆனால் இடையில் ஷிம்ரித்தின் காரின் முன் ஒரு பள்ளி சிறுவன் வந்துவிட, அவனை இடித்திடக் கூடாது என அவசரமாக வண்டியை நிறுத்தியதில், அஃஷராவுக்கு அடிபட்டு நெற்றியில் சிறு காயம் ஏற்பட்டது.
மருத்துவமனை சென்று காட்டிவிட்டு வீட்டுக்கு வரும் முன், வீட்டில் அத்தனை களேபரமும் முடிந்து, இருவரும் ஒன்றாக நிற்க, மொத்த குடும்பமும் அவர்களைக் கேள்விமேல் கேள்வி கேட்க, அனைத்தையும் ஒற்றை ஆளாகச் சமாளித்து நின்றான் விஹான்.
தன்னவள் தன் கைநழுவி சென்று விட்டாளெனத் துக்கத்தில் உலன்றவனுக்கு, இப்போது தன்னவள் தன் கைசேர்ந்த நிம்மதி. இனி என்ன வந்தாலும் சமாளித்து அவளை எப்படி தன்வசப் படுத்த போகிறானெனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.