எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனம் களைவாயா பெண்ணே 08

zeenath

Active member

அத்தியாயம் 8​

கணவனோடு தன் புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தவளுக்கு சிறிதான நடுக்கம், ஆரத்தி எடுப்பதற்காக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவள், தன்னையும் அறியாமல் தன் அருகில் நின்றிருந்த மோகனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் வினிகா. பெண் அவளின் நடுக்கம் உணர்ந்தவன் சற்று அழுத்தமாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் ஆறுதல் கூறும் வகையில், ஏனோ அவள் அழுதது மனதில் பாரத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வரப்பட்டவர்கள் சோபாவில் அமர வைக்கப்பட்டார்கள். இவர்கள் வீட்டிலும் சொந்த பந்தங்கள் கூடி இருக்க பால்பழம் கொடுத்து, பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைக்கும் வேளையில் வந்து சேர்ந்தாள் பார்கவி, இத்தனை நாட்கள் பெண் வீட்டு ஆளாக இருந்தவள் இப்போது மாப்பிள்ளை வீட்டு ஆனாகத் தன் அண்ணன் வீடு வந்து சேர்ந்தாள்,​

அவளைக் கண்டதும் சற்று ஆசுவாசமும் பெண்ணுக்கு. என்னதான், அவரும் தன் புகுந்த வீட்டு ஆட்களில் ஒருவராக இருந்தாலும் தன் வீட்டு ஆளாக ஒருவர் இருப்பது பெரிய நிம்மதியையும் பலத்தையும் கொடுத்தது அவளுக்கு அதுவே அவள் மனதில் இருந்த சஞ்சலங்களை சற்றே நகர்த்தி இருந்தது.​

சற்று நேரம் ஆசுவாசமாகச் சோபாவில்ல்ல்ல் அமர வைக்கப்பட்டார்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களோடு மற்றவர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க முதல் முறையாக அவர்கள் வீட்டு வீட்டிற்கு வந்ததால் மெதுவாக விழிகளைச் சுற்றி வீட்டை ஆராய்ந்தாள் வினிகா. என்னதான் சித்தியின் அண்ணன் வீடாக இருந்தாலும் இதுவே இவர்கள் வீட்டிற்கு வருவது முதல் முறை, தங்கள் வீட்டைப் போன்ற ஆடம்பரமும் வசதி வாய்ப்பும் இல்லை என்பது பார்த்தவுடனே புரிந்தது அவளுக்கு, அதற்காகக் குறைவாகவும்ம் இல்லை,​

கீழே மூன்று அறைகளும் நல்ல விஸ்தாரமான வரவேற்புறையுமாக இருந்தது அதனோடு சமையல் அறையும் சற்று பெரிதாகவே தெரிந்தது அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பார்ப்பதற்கு, வாசலில் சிறிய போர்டிகோவுடன் கேட்டுடன் அளவாக இருந்தது வீடு ஒரு ஓரத்தில் மாடிக்குச் செல்லும் படியும் தென்பட்டது, அமர்ந்திருந்த வாரே அனைத்தையும் பார்த்து முடித்தவரின் காதின் அருகே குனிந்த மோகன் "எழுந்து வா! நம்ம ரூமுக்கு போகலாம்." என்றான், சரி என்பதாக அவளும் தலையசைத்து அவனோடு சேர்ந்து எழுந்து நிற்கக் கேள்வியாக அனைவரும் அவர்களைப் பார்க்க "அம்மா நான் மேல கூட்டிட்டு போறேன், இவளை."என்றான் தாயிடம் செய்தியாக "சரிப்பா…" என்று அவரும் முடித்துக் கொண்டார்,​

இவர்கள் மாடி ஏறுவதை பார்த்து இருந்த, மோகனின் சித்தி, பார்கவியை பார்த்து "என்ன பார்க்கவி? எவ்ளோ நகை போட்டு இருக்காங்க, உங்க மூத்தார் மகளுக்கு? என்றார் கேள்வியாக, தங்கையின் திடீர் கேள்வியில் அவளிடம் கண் ஜாடை காட்ட முயன்ற மோகனின் தாயின் எந்தச் செயலையும் பார்க்கவில்லை மோகனின் சித்தி, கேள்வி கேட்டு அதற்கான பதிலையே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள்​

"என்ன இப்படி கேட்டுட்டீங்க? எங்க வீட்ல என்ன குறைவா செய்திடுவோம் எல்லாம் நூறு பவுனுக்கு மேல தான் போட்டு இருக்கோம்."​

என்றாள் பெருமையாக.l​

"நூறு பவுனா? பாத்தா அப்படி தெரியலையே?.."​

என்ற இவ்வளின் சந்தேகமான கேள்விக்கு "என்ன எங்கள சந்தேகப்பட்டு கேக்குறீங்களா?.." என்றாள் சற்று கோபமாக, "இதுல சந்தேகப்படுவதற்கு என்ன இருக்கு? அவ போட்டு இருக்க நகைய பாத்தா 100 பவுன் இருக்கிற மாதிரி தெரியலையே ன்னு சொன்னேன். இதுல என்ன தப்பு."​

"மொத்த இருக்கிற நூறு பவுன் நகையையும் மொத்தமா சேர்த்தா போட்டுட்டு வருவாங்க, போடாத மத்த நகை எல்லாம் வீட்ல பத்திரமா இருக்கு.ன வீட்ல இருக்கா? பொண்ணு வரும்போது அவளுக்கு உண்டானதெல்லாம் கொடுத்து விடணும்னு தெரியாதா உங்களுக்கு?.."​

"ஏன்? எங்களுக்குத் தெரியாம? எது எது எப்ப குடுக்கணுமோ அப்போ நாங்க கொடுப்போம்."​

" என்ன பார்க்கவி? என்ன பேசுற, பொண்ணு வரும்போது தானே எல்லாம் கொடுத்து விடுவாங்க?.."​

"என்ன அண்ணி? நீங்களும் இப்படியே பேசுறீங்க, இப்பதான் வரும் வீட்டுக்கே வந்து இருக்கா அதுக்குள்ள எல்லா நகையும் கொண்டு வந்தாச்சானு கேக்குறீங்க? இதெல்லாம் சரி இல்ல பாத்துக்கோங்க. "​

"அவளுக்கு உண்டானத எப்போ கொடுக்கணுமோ அப்போ சரியா கொடுத்து விடுவோம் நாங்க."என்றார் சற்றும் கோபம் அடங்காதவளாக. அவளின் கோபம் வேறு ஏதும் பிரச்சனையைக் கொண்டுடுடுடு வந்து விடுமோ என அஞ்சிய மோகனின் தாய்​

"சரி மா என் தங்கச்சி எதார்த்தமா தான் கேட்டா. நீ எதுவும் வித்தியாசமா நினைச்சுக்காத, என்னடி?.." எனத் தங்கையையும் கூடச் சேர்த்துக் கொண்டாள்,​

அவளும் அக்காவின் முக மாறுதல்களைக் கண்டு "ஆமா!." என்று ஒத்து உதிக்கொண்டாள்...​

அண்ணியின் பேராசையை பற்றி அறிந்தவள் தான் பார்கவி ஆனால் இப்படி அவளின் குடும்பத்திலும் அவளைத் தூண்டி விட ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டாள், அது சிறிது கவலையோடு பயத்தையும் ஏற்படுத்தியது அவளுக்கு இதைப் பற்றித் தன் அண்ணனிடம் பேச வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள், இவளை ஜாடையாகப் பார்த்துவிட்டு மெதுவாக எழுந்து சென்றார்கள், கிச்சனை நோக்கி மோகனின் தாயும் சித்தியும் அவளோடு அவர்களின் அண்ணியும். "ஏண்டி? இப்போ ஏன் நீ ஆரம்பிச்ச அவ கிட்ட?..' "நான் எதார்த்தமா தானே கேட்டேன்! அதுக்கு எதுக்கு அவ்ளோ கோவம் வருது உன் நாத்தனாருக்கு?.." என்றாள் அவளும் முகத்தை வெட்டியவாறு, அதற்கு அண்ணியும், "உடனே ஆரம்பிக்கனுமா? ரெண்டு நாள் ஆன பிறகு பார்க்க வேண்டியது தானே, என்னென்ன நகை எவ்வளவு வெயிட்னு அவளையும் வச்சுக்கிட்டே ஏன் இதெல்லாம் பேசுறீங்க, அதுவும் அவகிட்டயே கேக்குறீங்க, கூரே இல்ல உங்க ரெண்டு பேருக்கும்." என்றாள் அவளும்,​

"சரி, சரி வாங்க வெளில போய் இருப்போம், மூன்று பேரும் ஒண்ணா இருக்குறத பாத்தா அதுக்கு வேற ஏதாவது சொல்லுவா." என்றபடி வெளியேறினார்கள் மூவரும்.​

அவனோடு மேலே வந்தவள் கண்டது நன்கு விஸ்தாரமான ஒரு பெரியாரையும் அதனோடு சேர்ந்த மொட்டை மாடியும் அழகாக இருந்தது பார்ப்பதற்கு மொட்டை மாடியில் ஓரத்தில் அங்கங்கு தொட்டியில் இரண்டு மூன்று ரோஜா செடிகளும் இருந்தது. செடிகளைப் பார்த்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தவளை கண்டவனும் மெதுவாகப் புன்னகைத்துக் கொண்டே, "ரோஜா செடி எனக்கு ரொம்ப பிடிக்கும். பூவ பறிக்கப் பிடிக்காது அப்படியே செடியோட பாக்க தான் பிடிக்கும், எங்க அம்மாவும், தங்கச்சியும் பறிக்கமாட்டாங்க."​

"ஓஹோ! அப்ப நானும் பறிக்கக் கூடாதா.?" "ஆமா! கூடாதுன்னு தான் சொல்லுவேன். ஆனா, அப்படி சொல்றது ரொம்ப ரூடா இருக்குமோன்னு யோசிக்கிறேன்." "பரவால்ல, எனக்கும் ரோஜா பூவைச் செடில பாக்க தான் பிடிக்கும்." என்றாள் இவளும் சிரித்தபடி​

"அப்பாடி!.." என நெஞ்சில் கை வைத்தவன், "வா, உள்ள போலாம்." என அரைக்குள் அழைத்துச் சென்றான். நல்ல விஸ்தாரமான அறை தான், நடுவில் பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது. தாராளமாக மூன்று பேர் படுக்கலாம் அதில் கட்டிலின் மறுபுறம் மூன்று கதவுகள் கொண்ட வாட்ரோப் சுவற்றில் அட்டாச் செய்யப்பட்டிருந்தது இடது புறம், ஆள் உயர கண்ணாடியுடன் கொண்ட ட்ரெஸ்ஸிங் டேபிள் அதற்குண்டான நாற்காலியுடன் இருந்தது, அறையின் மூலையில் கழிவறை இருந்தது, அதைக் கண்டவுடன் இயற்கை அழைப்பு இவளுக்கு ஏற்பட அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அலமாரியில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க இவள் அவசரமாகக் கழிவறைக்குள் நுழைந்து கொண்டாள்.​

அங்கும் நல்ல விஸ்தாரமானதாகவே இருந்தது அதனோடு நவீனமாகவும் இருந்தது. தன் தேவையை முடித்து விட்டு வெளி வந்தவள் பார்த்தது கட்டிலின் ஓரத்தில் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பெட்டிகளைத் தான், இவை வெளியேறியதும் குளிக்கச் சென்றவன்,​

" உனக்கு அந்தக் கபோர்டுல இடம் வச்சிருக்கேன், உன் துணி எல்லாம் அங்க அடுக்கி வச்சுக்கோ!.." என்ற அவனிடம் சம்மதமாகத் தலையாட்டினாள். அவன் குளித்து வர இவளும் இரவு உடையை எடுத்துக்கொண்டு சென்றாள் குளித்து வருவதற்கு.​

இவள் குளித்து வரவும் இவர்களுக்கான இரவு உணவு அருகே வந்திருந்தது அப்படி கீழே போக வேண்டிய வேலை இல்லை என்ற ஆசுவாசம்தான் அவளுக்கு,​

அவனும் அதையே கூறியவனாக, லேப்டாப் வைத்துப் பயன்படுத்துவதற்கு என இருந்த சிறிய மேஜையில் தட்டு வைத்து இருவரும் கீழே அமர்ந்து கொண்டு தங்களுக்கான உணவை உண்டு முடித்தார்கள்.​

தங்கள் வீட்டில் தன்னறையில் அவன் சொன்ன நேரம் எடுத்துக் கொள்வதை அவன் வீட்டில் அவன் அறையில் கடைப்பிடிப்பானா? என்ற சந்தேகம் பெண் அவளுக்கு இருந்தது, ஆனால் அதற்கு எந்தப் பாதகமும் வராமல், சாப்பிட்டவைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்தவன்,​

"குட் நைட்"​

என அவளுக்கு இரவு வணக்கத்தைக் கூறிவிட்டு கட்டிலின் ஒரு பாதியில் சென்று படுத்துக்கொண்டான் அமைதியாக.​

புது இடம் என்று இல்லாமல் நன்றாகவே தூக்கம் வந்தது வினிகாவிற்கு. உறக்கம் களைந்து எழுந்தவள் தன் அருகில் இருந்த மொபைல் போனை எடுத்து நேரம் பார்க்க 5 மணியைக் காட்டியது அது,​

அருகில் இருக்கும் கணவனைப் பார்க்க, அவன் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பது கண்டு சத்தம் போடாமல் எழுந்தவள், தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, குளித்து மாம்பழ மஞ்சளில் அங்கங்கு புட்டா வைத்த மெருன் கலர் பார்டர் கொண்ட மைசூர் சில்க் புடவை பாந்தமாகக் கட்டியவள்,​

ஈரமான கூந்தலை உதறி அடியில் ஒரு ரப்பர் பேண்டை கொண்டு அடக்கி, சிறிது நேரம் மொட்டை மாடியில் நின்று இளம் காலைப் பொழுதை ரசித்து விட்டுக் கீழே இறங்கி வந்தாள்.​

மணி ஆறு ஆனதை கண்டு, கீழே வந்தவள் தன் சித்தி பார்கவி வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதை கண்டு மகிழ்வோடு அவள் அருகில் வந்தவள்,​

"சித்தி! நீங்க இன்னும் இங்க தான் இருக்கீங்களா.?"​

என்றவளின் கேள்விக்கு,​

"ஆமாண்டி மா உனக்காகத் தான்! நேரம் ஆயிடுச்சு, அதான் இங்கே தங்கிட்டேன்,​

"கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன், நீ வர வரைக்கும் உட்கார்ந்திருந்தேன்."​

"என்ன சித்தி? அவ்வளவு சீக்கிரம் போறேன்னு சொல்றீங்க.?"​

"முதல் நாள் தனியா நீ இங்க சங்கடப் படுவியேன்னு தான் நான் வந்தேன், நம்ம வீட்டிலேயும் ஆளும் பேருமா இருக்காங்க, அகிலாவும் அங்க இருக்கா கிளம்புறேன் நாளைக்கு எல்லோரும் வருவோம் உன்ன பாக்க."​

என்றாள் அவள் நாடியைப் பிடித்துச் சமாதானமாக.​

இவளும் சமாதானமாகச் "சரி" சித்தியெனச் சொல்வதற்கும், மோகனின் சித்தி மற்றும் அத்தை வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்தவளை கண்டு அவர்களும் புன்னகைத்த படி அவள் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.​

பார்கவியும் வினிகாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மோகனின் தாய் ரஞ்சிதம், இவர்களுக்குக் காபி போட்டுக் கொண்டிருந்தவள், தன் அண்ணியும் அக்காவும் வந்ததை அறிந்து அவர்களுக்கும் காபியோடு வந்தவர் அவர்களுக்குக் கொடுத்துத் தானும் ஒன்று எடுத்துக் கொண்டு அமர்ந்தார் அவர்களின் அருகே.​

மெதுவாக ஆரம்பித்தாள் ரஞ்சிதத்தின் அண்ணி கமலா,​

"ஏன் வினிகா, நேத்து நீ மாங்கா மாலை போட்டு இருந்தா தானே? ரொம்ப அழகா இருந்தது! ஆனா சரியா பாக்க முடியல முகப்பு வைத்திருந்தது போல?.."​

எனக் கேள்வியாகக் கேட்க​

"ஆமா! பெரியம்மா."​

என்றாள் இவளும்,​

"அது மாதிரி தான் என் மகளுக்கும் ஒன்னு செய்யணும் நெனச்சிட்டு இருக்கேன்.?"​

என்றவரை பார்த்து,​

"செய்ங்க அழகா இருக்கும்!.." என்றாள் இவளும்,​

"கெம்ப் மாடல்ல தானே நெக்லஸ் போட்டிருந்த? அதுக்கு ஏத்த மாதிரி கம்மல் இருந்ததோ? செட்டா இரண்டும்."​

என்ற அவரின் தொடர் கேள்வியில் இவளும் ஆம் என்று தலை அசைக்க இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த, பார்கவி,​

"போய் உன் நகையை எடுத்துட்டு வந்து காமி, டிசைன் பார்க்கணும்னு சொல்றாங்க இல்ல?.."​

என்றவளின் கூற்றுக்குச் சரி என்பதாகக் கூறிவிட்டு மேலே சென்றாள், தன் நகைகளை எடுத்து வருவதற்கு,​

பெரிய பெட்டியில், தான் போட்டு வந்திருந்த அனைத்து நகைகளையும் அடுக்கிக் கீழே கொண்டு வந்தவள், அவர்கள் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை கண்டு அங்குச் சென்றாள், தன் நகைகளை எடுத்துக்கொண்டு.​

வெகு ஆர்வமாக அவள் கொண்டு வந்த நகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரஞ்சிதம் அவளின் அக்கா ராதா மற்றும் அண்ணி கமலா,​

"இந்தக் கெம்ப் நெக்லஸ் கம்மல் எத்தனை சவரன்.?"​

என்ற ராதாவின் கேள்விக்குத் திரு திருவன விழித்துக்கொண்டிருந்தாள் வினிகா, அவளுக்கு நகைகளின் எடைகள் எல்லாம் தெரியாது நன்றாக இருப்பதாகக் கூறியதை வாங்கி கொடுத்து விட்டார்கள் பெற்றோர்.​

அவர்களின் கேள்விக்குப் பார்கவி பதில் கூறினார், அவரும் சென்று தானே அனைத்தையும் வாங்கியது "அது ஏழு சவரன், ரெண்டும் சேர்த்து" என்றார்,​

"இந்த மாங்கா மாலை எத்தனை சவரன்?.." என்ற கமலாவின் கேள்விக்கு​

"ஐந்து" எனப் பார்க்கவி கூறிக் கொண்டிருக்கும்போதே, இவர்களின் அருகில் வந்தாள் மோகனின் தங்கை யாழினி,​

அவளும் சேர்ந்த ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் பின்பு, கல்லூரிக்குச் சென்று அசைன்மென்ட் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லி, காலை உணவை முடித்துவிட்டு அன்னையிடம் விடைபெற்றுச் சென்றாள்.​

இவர்களும் நகையைப் பார்த்து முடிக்க அனைத்தையும் பத்திரமாக அடுக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் பார்கவி, அவள் அடுக்கிக் கொண்டிருப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த வினிக்கா தன் பிரேஸ்லெட் இல்லாமல் இருப்பதை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவள், வேகமாக மற்ற பெரிய நகைகளுடன் சிக்கிக் கொண்டிருக்கிறதா எனத் தேடி பார்த்த பார்கவி, இவளின் தேடலைப் பார்த்தவள் "என்ன?" எனக் கேள்வி எழுப்ப,​

"இல்ல சித்தி என்னோட பிரேஸ்லெட்ட காணோம்?.."​

"காணோமா? என்ன சொல்ற? இங்க தானே எல்லோரும் இருக்கும்! எப்படி காணாம போகும்? நல்லா பாத்தியா? பெட்டியில் வைத்துக் கொண்டு வந்தியா இல்ல மேலயே எங்கேயாவது வச்சிட்டியா?.."​

"இல்ல சித்தி பெட்டில தான் வெச்சேன், எல்லாத்தையும் ஒண்ணா தான் அடுக்கி வச்சேன்."​

"நீ இப்படி பேசுவது நல்லது இல்ல வினிகா, யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க? சந்தேகப்படுறியா? எங்க வீட்டு ஆளுங்கள."​

என்ற அவளின் கோபத்தில் பயந்தவளாக,​

"ஐயையோ! சித்தி, நான் அப்படியெல்லாம் சொல்லல."​

என்றாள் வேகமாக,​

"நீ சொல்றது அப்படித்தானே இருக்கு, மேல போய்ப் பாரு, அங்க தான் இருக்கும்."​

என்றபடி பெட்டியை மூடி அவள் கையில் கொடுத்து விட்டு எழுந்து சென்றாள், தன் அறையை நோக்கி.​

இவர்கள் நகையை அடுக்கிக் கொண்டிருக்கும் போதே ரஞ்சிதம் மகளை அனுப்பி வைக்க வெளி வாசலுக்கும், ராதா மற்றும் கமலா அவர்களின் அறைகளுக்கும் ஏற்கனவே எழுந்து சென்றிருந்தார்கள்.​

"இதுக்குள்ள தானே வெச்சேன்" என்று யோசித்தபடியே அறைக்கு வந்தவள், மறுபடியும் ஒருமுறை கட்டிலில் அனைத்து நகைகளையும் பரத்தி வைத்துத் தேடிப் பார்த்தாள்,​

அப்போதுதான் குளித்துவிட்டு வெளியே வந்த மோகன், கட்டிலை நிறைத்தது போல் இருந்த நகைகளைப் பார்த்துக் கேள்வியாக, "என்ன பண்ற?.."​

என்ற அவனின் கேள்விக்குப் பதில் சொல்ல முனைந்தவள், பின்பு சித்தி கூறியது போல இவனும் தன்னை தப்பாக எதுவும் கூறிவிடுவானோ? எனும் பயந்தபடி,​

"ஒன்னும் இல்ல? எல்லாத்தையும் அடுக்கி வைக்கிறேன்."​

என்றப்படியே வேகமாக அனைத்தையும் எடுத்து வைத்தவளுக்கு பெரிய குழப்பம்,​

எங்க போய் ஒளிஞ்சிகிட்டு இருக்கு இந்தப் பிரேஸ்லெட் என்பதுதான்.​

அனைவரும் இருக்க யாரை சந்தேகப்படுவது, அது குடும்பத்தில் பெரும் பிரச்சனையைக் கிளப்பி விடுமே, என்று பயந்தவள் என்ன செய்வது? என அறியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.​

யார் எடுத்தது? யாரை சந்தேகப்படுவது? நாமும் காத்திருப்போம்.​

மௌனம் தொடரும்...​

 
Top