uma Karthik
Moderator


மெல்ல ப்ரீத் பவித்ரா தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்க. மூளையை குடையும் வண்டு போல? மாமனின் காதலி? அவனே மறந்து போன காதலியை தினமும் கேட்டு பிக்கல் படுத்தி, நச்சரித்து இவள் சாகடிக்கவும்.பிள்ளைக்கு கதை சொல்லும் தந்தை போல லாஜிக் ஏ.. இல்லாமல் அடித்து விட்டான்.எத்தனை நிஜ காதலி இருந்தாலும் சில்லென ஒரு சிலிர்ப்பை தரும் தென்றலாய்.. முகம் தெரியாத யாரோ ஒருத்தி.!! எல்லார் மனதிலும் ஒரு கனவு தேவதையாக(கனவு கன்னி)முகம் மட்டும் தெரியாத ஓவியமாய் இருப்பாள். கதை ஆசிரியர் ப்ரீத் குமாரின் "என் மனதின் தேவதை.!! " கதையை இட்டு கட்டி சொல்ல தொடங்க, பொறாமை நதியில் நீந்தியபடி ஒருத்தி கேட்டாள். மூக்கில் மூச்சோடு சேர்த்து நெருப்பும் வந்தது அவன் நிஜ காதலிக்கு."எப்படி இருப்பா சொல்லுடா? "
"நெடு நெடுவென தொடை முட்டி நிற்கும் கூந்தல், காற்று போல மெல்லிய குணம். செவ்விதழ் கீழே கடை இட்ட மச்சம் நிலம் பட்ட நிமிரா பார்வை, பவ்யம் என்றால் அவள் தான்.! சொற்ப்ப வார்த்தைகள் பேசும் சுந்தரி. மொத்தத்தில் அச்சில் வார்த்து எடுத்த செப்பு சிலை அவள்.!! "
' என்ன கவிதையா சொல்றான். காதலி இருக்கலா? 'அவன் வர்ணனையில் திகைத்தவள் கேள்வியாக" சிலை மாதிரியா இருப்பா? " பொறாமையில் மனம் கொள்ளாமல் உதட்டை பிதுக்கி கேட்டதும்.
வெட்கம் புன்னகை சிந்தியவன்" சிலைய விட அழகா இருப்பா.! " என்று நாணி வளைந்து நெளிந்தான்.
அடி வயிற்றில் அக்கினி எரிய முகம் சுருக்கி " உங்க அழகு சிலையோட பெயர் தெரிஞ்சுக்கலாமா?? புலவரே
"கடுகடுவென வந்து விழுந்தது வார்த்தைகள்.
'யாருக்கு தெரியும்? ஐயோ.. பேருக்கு எங்க போவேன்..’ பதறி தலை குனிந்து திருட்டு முழி முழிக்க.! அவன் முகம் மாற்றத்திலும் திருட்டு முழியிலும் சந்தேகம் வலுக்க?
" ஏங்க மாமா.. சிலைக்கு இனிமே தான் பேர் வைக்கணுமோ? " பவித்ரா நக்கலாக கேட்டகவும்.
அவளை பார்த்து முறைத்தவன்." அவ என் பட்டர்பிளை ஏஞ்சேல் " என்று நிறுத்தினான்.
"என்ன டா இவ்ளோ..பெரிய பேரு.! "அவள் மலைத்துப்போய் சொல்ல,கீற்றாய்.. இதழ் பிரித்து நகைத்தவன். "செல்ல பேரு டி.. இன்னும் நிறைய இருக்கு அம்மு, செல்லம்
பொண்ட்டாடி னு கூப்பிட்டா
ரொம்ப பிடிக்கும் அவளுக்கு.பவி.. என் பேபி கால் பண்ணுற டைம் உடனே பிக் பண்ணல சண்டை வரும், நா லவ் பண்ண போறேன். நாளைக்கு பாக்கலாம் பாய்.., "என்று கை அசைத்து விட்டு வேகமாக அறைக்குள் வந்து கதவை சாத்தி வியர்த்த முகத்தை துடைத்து சுவற்றில் சாய்த்து பெரு மூச்சி விட்டான். சொன்ன பொய் எல்லாம் சேர்ந்து, இரும்பு குண்டை வைத்தது போல் நெஞ்சை அடைத்து மூச்சி முட்டியது."கதை கதையா அளக்குறேன். நேர்ல கூப்டு வா னு சொன்ன?நா எங்க போறது, மொதல்ல பேர் யோசிக்கணும். இன்ஸ்டா பேஃஸ்புக் ல ஏதாவது பொண்ணு போட்டோ காட்டுனா...,இப்ப கூகுள் லென்ஸ் வச்சு கண்டு
பிடிச்சிடுவாளே?இவள உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு யாரையோ காதலிக்கிறேன் னு இவகிட்டயே சொல்ற மாதிரி ஆக்கிட்டியே டா இறைவா.." என்று அழுத்துக் கொண்டு விதியின் விளையாட்டை எண்ணி?அழுகாத குறையாக ப்ரீத் புலம்பி தவிக்க.!
அவளோ.., இவனின் வர்ணனைகளை விட, காதலிக்க போறேன் னு சொன்னதும், அது உச்சி வரை தக தகன்னு எரிய.. பேய் கோபத்தில் பேய் பிடித்தவள் ஒத்த உருவத்தில் நின்றாள் பவித்ரா பிசாசினியாக!! 'யாரு டி நீ.. சக்காளத்தி' என்று கண்டபடி மனதில் திட்டி வாசப்பு விட்டாள்.
" நான் சொன்ன மாதிரி பொண்ண
எங்க தேடுவேன்?கனவுக்குள்ள வறவ பேர் என்ன? எதாவது நாமலே நல்லதா வைப்போம்.புதுசா புள்ள பெத்த அப்பா மாதிரி பேர் கண்டுபிடுச்சு வைக்கணுமா.!! ம்ம்ம் விளங்கும் " பைத்தியம் பிடித்தார் போல சுவரை பார்த்து கூச்சலிட்டான். " ஏய்..உன் பேர் என்ன? " கேள்வியை அவன் கேட்டதும்,பதில் இங்க இருந்து வந்தது,
அதே நேரம் பெங்களூர்..
"பிரதிக்ஷா..ங்கிற பேர்ல பெங்களூரு டூ சென்னை டிக்கெட் புக் பண்ணனும்.பஸ்ட் கிளாஸ் டிக்கெட்ஸ் தான்.ம்ஹும்.. பேமிலி இல்லை. சிங்கில் லா தான் ட்ராவெல், ஆன்லைன் ல டவுன்லோட் பண்ணிகலமா? தேங்க் யூ.."
என்றுவிட்டு போனை மேசை மீது வைத்து தோழியின் அருகே சென்றாள்." பிரதி.. சென்னை தனியாவே போக போறியா? ரிஸ்க் இல்லையா?அக்கறை கொண்டு வினவினால் ஆதிரா.
" நான் என்ன குழந்தையா.. தொலைஞ்சு போக,ஹாஸ்டல்லயே...,இத்தனை வருஷம் அடைஞ்சு கிடத்தாச்சி இனிமேலாவது சுதந்திரமா இருக்கணும். தலையில் எண்ணெய் வைத்து மீண்டும் மசாஜ் ஐ தொடர,
" இந்த எண்ணெய் தேச்சா.. உன் அளவு நீளமா எனக்கு முடி வளருமாடி?இடை தாண்டி பரவி இருந்த அவளின் கூந்தலை கைபிடி அளவு பிடித்து வெண்சாமரம் போல தன் முகத்தில் வீசிக் கொண்டு ஆதிரா கேட்க. தலையில் அழுத்தி மசாஜ் செய்து " வளரும் டி.. " புன்முறுவல் பூத்தாள் பிரதி.
சேரில்.. அமர்ந்த வாக்கில் உடலை மட்டும் அவள் புறம் திருப்பி சிரிக்கும் அவள் இதழை உறுத்தாக பார்த்து.! லாவகமாய் அவள் கீழ் அதரங்களை இரு விரல் கொண்டு நச்சுக்கி குவித்தாள் ஆதிரா.
"ஸ்..ஸ்.. ஆவ்.. வலிக்குது..விடு ஆதி.."சிணுங்கினால் பிரதி." நீ சிரிச்சா உன் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் கீழ் உதட்ட பிரிக்குற நடுபுள்ளி மாதிரி இந்த மச்சம் செம க்யூட் பேபி.!! அப்படியே நசுக்கி இழுத்து கொஞ்சனும் போல இருக்கு. "
அவள் வலியில் துடிப்பதெல்லாம் கணக்கில் சேர்க்காமல் கைகளால் ஆட்டி இதழை பிய்த்து எடுத்தால் ஆதி. கண்ணே கலங்கி விட்டது பிரதிக்கு,
"வலி பொருக்காமல் கைகளால் அவள் விரலை தட்டி விட்டாள்." எத்தன தடவ சொல்றது இப்படி பண்ணாத இழுத்து இழுத்து உதட்டை பெருசாக்கி விடுறே டி.. " அழுத்து கொண்டு உதட்டை தேய்த்தவள்"உதடுக்கு கரும்புள்ளி குத்துன மாதிரி கெடுக்குற மச்சம் அட்ராக்ஷனா? போடி..
" ரசனை கெட்ட மாடு.. உன் புருஷன் வந்து சொல்லுவான். என்ன மாதிரி கிள்ளுவான். அப்பறோம் ம்..ம்"
என்று இழுத்து பதிலுக்கு எதிர்பார்த்து பட படக்கும் அவள் துருதுரு விழிகளை பார்த்து உதடு கடித்து மர்மமாக புன்னகைத்தாள் ஆதி. "ம்ம்..
சொல்லுவான். லைக் திஸ் மச்சம் மச்ச கன்னி னு.."என்று சொல்லி சிரித்தாள் ஆதி.! "சே.! இதான் சொல்லுவாரா? ஏமாறற்றதோடு முகம் துவண்டது.
நீ என்ன நெனச்ச.. ஓ.. நான் வெஜ் ஆஹ்ஹ்.. எதிர் பார்த்தியோ?"
"இல்லை டி.. " என்று வெட்கம் மறைத்து சமாளித்தாள் பிரதி.ஆனால் முகம் சிவந்து வெளிச்சம் போட்டு காட்டியது.
" பிரதி..இந்த மாதிரி மச்சம் இருந்தா ரொம்ப ரொமான்டிக்கான புருஷன் கிடைப்பாங்க. வசியம் வச்ச மாதிரி பொண்டாட்டிய சுத்தி வருவாங்க"
" இதெல்லாம் எங்க இருந்து கண்டுபிடிக்கிறீங்க? எனக்கு தான் ஒண்ணுமே தெரியல தத்தியா இருக்கேன்.அப்போமச்சம் இல்லாத பொண்ணுங்களோட புருஷன் எல்லாரும் மத்த பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்களோ? " அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சந்தேகம் கேட்கிறேன் என்ற பெயரில் இடியை இறக்கினால் ஆதியின் தலையில்,
அதிர்ந்தவளோ கடுப்பான குரலில் "ஏன் இப்டி பீதியை கிளப்புற, இப்படியெல்லாம் கேள்வி கேட்க உனக்கு யார் சொல்லி தர்றா? டெல் மீ.. உன் புருஷன் உன்னை சுத்தி வருவார் னு சொன்னா என் புருஷன் இன்னொருத்தி கூட சுத்துவாங்களா னு கேக்குற , அவ சொல் நாயே.. சரி..எப்ப ஊருக்கு. போற "
" அடுத்த வாரம் போறேன். டிக்கெட் கான்போர்ம் ஆகிட்டும் னு ஏஜென்சி ஆள் சொல்லி இருகாங்க."என்று வேலையை தொடர்தாள் பிரதி, ப்ரீத்தின் வருங்கால ரதி.
மாமன் அவன் காதலியின் கூந்தல் பற்றி சிலாகித்து கூறியதும், இடையில் விழுந்து இருக்கும் தன் முடியை பாதம்வரை நீளமாக்க என்ன செய்வது என்று போனில் ஒவ்வொரு டிப்ஸ் வீடியோவாக ஸ்கூரோல் செய்து பார்த்துக் கொண்டிருந்தால் பவித்ரா.
"*"*^"*^"*^"*^"*^"*^
டெல்லியின் பரபப்பு மிகுந்த வாகனம் நிரம்பி புகை பரவிய ஹை வே ரோடு,செல் பேசி சினுக்கிட அழைப்பு ஏற்று பேச தொடங்கினால் வர்ஷா.
" சொல்லு சந்தீப்..," என்றால் காதல் பொங்கும் குரலில்,
" வர்சு.. நா கேட்டதுக்கு பதில் வரலை, என் வீட்டுல என்ன ரொம்ப பிரஷர் பண்ணுறாங்க டி.. நாளைக்கு ஊரை விட்டு போயிடுவேன். திரும்பி வர வாய்ப்பு ரொம்ப கம்மி, நீ என்ன சொல்ல போற? இந்த வாழ்க்கை தான் உனக்கு பிடிச்சு இருக்கா, நான் போனா திரும்ப வர முடியாது. என்ன நம்பி வாழ்க்கைய தர பயமா இருக்கா? என் மேல.. நம்ம காதல் மேல நம்பிக்கை இல்லையா? உன் பழச எல்லாம், இந்த ஊரோட விட்டுட்டு பொய்டலாம் டா.. இந்தியால இருக்க பிடிக்கலைனா? வெளிநாட்டுக்கு கூட நாம பொய்டலாம். எனக்காக என் காதலுக்காக மனசு மாற கூடாதா வர்சு." அடிபட்ட குரலில் கேட்டான் அன்பின் தூதன்.
" காலையில வந்து உன்ன பாக்குறேன் சந்தீப்."
"வந்துடுவியா? " ஏக்கமாக தவிப்புடன் வெளிவந்தது அவன் வாய்மொழி.
" நான் வந்தா உன் கூடவே நீ எங்க போறியோ, கடைசிவரை உன் கூடவே இருப்பேன். ஒருவேளை வரலைனா? எனக்காக காத்திருக்க வேண்டாம். எல்லாமே.. முடிஞ்சதா நெனைச்சுட்டு ஒரேடியா நீ பொய்டு, உன் வாழ்க்கைய பாரு.. வீட்டுல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. ஆனா ஒருவேளை உன்ன பாக்க வந்தா..., கை விட்டுறத சந்தீப்.
"நாளைக்கு உனக்காக வெயிட் பண்ணுவேன்.நீ வரலைனா, உன்ன வெறுத்துடுவேன் டி.. உன்கிட்ட பேசவே மாட்டேன்.செத்தா கூட மூஞ்சுல முழிக்க மாட்டேன்." என்ன பதிலே வரவில்லை என்று போன் திரையை பார்க்க.. கட்டாகி இருந்தது. நாளை வருவாளா? என்ற கேள்வியால் உறக்கம் தொலைத்து கண் தழுவாமல் இமை மூட மறுத்து, தூங்கா இரவாக கழிந்தது சந்தீப்க்கு ,அதே நேரம் இவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியான இரவு!! விடியலை எதிர்பார்த்து விழித்திருந்தால் வர்ஷா. உடைகளோடு சேர்த்து அவன் மீது கொண்ட அளவில்லா காதலையும் தன் உடமையாய் மூட்டை கட்டினால், அவனோடு செல்லப்போகும் காதல் பயணத்திற்காக? மனதில் எல்லை இல்லா இன்பம், ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி.. நிம்மதியான வாழ்க்கை நிறைவான காதல்,இந்த கார் இருளோடு சேர்த்து தன் கருப்பு பக்கங்கள் முடிந்து பொழுதோடு சேர்த்து தன் வாழ்க்கையும் நன்மையோடு விடியும் என்று நம்பிக்கையோடு விழி மூடினால் பாவை.!
விதியோ..!! நன்மையா? விடியலா? ம்..ஹும்.. இன்பம் என்பது உன் வாழ்வில் எழுத்துக்களாய் கூட இல்லை. என்று ஏளனமாய் அவளைப் பார்த்து கோராமாக பல் இளித்தது. அவளின் வஞ்சகமான குறைவிதி.





உமா கார்த்திக்