uma Karthik
Moderator
ஆதவன்.. மஞ்சள்.. அரிதாரம் பூசிடும். முன்னமே. குளித்து முடித்து. கண்கள் உருத்தாத காட்டன் புடவையை இடைவெளி இல்லாமல், உடுத்தி பொட்டின் மீது குங்குமம் இட்டு.. இங்கு அந்த வழக்கமில்லை.. அவனுக்கு பிடிக்கும்.. என்பதலே..!! தலையில் மல்லிகை சூடினால் மன்னனுக்காக.
அதிக ஒப்பனைகள் அடர் உதட்டுசாயம், கண்களை கூச செய்யும் மெல்லிய புடவைகளிடம் இருந்து. விடுதலை.! இன்று முதல். பிடித்த முறையில் உடை அணிவதும் ஒரு வகை இன்பம். ஆடை சுதந்திரம் இன்று தான் கிடைத்தது. நரக வாசல் விட்டு சிறகு முளைத்த பறவையாய்.. வெளிநடப்பு செய்தாள் வர்ஷா.
நினைவெல்லாம்.. அவளின் அவன்.! அவன் பேச்சுகள் எல்லாம் கிசுகிசுப்பாய் காதில் ஒலிக்க.. தெருவின் குப்பைகள் கூட மலராய் தோன்றியது.. இதழில் மகிழ்ச்சி ததும்ப.. சிரித்தபடி நடந்தாள்.. வர்ஷா.வருங்கால சந்தோஷ கனவுகள்.. விழியை கூடாரமிட, வெட்கப் புன்னகை படரவிட்டால் இதழில்.!
இலக்கின்றி வீசப்பட்ட கோடாரியை ஒத்த,சீரற்ற அதி வேகத்தில் அவளை உரசுவது போல, உரத்த பேர் இரைச்சலோடு..கருப்பு நிற விராங்லர் ரக ஜீப்.. அவளை ஒட்டி நின்றது. நெருக்கத்தில் வாகனத்தின் சத்தம் கேட்கவும். அதிர்ச்சியில் உடல் தூக்கி வாரி போட்டது. ஜீப்பின்.. நடுக்க அதிர்வலைகளின் உதறல், வர்ஷாவின் உடலையும் தொற்றிக் கொண்டது. காரணம் அதில் அமர்ந்து இருப்பவன்.
"ஹேய்.. பொண்ணு.. வா.. " மீசையை முறுக்கி.. பான் பராக்கில் மூழ்கி சிவந்த பற்கள். தெரிய.. கண்களால் ஜீப்பில் வந்து அமர கட்டளை இட்டான்..
"இல்லை.. நான் வர முடியாது" பயத்தில் நடுங்கியபடி பதில் வந்தது.
"ஏய்.. பொண்ணு.. மூட் அவுட் பன்னாத. வா. " என்றான் எரிச்சல் கலந்த அதிகாரமான தொனியில்.
பயத்தில் பேச முடியாமல் ஏதோ தொண்டை குழியை அடைக்க.. முயன்று பேசலானாள் " இதெல்லாம் விட்டுட்டேன். வீட்டுக்கு போறேன்.. ப்ளீஸ். " என்றால் கண்ணில் மிரட்சியோடு.
" ஒரு தடவை.. நல்லா என்ன கவனிச்சுட்டு எங்க வேணா போ.. உன்ன கூடவே வச்சுக்கிற அளவு பணமும் என்கிட்ட இல்ல.. இப்ப வேற ரேட் எல்லாம் கூடிப்போச்சு.. என்று சலித்துக்கொண்டவன்..அவளின் முகம் பார்த்து,நக்கலாக இதழ் வளைத்து சிரித்தான்..
அவன் பார்வை அங்க அங்கமாக உடலை துளைத்து எடுக்க.. " எனக்கு இன்னைக்கு கல்யாணம் ஆக போகுது..புரிஞ்சிக்கோங்க.. நான் போகணும் " என்று விலகி நடக்க.. வேகமாய் அமர்ந்தபடியே.. அவளின் கையைப் முறுக்கி பிடித்தவன்.. கையை உதற முயன்றதும்.. பிடியை இருக்கினான்..
"உனக்கு கல்யாணமா..?? உன் கஸ்டம்மர் எவனாவது இருப்பான்.. காதல் தானே!! கரெக்டா கண்டு பிடிச்சனா..?? எந்த வீட்ல உள்ளவங்க உன்ன மாதிரி ஒருத்தியை தன்னோட பிள்ளைக்கு கட்டி வைப்பாங்க..?? ஹா.. ஹா.. ஹா.. என்று இடியாய் சிரித்தவன்.. " உனக்கு புத்தி இல்லையா..?? உன்னை எவனாவது காதலிக்க முடியுமா..?? இப்படி எல்லாம் காதல்..கல்யாணம்.. வாழ்கை கொடுக்கிறேன்னு சொல்லி.. ஏமாத்தி நல்ல ரேட் பேசி வெளிநாட்டுக்குத் பேக் பண்ணி வித்துடுவானுங்க.. உன் அழகுக்கு எத்தனை லட்சம் கேட்டாலும் கொடுப்பாங்க.. " உதட்டை கடித்துக் கொண்டு கீழிருந்து மேலாய் பார்வையாலே அளந்தான்.
இல்லை. அவர் ரொம்ப நல்லவர்.. என்ன உண்மையா.. என்று முடிக்கும் முன்னமே.. ஏளனமாக அவன் சிரிப்பொலி கேட்டது.
" சாக்கடை கொண்டு போய் யாராவது வீட்டில வைப்பாங்களா .? ஹா..ஹா. ஹா.. குடும்பமே நாறி பொய்டாது..
என்றவனோ.. ஓயாமல் சிரித்துக்கொண்டே இருந்தான்..
தன் மொத்த வாழ்க்கையின் கலங்கம் எல்லாம் சேர்ந்து உருவம் பெற்று தன் முன் நின்று. தன்னையே பார்த்து சிரிப்பதைப் போன்ற விம்பம் தோன்றியது.. வர்ஷாவுக்கு. கண்கள் கரித்துக்கொண்டு வந்தது..
அவள் எதிர்பாராத நேரம்.. கையை இழுத்தான்.. அவள் அவன் மேல் சரியவும்..அவள் இடையோடு சேர்த்து இழுத்து.. ஜீப்பின் உள்ளே தள்ள முயல.. அவன் பாறை போன்ற வலிய கரத்தில் இருந்து தன்னை விடுவிக்க போராடினால்.. பாவை. முடியாமல் போகவும்.. கண்ணீர் விட்டு கெஞ்சினால்.. விடச் சொல்லி.. ம்.. கும்.. அது எல்லாம் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் அவன் இல்லை..
" இப்படி குடும்பத்து பொண்ணு மாதிரி பொடவை கட்டி இருக்கறதுனால மட்டும் உன்னோட அடையாளம் மாறிடுமா..? தெருவுல நின்னு உன்னையே நீ வித்ததெல்லாம் மறைஞ்சு போயிடுமா..? இன்னைக்கு ஒரு தடவை என் கூட தப்பு பண்றதுனால புதுசா...வா...கெட போற.. கேடுகெட்டவ தானடி நீ .. இந்த ட்ராமா எல்லாம் .. உன் டிமாண்ட் அ அதிகப்படுத்த தான..?என்று கர்ஜனை செய்தவன் " இப்படி உடம்பை மூடிக்கிட்டு.. குடும்ப பொம்பள வேஷம் போடுற, கூட பணம் வேணும்னா நேராவே சொல்லு டி தூக்கி எறியுறேன்.."என்று கழுத்தில் முகம் புதைத்து.. முத்தமிட.
பொறுமை இழந்தவள்.. பளார்... என்று அவன் கண்ணத்தில் அறைந்தாள்..
கன்னத்தில் அடி விழுந்ததும்.. வெகுண்டு அவன் பார்த்த ரௌத்திர பார்வையில் உடலோடு.. உயிர்வரை நடுக்கம் பரவியது..நலிந்தவளுக்கு.
அடித்ததும்.. சினம் கொண்டு சீறியவனோ.. ஆங்காரமாய் அவளை அடிக்க கை.. ஒங்கினான்.. அடிக்காமல் வேகமாக ஜீப்பை ரிவர்ஸ்ல் எடுத்தான்.. அடித்ததும். அறை விழும் என கண்களை இறுக்க மூடி இருந்தவள்.. மெல்ல விழியை திறக்கவும் கண்டது.. தன்னை நோக்கி புயல் வேகத்தில் எமன் அமர்ந்து வரும் வாகனம் தான்..!! வந்த வேகத்திற்கு வாகனம் மூர்க்கமாய் அவளை முட்டி தட்டி விட, சிதலமடைந்த குப்பை காகிதங்களாய்.. உடலோடு வாரி விசிறி ஏறியப்பட்டால்.. வர்ஷா.. விழுந்த வேகம் எலும்புகள் நொறுங்கி, தசைகள் கிழிப்பட்டு, நரம்புகள் அறுந்து உதிரம் வடிய.. கிடப்பவளை.. பார்த்து கர்வமாக சிரித்து கொண்டே அருகில் வந்தான்.. காலனின்.. மறுஉருவமாய்..!! உதிரம் வழிந்து கோரமாக அவள் கிடைக்கும் நிலையை பார்த்து கை தட்டி ரசித்தவன்..
"நீ முடியாதுனு சொன்னதும் என் மனசு உடைஞ்சதா.. அதான் உன் கை கால் எல்லாம்..?? இப்ப எப்படி கல்யாணம் நடக்கும்.. இங்கயே கிடத்து சகா போற..
உன்ன காதலிச்ச அந்த புண்ணிய ஆத்மா .. நீ வரலன்னதும் அசிங்கமா நினைப்பான்..!! கலங்கமா வெறுப்பான்.. கஷ்டமர திருப்தி படுத்த போயிட்டேன்னு..ஹா.. ஹா.. ஹா.." ராட்சசனை போல் பழித்து நகைத்து..
" நீ இன்ஸ்டன்ட் பத்தினி ஆயிட்டேன்னு தெரியாமலே.. இவ ஒரு *வடியா னு நினைக்கப் போறான்.. ரோட்டோரமா நிற்கிறது எல்லாம்..!! பத்தினி ஆகி ஒருத்தனுக்கு பொண்டாட்டியானா..?? உலகம் அழிஞ்சிடாது..! அந்த ந..ல்..ல.. காதலனுக்கு என்னைக்குமே.. நீ கேடு கெட்டவ தான்.. நொந்து சாவு..டி, அச்சச்சோ ரத்தம் வருது.. எத்தனை பேர் போறாங்க யாராவது ஒருத்தர் உன்கிட்ட வராங்களா?? ஒரு நாய் அடிபட்டா கூட நாலு பேர் வந்து பார்ப்பான்.. நாயை விட கேவலமான பிறவி நீ , வலியில துடிக்கிற..? வாழணும்னு தவிக்கிற.?ப்ச்.. பச்.." உச்சி கொட்டியவன்.
"உன் கஸ்டமர் கூட ரோட்ல உன்ன பார்த்துட்டு நிக்கலாம் ஒருத்தன் வரட்டும்.!! இங்க சாக்கடைல அசிங்கம் பண்றவன் எல்லாம்.. சாக்கடையை தொட மாட்டான்.. அசிங்கம்னு யார சொல்றதுன்னு புரியுதா..?? டிமாண்ட் இந்த உடம்புக்கு தான்..!! இப்ப யாருக்கும் நீ தேவை இல்லை.. இப்போ உன்னை தேடி யாரும் வர மாட்டாங்க ஏன்னா உன்னால எந்த யூஸ்சும் இல்லை.. உடல் ஆசைக்கு .. அழகா தெரிஞ்ச நீ.. ?? இப்ப அசிங்கமாவும் கலங்கமாகவும் தெரிவ..?? நீ பண்ண பாவத்துக்கு தான்.. இந்த முடிவு..!! இவ பாவின்னு ஒதுங்கி போறாங்க பாரு..??
'கண்களை மட்டும் சுழற்றி.. கடந்து போகும்.. யாரவது வரமாட்டார்களா.. ஏக்கமாய் பார்த்து தவித்தாள்..
எல்லோரும் பார்வையாளராக வேடிக்கை பார்த்ததோடு சரி நடையை கட்டினர்.. '
"யாரும்.. வரமாட்டன்.. நாயை விட இழிவான உன் கையால் அடி வாங்கிட்டு சும்மா போவாங்க.. அதான்.. அடிச்ச கைக்கு சாவ பரிசா கொடுத்துட்டு போறேன்..!! தப்பானவ எல்லாம் தப்பு பண்றது நிறுத்தவே கூடாது அப்படி நிறுத்துனா.. இப்படித்தான்.. பொய்யாக உச்சி கொட்டியவன்.. உயிர் போயிடுச்சா..??போகப் போகுதா?? உயிர் கொஞ்சம் கொஞ்சமா போறது கண்ணுக்கு தெரியுதா..?? கண்ண மூடாத டி .. எமன் கண்ணுக்குத் தெரியுறானா..?? "வன்மம் சுமந்து வந்தது குரல்...
"நான் தாண்டி உன் எமன்.. செருப்பு காலில் அவள் முகத்தில் தட்டி திருப்பி.. அவன் செருப்பில் தலையிலிருந்து வழிந்த குருதியின் துளிகள்.. பட்டு விட.. அசிங்கத்தை மிதித்தது போல்..!! சீ.. என்று உதறியவன்.. அவசரமே வேணாம் மெதுவா.. மெதுவா.. ம்.. பொறுமையா சாவு.. இறுதியில் கூட உனக்கு மரியாதை இருக்காது.. என் மேல கை வைக்கிற..?? நாக்கை மடித்து..கொல்வதை போல் விரலை அசைத்துவன்..
"உன் தகுதி இதான் டி.. என்றுவிட்டு அவள் மீது.. வெற்றிலை குத்தப்பிய பண்பாரக் எச்சிலை..காரி உமிழந்தவன்.. "தெரு நாய்களுக்கு இன்னைக்கு விருந்து தான்..கர்வமாய் எதையோ சாதித்த திருப்தியோடு...ஆனவமாக.. ஹ..ஹா .. ஹா..என்று எங்காளமிட்டு.. சிரித்தவன் "சாவு டி.." குரூரமக அவளை பார்த்து... காலால் உதைத்து எத்தி விட்டு சென்றான்.. இரக்கமே இல்லாத ராட்சச பிறவியானவன்..
எத்தனையோ நாள். நா சாகனும்னு நெனைச்சு இருக்கேன். தற்கொலை பன்ன முயற்ச்சி பன்னி இருக்கேன்.. அப்ப எல்லாம் சாகவிடாம வாழ வைச்சுட்டு. எல்லார போல நிம்மதியா வழலாம்னு ஆசைபடும் போது.."விம்மி அழுத்தாள்.. எனக்காக இல்லை அவனுக்காக நான் வாழனும்.இப்ப எனக்கு சாவு வரனுமா..? உன் கூட வாழ எனக்கு தகுதி இல்லையா..? "
"சாவு கூட வருத்தமா இல்லை..நான் செத்துட்டா..? அவன விட இந்த தப்பான விஷயம் தான் பெருசுனு நான் வரலைனு வெறுத்துடுவானே.." உன்கிட்ட உண்மைய சொல்ல யாருமே இல்லையே.. கத்தி அழுதாள்..
கண்ணீர் வழிய.. துடித்தவள் "உன்கிட்ட சொல்லனும் . ஒரு தடவை உன்ன பார்க்கனும். சந்தீப். செத்தா.. சேதி சொல்ல கூட நாதி இல்லை.. ஒரே ஒரு தடவை உன்கிட்ட பேசணும்.. என் நிலைமையை சொல்லிடனும்.உன்கூட வாழனும் டா.. உனக்காக நான் வந்தேன். உன் கூட வாழனும் னு ஆசையா வந்தேன். செத்துட தான் போறேன்..
இங்க யாருமே இல்லை.. அனாதையா..அடிபட்டு கிடக்குறேன். யாரும் கிட்ட கூட வரலையே.. என்ன காப்பாத்த கூட வேணாம்.. ஒரே ஒரு போன் கால் ..?? என்னால நகர முடியலை.. விரலை கூட அசைக்க முடியல. ஒரு தடவை உன்கிட்ட பேசனும். நானும் உன்ன காதலிக்குறேன் னு சொல்லிடனும். உனக்கனவலா ஒரு நாளாவது உன் கூட இருந்துட்டு சாகணும். என் வாழ்க்கையை நீ சரி பண்ணிடுவ, உன் அன்புல முழுசா என் எல்லா அழுக்கும் கரைஞ்சுடும்..நம்பிக்கையா நான் வந்தேன் "
அழுகையுடன் வார்த்தைகள் தொடர "இப்ப கூட நா நம்ம காதலுக்கு சரியா இருக்காதால தான் செத்தும் போறேன்..தெரியுமா..?? நா தப்பு பண்ணல, அதான் என்ன கொன்னுட்டான். இது எல்லாம் உனக்கு தெரியவே போறதில்லை .. தகமா இருக்கு.. சந்தீப்.. தண்ணி வேணும்.. என்ன வெறுத்தடாத.. ஒரே ஒரு ஆசை.. அதுவும் கை சேராத விதி எனக்கு.. யாருகிட்டயும் கிடைக்காத அன்பு, காதல கொடுத்த உனக்கு துரோகியா.. நா சாக கூடாது.."
"யாரவது வாங்க.. நான் சொல்றது மட்டும் அவன் கிட்டசொல்லிடுங்களேன்.. " கதறி அழுதாள்..
"சாவு கூடவா எனக்கு நிம்மதியா வராதா..?? என்ன உயிரா நினைச்சவன்.. இந்த அசிங்கத்துக்காக நான் அவனை தூக்கி எறிஞ்சிட்டேனு.. வாழ்க்கை முழுக்க என்ன வெறுப்பானே.. என் உடம்ப பாக்காம, மனச பாத்து நேசிச்சவன்.. வெறுப்பை செத்தும் நான் சுமக்கணுமா..?? மோட்சம் இல்லாம..என் உயிரும் தவிக்கும்.. உன் வெறுப்பு எனக்கு வேணா..?? வா.. சந்தீப்.. நான் கேட்ட எதை வேணா கொடுப்பேன் சொல்லவ..! நான் உன் வர்ஷா கேட்குறன்..எனக்கு நிம்மதியான சாவு வேணும்.. நீ வந்தா தான் கிடைக்கும்.. வா சந்தீப்.. "
"கடவுளே..இந்த பிறப்பு எடுத்து நான் பட்ட வேதனை எல்லாம் போதும்.. அவனை பாக்கணும்.. எல்லாத்தைம் சொல்லணும்.. " மயக்க நிலையில் உதடுகள் குழறிட.. சா..சா..சாகனும்..
வலிக்கது.. சீ.. என்ன பிறப்பு இது.. செத்தும் கலங்கம் போகாது.. துரதிர்ஷ்டம் எல்லாத்தையும் கொட்டி ஏன் என்ன படிச்சாரு.. இந்த கடவுள்..?? தலையெழுத்து கூட கலங்கத்தை தொட்டு எழுதி இருப்பியோ..!! சிதைந்து போன, இருள் அடஞ்ச என் வாழ்க்கையில கிடைச்ச ஒரே ஒரு வெளிச்சத்தையும்.. பறிச்சுகிட்டது.. நிம்மதியா இருக்கா..? கொதித்து அழுதால்.. பாவபட்டவள்.
அவளின் ஆற்றாமையின் வெளிப்பாடு படைத்த இறைவனை தவிர யாரை நொந்து கொள்வது.. ஒரு முறை அவன் முகம் காண உயிரை இருக்கி பிடித்து..காத்திருந்தாள்.. அவன் மேல் உள்ள காதலையும். வாழ முடியாத வாழ்க்கையையும் எண்ணி அழுகை வெடிக்க.. நீ வேண்டும். திகட்ட திகட்ட உன் அன்பில் மூழ்கி வாழ வேண்டும்.. மனைவியா உன் பிள்ளைய சுமந்தது..என் கறைகள் எல்லாம் அன்பில் கரைத்திட வருவாயா? என் தூயவா..? உயிர் அடங்க போகிறேன்.. என துடிப்பதை அவளால் உணர முடிந்தது.. மூச்சு விட முடியாமல் ஏதோ அழுத்தம்.. உதிரத்தோடு உயிரும் கொஞ்ச கொஞ்சமாய் கசிந்து வடிய ..
உறைந்து கிடக்கும் உதிரத்தின் வாடை நாசியில் நுகர்த்து.. மோப்பம் பிடித்தபடி.. கருப்பு நிற நாய்..ஒன்று அவள் அருகில் வந்து .. இரத்ததின் நெடியை..நாசியை நெருட.. ஆழ்ந்து மோப்பமிட்டு.. கோரமான கூர் பற்கள் வழியே..நாக்கில் எச்சில் சொட்ட விட்டப்படி .. மற்ற நாய்களையும் வர அங்கே வர ஓசை இட்டது..
இதையெல்லாம் நேரில் பார்த்தவளுக்கு.. தன் முடிவை எண்ணி விரத்தி புன்னகை இதழில். தலையில் இருந்து வழிந்த ரத்தம் கண்களில் பரவி கண்ணீரோடு கலந்து.. கன்னங்களில் வடிந்தது இரத்தக்கண்ணீராய்..!!
"இந்த உடம்ப வெறும் மண்ணு தின்னு என்ன பயன்.. இந்த நன்றி உள்ள ஜீவன்களாவது பசியாறட்டும்.." இறுதிவார்த்தையை உதிர்த்துவிட்டு .. கண்களின் ஒளி..தேய்ந்து..ஜீவன் அணைந்து போனால் வர்ஷா.





உமா கார்த்திக்