uma Karthik
Moderator
நாய்கள் எல்லாம் கூட்டமாக அவளை வட்டமிட்டன..!! அவள் உயிர் பிரிய போவதன்..அறிகுறியோ.!!
எமன் வந்தால் தெருவில் கூடி அழுவது போல எல்லா நாய்களும் ஓலமிட்டு அழுதது..
உதவிக்கான ஓலம் இது.. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உணவளித்த நல்லவள் மீது கொண்ட விஷவாசம்.. பாசத்தின் கூகுரலோடு.. உதவிக்கு அழைப்பு விடுத்தது.. நன்றியில் உயர்ந்த ஜீவராசிகள்..!!
இயல்புக்கு மாறக இந்த நாய்கள் எல்லாம் கூட்டமாக அழுவதை கண்ட வர்ஷாவின் தோழி ஒருத்தி..ஏதோ நாய் அடிபட்டு கிடக்கும்.. என்று நினைத்து வேகமாக அருகில் வந்து பார்க்கவும்.. கீழே வர்ஷா.. ஆ.. மயங்கிய நிலையில்.. அதுவும் உடலில் உள்ள ரத்தம் எல்லாம் வலிந்து, தரையில் பரவி கிடக்கவும்..நடுங்கம் எடுக்க, பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து நின்றவள்.. அருகில் சென்று கன்னம் தட்டி எழுப்பி பார்த்தால்.. பயன் இல்லை.. துரிதமாக ஒரு ஆட்டோவை பிடித்து வந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டவள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவர்களுக்கு ஏஜெண்டாக இருக்கும் மானவ்... ஐ விரைவாக மருத்துவமனைக்கு வர சொல்லி அழைத்தால்.. வந்தவன்..
" அந்த பொண்ணு நிலைமை என்ன..?? வள வளனு இழுக்காமல் உண்மைய சொல்லுங்க..டாக்டர்.
" அந்த பொண்ணுக்கு நீங்க யாரு..?? "
" ரோட்டுல அடிபட்டு கிடந்துச்சு இந்த பொண்ணு அதான்.. பாவப்பட்டு கொண்டு வந்து சேர்த்திருக்கோம்.. அனாதை பொண்ணு சார் இது.."
" ரொம்ப மோசமா ஆக்சிடென்ட் ஆயிருக்கு. உடம்புல இருக்க.. நிறைய எலும்பு உடைஞ்சிருக்கு.. பிரைவேட் ஹாஸ்பிடல் கொண்டு போனா ஏதோ.. கொஞ்ச நாள் வாழலாம்.. அதுவும் பொம்மை மாதிரி தான்.. எழுந்திருச்சு நடக்கவோ , இல்ல.. உட்கார கூடாது இந்த பொண்ணால முடியாது.. ரெண்டு மூணு ஆப்ரேஷன் பண்ணா ஓரளவு சரி பண்ணலாம்.
"எவ்..வ்..ளோ.. ஆகும்.. "கேள்வியாக மருத்துவரை பார்க்க..?
" இருபது லட்சம்.. ஆகும்.. இன்சூரன்ஸ் ஏதாவது இருந்த, அதுக்கு ஏத்த மாதிரி அமௌன்ட் குறையும்.
" இன்சூரன்ஸ்.. ஆ..?? நான் என்ன ஆபீஸ் ஆ.. வெச்சி நடத்துறேன்..?? எந்த வைத்தியம் பாக்காம, இதே ஆஸ்பத்திரில இருந்தா எத்தனை நாளைக்கு இருப்பா..?
" ஆபரேஷன் பண்ணலன்னா ஒவ்வொரு உறுப்பா செயல் இழக்க ஆரம்பிச்சிடும். குறைஞ்ச பச்சம் ஒரு வாரம் அதிகபட்சம் பத்து நாள்."
" ரொம்ப நல்ல பொண்ணு. இவள பார்க்கலாம், யாரும் இல்ல. ஒரு வாரம் ஏன் கடந்துகிட்டு, வலிய அனுபவிச்சிட்டு.? பாவம்.. ஏதாவது ஊசி போட்டு முடிச்சு விட்டுரு. செத்துட்டான்னா..? சொல்லு இங்கயே வந்து அடக்கம் பண்ணிட்டு போறேன். வாழ்ந்தா..? மனுசன் நிம்மதியா வாழனும், இல்ல நிம்மதியா சாகணும்.. ரெண்டுமே இல்ல..! ஏதோ என்னால முடிஞ்சது. வலி இல்லாமையாவது போய் சேரட்டும் .. புலம்பியபடி .. மருத்துவர் அறையை விட்டு வெளியே வந்தவன்.. வார்ஷாவின் வார்ட் நோக்கி வேக நடை போட.. வர்ஷாவின் தோழி ஆருஷியோ.. கண்ணீரோடு அவனை ஏக்கமாய் ஏறிட்டு பார்த்தால், அவனோ உதட்டை பிதுக்கி. தேறாது என்றுவிட்டு நகர்ந்தான்.. விருட்டென.. வர்ஷா அருகில் வந்தவன்.
" வர்ஷா.. கடைசியா.. யாராயாவது பாக்கனுமா.? உன் குடும்பம் அம்மா.. அப்பா யாராவது.. ஹான்.. உன் லவ்வர்.. ?? அடி பட்டதும் ஒடிட்டானா..? அவனுக்கு அவன் தேவை.! சரி.. யார்கிட்டயாவது பேசனுமா..?
"இல்லை.. யார்கிட்டயும் பேச எனக்கு எதுவும் இல்லை.. " மெளனமாக கண்களை மூடிக் கொண்டாள்.. மறுப்பு தெரிவிக்கும் விதத்தில்.
" வர்ஷா.. நல்லா.. வேண்டிக்கோ, அடுத்த ஜென்மத்துல பொண்ண பொறந்துட கூடாது னு.. " மன தாங்கலோடு திரும்பி பார்க்காமல் வெளியே நடந்தான்.. இது போல ஆயிரத்தை அன்றாடம் பார்ப்பவனுக்கு, இந்த நல்ல பெண்ணின் மரணம் விடுதலை தான் என்று தோன்றியது.
நீ.. சாகப் போகிறாய்.. என்பதை அடுத்த ஜென்மத்தோடு தொடர்புபடுத்தி அவளிடமே சொல்லி சென்று விட்டான். மரணத்தின் தாக்கத்தில் விழிநீர் கோடாக வழிந்து வந்து காதில் ஒட, அசைய முடியாமல், விட்டத்தை மட்டும் பார்த்து பொம்மையாய் கிடந்தாள் வர்ஷா.
" மானவ்.. " என்று கத்தியபடி..அவன் அருகே ஒடி வந்தால் ஆருஷி.. " நீ பாட்டுக்கு விட்டுட்டு போற. பாவம் அவ வைத்தியம் பன்ன சொல்லு.. மானவ், அவள எப்டியாவது காப்பாத்திடனும்.."
" அழக வைச்சு தொழில் பன்றோம்.. ஒடுற குதிரைக்கு தான் மவுசு. இவ தேறமாட்டாலாம், இருவது லட்சம் வேனுமா..? யார் தருவா..? அவளால உட்கார கூட முடியாதாம். பிச்சை எடுத்து கூட காச திருப்பி தர வழி இல்லை. "
" அவள காப்பாத்து.. ப்ளீஸ்.." கை கூப்பி கண்ணீர் வடித்தாள்..
" நீ ஏன் இங்க இருக்க, கிளம்பு இருந்து அவ சாவ தடுக்க போறியா..? இப்பவே கஸ்டமர் போன் பன்னுறாங்க.. எப்ப வர்ற..? ஆரு முடிஞ்சதை விட்டுட்டு பொலப்ப பாரு.. "
" மனுஷனா டா.. நீ எல்லாரும், எங்க எல்லார் உழைப்பையும் உருக்கி திக்குறீங்க..? ஒருத்திய காப்பாத்துனா என்னடா..? பாவம் டா.. அவ , யாருமே இல்லாம நிக்குறா..? நான் வரலை.. நீ போ.. நீ எல்லாம் செத்தா... நரகத்துக்கு போவ டா.. கண்ணீரோடு சபிக்க.
புன்னகைத்தவன்.. சாய்ந்து ஒரு பார்வை பார்த்து.. "ஆரு.. உனக்கு ஒரு மணி நேரம் டையம். லேட் ஆச்சி.. பல்லை கடித்தவன், கட்டமாக சப்தித்தான்..
"நான் என்ன இவ புருஷனா..? இதை தோள் ல போட்டு நான் சுமக்க..? பாசம், இரக்கம் னு பேச்சு வேனா பேசலாம். நிஜம் செருப்பால அடிக்கும்.. எவ செத்தாலும் கமிஷன் பணம் போகனும்.. இல்லை நான் செத்தேன். புரியுதா..? சும்மா.. வருத்தம் தான்.. ஆனா..பணத்தாலே இயங்குற உலகம் இது..!! லாபத்தை பொறுத்து தான் தேவைகளும்.. இப்ப அவளால எந்த லாபமும் இல்லை ,அதனால எனக்கு அவ தேவையில்லை.. நாம வாழுற வாழ்க்கை தான் நரகம்..சாவு சொர்கம் தான் டி..போ. என்று வெளியேறினான்.
மெல்ல தயங்கி.. தயங்கி.. உள்ளே வந்தவளால் , வர்ஷாவின் முகம் பார்க்க முடியாமல் மனம் உறுத்தியது.. சுவரில் மாட்டிய வட்டவடிவ ராட்சச கடிகாரத்தின் நொடி முள் நகரும்.. டிக்.டிக்.. சத்தம்.. உனக்கு நேரமில்லை என்று கத்துவதாய் ஒரு பிரம்மை தோன்றியது ஆருஷிக்கு. " வர்ஷா.. எல்லாம்.. " கண்கள் குளமிட, வார்த்தை வராமல் புடவை நுணியால் வாய் பொத்து கதறி அழுதால். " சாமி எல்லாம் பொய்.. டி.. இந்த பொறப்பு ஏன்டி.. எடுத்தோம்.. கெடு வச்சுட்டு போய் இருக்கான் டி.. எனக்கு " கத்தி ஒப்பாரி வைத்தால்..
" எவ்ளோ.. நேரம்..?"
" ஒரு மணி நேரம்.. நான் போயே தீரனும். வர்ஷா.. சந்தீப்.. அண்ணா.. வருவாங்களா.. ?? பதில் வராததும் சங்கடமாக உணர்ந்தால்.
" சந்தீப் கிட்ட சொல்ல வேணாம்.. ஆரு.. அவன் வருவான், விடாம தேடுவான். அவனுக்கு என் மேல வெறுப்பு வரனும்.. ஒரு பொய் சொல்லனும்..நான் மலேசியால இருக்க, ஒரு பணக்காரர் கூட மொத்தமா பொய்டேன் னு சொல்லி, நீ தான் நம்ப வைக்கணும் . எனக்கு ஆக்சிடெண்ட் ஆனதோ..? உயிரோட இல்லங்குறதோ..??அவனுக்கு என்னைக்கும் தெரிய கூடாது.
" ஏன்..டி.. செத்து பழி சுமக்கணுமா..? " வேதனையோடு அருஷி கேட்டதும்..
"என் கடந்த காலத்தோட, சுமையே..
என் மனச அரிச்சிட்டு இருந்தது,
இப்ப..?? " உதட்டை பிதுக்கி விசிபியவள்.. "நானே ஒரு பாரமா இருக்கேன்.. என்ன காதலிச்சதுக்கு தண்டனையா..?? நானே மாறிட கூடாது..அருஷி..நான் செத்தா கூட சொல்லாத.. தாங்க மாட்டான்.. இன்னும் எவ்ளோ தான்.?? அனுபவிக்க இருக்கோ..!" அப்பட்டமான விரக்தியில் உதிர்ந்தது வார்த்தைகள்.
"நெறய இருக்கு..!! வர்சு.." என்றவன்.. குரல் கேட்டு.. உயிர் எல்லாம் நிம்மதி பரவியது.. நோயாளிக்கு.. மருந்து வந்து விட்டது.. அல்லவா..! இருந்தும் மனதின் பரவச உணர்வை முகத்தில் காட்டாமல் மறைத்தால் ஒருத்தி. முகமூடி தேடி பூட்டினாள் ஏங்கும் காதல் மனதை..! கண்ணை மூடினால் காதல் மறையுமா.!! என்ன..??
சீற்றம் கொண்டு முறைத்தாள்... அவனை .. அவனது மென் இதழ் சிரிப்பு மாறாது நிலைக்கவும்" நான் தான் சொன்னேன் இல்ல, நான் வரலைனா.. எனக்கு உன்ன பிடிக்கலை னு.. எதுக்கு இங்க வந்த, காசு கொடுத்து வர்றது.. கஷ்டம் னு, மொத்தமா குத்தகைக்கு வாங்க கனவு கண்டவன் தான நீ.. அப்படி என்னடா..? ஆம்பளை நீ.. ம்ம்ம்ம்.. பலபேர் கூட தினமும் சுத்துற என்ன.. உன்னால அடக்கி திருப்தி படுத்த முடியுமா.?? நான் போட்ட மாத்திரைக்கு எல்லாம் அடுத்த ஜென்மம் கூட எனக்கு குழந்தை பொறக்காது. நீயும் ... எங்கயாவது மொத்தமா.. ரேட் பேசி என்ன எவனுக்காவது வித்துட்டு செட்டில் ஆக தான இந்த காதல், கல்யாண நாடகம் நடத்துன.. என்று முடிக்கும் முன்.. ரௌத்திரமாகி அவளை தீ பார்வையில் எரித்தவன்.. மேசையில் இருந்த பொருட்களை கோபத்தில் உதைத்து தள்ளிவிட்டு .. அவள் உறவையும் உதறியபடி .. வெளியேறினான்..வேண்டாதவனாக மருத்துவமனை விட்டு.
சந்தீப்பின் கோபம் மூச்சை அழுத்தி அடைத்தது காதலிக்கு. அவன் வெறுப்பின் வீச்சம். உடைபட்டு சிதைந்து இருக்கும், உடலை காட்டிலும், மனதில் வலி தந்து கொல்ல.. " சந்தீப்" என்று ஆதங்கத்தில் கத்தி அழுதால்.. வர்ஷா.
மெழுகின் தீபம் இவள் காதல்..!
தன்னவனின் நல்வாழ்வுக்காக காதலோடு தன்னையும் சுடர் விட்டு எரிப்பாள் இந்த காதல் பத்தினி..!
கோவமாக திரும்பியும் பார்க்காமல். அவன் தூரமாக சென்று மறைய, கண்ணீரை ஊற்றெடுத்தது வர்ஷாவின் விழிகள்.. ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்தியது. விபத்தால் உண்டான உடலின் வலியை, போட்டி போட்டுக் கொண்டு முந்தியது மனதில் வலி.. காதலின் வலி..!!
அவன் வெறுப்பின் விலக்கத்தால் துடித்து போனாள்.. அவள் வாழ்வின் தேடல் என்ன..?? அவன்மீது கொண்ட காதல் எவ்வளவு என்று கண் முன்னால் வந்த மரணம் அளவீடு செய்து காட்டினாலும். இப்போது வெறுக்க வேண்டும், விலக வேண்டும் என்று பேசிவிட்டாள். ஆனால் போகிறானே..! நிற்க மாட்டானா.?? திரும்ப வந்து பேச மாட்டானா.?? தவித்து போய் ஏங்கியது காதல் மனம்..
' நீயே போக சொல்லிவிட்டு இப்படி அழுதால் எப்படி..? உள் மனம் கேள்வி கேட்க.. பதில் இல்லை இவளிடம். '
உயிர் மட்டும் ஓட்டிக்கொண்டு உணர்வில்லாமல் பொம்மை போல கிடக்கும், காதலிக்கு..? காலம் முழுவதும் சேவை செய்து வாழ்.. அன்புக்காதலா உன் ஆயுள் தண்டனையை நான்.! தண்டிக்க விரும்பாமல் விலகுகிறாள். ஆனால்..??'
அவன் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் குழந்தையாய், மனம் தர்க்கம் செய்ய..! உடலை அசைக்க முடியவில்லை தான். ஆனால் உயிரோ..?? அவனுக்காக அலைப்புற்றது.. ஓடி சென்று அவன் காலில் விழுந்து, நிகழ்ந்ததை சொல்லி கரைந்துருகி அழுக மனம் ஏங்கியது.!!
அவன் போன பாதையில் பார்வையை பதித்த படி.. கண்ணில் பெருகிய நீரோடு " சந்தீப்.. என்ன வெறுத்துட்டானா ஆரு..??
என்கிட்ட பேச மாட்டானா..??
திரும்ப வர மாட்டானா.?
என் விதி மட்டும் ஏன் இப்படி இருக்கு.??
"யார உலகத்திலே அதிகமான நேசிக்கிறோமோ.. அவங்கள காயப்படுத்துவது எப்படி வலிக்குது தெரியுமா..??காதல் ரொம்ப பொல்லாதது,அவன் போனா..? உயிரே போற மாதிரி வலிக்குது..
இதெல்லாம் நடக்காம இருந்திருக்க கூடாதா..??
நான் உன் கூட சேர்ந்து இருக்க கூடாதா..? பரிதவித்து போய் வார்த்தைகள் வந்து விழுந்தது கண்ணீரோடு.
" பெருசா தியாகம் பண்ணிட்டீங்க இல்லையா..!! அப்புறம் ஏன் இப்ப புலம்புறீங்க..?? அவர உனக்கு எவ்வளவு பிடிக்கும். ஏன் இப்படி வார்த்தையால நோகடிக்கிற..? யாருமே இல்லடி உனக்கு.? இன்னும் பத்து நிமிஷத்துல நான் போயிடுவேன்.. உன் நிலைமை என்னன்னு உனக்கு புரியுதா..? ஏன் அங்கேயே பாக்குற..?? ஆத்திரமாக கேட்டால் ஆருஷி..
"அவர் போய்ட்டாரு.. வரவே மாட்டாரு.. எவ்ளோ கேவலமா பேசி போக வச்சிட்டு .. இப்போ வாசலையே வெறுச்சு பார்த்து என்ன ஆக போகுது.. வரு..?? ஏன் இப்படி இருக்க..! கொஞ்சம் உயிர் வாழ சுயநலமா யோசிக்கலாம்.தப்பு இல்லை..
அந்த அண்ணா.. உன்ன காப்பாத்தி இருப்பார்.. நீ இப்ப பண்றதுக்கு பேரு தற்கொலை வர்ஷா.. எனக்கு போன் வந்துகிட்டே இருக்கு.. இப்ப நான் போயே ஆகணும்.. கூப்பிட்டு.. நாம போகல்லைனா..?? என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்.." கண்ணீர் கொட்ட. தன் இயலாமையை சொல்லி .. பதிலுக்காக தலை குனிந்து நின்றால் ஆருஷி..
உதட்டை கடித்து கொண்டு கண்ணீரை அடக்கியவள்.. இவளுக்கு தான் தெரியுமே.! இரக்கமே இல்லாமல் அடி விழும் என்று விடை கொடுக்க ஆயத்தம் ஆனால் " நீ போகலாம் ஆரூ... நான் என்ன மேனேஜ் பண்ணிக்குவேன் " என முடிக்கும் முன்னமே கண்ணீர் வந்து விழ்ந்தது.. கன்னம் ஓரம்..
இவள் கண்ணும் ஈரம் கோர்த்தது..அனாதரவாக படுக்கையில் கிடக்கும் தோழியின் நிலை கண்டு..? "என்ன மன்னிச்சுடு வர்ஷா.. நா.. நான்.." துக்கத்தில் ஏழாது வார்த்தை அடிபட்டு போனது..
" போ.. ஆரு.. பத்திரமா இரு.." அழுது கொண்டே அவள் வார்டுவிட்டு வெளியே சென்று முடியும் வரை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. இமையோ..!! அணை கட்டாமல் வெது நீர்..அருவி விழியில் உருண்டப்படி தொடர.
செவிலியர் கேஸ் ஷீட் உடன் அருகில் வந்தார்.. மேலோட்டமாக பார்த்துவிட்டு "இந்த மாத்திரையை மூணு வேலையும் தொடர்ந்து சாப்பிடணும். தலை எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு.. அட்டெண்டர் யாரும் இருந்தாங்கன்னா.. சுடுதண்ணி வச்சு கிளீன் பண்ண சொல்லுங்க. ஹலோ உங்களைத்தான்.. வர்ஷா.. ஆ.."
தனித்து விடப்பட்ட நிலையில்.. ஏதேதோ பயங்கள் வர, எண்ணகளில் சிக்கியவள். நர்ஸ் ன் வர்ஷா.. என்ற அழைப்பில் சுயம் வந்து.. " ஹான்.." என்றால் பதட்டமான குரலில்..
" கீளின் பன்ன ஆள்.. எங்க..? முடி எல்லாம் ரத்தம் உறைஞ்சு போய் இருக்கு.. .மாத்திரைய யார்கிட்ட கொடுத்துட்டு போக..? " என்று கேட்டும் பதில் பேசாமல் மெளனம் சாதித்ததில் கோபம் எழ.
"காது கேட்கும் தான..? யாரும் இல்லையா..? அனாதையா..? நீயா.. தண்ணி கூட குடிக்க முடியாது.. இதுல மாத்தரை. டெஸ்ட், ரிசல்ட் யாரு அலையுறது.? யாரயாவது ரெடி பன்னுமா..?
"யாரும் இல்லை.. எனக்கு . " வார்த்தையின் உண்மை தன்மை வருந்தி அழ வைத்தது தனித்திருப்பவளை.
" என்னம்மா.. நாங்க மாத்திரை தான் கொடுக்கலாம், ஊட்டி யா.. விட முடியும்..?" உயிரை எடுக்குதுங்க. வாய் விட்டு முணவினால் செவிலிய பெண்.
" ஊட்டி விட நான் இருக்கேன்.. " குரலின் சொந்தக்காரன் யார் என்று உணர்ந்த நொடி.. உச்சி குளிர்ந்து போனது அன்பனின் ஒருத்திக்கு..!!!
அன்பின் விஸ்வரூபம் காட்டி உயர்த்து நின்றான் அவள் முன் தேவனாக.. சந்தீப்.. உனக்காக 'நான் இருக்கிறேன்..' எனும் வார்த்தை தந்த பெருமிதத்தில் அவள் முகம் என்னும் மொட்டு முகிழ்ந்து மலர்ந்தது.
' ஆளனின் கண்களின் கதிர்வீச்சு மேனி பரவ தாங்காது..!! இடப்பக்கம் தன் பார்வையை ஓரம் கட்டினாள்.. தலைவி..'
தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு அவள் கோபமாக இருப்பது போல பொய் பிம்பம் தோன்றிட, மானம் கெட்டவனாய் மாறி போன அன்பு காதலனோ.." ஓ... என்ன பாக்க கூட பிடிக்கலையா..?? நாலு வார்த்தை உன் கிட்ட கேக்க தாண்டி வந்தேன்.. என்ன பாருடி.. " கண் நரம்புகள் எல்லாம் சிவந்து புருவம் விடைக்க நின்று அவளையே நோக்கி குறு குறு பார்வையில் குத்தி நெருடினான்.. காதல் சீற்றக்காரனாய்..!
" என்னால உனக்கு எப்பவும் கஷ்டம் தான்.. என்ன பாரமா நீ சுமக்க வேணாம் சந்தீப் " என்றால் அடக்க முடியா..?அழுகையுடன் ..
"ஐ லவ் யூ.. வர்ஷா.. நீ எனக்கு சுமை இல்லை.. "
உனக்கு மனைவியா வாழ்ற அளவு எனக்கு தகுதி இல்லை.. என் உடம்பு சரியாகும்னு கூட எனக்கு நம்பிக்கை இல்லை..
" என் மனைவியா என் கூட சந்தோஷமா வாழுவ, நம்பு டி..? எல்லாத்தையும் நான் சரி பண்ணிடுவேன். "
"என்னால ஒரு குழந்தை "என்றவள் விசும்பி அழவும்..
"வர்ஷா .. இங்க பாரு.." மெல்ல முகத்தை திருப்பி அவனை பார்க்க செய்ய.
" நான்..உனக்கு வேணா..சந்..தீ.. என்று அவள் தொடங்க... முடிக்க விடாமல்..! வாக்கியம் முழுமை பெறாமலே.? முக்த்தி தந்தது ஆணவனின் அதரங்கள்..! இந்த இதழ் தானே பொய் சொல்கிறது.. வன்மையாக முத்தமிட்டு பூவிதழலுக்கு தண்டனை வழங்கினான் காதல் நீதியாளனாய், இதற்கு மேல் மனதை திரையிட்டு மூட முடியாமல்.. காதலை கொட்டி தீர்த்தாள் அவனிடம்.
" ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்.. சந்தீப்.." கதறி அழுதாள் வர்ஷா..
'அடைக்கலமாய் வந்தவனின் கை சாய்ந்து , கண்ணீர் விட்டு துணைவியாய்.. முழுமனதாக தாரை வார்த்துக்கொண்டால் தன்னையே.!! '
என்னென்னமோ வார்த்தை எல்லாம் பேசிட்டியே .?? என்னோட காதல பத்தி புரிஞ்சும் மனச நோகடிக்கலாமா.? நீயே என்ன வேதனைப்படுத்துற மாதிரி பேசலாமா.?வருஷு..
"அப்படித்தான் பேசுவேன் .. " தாயிடம் முரண்டு பிடிக்கும் குழந்தை போல சொல்லவும், இருவருக்கும் ஒன்றாக சிரிப்பு வர,
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னது எல்லாத்தையும் இப்ப என் கண்ண பாத்து சொல்லுடி.. " கராராக கேட்டான்..
"உன் கண்ண பார்த்தா எனக்கு பொய் சொல்ல வராது.. அவன் முகம் பாராது நயனங்களை மூடினால்..
" நீ என்னென்ன சொன்னேன்னு நானே சொல்லவா..?? " குறும்பு மேலோங்க மிரட்டல் விடுத்தான்.
கசப்பை நினைத்து பீதியானவளோ "வேணாமே.. ப்ளீஸ்.. கஷ்டமா இருக்கும்."
" என்ன பாக்க தான் கிளம்பி வந்து இருக்க.. ஆக்சிடென்ட் எப்படி ஆச்சு..? " தவறுதலாக ஏதாவது வாகனம் வந்து மோதி இருக்கும்.. விபத்து என்று நினைத்தவனுக்கு.. அஞ்சி. நடுங்கியபடி ஒவ்வொன்றையும்.. பயத்தில் திக்கித் தினறி , அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சொல்ல, சொல்ல.. கோபம் உச்சிக்கேறி கொந்தளித்தான்.. " யார் அவன்.. " என்றான் ஆத்திரத்தோடு.
நம்மளால எதுவும் செய்ய முடியாது. பொலிட்டிக்கலி ரொம்ப பெரிய பதவில இருக்கான்.. யோசிச்சு பாரு..!! பகல்ல எல்லாரும் கூட்டமா இருக்கும்போது.. சும்மா ரோட்டுல நிக்கிறவங்கள வந்து மோதி ஆக்ஸிடண்ட் பண்ண முடியுமா..? இயலாமையின் நெருடலோடு சலித்து கொண்டாள்..வர்ஷா.
" கடவுள் தான் இவனுக்கு தண்டனை கொடுக்கணும்.. ஈவிரக்கமே... இல்லாத கொடூரமான ஒருத்தன். நான் எவ்வளவோ சொன்னேன், எனக்கு கல்யாணம் ஆகப்போகுது என்ன விட்டுடுங்க.. நடுரோடு னு கூட பாக்காம புடிச்சி இழுத்து.. நான் முடியாதுன்னு சொல்லி அவன அடிச்சு..
'அவன் மனச நான் உடைச்சுடனாம்.. அதுக்காக என் எலும்ப உடைச்சிட்டானா..!! வர்ற கோவத்துக்கு அப்படியே அவன கொல்லனும் போல இருக்கு.'
பிடிக்கலன்னா முடியாதுன்னு தான சொல்லுவாங்க..?? இப்படி எத்தனை பேரை கொன்னு இருப்பானோ..!
நேத்து இதே நேரம் நடவுடைய இருந்தவள. பேசுற பொணம் மாதிரி படுக்க வச்சிட்டான்.." அழுதவள்.. " நரபலி அரக்கன்.. சாபம் மட்டும் தான் நம்மளால விட முடியும் இல்ல..?? "
"வர்ஷா.. ஸ்ட்ரெஸ் பண்ணாத. கண்ண மூடு.. ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க அம்மு.. "
"ம்..ம்..ம்.. கண்களை மூடி படித்தவள் கழுத்தில் ஏதோ ஊற.. பட்டென கண்விழித்தவள்..
" என்ன பண்ணுற..
எனக்கு சீக்கிரம் சரியாக, கோயில்ல நேந்துகிட்டு வாங்குன கயிறா.. இந்த ஊர்ல சிவப்பு கலர்ல இருக்கும். உங்க ஊர்ல மஞ்சள் கலரோ.?? "
அவள் வழக்கப்படி மணி தாலி(மங்கள் சூத்ரா)தான் பூட்டுவார்களே..! தவிர மஞ்சள் தாலி கிடையாது..நமது பாரம்பரியம் அல்லவா..!! தனக்குத் திருமணம் நடக்கிறது.. என்றே தெரியவில்லை.. அவளுக்கு..!!
" இது புருஷன் பொண்டாட்டிக்கு கட்டற கயிறு.." அசால்ட்டாக சொல்லவும்.. விழி பிதுக்கம் கொண்டு, அதிர்ச்சியில் ஒருத்தி நம்ப முடியாது திணறி...போனாள்..
" நான் உன் புருஷன் ஆயிட்டேனா..!! ச்சீ பொண்டாட்டி ஆயிட்டேனா..? கல்யாணம் ஆயிடுச்சு.. நமக்கு... சொல்லவே இல்ல.."
ஸ்.. ஸ்.. ஸ்.. கல்யாண பரிசு வேணுமா..?
" இதுவே போதும்.. இத உணர்ந்து முதல்ல, முழுசா அனுபவிச்சிக்கிறேன்.. கனவு மாதிரி இருக்கு.!! " அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த மோகனமான நாணம் கலந்த பாவனை அவள் முகம் எல்லாம்..பரவி உலா வர "
"வர்ஷா.. ப்ரீத்.. உன்கிட்ட பேசணுமா.." முகத்துக்கு நேராக வீடியோ கால்.. வருவதை காட்டி ஆன் செய்து விட,.
" ஹாய்." கையை அசைத்து " நல்லா இருக்கீங்களா..? "
" ம்.. பவித்ரா.. எங்க..? "
" ஊர்ல இருக்கா.. வர்ஷா " - சந்தீப்
"ஒ.. ஆக்ஸிடன்ட் பத்தி பவி கிட்ட சொல்ல வேணாம். ப்ரீத்.. பவிக்கு ரொம்ப பிடிக்கும் என்ன.! வேதனைபடுவா. சொல்லாத." கெஞ்சும் குரலில் கேட்டாள்.
" சரி.. கல்யாணம் நடந்துச்சு போல.? வர்ஷா.. பேசுவது புரியாமல் விழிக்கவும். மொழி பிரச்சனை. சைகை மொழியில் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதட்டை பிதுக்கி கேட்டான்...ப்ரீத்..
"சாரி.. " எனக்கும் தெரியாது.. அவனை போலவே உதட்டை பித்துக்கினால் வர்ஷா..
" உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கிப்ட் வச்சி இருக்கேன்.."
'கல்யாணமே நடந்து ஒரு நிமிஷம் தான் ஆகுது. அதுக்குள்ள கிப்டா.. புரியாமல் அவனையே கேள்வியாக நோக்க.. '
" அந்த கிஃப்ட் இங்க தான் வைச்சேன் பையை துளாவினான்.. விழுந்துடுச்சு போல ! இருங்க.. இந்த மாதிரி ஒரு பரிசு யாருமே கொடுத்திருக்க முடியாது . பயங்கரமான கிஃப்ட்.. கேமராவை திருப்பி காட்டிட..? கண்ட காட்சி..??
வேகமாக வந்த லாரி.. ஒருவர் மீது மோதிட..! தூக்கி எரியப்பட்டு, விழுந்து உராய்ந்து.. தூரம் போய் தெறித்து விழுவது தெரிய..?? மெல்ல கேமரா நகர்ந்து கொண்டே ..ஆக்ஸிடன்ட் ஆனவர் அருகில் போவது தெரிய..?? அங்கே முகம் எல்லாம் ரத்தத்தில் முங்கி.. வடிந்தோட.. சுருண்டு வலியில் துடிக்கும் அலறல் மட்டும் காதில் விழ..!!
" வலிக்குது... காப்பாத்துங்க.. கடவுளே.. யாராவது காப்பாத்துங்க...என துடித்து குரல் கொடுத்து, அழுது புலம்பியவன்.. முகம் படிந்த உறைந்த ரத்தத்தின் மீது கண்ணீர் வழிந்தது. செந்நீராக... இதை எல்லாம் நேரலையாக பார்த்துக் கொண்டு இருந்தவள்.. இதழில் புன்முறுவல் .. நீதி கிடைத்த நிம்மதியில் இதழ் விரிந்து புன்னகை மலர.. நீ... பேசு என கண் காட்டினான் சந்தீப்..
குத்தவைத்து பக்கம் அமர்த்த ப்ரீத்.. கலாய்க்கும் பாவனையோடு
"என்னடா... அழுவுற..?? நோ.. நோ.. ஜி.
ஆம்பளைங்களுக்கு வலிக்க கூடாது. நீங்க ரொம்ப ஹைபிரிட் ஆம்பள..!உங்களுக்கெல்லாம் வலிக்காது.!தான..!!" ஷூ காலால் அவன் முகத்தை திருப்பி.. வர்ஷாவிற்கு முகம் தெரியும்படி திருப்பி காட்டினான்..
"பேசு.. வர்ஷா..டார்லிங்..டைம் அவுட் ஆகிட போறான்.." - ப்ரீத்.
மெய் நிலை அடைந்து.. மூச்சை இழுத்து விட்டு.. படபடப்பை குறைத்து.. பேச தொடங்கினால் வர்ஷா..
"அகம்பாவம் பிடிச்ச ஆம்பளைங்களுக்கு, பொண்ணுன்னா வெறும் சத மட்டும்தான்.. இல்லை..?
இங்க மனசு மட்டுமே காதலிக்கிற மனுஷங்களும் இருக்காங்க.. என் புருஷன் மாதிரி.. "
" கலங்கப்பட்டவ அசிங்கம்னா..!! கலங்கப்படுத்துற நீங்களும் தான..டா.. அசிங்கம்..?? ஒரு பொண்ணு விருப்பம் இல்லாம அவளை தொடர எல்லாருமே அழிஞ்சி தான் போவாங்க..
" உன் அழிவு காலம் ஆரம்பிச்சாச்சு.. வலியில தவிக்கிற.? வாழனும்னு துடிக்கிற..? உயிர் போயிடுச்சா..??போகப் போகுதா.?? உயிர் கொஞ்ச கொஞ்சமா போறது கண்ணுக்கு தெரியுதா.??
எமன் கண்ணுக்குத் தெரியுறானா..?? "கர்வம் உதட்டில் இழையோட. ஆழ்ந்து அவனை பார்த்து சொன்னால்..
"நான் தாண்ட உன் எமன்." கத்தி சொல்லிவிட்டு..குற்ற உணர்வில்.. முகத்தை திருப்பிட, கண்ணீர் சிதறி விழுந்தது..
அவள் கதறுவது தாங்காமல்.. " நீ ஊருக்கு கிளம்பு டா " என்று விட்டு.. கால் கட் செய்து, அவள் அருகில் அமர்ந்து.. " ஏன்.. அழற..? உனக்கு அநியாயம் நடந்தா.? விட்டுட்டுவேனா நான்.?? கொன்னுடுவேன்.. " பல்லை கடித்து கோபத்தை மட்டு படுத்த முயன்றான்..
கண்ணால் அருகில் வர.. கேட்க..? அவனோ.. குனிந்து கிட்டே வர..! எக்கி நெற்றியில் முத்தமிட்டு..! " வாழ்க்கையில் நிறைய எனக்கு அநியாயம் நடந்து இருக்கு.. அது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு பொறுத்துக்கிட்டு வாழ மட்டும் தான் நான்.. வார்த்தை வராது கதறியவள்..
"மொத மொத எனக்கான நியாயமும்.. என்ன காயப்படுத்தினவங்களுக்கு
தண்டனை கிடைச்சிருக்கு..!! நி.. நிம்மதியா இருக்கு.. சந்தீப்.. " மனநிறைவோடு சந்தோஷமாக கண்ணீர் வடிந்து ஓடியது.. கண்களில் இருந்து கண்ணம் தொட்டு..!!
" இந்த மாதிரி நிலைமைல ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?? தியாகி ஆகணுமா? " வார்த்தையில் உறுத்தல் ஏறி.. வலி சுமத்த படி கேட்டால்..
" உன் தயக்கம் போகணும், உரிமை வரணும்னு தான்!! புருஷனை விட உரிமையான உறவு எங்க இருக்கு?? வர்ஷா.." புன்னகை ததும்பிட கூறியவனை.. விழிகளில் அள்ளிக் கொண்டு நெஞ்சில் நிரப்பினால் காதல் காரிகை.. அன்பானவர்களின் துணையே போதும்..அவர்களோடு வாழும் நிமிடம் சொர்க்கமாகும்!!
எல்லையில்லா
காதலை
தர வள்ளல்
உள்ள போது!!
எல்லா காயங்களும்
ஆறிடும்..!!
அன்பன் அவன்
மெய் காதலாலே!!





உமா கார்த்திக்