எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 27

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
கடந்த கால கதைகள் முடிந்து நிகழ்காலத்தில் இதோ..
காதலோடு கட்டி அணைத்தவளை!! "விலகி போ"என்று சினம் கொண்ட சிங்கம் போல கர்ஜித்தவனை? மதிக்காது நையாண்டியோடு பார்த்தவள்.

பிரதி -"என்ன அடிச்சிடுவீங்களா? அடிங்க பாப்போம்??" வீண் வீம்புக்கு எதிர்த்து நிற்கும் சண்டைக்காரியோ!! அவனிடம் மேலும் முன்னேறி.. முட்டி அவன் நெஞ்சில் முகம் புதைக்க.. இழுத்து விட்டான் பொளிரென கன்னத்தில் தீ தெறிக்கும் படி..

இதை எதிர்பாக்காதவளோ!! நிலைகுலைந்து கீழே விழுந்தால். நிகழ்வது நிஜமா?? என்ற கேள்வியோடு,
வலிக்கிறதே நிஜம் தானோ!! கிறுகிறுவென தலைகள் சுத்த, காதுக்குள் தேனீ பூச்சிகள் ரிங்காரம் வேறு.. கோயிங்.. ங்.. ங்.. என்று நிற்காமல் கேட்டது. கோரஸ் பாடல் போல..!!

அடி வயிற்றில் இருந்து பொங்கி வந்த கங்கை.. கண்களில் நிரந்தரமாக குடியேறி!! கன்னம் தொட்டு கதை பேசியது.. இந்தக் காதல் தேவைதானே உனக்கு?? கண்டவனும் கை வரிசை காட்டிவிட்டு போகிறானே?? முதல் முறையாக வாங்கிய அடியில்..
ரோஷம் பெருக.. அழுது கொண்டே அன்னத்திற்கு தடை விதித்து விட்டாள்!!


பிரதியிடம் கெஞ்சி கொஞ்சிப் போராடி தோற்றவளோ!! இது ஆகாது சாமி என்று முடிவெடுத்து.. வசைப்பாடி வரவழைத்தால். அறைவிட்டு ஆபீஸ் போன ஆசாமியை..!!

வந்தவனும் நேராக அடுக்களை சென்று குண்டான் சட்டிகளோடு சோத்தை சுமந்து கொண்டு ஓடினான்.. காதல் அல்லாதவளிடம்!! பசி தாங்க மாட்டாளே?? அந்த பைத்தியக்காரி என்று.. உடை கூட மாற்றமல் அறக்க பறக்க உள்ளே வந்தவனின் தோற்றமும் வினோதமானது !!


ஒரு கையில் இரண்டு ஹாட் பாக்ஸ் ஐ பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் தொட்டுக்கை கிண்ணத்தோடு!! சுண்டு விரலில் தட்டை தொங்கவிட்டபடி! கழுத்தில் வாட்டர் பாட்டிலை கவ்வி கொண்டு, கரகாட்டம் ஆடுவதைப் போல் புவியீர்ப்பு விசையோடு போராடி அவளுக்காக சோறு கொண்டு வருபவனை, கண்கொட்டாமல் பார்த்து ரசித்த கள்ளியானவள்..!! பார்வையிலே திமிங்கலம் வைத்து விழுங்கினால் காதல் பசியின் இரையாக ஆடவனை!!

தட்டில் சோத்தை கொட்டி அவள் முகம் நோக்கி நீட்ட வேண்டாம் என்று
முகத்தை சுளித்தவள் "ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன்" என்று உதட்டில் முணுமுனுக்க..

"என்ன?? என்ன?? திரும்ப சொல்லு." அதட்டலாக கோபகாரன் மிரட்டல் விட.

பயந்தவளோ!!" ஒன்னும் இல்லையே.. " பல் வரிசை எல்லாம் காட்டி ஈஈஈ என்று இளித்தால். சமாளிக்க வழி தெரியாமல்.வெடுக்கென தட்டை இழுத்தவள். பசி கொண்ட ஆவேசத்தில் வேகமாக சாதத்தை பிசைந்து உண்பதற்காக வாய் அருகே கொண்டு செல்ல .. அவனும் சாப்பிட்டு இருக்க மாட்டான் என்ற பரிதவிப்பில் "உங்களுக்கு" என்று அவளை மீறி பிடிச்சோற்றை வலது கை அவன் வாய் சேர்க்க துடிக்க!!

அவனோ முறைப்பில் நிறுத்தினான், முந்தி கொண்டு போன அன்பை ஊட்ட வந்த கைகளை . அவள் கையில் உள்ள தட்டை தட்டி பறித்துக் கொண்டு சாப்பிட தொடங்கினான்..

பிள்ளையார் கையில் இருக்கும் பிடி கொழுக்கட்டை போல!! கையில் ஒரு உருண்டை அளவு சோறு மட்டுமே?? எங்கனம் அது பசி தீர்க்கும்?? உதட்டைப் பிதுக்கியவள் சிணுங்கியபடி " பசிக்குது" பட்டினியால் சிறு குரலாய் வார்த்தை வர

" போய் தட்டு எடுத்துட்டு வந்து சாப்பிடு" என்றதும்.

" என்னால முடியாது.. இப்படியே சாப்பிடுறனே " என்று சாதம் இருந்த ஹார்ட் பாக்ஸ் அப்படியே எடுக்க..

கோபமாக கையை தட்டி விட்டு..
" பிச்சைக்காரி.. வா இதுலே சேர்த்து சாப்பிடலாம்." அவன் தட்டில் உணவை பரப்பி, தட்டின் நடுவே கோடு போட்டு, பாத்தி கட்டி, பங்கை பிரித்து வைத்தான் பாசக்காரன். அவளோ.. சாதத்தில் கையை வைத்து அலசி விரலால் அலைந்தபடி அவனையே பார்க்க..

"வேடிக்கை பார்க்காம சாப்பிடு"அதட்டி குரல் தர வேகமாக உணவை விழுங்கினாள். உணவை உண்ண சொல்வது வேறு கூடவே இருந்து சாப்பிட வைய்ப்பது!! ஏன்?? காதலோ?? அன்போ இல்லாமல் கண்ணில் எனக்கான தவிப்பு வராது. சந்தோசமிகுதியில் புன்னகை வந்தது. ரசிப்பதை நிறுத்தமல் தொடர்த்தால்.. பிரதி!!

அவனாகவே எல்லா உணவையும் பரிமாறி, எல்லாத்தையும் சாப்பிட வைத்து. பரிவாய் கை கழுவ சொல்லி, கை சட்டையால் வாயை துடைக்க. விழிகள் அவனையே மொய்க்க, காதலின் அடுத்த நிலைக்கு இதயம் தானாய் நகர்வது புரிந்தது. காலை அடிபட்டதும் இவன் வேண்டாம் என்று அழுதது நினைத்து சிரிக்க தோன்றியது.


' மெய்யன்பு காட்டி உருக வைத்து விட்டானே கோபம் கொண்ட மனதை!! முகத்திற்கு எத்தனை கோப முகமூடிகள் வேண்டுமானாலும் அணியலாம் ஆனால் இதயத்திற்கு!!


என்னை காதலிப்பதாக உன் கண்களை சொன்ன பிறகு வாய்மொழியில் இனி நம்பிக்கை கொள்ள போவதில்லை என்று உறுதி எடுத்தவள். "என்னங்க.. தண்ணி வேணும் " என்று ஆடர் போட்டால் சேவகனுக்கு.


படுத்துக்கிட்டே வேலை வாங்குற பாரு.. என்று மனதிற்குள் கருவினாலும் பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து பருக தந்தான் ப்ரீத்..

குற்ற உணர்வோடு அவன் கைவிரலால் அவள் கண்ணத்தில் அடி அச்சு பதிந்ததை மெல்ல வருடியவன் ." சாரி பிரதி . நான் உனக்கு வேணாம்.. பாப்பா.." சோகமாக சொல் வர.. ஏன்? என்று பார்வையாலே கேட்டாள் பாவை.

"நான் மோசமானவன். இப்ப உனக்கு தெரியாது?? பழகுனா புரியும்.யார் மனசும் புரிஞ்சுக்க தெரியாது.
ஏடாகூடமாக வார்த்தையை விட்டுருவேன். என் கோபம் உனக்கு தெரியாது.தெரியவும் வேணாம்." ஆடவன் தன்னிலை விளக்கம் கொடுக்க.

"ஓவர் பில்டப் கொடுக்காதீங்க. அந்த அந்த அளவுக்கு நீங்க மோசமா
இல்லை. "

அறைஞ்சதுல என் கைரேகை மொத்தமும் உன் கன்னத்துல இருக்கு. அப்படி இருக்கும் போது எப்படி??" ஆச்சர்யமாக பார்த்தான்.. நம்பிக்கையோடு அவனையே ஏறிட்டவலை.!!

"சும்மா கெட்டவன் மாதிரி நடிக்காதீங்க "

பல்லை கடித்தபடி கோபமாக" நான் கெட்டவன் தான் டி. ஒரு பொண்ணு வாழ்க்கை நான் கெடுக்க விரும்பல, கொஞ்ச நாள் இந்த நாடகத்தெல்லாம் நடத்திட்டு நீயும் என்னை புடிக்கலைன்னு தான் போக போற? "
சூடு பட்ட பூனையாய்.. காதல் கருவாடு எல்லாம் வேண்டாம்.என்று உறுதியாக இருந்தான் காதல் யோகி.

நான் நாடாககாரியவே இருந்துட்டு போறேன். யாருமே கிடைக்காம உங்கள விட்டா, உலகத்துல என்ன
ஏத்துக்க யாருமே இல்லன்னு ,
இந்த ஆணழகன காதலிக்கிறோம்னு நினைப்பா?? சின்ன வயசுல இருந்து நெறைய துரோகம் பார்த்தவ நான். போலியான முகங்கள் எத்தனை?? அத அத நம்பி ஏமாந்த கண்ணீர் எவ்வளவு?? மோசமான கோபமான குணத்தோட இருந்தாலும் என்ன யூஸ் பன்னவோ? ஏமாத்தவோ மாட்டிங்க. போலியான சிரிப்பு விட உண்மையான கோபம் எவ்வளவோ மேல்.

அவன் கண்ணும் மனமும் அவளில் முழ்கிட, பேச்சு..மூச்சு.. மறந்து போக!! செத்து விடுவாய்.. என்று நுரையீரல் உயிர் காற்றுக்காக போராட, வேக வேகமாக மூச்சுகளை விட்டான் .

'இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா!! நீ இயல்பில் எப்படியோ.. அப்படியே இரு. எனக்கு உண்மையாக இரு போதும்!! அவளையே வெறித்து யோசனையோடு பார்க்க??

" உங்க பார்வைக்கு என்ன பொருள் ?? "புருவம் உயர்த்தி சைட் அடிப்பவனை கேட்டிட?


"ஹான்.. ம்.. ஒன்னும் இல்லை.." கண்டுபிடிச்சிட்டாலே விக்கி வார்த்தை தடுமாற.. "நெருஞ்சிமுள்ள அள்ளி அணைச்சுக்கிட்டா குத்தும் வலி தர்றது அதோட இயல்பு. நாமதான் ஒதுங்கிக்கணும். என் மேல இருக்கது கிரஷ் பிரதி!! ஒரு ஆண் தரும் நம்பிக்கை.. தனக்கான பாதுகாப்பு புதுசா கிடைக்கும் போது அவங்க மேல நமக்கு ஒரு அன்பு வரும். அதுக்கு பேர் காதல் இல்லை.. " மூச்சு விடாமல் வசனம் பேசினான்.

"ஒ.. அப்டியா? டயர்டா இருக்கு. இப்ப அறுங்க ப்ரீத்.." மங்கை அவன் நெஞ்சில் சாய்ந்து இளைப்பாற.. வசனம் வரவில்லை. நாயகனுக்கு வெறும் காத்து தானுங்க வருது. ஐஸ் கட்டி ஆகிட்டான்.. அவளை காதலிக்காத ஆளு!!


பிரதி- " ஐ லவ் யூ" காதல் சொன்ன களைப்பில் கண்களை மூடினால் அவன் நெஞ்சம் எனும் மஞ்சம்தனில் உரிமையாக.

அதிர்ச்சியடைந்தவனும் தன்னிலை பெற்று .. 'இவள் காதலின் தரத்தை சோதனை செய்து பார்க்க முடிவெடுத்து விட்டான். சந்தேககாரனாக!!

" சொக்கப்பொன்னான காதல் கொண்ட இதயம். இவனது சோதனைகளால் சிதைந்து விடுமா?? இல்லை இவனையே அன்பால் ஜெயித்து விடுமா??"


அடுத்த நாள் காலையில் 5:00 மணிக்கு அலாரம் அடிக்க அதரிப்பதறி எழுந்தால் பிரதி.. அருகில் நின்ற கருப்பு உருவத்தை பார்த்து, பேய் என அரண்டு .. பயந்தில் மெத்தையிலிருந்து பின்னால் நகர்த்தால்..அச்சத்தில் வேர்த்து வழிய, ஒருக்கரம் தானாக நெஞ்சை பிடித்து கொள்ள.. இதயம் பட படப்பது காது வரை கேட்டது.. செல் போன் டார்ச்.. அவள் முகத்தில் பட, கண்கள் கூசிட, கைகள் கவசமாய் முகத்தை மறைத்தது..


"குட் மார்னிங்.. வா.. வா.. பிரஸ் பண்ணிட்டு வெளில வா.. வேலைய ஆரம்பிக்கலாம்."

"ஆஆ.. ஸ்.." கண் கசக்கி.. உறுத்து அவனை பார்த்து.. " ஏன் நைட் இப்படி வந்து எழுப்பி விடுறிங்க.. நட்ட நடு ராத்திரில என்ன வேலை.. இருக்கு.. காலைல பார்க்கலாம்."இழுத்து போர்த்தி தூங்க போனவளை..

"இது தான்.. காலை.. அதிகாலை.. வா" என்று கை பிடித்து.. இரக்கமே இல்லாமல் இழுக்க.. வலியால் சிணுங்கி அழுவதை போல் பாவனை செய்தால். நோ யூஸ்.. வாசலில் பிடித்து தள்ளியவன்.. போய் வாசல் தெளிச்சு கோலம் போடு..

" அப்படினா?? " ஹாஸ்டல் வாசியான இவளுக்கு..இதை பற்றி நோ ஐடியா !!

" பக்கெட்ல தண்ணி புடிச்சு வாசல்ல. தெளிக்கணும்.. ஏன் ஹாஸ்டல உங்க ரூம் சுத்தம் பண்ண எல்லாம் சொல்ல மாட்டாங்களா?? " சந்தேகமாக கேட்டான்.

" இல்லை.. அதுக்கு தனி தனியா ஆளுங்க இருப்பாங்க."

"ஒ.. இதெல்லாம்.. ஈஸி தான், சீக்கிரம் கத்துக்கலாம். என்று உள்ளே செல்ல.. மொத்த தண்ணீரையும் வாலியோடு சாய்த்து விட்டு, அந்த தண்ணீர் மேலேயே வீறு நடை போட்டு நடக்க வழுக்கியது .. விழுந்தால்..

'தாங்கிக் கொண்டான் .. கைகளில் வாங்கிக் கொண்டான். நைட்டி அணிந்து இருந்த நைய்ல் நதியை.. இரு கண்களும் தொட்டு மோதி பக்கென தீப்பொறிகள் பறந்து தெறிக்க.. புலராத காலை வேளையில்.. வீசும் வாடை காற்றின் குளிருக்கு.. அவன் நெஞ்சாங்குட்டில் காதல் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்தால்.. கன்னியவள் !!உணர்வுகளை தூண்டி, பார்வையாலே உயிர் வரை தீண்டி..!! எல்லைகள் எல்லாம் தாண்டி!! காதல் களத்தில் மோதி.. இடம் பெயர்ந்தது இருவரின் நேச நெஞ்சங்கள். '

" இப்படி ஊத்த கூடாது.. "

"என்ன சொன்னிங்க??"

" தண்ணிய இப்படி கவுத்து விட்டா.. கிழ விழ வேண்டியது தான்.. " அவள் கை பிடித்த வாலியில் மிச்சம் சொச்சம் இருந்த தீர்த்ததை, அவள் மீது கையால் மழை போல முகத்தில் தெளித்து விட, சி..ல்..லெ..ன சிலிர்த்து அடங்கியது பெண் தேகம்.

அவளை விட்டு விலகி குறுநகை கொண்டவன் " நீ போய் படில உக்காரு நானே எல்லாத்தையும் செஞ்சிர்றேன். " ஒரே இடத்தில் கொட்டி குவித்து குளம் கட்டிய நீரை எல்லாம் வாசல் முழுதும் பரப்பி அரை வட்டமாக அழகாக மாற்றியிருந்தான்.. " கோலம் போட்டுட்டு வா " கைலியை மடித்து கட்டி துடப்பத்தை சுழற்றி.. அய்யனார் அருவா போல தோளில் வைத்து நடந்து செல்வது அத்தனை கம்பீரமாய் இருந்தது.. பிடித்தவர்கள் என்ன செய்தாலும் பிடித்தம் வந்து விடுமோ!! தன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தால்.. குடும்பப்பாங்கான பையன் கிடைத்ததால். கோலத்தை கிறுக்கி தள்ளினால்.. இதய வடிவில் வரைந்து. உள்ளே.. டிசைன் ஆக.. ஐ லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. ப்ரீத் என்று முடித்து.. வரைந்த இதயத்தையும் தனது இதயத்தையும்.. காதலால் நிறைத்தால்!! காதலன் மேல் பித்து கொண்ட கனியவள். டீ போடு.. பிரதி என்ற சத்தம் கேட்டதும்.. டீயை கலக்கி தர, அது விஷயத்துக்கே டஃப் தந்தது. வாயிலிருந்து டீயை வாஷ்பேசனுக்கு தந்தவன்..

" எதுவுமே உனக்கு தெரியாதா?" டீ யின் கசப்பு நாக்கிலே நிற்க.. முகத்தை சுளித்தான். ப்ரீத்.

முகம் சிறுத்து போய் சுருங்கியது அவளுக்கு " சாரி.. தெரியாது. ரொம்ப தத்தியா இருக்கனோ?? "
தேவையில்லாமல் மனம் பவித்ராவோடு தன்னை ஒப்பிட்டு பார்த்தது. ஒன்றும் தெரியாத தன்னை தாழ்வாக எண்ணினாள்.

" வா.. கத்து தரேன்.." கை பிடித்துக் கட்டிய மனைவி போல ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து.. கிச்சன் மேடையில் பிரதி அமர்ந்து இருக்க. நின்றுபடியே தேனீரையும்.. பிஸ்கட் போல, துணைக்கு அவளையும் சேர்த்து பருக்கினான் கண்களால்..!! 'காதலனே குருவாகி கற்றுத் தரும் போது கசக்குமா என்ன!!'

" எல்லா வேலையும் உங்களுக்கு எப்படி தெரியும் ??" கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்டாள்..

" கல்யாண மண்டபத்துக்கு வேலைக்கு போவோம் பிரதி.. அதனால எல்லாமே தெரியும். "

" உங்க அப்பா.. அம்மா..??" கேள்வியாக அவனைப் பார்க்க.

" சோக கதைகள் எல்லாம் வேண்டாமே..! அம்மா அப்பா பத்தி நினைவுல கூட இல்லை.. அத்தை தான் எல்லாமே.!! " கண்கள் லேசாய் கலங்க.. இமைகளை மூடி விழாமல் அடக்கினான்.. " யாரையுமே சார்ந்து வாழ கூடாது.. எல்லாரும் எல்லா நேரமும் கூட இருக்க மாட்டாங்க.. நம்ம தேவைகளை, வேலைகளை பார்க்க நமக்கு தெரியணும்.

அவன் கூறியதை தாரக மந்திரமாக ஏற்றவள் " அடுத்து என்ன பண்ணனும் " ஆர்வக்கோளாறில் கேட்டால்..

அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியல் போட !! காதில் கேட்டதற்கே!! சோர்ந்து போய் மயங்கி விட்டாள்.. " இவ்வ்ளோ.. வேலை பார்த்தா..?? எங்க இருந்து லவ்... என்று இழுத்து.. சொல்லாமல் நிறுத்தினால் வார்த்தையை.

" ஒரு பொண்ணுக்கு குடும்பம் நடத்த தெரியனும் பிரதி.. ஃபுல் டைம் லவ்வர்ஸ்ஸா யாராலயும் இருக்க முடியாது.. அது சீரியல்,சினிமாவுக்கு மட்டும்தான் செட் ஆகும்..நிஜம் இது தான்.. வீட்டு வேலை செய்றது சொல்லல!! ஆளுமையோடு பொறுப்பா அரவணைச்சு குடும்பம் நடத்த எல்லாமே தெரிஞ்சவங்களால மட்டும் தான் முடியும்.. " அவன் அத்தையின் முகம் கண்முன் வந்து போனது.

"இதை சொல்லியே.. எங்கள வேலை வாங்குறது.. " கைகட்டி பார்வையால் துளைத்தால்..மனமோ.. ஏ மோசக்கார..? என்று திட்டி மொழிய.

சிரித்தவன்.. " பிடிச்சவங்க மேல காட்டும் அன்பு,அக்கறை தான் காதல். அதை செயல் மூலமா காட்ட சொன்னேன்.. அக்கறையோட என்ன கவனிச்சுக்கிற பொறுப்பு உனக்கு செய்ய விருப்பம் இல்லனா?? செய்யாத. வெறும் காதல் வார்த்தைகள் மனசு தான் நிறைக்கும். வயித்த நிறைக்காது.?? பீ.. பிராக்டிகல்.. பிரதி."

பவித்ரா -" யாரு... கோலம் போட்டது.? "

"பிரதி தான் பவி.. ஏன்? " புரியாமல் கேட்கவும்.. கையோடு இழுத்து சென்று காட்டினால்." என்ன இது மாமா?" கடுப்பானால் பவி..

" கோலம்.. அவளுக்கு எதுவும் தெரியலை. நீ கொஞ்சம் எல்லாம் எப்டி பன்னனும் னு கத்து தாடி.. "பார்வயால் கெஞ்சி கூத்தாடினான்.

" அப்றம்..? என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது. ஹோம் சயின்ஸ் டீச்சர் மாதிரி தெரியுறனா??" முறைத்து வைத்தாள்.. அவன் கண்களை கோலத்தில் பதித்து .ரசித்து கொண்டு இருக்கவும், மேலும் ஏறியது பொறாமை அனல். " போதும் ரசிச்சது. இது எல்லாம் தனியா எழுதி தர சொல்லு. "

"பொறாமை" தோளில் கை கை போட்டு ஏளனமாய் சிரித்தான்.

" எந்த ஆமையும் இல்லை." கையை தட்டிவிட்டு உள்ளே சென்றால்.பவித்ரா. அவள் போனதும். போனை எடுத்து கேமராவில் பதிய வைத்தான் காதல் கோலத்தை.!!

குளித்து முடித்து வந்து சுமதி அத்தை படத்திருக்கு பூ வைத்து விளக்கு ஏற்றுவிட்டு கண்களை மூடி வேண்டிக் கொண்டால். பிரதி.

" என்ன..? பன்ற பிரதி.. வேண்டுதல்.லிஸ்ட் பெருசா இருக்கும் போல!! கிண்டல் தொணியில் காதலன் கேட்கவும்.

கண்ணை திறக்கவும். இமையில் மூடி வைத்த கண்ணீர் வழிந்தது. " என்ன டார்ச்சர் பன்னி.. நீங்க வேணாம் னு ஒட வைக்க தான்.. இதெல்லாம் செய்ய சொல்லுறீங்கனு புரியுது. ஆனா ?? எதை நம்பி நீங்க சொன்னத நான் செய்ய ?? ஒரு கணவனுக்கு மனைவி செய்யுற மாதிரி குடும்பம், நிர்வாகம், பொறுப்பு, பராமரிப்பு, பணி விடை எல்லாம் நான் செய்ய தயார். ஆனா !! உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு ?? உங்க மனசு மாறிட்டா ??. என்ன ஏமாத்... என்று முடிக்கும் முன்னே !! விளக்கின் தீபத்தின் மீது கை வைத்து அக்னி சாட்சியாக சொன்னான்.

" என்கிட்ட இருக்க எல்லா கெட்ட குணத்தையும் உன்கிட்ட காட்டுறேன்.. இது எல்லாம் தெரிஞ்சும் . உன் காதல் தாக்கு பிடிச்சு நின்னுட்டா ?? நீயா என்ன வெறுத்து விலகாத வரை, யாருக்கும் என் மனசுலயோ?? வாழ்கையிலயோ ?? இடம் கிடையாது.. ஒருவேளை நீயா வேண்டாம் னு போனா.. உரிமையோ ? உறவோ? சொல்லி என்னைக்கும் என் முன்னால வர கூடாது. "

" தாக்கு பிடிச்சு நின்னு காட்டிட்டா ?? திமிரோடு கேட்டால் பிரதி.

" இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான்!!" மேலே சொல்ல முடியாமல் தடுமாற.

" நான்.. தான்..!! என்ன.. சொல்லுங்க !!"

" மிஸ்ஸஸ்.. ப்ரீத் குமார்.. " என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் . சூடு பட்ட தன் கையை உதறிவிட்டு வேலைக்கு சென்றான்..

வேண்டாம் என்று அலட்சியமாய் விலகுபவனை.. காதல் செய்வதால்!! கிடைக்கப்போவது வெகுமானமா? இல்லை அவமானமா?

❤️நன்றிகள்🙏 கோடி ❤️

உமா கார்த்திக்



❤️நன்றிகள்🙏 கோடி ❤️
உமா கார்த்திக்

 
Status
Not open for further replies.
Top