எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 29

Status
Not open for further replies.

uma Karthik

Moderator
❤️ஏக்கம் ❤️

வேகமாக ஓடி வந்தவன்..அவள் அறைக்குள் நுழைய,காலோடு உடலும் பயத்தில் நடுங்கியது.. நிசப்தமான அந்த அறையில்.. எங்கோ... தண்ணீர்.. ஆர்ப்பரிக்கும் ஓசை.. கேட்க..!! கால்கள் பின்னியது.. முன்னே செல்ல விடாமல்..முரண்டியது.. நெஞ்சமோ தடுத்து.. தவித்து.. துடிப்புகள்.. அதிர்ந்தது..நெற்றி பொட்டில்.. வியர்வையோடு.. விழியும்.. சேர்த்தே கசிய.. அவசரமாய் கடவுளிடம் வேண்டினான்.. அவள் நலமுடன் இருக்க வேண்டி.. கதவை அடைந்தவன்.. அச்சத்தின் அழுத்தத்தில்..தயங்கி.. கொண்டு உள்ளே நுழய, " உன் மீது நான் கொண்ட காதல், என் உயிரே தீர்த்தாலும் தீரதடா " என்பதை அழுதமாய் பறைசாற்றியது.. அவன் கண்ட காட்சி..!! உணர்வற்று சரிந்து கிடந்தவள்.. கூந்தல், நதியென வளைந்து..தரையில் இழையோடி..பரவி தண்ணீர் ஊடுருவி... ஓடி..வழிய !!

உடல் விறைத்து வெளிறி.. தரையில் கிடந்த பெண்ணின் அருகில் செல்ல துணிவு.. இல்லாமல்.. நடுக்கம் எழ, அதிர்ச்சியில் சுவாசம் வராமல்.. நின்றான்..

' நகரக்கூடாது உன் காதல் எவ்வளவு நேரம் தீராம இருக்கும்.. னு..
பாக்குறேன்?? '

ஏளனமாய் அவன் சொன்ன வார்த்தைகள்.. காதில் கேட்டுக்கொண்டே இருக்க.. காதுகளையும் இரு கை கொண்டு மூடினான்.. பயனில்லை!!

உள்.. மனதின் அந்த அரக்க குரல் நிற்கவே இல்லை.. குற்ற உணர்ச்சி.. மேற்கொண்டு செயல்பட விடாமல் முட்டுக்கட்டை போட, அவள் கிடக்கும் நிலை பார்த்து, மனம் விரிந்த மாயை விலக !!

அவளிடம் ஓடி மண்டியிட்டான்.. கைகள் அவளை தொட பயந்து கூசி நடுங்கியது ,. தண்ணீரை நிறுத்தியவன்.. கைகளில் அள்ளிக் கொண்டான் காதல் தேவதையை !! அவன் கண்ணீர் முந்திக் கொண்டு வந்து, அவள் கன்னம் தொட்டு விழுந்து!! மன்னிப்பு வேண்டியது.. வாய் குழற " பி.. பிர.. " முழுதாய் அவள் பெயரை சொல்ல கூட பதட்டம்..!! பயம்!!விடாமல் நெஞ்சில் வியாபிக்க, வார்த்தை வர விடாமல் அழுத்தி நிறுத்தியது.

கை சட்டையில் கண்களை துடைத்தவன்.. " என்ன பாரு.. மா.. என்ன விட்டுட்டாத மா.. எனக்கு நீ வேணும்.. ஆ... ஆ... பிரதி..இ..இ .. " உள்ளம் தாங்காது உடைந்தவன்..கதறிட.


அலறியவன்.. குரல் உயிர் அடி ஆழம் வரை சென்று தட்டி இழுக்க.. ஒற்றை வாக்கியத்தில் மரண தண்டனை கொடுத்து..மௌனமானால்
" என் காதல் கரையாது ப்ரீத்." தன்னை மறந்த நிலையிலும்.. அவன் சந்தேகத்துக்கு பதில் தந்து மூச்சை ஆனால்.. காதலால் காயம் பட்டவள்..

அவள் சொன்ன வார்த்தையின் வீரியத்தில்.. மரண வலி உணர்ந்தவன்..வெட்கி போக,
அவள் வலிகளை வார்த்தையாக்கிக் கொன்று விட்டால்..இந்த ஆணின் கர்வத்தை!!

பொங்கி வந்த கண்ணீரை.. அபிஷேகமாய் அவள் மீது ஊற்றி!! தன் மீதே தாளாத சுய வெறுப்பு கொண்டு, தன்னையே திட்டி நிந்தித்தவன்.. ஆற்றாமையோடு அவளை அணைத்து ஆறுதல் தேடினான்..

துலாபாரம் நிறுத்தி காதலை எடை போடுவது போல்.. அவளின் நேசம் வானளவு உயர்த்து..!! அவனை வியந்து அண்ணார்ந்து பார்க்க வைக்க.!! அவனின் அற்பமான வார்த்தையும், அன்பை மதிக்காத குணமும், அசிங்கம் போல அருவருப்பாய்..கீழே கிடப்பதை போல் உணர்ந்தான்.. தன் மீது ஆற்றா வெறுப்பு மண்டியது..

மெத்தையில் அவளை கிடத்தி.. ஈர உடை மாற்ற முயன்றான்.. பின்பு தயங்கி.. ஆவேசமாக பவித்ராவை அழைக்க.. வந்துவிட்டேன் என்று பரிதாபமாய் தலையை கொடுத்தது ஆட்டுக்குட்டி.. மொத்த கோபத்தையும் மடைமாற்றி அவள் மீது திருப்பி விட்டான்.. மாமன்.

சினம் கொண்டு சிவந்தவனோ.. வக்கீல் போல் கேள்வி கேட்க ஆரம்பித்தான்
" ஏண்டி ஒருத்தி மயக்கம் போட்டு தண்ணியில சாக கிடக்குறா?? நீ என்ன புடு.. ங்.. முடிக்காமல் நிறுத்த.. முணுக்கென கண்ணீர் கோடிட்டது.. பவித்ரா விழியில்.. 'அடுத்து இவள காய படுத்து.. ' என்று மனச்சாட்சி கேள்வி எழுப்பிட .. நிதானத்திற்க்கு வந்தவன்..அவளை பார்க்க..ஆனால் முறைப்பதை போல அவளுக்கு தெரிய!!

பார்வையின் தாக்குதல் நீட்டிக்க.. பயந்தவள் " சாரி.. டா.. என் மேல தான்.. தப்பு.. நீ.. வெளிய போ.. நா.. டிரஸ் மாத்திட்டு உன்ன கூப்பிடுறேன்.. " என்றதும் அவன் வெளியேற.. உடல் எங்கும் துடைத்து விட்டு.. நைட்டி.. மாற்றி.. ஈரம் கோர்த்த தலையை.. துண்டால் துவட்டி.. தலையை காய வைக்க.. குற்றுவுணர்ச்சியில் கண்கள் ததும்பியது.. நல்லவளுக்கு..
எங்கே பொறாமையில் இப்படி செய்து விட்டேன் என்று தவறாக நினைத்து விடுவானோ என்று.. பதப்பதைத்தது.. பேதை உள்ளம்.

" சாரி டி.. இப்படி பிரதிய பார்த்த பதட்டத்துல கத்திட்டேன்.." திரும்பி முதுகு காட்டி நிற்கவும்.. அவள் விம்மல் கேட்டு அழுவதை உணர்ந்தவன் " பவி " என்று அழைத்து.. பதில் வராமல் மௌனமே வர,தோள் தொட்டு இழுக்க.. அவன் மார் முட்டி நின்றாள்.. பவித்ரா!! கண்ணீர் சொட்டு நீர் விட, கன்னம் ஏந்தியவன்.. " பவி.. சாரி டி.. அழாத அம்மு..திட்டுனதுக்கு வேணா அறைஞ்சுடு டி..அழுறத நிறுத்து டி.. ப்ளீஸ்.. " உடைத்த குரலில் கேட்க..

"என்ன தப்பா.. யோசிட்டுயோன்னு தான்.. " கண்களை அவன் சட்டை மேலே நெஞ்சில் முகம் புரட்டி துடைத்து.. அழுது சிவந்த கண் கொண்டு அவனை ஏறிட்டாள்.. " நான் தூங்க வச்சிட்டு, சமையல் பண்ண போனேன்.. மாமா.. எப்படி?? இவ்வ்ளோ ஃபீவர் இருக்கப்ப ஜில் தண்ணில? ஷவர்ல போய்? ஏன் இவ குளிக்கனும்.??ஒன்னுமே புரியலை.!! தெரியாம கை பட்டு ஷவர் ஆன் ஆனா கூட தண்ணில எப்டிடா? மயக்கி இருக்க முடியும். ??" என்றதுமே.. அச்சம் ஏறி, முகம் இறுகி கண்கள் நடுங்கிட பயத்தில் ப்ரீத்.. திருட்டு முழி முழிக்கவும்..!! அவள் மனமோ 'இவன்... தான்.. இவனே தான்..!! காலையில் இருமுறை அவள் வாந்தி எடுத்து சோர்ந்து கிடந்தது. மேலும் தண்ணீரில் கிடந்தும் மயக்கம் தெளியாமல் இருந்தது.. எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்து அபாண்டத்தை அடுக்கினாள். நெஞ்சு அரிக்கும் நஞ்சாய் இருக்கும் சந்தேகத்தை கேட்டாள்.?? அவனிடமே!!



நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் உண்மையை சொல்றியா?? பிரதி கர்ப்பமா இருக்காளா?? கோபம் தெறித்தது.. சொல்லில்.

"ஏன்.. டி.. இப்படி கேட்குற?? மாமனா அசிங்கப்படுத்தாத டி."முறைத்தான் மானஸ்தன்.

" இவ்ளோ தண்ணி முகத்தில் பட்டு ஒருத்திக்கு மயக்கம் தெளியலன்னா?? ஒன்னு அவ போதைல இருக்கணும்..இல்லை??நல்லவன் மாதிரியே முகத்தை வச்சிருக்க, ஒரு பொறுக்கிய நம்பி பாத மாறி போயிருக்கனும்.. சொல்லு நீ அப்பா ஆகிட்டியா?? சீரியஸாக கேட்டால்..

"இவ வேற.. நடந்தது புரியாம.? " நொந்து கொண்டு..விளக்கினான்.
" கர்ப்பம் ஆக என்ன பண்ணனும்னு கூட எனக்கு தெரியாது டி.. குழந்தை பையன் கிட்ட இப்படி தகாத வார்த்தை பேசுற.. " என்று விபூதி அடிக்க..

மர்ம பார்வை.. பார்த்து.. " உனக்கா டா.. ஒன்னும் தெரியாது..??

"ம்ஹும்.. ம்.. " செருமி.. கண் முன் விரிந்த பவித்ரா உடன்.. நிகழ்த.. கண் கூசும் காட்சிகளை விரட்டினான்..

என்ன மாமா !! அந்த நாள் ஞாபகமா?? ம்ம்ம்.. உன்ன எல்லாம் நம்ப முடியாது நீ எல்லாம் .. புள்ள வரம் கொடுத்துட்டு தான்.. தாலி வரம் கொடுப்ப "

"ததாஸ்து .." தேவதை ஆம் என்று சொல்லி சென்றது.

" இல்லைடி" என்று சலித்தவன். ஒரளவு மட்டும் உண்மையை சொன்னான். விளையாட்டு வினையானது என்று.??

" சீ.. வாய மூடு .. ஒரு பொண்ணு கொஞ்சம் தூங்கி, ரெஸ்ட் எடுத்தா பொறாமை..உங்களுக்கு சேவகம் பண்ணிகிட்டே இருக்கணும்.. இல்லை. ஒரு பொண்ணு வதைச்சு தான் நம்பிக்கை வருமா ?? இது விளையாட்டா ?? ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் .. நீ என்ன காதலிச்சது அவளுக்கு தெரியும் !! ஏதாவது ஒரு நாள் உன்ன என்ன சேத்து வச்சு சந்தேகப்பட்டு பேசி இருக்காளா ? நம்பிக்கை தான் டா காதல்.. அவளுக்கு உன் மேல இருக்கு. உனக்கு உன் மேல இல்லை..பயம் உன் சாயம் வெளுத்து !! புடிக்கலன்னு சொல்லி விட்டு போயிடுவாளோ..னு.. பயம்.. !! "

"இந்த மட்டமான ஆராய்ச்சி எல்லாம் நிறுத்திட்டு .. அளவில்லாம அன்பையும் காதலையும் மட்டும் காட்டு, அது தான் உறவு தக்க வச்சிக்கிற மந்திரம்.. இருக்கிற காதல உணர்ந்து அனுபவி மாமா .. அப்டி..ஏதாவது கெட்டதா நடந்துருமோன்னு??கற்பனை பண்ணி ..ஒரு இன்செக்கியூர்... ஃபீல்.. நீயே கிரியேட் பன்னிகிற.
நம்பு மாமா ஏமாந்தாலும் பரவாயில்லை.. சேராத காதலும் அழகு தான்.!! அவங்க கூட வாழ்த்த நிமிஷம் எல்லாம் பொக்கிஷமா.. மனசுல சுமக்குற வலியும் ஒரு சுகமா தான் இருக்கு.. " வாய் வார்த்தையில் உண்மை உளறிவிட்டால்..பவித்ரா..

'உன் நினைவுகள் சுமக்கும் வரம் போதும் எனக்கு..!! உன் காதலை போல!! நீ தந்த வலிகளும்.. சுகமானது..!!'

என்ன சொன்ன..??

" நானும் தான் உன்ன வேணாம் னு சொன்னேன்.?? என் மேல உனக்கு வெறுப்பு வருமா ?? என் மேல இருந்த காதல் மாறிடுமா?? சேர்ந்து வாழ முடியாத ஏக்கம் மனசுல இருக்கும் தானே !! நான் உங்களை காதலிக்கலன்னு நினைச்சு.. விலகிடிங்க, நம்மளோடது ஒன் சைய்ட் லவ்.. என்ன மாதிரி ..உன்கிட்ட இது புடிக்கல அது புடிக்கலன்னு ஒதுங்காம.. உன் குணம் தெரிஞ்சும்.. உனக்காக உன்ன காதலிக்குறா..மாமா.. அன்பும் காதலும் மதிக்காம அலட்சியப்படுத்தறவங்க கிட்டயும் சந்தேகப்படவங்கள்ட்டயும் நிலைக்காது மாமா.. புரியும்னு நினைக்கிறேன் .. மரமண்டையில் தட்டிவிட்டு வெளியே சென்றால் பவித்ரா.

தன்னை விட தன் குணம் புரிதவளுக்கு ஏன் என் காதல் புரியாமல் போனது.. இழந்தது எண்ணி ஏங்கியது ஒரு மனம்.. பவித்ரா பைத்தியம் பிடித்து சுற்றிய நாட்கள் நினைத்து வெட்க புன்னகை பூத்தது.. மாமனுக்கு.. 'காதல் நினைவுகளை சுமக்கும் வலி கூட சுகமா தான் இருக்கு..!! பவி..!! சுகமான வலி டி நீ!!.. பிரதியின் இருமல் சத்தம் கேட்டு.. நிகழ் காலம் வந்தவன்..


சேதாரம் ஆக்கியவனே சேவையும் செய்தான்..கை கால் எல்லாம்.. சூடு பறக்க தேய்த்து விட்டவன்.. சுத்தி.. சுத்தி.. வந்தான்.. தெய்வ விக்கரகம்..கண்டு பக்தி, சிரத்தையுடன் வட்டமிட்டிட்டு, வரம் கேட்க்கும் பக்தனாய்!! அவள் கண் திறக்க வேண்டி யாசித்த படி.. சுற்றினான்.. தன் காதல் கோவிலை..!! வரம் அளிக்காமல் கண் திறவாது.. மயக்கத்தில் கிடந்தவளை..திட்டினான்.. காத்திருக்க முடியாத அவசரக்காரன்..


அவள் விழி மூடி கிடக்க.. இவனால் இமை கூட மூட முடியாது..அவள் சொன்ன வார்த்தை..?? குத்தி எடுத்தது மனதை!! பாவம் செய்த உணர்வு.. அவளின் குரல் கேட்க வேண்டும் என்று கலங்கி நின்றான்.. உறங்கும் அவள் அருகில் போனவன்.. அவள் கைகளை மென்மையாய் பற்றி.அவளிடமே மனதின் பாரங்களை இறக்கினான்.!!

" நீ ரொம்ப நல்லவ டி.. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா.. ஆரம்பத்துல என்ன பிடிக்கும்னு வந்தவங்க எல்லாம் என்ன பிடிக்கல னு சொல்லி விட்டுட்டு போயிடுவாங்க?? நீ என்ன பிடிக்கும் போதே விட்டு போய்ட்டு பாப்பா..நீயும் வெறுத்து போனா.. தாங்காது. உன்ன கஷ்ட படுத்திட்டுவேன்னு பயமா இருக்கு.. டி.. மனச உடைக்க மட்டும் தான் எனக்கு தெரியும்.. அழ வைப்பேன்.
கோவப்படுவேன்.. சந்தேகப்படுவேன்.. நான் உனக்கு வேணா..!! ஆசையா இருக்கு உன் கூடவே வச்சுக்கணும்.. ஆனா அதுக்கு எல்லாம் எனக்கு தகுதி இல்லை..என்னை மன்னிச்சுடு. ஏதோ பாவம் பண்ண பிறவி நான்.. அனாதையா சாகணும்னு விதி வாங்கி வந்து இருக்கேன்.. நீயும் போய்ட்டா?? யாரும் இல்லை டி.. உனக்கு எதுவும் நான் செய்யல?? ஏன்!! இவ்ளோ பாசம் காட்டுற?? உறுத்தலா இருக்கு..உன் காதலை சந்தேக பட்டு உன்ன கொடுமை படுத்துறன்.. ஏன் என்ன விட்டு போக மாட்டிங்குற?? நீ எனக்கு வேணும்.. ஆனா நான் உனக்கு வேணா.. நீ எங்கயோ.. நல்லா இரு..என்ன விட்டு விலகி போக வைக்கணும்னு.. ஒரு பக்கம் நினைச்சாலும்.. இந்த சுயநலமான மனசு..உன் மடியில ஒடுங்கி உன்னோட கதகதப்புல காலம் முழுக்க கிடக்க ஏங்குது.. யார் கிட்டயும் எதையும் எதிர் பார்தத்து இல்ல.. டி.. உன்கிட்ட என்ன என்னமோ.. எதிர் பார்க்குது..மனசு!! பிறவி குணம் மாறாது.. நான் ஒரு ராசி இல்லாதவன் பிரதி.. என் அத்தை கூட என்னால தான் இறந்து போனாங்க.. என் காதல் தோல்வி ஏத்துக்க முடியாம கோழை தனமா ஓடி போய்ட்டேன்.. என்ன பத்தி மட்டுமே சுயநலமா யோசிச்சு.. நான் வேணாம் உனக்கு.. என்ன உண்மையா ஒருத்தி காதலிச்சாகிற சந்தோசமா எனக்கு போதும்.. உன் காதலுக்கு தகுதியே இல்லாதவன்.. இப்படியே விலகி போய்டு பிரதி.. நீயும் என்ன வெறுத்து ஒதுக்கிட்ட சத்தியமா என்னால தாங்க முடியாது.." அவள் கைகளுக்கு காணிக்கையாய் கண்ணீரை சமர்பித்தான்..

உறங்குகிறாள் என்று தைரியமாக ஆடவன் உளற.. ஒவ்வொரு வார்த்தையும் அவள் உணர்ந்து உள்வாங்கி கொண்டு இருப்பதை அவன் உணரவில்லை?? அவள் உறங்கவில்லை!!

பவித்ரா வருவது அறிந்து.. விலகி கண்களை துடைத்து கொண்டான். ப்ரீத்.

வந்தவள் மெல்ல பிரதியை எழுப்பி அமர வைத்து.. மருந்து புகட்டி.. இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியேற.

" நான் உங்க கிட்ட பேசணும்.. ப்ரீத்."

" என்ன பேசணும் பிரதி??

"நீங்க சொல்றது தான் சரி.. இந்த காதலே எனக்கு வேணாம் ப்ரீத். நல்லவேளை உங்களுக்கு என்மேல காதல் வரல!! நம்பிக்கை இல்லாதவர்களுக்கு காதல் எப்படி வரும்?? என் காதல் கரையுதா னு டெஸ்ட் பண்ணின்களே?? அந்த டெஸ்ட்ல நான் பாஸ் ஆயிட்டனா?? காதல் ஒரு அழகான உணர்வு அத உணர்ந்து பாக்க முடியுமே.. தவிர நிரூபிக்க முடியாது.. அப்படி நிரூபிச்சா தான்..!! உங்களுக்கு என் மேல காதல் வரும். னா..? அந்த காதலே எனக்கு தேவை கிடையாது. என்னால முடியல சாமி. நா போறேன்.. சுயமரியாதை விட்டுட்டு சோதனைக்கு பயன்படுத்தபடுற உயிரினமா.. என் காதலை ஆக்க விரும்பல, உங்க மேல உள்ள காதல் ல நிறைய முட்டாள்தனம் பண்ணிட்டேன்.. போதும்.. முடிச்சுக்கலாம்.

" நான் யார் காதலையும் டெஸ்ட் பண்ணல. நான் எது பண்ணாலும் தப்பா தான் முடியும் அது என் விதி.. சரியான முடிவு எடுத்திருக்க பிரதி.. நான் உனக்கு வேணாம்.. போ..

"காலைல கிளம்புறேன். "- பிரதி

"நானே வந்து விடுறேன்.-ப்ரீத்

" விட்டுட்டுவீங்களா ப்ரீத் ?? "

" ம்ம்ம்.. "

காலை துணிகள் எல்லாம் பேக் செய்து.. வைத்தவள்.. ப்ரீத்.. வெளியில் வர காத்து இருந்தால்.. பவி எவ்வளவு எடுத்து சொல்லியும்.. ஏற்கவில்லை..

" கோபம் போற வரை, உன் வீட்ல இரு.. ப்ளீஸ் டி.. இன்னொரு ஏமாற்றத்தையும் வலியையும் என் மாமா தாங்காது டி.. அவன் பண்ணது தப்பு தான்.. அதுக்கு கூட இருந்து சொல்லி திருத்தலாம்.. இல்லை.. " இன்னொரு வலி மாமன் அனுபவிக்க கூடாது.. கேட்காத இந்த செவிடி காதுக்கு சங்கு ஊதினால்.. பவி..

தீர்க்கமான முடிவு எடுத்தவள்.. " நான் போறேன்.. பவி. உன் மாமாவ பார்த்துக்கோ.. "கத்தரித்து முடித்து கொண்டாள் வார்த்தையை.

கண்கள் சிவக்க வீங்கி, வெளியே வந்தவன்.. அழுதான் என்று இரு அம்பகம் அடையாள படுத்த.. மௌனமாக.. வெளியே சென்றான். இரவெல்லாம் மனதை அடக்க போராடியவன்.. யாருக்குமே நான் வேணா..?? விரக்தியும் சோகமும் கண்கள் இழையோடிட.. கார் ஸ்டார்ட் செய்து.. ஹார்ன் மூலம் அழைப்பு விடுக்க.. பவியிடம் சொல்லி வந்தவள்.. பைகள் எல்லாம்.. தானே தனியாக கார் பின் சீட்டில் வைத்து.. முன் வந்து அமர.. ஒரு வார்த்தை மொழியாத.. அமைதி பயணம்.. ரயில்வே ஸ்டேஷன்.. முன் கார் நின்றதும்..

"ஒரு போட்டோ சேர்த்து எடுத்துக்கலாமா?? ஏக்கம் தத்தும்ப காதலி கேட்கவும் மனம் இறங்கி சம்மதித்தான்.. பொய்யாய் கூட புன்னகை வரவே இல்லை.. எந்திர மனிதன் போல உணர்ச்சி துடைத்து.. இருள் அண்டியது அவன் முகம் எல்லாம். வலிகளை காட்டாது மறைக்க.. போராடியும் தோற்றான்.. காதலை மறைக்க முடியாது..

நான் போகவா..?? பதில் எதிர் பார்த்து காத்திருந்தாள்.. சரி.. போகலாம் என்று கதவை திறக்க.. அவளை இழுத்து அணைத்தவன்.. விடாமல் தொடர,

" விடுங்க.. டைம் ஆச்சு.. நா போகணும்.. அஞ்சு நிமிசம் தான் இருக்கு.. "

" போ.. டி.. " வாய் மட்டும் மொழிய.. போக விடாமல் இடையை உடும்பாய் இறுகினான்.. மூச்சை விட முடியாது சிரமப்பட்டாள்.. பிரதி..

"விட்டா தான போக முடியும்.?? விடுங்க ப்ரீத்.." செயலில் முடியவே முடியாது என்று இறுக்கம் கூட்டி காட்டினான் காதலை..!!

" யோவ்.. லவ் ஆ.. என் மேலே?? " தாடை கொண்டு இரண்டு இடி.. தோள் மீது சம்மதமாக அ(இ)டிக்க!! "அவ்ளோதானா?? "

இன்னும் என்ன வேணும்.. அவ்வ்ளோ தான்.. ன்.. சாப்டியா??

" சாப்பிட போறேன்.. " சட்டை கலரோடு சேர்த்து இழுக்க.. முட்டி நின்றது.. இரு மோகம் கொண்ட தேகம்..

"வேணாம்.. இந்த மாதிரி கார் ல வேணாம்.. ப்ளீஸ்.. "

"எதனால உங்களுக்கு என் மேல லவ்??

"எப்ப எனக்காக சாக துணிச்சியோ!!"

"நானா?? உடம்பு சரியில்லாதவளை தண்ணியில போட்டு கொல்ல பாத்த கொலைகார பாவி..!! ஏதோ நான் தான் காதலுக்கு தண்ணில தவம் இருந்த மாதிரி பேசுறீங்க??"

" தவம் தான்.. இருந்த, என் காதல் கரையாதுன்னு கண்ண மூடிட்டு சொன்ன தெரியுமா!! அந்த ஒத்த வார்த்தையில கொன்னுட்டே என்ன!! நீ தான் என் வாழ்க்கை நினைக்க வச்சிட்ட, காதல் வேணாம் னு ஒதுங்கி போன என்ன காதலிக்க வச்சுட்டு, பழகப் பழக எனக்கு உங்கள பிடிக்கல, நமக்கு செட்டாகாதுன்னு விபூதி கொடுத்துட்டு..
போகலாம்னு கனவிலே கூட நெனச்சுட்டாத, இரக்கம் எல்லாம் படவே மாட்டேன்.. மர்டர் தான். நீயா தான் வந்த, லவ் பண்றேன்னு சொன்ன?? ஏதாவது சொல்லி வேணாம்னு விட்டுட்டு போன !! அவ்ளோ தான்.. கூடவே எப்பவும் இருக்கிற மாதிரி இருந்தா என் கூட வா.. இல்லை பஸ் ஏத்தி விடுறேன்.. ஊருக்கு ஓடிரு..

கொஞ்சமும் நபிக்கை இல்லை..

" முதல் காதல்ல.. தொலச்ச யாருக்கும்.. காதல் மேல நபிக்கை இருக்காது.. ஏமாந்துருவோமோ??இழந்துருவோமோ?? என்கிற பயம் மட்டும் தான் இருக்கும்.. "

"என்னை ஏமாத்திடுவிங்க தான??" சிரிக்காமல்.. பாவமாக முகம் வைத்து பிரதி கேட்க.?

"நல்லா நம்ப வச்சு.. கைல ஒரு குழந்தைய குடுத்துட்டு ஏமாத்துவேன்.. கேர்ஃபுல்லா இரு.."

" நிறைய விஷயங்களை நீங்களும் நானும் ஒத்து போறோம்.. நானும் என்ன ராசியில்லாதவ னு தான் நினைச்சிருக்கேன்.. யரோட சாவுக்கும் நீங்க காரணம் இல்லை.. மரணத்தை யாராலையும் தடுக்க முடியாது.." என்று முடிக்கும் முன்னே.. கண்ணீரோடு கட்டி கொண்டான் காதலியை. இத்தனை நாள் மனதில் அழுத்திய வலி, அவனே சுமத்திய பழிகள் எல்லாம் கண்ணீராக அவள் தோள் பட்டு கரைந்து வழிந்தது..

" எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் நினைச்சு உங்களை காயப்படுத்திகாதிங்க..உங்க அத்தைக்குமே..அது பிடிக்காது.. என்கிட்ட நீங்க விளையாட்டுக்கு தான் சொன்னிங்க.. ஆனா நான் வேணும்னு தான்.. தண்ணிலயே உட்கார்ந்து இருந்தேன்!! " ப்ரீத்..அதிர்த்து போய் அவளை பார்க்க..


"ஒரு முடிவு தெரியனும் னு தான்.. நான் பவித்ரா இடத்துல இருந்து இருக்க கூடாதா னு !! எத்தனை நாள் ஏங்கி இருக்கேன்.. தெரியுமா?? ப்ரீத். நான் ரொம்ப லக்கி !! இங்க நான் இருக்கேன்.. "அவன் இதயம் மீது கை மடக்கி குத்தி காட்டிட, " அம்மா.. வலிக்குது டி " கண்ணில் நீரோடு பொய்யாய் அலறினான்..

"அழும் போது செம அழகா.இருக்கீங்க .. குமாரு.."

" ஏய்.. குமாரு னு கூப்பிடாத டி..இ.இ.," பல்லை கடித்துக் கொண்டு கத்தினான்..

" பிடிக்கலை?? எனக்கு பிடிச்சு இருக்கே!! கு..கு.. கு..மா... ரு.. " குறும்பாய் வம்பிழுத்து ..அவனை சீண்டி சிரித்தாள்..
மீண்டும் " கு..மா.. என்று ஆரம்பித்தவள்.. மூச்சி விட தினறி போனால்!! எச்சில் பசையோடு. இதழ்கள் ஒட்டி உரசிட, பெண் விழிகள் சிறகாய் படபடக்க.. மெல்ல மெல்ல ஆளனின் காதல் மென்மையில் கரைந்து போனால்.. (குமாரின்) காதலி!!

ரொம்ப ராசியான கார்.. எந்த பொண்ணு கார்ல இருந்தாலும்.. இந்த லீலை தான் பண்ணுறான்.. கிஸ்ஸிங் கார் ஆ இருக்குமோ??


நன்றிகள் கோடி ♥️
 
Status
Not open for further replies.
Top