அவளும் உடனே "அக்கறைதான் ஆனால் பார்வதி அம்மா மேல்" என்று கூறினாள்.
“எதோ பிள்ளைமேல் உள்ள அலாதி பாசத்தினால் தெரியாமல் ஒரு தவறு செய்து விட்டார்கள் அதற்காக இன்னும் அவர்களை தண்டிப்பது நியாயமா?
எல்லோரையும் நம்புவதுதான் அவர்களின் சுபாவம்... உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமே… உங்களை யார் இழிவு படுத்தினார்களோ அவர்களை நீங்கள் ஒன்றுமே செய்யவில்லையே…? பின்னே ஏன் ஆண்ட்டிக்கு மட்டும் இந்த தண்டனை?" என்றாள்.
அவள் பேச பேச இவனின் முகம் இறுகியது. ருத்ரனின் முகம் இருகியதை கண்டவள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் அவன் கடந்த கால வாழ்க்கையை பற்றி அவனிடமே பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று.
அவனோ ஒன்றை புருவத்தை மேலே உயர்த்தி 'அப்போ என் கதை உனக்கு தெரியும்' எனும் விதமாக பார்த்தான் .
அவளோ அதனை கண்டு கொண்டு சற்று தயங்கிய படியே "இல்லை அன்று ஆண்ட்டி நீங்கள் அவங்களை அம்மா என்றே அழைப்பதில்லை அதற்கு என்ன காரணம் என்றும் வருத்தமாக கூறினார்கள்" என கூறினாள்.
அவனோ ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டு "வேலை விஷயமா வேறேதும் நம்ம டிஸ்கஸ் செய்ய இருக்க" என கேட்டான். அவள் "இல்லை" எனும் விதமாக தலையாட்ட, "அப்போ நான் கிளம்புறேன்" என்று கூறி அங்கிருந்து கதவை நோக்கி நகர்தான்.
அறையின் கதவில் கைவைத்து திறக்க போனவனை அவள் குரல் தடுத்தது "ஆண்ட்டியை அம்மா என்று அழைக்கலாமே" என கூறினாள். சட்டென திரும்பி அவளை பார்த்து "என்னுள் இருக்கும் வலி பெரிது..." என கூறியவன் அறையை விட்டு வெளியேரினான்.
அப்போது அங்கு மகிழ் வந்தாள். வந்தவள் ருத்ரனை பார்த்து தூக்குங்க எனும் விதமாக கையை தூக்கினாள். அவள் முகத்தில் தூங்கியெழுந்த சாயல் அப்படியே தெரிந்தது.
அவனும் மென் புன்னகையுடன் அவளை தூக்கிக்கொண்டு "ஹனி பீ இப்போதான் தூங்கி எழுந்தங்களா?" என அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
அப்போது அறையில் இருந்து வந்த உமையாளோ " நான் எப்போதெல்லாம் வீழ்ந்து போவது போல் தோன்றினாலும் என் தன்னம்பிக்கைகாக இந்த வரிகளை சொல்லுவேன் ஏன் என்றால் என் வலி கூட பெரிதுதான் .
இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது என கூறி
"ஒரு தடவை விழுந்த மறுமுறை எழுந்து அதே இடத்துக்கு சென்று அங்கிருந்து ஓட ஆரம்பிக்கணும் அடுத்த முறை விழாமல் பாத்துக்கணும். எங்கே விழுந்தோமோ அந்த இடத்தில் விழுந்த தடயத்தை விட எழுந்த தடயத்தையும் வென்ற தடயத்தையும் இன்னும் அழுத்தமாக பதிக்கணும். கஷ்டம் தான் ஆனாலும் பரவாயில்லை நம்ம சோர்த்து போகமல் வெற்றியை நோக்கி ஓடணும். நீ வெற்றி பெற்றால் நாடே உன் கீழ்." என அவள் கூறி கொண்டிருக்கும்போதே விருட்டென அவளை திரும்பி பார்த்தான்.
ஆழ்ந்து பார்த்தான்... மறக்குமா இந்த வரிகள்.. அவன் வாழ்க்கையை மாற்றிய வரிகள். யாரை இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருந்தானோ அவளே இங்கு அவன் கண் முன் பல மாதங்களாக இருந்திருக்கிறாள்.
அவனுக்குத்தான் அது தெரியவே இல்லை 'அப்போ அந்த குழந்தை, மகிழா?' என நினைத்து அவளை ஒரு நொடி பார்த்தான். உமையளோ பேசுவதை சற்று திருத்தி விட்டு அவனை கவனித்தாள்.
பின் திரும்பவும் உமையாள் பேசுவதை கவனித்தான். அவன் உமையாளை பார்த்தாலும் அவன் சிந்தனைகள் யாவும் சில வருடங்கள் முன் அவன் அவளை பார்க்கில் சந்தித்ததில் தான் இருந்தது.
அவளும் எல்லாவற்றையும் பேசிமுடித்தபின் அவன் முகத்தை பார்த்தாள். அவன் எந்த ஒரு சலனமும் இன்றி அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
அவளோ "சொன்னது புரிந்ததா? என அவனிடம் கேட்டாள். பதில் இல்லை மகிழ் இருவரையும் பார்த்து, பின் ருத்ரனின் தோள்களை உலுக்கினாள், அதன் பின்தான் ருத்ரன் சுயஉணர்விற்கே வந்தான்.
"அ.. அ.. என்ன... என்ன சொன்ன?" என தட்டு தடுமாறி கேட்டான் உமையாளோ,
"உங்க அம்மா கிட்ட பேசுங்க. அவங்கள அம்மா என்று கூப்பிடுங்க." என கூறினாள்.
அவள் மனத்திலோ 'இதெல்லாம் சொல்ல நாம் யார் அவருக்கு? நான் சொல்வதை அவர் கேட்டால் என்ன? கேட்கவில்லை என்றால் என்ன?' என்று தோன்றியது.
உடனே 'நான் உங்களை வற்புறுத்தவில்லை... சொல்லணும்னு தோன்றியது அதனால்தான் சொன்னேன் மற்றபடி உங்கள் இஷ்டம்.” என முடித்தாள்.
அவன் எதுவும் கூறவில்லை தலையை மட்டும் ஆட்டிவிட்டு மகிழின் கன்னத்தில் மென் முத்தம் ஒன்றை பதித்து விட்டு அவளை கீழே இறக்கி விட்டு சென்று விட்டான்.
அவனின் இந்த திடீர் நடவடிக்கை உமையாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே சமயம் அங்கு ருத்ரன் வீட்டிலோ உமையாளிடம் பார்வதி அம்மா உமையாளிடம் பேசுவதாகவும், ருத்ரனிடம் நீலன் பேசுவதாகவும் முடிவு செய்ய பட்டது.
நீலன் சென்றவுடன், இரவு உணவுக்கு பார்வதி அம்மா சப்பாத்தி,கிழங்கு பொரியல், செய்து கொண்டிருந்தார். வீட்டினுள் வந்த ருத்ரன் அவரிடம் சென்று
"என்ன சமையல்" என கேட்டான்.
அதற்கு அவரும் சமைத்து வைத்துள்ளதை கூறினார். அதற்கு அவனோ
ஹ்ம்ம்..! எனக்கு ரவ கேசரி வேண்டும். செய்து தர முடியுமா" என கேட்டான்.
இதழ்கள் விரிய "தாராளமாக செய்து தருகிறேன். நீ இது போல் என்னிடம் கேட்டு எத்தனை காலம் ஆகிவிட்டது” என விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டு கூறினார்.
ருத்ரனுக்கு அவன் தாய் செய்யும் சமையல் என்றால் கொள்ளை பிரியம். அதிலும் ரவா கேசரி அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு பலகாரம்.
சிறு வயதிலிருந்து சுபா அவன் வாழ்க்கையில் நுழையும் முன் வரை எப்படியும் வாரத்தில் இருமுறையாவது அவன் தாயிடம் ரவா கேசரி செய்து தரும்படி கூறி உண்டு விடுவான்.
ஆனால் அதன் பின் அவன் இனிப்பு சாப்புடுவதையே விட்டு விட்டான். அவனும் இதழ் பிரித்து சிரித்து கொண்டு
"செய்து வைங்க குளித்து விட்டு வந்து சாப்பிடுகிறேன்" என கூறி அவன் அறையை நோக்கி சென்றான்.
அவன் சிரித்தது அவருக்கோ இன்னும் மகழ்ச்சியை ஏற்படுத்தியது இத்தனை காலமும் தன்னை பார்த்து சிரிக்காத மகன் இன்று சிரித்து விட்டு போகிறான். பார்வதி அம்மாக்கு சொல்லவும் வேண்டுமா...
இந்த மகிழ்ச்சியுடனே அவனுக்கு ரவா கேசரி செய்ய போனார். அவன் தாயின் கண்ணீர் நிரம்பிய கண்கள் அவனை என்னவோ செய்தன .
இத்தனை நாட்கள் கோவத்தில் அவன் அவரை நோகடித்து கொண்டிருக்கிறான் என்பதே இப்போதுதான் உணர்ந்தான். இப்போதுதான் உணர்ந்தான் என்பதை விட எப்போதும் தோன்றுகிறதுதான் ஆனால் அதை உணர விடாமல் அவன் கோவம் அவனை தடுத்து கொண்டிருந்தது.
தன்னை சுத்தம் செய்து விட்டு உணவு உன்ன உணவறைக்கு வந்தான் ருத்ரன். அவன் உண்ணுவதற்கு தட்டில் எல்லாவற்றையும் பரிமாறினார். பின் அருகில் ஒரு சின்ன கிண்ணத்தில் ரவா கேசரியை கரண்டியின் வைத்தார்.
எல்லாவற்றையும் செய்து வைத்தவர் அங்கிருந்து நகர போனார்.
ருத்ரன் அவர் கைகளை பிடித்து அவன் அருகினில் அமர வைத்தான். உமையாள் வீட்டிற்கு சென்றதை தவிர்த்து இன்று நடந்த எல்லாவற்றையும் பார்வதியிடம் ஒப்பித்தான்.
இது அவனது பழைய பழக்கம். இரவு உணவு உண்ணும் போது எப்போதும் இப்படித்தான் அவரை அமர வைத்து அன்றைய தினத்தில் என்ன என்ன நடந்தது என கூறுவான். அதே போல் பல வருடம் கழித்து இன்று கூறுகிறான்.
கண்ணில் நீர் மல்க அவன் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தார் பார்வதி. பேசிக்கொண்டே உண்டு முடித்தான். பின் கேசரியை உன்ன ஆரம்பித்து விட்டான்.
அவன் ரசித்து ருசித்து அந்த கேசரியை உன்ன விதத்தில் அவருக்கு அவர் பழைய ருத்ரன் கண் முன் வந்து போனான். உண்டு முடித்து தட்டை சுத்தம் செய்ய சென்றவன் ஒரு நிமிடம் நின்று திரும்பி அவன் தாயை பார்த்து,
“சில வருடம் கழித்து இந்த கேசரி நீங்கள் செய்தாலும் சுவை இன்னும் அப்படியே இருக்கு அம்மா” என அந்த அம்மாவில் ஒரு அழுத்தத்தை கொடுத்தான்.
பார்வதிக்கோ எல்லாம் நின்று விட்ட உணர்வு. எந்த தாய்க்கும் கிடைக்கும் வரம் தன் குழந்தை தன்னை அம்மா என்று அழைப்பது. அந்த வரம் அவரு சில ஆண்டுகளாக அவருக்கு நிராகரிக்க பட்டு இருந்ததல்லவா....
இன்று அவர் மகன் அந்த வரத்தை திரும்பவும் அவருக்கு கொடுத்திருந்தான். ருத்ரனோ அதனை கூறிவிட்டு சட்டெனெ தட்டை சுத்தம் செய்ய சென்று விட்டான். ஆனால் அந்த வார்த்தையை கேட்ட பார்வதித்தான் சிலையாக நின்று விட்டார்.
கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. தட்டை சுத்தம் செய்து விட்டு அவன் தாய் நின்ற இடத்திற்கு வந்தவன் தாயின் அசைவில்லா நிலையை பார்த்து அவரிடம் சென்றான்.
தனது இரு கை கட்டைவிரலை கொண்டு அவர் கண்ணீரை துடைத்து விட்டான். அந்த கைகளை பிடித்து கதறி விட்டார் பார்வதி
"அம்மாவை மன்னிச்சிட்டியா ஐயா, அம்மா செய்தது தவறுதான். எல்லா இடமும் நன்றாக விசாரித்து உனக்கு அவளை மனம் முடித்திருக்க வேண்டும். என்னால் உன் வாழ்க்கையே பாலாகி விட்டது. என்னை மன்னித்து விடு ஐயா" என்று அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.
ருத்ரன், "அம்மா என்ன இது சிறு பிள்ளை போல் அழுது கொண்டு, போதும் விடுங்கள் இனி பழசை பேசி என்ன இருக்கு. நானும் தான் செய்ய கூடாத பல வேலைகளை செய்து உங்கள் மனதை கஷ்டபடுத்தி உள்ளேன்.
அதற்கு என்னை நீங்களும் மன்னிக்க வேண்டும். இதே போல் நாம் மாறி மாறி நடந்ததற்கு மன்னிப்பு கேட்டால் இன்று முழுதும் தூங்காமல் மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும்.
இனி உங்கள் பழைய மகன் ருத்ரன் உங்களுடன் எப்போதுமே இருப்பான்” என கூறி அவரை அனைத்து போங்க அம்மா போய் நிம்மதியா தூங்குங்க. என கூறி அவரை உன்ன வைத்த பின் தூங்குவதற்கு அனுப்பி வைத்தான்.
அறைக்குள் வைத்தவரால் அமைதியாக இருக்கவே முடிய வில்லை. தன் மகிழ்ச்சியை கண்டிப்பாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என பரவசமாக இருந்தார்.
இப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் நீலனும் உமையாளும் தானே... ஆதனால் நீலனுக்கு அழைத்தார். அவன் ஒரு நோயாளியை பரிசோதித்து கொண்டிருந்த காரணத்தினால் அந்த அழைப்பை அவன் தவற விட்டான்.
"ச்சே!... என்ன இவன் அழைப்பை ஏர்க்கவே இல்லை" என நொந்து " சரி உமைக்கு அழைப்போம்" என கூறி அவளுக்கு தொடர்பு கொண்டார்.
இங்கு உமையாளோ "பார்வதி அம்மா அழைக்கின்றாரே.. என்ன காரணாமாக இருக்கும்.. 'ஐயையோ.... ருத்ரன் வீட்டிற்கு சென்று அவர் மனதை கஷ்டப்படும் படி ஏதேனும் பேசியிருப்பாரோ.
அப்படி மட்டும் பேசிருக்கட்டும் நாளை இருக்கு அவருக்கு' என நினைத்துக்கொண்டே அவரின் அழைப்பை ஏற்றாள்.
"உமையாம்மை" என குரலில் மகிழ்ச்சி போங்க அழைத்தார் பார்வதி.
இவளோ அழும் குரலை எதிர்பார்த்து தொலைபேசியை காதில் வைக்க இங்கோ மகிழ்ச்சியின் குரல்... மேலும் தொடர்ந்த பார்வதி
"உமையாம்மா நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சொல்ல வார்த்தை இல்லை.. இன்று என்ன நடந்தது தெரியுமா” என கேட்டு ருத்ரன் வந்தது முதல் அவரை உணவு உன்ன வைத்து உறங்க அனுப்பியது வரை கூறி முடித்தார்.
கூறியவர் பல முறை
"ஹலோ......."ஹலோ....." என கூறினார் ஆனால் எந்த பலனும் இல்லை.
அந்த பக்கம் அமைதியே நிலவியது "நெட்ஒர்க் சரி இல்லை போல் என மூணு முணுத்துக்கொண்டே தொடர்பை துண்டித்தார் பார்வதி. இங்கோ அனைத்தையும் கேட்ட உமையாளுக்கு அதிர்ச்சி...
என் பேச்சை கேட்டா ருத்ரன் அவர் தாயிடம் பேசினார்?... நான் சொல்லி ஆஹ்?.....” என ஒரே சந்தேகம்... எனோ பேச்சு வர வில்லை... மனதில் ஒரு அமைதி பரவுவதை உமையாளால் உணர முடிந்தது. அது ஏன் என்றும் அவளுக்கு புரிய வில்லை.