எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 25

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 25


சந்தோஷ் ராகவேந்திரா வீட்டில் அனைவரும் அமைதியாக இருக்க, கவிதா மட்டும் தான் வானுக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தார். கவின் ஒரு வார்த்தையும் பேசவில்லை, கார்த்திகாவை பேச அனுமதிக்கவும் இல்லை. அமைதியாக நின்றார். அப்போது தான் ஷிம்ரித்தும், நிஹாரிகாவும் அஃஷராவுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.


கவிதா “வாங்க கலெக்டரம்மா.. அப்போ இதெல்லாம் உன் வேலை தான் இல்லையா? இவனுக்கு ஏன் புத்தி இப்படி போச்சுனு யோசிச்சேன்.. இப்போ தான தெரியுது உன் ஓடுகாலி தங்கச்சிய நீ தான் இவன் தலையில கட்டி வச்சிருக்கனு” எனக் கோபமாக நிஹாரிகாவின் மீது பாய்ந்தார்.


நிஹாரிகா “மைன் யுவர் வோர்ட்ஸ் வக்கீலம்மா.. ஆமா.. நான் தான் கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டு நடத்தி வச்சேன்.. போதுமா?” எனக்கூறியதும் கவினும், கார்த்திகாவும், ஏன் மொத்த குடும்பமும் அதிர்ந்து நிஹாரிகாவைப் பார்க்க அவள் தொடர்ந்து,


“ஆனா நான் ஒன்னும் மேட்ரிமோனியல் நடத்தல, வேலை வெட்டி இல்லாம எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க..


விஹான் தான் கால் பண்ணி எங்கள வர வச்சாரு.. பிரணிய கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னார் காரணம் கேட்டா காரணமே நீங்கத் தானாமே!


நீங்க ஓ.கே சொல்ல மாட்டேனு சொல்லிட்டிங்களாமே வக்கீலம்மா அதான் இந்த ஏற்பாடாம். நீங்க ஒத்துக்கிட்டிருந்தா இப்போ இந்த கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்திருக்கும். சோ இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான்” என நக்கலாகக் கூற,


கவிதா “பார்த்திங்களா மாமா.. உங்க பொண்டாட்டி, மகன், மருமகள் எல்லாருமே டீம்வொர்க் பண்ணி தான் என் புள்ளை வாழ்க்கைய கெடுத்திருக்காங்க” என சந்தோஷிடம் கத்த,


விமலேஷ் “கவிதா நீ அமைதியா இருக்கவே மாட்டியா?” எனச் சலிப்பாகக் கேட்டார்.


“நான் ஏன் அமைதியா இருக்கனும்? எனக்குத் தெரியாம என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணிவைக்க இவங்க யாரு?”


ஷிம்ரித் “அவன் என் தம்பி”


கவிதா “ஷிம்ரித் நிஜமா நான் இத உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல.. உன் மேல ஒரு நல்ல எண்ணம் இருந்துச்சு அத நீயே கெடுத்துக்கிட்ட. உன் கூட இருக்கிறவங்க உன்னை இன்ஃபுளூயன்ஸ் பண்றாங்க நீயும் மாறிட்ட. நீ எப்படியோ போ ஆனா என் புள்ள விஷயத்துல எப்படி நீங்க எல்லாம் முடிவு எடுக்கலாம்?” என யாரையும் விட்டுவைக்காமல் கவிதா அனைவரையும் வார்த்தைகளால் சுழட்டி அடித்தார்.


விஹான் “அம்மா! இது முழுக்க முழுக்க என்னோட முடிவு மட்டும் தான். நீங்க யாரையும் பிளேம் பண்ணாதீங்க.. ஏன் பிரணிய கூட பிளேம் பண்ணாதீங்க.. ஏன்னா அவளும் இதுக்கு சம்மதிக்கவே இல்லை. நான் தான் எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணேன்”


கார்த்திகா “நீங்க பண்ணிட்டிங்க ஆனா பேச்சு நாங்க தான வாங்குறோம்” எனக் கடுப்பாகக் கூறினார்.


“சாரி அத்தை. எனக்கும் வேற வழி தெரியல அதான்” எனத் தனிந்து போனான்.


கவின் “கிளம்பலாம்” எனக்கூறி, அவ்விடமிருந்து எழுந்தார்.


“சாரி மாமா” என்றான்.


“அப்பா!” என பிரணவிகா கவின் அருகில் செல்ல, அவர் ஒதுங்கி நின்றார். கார்த்திகா “அம்மா அப்பான்னு எங்க கிட்ட எப்பவும் வராத”


கவிதா “அதான் ஓட்டிவிட்டாச்சுல இனி என்ன வேலை.. கல்யாணம் பண்றதுக்கு வழி இல்லனு சொல்லிருந்தா நானே காசு கொடுத்திருப்பேன்.. அத விட்டுட்டு நீ என் கூடப்பொறந்தவன வளைச்சு போட்ட மாதிரி என் புள்ளைய வளைச்சு போட உன் மவளுக்கு சொல்லிக்கொடுத்துட்டு என்னமா நடிக்கிற.. ச்சைக்” என அசிங்கமாகப் பேச, முதலில் அவனானத்தில் தலைகுனிந்து நின்ற கவின் கடைசியில் பொறுக்கமுடியாமல்,


“கவிதா.. வாய அடக்கு” எனக் கோபமாகக் கூற,


சந்தோஷ் “கவிதா தேவையில்லாம பேசாதம்மா.. குடும்பத்துக்குள்ள இப்படி பேசினா பிரச்சனை பெருசா ஆகி உறவ பாதிக்கும். எதையும் யோசிக்காம இஷ்டத்துக்கு பேசாத” எனக்கூறியவர் விமலேஷை பார்க்க,


விமலேஷ் “இங்க பாரு கவிதா அவ்ளோ தான் உனக்கு மரியாதை. இனி ஒரு வார்த்தையும் நீ பேசக் கூடாது.. உள்ள போ” எனக் கத்த,


“நான் ஏன் போகனும்.. அவள என் புள்ளைய விட்டுட்டு போக சொல்லுங்க. என்புள்ளைக்கு யார கட்டி வைக்கனும்னு எனக்கு தெரியும்”


“உன் கண்ணுல எதாவது கோளாறா? இல்ல மண்டையில கோளாறா? அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சிருச்சு அதுவும் சட்டப்படி, அவன் விருப்பப்படி.. இனிமேல் எதுவுமே மாறாது. பேசாம உள்ள போ” எனக் கத்த, அங்கிருந்த அத்தனை பேரையும் வன்மமாக முறைத்துக்கொண்டே மாடி ஏறினார்.


சந்தோஷ் “கவின் நடந்தது நடந்து போச்சு இனி ஆக வேண்டியத பத்தி பேசலாம். உட்காரு” எனக்கூற,


“இல்ல மாமா.. பேச ஒன்னும் இல்ல.. நாங்க கிளம்புறோம்” எனக்கூறியவர் கிளம்ப ஆயத்தம் ஆக, அவர் அருகில் வந்தனர் நிஹாரிகாவும், ஷிம்ரித்தும். அவர்களை அடிபட்ட ஓர் பார்வை பார்த்தவர்,


“இத எதிர்பார்க்கல. வருத்தமா இருக்கு. என்கிட்ட ஒரு வார்த்தை நீங்களாவது சொல்லிருக்கலாம்ல” என்றார்.


“சாரி மாமா. உங்க கிட்ட தனியா வந்து பேசுறோம். காரணம் இல்லாம நான் எதுவும் பண்ண மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா? இல்ல அப்படி பண்ண உங்க பொண்ணு தான் விடுவாளா? அவளே இத பண்ணிருக்காண்ணா எதோ இருக்குனு தான அர்த்தம். அது என்னனு முழுசா தெரிஞ்சுக்கிட்டு உங்க கிட்ட வந்து பேசுறேன் மாமா” எனக்கூற,


“கவலை படாதீங்கப்பா.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். பிரணி என் பொறுப்பு. நாங்க நாளைக்கு வீட்டுக்கு வரோம். அப்போ பேசிக்கலாம் பா” என நிஹாரிகா கூற, கார்த்திகாவின் கையைப் பிடித்து வெளியேறப் போக, சட்டென நின்ற கார்த்திகா விராஜ் அருகில் நின்ற சாத்விகாவைப் பார்த்தவர்,


“நீ நிற்கிற இடமும் சரியா இல்லையே! வீட்டுக்கு வரியா? இல்ல நீயும்..” எனக்கேட்க,


“அம்மா!” என விராஜ் அருகிலிருந்து கார்த்திகாவிடம் செல்ல, விராஜ்ஜூக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. ‘என்னடா இது இப்போ தான் சரிக்கட்டினேன் இவள.. அதுக்குள்ள எனக்கு ஆப்ப வச்சிட்டாங்களே’ என நினைத்தான்.


“நீயாவது எங்க பேச்சைக் கேட்பியா? இல்ல நீயும் உன் கூடப்பிறந்தவ மாதிரி எங்க முதுகுல குத்துவியா?” எனப் பொதுவாக நிஹாரிகாவுக்கும் சேர்த்து குட்டு வைத்தார் கார்த்திகா.


“அம்மா! ஏம்மா” என அழுகும் குரலில் சாத்விகா கேட்க, “என்ன கார்த்திகா புள்ளைக்கிட்ட போய் இப்படி பேசுற?” என கல்பனா கேட்க,


“கரெக்டா தான் அண்ணி பேசுறேன். இந்தப் புள்ளைங்கள இன்னும் கண்டிப்பா வளர்த்திருக்கனும். இந்த வீட்டு ஆளுங்களுக்கு எங்கள பிடிக்கலனு தெரிஞ்சும் இங்க நான் விட்டுருக்க கூடாது. உங்க முகத்துக்காகத் தான் விட்டேன். அதுக்காக இன்னைக்கு நல்ல பாடம் கத்துக்கிட்டேன்.


இனிமேல் நாங்க யாரும் இங்க வரப் போறது இல்ல குறிப்பா சாத்வி. இவ இந்த வீட்டுக்கு இனி எப்பவும் வரமாட்டா. வாடி” என இழுத்துக் கொண்டே நடக்க, அவள் திரும்பி விராஜ்ஜை பார்த்தவாறு கார்த்திகாவின் கைபிடியில் அழுகையை அடக்கிக் கொண்டே சென்றாள்.


அவள் செல்வதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல் கைக்கட்டி நிற்கும் நிலையை அறவே வெறுத்தான் விராஜ். இப்போது இருக்கும் கலவரத்தில் தானும் எதாவது செய்து நிலமையை இன்னும் கெடுக்க மனம் இல்லாமல் அமைதியாக நின்றான்.


சந்தோஷ் “ஏண்டா இப்படி என்னைத்தையாவது பண்ணி குடும்பத்துல நிம்மதிய கெடுக்கிறீங்க? பெரியவங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்? எங்க கிட்ட சொல்லலாம்ல”


“சொன்னேன் பெரியப்பா” என்றான் விஹான்.


“எதுத்தோம் கவித்தோம்னு எதுவும் செய்ய முடியாதுப்பா.. கொஞ்சம் பொறுமையா, நிதானமா தான் செய்ய முடியும்.. அதுக்காக இப்படி அவசரப்பட்டு நீங்களா ஒரு முடிவு எடுத்தா சரியா?” என ஆதங்கமாகக் கேட்டவர்,


“இனிமேலாவது எதையும் பெரியங்க கிட்ட கேட்டுச் செய்ங்க. கல்பனா கூட இருந்து ஆக வேண்டியத பாரு” எனக்கூறிவிட்டு, “வாப்பா” எனத் தம்பியை அழைத்துக்கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டவர்கள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் இறங்கினர்.


எஞ்சி அவ்விடத்தில் நின்றவர் அனைவரும் விஹானுக்கு ஆதரவாளர்கள் தான். நிஹாரிகா அஃஷராவை உறங்க வைக்க அவர்களது அறைக்குச் செல்ல, பிரணவிகாவையும் சேர்த்தே தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.


கல்பனா அனைவருக்கும் இரவு உணவு வேலையில் இறங்க, அண்ணன் தம்பி மூவரும் மட்டும் தனியாக நிற்க, அண்ணனும் தம்பியும் விஹானை அழைத்துக் கொண்டு தனியறை புகுந்தனர்.


இருவரும் விஹானை வைத்த கண் வாங்காமல் பார்க்க,


“என்னா? ஏன் அப்படி பார்க்குறீங்க இரண்டு பேரும்?” எனத் தயக்கத்தை மறைத்துக் கொண்டு கெத்தாகக் கேட்டான்.


“என்ன நடந்துச்சுன்னு சொல்லு?” என ஷிம்ரித் கேட்க,


“அதான் முன்னாடியே எல்லாம் சொன்னே” என்றான்.


“அதாவது ப்ரோ உங்க வாய்க்கு வந்தத கேட்க்கல.. உண்மைய சொல்லுனு அண்ணா கேட்க்குறார்” என்றான் விராஜ்.


“உண்மைய தாண்டா சொன்னேன்”


“இத எவனாவது காதுல பூவ சுத்திட்டு போவான் அவன்கிட்ட போய் சொல்லு.. நீ பிரணிய விரும்பின அது ஊருக்கே தெரியும். ஆனா பிரணி உன்னைக் கண்டாளே தெறிச்சு ஓடுவா.. அவ எப்படி உன்னை?”


“அதெல்லாம் சும்மா நடிப்பு, அவளும் தான் என்னை லவ் பண்ணா”


“புழுகாத டா.. அவ நம்மோட பிஸ்னஸ் எதிரி சூர்யான்ஷ் கூட பழகுறான்னு சாத்வி சொன்னா”


“அதெல்லாம் ஒன்னும் இல்ல”


ஷிம்ரித் “விஹான்.. என்னமோ நடந்திருக்கு.. அத சால்வ் பண்ண இப்படி கல்யாணம் பண்ணிட்ட.. நான் உன்னை நம்புறேன் அதான் உனக்காக நின்னேன். ஆனா பிரச்சனை என்னானு தெரிஞ்சா தான அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவு பண்ண முடியும்”


“ஒன்னும் இல்லண்ணே”


“நானே கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனா உன் விஷயத்த வேற யாரோ மூலம் தெரிஞ்சுக்க விரும்பல. நீயே சொல்லு” எனக்கேட்க, பெருமூச்சுடன்,


“சூர்யான்ஷ் தான் காரணம். நம்ம காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி தான் காரணம்” என்றான்.


“நினைச்சேன். அவன் மூளை இப்படி எதையாவது யோசிக்கும்னு. வீக் டார்கெட் யாருனு பார்த்திருப்பான்.. தொக்கா போய் இந்த லூசு அவன் கிட்ட சிக்கிருப்பா” எனக் கோபமாகக் கூறினான் விராஜ்.


“என்னாச்சு முழுசா சொல்லு” என ஷிம்ரித் கேட்க, சூர்யான்ஷ் பிரணவிகாவுக்கு விரித்த வலையிலிருந்து இன்று அவன் பிடியில் சிக்கி காப்பாத்தியது வரை கூறினான்.


ஷிம்ரித் “அதான் காப்பாத்திட்டியே அப்புறம் எதுக்கு கல்யாணம்? அதுவும் உடனே?” எனக்கேட்க தடுமாறியவன்,


“அவள அப்படியே விட்டுட்டா எனக்குக் கிடைக்க மாட்டா அதான்” எனப் பொய்யுறைத்தான் அவன் கூறுவதை அவர்கள் நம்பப் போறதில்லையெனத் தெரிந்தும்.


“நம்புற மாதிரி இல்ல ப்ரோ” என்றான் விராஜ். ஷிம்ரித்தின் பார்வையும் அதையே கூற, மீண்டும் ஒரு பெருமூச்சுடன் மீதி கதையைக் கூற ஆரம்பித்தான்.


சூர்யான்ஷ்ஷை அடித்துத் தள்ளிவிட்டுப் பிரணவிகாவுடன் சூர்யான்ஷ் வீட்டை விட்டு வெளியேறி ரோட்டில் நின்று அவளைத் திட்டி, ஏன் அறைந்து முடித்து அவளைக் காரில் அமர்த்திய நேரம் அவன் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.


“இப்போ பிரணவிகாவ கூட்டிட்டு திரும்ப வீட்டுக்கு வரணும்.. இல்ல அவ அசிங்கப்பட்டு போயிருவா.. அதுக்கு அப்புறம் அவ உயிரோட இருப்பாளான்னே டவுட் தான். வீணா அவள கொண்ணுடாத” என வரவும்,


“உனக்கு என்ன தாண்டா வேணும்?”


“ஒன்னு அவ இல்ல உன் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி..” என்றான் சிரித்துக் கொண்டே.


“கண்டவனுக்கு எல்லாம் என் வீட்டு பொண்ணையும், என் வீட்டு பிஸ்னஸ்ஸையும் தூக்கி கொடுக்க முடியாது” என்றான் ஆவேசமாக.


“கொடுக்கனும். இரண்டுல ஒன்ன கொடுத்தே ஆகனும் இல்ல பியூட்டி குயினோட பியூட்டிய ஊரே பார்க்கும்” என்றான் வன்மமாகச் சிரித்துக் கொண்டு.


“போதையில ஒலறாத” எனக் கைபேசியை அணைக்கபோக “ஒரு வீடியோ அனுப்புறேன் பார்த்துட்டு கால் பண்ணு” என அழைப்பை அவனோ நிறுத்தியிருந்தான் சூர்யான்ஷ்.


‘வீடியோவா’ எனப் பகீரென இருந்தது. அவனது கைப்பேசிக்கு ஒரு காணொலியும் வந்து விழுந்தது.


அதில் பிரணவிகாவும், சூர்யான்ஷ்ஷூம் ஒன்றாக இருப்பது போலச் சித்தரித்திருந்தது. ஏதோ ஒரு ஆபாச படத்தை எடுத்து அதில் பிரணவிகாவின் முகத்தையும், அவன் முகத்தையும் மாற்றி ஆபாசமான காணொலி ஒன்றை தயாரித்து வைத்திருந்தான்.


அந்தக் காணொலி ஆரம்பிக்கும் போதே அதைக் காண சகியாது வேதனையில் முகத்தைத் திருப்பியவன் அதன் உண்மை தன்மையை ஆராய்வதற்காகக் கூட அந்தக் காணொலியைப் பார்க்க விரும்பவில்லை உடனடியாக அழித்துவிட்டான்.


சூர்யான்ஷ் மீண்டும் அழைத்தான். கைகள் தானாக அழைப்பை ஏற்றது. “வீடியோ நல்லா இருக்கா? குயினும், நானும் தான். ஹாட்டா இருக்குல.. நெட்ல விட்டா வியூஸ் சும்மா பிச்சிக்கும்” என வன்மமாகக் கூறினான்.


“டேய் உன்னை கொல்லாம விடமாட்டேன் டா” எனக் கத்த,


“ச்சூ ச்சூ ச்சூ.. கத்த கூடாது.. இப்போ டீல் பேசலாமா?”


“ச்சீ.. உனக்கு என்னடா வேணும் எதுக்கு இப்படி சீப்பா பிஹேவ் பண்ற?”


“நான் தான் சொன்னேனே ஒன்னு என் குயின் இல்ல உன் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனி”


“டேமிட்” என எட்டி காரை உதைத்தான். அவன் உதைத்ததில் அதிர்ந்து காருக்குள் இருந்தபடி விஹானை பார்த்தாள் பிரணவிகா.


“ஓ.கே ஓ.கே டென்சன் ஆகாத.. உன்னை கூல் பண்ண ஒரு உண்மைய சொல்லவா. அது மாஃபிங் வீடியோ தான்..”


“ஏண்டா இப்படி பண்ற?”


“ரிவெஞ்ச் தான். உன் மாமா மகளை முதல்ல உன் வீட்டு பங்ஷன் வீடியோல தான் பார்த்தேன் அப்பவே விழுந்துட்டேன் அவகிட்ட.


என்னோட பிரீஷியஸ் டைம் எல்லாம் போட்டு குயின்ன இம்ப்ரஸ் பண்ண பிளான் பண்ணி, எவ்ளோ பண்ணிருக்கேன்..


அவளும் ஓ.கே சொல்லிட்டா தான் ஆனாலும் அவ என்கிட்ட குளோஸ் ஆகவே இல்ல அதான் இந்த பிளான் பண்ணேன்..


ஆனாலும் இன்னைக்கு அவளா வந்து சிக்குவனு யோசிக்கல.. கிடைச்ச நல்ல சான்ஸ்ஸ நீ கெடுத்துட்ட. ச்சைக்” எனக்கூற,


“காதலிக்கிற பொண்ணை யாரும் இப்படி பண்ண மாட்டாங்கடா. ஆனா நீ ச்சீ. இது மாஃபிங் வீடியோனு நீயே சொல்லிட்ட அத ஃபுரூப் பண்ண எனக்கு நிமிஷம் ஆகாது.


ஆனா உன்னை போய் அந்த லூசு விரும்பித் தொலைச்சுட்டா.. என் மேல உள்ள பொறாமையில அவள என்கிட்ட இருந்து பிரிச்சாலும் விரும்பினவளுக்கு உண்மையா இருப்பனு நினைச்சேன் ஆனா நீ அப்படியும் இல்ல.. அவ காதலுக்கு நீ தகுதியே இல்லடா”


“ஸ்டாப் இட். என் காதலுக்கு தான் யாரும் தகுதியானவங்க இல்ல. அந்த நேஹா அவள உயிரா காதலிச்சேன் ஆனா அவ உன்னைப் பார்த்ததும் உன்பின்னாடி போய் என்னை ஏமாத்திட்டா.


இந்த குயின்.. அவள பார்த்ததும் பிடிச்சது.. அவள என் குயினாவே தான் பார்த்தேன். அவளுக்காக உன்னைக் கூட விட்டுடலாம்னு தான் நேத்து வர நினைச்சேன்.


ஆனா இன்னைக்கு காலையில தான் தெரிஞ்சது அவளும் என்னை ஏமாத்துறான்னு.. அதான் இப்படி பண்ணேன். என் காதலுக்கு தான் யாரும் தகுதி இல்லாதவங்க” என வீடே அதிர கத்தினான்.


“அவ எங்கடா ஏமாத்தினா? உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அவ தான் இப்போ ஏமாந்து போய் அழுதுட்டு இருக்கா..”


“உன்னைக் காதலிச்சிக்கிட்டு என் காதலையும் அக்செப்ட் பண்ணிருக்காளே அது ஏமாத்துறது இல்லையா?” எனக்கூற அதிர்ந்து நின்றது என்னவோ சில வினாடிகள் தான்.


“நீ நிஜமாவே லூசர் தான். அவ உன்னை தான் விரும்புறா அது கூடத் தெரியாம என்னோட சேர்த்து இப்போவே நீ சந்தேகப்படுற.. உனக்கு எல்லாம் எப்படி டா லவ் செட் ஆகும் லூசர்” எனக்கூறவும், மீண்டும் ஆவேசமாக ஆனான் சூர்யான்ஷ்.


“யெஸ் நான் லூசர் தான். நான் என்னடா எதிர்பார்த்தேன் ஒரு பியூர் லவ். அது மட்டும் எனக்கு ஏன் கிடைக்க மாட்டிங்குது” என தலையைப் பிடித்தபடி கத்தினான்.


“கிடைச்சது நீ மிஸ் பண்ணிட்டனு சொல்லு முட்டாள்”


“அவ உன்னை விரும்புறாடா அது தெரியாத நீ தான் முட்டாள். இன்னைக்கு காலையில அவள பார்க்கனும் போல இருந்தது அதான் அவளுக்கு வீடியோ கால் பண்ணேன்..


அவ சரியா பார்க்காம நார்மல் கால்லு அட்டென் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டு டிரெஸ் ஸ்சேஞ் பண்ணிட்டு இருந்தா.. போன் கீழ கிடந்ததால சரியா தெரியல தான் ஆனாலும் அவ எதோ எடுக்கும்போது அவளோட அப்பர் செஸ்ட்ல விஹான்னு சைனீஸ்ல டாட்டூ போட்டு இருந்தது நல்லா தெரிஞ்சது..


எனக்கு சைன்னீஸ் தெரியும்.. அவ நெஞ்சு மேல உன் பேர் இருந்தா.. அவ மனசுலயும் உள்ளயும் நீ தான இருப்ப.. அப்போ தான் அவ என்னை ஏமாத்துறான்னு தெரிஞ்சது.


உன்னை லவ் பண்ணிட்டு உன்னை பொஸஸிவ் ஆக்க அவ என்னை யூஸ் பண்ணிருக்கா.. அதான் நான் இப்படி பண்ணேன்.. ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” எனக்கூற இப்போது நிஜமாகவே என்ன பேசுவதெனத் தெரியாமல் அமைதியாக இருந்தான்.


“என்னை ஏமாத்தின அவள நான் சும்மா விடமாட்டேன். வீடியோ ஃபேக்கா இருந்தாலும் அசிங்கம் தான.. அந்த அசிங்கத்துக்கு பிறகு அவ எப்படி வெளிய தலைய காட்டுவானு நானும் பார்க்குறேன்”


“நீ தேவையில்லாத வேலை பார்க்குற சூர்யான்ஷ்.. இது நல்லதுக்கு இல்ல.. இதுக்கு பின்னாடி நீ அனுபவிப்ப” எனக்கூற, இடி இடியெனச் சிரித்தவன்,


“நீ என்னை முன்னாடி சீண்டினதுக்கு தான் இப்போ நீ அனுபவிக்கிற. உன்னோட டர்ன் எல்லாம் முடிஞ்சது இது என்னோட டர்ன்.. அதான் இப்போ திருப்பிக் கொடுத்துட்டு இருக்கேன்..


முன்னாடி உன்னோட காஸ்மெட்டிஸ் கம்பெனிய விலைக்குத் தான் கேட்டேன்.. அப்போ நீ தரல.. இப்போ ஃப்ரீ ஒப் காஸ்ட்ல எனக்கு எழுதித் தரணும்.. இல்ல தினமும் ஒரு வீடியோ லீக் பண்ணுவேன்”


“டேமிட்.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன் டா” என்றவன் போனை வைத்துவிட்டு, யோசித்தான்.


பிரணவிகா மனதில் சூர்யான்ஷ் இருக்கிறான் என்பதால் தான் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்தான் ஆனால் இன்று சூர்யான்ஷ் வாயாலயே அவள் மனதில் தான் தான் இருக்கிறானெனத் தெரிந்த பிறகு, அவசர அவசரமாகத் திருமணத்தை ஷிம்ரித் மூலம் நடத்தியும் முடித்துவிட்டான்.


அனைத்தையும் ஷிம்ரித், விராஜ்ஜிடம் கூறி முடிக்க, “இவ நிஜமா லூசே தான். இடியட். லவ் பண்ணா சொல்லித் தொலைக்க வேண்டியது தான.. எதுக்கு தானும் குழம்பி அவனையும் இழுத்து விட்டிருக்கா” என எரிச்சலில் கூறினான் விராஜ்.


ஷிம்ரித் “அவன் எதாவது லீக் பண்ணிட்டா.. ப்ரிக்காஷன் எதுவும் பண்ணிருக்கியா?”


“ம்ம்.. ஒரு பி.ஆர் டீம் இதுக்குனு தனியா செட் பண்ணிருக்கேன்.. எப்பவும் அலாட்டா இருக்க சொல்லிருக்கேன். ஏ.ஐ மூலமாவும் வாட்ச் பண்ணிட்டே இருக்க சொல்லிருக்கேன். எந்த வீடியோ வந்தாலும் உடனே டெலிட் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சிருக்கேன்” எனக்கூற,


ஷிம்ரித் “சரி நாளைக்கு அவன் கிட்ட காம்ப்ரமைஸ் பேசுவோம்”


“கம்பெனில இருந்து ஒரு செங்கல் கூட அவனுக்குத் தரமாட்டேன்” எனக் கோபமாகக் கூறி வெளியே சென்றான் விராஜ். உள்ளுக்குள் எரிமலை எரிந்து கொண்டிருந்தது. இனி சூர்யான்ஷ்ஷை ஒழிக்காமல் அடங்காது அந்த தீ🔥.
 
Top