எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

Thalam 2

subageetha

Moderator

ராகம் : தோடி

தாளம் : ஆதி

பல்லவி

உத்தாரந்தாரும் ஐய எனக்கு

ஒருவருமில்லை நான் பரகதியைடய [உத்தார]

வித்தைகள் கற்றதுமில்லை யாெனாரு

பத்தியிற் சென்று பரகதியைடய [உத்தார] குற்றங்க லெத்தைன கொடிேய செய்தேன் அத்தைனயும் பொறுத் தாதரவாக

என்று கோபால கிருஷ்ண பாரதியின் தோடி ராக பாடலை பாடி கொண்டிருந்தாள் செல்வா.

பொதுவில் தோடி ராகம் பாடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். இத்தனை வருஷ அனுபவம் அவளுக்கு அதை அவளுக்கு சுலபமாக்கியிருந்தது.

மனம் முழுவதும் தங்கையை நினைத்து கவலை.

'வேண்டாம்' என்று சொன்ன பிறகும் இந்த பெண் இப்படி இழுத்து வைத்துக்கொண்டு இருக்கிறாளே!

தங்கையின் கால்கள் வேறு சற்றே அதிக வீக்கம் கண்டிருக்க, 'ஏர் கிராக்' என்றார் மருத்துவர். அவளுடைய நடன வகுப்புகளையும் சேர்த்து இவளே எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம்.

அபர்ணாவுக்கும் முன்னே நடனம் பயின்றவள் தான் செல்வம்பிகா. அரங்கேற்றம் செய்தவளுக்கு அதற்குப் பிறகு பயிற்சிகளில் பெரிய அளவிற்கு ஈடுபாடு வரவில்லை.

நல்ல குரல் வளம் கொண்ட அந்த பெண்ணை இசை தானாகவே வலுவாக சென்று அணைத்துக் கொண்டது.இன்று நிச்சயம் வேறு வழி இல்லை.. எப்படியும் அபர்ணாவிற்கு சரியாகி அவள் நடனம் ஆடவும், சொல்லி கொடுக்கவும் வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகிவிடும். இரண்டு மாதங்களுக்கு நடன பயிற்சியை யாரும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.

அப்படி நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அகாடமியில் நடன பயிற்சி பற்றி மறந்துவிட வேண்டியது தான்!

செல்வாம்பிகையின் மனதில் அழுத்தம் கூடிப்போயிற்று. இன்னொரு புறம் தங்கையின் மீது அளவில்லாத கோபம். சுற்றியுள்ளவர்கள் தூண்டி விட்டால் இவளுக்கு எங்கே போனது அறிவு?

எதற்கோ ஆசைப்பட்டு இன்று எவ்வளவு பெரிய நஷ்டம்.. தன்னையும் அறியாமல் தனது அம்மா செல்லம்மாவைப் பற்றியும் அவளது எண்ண ஓட்டங்கள் சுத்தி பிடித்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த விஷயங்களினால் செல்லம்மாவிற்கு எந்த நஷ்டமும் இல்லை. ரகு அம்மாவின் செலவுகளை பார்ப்பார்.

அதுவும் கூட மகளுக்கு மனதில் வலித்தது.

மருந்துகளின் உபயத்தினால் கொஞ்சம் வலியை மறந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தனது சிறிய மகளை வைத்த கண் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. அபர்ணாவின் உருவவாகு செல்லமாவின் ஜெராக்ஸ் என்பது போல் இருந்தது. தன் மனதிற்குள் பெருமூச்சு விடும் செல்லம்மா, "இந்த பெண்கள் இருவருக்கும் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று என்ன தலை எழுத்து? அவர்தான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்கிறாரே? இந்த வயதிலேயே இவ்வளவு சுயமரியாதை வைத்துக் கொண்டு என்னதான் செய்யப் போகிறார்களோ, அதுவும் பெற்ற தகப்பன் இடத்தில் " என்று தனக்குள்ளே கூறிக் கொண்டாள். அவளுக்குள் பெரியதாக தாலி கல்யாணம் போன்றவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. தாலி எனும் மஞ்சள் கயிறை மட்டும் வைத்து இருவரின் மனத்தை கட்டி போட முடியுமா என்ன? எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் தானே எங்களை இவ்வளவு தூரம் நகர்த்தி வந்திருக்கிறது.. இந்த பெண்களுக்கு இதெல்லாம் புரிவதில்லை என்று எண்ணிக் கொண்டவராக, தனது இரண்டாவது மகளின் அறையில் இருந்து வெளியே வந்தாள் செல்லம்மா.

தனது அம்மாவை பார்த்த செல்வா, 'அம்மா ' என்று மென்மையாக அழைத்தாள். தன் அம்மா மீது இரண்டு பெண்களுக்குமே அதீத பாசம் இருக்கிறது. அந்த பாசம் அம்மா செய்த தவறுகளை எல்லாம் பின்னே செல்ல வைத்து விட்டது. செல்லம்மாவை பொருத்தவரை காதலாக தெரியும் விஷயம், அவளது இரண்டு பெண்களுக்கும் ஏமாளித்தனமாக தெரிகிறது. தன் அப்பா தன் அம்மாவை ஏமாற்றி விட்டார் தங்களையும் இவ்வாறு நிற்க வைத்து விட்டார் என்ற எண்ணம். அதனாலேயே அம்மாவை குறை சொல்வதில்லை. இத்தனைக்கும் செல்லம்மாவின் வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை. ரகுவின் துணை இல்லாமலேயே கூட, அவளால் தனது இரு பெண்களையும் வளர்த்திருக்க முடியும். ஆனால் செல்லம்மாவிற்கு ரகுவின் மீதான காதல் அவரது இரு பெண்களுக்கும் புரிந்து இருக்கிறது. அவர்கள் இருவரை பொறுத்த வரை அம்மா மீது பரிதாபம் தான்!

தன் அம்மாவை அழைத்த செல்வா, "நம்ம அப்பு, திரும்ப கிளாஸ் எடுக்க ஆரம்பிக்க எப்படியும் ரெண்டு மாசம் ஆயிடும். அதுவரைக்கும் வெறும் பாட்டு மட்டும் வெச்சு ஓட்ட முடியாது.

போதாத குறைக்கு இப்பொழுது அபர்ணா தனது கல்லூரிக்கு வேறு விடுப்பு எடுத்து ஆக வேண்டும். திரும்ப கல்லூரிக்கு போகும்போது, பெண்டிங்ல இருக்கிற பாடத்தை எல்லாம் அவள் கத்துக்கிட்டு ஆகணும்.

அதனால அவ திரும்ப வர வரைக்கும், பரதநாட்டியம் வகுப்புகளை நான் ஹேண்டில் பண்ணலாம்னு நினைக்கிறேன்."

"நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று தன் அம்மாவின் முகத்தை பார்த்தாள்.

செல்லம்மாவிற்கு தன் மகள் என்ன கேட்க இருக்கிறாள் என்பது புரிந்து விட்டது. அதுக்கு என்ன, "நீ டான்ஸ் கிளாஸ பாத்துக்கோ.. உனக்கு டைம் இல்லன்னா உன்னுடைய ஸ்டூடண்ட்ஸ் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்."

"அவங்களுக்கான டைம் மட்டும் சேஞ்ச் பண்ண வேண்டியது இருக்கும்.

உன்னோட குரூப்ல காமன் மெசேஜ் போட்டுடு "என்று கொஞ்ச நேரம் அகாடமி பற்றிய பேச்சுகளில் நேரத்தை கழித்தவர்கள், மாலை நேரம் தொடங்குவதில் வகுப்புகள் அழைக்க அகாடமி நோக்கி கிளம்பி விட்டார்கள்.

அபர்ணா அடிபட்டது தெரிந்து ரகு, நிதானமாக ஒரு வாரம் கழித்து தான் வந்தார். தந்தையின் வருகையை விரும்பாத, அபர்ணா முகம் சுழிக்க, செல்லமோ ரகுவிடம் ' அவளுக்கு இன்னும் வலி குறையலங்க.. அதான் இப்படி இருக்கா ' என்று சமாளிக்கப் பார்த்தாள். செல்லத்தின் முயற்சிகளை பார்த்த ரகுவுக்கு சிரிப்புதான் வந்தது. அபர்ணாவுக்கு அவரை சுத்தமாக பிடிக்காது என்பது, அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

பிறகு எதற்கு இந்த சமாளிப்பு?

செல்லத்திடம் எதுவும் சொல்லாமல், மெல்லிய தலை அசைப்புடன் ஹாலுக்கு வந்துவிட்டார் ரகு. ஹாலில் அமர்ந்திருந்த ரகுவிற்கு, காப்பியும் முறுக்கும் கொடுத்துவிட்டு தானும் அங்கேயே உட்கார்ந்து கொண்டாள் செல்லம்.

சோஃபாவில் தன் மீது இடிக்காமல் சற்றே தள்ளி அமர்ந்திருந்த செல்லத்தின் மீது ரகுவுக்கு கோபம் தான் வந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், செல்லத்தின் கைகளை மெல்லியதாக பிடித்து தன் அருகில் வருமாறு இழுத்தார் ரகு.

முதன்முறையாக, செல்லத்தின் மனதில் குற்ற உணர்ச்சி! பெண் அடிபட்டு உள்ளறையில் படுத்து இருக்கிறாள். ரகுவின் தொடுகையே சொன்னது அவரது தேவை என்ன என்று?

அப்படியென்றால் அவருக்கு தேவை இந்த சதை மட்டும் தானா.. மகள்களைப் பற்றிய அக்கறை எல்லாம் இல்லையா? "ஏங்க! அப்பு உள்ளே படுத்திருக்காங்க" என்று மெல்லிய குரலில் சொன்ன செல்லத்தை முறைத்தான் ரகு.

"அதுக்கு இப்போ என்னங்குற?"

"இல்லங்க..இப்போ இது வேணாமே... எனக்கு மனசு கஷ்டமா இருக்கு "

"அபர்ணாவுக்கு எப்போ சரியாகும்?"

"இன்னும் ஒரு மாசமாவது ஆகும் "

"அப்போ அதுவரைக்கும் நீ என் பக்கத்துல வர்றாம விரதம் இருக்க போறீயா...எவ்ளோ ஆசையா வந்தேன்.

உன் கூட படுக்கிறேன்னு அவ என்னைய கிட்டவே சேக்க மாட்டேங்குறா(?), நீ பொண்ணுக்கு முடியல.. புண்ணுக்கு முடியலன்னு என்னய தூரமா நிறுத்துற..."என்று கத்த தொடங்கினான் ரகு.

மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய தனியறை நிகழ்வுகள்,மாலை ஐந்து மணிக்கு செல்வா கல்லூரியிலிருந்து வரும் வரை முடிவுக்கு வரவில்லை. இல்லையில்லை... ரகு முடிக்க விடவில்லை.

இரண்டு முறை உறக்கம் களைந்து அபர்ணா, கழிவறை போக வேண்டும் என்று தன் அம்மாவை அழைத்து பார்த்தாள். அம்மா வராமல் போகவே, மதியம் உறங்கி இருக்கக்கூடும் என்று தானாகவே நினைத்துக் கொண்டவள், ஸ்டிக் துணையுடன் தானாகவே சென்று வந்து விட்டாள்.

செல்வா வரும் நேரம் வேண்டுமென்றே தான் ரகு, செல்லம்மாவுடன் சல்லாபம் நடத்திக் கொண்டிருந்தான். இன்று செல்லம்மா தயங்கியதன் விளைவு. அதற்கான தண்டனை இது.

செல்லம்மாவின் அறை கதவு லேசாக திறந்திருந்தது. மனம் ஒன்றாத நிலையில் செல்லமா அறைக் கதவை தாழிட மறந்து இருந்தாள். அம்மாவை தேடிக்கொண்டு செல்வா, செல்லம்மாவின் அறைக்குள் செல்ல, செல்வா கண்ட கோலம்.

வேகமாக வெளியே வந்து விட்டாள். மகள் பார்த்து விட்டாள் என்று தெரிந்தும் கூட, ரகு செல்லத்தை எழுந்து செல்ல அனுமதிக்க வில்லை. ஹால் சோபாவில் அமர்ந்திருந்த செல்வாவின் மனது முழுதாக வெறுப்படைந்திருந்தது.

கல்யாண பருவத்தில் இருக்கும் மகள் பார்க்கும் விஷயமா இது?

'கதவை கூட தாழிடாமல் இது என்ன... 'களைத்துப் போய் வெளியே வந்தாள் செல்லம்.மகளின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் கூசியது அவளுக்கு.

ரகு இன்னும் அறைக்குள்தான் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் மனைவிக்கு மெனோபாஸ் சமயம். அவளால் இவன் கேட்கும் படிக்கு நடக்க உடம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இங்கே செல்லத்திடம் உணர்ச்சிகள் வடித்ததில் இப்போது உறக்கம்.

கோவத்தை காட்டும் வழி தெரியாமல் செல்வா சமையல் அறைக்கு சென்று அம்மா - அப்பா இருவருக்கும் சூடாக பாதாம் பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாள்.

" ரொம்ப ஹார்ட் ஒர்க் இல்லையாம்மா... நீ ஒரு கப் குடிச்சிட்டு அவருக்கும் கொண்டு குடு. ரெண்டுபேரும் களைச்சு போய் இருப்பீங்க" என்று சொல் அம்பு எய்துவிட்டு அபர்ணாவின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.

செல்லாவிடத்து கோபம் அவள் கண்களில் இருந்து நீராய் வந்து கொண்டிருந்தது. இது போன்ற ஒரு நிகழ்வை அவள் பார்ப்பது இன்று புதியதில்லை. ஏற்கனவே இரண்டு மூன்று முறை ஆயிற்று. அப்பொழுதெல்லாம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். பெரியதாக ஒன்றும் புரியவில்லை. ஆனால் இன்று தங்கை உடம்பு சரி இல்லாமல் இருக்கும் நேரத்தில் கூட இது போன்ற ஒரு நிகழ்வை அவள் எதிர்பார்க்கவில்லை.

'அப்படி என்றால் சக மனிதர்களை விட காம உணர்ச்சி தான் பெரியதோ? 'என்ற எண்ணம் அவளை வதைத்தது.

அப்பா நிர்பந்தம் செய்திருந்தால் கூட அம்மா ஒப்புக் கொண்டிருக்க கூடாது என்றுதான் செல்வாவின் மனதில். மகளின் நடவடிக்கையில், கூனிக் குறுகிபோய் நின்று கொண்டிருந்தாள் செல்லம். கையில் அவள் வைத்து கொண்டு இருந்த பாதாம் பாலில் அவள் கண்ணீரும் கலந்தது.

ரகு தன் மீது வைத்திருப்பது வெறும் காமம்தான்! என்ற உண்மை அவள் கண்ணீரை இன்னும் வேகமாய் உற்பத்தி செய்ததில் ஆச்சரியம் என்ன? இத்தனை வருஷங்களில் மகள்கள் மீது கொஞ்சம் கூடவா பாசம் வளரவில்லை? இவருக்கு குழந்தைகள் மீது தந்தை எனும் பாசம் இல்லாத போது குழந்தைகளுக்கு மட்டும் எப்படி இவர் மீது பிடிமானம் இருக்கும்?

'நான் மட்டும் போதுமா.. இந்த உடலும் இதன் அழகும் இல்லாவிட்டால்.. என்னை விட்டு விடுவார் இல்லையா? 'இன்று தன் மனதோடு கேள்விகள் கேட்டுக் கொண்டாள் செல்லம்.

நல்ல வேளை உடம்பு சரி இல்லாத நேரத்தில், வீட்டின் நிகழ்வுகள் எதுவும் தெரியாமல் அபர்ணா தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

 
Top