Lufa Novels
Moderator
அவனோடு இனி நானா!
அத்தியாயம் 26
அறையில் கட்டிலில் அமர்ந்தபடி நிஹாரிகா அஃஷராக்கு பசியாற்றிக் கொண்டிருக்க, அவர்கள் அருகே படுத்த பிரணவிகாவோ ஒரு கையால் அஃஷராவின் பட்டு காதுகளை வருடிக் கொடுக்க, கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.
நிஹாரிகா “பெருசா எதோ சிக்கல்ல மாட்டிட்டியா?” எனக்கேட்க, நிமிர்ந்து பார்த்தாள் பிரணவிகா.
“பிரச்சனைன்னு தெரியும் ஆனா என்ன பிரச்சனைன்னு இன்னும் எனக்குத் தெரியாது. நீ கல்யாணத்துக்கு ஓ.கே சொன்னப்பவே எனக்குப் புரிஞ்சு போச்சு.. எதோ ப்ராப்லம்னு.
ஷிம்ரித் மாதிரி விஹானும் பொறுப்பான ஆள் தான் அதனால தான் உங்க கல்யாணத்துக்கு நான் அப்போஸ் பண்ணல. கவலைப்படாத நாங்க எல்லாரும் இருக்கோம்ல எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்.. எல்லாம் சரி ஆகிடும். ஓ.கே வா” எனக்கேட்க, மெல்ல தலையசைத்தாள்.
“பிரச்சனைக்காக விஹான ஓ.கே சொல்லிட்ட.. கல்யாணமும் ஆகிடுச்சு.. அது..” எனத் தயங்கினாள் நிஹாரிகா. விஹானுடன் நல்லா விதமாக வாழ வேண்டுமே என்ற தவிப்பு அவள் பேச்சில் தெரிந்தது.
“எனக்கு ஓ.கே தான் க்கா.. கொஞ்ச நாள்ல செட் ஆகிடும்” என்றாள் தமக்கை தன்னிடம் கூற வருவது புரிந்து.
“ம்ம். அவர புரிஞ்சுக்கோ.. உடனே எல்லாம் மாறிடாதுன்னு எனக்கும் தெரியும் ஆனா நீ தான் முயற்சி பண்ணி செட் ஆகனும். விஹானுக்கு உன்னைப் பிடிக்கும் அதனால அந்தப் பக்கம் பிரச்சனை இருக்காது. எல்லாம் உன் கையில தான் இருக்கு. சக்ஸஸ் ஃபுல்லா நல்லா வாழனும்” என ஒரு தமக்கையாக அறிவுரைக் கூறினாள்.
“ம்ம்” என மட்டும் தலையசைத்தாள் இப்போதும் கூட ‘தன் மனதிலும் அவன் தான் இருக்கிறான்’ என அவள் வெளிப்படுத்தவே இல்லை.
குழந்தையும் உறங்கிவிட பிரணவிகா அருகில் குழந்தையைக் கிடத்தியவள், “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் போய் அத்தைய பார்த்துட்டு வாரேன். உனக்கு எதாவது வேணுமா?” எனக் கேட்க,
“ஒரு பாராசிட்டமால் டேப்லட் இருந்தா மட்டும் கொடுங்கக்கா.. ரொம்ப தலைவலிக்குது” எனக்கூற, அவளோ அங்கிருந்த மேஜையில் தேடிக்கொண்டே,
“சாப்பிடாமயா போட போற? இங்க தான் இருந்தது காணோம். அத்தை கிட்ட இருந்தா வாங்கித்தரேன். சாப்பிட்டு போடு” எனக்கூற,
“இல்லக்கா எனக்கு சாப்பாடு வேணாம்.. சாப்பிட முடியாது” எனக்கூற, அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போனால் பாலை தவிற எதுவும் அவள் வயிற்றுக்குள் செல்லாது என்பது நிஹாரிகாவுக்கும் தெரியுமாதலால்,
“சரி படு. பாலும் டேப்லட்டும் கொண்டு வாரேன்” எனக் கீழே சென்றாள். அங்கு கல்பனா இரவு உணவு எல்லாம் தயாரித்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைத்துக்கொண்டிருந்தார்.
“அத்தை பாராசிட்டமால் இருக்கு?”
“எதுக்கு நிஹாம்மா? உடம்புக்கு முடியலயா என்ன?” என மருமகளை சோதனை செய்ய,
“எனக்கு இல்லத்த பிரணிக்கு தான். தலைவலின்னா”
“வலிக்கத்தான செய்யும். அழுதுக்கிட்டே இருந்தாளே!” என்றபடி மாத்திரையைத் தேடி எடுக்க, நிஹாரிகா பாலை எடுத்துக் கொண்டு வந்தாள். அப்போது தான் சரியாக அண்ணன் தம்பி மூவரும் வர,
நிஹாரிகா “விஹான் உங்க பொண்டாட்டிக்கு தலைவலியாம். இத கொண்டு போய் கொடுத்திடுங்க. எங்க ரூம்ல தான் இருக்கா” எனக்கூற,
“சாப்பிட்டு போடலாம்ல.. நான் போய் சாப்பிட கூட்டிட்டு வரேன்” என்றான்.
“அவ சாப்பிட மாட்டா இத மட்டும் கொண்டு போய் கொடுங்க” எனக் கையிலிருந்த பாலையும், மாத்திரையையும் நீட்ட, அனைவரையும் ஒரு பார்த்து விட்டு வாங்கிக் கொண்டு ஷிம்ரித்தின் அறைக்குச் சென்றான்.
கல்பனா “ஏம்மா சாப்பிட வந்த புள்ளைய அனுப்பிவிட்ட, நான் போய் கொடுத்துட்டு அவள பார்த்துட்டு வந்திருப்பேன்ல”
“அவ புருஷனே அவள பார்க்கட்டும் அத்தை.. நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம்” எனக்கூற, மருமகளை அர்த்தமாகப் பார்த்தார். அதில் நம்ம ஒதுங்கி நிற்போம் என்ற தகவல் இருக்க, மருமகளை அறிந்த மாமியாரும் தலையசைத்துக் கொண்டார்.
விஹானும் ஷிம்ரித்தின் அறைக்குச் சென்றவன் வழக்கம்போலக் கதவை லேசாகத் தட்ட,
“வாங்கக்கா” என்றாள் படுத்துக்கொண்டே, நிஹாரிகா தான் வந்திருக்கிறாளென நினைத்து,
விஹான் உள்ளே செல்ல, அங்கோ கட்டிலில் மல்லாக்க படுத்து, அவள் நெஞ்சில் அஃஷராவை போட்டு இரு கைகளாலும் குழந்தையை அணைவாகப் பிடித்துக் கொண்டு அழகு பதுமையாகப் படுத்திருந்தாள் கண்களில் மட்டும் கண்ணீர் கரை.
நிஹாரிகா கீழே செல்லவும் குழந்தை அழ, அவள் வழக்கமாகக் குழந்தையைத் தன் மேல் போட்டு உறங்க வைப்பது போலப் போட்டுத் தட்டிக்கொடுக்கவும் அவள் நெஞ்சை மஞ்சமாகக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள் அவ்வீட்டு குட்டி இளவரசி.
தன் இரு இளவரசிகளும் ஒன்றாக உறங்குவதை ரசித்துக் கொண்டே அவளருகில் வந்தவன், “க்கூம்” எனச் செறும, அவன் குரலில் படாரெனக் கண் விழித்தாள். ஆனால் அவள் படுத்திருக்கும் நிலையில் அவளால் உடனே எழும்பவும் முடியவில்லை.
அவனே அவள்மேல் உறங்கும் குழந்தையைத் தூக்க, அவன் கைகள் தாராளமாக அவள் அங்கங்களைப் பரிசித்தது. இருவருக்குமே மின்சாரம் பாய்ந்த உணர்வு தான் ஆனால் இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிறப்பாக நடித்தனர்.
குழந்தையை அவளிடமிருந்து பிரித்துத் தனியே படுக்க வைத்தவன், மெல்லிய குரலில்,
“என்னாச்சு.. தலைவலின்னு அண்ணீ சொன்னாங்க?” என அவன் கேட்க அவளுக்குத் தான் வார்த்தையே வரவில்லை.. இவனுக்கு இவ்வளவு மென்மையாகப் பேச வருமா என்று தான் தோன்றியது. தலைகவிழ்ந்தே இருந்தாள்.
“சரி விடு. இந்தா இந்த பால குடி” எனக் கொடுக்க,
“இல்ல பசியில்ல.. டேப்லெட் மட்டும் போதும்”
“நீ டாக்டர்க்கு தான படிக்கிற.. உனக்கு நான் பாடம் எடுக்கனுமா என்ன?” என மீண்டும் பழைய விஹான் வெளியே வர, படாரெனக் கையை நீட்டி அவனிடமிருந்து வாங்கி குடித்தாள். குடித்து முடிக்க மாத்திரையையும் கொடுத்து விட்டு, “ரெஸ்ட் எடு” எனக்கூறிவிட்டு அவ்வறையை விட்டு அவன் வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே விட முடிந்தது.
‘இதுக்கே இப்படின்னா இனி தினமும் என்ன பண்ண போறேன்’ என நினைத்தவள் கைகள் தன்னால் அவள் மார்புக்கு மேல் சென்று பச்சைகுத்தியிருந்த அவன் பெயரை வருடியது.
குனிந்து பார்த்தாள் விஹான் என்னும் பெயர் சீன மொழியில் எழுதப்பட்டிருந்தது. அது பெயர் என்றே யாருக்கும் தெரியாதபடி அதைச் சுற்றி கொடி போன்று வடிவமைத்துக் கொடியில் பூக்களுக்குப் பதிலாகச் சிவப்பு நிறத்தில் இதயங்கள் பூத்திருப்பது போல அழகாக இருந்தது.
சீன மொழி தெரியாத நபர் பார்த்திருந்தால் இது விஹானின் பெயர் எனக் கனிக்க முடியாது, செடி தான் பச்சைகுத்தப் பட்டிருக்கு என நினைக்கும்படி இருந்தது. சூர்யான்ஷ், விஹான் இருவரும் காஸ்மெட்டிக்ஸ் இண்டெஸ்ரியில் இருப்பதாலும், இருவருமே சீனாவுக்கு அடிக்கடி சென்று வந்ததாலும் அந்த மொழி அவர்களுக்குப் பரிச்சயம் என்பதை அறியாமல் போனாள் அந்தப் பேதை.
அவள் கைகள் விஹானின் பெயரை வருட அவள் நினைப்போ அவனையே சுற்றி சுற்றி வந்தது. சிறுவயதிலிருந்தே அவளுக்கு விஹானைப் பிடிக்கும். ஏன் ஷிம்ரித், விராஜ்ஜை விட அதிகமாக அவனைத் தான் பிடிக்கும். சிறுவயதில் அவனுடனேயே சுற்றுவாள்.
ஆனால் இளமை பருவத்தில், ஷிம்ரித், விராஜ்ஜை சகஜமாக உறவு என்ற வட்டத்துக்குள்ளும், நண்பன் என்ற வட்டத்துக்குள்ளும் கொண்டுவந்து அவர்களிடம் இலகுவாகப் பேசியவளுக்கு, விஹானை மட்டும் அப்படி பார்க்க முடியவில்லை.
அவனை நேர்கொண்டு பார்க்க இயலாமல் கள்ள பார்வை பார்க்க ஆரம்பித்தாள். அவனிடம் அவள் பேசுவதே கிடையாது அவன் வருகிறான் என்றாளே அவளுக்குள் ஏதோ ஆகிவிடும்.. அவ்விடத்தில் நில்லாமல் ஓடிவிடுவாள் அதுவே மற்றவர்கள் பார்வைக்கு அவள் அவனுக்குப் பயப்படுகிறாளென எண்ண வைத்தது. ஆனால் அவளோ அவனைப் பார்க்கவே இங்கு வருவாள், அவனை ஒளிந்து நின்று ரசிப்பதை வாடிக்கை ஆக்கினாள்.
அவனும் அப்போதெல்லாம் படிப்பு, தொழிலைக் கற்றுக்கொள்வது என அதன் பின்னால் சுத்த பிரணவிகா அவனை விட்டு விலகியிருப்பதை உணரவில்லை. அவள் தன்னை காதலாகப் பார்ப்பதையும் அறியவில்லை அதுவே அவளுக்கு இன்னும் வசதியாகி போக அவனைக் கள்ளத்தனமாக ரசித்துக்கொண்டு வலம் வந்தாள்.
அப்போது யாருக்கும் தெரியாமல் தன் பள்ளித்தோழியோடு சென்று பச்சைக்குத்திக் கொண்டது தான் இது. அவனை ஒருதலையாகக் காதலித்து வந்தாள். அவனைப் பார்ப்பதற்காக இங்கு அடிக்கடி வருவதற்க்காகவே விராஜ்ஜூடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டாள்.
கவிதாவின் பார்வையில் விஹானை இவள் கள்ளத்தனமாகப் பார்ப்பது விழவில்லை ஆனால் விராஜ்ஜூடன் சுற்றுவது அப்பட்டமாகத் தெரிந்ததால் தான் அவளையும், கார்த்திகாவையும் அசிங்கமாக பேசி பிரணவிகாவை நோகடித்தார்.
அன்று எடுத்த முடிவு தான் விஹானிடமிருந்து தள்ளி இருப்பது என்று. அன்றிலிருந்து அவனைப் பார்பதை தவிர்த்தாள். அவனை நினைப்பதை குறைத்தாள். அவனிடமிருந்து இன்னும் தூரம் சென்றாள்.
விஹானின் குணம் அவளுக்குப் பிடிக்காது என அவளே தம்பட்டம் அடித்தாள். அவனையும் அவளுக்குப் பிடிக்காது என அனைவரையும் நம்ப வைத்தாள். தனக்கு வரப்போறவன் இப்படி தான் இருக்க வேண்டும் எனப் பிரின்ஸ் பிரின்ஸ் என அழைய ஆரம்பித்தாள்.
அனைத்தும் வெளியுலகத்துக்கு மட்டும் தான். ஆனால் மனம் அவனை விட்டு வராமல் சண்டித்தனம் செய்ய அதனை அடக்கப் பெரும்பாடுப்பட்டாள்.
கொஞ்சம் வளர இவளது குறும்பு, சேட்டை எல்லாம் விஹானையும் கவர ஆரம்பித்தது தான் விதியோ! அவன் தன்னை விரும்புகிறானென ஒரு கட்டத்தில் அவளுக்குமே தெரிய மனம் குத்தாட்டம் போட்டது என்னமோ உண்மை.
ஆனால் கவிதாவின் வார்தைகள் அவள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து இருந்ததால் அவளால் விஹானை நெருங்க முடியவில்லை இல்ல நெருங்க முயற்சிக்கவே இல்லை. அவனாக அவளை நெருங்கி வந்தாலும் அவள் அதற்கு இடமளிக்கவும் இல்லை.
ஒதுங்கியே இருக்க பழகிக் கொண்டாள். ஆனால் தற்போது விஹான் அவளிடம் மிகவும் நெருங்கி வருவதும், அவளைக் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதுமாக அவளிடம் எல்லை தாண்டி நெருங்க ஆரம்பிக்கவும் தான் அவள் அவனிடமிருந்து எப்படியாவது விலக வேண்டுமென நினைத்தவள் சூர்யான்ஷ் விரித்த வலையில் தானாகச் சென்று மாட்டினாள்.
சூர்யான்ஷ் விஹானின் எதிரியென நன்றாகவே தெரியும். இவள் அவனிடம் பழகினால் விஹான் தன்னால் அவளிடமிருந்து விழகிவிடுவானென நினைத்தாள்.
விஹானை மறப்பதற்கு இது தான் ஆயுதம் என நினைத்தாள். பிற்காலத்தில் சூர்யான்ஷ் மேல் தன்னால் காதல் வந்துவிடும் என நினைத்து அவன் காதலையும் ஏற்றுக் கொண்டாள்.
விஹானை மறக்கக் கடினமாக இருந்தாலும், மனதின் ஓரம் அதை ஒதுக்கிவிட்டு, சூர்யான்ஷ்ஷூடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேற நினைத்துத் தான் அன்று கவினிடம் சூர்யான்ஷ்ஷை அறிமுகம் செய்து வைக்க அவனைத் தேடி சென்றாள்.
அதற்குப் பிறகு நடந்த அனைத்தும் அவள் கனவிலும் நினைத்துப் பாராரது. சூர்யான்ஷ் அவளிடம் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வானென அவள் நினைக்கவே இல்லை. இன்னும் அவன் செய்யது முழுதாகத் தெரியாத போதே இப்படியென்றால் அவன் செய்த மொத்தமும் அவளுக்குத் தெரியவரும்போது அவளின் நிலை என்னவோ!
அவள் எது நடக்க வேண்டும் என ஆசைப் படுகிறாளோ அது அவள் வாழ்வில் நடக்கவில்லை. ஆனால் எது நடந்தேவிடக் கூடாது என நினைத்தாளோ அது தான் நடந்தது.
கவிதாவின் முன்னால் தானும், தன் குடும்பமும் தலைகுனிய கூடாது என நினைத்தாள் ஆனால் இன்று அவர் விட்ட வார்த்தைகள் அவளையும், அவளைப் பெற்றோரையும் இன்று மட்டுமல்ல என்றுமே உறங்கவிடாது மனதில் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டே இருக்கும்.
அனைத்தையும் நினைத்தவள் இப்போது கவினையும், கார்த்திகாவையும் நினைத்து மீண்டும் அழ ஆரம்பித்தாள். கைப்பேசியை எடுத்து கவினுக்கு அழைத்தாள். அழைப்பு சென்றதே ஒழிய ஏற்கப்படவில்லை. கார்த்திகாவுக்கு அழைத்தாள் அங்கும் அதே நிலைமை தான். மீண்டும் மீண்டும் இருவருக்கும் அழைத்துச் சோர்ந்து, சாத்விக்கு அழைக்க,
“கேர்ள் ப்ளீஸ் இப்போ நான் பேசுற நிலைமையில இல்ல” என விசும்பியபடி அழைப்பை நிறுத்திவிட, இப்போது அவள் வாழ்க்கையும் தன்னால் சிக்கலாகிவிட்டது என நினைத்து இன்னும் கலங்கினாள்.
அனைவரும் சாப்பிட்டு அவரவர் அறைக்குச் செல்ல, கல்பனா நிஹாரிகாவிடம் பாலை கொடுத்து, பிரணவிகாவை விஹானின் அறைக்கு அனுப்பக் கூறினார். இன்றைக்கு இருக்கும் சூழலில் இதை மட்டும் தான் அவர்களால் செய்ய முடிந்தது.
ஷிம்ரித் “நான் மொட்டை மாடிக்குப் போறேன். நீ பிரணிய அனுப்பிட்டு எனக்குக் கால் பண்ணு வரேன்” எனக்கூறிவிட்டு செல்ல, நிஹாரிகா தன் அறைக்குச் சென்றாள்.
“பிரணி” என அழைத்துக் கொண்டே செல்ல,
“அக்கா” என எழுந்து நின்றாள்.
“இப்போ தலைவலி ஓ.கே வா? மாத்திரை போட்டியா?”
“ஓ.கே தான் க்கா”
“என்ன சொல்றதுனு எனக்குத் தெரியல.. ஆனா இந்த லைப் உன் கையில தான் இருக்கு.. அத எப்படி கொண்டு போகப் போறனு நீ தான் முடிவு பண்ணனும். யாரும் இகழ்சியமா பேசிடும்படி இருக்க கூடாது.
செல்ஃபிஷ்ஷா தான் யோசிக்கிறேன் எனக்கே தெரியுது.. நாங்க முன்ன நின்னு, எல்லாத்தையும் எதிர்த்துட்டு செஞ்சு வச்ச கல்யாணம் இது.. நீங்க நல்லா வாழ்றதுல தான் எங்க மரியாதையும் இருக்கு. பொம்மை கல்யாணம் போல ஆகிட கூடாது.
மனசால என் தங்கச்சி என் கூடவே கடைசி வரைக்கும் இருக்கனும்னு நினைக்கிறேன். இருப்ப தான?” எனக் கேட்க, தலை மேலும் கீழும் ஆட்டினாள்.
“இந்தா பால்.. விஹான் ரூம்க்கு போலாம் வா..” என அழைக்க, பிரணவிகாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.
“இல்லை.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு க்கா”
“இதுல என்ன இருக்கு? அவர் உன் ஹஸ்பண்ட் தான?”
“ம்ம்.. நீங்க வர வேண்டாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. நானே..” எனத் தயங்க, அவள் தயக்கத்தை புரிந்தவள்,
“சரி நீயே போ” என அவளை அனுப்பிவிட, ஷிம்ரித் அறைக்கும் விஹான் அறைக்கும் இடையே இருக்கும் சில மீட்டர் இடைவெளியைக் கடப்பது கண்டங்களைக் கடப்பது போல இருந்தது.
நகர மறுத்த கால்களை மிக மெல்லமாக நகர்த்தி அவனறையை நோக்கி வர, கவிதாவிடம் மீண்டும் தனிமையில் சிக்கினாள் பிரணவிகா.
கவிதாவின் பார்வையில் இப்பொழுதே செத்துவிட்டால் என்ன என்று எண்ணும்படி இருந்தது. அவ்வளவு கீழ்தரமான பார்வை. பார்வையே அப்படி இருந்தால் வார்த்தை.. நினைக்கவே அவளுக்கு நெஞ்சுக்குழியில் நீர் வற்றிவிட்டது.
“ச்சீ.. என்ன ஜென்மமோ! என்னமோ இப்ப தான் முதலிரவு போல என்னா நடிப்பு! இது எத்தனையாவது எண்ண முடியுமா? இல்ல எண்ணிலடங்காததா?” என வாய் கூசாமல் கேட்க, பூமி பிளந்து இப்போதே உள்ளே சென்றுவிட மாட்டேனாவென இருந்தது பிரணவிகாவுக்கு.
அதற்குள் “ம்மா!” என உச்சக்கட்ட கடுப்பில் கத்தியிருந்தான் விஹான்.
அவனைப் பார்க்கவும் விருவிருவென அவர் அறைக்குச் சென்று விட, பிரணவிகாவின் கையைப் பற்றி தானே தனது அறைக்கு அழைத்துச்சென்று கதவைத் தாழிட்ட நொடி மடங்கி அமர்ந்து கதறி தீர்த்தாள்.
அவளை எப்படி தேற்றுவதென அறியாமல், அவளருகில் தானும் மண்டியிட்டு ஆறுதலாக அவள் தோளைப் பற்ற, அவன் மடியில் கவிழ்ந்து அவ்வளவு கதறல். அவளை ஆசுவாசப்படுத்த அவன் கைகள் அவள் முதுகை தட்டிக் கொடுத்தது.