எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 26

Privi

Moderator

நாட்கள் மெதுவாக நகர்ந்தது...​

அன்று நீலனுக்கு விடுமுறை வீட்டில் இருந்தான். உமையாள் அவனிடம் வந்து​

"நீல வா நாம் கயல் வீட்டிற்கு சென்று வருவோம்" என கூறினாள்.​

அக்கா எதற்கு அழைக்கிறாள் என தெரியாதா அவனிற்கு? “எதற்கு அங்கு? நான் வரலை.” என்றான் முகத்தை சிடு சிடுவென வைத்துக்கொண்டு.​

“நீல இன்னும் எவ்வளவு காலம் கயல் உனக்காக காத்திருக்க வேண்டும் என நினைக்கிறாய். உனக்காக அவள் பொறுப்பாள் அவள் அம்மாவிற்கு என்ன? இன்னும் நீங்கள் காதலிக்கும் கதை கூட அவருக்கு தெரியாது.​

அவள் அம்மாவிற்கும் பெண்ணை இப்படி கல்யாணம் கட்டி கொடுக்காமல் இருப்பது கஷ்டமாக இருக்காதா?" என கேட்டாள் .​

நீலன், “அக்கா இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்" என உறுதியாக கூறினான்.​

"ஏண்டா?” என கேட்டாள் உமையாள்.​

"வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம்... என்னை தொல்லை செய்யதேக்கா" என கூறி அறையினுள் நுழைய சென்றான்.​

"நீல… நில்லுடா! காரணம் சொன்னால் தானே தெரியும் என்ன பிரச்சனை என்று.​

அறையினுள் செல்ல போனவன். ஒரு நிமிடம் நின்று, கண்களை மூடி திறந்து, பெருமூச்சு ஒன்றை ஆழ்ந்து இழுத்து விட்டு, திரும்பு அவளை பார்த்தான். அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து​

"சரி நான் கயலை திருமணம் செய்துகொள்கிறேன். ஆனால் அதற்கு முன்னாள் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்." என்று கூறினான் .​

அவன் கூறியதை கேட்டு ஒரு நிமிடம் அதிர்த்தவள், அடுத்த நிமிடமே முகம் சிவப்பேற அவனை பார்த்து முறைத்தாள்.​

"என்ன பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று தெரிந்து தான் பேசுகிறாயா? பைத்தியமா உனக்கு? உனக்கு எல்லாம் தெரிந்தும் இப்படி நீ பேசுவது சரியா நீல? என்று கோவமாக ஆரம்பித்து ஆதங்கமாக முடித்திருந்தாள்.​

அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவள் அருகினில் வந்து "உனக்குத்தான் அக்கா புரியவில்லை... உனக்கு இன்னும் வயசு இருக்கிறது. வாழ்க்கையும் இருக்கிறது. நீ இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டு இருக்கும் போது நான் மட்டும் எப்படி அக்கா கல்யாணம் கட்டி சந்தோஷமாக வாழ்வது.​

சரி இதை எல்லாம் விடு மகிழை பற்றி யோசித்தய்யா? வளர்த்து கொண்டு வருகிறாள், அன்று ழிணி அப்பா எங்கே? என்று கேட்டாள் நினைவுள்ளதா? இனியும் கேப்பாள், என்ன சொல்ல போகிறாய்?” என கேட்டான் நீலன்.​

அதற்கு உமையாளோ, “நீல இந்த பேச்சை இத்தோடு விடு... அவளிடம் எதோ ஒன்று சொல்லி சமாளிப்பேன். அப்படி முடிய வில்லை என்றால் உண்மையை கூட கூறுவேன். இனி என் வாழ்க்கையில் திருமணம் இல்லை.​

ஆனால் உனக்கு அப்படி இல்லை கயல் அம்மா அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். நான் நாமே பெண் கேட்பது போல் செல்ல போகிறேன்.​

நீ வந்துதான் ஆகணும். இதுதான் என் முடிவு. இனி இதனை பற்றி எந்த பேச்சும் இருக்க வேண்டாம்." என்று கூறி அங்கிருந்து விரைந்து அவள் அறையினுள் சென்றாள்.​

அவள் அறையினுள் மகிழ் உறங்கி கொண்டு இருந்தாள். அவளை பார்த்துக்கொண்டே இருந்தாள் உமையாள். அவள் கண்களில் கண்ணீர் சுரந்தது.​

சிலர் அவர்களின் தீய பழக்கத்தினால் அவர்கள் வாழ்க்கையையும் தாண்டி அவர்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே அழிப்பார்கள். அவர்களில் ஒருவன் தான் அருணும்.​

உமையாள் பேசி விட்டு சென்றவுடன் நீலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பார்வதி அம்மாவுக்கு அழைத்து அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை பற்றி கூறி வருத்தப்பட்டான்.​

அதற்கு பார்வதியோ "அவளிடம் நல்ல முறையில் இதனை பேச வேண்டும். சரி, விடு பேசி விட்டாய் இனி இதனை நான் பார்த்து கொள்கிறேன்.​

அடுத்தது உன் திருமணத்தையும் அவள் திருமணத்தையும் போட்டு குழப்பி கொள்ளாதே. உன் அக்கா தான் என் வீட்டு மருமகள் இதில் மாற்று கருத்து ஏதுமில்லை.​

முதலில் நீயும் உமையாளும் சென்று கயலை பெண் கேட்டு வாருங்கள். நானே ருத்ரனிடம் உமையாள் பற்றி பேசுகிறேன் என கூறினார்.​

இப்படியே அன்றைய பொழுது கழிய... மறுநாள் காலை கயலுக்கு அழைத்த உமையாள் இன்று வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தாள். காரணம் கேட்டதற்கு வேறு ஒரு வேலை இருப்பதாக கூறியிருந்தாள் அதனால் கயலும் அன்று வேலைக்கு செல்லவில்லை.​

இங்கு அவள் வீட்டில் நீலனிடம் "நீல இன்று மாலை நான்கு மணியளவில் நாம் மூவரும் கயல் வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்" என்று தகவல் மட்டும் சொன்னாள்.​

நேற்று நடந்த விவாதத்திற்கு பிறகு நீலனும் கயல் கூறியதற்கு மறுப்பு ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தான். தொலைபேசி மூலம் கயல் அம்மாவிற்கு அழைத்து இன்று அவள் அவர்களை பார்ப்பதற்கு வருவதாக மட்டும் கூறியிருந்தாள்.​

மூன்றரை மணியளவில் மூவரும் ஒன்றாக கயல் வீட்டிற்கு மல்லிகை பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு மற்றும் குங்குமம் அடங்கிய ஒரு தட்டுடன் புறப்பட்டார்கள்.​

கையில் தட்டுடன் வீட்டிற்கு வந்த உமையாளை பார்த்து குழம்பிய கயல் அம்மா முதலில் வந்தவர்களை வரவேற்று நீல்விருக்கையில் அமர வைத்தார். பின் அவர்களை யோசனை யோடு பார்த்தார்.​

அவர்கள் வந்த தோரணையே அவர்கள் எதற்கு வந்துள்ளார்கள் என கயலுக்கு எடுத்துரைத்தது. அமைதியாக வந்தவர்களுக்கு குடிப்பதற்கு காபி எடுத்துவர சமையல் அறையினுள் சென்று விட்டாள்.​

உமையாளும் நேரத்தை கடத்தாமல் கயல் அம்மாவை பார்த்து "அம்மா அன்று நீங்கள் கயல் திருமணத்தை பற்றி கூறினீர்கள் அல்லவா, நானும் அவளிடம் பேசினேன் என்னிடமும் அவள் காரணம் சரியாக கூறவில்லை. ஆனால் நான் பேசிய பிறகு திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள்.​

அப்போதுதான் எனக்கும் ஒரு யோசனை தோன்றியது. என் தம்பிக்கு வெளியே வரன் பார்க்க ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அருமையான பெண் பக்கத்தில் இருக்கும் போது வெளியே பெண் தேடுவது எனக்கும் சரியாக படவில்லை" என கூறினாள்.​

அவள் கூறுவது எதையோ உணர்த்த அவள் பேச்சினை கூர்ந்து கேட்டார் கயலின் அம்மா. மீண்டும் தொடர்த்தவள், அவள் அருகினில் அமர்ந்திருக்கும் நீலனை சுட்டிக்காட்டி​

"இவன் நீலகண்டன். நீலன் என அழைப்போம். என் தம்பி, தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறான். நல்ல வருமானம். நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.​

சில சமயம் அவனது வேலை காரணமாக அங்கு இருக்கும் மருத்துவர் ஹோஸ்டேலில் தாங்கிக்கொள்வான். எங்களுக்கு தாய் தந்தை இல்லை. இவனுக்கு நல்லது கேட்டது என அனைத்தையும் நான் தான் பார்த்தாக வேண்டும்.​

எங்களது மிக சிறிய குடும்பம். இதுவரை நான் எப்போதுமே கயலை வேற்று ஆளாக நினைத்ததில்லை. இப்போது உரிமையாக என் தம்பிக்கு மனம் முடித்து எங்கள் வீட்டு பெண்ணாகவே அழைத்து செல்வதற்கு உங்கள் அனுமதி கோரி வந்துள்ளேன்." என கூறி முடிந்தாள்.​

கயல் அம்மவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. கண் கலங்கி விட்டார். அவருக்கு முழு சம்மதம் தான் டாக்டர் மாப்பிள்ளை யாருக்கு கசக்கும் இருப்பினும் ஒரு நெருடல், தன் மகள் அப்படி ஒன்றும் படிக்கவில்லையே.​

அது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பின் கயல் அம்மா உமையாளிடம்,​

"கயல் உன்னுடன் வேலை செய்ததால் உனக்கு ஒன்றும் தோன்றாது ஆனால் மாப்பிள்ளை அப்படி இல்லையே. அவரின் வருங்கால மனைவியை பற்றி அவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா." என்று நீலனை பார்த்து தயக்கத்துடனே கூறினார்.​

நீலனோ "அக்கா முடிவுதான் என் முடிவு. அக்கா எனக்கு எப்போதும் நல்லதுதான் செய்வாள் என்று எனக்கு நன்றாக தெரியும்." என கூறினான்.​

உமையாள் மனத்திலோ 'அடப்பாவி என்னமோ என்னால்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னது போலவே கூறிகிறாயே. யப்பா! நல்ல நடிப்புடா' என நினைத்து கொண்டாள்.​

இதனை முகத்தில் காட்டாமல் "மாப்பிள்ளை முடிவை கேட்டுவிடீர்கள் தானே இப்போது உங்கள் முடிவை கூறலாமே" என தன்மையாகவே கேட்டாள்.​

கயல் அம்மாவும் "என்ன கேள்வி இது? மாப்பிள்ளைக்கு சம்மதம் என்றால் என்னை கேட்கவும் வேண்டுமா? எனக்கு முழு சம்மதம் என முகமெல்லாம் பூரிப்பாக கூறினார்."​

இவை அனைத்தையும் சமையல் அறையினுள் இருந்து கேட்டுகொண்டிடுந்தா கயலுக்கு சந்தோசம் ஒருபுறம் இருந்தாலும் குழப்பங்களும் நிறையவே இருந்தது.​

காயல் அம்மாவும் "கயல் வந்தவருக்கு காபி கொண்டு வாம்மா" என கூறி அவர்களிடம் ஒரு நிமிடம் என சொல்லி உள்ளே சென்றார். கயலிடம் சென்றவர் உனக்கு நல்ல வரன் அமைத்திருக்கு, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.​

போம்மா... போய் நல்ல புடவை ஒன்றை உடுத்தி வா அதற்குள் நான் காபி போட்டு ன்வைக்கிறேன் என அவளை அனுப்பி வைத்தார். கயலும் நல்ல அழகான சேலை ஒன்றை கட்டி அவர்கள் முன் காபி ட்ரேயுடன் வந்து நின்றாள்.​

காபியை எடுத்து அருந்திவிட்டு உமையாள், கொண்டு வந்த மல்லிகை சாரத்தை கயல் தலையில் சூடிவிட்டாள். பின் நிச்சயத்திற்கும் கல்யாணத்திற்கும் நல்ல நாள் பார்த்து கூறுவதாக சொல்லிவிட்டு உமையாள் குடும்பம் அங்கிருந்து புறப்பட்டனர்.​

அவர்களின் நாள் அப்படி கழிய பார்வதி வீட்டிலோ ருத்ரன் அப்போதுதான் அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்தான். வந்தவன், "அம்மா ரொம்ப அசதியாக இருக்கிறது எனக்கு ஒரு இஞ்சி டீ போட்டு வையுங்கள்.​

நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று கூறினான். சென்றவன் பத்து நிமிடத்தில் ஹாலுக்கு வந்தான். அவன் வந்து சோபாவில் அமர்த்தும் அவன் கையில் இஞ்சி டீயை குடுத்தார் பார்வதி.​

பின் அவனையே ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தார். ருத்ரனோ இஞ்சி டீயை ருசிச்சி ரசிச்சி ஒரு மிடறு அருந்தினான் பின் அவன் தாயிடம் திரும்பி என்ன சொல்லணும் என்னிடம் என்று கேட்டான்.​

இதனை அவன் கேட்டதும் பார்வதியின் இதழ்கள் தாராளமாக பிரிந்து கொண்டன. இதுதான் அவர் மகன் ருத்ரன், தாய் விரலை அசைத்தாள் கூட அதற்கு காரணம் என்ன வென்று சரியாக அனுமானிப்பான்.​

கொஞ்ச காலம் காணாமல் போன அவர் பையன் திரும்பவும் கிடைத்த திருப்தி. அவன் தலை முடியை செல்லமாக கொதி விட்டு,​

"இன்று உமையாள், நீலன், அந்த சின்ன குட்டி மகிழ் என மூவரும் சேர்த்து மாப்பிள்ளை பார்க்க சென்றுள்ளனர்." என கூறினார்.​

வேண்டும் என்றே கூறினார் அவன் முக மாறுதலை பார்க்க. அவர் எதிர்பார்ப்பு பொய்த்து போகாமல், ஒரு நொடி அவன் முகம் இறுகியது பின் சாதாரணமாக முகத்தை மாற்றிக்கொண்டு​

"ஓஹ்!....... நீலன் அக்காவுக்கா வரன் பார்க்கிறார்கள்?" என கேட்டான். அதற்கு பார்வதியோ வேண்டும் என்றே​

"அட நான் எப்போது மாப்பிள்ளை பார்க்க சென்றார்கள் என்று கூறினேன். நீலனுக்கு பெண் பார்க்க அல்லவா சென்றார்கள். அதை தானே நானும் கூறினேன்." என்று ருத்ரனிடம் மாற்றி கூறினார்.​

ருத்ரனின் முகம் அப்போதுதான் இளகியது. உடனே அவன், “அம்மா நீங்கள் மாப்பிள்ளை பார்க்க சென்றதாக தான் கூறினீர்கள். பரவாயில்லை அதை விடுங்கள். பெண் யார்? எல்லாம் ஓகே தானே" என்று கேட்டான்.​

இதுதான் சந்தர்ப்பம் என்று "அந்த பிள்ளை கயல்தான் பொண்ணு. நீலனும் அந்த பொன்னும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்கள். அதுதான் உமையாள் பேசி முடித்துவிட்டிட்டாள். ஆனால் இந்த நீலன் தான் கடைசி நேரத்தில் முரண்டு பிடிக்கிறான்." என்று முடித்தார்.​

"என்னவாம்" என்று கேட்டான்.​

அதற்கு பார்வதியோ " அவன் அக்காவுக்கு ஒரு வாழ்க்கை அமையாமல் தான் திருமணம் பண்ணுவதில்லை என்று ஒரு முடிவுடன் இருக்கானாம். உமையாள் அதற்க்கு ஒத்துக்க வில்லையாம்.​

அதுதான் எனக்கு கோல் போட்டு பிலாப்பி கொண்டிருந்தான்." என்று முடித்தார். ஒரு சிறு அமைதியின் பின் பார்வதி ருத்ரனிடம் "ருத்ர நான் ஒன்று கேட்டாள் கோபப்படாமல் பதில் சொல்வாயா?" என்று கேட்டார்.​

அவன் யோசனையுடன் தன் தாயை பார்த்து​

"ஆம்" எனும் விதமாக தலை ஆட்டினான்.​

உடனே பார்வதி "நீ ஏன் உமையாளை கல்யாணம் கட்டிக்க கூடாது." என கேட்டே விட்டார்.​

அவன் இந்த கேள்வியில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அவன் மனமோ உடனே ‘ஏன் கூடாது’ என மறு கேள்வி அவனை கேட்டது. அதில் துணுக்குற்றவன் அவன் மனதை எண்ணி அதிர்ந்துதான் போனான்.​

 
Top