uma Karthik
Moderator
என்ன??போன வேகத்தில் திரும்பி வந்துட்டீங்க!! ரயில் தடம் புரண்டுருச்சோ?? திருட்டு முழி முழிப்பதை பார்த்து.. நக்கல் தோனியில் பவித்ரா கேட்க??
" உன் மாமா தான்.. போக விடல.. " தயங்கி தயங்கி வெளி வந்தது வாய் வழி வார்த்தைகள்..
" விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டாங்க போல?? ம்ம்ம்.. ஒன்னு சொல்லவா??
'ஒரு உறவுல பிரச்சனை வரும் போது.. விட்டு விலகி போறது தீர்வா இருக்காது..தீஷா..!! கூட இருந்து தான் சரி பண்ணனும்.. நல்லத விட கெட்டதுல கூடவே இருக்கும் போது தான் நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை தான்.. மாற்றத்தை தரும்.. கூட இருந்துகிட்டு மௌனத்த தண்டனையா கொடு.. அதுவே போதும்.." பிரதி..சிறுமி போல் பாவ பார்வை பார்க்க!!
கையால் தலை கலைத்து.. விரலால் வருடி.. சென்றாள் பவித்ரா.
அடுத்த.. நாள் ! ஐந்து மணி அலாரம் அடிக்கவில்லை. ஆனால் முழிப்பு வந்தது.. இம்சை அவன். வரவுக்காக காத்திருந்து. வராததும் .. அறை புகுந்து எழுப்பினால்..
"என்னங்க.. எழுந்துறிங்க.. மணி ஆச்சு."
விழி திறவாது புரண்டவன்.. " சும்மா.. உன்ன பயமுறுத்த பன்னது. நாங்க இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டோம்..நீ போய் தூங்கு..காலையில பவி எழுந்து கோலம் போடுவா.."
" இனிமே.. எனக்கு தூக்கம் வராது.. டீ மட்டும் போட்டு கொடுத்துட்டு வந்து தூங்குங்களேன். "
தலையை திருப்பி முறைத்தவன்.. " டையர்டா.. இருக்கு.. தூங்க விடு..டி" என அவள் கையை இழுக்க.. சரிந்து படுக்கையில் விழுந்தால் !! அவனோ.. குட் நைட் சொல்லி உறங்கம் தழுவ.
கண்கள் தானாய் கலங்கியது.. உறவானவன் அருகாமையின் இதம் இன்றுதான் அறிந்தால்..!! அணங்கவள், விடுதியில் உறங்கும்போது யாருடைய அருகாமையும், இத்தனை நிம்மதி அளித்ததில்லை, தனக்கே தனக்காவன் முகத்தில் இரு நயணங்கள் சங்கமித்து நிலைபெற்று நிற்க.!! காதலோடு.. அவன் மூச்சின் வெப்பம் கலந்த கதகதப்பில்,மொத்தமாய் நிரம்பிய அறையில்,அவன் அருகில் படுத்து இருப்பது!! ஏதோ!!சொர்க்கம் கண்டத்து போல்..!! மகிழ்ச்சியை தர, நிம்மதியாய் உறக்கம் தழுவியது.கன்னியின் மான் விழி இரண்டும்!!
மெல்ல இமை.. பட்டாம்பூச்சி சிறகை படபடக்க.. முதலில் மங்களான உருவமாய் தெரிந்தவன்.. கண்ணை உழட்டி தெளிவடைந்து.. பார்க்க!! ப்ரீத்.. வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருக்கவும்.. ஏதோ ஒரு நெருடல்..அவன் தள்ளி வைப்பதை போல உறுத்தல் தோன்ற??
எண்ணங்கள் நிலை பெறாது.. திக்கற்று, எங்கோ வெறித்து பார்த்து.. பேதலித்து இருப்பவளை நெருங்கியவன்.. கன்னம் நெருங்கி குனிய.. கண்கள் மூடினால் காதலி.. ஏதோ எதிர் பார்த்து!!
" டீ.. போட்டு வச்சிடேன்.. சுட மட்டும் வச்சிக்கோ. லேட் ஆச்சி.. கிளம்பனும்.. " நெற்றியில் கை வைத்து பார்த்து.. " காய்ச்சல் குறைஞ்சு இருக்கு.. எதும் வேணுனா கால் பண்ணு.. அப்பறோம்.. " எதையோ மறந்தவன் போல்.. நெற்றியை நீவி.. "ஹான்.. ஐ லவ் யூ " என்று சொன்னதும்.. வெட்கம் சிதறி.. முகம் பூத்தது.. கண்மணிக்கு!! கதவு வரை கண் எடுக்காமல்.. ரீவேர்ஸ் ஆக நடந்து வித்தை கட்டி நிலையில் பின் தலை முட்டி.. வலிக்காதது போல் சமாளித்து இ..இ.. இ.. காட்டி ஓடிவிட்டான்.. ப்ரீத்குமார்.
கள்வன் கன்னம் நெருங்கி வர முத்தம் எதிர்பார்த்தவளுக்கு!! கிடைத்த ஐ லவ் யூ..வால்.. ஆறுதல் பரிசு கிடைத்த பிள்ளை போல கொஞ்சம் முகம் வாடி ஏமாற்றம் தான்..!!
பவித்ரா அனிசையாக குட் மார்னிங் சொல்லி .. மாமன் மெத்தை மேலே.??
தலை கலைந்து.. நித்திரை கலையாமல் இருக்கும்.. பெண் மானை.. அளவிட்டு எடை போட்டவள் " என்ன டி.. ராத்திரி அங்க தூங்கிட்டு காலைல இங்கே எழுந்திருக்கிற?? லிவ் இன் ஆ..ம்ம்ம்ம்..!! "கேள்வியாய் புருவம் வளைக்க..
" தினமும் உன் மாமா வந்து கோலம் போட எழுப்புமா?? இன்னைக்கு வரலை சரி ஏன் னு வந்து கேட்டா ? இனிமே அதல்லாம் பண்ண வேணாம்னு சொல்றாங்க.. " குரலில் ஏமாற்றம் மேலிட்டது..
பாவ முகம் வைத்த பவித்ரா.. சோகமாய் "ஆமா.. அவரும் எவ்வ்ளோ..?நாள் தான் வலிக்காத மாதிரி நடிக்குறது.. நல்ல சாப்பாடு சாப்பிடாம மாமா.,பாவம் இளச்சி போய்ட்டான்..என்னாலையும் முடியல.." என்றவள் சிரிக்க.
" இல்லை.. வேணும்னு தள்ளி வைக்கிற மாதிரி இருக்கு.. பவி "மனதில் உள்ள(வ )தை வெளிப்படுத்தி சோகமாக தோழியை ஆறுதல் கிடைக்கும் என்று ஏக்கமாய் பார்வையிட, இதற்கும் சிரிப்பு தான்.. அவளிடம்!!
" சிரிக்காத பவி.. வெறி ஆகுது.. "
" தங்கமே.. சோறு குழம்பு எல்லாம் விஷயமே இல்லை. உரிமை யார் உனக்கு கொடுக்க முடியும்?? நீ தான் எடுத்துக்கணும்.
"ஒ... அப்படி பண்ணா.. திட்டுவாரா??
" எல்லாத்தையும் கஷ்டப்பட்டு செஞ்ச நீ இஷ்டப்பட்டு செய்யணும் னு எதிர் பாக்குது டி.. என் மாம்ஸ்..!! "
" எவ்வ்ளோ அண்டர் ஸ்டாண்டிங் உங்க ரெண்டு பேருக்குள்ள..!! அப்பறோம் ஏன் அவர வேணாம்னு சொன்ன??"
போக.. போக.. புரியும்?? என்று அவள் கன்னம் வளித்து நெட்டி முறித்து..உள்ளே செல்ல, பவித்ரா செல்லவதையே பயத்துடன் வெறித்து பார்த்தவள்.. " ஒரே மர்மமா இருக்கே?? சைக்கோ கொலைகாரனா இருப்பாரோ?? "பொய் புரளி கிளப்பியவள்.. தந்த பீதியில், இரவு வரை புலம்பி தவித்தால்.. ஒருத்தி..
பௌர்ணமி நிலவு .. பொன் நிற ஒளி ஒவியமாய் மிளிர.!! தலைவன் தலைவிக்கு விழியால் தூது விட்டான்..மேல.. வா.. என்று கண் ஜாடை காட்டிட, புரியாதது போல் நடித்தால், நடகக்காரி!!
" ஜாடையா.. கூப்டா .. புரியாதா? நிலா வெளிச்சத்துல இன்னைக்கு வா.. நாம மேல போய் தூங்கலாம்." பாயும் கையுமாக அவன் மேலே அழைக்கவும். நிலா காயுது.. பாட்டு நினைவில் வர, பொண்ணோ.. பயந்து வேகமாய் தலை அசைத்து மறுத்து விட?? ஏமாற்றதோடு மாடி படி ஏறியவனை நிறுத்தி.. வாழ்வின் மிக அவசியமான கேள்வியை
தலை சாய்த்து அவனை நோக்கி.. பெரிய சந்தேகத்தை கேட்டாள் " ஆமா.. பாய் மட்டும் கொண்டு போனா போதுமா? "
" போர்வை,தலைகாணி, எல்லாம் முன்னவே பவி கொண்டு பொய்ட்டா? பாய் எடுக்க தான்.. நான் வந்தேன்.. நீ தான் வரலைனு சொல்லிட்ட, காலையில தான் வருவோம். பயப்புடாம தூங்கு. குட்நைய்ட் " என்று விட்டு மாடிக்கு ஒட,
இனிமே எங்கடா நான் தூங்குறது..?? என்று பதறி..அடித்து..மேல் மூச்சு வாங்க ஒடினால்..பிரதி.. வந்தவள் மேலே கண்ட (காதல்) காட்சி..
' மாடியின் மதில் சுவரில் தன் மன்னவன் சாய்ந்து இருக்க.. திருமால் மடி மீது பள்ளி கொண்ட ஸ்ரீ தேவி போல.!! கன்னியவள் தன் தலையை மாமன் மடியில்.. சாய்த்து.. ஒரு பாதி முகம் அணைத்து.. நேத்திரங்கள் சொக்கி மயங்க. மயிலிறகாய் அவன் ஐ விரல்கள் கூந்தல் தீண்டி, வருடலிட !!உலகம் மறந்து துயில் கொண்டால் காவியத்தின் துணை தலைவி!!'
மடி மீது தலை வைத்து.. பெளர்ணமி நிலவுக்கு போட்டியாய்.. பிரகாசிக்கும்.. ஜோடியை பார்த்து. தீ பட்ட சறுகாய் கருகி போனது காதலியின் மனம். அதை விட தன்னை கண்டும்?! மாட்டி கொண்ட பதட்டம் இல்லாமல்.. என்னையும் கண்ணோடு காதல் மிளிர பார்பவனை.. கொன்று போட மனம் குமைந்தது.. கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாத பேர்வழியாய் தெரிந்தான்.. தூரோகி.
கரண்ட் லவ்வர் வந்தும் கூட எக்ஸ் தலை மீது வருடலை நிறுத்தாது தொடர.. செங்குன்றமாய் சிவத்தவள்.. சுனாமி பேர்அலை.. போல் பொங்கி... திட்ட வாய் எடுக்க!! எ...ன்.. ன...?
ஆவேசமாய்.. கோபம் பொங்கி.. நாலு கேள்வி நறுக்கென கேட்க?? வாயெடுத்த.. சீற்றத்தோடு பாயும்..பெண் ஆழி..துவேச அலையை.. ஒற்றை விரல் தன் வாய் மீது பொருத்தி, நிறுத்தி!!
"ஸ் .. சத்தம் போடாதே!! அம்மு தூங்குறா " என்ற ஒற்றை வார்த்தையில் தடுத்து அடக்கினான்.. சமுத்திரம் ஆளும் கட(காத)ல் அரசன் போல!
வெறுத்து போனது..மனம் கொடுத்தவளுக்கு.. பயம், பதட்டம் இல்லாமல்.. நான் வந்து பார்த்த பின்பு கூட அதிர்ச்சியில் அசையாமல்.. என் அம்முவின் உறக்கம் கலைக்காதே.. என பார்வையால் கட்டளை இடும், திமிர் கொண்ட இவன் என்ன ரகம்?? ஏமாற்ற பட்டதை எண்ணி நொந்தாள்.. "
சலனமற்ற ஆழ்ந்த அன்போடு வா என்று கண் சிமிட்டி.. ஐ விரல்களை மூடித் திறந்து அருகில் அழைக்க.. பின் வாங்க முடியாமல் முன்னோக்கி நடந்தால் பேதை.
சந்திர தேவன் குளுமையை போர்த்தி..புன்னகை முகமாய்..அனிச்சம் பூ அவள் மாமன் மடியில் மெய்மறந்து நித்திரை கொள்ள, அவள் முடி கற்றைக்கும் வலிக்காது.. பூவைப் போல நோகாமல் கோதிவிடும்.. ஆணவன் கைகளில் எத்தனை மென்மை!! கண்கள் நிரம்பி நிற்கும் அளவில்லா.. நேசம்!! முன் காதல் பார்வையும் தோற்றுப் போய்விடும்!! "
சிகை கோதும் விரலை.. துண்டு துண்டாய் வெட்டி. வெட்டி. வீச பணிந்த மனதை அடக்கி அருகே.. வந்தவள்.. தூரம் நின்றே இந்த கன்றாவி எல்லாம் சகிக்க முடியாமல் தவித்த நெஞ்சம்.. மிக..மிக..அருகில் .. திரை பட முன் இருக்கையில் தெரியும் காதல் காட்சி போல.. நடப்பவை எல்லாம் பூதாகரமாய் தெரிய !! கசந்து போனது காதல்? ' என்னையும் காதலிச்சு இவளயும் காதலிச்சா.?? அதுக்கு என்ன அர்த்தம்?? வள்ளி தெய்வானையோட வாழ ஆசைப்படுறாரோ!! மிஸ்டர் பிரீத் குமார் நீங்க ஒன்னும் கந்த கடவுள் இல்லை?? ' முழு நிலவின் குளுமையிலும் நெருப்பில் உருள்வது போல் அத்தனை எரிச்சல் கண்டு தகித்தது நெஞ்சம், கேள்வி கேட்க கூட தகுதி இல்லாதவன் முன்பு, காதலுக்காக வாதாடுவதா ??என்று தன்மானம் தடை விதிக்க!! கீழே செல்லலாம் என ஒரு அடி முன்னே எடுத்து வைக்கும் போது.. நகர விடாமல் நிறுத்தினான்.. இரட்டை சுழிகாரன்.
"எங்க போற?? வா.." வா குழந்தாய்!!வந்து ஜோதியில் ஐக்கியமாகு!! என்று சாமியார் பாணியில் அழைக்க.. அருவருத்து அருகில் அமர்ந்தால் பிரதிக்ஷா.
என்ன?? வல்லென்று.. எரிச்சலோடு சிடு சிடுத்தாள்.. அவனிடம்.
" ஏன் அம்மாவாசை பௌர்ணமி வந்தா இப்படி ஆயிடுவியோ?? நிலைமை புரியாமல் சிரித்து வேறு வைத்தான்.
எரிச்சலான குரலில் " ஏன் உங்களுக்கும் தான். பௌர்ணமி வந்தா பரவசம் அடைஞ்சிடுறீங்க?? போலி சாமியார் மாதிரி !!" பல்லைக் கடித்துக் கொண்டு குத்தலானா பேச்சில் குத்தினாள்..நவீன ஜல்ஸா..சாமியாரை!!
புரியாதவனோ!! " உண்மை தான்.. முழு நிலவே நேசிக்கிற பெண்ணோட பக்கத்துல இருந்து ரசிப்பது எவ்வளவு அழகு தெரியுமா!! சில்லென காற்று வீச கண்களை மூடி ரசித்தவன். உணர்வை சிலாகித்துக் கூறினான்..
' அவன் சொன்னது இவளை!! இவள் நினைத்தது அவளை!! '
'அது எப்படி ஒருமையில் சொல்லுறீங்க..ஜீ.. நேசிக்குற பெண்ணோட னு ?? தப்பு.. தப்பு..ரெண்டு காதலிகளோட காத்து வாங்குவது ஜாலி.. ஒ.. ஜாலி.. இல்லை. ஐ லவ் யூ.. டூ..னு வாழுற இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.' மனதில் வறுத்து எடுத்தால், பிராட் பய.. ஃபோர் டுவண்டி.. ரெட்டை மாட்டு வண்டி ஓட்ட பாக்குறான்.. இதர பல சென்சார்.. செய்ய வேண்டிய வார்த்தைகள் ..
" ஏன்.. உனக்கு பிடிக்காதா!!"
" பிடிக்கும்.. பிடிக்கும்.. ம்ஹும் " இழுவையுடன் சலிப்பு தட்டியது குரலில்.
" இது மாதிரி பௌர்ணமி நாள் வந்தா!! நான் அத்தை பவித்ரா எல்லாரும் மேல வந்துடுவோம்.. "
" ஒ.. அப்படியா..?? " என்ற பாவனையில்?? அதுக்கு என்ன என்ற அலட்சியம் போக்கு தென்பட்டது.
" ரெண்டு பேரும் அவங்க மடியில படுத்துக்க அடிச்சுக்குவோம்.. பவிக்கு அத்தை ஞாபகம் வந்துடுச்சு.. அதான்.." அவள் மீது பார்வை பதித்தவன் " தாய்மை என் கிட்ட பீல் பண்ணுறா!! இல்லை??" கண்களில் கண்ணீர் மின்ன அதிசயித்து, பிரமித்து போனான் மாமன்..!!
"ம்ம்ம் "என்று வேகமாக தலையை அசைதவளுக்கு நெஞ்சம் கனத்து போனது.. நல்ல வேளை.. தவறாக பேசவில்லை.. நிதானம் கெட்டு வாய் விட்டு இருந்தால்?? நினைக்கவே நடுங்கியது.. அன்னையை இழந்த பெண்ணின் மனநிலை புரியாது.. மேலும் காயப்படுத்தி இருப்பேனே??
" உன்னை ஏன் பிடிக்கும்னு கேட்டல்ல.. பவித்ராக்கு உன்ன பிடிக்கும். அதனால தான் உன்னை எனக்கு பிடிக்கும்..!! என்னடா இப்படி சொல்லுறேன்னு நினைக்காத அவ யார் கூடவும் இவ்வ்ளோ கிளோஸ் ஆகி பார்த்தது இல்லை.. எனக்கு எந்த எதிர்பார்பும் இல்லை. நாம நினைக்கிறது நடக்கிறதும் இல்ல.." விரக்தியாக புன்னகைத்தான்.
நெஞ்சை உருக்கும் வலி அவன் கண்களில் .. பவித்ரா காதலை ஏற்கவில்லை என்ற வேதனையின் வெளிப்பாடு இது என்று சொல்லமலே,
ஏக்கம் நிறைத்து,பார்வையால்
அவள் முகத்தை வருடுவதிலேயே தெரிந்தது!!
" இல்ல பவித்ராக்கு என்ன பிடிக்கலைன்னா உங்களுக்கும்.., "மேலே சொல்ல வார்த்தைக்கு கூட வரவில்லை. வலித்தது.
" எனக்கு புடிச்ச ஒரு பொண்ண புடிக்கலைனு பவி தன் வாயால சொல்லவே மாட்டா..? ஆனா தெரியும்.!!விலக முயற்சி பண்ணி இருப்பா.. உன்கூட ஒட்டிக்குறால!! எல்லார் காயத்தையும் சொல்லாம புரிஞ்சுகிட்டு மருந்து போடுறவ.. அவளுக்கு காயம் பட்டா ?? ஏன்..வலிச்சா கூட சொல்லவே மாட்டா?? என் உயிர் அவ சிரிப்புல இருக்கு.. என்னைக்கும் அவள காயப்படுத்திடாதே.. அவளுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும். " மறை முக எச்சரிக்கை என்று சொல்லாமல் உணர்த்தி விட்டான்.. அவள் மாமன்.. வார்த்தையில் அழுத்தம் கூட்டி,
'குழந்தையிடம் ஸ்நாக்ஸ் திருடும்போது தாயிடம் மாட்டிய உணர்வு அவளுக்கு.. இந்நேரம் காதல் காவியத்த காவு வாங்கியிருப்பேன்.. காயப்படுத்தாத என்கிற வார்த்தைக்கு இந்த..., அழுத்தம் கொடுக்கிறான்..என்றால் சந்தேகப்பட்டு சண்டை போட இருந்தது தெரிஞ்சது.. ?? எண்டு கார்ட் தான்..'
" நான் அப்படி நடக்க மாட்டேன் "என்றால் நல்ல பிள்ளையையாக.
" நீ வந்த அப்புறம் தான்.. இந்த வீடே கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. என்னோட அத்தை இடத்துல இருந்து நீ எல்லாரையும் நல்லா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு பிரதி" என்றான் உறுதியான நம்பிக்கையுடன்.
சுமதி அம்மாவின் குணங்களை கதைகளாக கேட்டவளுக்கு.. கூலங்கல்ளோடு மரகதத்தை ஒப்பிடும் உணர்வு..!! இளம் வயதிலேயே ஒற்றைப் பெண் பிள்ளையோடு, நிராதரவாய் நின்ற தன் காதலனையும் அரவணைத்து வளர்த்து ஆளாக்கி விட்ட அவர்கள் எங்கே !! நான் எங்கே?? தகுதி இல்லாத அரசியல்வாதிக்கு பதவி கிடைப்பது போல..!! அழுக்கான எண்ணம் படைத்த எனக்கு..?? வார்த்தைக்கு ஒப்பிட கூட தகுதி இல்லை. உயர்ந்த குணத்தில், பவித்ராவோ..!! ஒருபடி மேலே.. போய்.. உடல் கொண்டு பூமியில் ஜனனித்த நாள் முதல் உறவாய் உயிராய் ஒன்றாய் வளர்ந்தவனை.. உரிமை இருந்தும் போட்டி போடாமல் பொறாமை இல்லாமல் நான் வந்ததும் விலகி இருக்கும் அவள் தேவதை தான்..!! வெறும் ரெண்டு மாத காதலுக்கே எனக்கானவன் என்று பேயாட்டம் போடும் தன்னையும்.. பொறுத்து ,சகித்து, அரவணைத்துக் கொண்டால் பவித்ரா என்ற நிதர்சனம் புத்தியில் உரைக்க, குற்றம் உடைய நெஞ்சு குறுகுறுக்க தொடங்கியது !! அவன் பார்வையை சந்திக்க முடியாமல்..மடியில் சாய்த்து மறைத்து கொண்டாள்.. முகத்தை.
'என்கிட்ட ரெண்டு கை இருக்கு.. என்று வருடலில் டபுள் ஷிப்ட் பார்த்தான்..கன்னியரின் காதலன்!!'
' அவன் கடினமான இரவு ஆடை தாண்டி இவள் கண்ணீர் ஊடுருவி சுட்டது.. இறந்த தாயய் எண்ணி கண்ணீர் என்று இவனும்.. செய்த தவறை எண்ணி விழிநீர். என்று அவளும் கண்ணீருக்கான காரணத்தை அனுமாணித்து பிரித்துக் கொண்டனர்.
எனக்காக என்னை நேசிக்கவில்லை.. பவித்ராவின் சந்தோஷத்திற்கு இடைஞ்சல் நான் இல்லை என்பதால் துளிர்த்த காதல் இது என்று புரிய.. சொல்லில் அளவிட முடியா.. ஏமாற்றம்!! குழந்தைகளை சந்தோஷப்படுத்த வாங்கித் தரும் பொம்மை போலவா?? நான் எனும் மெய்.. உயிர் அறுக்க.. காதல் வலி விசை கொண்டு அழுத்தியது நெஞ்சில் முல்லாய்!!
"என் பவித்ரா.. என் பவித்ரான்னு சொல்றீங்களே??அப்ப நான் உங்க பிரதி இல்லையா??" ஏக்கம் ஏகத்துக்கும் அப்பியது வாய் மொழியில்.
பவித்ரா.. நன்றாக உறங்குவதை பார்த்து உறுதிப்படுத்தி.. மெல்ல குனிந்து தன் காதல்.. அவள் புத்தியில் ஏறும்படி நெற்றியில் அழுத்தி முத்தம் பதித்தான்.. தலை நிமிர்த்தி பார்த்தவள்.. கண்கள் கசிய..
"என்ன டி " பதறியவன்.. இதழில் அவள் கண்ணீர் துடைத்துவிட்டு..
" நமக்கு யாருமே இல்லங்குறது.. ரொம்ப பயமுறுத்தும்.. நம்ம பாரம் ஆயிட்டோமோ?? எல்லாரும் நம்மள வெறுத்துருவாங்களோ?? நாம் ஏன் வாழனும், வாழ்றதால யாருக்கும் பிரயோஜனம் இல்லை.. எல்லாம் புடிக்காம போயிடும், எது மேலையும் ஆசை வைக்கவே பயமா இருக்கும். உரிமையா எதும் கேட்க தயக்கமா இருக்கும்.. தன்னை தானே ஒரு வட்டத்துக்குள்ள சுருக்கிக்கிட்டு ஒடுங்க ஆரம்பிச்சிடுவோம். இதை நான் சம்பாரிக்கிற வரைக்குமே அனுபவச்சிருக்கேன்.. அவ்ளோ பாசமா இருப்பாங்க ஆனாலுமே.. அத்தை எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டுட்டு, பசிக்கலைன்னு பசியோட உக்காந்து இருக்கும்போதெல்லாம் உறுத்தும்.. சின்ன வயசுல இருந்து வேலைக்கு போவேன் ஆனா.. ஒரு சின்ன பையனுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்.. எல்லாமே அத்தை தான்.. வெறும் நன்றின்னு சொல்ல முடியாது.. சாகும்போது கூட நான் இருக்கேன். பாத்துக்குவேன் என்ற நம்பிக்கையில தான்.. என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுதா??
ம்ம்ம்.. பவித்ராக்கு இது அம்மா வீடு. சுமதி அம்மா இருந்த ஸ்தானத்துல இனி இந்த வீட்டுக்கு நான் இருக்க போறேன்.. பவித்ராவ பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு தான்.." கடக்கடவென புரிந்ததை ஒப்பித்தாள்.
"அவ்வ்ளோ தானா?"
"அவ்வ்ளோ தான் " ஸ்ஸ்... ஹான்.. உங்களை நல்லா பார்த்துக்கணும்.."
" அவ்வ்ளோ.. தானா.."
" என்ன வேணும்.. நேராவே கேட்டகலாம்..? "
"நீ போதும். " பெருமூச்சுடன் கண்களால் அள்ளிப் பருகினான்.. கூச்சம் கொண்டு மலரவள் முகிழும் வெட்கங்களை..
எதை நாம் அதிகமாக நேசிக்கிறமோ!!
அதையே நாம் ஆழமாக
வெறுப்போம்!!
காலையில் இருந்தே டெங்ஸனாய்.. போனும் கையுமாக இருந்தவள்.. கொதித்து போய்.. ஆர்டர் கேன்சல் ஆனதால் மெசேஜில் உள்ள தொடர்புகொள்ளும் நம்பருக்கு அழைத்தால்..
" என்னங்க நினைச்சுட்டு இருக்கீங்க?? டெலிவரி பண்ணாம?? நோ ரெஸ்பான்ஸ்னு போட்டு , அதனால கேன்சல் பண்ணி இருக்கீங்க ?? "
" இல்ல மேடம் நாங்க கால் பண்ணோம் உங்க போன் ரீச் ஆகல "
" பொய் சொல்லாதிங்க?? கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி கம்பிளைன்ட் பண்ணிடுவேன்?? எனக்கு நான் ஆடர் பன்ன புராடக்ட் வேனும் .. "
" கம்ப்ளைன்ட் எல்லாம் பண்ணிடாதீங்க மேடம் .." என்று தயங்கியவன். " உங்க வீட்ல ஒரு ஆள் இருக்காருல, அவரு.. டெலிவரி பண்ண உங்க வீட்டு பக்கமே வரக்கூடாது மீறி வந்தால் கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டுனாரு மேடம்.. அதான் பயந்து ஆடர் கேன்சல் பன்னேன்.. சாரி மேடம்."
" பொய் சொல்லாதீங்க.. ??அவரு இங்கே இல்லவே இல்ல... ஆபீஸ் போயிருக்காரு ?? உங்க தப்ப மறைக்க அவர குறை சொல்லாதீங்க.. " கோபமாய் சீறினால்..
" இப்ப சொல்லல மேடம் . போன சண்டே ஒரு ஆர்டர் உங்களுக்கு டெலிவரி பண்ண வந்தப்போ ?? அங்க எதுவும் பண்ணல, பைக்ல சேஸ் பண்ணி வந்து சண்டை எல்லாம் போட்டு அடிச்சுட்டாரு மேடம்."
தொண்டை வறண்டு.. வார்த்தை ஏழாது அடைக்க பெண்ணவளோ.." ஏன்.. எதுக்..எதுக்கு?? " நம்பிக்கையற்று சந்தேகமாய் கேட்டாள்?
" ரொம்ப அசிங்கமா பேசுறான்..உங்களையும் என்னையும் சேர்த்து.. கனெக்ஸன் இருக்குனு தப்பா..
யாரு அவரு??
நடுங்கியபடி பரிதவிப்பான குரலில் " என்ன சொன்னாரு??"
" அவன் சொன்னது எல்லாம் லேடிஸ் கிட்ட சொல்ல முடியாது.. அவன் சரியான சந்தேக சைக்கோ மேடம்.. அவன மட்டும் கல்யாணம் பன்னிடாதிங்க.. கொன்னாலும் கொன்னுடுவான்.. இதெல்லாம் அவன் கிட்ட சொல்லாதிங்க அதுக்கும் அடிப்பான்.."
அழைப்பு துண்டிக்கப்பட்டு பல நிமிடங்கள் கழிந்ததும்.. செவிலியிலிருந்து செல்போனை எடுக்காதவள்.. அதிர்ச்சியில் அனைத்தையும் மறந்து போனால் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடியது.. காயம்பட்டவளின் விழியில்... முடிவிலியாய். ??
அவன் சொன்ன 'சரியான சந்தேக சைக்கோ ' எனும் வார்த்
து இடைவேளை இல்லாமல் காதில் எதிரொலித்தது ..
'சரியான சந்தேக சைக்கோ.!!'