uma Karthik
Moderator


நண்பகல் உச்சி வெயில் நேரம்.. வெயிலின் வெப்பம் மிகுதியை தாங்காது.. இனியா தேநீர் விடுதியின் வெளியில் இரண்டு பைக். பொதி சுமக்கும் கழுதை போல டெலிவரி செய்ய வேண்டிய பொருள் அடங்கிய மூட்டை சுமந்து நிற்க.. வண்டியோ சூடு ஏறி கொதிக்க !! தலையில் கட்டி இருந்த கர்ஷிப்பை கழட்டி முகத்தில் வழிந்த வியர்வை துடைத்துவிட்டு, எதையோ வென்றது போல?? முகம் கொள்ள வஞ்சக சிரிப்புடன் கொதிக்கும் தேநீரை வாங்கிப் பருகினான்..ஒருவன்.
நண்பனின் நரி தந்திரத்தை சற்று முன் கண்ணார பார்த்தவனோ?? வியந்து!! " டேய் ராசா.. மொத்த கதைய மாத்திடியே..!! எப்பிடறா?? அந்த பொண்ண போட்டோ எடுத்தத, மேலே நின்னு அவன் பார்த்துட்டு தான்.. தேடி வந்து உன்ன அடிச்சு.. வெளுத்து.. கண்டிச்சுட்டு போனான்.. "
" சும்மாவா போனான்.. ***** என் போனை உடைச்சி, சட்டையை கிழிச்சு.. பெரிய உலக அழகி அவ, ஏதோ ஒரு போட்டோ எடுத்ததுக்கு ரோட்ல போட்டு அடிச்சான் இல்லை.. சும்மா விட்ருவோமா என்ன?? " அங்கங்காரமாய் அங்கங்கள் அதிர சிரித்தவன்.. " இப்ப என்ன ஆகும் தெரியுமா?? இந்தப் பொண்ணு ஏன் இப்படி சொன்னீங்கன்னு சண்டை போடும்.. நம்ம ஹீரோ சாருக்கு தான் கை நீளம் ஆச்சே..?? பொளிர்னு ரெண்டு வெப்பான்.. ஹா..ஹா.. அவள அடிப்பான் தானே மச்சான்?? " நக்கலாய் கேட்டான்..
" டெஃபனெட்டிலி மச்சி.. ஒன்னேயே இந்த காட்டு காட்டுனவன்.. உன் பேச்சு எல்லாம் நம்பி ஒருத்தி சண்டைக்கு போனா?? அவ்வ்ளோ தான்.. வாங்குற அடிக்கு. பாவம் ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி கிடைக்க வேண்டியது தான்..
"ஹா.. ஹா.. ஹா.. நா..ச..மா போகட்டும்.. நமக்கு என்ன?? " இடைவெளி இல்லாமல் சிரித்தான். வஞ்சகன்.
" இந்த ஏரியால டெலிவரி கொடுக்கும் போது திரும்பவும் அவன் வந்து வம்பு இழுத்தா என்ன பண்ணுவ?? பயத்தில் கேட்டான்..நாயகனிடம் அடிவாங்க தெம்பு இல்லாத நண்பன்.
" எனக்கு வேற ஏரியா மாத்திட்டாங்கடா. அந்த தைரியத்துல தான் வந்து சிறப்பா பிரிச்சுவிட்டுட்டு போறேன்.." என்று குரூரமாய் நகைத்தவன்,டீயை அருந்தியதை விட, காதலை கெடுத்து விட்ட பூரண திருப்தியில்.. தோழனோடு வண்டியில் புறப்பட்டு டெலிவரி செய்ய வேண்டிய அடுத்த லொகேஷனுக்கு சென்றான்.
" நமக்கு நேரம் சரியில்லை என்றால்?? எங்கேயோ செல்லும் ஏவல் கூட!! நம்மை பார்த்து யூடர்ன் போட்டு வரும்மாம்.'
உறவின் ஆரம்பம் எந்த புரிதலும் நிரப்பப்படாத வெள்ளை காகிதம் தான்!! நம்பகமில்லா பிறரின் சொல் கேட்டு.. தன்னவன் குணத்தை தவறாக உருவகப்படுத்துவதின் விளைவு?? வலிக்க வலிக்க கிடைக்கும்.
தலைவிக்கு??
அவன் வந்ததும், பேச வேண்டும் என்ற அனுமதி கேட்க?? வா என்று அறைக்கு அழைத்தவன்.. கண்கொண்டு பேச சொல்ல!!
" போன வாரம்... ஆர்டர் டெலிவரி பண்ண வந்த பையன அடிச்சீங்களா.??" ஏதோ அவன் சொல்ல வர, இடைமறித்து தடுத்தவள் " நான் முதல்ல பேசி முடிச்சுக்குறேன். இனிமே இந்த வீட்டு பக்கம் வந்தா கொன்னுடுவேன் சொல்லி மிரட்டுனீங்களா?? " கோபம் இல்லாமல் நிதானமாக வார்த்தையில் அழுத்தமாக கேட்க ?
" ம்..ம்..ம் இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?? " தானாக தெரிய வாய்ப்பில்லை, அவன் வேலைதான் .. என்று பதிலும் அவனே மனதில் சொல்லிக் கொண்டான்..
" ஒரு பார்சல் வாங்க, குறைஞ்சது ரெண்டு நிமிஷம், அதுக்கு என்னையும் அவனையும் சேர்த்து வச்சு.. சே.. அப்படி சந்தேகத்தில ஊறி போய் இருக்கீங்க?? குரல் தழுதழுக்க கண்ணீர் விழ கீற்றாக எட்டிப் பார்த்தது.
" வார்த்தையை விடாத பிரதி??" பல்லை கடித்து எச்சரிதான்.
" இவ்வளவு மோசமா கீழ்த்தனமா யோசிக்கிற உங்களை போய் நான் காதலிச்சேன் பாருங்க..? உண்மையிலே முட்டாள் தான் நான்..? முட்டாள்.. " கண்களில் காவிரியை திறந்து விட.
நக்கலோடு பார்த்து " அது ஆனா உண்மைதான்.. உன் பிரச்சனை தான் என்ன?? ஆர்டர் பண்ண பொருள் வராதா?? ஆர்டர் குடுக்க அவன் வரததா?? " வேண்டுமென்று சீண்டி விட்டான்.. அவள் வாயிலிருந்து வார்த்தையை வாங்க.
இந்த வார்த்தையை கேட்டு கொதித்தவள்.. அலறினால் "சீ.. நீங்க எனக்கு வேணாம்.. நம்பிக்கை இல்லாத இந்த காதல் எனக்கு வேண்டாம்.. நான் போறேன்.. எனக்கு உங்கள பிடிக்கல..?? " நீண்ட வசனம் பேசி டயர்ட் ஆகி அவன் மீதே சாய்ந்து இளைப்பாரி.. கதறி ஒப்பாரி..வைத்துஅழுதவள்..
விம்மலோடு.. " காதல்ல நம்பிக்கை தான முக்கியம். அப்ப நீங்க என்ன காதலிக்கலையா?? " உயிரே உருகும் குரலில் வினவினால் ஆடவனிடம்.
வாய்வரை வந்த சிரிப்பை உதடு கடித்து அடக்கியவன்.. " காதல்ல நம்பிக்கை தான் முக்கியம்.. உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லை.. அந்த டெலிவரிக்கு வந்த, கஞ்சா ஆசாமி ஆணழகன.. நீ காதலிச்சிடுவேன்னு பயந்து நான் சந்தேகப்படுறேன்.. இந்த வார்த்தையில் இருந்து நீ பின் வாங்க மாட்ட இல்ல..?? பிரதிக்ஷா.." பிரதி என்று அழைக்காமல். புதிதாக முழு பெயரை சொல்லி வேறுபட்டு அழைத்ததும் கலங்கியவள்.. ஆம்.. என்று தலை ஆட்டினால்.. வெட்டப் போவது தெரியாமல்..!! ஆரம்பத்திலிருந்து நடந்தது எல்லாம் தெளிவாக விளக்கிச் சொல்லிவிட்டு.. அவளை பார்க்க..??
அவளோ அவன் சட்டை உள்ளே..புகுந்து.. முகத்தை மறைத்து.. இப்படியே சமாளித்து தப்பிக்க முயன்றால்.. அவள் உடல் நடுங்குவது அப்பட்டமாக மன்னவன் அறிய, அவளோடு ஒட்டியவனின் உடலிலும் அவளின் பயத்தின் அதிர்வு.. வேக துடிப்பு நன்றாக உணரும்படி அப்பட்டமாய் தெரிந்தது.. இரக்கமில்லாமல் நடுங்கும் அவள் கரத்தை பிடித்து மெல்ல விலக்கி நிறுத்தியவன்..
" என்னை நம்பாத நீயும் உன் காதலும் எனக்கு வேணாம். " இரண்டே வரியில் சொல்லி முடித்து சென்றுவிட்டான்..
ஒரு வாரம் கடந்து விட்டது.. பேச்சு வார்த்தையை நிறுத்தி, அருகில் வரக்கூட அனுமதிக்காமல் வதைத்தான்.. சாத்தான் வேதம் ஓதியதைக் கேட்ட தன் மடமையை நின்னைத்து நொந்து போனால்..
" நான் உனக்கு என்னடா?? கெடுதல் பண்ணேன்.. ஆன்லைன் ல ஆர்டர் போட்டதுக்கு.. எனக்கு டைவோர்ஸ் வாங்கி கொடுத்துடியே.. டா..பாவி.. உன் பேச்சை கேட்டன் ல எனக்கு வேணும்.." ஒரு வாரமாய் அடி மாறாமல் கத்தி இதே புலம்பல்..
வாரினாள். பவித்ரா.. " பல்பு ஸ்டாக் இல்லையாம் தீஷா.. " அருகில் வந்து அமர்ந்து.. தோள் மீது கையை போட்டவள். " ஒய் புலம்பல்ஸ்.. மாமா பேசல போல?? பச்.."கொட்டி சிரித்தவள்.
" போடி.. வெறுப்பேத்தாத.. சரி.. உன் மாமா என்ன பன்னா சமாதானம் ஆகும். ?? " வேறு வழி இல்லாமல் பவித்ராவிடம் சரணடைந்தாள்.
" நானே.. இப்படி சொல்ல கூடாது. இருந்தாலும் தோழமை துடிப்பது தாங்காம, பாவம்னு சொல்லுறேன். நீ பழைய படம் பார்த்து இருக்கியா? ஒரு சாமியார் தவம் இருப்பாரு.. அப்போ.. அழகான பெண் வந்து தவத்தை கலைப்பா.!! தவமே கலையும் போது கோபம் குறையாதா.!! "
" புரியலை பவி.. அவங்க கதை வேற என் கதை வேற . அது இங்கே அப்ளை பண்ணா எப்படி வொர்க் அவுட் ஆகும்." அறிவு ஜீவியாக கேள்வி கேட்க.
"எல்லா கதையிலும் இது அப்ளை பண்ணலாம் டி . கண்ணு திறக்கணும் சாமி .. கைய பிடிக்கணும் சாமி!!" பாடலை பாடி குறிப்பால் உணர்த்த.. முயல!
திஷா எனும் பச்சை பிள்ளையோ !!. "நான் சோகமா இருக்கேன்.. நீ என்ன சாமி பாட்டு பாடிக்கிட்டு இருக்க.." வெறுப்புடன் முகத்தை சுழித்தாள், பிரதி.
" சாமி பாட்டு பாடுறனா.. ?? " சாமின்னு வர்றதுனால கன்பியூஸ் ஆயிட்டாலோ ??
" இதுவரைக்கும் உங்களுக்குள்ள சண்டை வந்திருக்கும் எதனால் சமாதானம் ஆன னு யோசி.. ஏதாவது சொல்லி சீண்டி வம்பு இழுத்து சண்டை போடு.. ஒரு வாரம் பேசாம இருக்க விடுறது ரொம்ப ஆபத்து. அப்படியே அந்த ஒரு வாரம் ,ஒரு மாசம் ஆகும் .. அதே பழக்கமாகும் .. ஒவ்வொரு சண்டைக்கும் இதே மாதிரி மாசக்கணக்குல பேசாம இருந்து டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பான்.. அதான் கெத்துன்னு நினைச்சு.. பிடிச்சவங்களை கெஞ்ச விடுவதும் போதை தெரியுமா? " கெஞ்ச விட்டவளோ! அனுபவ பாடம் சொல்லித் தந்தாள் .
" என்னென்னமோ சொல்ற?? ஒண்ணுமே விளங்கல ??" மெய்யாகவே புரியாமல் கேள்வியோடு அவளை ஏறிட்டால்.
" அவனுக்கு உன் மேல கோவம் எல்லாம் இருக்காது டி. வேணும்னு கெஞ்ச விட்டு ரசிக்கிறான். நமக்காக ஒருத்தவங்க கெஞ்சறாங்க, நம்ம கிட்ட பேச முடியாம தவிக்கிறாங்க ,அப்படி தவிக்க விட்றதுல ஒரு கர்வமான சந்தோஷம்..அவனுக்கு. "
" அப்போ என் மேல கோவம் இல்லையா !!"
" பிடிச்சவங்க கெஞ்சுனா.. செமையா இருக்கும். நீயும் வேணா ட்ரை பண்ணி பாரு."
" அப்ப நானும் சண்டை போட்டு அவர கெஞ்ச விடணுமா??" கிரின்ச் தனமாக பதில் கேள்வி கேட்டால் .
உன்கிட்ட வந்து கெஞ்சிட்டு தான்.. அடுத்த வேலை பார்க்க போவான்..என் மாமா.பைத்தியம் அப்படி எதுவும் பண்ணிறாதே. நீ தப்பு பண்ணிட்டு அவனை எப்படி கெஞ்ச விட முடியும் ?
சண்டை போட்டா எப்டி டி.. என்கிட்ட பேசுவான்??
" நீ எப்படியோ போ.. உன்கிட்ட இவ்ளோ நேரம் நான் விளக்குனதுக்கு போய் பாத்திரத்தை விளக்கி இருந்தா கூட வேலையாவது முடிஞ்சுருக்கும்.. உனக்கு புரிய வைக்கிறது டைம் வேஸ்ட் ." அலுத்து சலித்து ஆகாது என்று முடிவு கட்டி வேறு உருப்படியான வேலை பார்க்க சென்று விட,
குரல் தந்து கூப்பிட்டு " ஏய்..போகாத டி.. ஏதாவது ஐடியா கொடு பவி.. ப்ளீஸ்.. " ஓடியே விட்டாள் பவித்ரா.. விளக்கெண்ண வியாபாரம் வேண்டாம் என்று.
சண்டை போட வேண்டும் என்ற குரல்.. மட்டுமே எண்ணத்தில் எதிரொலிக்க... இது சரியா வருமா? அமைதியோ அமைதின்னு அப்படியே இருக்கானே கல்லு மாதிரி.. பவித்ராக்கு அவர் குணம் நல்லா தெரியும். கடவுளே வாய்க்கு வந்ததை பேச போறேன்.. நீ தான் காப்பாத்தணும் .. வேண்டுதலை முடித்து போனை எடுத்தவள், வேலையை தொடங்க.
இன்று ஆபீஸில் வேலை முடியாமல்.. இரவு வரை இழுக்க.. தலைவலியோடு ஒவ்வொரு வேலையை முடித்து.. டேபிளில் தலை சாய்த்தவன் சோர்வில் தன்னை அறியாமலே உறங்கி போனனான்..
" இன்னைக்கு என் கூடவே தூங்கு.. பவி.. திட்டி மெசேஜ் அனுப்பி இருக்கேன். கண்டிப்பா வந்து சண்டை போடுவாங்க, நீ என் கூட இருந்தா கொஞ்சம் பிரச்சனை பெருசாகாம காப்பாத்துவே.. " பயமும் நடுக்கமும் கலந்த குரலில் பாவமாய் கேட்டதும். மறுக்க முடியாமல்.
" ம்..ம்.. சரி.. அப்ப இங்கயே.. தூங்கவா? மணி பத்தாச்சு வா.. படுப்போம். மாம்ஸ் வர லேட் ஆகுமா.. நெறைய வேலை இருக்காம்.. வெளிச்சத்தில எனக்கு தூக்கம் வராது லைட் ஆஃப் பண்ணிடு. தீஷா...குட் நைய்ட். " சொல்லிவிட்டு , ஒரு பக்கமாய் ஒருக்கலித்து படுத்து.. உறங்கினால் பவித்ரா..
" ம்.. நீ தூங்கு.. எனக்கு தூக்கம் வரலை." பிரதியின் 'மனமோ.' காதலிக்காத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை .. படுத்த நிமிஷம் தூங்கிட்டா..பவி!! ஆனா.. நான்.?? பிரிவால் தவித்தவளுக்கு உறக்கம் எட்டாக்கனியாக. ஆறுதலாய்
அவன் வந்து பேசினால் தான் கண் அயறுவேன் என அடம்பிடித்தது காதல் மனம்.. நிமிடங்கள் மணி நேரமாக கடந்தும் அவன் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை ..
நள்ளிரவு காரில் வரும்போது புன்னகையோடு அவள் செய்தியை பார்த்தவனுக்கு.. கோபம் மிகுதியாகி அவள் மீது துளி மாறாமல் சீற்றத்தை காட்ட வெறியோடு வீட்டை அடைந்தவன்.. அவள் அறையில் நுழைந்து உறங்கும் அவளை கைகளால் சிறை செய்து இதழ்களை முற்றுகையிட்டான்.. கனவில் காதலன் முத்தமிடுகிறான் என்று முத்தத்தில் கரைந்து உருகி போனால் அவன் உயிர் காதலி..
நடுநிசி வரை மாடியில் நிலவின் துணையோடு அவனுக்காக காத்திருந்தவள்.. நிலவையே வெறித்து பார்த்தபடி அவன் எண்ணங்களில் மூழ்க.. குளிர் தென்றல் மேனியில் பட்டு கூசுகையில் உணர்வு வர.. ஒடி சென்று வாசலை நோட்டமிட.. கார் கண்ணில் படவும். காதலன் வருகை உணர்ந்து, படிகளில் வேகமாக குதித்து இறங்கியவள் பாத கொலுசுகள் அவள் வேகத்திற்கு ஏற்ற தாளம்மிட்டு இசைக்க.!! கதவை திறந்ததும் அதிர்ச்சியில் நொறுங்கிப் போனால் பிரதிக்ஷா..



உமா கார்த்திக்