uma Karthik
Moderator
காதலன் வருகை உணர்ந்து படிகளில் வேகமாக வந்து இறக்கி, பின் கீழே வந்தவள் ஹாலில் தேடியும் அவன் இல்லாததால், தன் அறை கதவை திறக்க கண்டது மென் வெளிச்சத்தில் உறங்கும் பவித்ராவை கோபமாக நெருங்கும் காதலனை கண்டு ஓடி..அவனை பிடித்து கீழே தள்ள.. விழுந்தவனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை விளக்கு ஒளிர,
திடீர் வெளிச்சம் கண்ணில் முட்டி கூசி உறுத்த, அழுத்தமாக கண் மூடி திறந்தவன். எதிரே பிரதி நிற்கவும், நம்ப முடியாமல் அதிர்ந்தான் ப்ரீத்.
" நீ இங்க அப்ப அங்க?" ஆள்காட்டி விரலை திருப்பி நோக்க, மெத்தையில் உறங்கும் பவித்ராவை பார்த்ததும் பக்கென்று ஆனது ஆளனுக்கு. இரண்டு பேரையும் மாறி மாறி பார்த்தவனுக்கு பயத்தில் குலை நடுங்கியது. பாவம் ஒரு ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல் தரையில் முழங்காலில் முகம் பு(மறை)தைத்து இருப்பவளின் மனநிலை தான் என்ன? அழுகிறாளா? என்று துடித்தவன். உரிமையோடு துணிந்து பேச நா வரவில்லை. கோபத்தில் செய்த செயல் அப்படி பேச விடாமல் தடுக்க, அவமானத்தில் தலைகுனிந்து ஒடுங்கி தரை பார்த்து உட்கார்ந்தான் ப்ரீத்.
அவள் பார்வையை எதிர்கொள்வதை விட, அவனால் அவள் விடும் கண்ணீரை பார்க்க முடியாது விழி முடி தவிர்த்தான். கண்ணீர் சிந்தும் காரிகையின் வலி தோய்ந்து விழி வடிக்கும் நீரை தாங்கிய அவளின் பிள்ளை முகம் அவனுக்குள் வலி தந்தது.
ஒற்றை கையால் அவன் தாடையை உயர்த்தி " பாருங்க..ப்ரீத்"
நிமிர்ந்தவனின் கைகள் பிரதியின் கழுத்தில் இறுக்கம் தர.. அழுத்தும் அவன் கையை தடுக்காமல் அவன் கண்களையே பார்த்தால்.. இல்லை படிக்க முயன்றால் அவன் மனதை, பொய்யை பிரதிபலிக்காத அவன் விழிகள் கலங்கி இருந்தது.
" என்ன டி.. நெனச்சுட்டு இருக்க..,நீ தான்.. நீ மட்டும் தான்..., " என்று அறை முழுவதும் அதிர்ந்து கேக்கும் அளவு ஆவேசமாய் கத்தினான். "அத்தனை மெசேஜ், அழுது ஒப்பாரி வச்சு செத்துப்போறேன்னு அழுது மிரட்டி.., என்ன வெறி பிடிக்க வச்சி, இப்ப எதுக்கு டி அழற? ஒரு வாரம் பேசாம எனக்கு மட்டும் வலி இல்லையா?? ஏதாவது ஆச்சோ னு பயந்து போய் உன்ன பாக்க வந்ததும் மிஸ்ஸிங் ல உன்ன " கோபத்தில் கழுத்தை நெறித்தவன். வதைப்பதை கை விட்டு, வேகமாக கட்டிக்கொண்டு ஆறுதல் அவளிடமே தேடினான்.
அவளின் சந்தேக மழை அவன் விலக்க, குடையில் ஓய்ந்து இருந்தும் கேள்வியின் சாரல் வீச "நிஜமாவா?? என்னை விட்டுட மாட்டிங்க இல்லை. சத்யம் பண்ணுங்க. ப்ரீத்." என்று அவன் கை எடுத்து அவள் தலையில் வைத்து நிற்க.
" உன் மேல பண்ணாலும் நீ என்ன நம்பமாட்ட அத்தை மேலே வேணா சத்யம் பண்ணவா? " என்று அத்தையை தெய்வமாக நினைப்பவன் கேட்டதும்."இல்லைவேணாம் " என்று மறுத்தவள் தன் தலையில் இருந்து அவன் கையை கீழே எடுத்து விட,
" உன்ன நேரா பாக்கவே முடியலை. உறுத்தலா இருக்கு. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன் சாரி.. " தலை கவிழ்ந்தவன் நெற்றியில் ஆதுரமாய் முத்தம் பதித்தவள் " இது எதுக்கான சாரி? "
" அந்த டெலிவரி வந்தவன் மேல உள்ள கோபத்தை உன் மேல காட்டி ஒரு வாரம் பேசாம அவாய்ட் பண்ணதுக்கு "
" அடிக்க தான கோபமா வந்திங்க, நல்ல வேளை நான் தடுத்தேன்.இல்லை பவி அறை வாங்கி இருப்பா "
" ம்.. அடிக்குறாங்க ஏன் டி? எதுவும் லூசு தனமா பண்ணிட்டியோ னு பயத்துல பாக்க வந்தேன்.பவித்ரா இங்க என்ன பண்ணுறா? "
" ஏன்?பவி இருந்தா என்ன? சேர்ந்து தூங்கலாம்னு நான் தான்..., "என்று இழுத்து
அவனை பார்க்க
" சரி தூங்கு நான் போறேன் " என்றவன் கரத்தை பிடித்து தடுத்தவள் " ஒரு மாதிரி இருக்கு ப்ரீத் போகாதிங்க ப்ளீஸ்...,ப்ளீஸ்
அசதியில் நின்றவனோ " இன்னைக்கு ஆபீஸ்ல நிறைய ஒர்க்.நீயும் டென்ஷன் ஆக்கி விட்டுட்ட, தலை வலிக்குது மா, புரிஞ்சுகோ பிளீஸ்."
பிடிவாதமாய் போக விடாமல் தடுத்தவள் " லாங் டிரைவ் போகலாமா?ப்ரீத்."
" ஐ ஆம்.. சோ டயர்ட் பிரதி.., நாளைக்கு போகலாம் "
"நானே டிரைவ் பண்ணுறேங்க போகலாம்.
ஐ வாண்ட் ஸ்பென் டைம் வித் யூ ப்ரீத் "
கைக்கோர்த்து பதிலுக்காக கண் பார்க்க, மறுக்க முடியாத நிலை அவனுக்கு பிரதியின் சிரித்த முகம் இன்று தான் காண முடிகிறது. ஒரு வாரம் அவளை பேசாமல் வதைத்த குற்ற உணர்வு ஆணை அடங்கி அவளோடு செல்ல வைத்தது. காதலன் காரில் ஏறியதும் காதல் பாடல்களை ஒலிர விட்டாள் பிரதி. இருளான சாலையில் ஜன்னல் வழியே தெரியும் நிலவு! புதுவித இதத்தை தந்தது இருவரின் இதயத்திற்க்கும் விடியும்வரை காரில் சுற்றிவிட்டு, சூரியன் பூமியை முத்தமிடும் முன்னே கடற்கரை வந்து சேர்ந்தனர் காதலர்கள். ப்ரீத் கையை அழுத்தி கோர்த்து பிடித்து இருந்தாள் பிரதி. ஒருவார பிரிவின் தாக்கம் இது " பிரதி கை வலிக்குது டி .., "
" வலிக்கட்டும் ஆனா விட மாட்டேன் " என மேலும் அழுத்தி பிடிக்க, வேண்டுமென்றே கீழே அமர்ந்தான் ப்ரீத். அதை எதிர்பார்க்காதவள் அவன் மடி மீது விழ,
கடற்கரையின் உப்பு காற்றில் வறண்ட தன் இதழ்களை அவள் மென் இதழால் ஈரம் தோய்த்து முத்த மாயம் தந்தான் கள்வனாக கதிரவன் வரும் வரை இதழை களவு செய்து
காதல் செய்தான்.!!
கடல் காற்று வாங்கி வந்த பிறகு ப்ரீத் அவசரமாக வேலைக்கு செல்ல.. அவன் லேப் டாப் ஐ கொண்டு செல்ல மறந்து விட்டான். அவன் இளமை கால புகைப்படம் கிடைக்கும் என லேப் டாப் திரையை திறந்தவள் கண்டது பவித்ராவின் முகமே..!! அவன் கேலரியில் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடந்தது அவள் படம்..!!
இன்று பிரதிக்ஷாவின் கவலை மற்றும் வேதனையை நீட்டிக்க..., இதுவே போதுமானதாக இருந்தது.
இரவில் பிரதி தனது அறையில் தனக்கு தானே புலம்புவதை பார்த்து காதலன் பயந்து போய் "ஏய்!என்ன ஆச்சி? ஏன் இப்படி பறிகொடுத்த மாதிரி எங்கயோ பாத்துட்டு உட்கார்ந்து இருக்க தனியா வேற புலம்புற? "
அக்கறை கொண்டு விசாரித்தான்.
" பயமா இருக்கு இதுவும் எனக்கு நிலைக்காம போயிடுமோ? திரும்பவும் அனாதை ஆகிடுவனோ? " என்று மன அழுத்தம் ஏறியவளோ.., தன் போக்கில் பிதற்றினாள்.
"ஏன் அப்படி சொல்லுற? நான் இருக்கேன் பிரதி. "
"யாருமே இல்லாதப்ப கூட பயந்ததில்லை. இருந்து இல்லாம போன தாங்க மனசுல தெம்பு இல்லை ப்ரீத். ரொம்ப பயமா இருக்கு " குரலில் அத்தனை பரிதவிப்பு " என்ன நம்பலையா.??
"ரொம்ப நம்புறேன் வாழ்க்கையில் முதல் தடவை இந்த அளவு ஆழமா.. துளி கூட சந்தேகம் இல்லாம நம்புறேன். ஏமாந்து போன இருக்க மாட்டேன் ப்ரீத்.
நேரடியாக கேட்கிறேன் நீங்க டபுள் மைண்ட்ல இருக்கீங்களா? பவித்ரா உங்க காதல வேணாம்னு சொன்னதுனால உங்க ஈகோ டச் ஆகி.., என்ன காதலியா முன் நிறுத்தி, உங்கள நீங்க நிரூபிக்க என் காதலை யூஸ் பண்ணுறீங்களா? " வாழ்க்கை நிலைக்குமா என்ற பயத்தில் ஆற்றாமையோடு பிரதி கேட்க.
சின்ன திருத்தம் பவித்ரா என்ன வேணாம்னு சொல்லல? இக்கட்டான அவளோட சூழ்நிலையால, அவளே சொல்லியும் கூட மறுத்து கல்யாணம் வேணாம் னு சொன்ன என்ன போய் சந்தேகபடுற? " என்று முகம் வாடி நின்றான்.
"சந்தேகத்த மனசுக்குள்ள வச்சு மறைக்க மறைக்க அது அசுரத்தனமா வளர்ந்து பெருசாகும்.நேரடியா கேட்கிறேன் அவளா..., நானா...,
யோசிக்காமல் சொன்னான் " அவ தான்.!! "
கண்கள் கலங்கி நிற்க " அதுக்கு என்ன அர்த்தம்? "
" தெளிவா..கேட்டா பதிலும் தெளிவா கிடைக்கும். கேளுங்க உங்க கேள்விய " என்றான் திமிராக,
" யார்.. உங்களுக்கு முக்கியம். நான் இல்லைனு தெரியும்.ஏன் னு மட்டும் சொல்ல முடியுமா?" தோல்வியின் காரணம் அறிய வேண்டுமே..
புன்னகையோடு " அவ வெறும் காதல் இல்லையே.! அஞ்சு வயசுல எனக்கு அம்மாவா இருந்தவ, எனக்கு எல்லாமே அவ தான். புதுசா யாராவது வந்தா பழசு மறக்குற புத்தி எனக்கு கிடையாது "
" மனைவியை தவிர எல்லா உறவாவும் அவ உங்களுக்கு இருக்கட்டும். அது எனக்கு பிரச்சனை இல்லை. ஒரே ஒரு கேள்வி பதில் வேணும்? இப்போ பவித்ராவே உங்கள காதலிக்கிறேன் னு சொன்னா என்ன பண்ணுவீங்க? சந்தோசமா ஏத்துக்கிட்டு என்ன போக சொல்லிடுவிங்க கரெக்டா ? பதிலுக்காக அவன் முகம் பார்த்தாள் பிரதி.
" கரெக்ட்.. அதுக்கு தான் வெயிட்டிங் உன்ன வச்சி அவள வெறுப்பேத்தி அவ வாயால காதல சொல்ல வச்சி, நடிக்க வந்த உன்ன என் தேவைக்கு யூஸ் பண்ணி தூக்கி போட்டுடுவேன். போதுமா " என்று அவளின் பயத்தை புரிந்து வேண்டுமென வம்பிழுக்க.
குரலில் விரத்தி இழையோட "அப்போ நான் தான் ஏமாளி இல்லை! "
"போடி.. பைத்தியம்.. இவ்வ்ளோ நெகடிவ் ஆ திங்க் பண்ணுற " அணைத்து நெற்றியில் முத்தமிட்டு " கண்டத நெனைக்காம போய் தூங்கு சைகோ மாதிரி பிஹேவ் பண்ணாம " என்று எழுந்தவன் கரம் பற்றி லேப்டாப்பில் இருந்த படம் பற்றி கேள்வி கேட்க வாய் துடிக்க.. அனுமதி இல்லாமல் சந்தேகத்தால் அவன் லேப் டாப் ஐ ஆராய்ந்தது போல எண்ணிவிட கூடாது என்று தவிர்த்தாள் பிரதி.
" என் இடத்துல இருந்து பார்த்தா தான் என் வலி புரியும். இதுவரை என் வாழ்க்கை முழுக்க யாருமே இல்லாத தனிமை மட்டும் தான் நிறைஞ்சி இருந்தது. உங்க கூட இருக்கும் போது தான் பாதுகாப்பா நிம்மதியா உணர்ந்தேன். எதையோ இழக்க போற மாதிரி மனசு படபடன்னு அடிச்சிக்குது "
என்றவளின் விழிகள் கலங்கி நீர் விழ..!!
இங்க அடிச்சுக்குதா? இடது நெஞ்சில் செவி சாய்த்து கேட்டவன். தெளிவாக கேட்க இன்னும் இன்னும் நெஞ்சோடு புதைய !! உடனே உச்சிவரை மின்சாரம் தாக்க!! உணர்வு பெற்று சிலிர்த்து நடுங்கினாள் பெண்ணவள்.இதயம் எக்கு தப்பாக எகிறி துடிக்க..!!
துடிப்பின் இசையில் லயித்து கண்களை மட்டும் மேல் தூக்கி.. வெட்ககத்தில் மூழ்கி..சிலிர்த்த அவள் சிவந்த முகம் ஏறிட்டு கேட்டான்.
" அது என்ன? நேத்து சரியான மிக்ஸர் மாமா னு மெசேஜ் அனுப்பி இருக்க. திமிரா..டி.. " என கேட்டுக் கொண்டே கழுத்தில் இதழ் பதித்து நிற்க. ஆணின் அனல் மூச்சில் கழுத்தில் இதம் கூட " உன் எல்லா சந்தேகத்தை தீர்த்துவோமா? நான் டம்மியா மிக்ஸர் தின்பேனா? இல்லை.. உன்னயே.. " கழுத்தில் மென்மையாக பல் பதித்தான் மோக பசியில்.
" ஆ.. ஹ்.. ஹ். வலிக்குதுங்க. " தள்ளி விட்டால் தன்னவன் தலையை கட்டில் விட்டு எழுந்தவன் கதவடைத்து தாழ்பூட்டி.. தாரகை அவள் அருகில் வர.
படபடப்பு கூடி உடல் எங்கும் வேர்த்துக் கொட்ட, அவன் முன்னெடுத்து வர..வர..நடுக்கம் எடுத்து மெத்தையில் பயத்தில் எச்சில் விழுங்கியபடி பின் நோக்கி நகர்ந்தால் பிரதி. மின்னல் வேகத்தில் இதயம் துடித்து எகிறி குதிக்க போக. கட்டில் விளிம்பில் முட்டி நின்றாள். தப்பிக்க ஏன் நகர கூட முடியாத நிலை. அவனது மோகப் பார்வையோ..ஏதோ சம்பவம் நடக்கப்போகுது என்று மூளை முன்கூட்டியே ஆருடம் சொன்னது.
" இது வேணாமே ப்ளீஸ்.. " கெஞ்சினால் வஞ்சியவள்.
" நான் உன்ன தான் காதலிக்கிறேன் னு காட்ட வேணா??" போர்வையோடு பாவையையும் சேர்த்தே போர்த்தி..முத்த மழை பொழிய.!! போர்வைக்குள் சிறை பட்டவள் போராடி திமிறி தடுத்து பயன் இல்லை. அடங்காத ஆண்மகன் நான் ஸ்டாப் நச்சுகள் வைக்க. தேகம் எங்கும் வரி இடைவெளி விடாமல் இதழ் கதை தீட்டியவனின்.. மோக மந்திரம் பெண்ணை மயக்கி கிறங்கடிக்க. ஒரு பக்கம் அவனை தடுக்க உடல் போராட்டம்.. மறுபுறம் அவனிடம் மயங்கி போகாதே.. என்று தன்னயே திட்டி உணர்ச்சியை அடக்க, மனப்போராட்டம் வேறு.!!
"பிரதி ப்ளீஸ்.. தடுக்காத டி.. லவ் மீ டி.. " என்ற குரல் எனும் காம அஸ்திரம் மாயவன் எய்திட அதில் மயங்கி ராஜபோதை திளைத்தாள் கோதை. மெய் மறந்து உலகம் மறந்து அவன் மீது மையல் கொண்டு சுயத்தை மறந்தவள்.. எல்லை தாண்டி மன்னன் விரல் செல்ல..!! பெண்மை விழித்துக் கொள்ள..!! துள்ளி தள்ளி.. செல்ல.. செல்ல.. வளைத்து பிடித்தவன் அவளது உடைகளுக்கு சுகந்திரம் வாங்கி தர அயராது போராடினான். ஒரு கட்டத்திற்க்கு மேல் முடியாமல் கத்தியே விட்டாள்.
"போதும் ப்ளீஸ் . இனிமே சந்தேகப் பட மட்டேன். " என்றதும் குலுங்கி சிரித்தவன்.
" ஒன்னு சொல்லனும் கிட்ட வாயேன்."என்ற தந்திரன்..கீழ் பார்வையோடு மார்க்கமாய் அழைக்க.
"ம்கும்.. மேல மாடிக்கு போய் பேசுவோமா??" ஒரே அறையில் இருப்பது ஆபத்து என மூளை எச்சரிக்க, லொக்கேஷன் மாத்திட ப்ளான் போட்டால் காதலி.
" அது இன்னும் வசதியா போச்சி.. தப்பிக்க குதிச்சா செத்துடுவ...," கையில் அவள் மொத்த எடையையும் ஏந்தி.. ஸ்லோ மோஷனில் நடந்தான். ஒவ்வொரு படி ஏறலுக்கும் பூஸ்ட் அப் ஆக எக்கி எக்கி அவள் முகத்தில் முத்தமிட்டான். மாடியை அடைந்ததும்
"ஐ லவ் யூ டி.. வேணும்னா கல்யாணம் பன்னிக்குவோமா? " என்று சுகமான சுமையை கீழே இறக்கி விட,
" ம்கும்.. பவித்ராக்கு கல்யாணம் பன்ன அப்றம் தான் நம்ம கல்யாணம். நீங்க தானே சொன்னீங்க? உங்க அத்தை இடத்துல இனிமே நான் இருக்கணும்னு, என்ன விட ஒரு வயசு பெரியவ அவளுக்கு தான முதல்ல கல்யாணம் பன்னனும் "குடும்ப தலைவியாய் பொறுப்பை உணர்த்தி கேள்வி கேட்டாள் அவளவனின் பாதி.
"அப்ப நான் தானே உங்க எல்லாரவிட பெரியவன். அப்ப எனக்கு தான் முதல்ல கல்யாணம் பண்ணனும் . நாளைக்கு காலைல கோவிலுக்கு போய் கல்யாணம் பண்ணிக்கலாம்.." அழுத்தமாக தான் எடுத்த முடிவை அனுமதி கேட்காது. செய்தியாக சொல்லி கட்டளையிட்டான் கல்யாண வயசு வந்தவன்.
நாளை காலை திருமணம் என்றதும் பயம், நடுக்கம் ஒரு சேர வந்து திகிலூட்ட " என்னங்க ஏதோ நூடுல்ஸ் மாதிரி டக்குனு பண்ணிக்கலாம்னு சொல்றீங்க !! எவ்ளோ வேலை இருக்கு. கல்யாண இன்விடேஷன், மண்டபம், ரிசெப்ஷன், பட்டு புடவை , நகைகள் , சாஸ்திரம் சம்பிரதாயம்.. எவ்வளவு இருக்கு ஒரு நாள்ல எப்படி முடியும் காமெடி பண்ணாதீங்க. " தோளில் செல்லாமாய் தட்ட, முறைத்து பார்த்தவன்.
" இவ்வளவு எல்லாம் என் பட்ஜெட் ஒத்து வராது. நீ சொல்றதெல்லாம் பார்த்தா ... அஞ்சு லட்சமாவது குறைஞ்சது வேணும். நான் என்ன சொல்றேன்னா ? காலைல நேரா போய் தாலி, புடவை, மாலை வாங்கிட்டு கோவிலுக்கு போய் கல்யாணம் பன்னிக்கலாம்.. முக்கியமான கண்டிஷன்.. புடவை காஸ்ட்லியா.. வாங்க கூடாது.. "
" இவ்ளோ கஞ்சமா இருக்கீங்க.? ஒரு தடவ தானே கல்யாணம் பண்ணிக்கிறோம். கிராண்ட்டா பண்ணிக்க வேணாமா ??"
" அப்டினா? வேற யாராவது கிராண்டா கல்யாணம் பண்ணிக்கிற தாராள பிரபுவ பார்த்து நீ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கும் உனக்கும் யாரும் இல்ல பிரதி. அதுவும் இல்லாம கல்யாண கடனை என் மாமனார் வந்து அடைக்க போறதில்லை !! என்று முறுக்கி கொண்டு நக்கல் செய்ய.
அவள் அப்பாவை இழுத்ததும் கோபம் கொந்தளிக்க " என்ன கல்யாணம் பண்ணா சீர் எல்லாம் கிடைக்காதுன்னு குத்தி காட்டுறீங்களா ?"
" அப்படி சொல்லல பிரதி.கல்யாணம் நாம நிம்மதியா வாழ்றதுக்கு தான். ஒரு நாள் ஆடம்பரமா செலவு பண்ணிட்டு கடன் சமாளிக்க முடியாமல் தினமும் சண்டை வரும்.. என்ன கருமி,கஞ்சம் ஏன் பிச்சைக்காரன் னு நினைச்சா கூட பரவால்ல, தகுதிக்கு மீறி கடன இழுத்துக்க முடியாது. சாரி.. கிராண்ட் வெட்டிங் எல்லாம் என்னால .ஆஃபர்ட் பண்ண முடியாது பிரதி. "
" கிராண்ட்ன்னா அந்த அர்த்தத்துல சொல்லுங்க, நிறைய பேருக்கு சாப்பாடு போடணும். வயிரும் மனசும் நிறைஞ்சு அவங்க எல்லாரோட ஆசிர்வாதம் வாங்கணும். காட்டன் புடவைல கூட எனக்கு கல்யாணம் ஓகே.. ஆனா நிறைய பேருக்கு சாப்பாடு போடணும் . என் அப்பாவும் என் கல்யாணத்துக்காக பணம் சேர்த்து வச்சிருக்காங்க வேணும்னா அதை "
" சாப்பாடு ஒரு ஆயிரம் பேருக்கு போட்டா போதுமா ?" எதையோ காற்றில் விரல் வைத்து ஆட்டி..கணக்கு போட்டு பார்த்தவன்." சரி.. நீ வேற இன்விடேஷன் அது இதுன்னு சொல்ற, உன் ஆசையும் பாக்கணும் இல்ல." பலமாக யோசித்தவன். "உங்க அப்பன் காசு நீயே வச்சிக்கோ.. கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிட்டு, ஒரு வருஷம் கழிச்சு நீ சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாம். பயப்படாத டி.சுமதி அத்தை உடைய வளர்ப்பு ஒரு பெண்ணை ஏமாத்த மாட்டேன்.. சீக்கிரம் இந்த செயினோட புது தாலி வாங்கி சேர்த்து கட்டி என் பொண்டாட்டிக்கு போட்டுடுடவா? என்று அவள் சம்மதம் கேட்டு தலையாட்டினான் .
பொண்டாட்டி என்றதும் வெட்கம் வர.. ம்.. கொட்டி சம்மதம் சொல்லி.. மார்பில் முகம் பதித்து நாணத்தை மறைத்தாள். " உங்க பொண்டாட்டிக்கு... இப்பவே இந்த செயின் கொடுக்கலாம் இல்ல. " கிண்டலாய் கேட்டாள் .
கிண்டலாகவே பதிலும் வந்தது " ஜெயின குடுத்துட்டு உன்ன எடுத்துப்பேன் பரவாயில்லையா? " கீழ் கண்ணால் பார்த்தவன் ஒரு மார்கமாய் புன்னகைக்க.
பதில் கேட்டு மூச்சடைத்தது பத்தினிக்கு " எனக்கு வேண்டாம் சாமி..., கல்யாணதன்னைக்கு போட்டு விடுங்க போதும் " பயம் கலந்த நடுக்கத்தோடு சற்று தள்ளி சென்று கீழே அமர.. மடி தேடும் பிள்ளையாய் வந்து தலை சாய்த்தவன்.. " அஞ்சு பவுன் செயின் வேணாமா உனக்கு ." தாபம் கொண்டு அவளை பார்க்க. தடுமாறி அவனிடம் மருகி உருகும் மனதை தடுக்க முடியாமல். தன் விழிகளை மூடி அவன் பார்வையை தடுத்தாள் பிரதி. பேச்சை மாற்றுவதற்காக " உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா ??"
" எனக்கு ஒரே ஒரு ஆசைதான். பாசமா இருக்கிற பொண்டாட்டி. உங்களோட மணி வயித்துல அழகா என்னோட குழந்தை." கன்னியின் கருப்பைத் தாங்கிய வயிற்றை அழுத்தி முத்தமிட்டான்.. ஏதோ கருவுற்ற பெண் போல பிரம்மை உண்டாகியது தாயாகாதவளுக்கு. சில நொடியில் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தது தலைவன் வழங்கிய ஒற்றை முத்தம்.
" சின்ன வயசுல என் சூழ்நிலையால நான் வாழாத வாழ்க்கையை நம்ம குழந்தையோட சேர்ந்து வாழணும். ஒரு நல்ல அப்பாவா இருக்கணும் அவ்வளவு தான்.. " பிஞ்சு வயதில் சாப்பாட்டுக்கு கூட ஏங்கியதெல்லாம் நினைத்து கண்கள் கலங்கி சிவக்க , அவள் பார்க்கும் முன்பு கண் மூடி கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டான்.
" என்ன தூங்க வை ..பிரதி" என்றவன் இடுப்பில் கை போட்டு அணைததுக் கொண்டு, வயிற்றில் முகம் புதைத்து உறங்குவதாய் நடித்து.. தீண்டி... சீண்ட காதல் பாவைக்கு அவஸ்தை ஆகி போனது மேலும் அவன் வெப்பம் மூச்சு காற்று பட்டு பருவ பெண்ணின் உணர்வுகளை தூண்டிவிட்டு இழுக்க. உறங்கும் அவன் நெற்றியை வருடி முத்தம் வைத்து பூமி பார்த்த மீசை யை வானம் பார்க்க முறுக்கிவிட்டு சிரித்தால். கன்னம் தடவி, தாடி முட்கள் குத்த சிலிர்த்தாள் . நுனி முக்கில் முத்தமிட்டு. புருவங்களை நீவி..ஏதேதோ ஆராய்ச்சி செய்தால். பாவம் வளர்ந்த மழலை பெண்ணின் கையில் கிடைத்த உயிர் பொம்மை படாதபாடு பட்டது. அவள் சேட்டையால் காதலன் சிணுங்கும் போது தலைக்கோதி தலைவனை உறங்க வைத்து. அவனை ரசித்து சேர்ந்து அவன் மீது விழுந்து உறக்கம் கொண்டால் காதல் தேவதை.
நன்றிகள்
கோடி 
உமா கார்த்திக்