எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம். 51

Status
Not open for further replies.

uma Karthik

Moderator

❤️ஏக்கம் ❤️

இந்த விடியல் காதல் ஜோடிகளுக்கு பல மாற்றத்தையும் சில ஏமாற்றத்தையும் சேர்த்து தரப்போவது உறுதி.!!

பவித்ரா ப்ரீத்திடம் இன்று கோவிலுக்கு, செல்ல வேண்டும் என்று மட்டும் சொன்னாள். முழு விவரம் மறைத்து.

கோவிலுக்கு என்றதும் குடிப்பதனால் சாமிக்கு மாலை போட சொல்லப் போகிறாள் என்று நினைத்தவன்.. குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு போக கிளம்பி தயாராக நின்றான்..

எளிமையான ஒப்பனையோடு சந்தன நிற பட்டு புடவை அணிந்து வந்தால் பவித்ரா.. மனம் கவர்ந்த மாமன் என்றாலும் அவனுடன் மணம் என்றதும், ஏன் இந்த நெருடல்..?? உயிர்த்தோழிக்கு துரோகம் செய்வது தவறு என்றாலும்..? இந்த ஒரு மாத காலம் எத்தனையோ .. முறை அவளது நம்பருக்கு அழைத்து பார்த்து விட்டாள்.. தோழியோ ..
ஒருமுறை கூட ஏற்கவில்லை..!! இந்த நொடி வரை முயற்சி செய்து தோற்றவள்.. காதை நிறைந்தது..!! தொடர்புகளுக்கு அப்பால் உள்ளார் எனும் கணினியின் குரல்.!!

தோழியை நொந்து கொண்டு.. இதற்கு மேல் எல்லாம் விதி..!! விதி போட்ட முடிச்சு..!! பொல்லாத விதி மீது பழியை போட்டு மனதை தேற்றிக் கொண்டால் பவித்ரா. இருந்தும் ஆழ் மனதில்.??

வேண்டும் போது கிடைக்காத எந்த ஒரு பொருளும்..(காதலும்) மீண்டும் கைக்கு கிடைக்கும் போது.!! வேண்டாம் என மனமுதருவது இயல்பு..!!

'ஆனால் அன்று நான் வேண்டுமென்று நினைக்கும் போது
அவன் என்னவன்.. !!
ஆனால் இன்று அவள் மீது கொண்ட காதலை.. மறக்க முடியாமல் துடிப்பவனாய்..!! அவளையே நினைத்துக் கொண்டு அவளவனாய் சிதைகிறானே.!! அவளை மறப்பானா!! என்னை ஏற்பானா?? ஐயோ..!! என்னை மணந்து கொண்டு அவள் நினைவில் என்னோடு வாழ்ந்தால்.??' குழப்பத்தில் தலை சிதறி தெறித்தது..
இப்போது. நான் எடுக்கும் முடிவு என்ன பின்விளைவை கொடுக்குமோ..??'
என்ற பயத்தில் விலகி வெளியே நடக்க.

இருவருக்கும் எந்த பேச்சுக்களும் இல்லாமல் அமைதியாகவே சென்றது கார் பயணம்..

கோவில் வாசலில் இறங்கியதும் பூ வேண்டுமா.?என கேட்டவனுக்கு. கண்ணசைத்து சம்மதம் சொன்னவள்.. தந்ததும் கையில் வாங்கி சூடிக்கொண்டாள்..

பூக்கடைக்காரரிடம் ஐந்நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லை.. அதனால் வேறு கடைக்கு சென்று பணம் மாற்றி தர ப்ரீத் சென்றான். அவன் வருவதற்கு காத்திராமல் ஏதோ சிந்தனையில் மூழ்கி கோவில் நோக்கி நடக்க தொடங்கினால் பவித்ரா..

மனதெல்லாம் அடைப்பது போல் பாரமான உணர்வு.. தவறு என்று உள்ளுணர்வு கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க.!! தெய்வத்தையே நிலைத்து பார்த்த விழிகள் கண்ணீரை அருவியாய் கொட்டியது.

தெய்வமாவது எங்களை சேர்க்காதா?? என ஒரு காலத்தில்..தன் மாமன் காதல் வேண்டி.. தவம் இருந்தவள் தான்.!! பிரதியுடனான நட்பும். அந்த அப்பாவி பெண்ணின் காதலும் சேர்ந்து குற்றவுணர்வாகி நெஞ்சை அறுக்க..!!

மனசாட்சி வேறு..?? 'அவள் வந்து கேட்டால்..என்ன சொல்லுவாய் ?? நீ விட்டதால்.. நான் தொட்டேன் என்றா??
நீ விட்டு சென்ற இடைவெளியை.. என்னை இட்டு நிரப்பினேன் என்றா.?? இருவருக்கும் பிரச்சனை என்ன என்று விவரம் கூட அறியாமல் முடிவெடுக்கும் முட்டாளாகாதே!! பவித்ரா.. ' மூளை தீவினைக்கு எதிராக வாதம் செய்தது.

பூக்கடையில் சில்லறையை கொடுத்துவிட்டு கோவிலுக்குள் வந்தவன்.. நிலைத்த பார்வையோடு அசையாமல் நின்றான்.!! பிரதியின் இஷ்ட தெய்வத்தின் முன்..!!

சகலலோக துக்க நிவாரணியான துர்க்கை அம்மன்..முன்.!!
திருப்பாதம் வணங்கியவன். கை கூப்பி வேண்டுதல் வைத்தான்..? வெளியே எத்தனை வெறுப்பை பூசிக் கொண்டாலும் ஆழ் மனதில் என்றும் அவள் 'என் பிரதிக்கு..நீங்க துணையா இருக்கனும்.. யாரும் இல்லை..கண் கலங்கியது காதலனுக்கு.'நானும் இல்லை..!! அவளுக்கு யார் கூட வாழ புடிச்சிருக்கோ‌.?? அவங்க கூட நல்லா வாழனும்.. உண்மையான காதலோடு.. கசிந்துருகி வரம் கேட்க..!!

வரம் தந்தது தெய்வம்.. !!

அன்று காதலன் கைகளில் காயப்படுத்தி செல்ல..? அங்கேயே..நகராமல் அழுதாள் பிரதிக்ஷா.. கீழே பூமியை பார்த்து விடப்பட்ட கைகளில்..நிற்காமல் தொடர்ந்து.. காயத்திலிருந்து உதிரம் வழிய..!! முதலுதவி செய்யாமல்..?? மருத்துவமனை செல்லாமல்..?? காத்திருந்தவள்.. மறுநாள் காலை உயிரற்றது போல கிடைப்பதை பார்த்து..!! வேலையாட்கள் மருத்துவமனை கொண்டு வந்து சேர்க்க.!! ஒரு மாத காலம்.. உணர்வற்று கிடந்தாள்.. பார்க்க ஆள் இல்லாமல். காதலன் இங்கு வேண்டிய நொடியே..!! கண்களை மெல்ல அசைத்து திறந்தவள்.. வாய் முனுமுனுப்பாய் ஓசை இல்லாமல்‌‌.." ப்..ரீ..த்.." என சொன்னது அவன் பெயர் தான்!! தேடியது அவன் முகம் தான்!! ஏமாற்றத்தோடு கண்ணீர் வடித்தவள்.. சாகாமல் பிழைத்தது எண்ணி வருந்தினாள்..!!

நாம் நினைத்தது நடந்தால் தெய்வத்திற்கு என்ன வேலை?? அவதிப்படுவோருக்கு நல்லதை கொடுத்து அல்லதை விலக்கிடும்.. அருள் பொருந்திய கலியுக தெய்வமாக அருள் தந்து வாழ வழி தந்து.. அம்பிகையின் பொற்கரங்கள் ஆசி வழங்கிட !! விதியின் சதியில் ஒரு நல்லவள் பழி சுமப்பது அநீதி..!!
தெய்வத்திற்கு தெரியாத நீதியா!!

கோவில் அம்பிகை சன்னதியில் தீப ஆராதனை தட்டை அவள் முன் வைத்து நின்ற அட்சகர்.. அழைத்துமே உணர்வற்று ஏதோ குழப்பத்தில் பவித்ரா மூழ்கி நிற்க.!!

அவள் அருகில் நின்றவன். எக்கி தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்து காதலியின் நெற்றியில் தீட்டிட!! இப்போதும் நனவற்று கனவு உலகத்தில் பல கேள்வி கட்டுகளில் சிக்கி தவித்து!! அதே சிந்தனையில் நின்றால் பவித்ரா.

" என்னம்மா? இவர் தான் நீ கட்டிக்க போற பையனா?? அவன் தட்டில் போட்ட நூறு ரூபாய் தாளை பார்த்து குதூகலமாய் அவர் கேட்க ?

" ஆமா.. சாமி.. நான் தான் பவித்ராவ கட்டிக்க போற மாப்பிள்ளை !! "என ஆண்மையோடு.. உறுதியான குரல் அருகில் கேட்க.

அந்த குரலை உணர்ந்தவள்..!! நரம்புகள் எல்லாம் சில்லிட்டது.!! முன் இருந்த கம்பியை பிடித்த கை கூட பயத்தில் வழிந்த வியர்வையால் வழுக்கியது.. உதடுகள் நடுங்கி .. குரலும் வெளிவர மறுத்து இறுகியது.. வாய் அசைப்பாக " சர்வேஷ்வரா ...!!" என்றவள்.. வாயில் இருந்து காற்று மட்டும் தான் வர.. வார்த்தை தடை பட்டது.அத்தனை அதிர்ச்சி.!!

"கூப்டியா? ப..வி.. " காதல் கசியும் அவன் குரல்.. அதே.. குரல்.!!மாறாமல் இன்றும் கூட !! எப்படி சாத்தியம் .. ?? வாய்ப்பேயில்லை. என் கற்பனையா? இல்லை இவன் கனவா..??
வியப்பில் ஆழ்ந்து கிடந்தாள் பவித்ரா.. !!

அவள் தோளை தட்டியவன்.. நான் நிழல் இல்லை.. நிஜம் என காதல் பார்வை தந்து குறிப்பால் உணர்த்தினான்.!! பவித்ரஷ்வரன்.!!


அவன் பார்க்கும் காதல் பார்வையில் சிலைக்கு கூட நாணம் வந்துவிடும்.. உயிர் உணர்வும் உள்ள பெண்ணுக்கு வராதா என்ன?? வெட்கச் சிவப்பில் மிளிர்ந்தது எழில் மிகு முகம் மருதாணியாக!! அந்த சிலிர்ப்பு ..சில நொடி தான்..!! மாமன் வந்தால் என்ன ஆகும் .? பதறியவள்.. சுற்றிலும் பார்வையால் வட்டமிட்டாள். இப்போது அவன் வெறிக்கு ஊறுகாய் போல இவன் சிக்கினால்..?? பிரதியின் மீது உள்ள கோபத்தையும்..சேர்த்து அப்பாவி இவன் மீதே இலவசமாய் இறக்கிடுவான்.. என பயந்து நிமிரும் முன்.. அவன் சட்டையை கொத்தாய் பற்றி பிடித்து இருந்தான் ப்ரீத்.!!

"என்ன.?? ரீ என்ட்ரியா?? அப்ப அடி வாங்கிட்டு போனது பத்தலையோ!! " கை முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்துவதற்காக ஓங்..க!! மாமன் கையை மறித்து. அழுத்தி பிடித்தாள். பவித்ரா. !!

இதுவரை திருப்பி ப்ரீத்தை.. அடிக்க கையை முறுக்கியவன்.. இதழ் புன்னகையில் விரிய.. மெல்ல உடலை தளர்தினான்.. பவித்ராவின்.. பின்னால் வந்து பயந்து போய் நிற்பதாக.. காட்டிக் கொண்டான். இந்த சர்வேஷ்வரன்.

மாமன் முன் தைரியமாக நிற்க.. பதற்றம் முகம் காட்டிடாது.. பயத்தையும் மறைக்க .. மனதோடு தோன்றும் நடுக்கத்தை முகம் பிரதியிட்டு காட்டாது போராடினால் பவி.
" நீ சர்வாவ அடிக்க கூடாது.மாமா " அழுத்தமான குரலில் சொன்னால்.

" ஏன் அடிக்க கூடாது ? " பதில் சொல்லுடி..என மிரட்டிது அவன் தீ பார்வை.!!

நடுங்கும் குரலில்." நானும் சர்வேஷ் அ லவ் பண்றேன்.."

அவள் விழியில் பொய் மிதக்க.!! " இவன காப்பாத்த என்கிட்ட பொய் சொல்ற??வீட்டுக்கு போய் உனக்கு இருக்குடி" என பொய் பேசாதே என எச்சரித்தான்.

மீண்டும் பொய்யுரைத்தால் " இல்ல மாமா காலேஜ்ல இருந்து இப்ப வர சர்வாவ தான்.." என மாமன் பார்வையை
சந்திக்காமல் கீழே‌‌..தலையை குனிந்தாள்..

பவித்ராவின் வார்த்தை.ப்ரீத்க்கு அதிர்ச்சி என்றால் சர்வேஷ்வரனுக்கு இன்ப அதிர்ச்சி.!!

" நீ சொல்றத நம்புற அளவுக்கு நான் முட்டாளா?? பவித்ரா.. இந்த திடீர் காதலன நல்லா பாத்துக்கோ.!! இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு பார்க்கவே முடியாது.. " ஆவேசமாக கோவிலில் அருவா காணிக்கை செலுத்தும் இடம் நோக்கி சென்றான். ப்ரீத்.

மாமன் எங்கு செல்கிறான் என்று அனுமானித்தவள்.. சர்வேஷ்வரன் கைத்தளம் பற்றி வெளியே இழுத்துச் சென்றால். வெளியே வந்ததும்..

" நீ.. போ... சர்வா.. இங்க நின்னா.. எதாவது உன்ன பண்ணிருவான்.. போ.." எச்சரிக்கை மிகுதியால் மாமனை சுற்றி
தேடியது விழிகள்.
"நீயும் வா.." அவள் கைகளைப் பிடித்து வேகமாக இழுத்துச் சென்றான். அவனது கார் நின்ற இடத்திற்கு.தயங்கி நின்றவளை உள்ளே தள்ளிவிட்டு.. தானும் எறிக்கொண்டான் காரில் .

ஆக்ஷன் படங்களில் மட்டும் தான்..கோவில் இருக்கும் பிராப்பர்ட்டிஸ் எடுப்பது சாத்தியம்..
நிஜத்தில் அப்படி முடியாது. அறநிலைத்துறை அதிரடியால் .. அருவாள் திருட்டை கண்காணிப்பு கேமராவில் பார்த்து வந்த கோவிலில் வேலை செய்யும் ஆட்கள். ஆக்ஷன் ஹீரோவை பிடித்து.. நல்ல வார்த்தையில் திட்டி தீர்த்தனர்.. அவனும் வாதாடி பார்த்தான் திருட எல்லாம் எடுக்கவில்லை..அப்புறம் ஏன் எடுத்தாய் என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை.காரணம் கொலை செய்ய என்று சொன்னால் உடனே அறநிலை துறை காவல் துறையின் உதவியை நாடிவிடும்.. வேறு வழி இல்லாமல் அருவாவை கொடுத்துவிட்டு மன்னிப்பு கூறி அவமானத்தோடு வெளியேறினான். பழி தீராத கோவக்காரன்.

ஏற்கனவே நடந்ததற்கும் இப்போது அசிங்கப்பட்டதற்கும் அந்த நாதாரி தான் காரணம் என்று கொலை வெறியோடு.. அவன் கண்கள் இருவரையும் சுற்றி தேடி அலசியது..

மாமன் தேடுவதை காருக்குள் அமர்ந்து கண்ணாடி வழியே பார்த்து நடுங்கினால்..பவி.

பக்கத்தில் அமர்ந்தவன் காதலியை களவாடுவது போல பார்வையால் திருடினான்.. ' காலேஜ் டைம் விட இப்ப இன்னும் கியூட் ஆ .. சூப்பரா இருக்கா. !!' இவ எனக்கு தான்..!! ' பட்டா போட்டுக் கொண்டான் மனதிலே.. !!

ப்ரீத் காருக்கு அருகிலே வர வர .. பயத்தில் விழி பிதுங்கியது ஒருத்திக்கு .. கீழே கிடந்த தடிமனான குச்சியை காலால் ஓங்கி எத்தி.. கையில் பிடித்து .. கோபமாக நடந்து வரும் தோனி.. மரண சாசனம் எழுத எமனாக மாறி நெருங்கி வருகிறான் மாமன் என நிகழ கூடிய ஆபத்தை உணர்த்த.!!

காப்பாற்ற வழி தெரியாமல் தவித்தாள்.. பவித்ரா. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஒரு அதிரடி செயலை செய்தாள்..

நொடிப்பொழுதில் அசுர வேகத்தில் சட்டென எதிரே இருப்பவனை
கட்டியணைத்தவள். நெற்றியோ.?? நெற்றியில் முட்ட..!! மூக்குகள் மோதி. வஞ்சகமாக இதழை மட்டும் நூல் அளவு பிரித்து வைக்க..!!
அவள் மூச்சை சுவாசித்தவனுக்கு
மோட்சம் கிடைத்த உணர்வு..

உடலெங்கும் மின்சாரம் பாய.. காதலும் காவிரியாய் பெருக்கெடுத்தது.. மூன்று வருட காதல் ஏக்கம்..!!கட்டுக்குள் அடங்குமா என்ன??

தொலைவில் இருந்து பார்க்க இருவரும் முத்தம் இடுவது போல தெரிய ..!!
ஆத்திரத்தில் உறைந்தது நின்றவன். மேலும் அந்த கன்றாவியை பார்த்துக் கொண்டு நிற்க முடியாது..கையில் இருந்த மரக்கட்டையை ஓங்கி விசிறி அடித்துவிட்டு.. பற்றி எரியும் பாவனையில் முகம் தகிக்க.. வெறியோடு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்..

ஆவேசமாக எழுந்த கோபத்தை சர்வா மீது காட்ட முடியாமல் .. தரையில் உதைத்து காண்பித்து விட்டு‌.
ப்ரீத்.. கோபமாக செல்வதை ஒர கண்ணால் பார்த்து .. நிம்மதி பெருமூச்சு.. வர..

அக்கினி வெயிலாய் அனல் அடித்தது ஒரு தலை ராகத்திற்கு.." தேன்.. குடிக்க.. ஆசை எழ. மென் அதரங்களை .. வன் அதரங்களால் அறுவடை செய்து தன் அகப்படுத்திட சொன்ன மனதை.. திட்டி தீர்த்தான்.. ' கெட்ட பய.. டா நீ.. கிஸ் எல்லாம்.. ம்கும்.. தப்புடா.. சர்வா..வேணாம்டா என எவ்வளவோ
மனம் கோடு போட்டு பார்த்தும்.. ம்ஹூம்... நோ... யூஸ்.. மனதின் குரலை மதிக்காமல்.. மயக்கும் அவள் இதழ் அழைப்பிதழ் தர.. அவள் இதழ் வரியில் இவன் முகவரியை எழுத.. ஆசை பிடித்தது.!!

அத்தனை நெருக்கத்தில் இதழ்கள் இருக்க..!! இரண்டு வருட பிரிவு.. காதல்.. ஏக்கம்.. எல்லாம் இமயம் போல வானளவு உயர.!! பருகினான் தாகம் கொண்டு இதழ்களை.. வறண்டு போன இதயத்திற்கு உயிர் நீராய் காதல் பாய்ந்திட.!! அவள் மீது உரிமையோடு.. ஆணவன் அணைப்பின் இறுக்கம் கூடி தன்னவளின் எழும்பையும் நொருக்கியது..!!

பவித்ரா.. இமைகளை மூடி. இதழுக்கு இசைவு தர !! காலங்களை கடந்து பழைய (ஒரு தலை) காதல் நினைவில் திளைத்தது அன்பாளன் மனம்..!!

ஒவ்வொரு நாளும் இவள் வரவுக்காக.. கல்லூரி வாசலில் காத்திருப்பது.. தான் மறைந்து ரசிப்பதை பார்த்தால்.?? கோபம் இல்லாமல் பொய்யாய் அவள் முறைப்பதும்!! பின்னால் அவள் சிரிப்பதும் ..!! யாருக்கும் தெரியாமல் அவளை தொடர்வது.. ஞாயிறு ஆனால் அவள் வீட்டை கோவிலாக பார்வையால் சுற்றி வருவது.. மறைந்து கொண்டு அவளை தேட வைக்க முயன்றது. அவள் கண்டு கொள்ளாமல் போன போது கலங்கியது. அவளை படிக்க மட்டும் .. நூலகம் சென்றது.. அவள் முன் தன் மெளனமான காதலை சொல்ல வார்த்தை இல்லாமல் .. கடிதம் எழுதி எடுத்து வந்தது.. பிடிபட்டு அடி வாங்கியது.. ரத்தம் வழிய அடிபட்ட என்னை காப்பாற்ற அவள் உயிர் துடித்தது.. தவித்தது.. மாமனை எதிர்த்து.. தடுத்தது.. பின் முடியாமல் கண்ணீரோடு காதலயையும் விழியில் தேக்கி ஒரு பார்வை பார்த்தது.. கடைசியாக மயங்கியது‌.என மொத்த கதையும். இருவரின் மூடிய விழிகளில் படமாய் ஓடியது.. மேலும் மேலும் முத்தத்தின் அழுத்தம் கூட!! மூர்ச்சையாகி சில நிமிடம் கழித்து.. சுய உணர்வு வந்து விலகினாள்.. பவித்ரா..

சில நிமிட சீரற்ற சுவாசம்..உயிர் போக்கிட.. சுவாசமற்றவள் மூச்சை வேகமாக உள்ளே வெளியே இழுக்க.. தொடர் மூச்சிகளோடு கார் சீட்டில் மயங்கி சாய்ந்தாள்.. முத்த அதிர்ச்சியில் வியர்வை.. ஆறாகி உடலில் பாய்ந்திட மொத்தமாய் உடல் நனைத்தது..!!

அதே பெர்ஃப்யூம் தான் இப்போ வரைக்கும் யூஸ் பண்ணுறியா?? நானும் அதே தான்..!! இழுத்து நெஞ்சோடு சாய்த்து கொண்டான் மயங்கி கிடந்தவளை.!! அவன் வேர்வையோடு கலந்து வீசும்..அவள் விரும்பும் பெர்ஃபியும் வாசம். உடலில் ஏதோ ஒரு குறுகுறுப்பை உண்டாக்க.. கண்களை மூடி சொக்கி கிடந்தாள்.‌ அவனின் பாதியாக!!

கோவில் எல்லைக்குள் நின்று கொண்டு .. இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து.. அம்பிகையே.‌ "டேய் நான் இங்க இருக்கேன் டா.." என்று நினைத்திருப்பார். !!

முன்னாடியே வந்திருக்கலாம் போலயே.? என் நெஞ்சிலே குடியிருக்காளே..!! இப்பவே கேட்டுருவோம்..
" பவித்ரா வில் யூ மேரி மீ. "
அந்த வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு நகர்ந்தால்.. தேள் கொட்டியது போல!! இதுவரை மஞ்சமென தலைவன் மார்பில் சாய்ந்து விழி மூடியவள். " ஏய்.. நீ என்ன நெனச்சிட்டு இருக்க?? எகிறியது கோபம் குரலில்.
"சும்மா இருந்தவள.. உன் நெஞ்சுல சாய்ச்சுட்டு.. கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்குற? யாருடா நீ.. நான் ஏன் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்.

"அப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்ட?? "வில்லத்தனமாக ஒரு ஸ்கேனர் பார்வை.. பார்த்து. கேலியாக இதழ் வளைத்தான்.. பின் அடுத்த ஐந்து நொடிக்குள்‌. கைகள் கட்டப்பட்டு.. அசைய முடியாத உயிர் பொம்மையாக காரில் பாவமாக அமர வைக்கப்பட்டால் பவித்ரா.!!


பவியின் புலம்பல்ஸ்" எங்கடா என்ன கூட்டிட்டு போற.. ? பொருக்கி .. திரும்பவும் நீ.. என்னால அடி வாங்க கூடாது னு.. பொய் சொன்னேன்ல எனக்கு வேணும்..!! என் மாமா வந்தான்.. கொன்னே போட்ருவான். ப்ளீஸ்.. என்ன போக விடு ஷர்வா.."கதவை..தட்டி..அழுவது போல் கெஞ்சினாள்..

" ஸ்..பேச கூடாது பேபி.உன் மாமாவை இந்த ஜென்மத்தில உன்னால் பார்க்கவே முடியாது. " வில்லனை போல சிரித்தான்.சர்வேஷ்வரன்.

" என்ன என்னடா பண்ண போற ??"

" பண்ணும் போது தெரியும்"

❤️‍🔥நன்றிகள்🙏 கோடி❤️‍🔥

உமா கார்த்திக்
 
Status
Not open for further replies.
Top