எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அவனோடு இனி நானா - 28

Lufa Novels

Moderator
அவனோடு இனி நானா!


அத்தியாயம் 28


விடியற்காலை விடிந்தும் விடியாமலும் விஹான் கவின் இல்லத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். வாயில் மணியை அடிக்க, கதவைத் திறந்ததோ கவின். காலையிலேயே விஹானை எதிர்பார்க்காத கவின் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டார். பின்னர் தான்,


“வாங்க மாப்பிள்ளை” என உள்ளே அழைத்தார். நேத்து இருந்த மனநிலையில் விஹான் வந்திருந்தால் இவ்விடத்தில் என்ன நேர்ந்திருக்குமோ ஆனால் இரவோடு இரவாக ஷிம்ரித் தன் மாமனிடம் அத்தனையையும் கூறிவிட்டான்.


இவ்விஷயம் கவின் மூலமாகக் கார்த்திகாவுக்குமே தெரிந்துவிட்டது. அதனால் கவினுக்கும், கார்த்திகாவுக்குமே விஹான் மேல் இருந்த கோபம் மாறி இப்போது மொத்த கோபமும் தன் இரண்டை மகவுகள் மேல் தான்.


தவறு செய்த பிரணவிகா மேலும் அதைத் தங்களிடம் தெரிவிக்காமல் இருந்த சாத்விகா மேலும் தான் இப்போது மொத்த கோபமும்.


கார்த்திகா “வாங்க மாப்பிள்ளை” என அழைத்து டீயும் பரிமாறினார்.


பரமேஸ்வரி பாட்டிக்கும் இன்னும் விஷயம் தெரியாது. அதனால் விஹானிடம் “ஏண்டா கிணத்து தண்ணிய வெள்ளமா கொண்டு போவப்போகுது? என்னத்துக்கு டா இப்படி தாலிய கட்டிட்டு வந்த?” எனக் கேட்க,


“அம்மாச்சி.. எல்லாம் உன் இரத்தத்தால தான். நீ பெத்த மக கல்யாணத்து சம்மதிக்கல.. உன் பேத்தி கல்யாணம் கட்டல என்னைக் கொன்னுடுவேன்னு மிரட்டுனா அதா தாலி கட்டிட்டேன்”


“ஆம்பிள நீ.. இரண்டு பொட்டச்சிய அடக்காம.. இப்படி பிரச்சனைய இழுத்து வச்சிருக்க”


“இப்போ என்ன பிரச்சனை வந்துச்சு அம்மாச்சி.. கல்யாணம் சிம்பிளா நடந்து போச்சி அவ்ளோ தான? பாரு ரிசப்ஷன பெருசா, கிராண்டா வச்சிடலாம்.. அவ்ளோ மேட்டர் சால்வ்ட்”


“என்னமோ போங்கடா.. என் பேரன் பேத்தி கல்யாணம் பூராமும் நாள், கிழமை பார்க்காம அந்த ரிசிஸ்டார் ஆபீஸ்லயே நடக்குது..” எனச் சலித்துக் கொண்டார். ஷிம்ரித் நிஹாரிகா கல்யாணமும் முதல்ல அங்க தானே நடந்தது.


கவின் “விடும்மா..” என அம்மாவை அமைதி படுத்தியவர், விஹானிடம் “என்ன மாப்பிள்ளை காலையிலேயே.. எதுவும் பிரச்சனையா?” எனத் தயங்கியபடி கேட்டார். சூர்யான்ஷ் எதுவும் பிரச்சனை பண்ணிவிட்டானோ என..


“இல்ல மாமா.. அதெல்லாம் ஒன்னுமில்ல பிரணியோட திங்க்ஸ் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”


“ஒஹ்ஹ்.. சாரி மாப்பிள்ளை.. பிரணி இப்படி பண்ணிருக்க கூடாது. நேத்து நைட் ஷிம்ரித் மாப்பிள்ளை எல்லாம் சொன்னார்”


“மாமா..” என அழைத்துக் கண்ணைக் காட்டினான்.. இதைப் பற்றிப் பேச வேண்டாமென. அவனுக்கு இந்த விஷயம் வெளியில் வருவதில் விருப்பமே இல்லை. அவரும் புரிந்து கொண்டு,


“சாத்வி..” என அழைக்க, மாடியிலிருந்து அரக்க, பறக்க ஓடி வந்தாள் சாத்விகா. கீழே அமர்ந்திருந்த விஹானைப் பார்க்கவும் எதுவும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என அவள் பயந்தபடி நிற்க,


கார்த்திகா “அவ டிரெஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு வா” எனக்கூற, கோபத்தில் கூறுகிறாறோ எனத் தயங்கி நிற்க,


விஹான் “அவ புக்ஸ், காலேஜ்க்கு தேவையான ஐட்டம்ஸ் எல்லாமே எடுத்துட்டு வா சாத்வி” எனக்கூற, அப்போதும் தயங்கினாள்.


கவின் “கோபத்துல சொல்லல.. அவளுக்கு அங்க யூஸ் பண்ண திங்க்ஸ் எல்லாம் வேணும்ல.. போ.. போய் எல்லாம் எடுத்துட்டு வா.. மாப்பிள்ளைக்கும் வேலை இருக்கும்ல.. அவரும் கிளம்பனும்ல”


எனக்கூறவும் தான் வேகமாக மாடியேறி, பிரணவிகாவுக்கு அவசரமாகத் தேவைப்படும் அத்தனையையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.


“இப்போ தேவைக்குக் கொண்டு வந்திருக்கேன் அத்தான். அப்புறமா மீதி எல்லாம் பேக் பண்ணி கொண்டு வரேன்”


கார்த்திகா “நீ பேக் பண்ணி மட்டும் வை.. மாப்பிள்ளயே வந்து வாங்கிட்டு போவார்.. நீ எங்கயும் போக வேண்டாம்” எனக்கூற, சாத்விகா முகமே விழுந்துவிட்டது. விஹானுக்குமே தங்களால் அவளும் கஷ்டப்படுகிறாளெனக் கலக்கம் உண்டானது.


“அப்போ சரி அத்தை.. நான் கிளம்புறேன். அப்புறமா பேசலாம்.. கொஞ்ச நாள் அப்படியே இருக்கட்டும் அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” எனக்கூறி, கிளம்பிவிட்டான்.


அவன் செல்லவும், அறைக்குச் சென்ற சாத்விகாவை உண்டு இல்லையென ஆக்கிவிட்டார் கார்த்திகா.


“அவளுக்குத் தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி? எங்க கிட்ட இப்படினு ஒரு வார்த்தை சொல்லிருந்தா அந்தக் கழுதையை கால உடச்சி உள்ள வச்சிருப்பேனே! நல்ல வேலை விஹான் மாப்பிள்ளை காப்பாத்தினார்.. இல்லனா..” எனத் தன் நிலைமை தன் மகளுக்கும் நேர்ந்திருந்தால் என்ற நினைப்பே அவருக்கு உயிர்வரை தாக்க, அழ ஆரம்பித்தார்.


“அம்மா! அழாதம்மா.. அதான் அவ சூர்யான்ஷ்ஷை பார்க்கப் போறது தெரிஞ்சதும் உடனே விஹான் அத்தான் கிட்ட சொன்னேன்”


“எங்க கிட்ட சொல்லிருக்கலாமே.. இப்போ பாரு அவளுக்கு நல்லது பண்றேனு அவர் செஞ்ச காரியமும் இப்போ உங்கப்பனோட பிறந்த கப்பலரசி முன்னாடி தலை குனிஞ்சு இருக்கும்படி ஆகிடுச்சே!


இந்த விஷயம் வெளிய தெரியாத வரை சரி.. அதே உன் அத்தைக்காரிக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் பிரணி வாழ்க்கை. சும்மாவே கொத்திக் குடிக்கும்.. பயந்து வருது எனக்கு”


“சாரிம்மா”


“நீயாவது எங்க பேச்சைக் கேட்பேனு சத்தியம் பண்ணு” எனக் கையை நீட்ட, வேறு வழியே இல்லாமல் மனதை கல்லாக மாற்றித் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்தாள்.


“நீ பெங்களூரு.. கிங்களூருனு எங்கயும் போக வேணாம்.. என் கண்ணு முன்னாடியே இரு..” எனக்கூற, அவளும் சம்மதித்து விட்டாள்.


முன்னால் விராஜ் மேல் இருந்த கோபத்தில் எடுத்த முடிவு தானே இது.. இப்போது அவளுக்கு விராஜ் மேல் அந்தக் கோபம் இல்லையே! அவனை அவனாகவே ஏற்றுக்கொள்ள அவள் மனதை அவளே தயார் செய்துவிட்டாளே!


ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய பிரச்சனையைத் தான் என்ன செய்வதெனத் தெரியாமல் முழிக்கிறாள். பெற்றோரைக் காயப்படுத்தாமல், அவர்களின் சம்மத்துடன் அவனோடு எவ்வாறு ஒன்று சேர்வது என்ற யோசனை தான் அவளுக்கு.


*******


இங்கு விஹான் அறையில் அம்மணிக்கு அப்படியொரு தூக்கம். அம்மணி கண் விழிக்கும் போதே மணி பத்து. இதுதான் பிரணி. அவளுக்குச் சூரியன் உச்சிக்கு வந்து சுள்ளெனச் சுட்டாலும் தானாக முழிப்பு வராது. தினமும் சாத்விகா தான் நேரத்து அவளை எழுப்பி விடுவாள் அல்லது கார்த்திகாவின் காலை வேளை பஜனையால் கண் திறப்பாள்.


இன்று அவளை எழுப்ப யாருமில்லை. விஹான் அதிகாலையிலே எழுந்து குளித்துக் கிளம்பி, கவின் வீட்டுக்கும் சென்று வந்தான். அம்மணி அப்பவும் எழும்பாமல் ஆறடி கட்டிலையும் நிரப்பி, பப்பரப்பானு என்னையும் பார், என் அழகையும் பாரெனத் தூக்கம்.


அவள் உறங்கும் நிலையைப் பார்த்தவனுக்கு சிரிப்பு ஒருபக்கம். தலையில் அடித்து விட்டு, அங்கிருந்த போர்வையை இழுத்து அவளுக்குப் போர்த்திவிட்டு அறையிலேயே அமர்ந்து அவனது வேலையை மடிக்கணினியில் பார்த்துக்கொண்டிருந்தான்.


மணி எட்டானது.. ஒன்பதானது.. அவள் எழுந்திருப்பதற்கான ஒரு முகாந்தரமும் இல்லை. ஒன்பது மணிக்கு நிஹாரிகா விஹான் அறைக்கே வந்துவிட்டாள். மெல்ல கதவைத் தட்ட, விஹான் தான் கதவைத் திறந்தான்.


“விஹான்.. பிரணி வெளியவே வரல.. நீங்களும் சாப்பிடல வரல.. அத்தை கூப்பிட சொன்னாங்க”


“நிஹா.. அது பிரணி இன்னும் எழும்பல.. அதான்.. நான் அவ கூடவே வந்து சாப்பிட்டுக்கிறேனே” எனக்கூறவும், முதலிரவு முடிந்த மறுநாள் மணப்பெண் எழுந்து வரத் தாமதமானல் எல்லாரின் கணிப்பும் என்னவாக இருக்கும்? நிஹாரிகாவுக்கு வெட்கம் கலந்த புன்னகை வர,


“ஹே.. ஹே அண்ணீ! ம்கூம் நீங்க நினைக்கிறது இல்ல.. அவ நைட் எல்லாம் ஒரே அழுகை. மாத்திரை வேற போட்டா அதான் அசந்து தூங்குறா.. எழும்பவும் வரோம்” எனக்கூறி அனுப்பிவிட்டான்.


மேலும் ஒருமணி நேரம் கழித்தே பத்து மணிக்கு அம்மணி தவம் கலைந்து எழுந்தாள்.


“நான் எங்க இருக்கேன்? என் ரூம் மாதிரியே இல்ல..” எனச் சத்தமாகப் பேசிக் கொண்டே எழுந்தவள் விஹானின் முகம் பார்த்ததும்..


“ஐயோ அம்மா சிடுமூஞ்சி..” என வாய்விட்டே கூற, அவளை முறைத்த பார்த்தான் விஹான். கண்ணைக் கசக்கி கசக்கி பார்த்தாள். அவன் நின்ற விதம் கிலியை மூட்ட, அதன் பிறகே நேற்று நடந்த யாவும் ஞாபகம் வந்தது.


“நேரம் போதுமா? காலேஜ் பாதி முடிஞ்சிருக்கும்” என்றான். வேகமாகத் திரும்பி மணியைப் பார்த்தாள். பத்து. பட்டென நெற்றியில் அறைந்து கொண்டாள்.


“குளிச்சிட்டு வா கீழ போகலாம்”


“டிரெஸ் இல்ல” என நெளிந்தாள். அவள் உடைப் பெட்டியைக் கண்களால் காட்டினான். வேகமாகத் திறக்க, திறந்த வேகத்தில் உடைகள் கொட்ட, துள்ளிக்கொண்டு முதலில் விழுந்தது அவளது உள்ளாடை.


அவன் பார்த்துவிடக்கூடாதெனப் பாடாரென அதைத் தன் காலுக்கடியில் ஒழித்து வைத்து, அவனைச் சங்கடமாகப் பார்க்க, அவனோ அவளையும், அவள் செய்கைகளையும் பார்க்காதவாறு காட்டிக்கொண்டான்.


ஒரு உடையை எடுத்துக் கொண்டு சென்றவள், அதிக நேரம் எடுக்காமல் வேகமாகவே கிளம்பி வந்தாள். அவளுடனே சாப்பிடும் அறைக்குச் சென்றான் விஹான்.


காலையில் விராஜ் தன் பெரியப்பாவுடன் பிரச்சாரத்துக்குச் சென்றுவிட்டான் ஏனெனில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைவதால் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்யும் கட்டாயம் அதனால் இருவரும் சென்றுவிட, நேற்று விடுமுறையில் வந்திருந்த ஷிம்ரித் நாளை அவன் வேலைபார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு முன் சூர்யான்ஷ் பிரச்சனையைத் தீர்க்கக் கிளம்பிவிட்டான்.


விமலேஷ் தங்களது கம்பெனிக்குச் சென்றுவிட, வீட்டில் பெண்களுடன் விஹான் மட்டுமே இருந்தான். இவர்கள் இருவரும் வர, கல்பனா தான் இருவரையும் சேர்த்து மீண்டும் சாமி கும்பிட வைத்து, ஒன்றாக அமர்த்திச் சாப்பிட வைத்தார்.


நிஹாரிகாவும் குழந்தையுடன் அவர்களுடனே தான் சாப்பிட்டாள். அவளுக்கு இன்னும் பத்து நாள் விடுமுறை இருக்கிறது முடியவும் மீண்டும் சென்னை நகர ஆட்சியாளர் பதவியேற்க வேண்டும்.


மூவரும் சாப்பிட கல்பனா பரிமாற, இந்தத் தருணத்திற்காகவே காத்திருந்திருந்து இவர்களின் நிம்மதியை கெடுக்க சரியாக சாப்பிட வந்தார் கவிதா. பிரணவிகாவை தன் மகனுடன் பார்க்கவும் பற்றிக்கொண்டு வந்தது அவருக்கு.


“வா கவிதா.. உட்கார் சாப்பாடு வைக்கிறேன்” எனப் பரிமாறப் போக,


“தேவையில்ல.. நானே எடுத்துப் போட்டு சாப்பிடுவேன். இல்லனா கலெக்டர் அம்மாவுக்கு கோபம் வந்திரும்” எனக் குத்தல் பேச்சை நிஹாரிகாவிடம் ஆரம்பிக்க,


“ம்ம்.. தன் கையே தனக்கு உதவி.. இது நல்ல பழக்கம் தான் அத்தை.. அவங்களே சாப்பிட்டுப்பாங்க..” எனக் கூறி, அவள் சாப்பாட்டில் கவனம் ஆகினாள். பிரணவிகாவுக்கு தான் வாய் சும்மா இருக்காதே!


“அத்தை உங்க கை பக்குவமே தனி.. சூப்பரா இருக்கு பொங்கல்” என மனதில் வைக்காமல் எப்பவும் போல கல்பனாவிடம் கூறிவிட்டாள்.


“இன்னும் கொஞ்சம் வைக்கவா டா” என கல்பனாவும் கேட்க,


“அதுக்கு தான இந்த புகழ்ச்சி.. நல்லா வடிச்சு கொட்டு.. ராகவேந்திரா சொத்தை தின்னு தீர்க்க தான வந்திருக்குதுங்க.. வக்கத்ததுங்க” என கவிதா வார்த்தையைவிட, பிரணி கண்களில் மடை திறந்த வெள்ளம்.


விஹானே ஒரு நிமிடம் வாயடைத்து நின்றுவிட்டான். கல்பனாவுக்கும் 'ச்சை இவ திருந்தவே மாட்டா போல இவ' எனக் கடுப்பில் தங்கையை முறைக்க,


“மைண்ட் யுவர் வோர்ட்ஸ் வக்கீலம்மா.. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!! எங்களுக்கு முந்தின தலைமுறை நீங்க எப்படியோ அப்படி தான் நாங்க.. அப்போ நீங்க தின்னே தீர்த்திருப்பீங்க போல?” எனக் காட்டமாக நிஹாரிகா கேட்க,


“இந்த வாய்க்கு மட்டும் உங்களுக்கு பஞ்சமே இருக்காது”


“வக்கீல் கிட்ட வாதாட வாய் வேணும்ல.. அதான் தனியா தீனி போட்டு வளர்க்குறோம்” என இவளும் நக்கலாகப் பேச,


“ஏம்மா! உங்களுக்கு ஏன் இந்த வேலை? எதுக்கு இப்போ பிரச்சனை பண்ணிட்டே இருக்கீங்க?” என விஹான் கோபமாகக் கேட்க,


“எல்லாம் உன்னால தான். நான் ஜட்ஜ் பொண்ணை பேசி வச்சிருந்தேன்.. இப்போ அவர்கிட்ட என்ன சொல்ல நான்”


“ம்ம் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லுங்க”


“இதெல்லாம் ஒரு கல்யாணமா? இந்த விஷயம் வெளியில யாருக்குமே தெரியாது.. அப்படியே மெயிண்டெயின் பண்ணி மியூச்சுவல் டிவொர்ஸ் எடுத்துட்டா அடுத்து உன் லைஃப் நல்லா இருக்கும்” எனக்கூறினார்.


“அம்மா!” என எழுந்தே நின்றுவிட்டான் விஹான். பிரணவிகாவும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். என்னதான் தனக்கு எதிர்பாராத திருமணமாக இருந்தாலும், தான் விரும்பியவனுடன், தனது முழு சம்மதத்தின் பேரில் நடந்த திருமணமல்லவா! அதை ஒரு பேச்சுக்காவெனினும் முடிவடைவதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளுக்கு.


“ஸ்டாப்பிட் மா.. இது என்னோட லைஃப்.. அத யாரு கூட வாழனும்னு எனக்கு தெரியும். என் விஷயத்துல தலையிடுறத இதோட விட்டுருங்க.. பிரணிய காயப்படுத்தனும்னு ரொம்ப கீழ்தரமா இறங்கி.. ச்ச அம்மாவா போய்டீங்க இல்லனா இங்க நடக்குற விஷயமே வேற..


நேத்தும் அப்படி பேசுனீங்க.. இன்னைக்கும்.. ரொம்ப பேசிட்டிங்க.. இனாஃப் மா. இட்ஸ் ஹர்ட்டிங்.. இவ தான் என் வாழ்க்கை.. இவ தான் உயிரு.. தட்ஸ் இட்” என்றவன் விருவிருவென வெளியேறிவிட்டான்.


நிஹாரிகா “ஒஹ்ஹோ.. கார்ப்பரேட் லாயர் எப்போதுலருந்து ஃபேமிலி லாயரானங்க? ச்சூ ச்சூ கேஸ் கிடைக்கலயா என்ன? ஏன் என் தங்கை கேஸ்ஸ வாலண்டரியா எடுக்கிறீங்க? கேஸ் கிடைக்கலனா கூச்சப்படாம என் கிட்ட கேட்டிருக்கலாமே! நான் கேஸ் பிடிச்சு கொடுத்திருப்பேன் டெய்லி எவ்ளோ பேர் பார்க்குறேன்..” என நக்கலாக இவளும் பேச,


“இதோ பாரு நான் உன்கிட்ட பேசல.. இந்த நக்கல், நையாண்டி எல்லாம் வேற எங்கயாவது போய் காட்டு.. என்கிட்ட வச்சிக்காத”


“அப்போ இந்த குத்திக்காட்டி, மட்டந்தட்டுற வேலையையும் நீங்க வேற எங்கயாவது போய் காட்டுங்க எங்க கிட்ட வேணாம். வா பிரணி..” எனக் கூறி, அமைதியாக அமர்ந்திருந்த பிரணவிகாவை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள் நிஹாரிகா..


கல்பனா “நம்ம அண்ணன் பிள்ளைங்க மேல உனக்கு ஏன் இத்தனை வன்மம்.. வர வர இப்படி கேவலமா போவனு நினைக்கவே இல்லை. எங்க கூட பிறந்தவ தானானு எனக்கே சந்தேகமா இருக்கு..” என வருத்ததுடன் கூறிவிட்டு சென்றார் கல்பனா.


எல்லாரிடம் அசிங்கப்பட்ட உணர்வு கவிதாவுக்கு. அவர் தொழில் செய்யும் இடத்தில் அவருக்கான மரியாதையே வேறு. ஆண்கள் முதற்கொண்டு அவரிடம் பேசப் பயப்படும் நிலை.. ஆனால் சொந்த வீட்டில், அவருக்கு மரியாதை இல்லை என்ற கோபத்தில் தட்டைத் தட்டிவிட்டு கோபத்தில் வெளியேறிவிட்டார்.


மரியாதை தாம் எவ்வாறு நடக்குறோமோ அவ்வாறு தான் நமக்குத் திரும்பக் கிடைக்குமென்று அந்த மெத்த படித்த வக்கீலுக்குத் தெரியவில்லை. வெளியில் மட்டும் ஒழுக்கமும், நெறிமுறையும் பார்த்தால் போதாது சுயவாழ்க்கையிலும் அது பார்க்க வேண்டும்.


*******


அறைக்குச் சென்றதும் “அக்கா! அத்தை எங்கள பிரிச்சிடுவாங்களா?” எனக் கலக்கத்துடன் கேட்க,


“அதெல்லாம் அவங்களால ஒரு டேஷ்ஷையும் புடுங்க முடியாது நீ சரியா இருந்தா..” எனவும் புரியாத பார்வை பார்த்தாள் மங்கை.


“ம்ம். கல்பனா அத்தைய பார்த்தல.. ஒரு வார்த்தை தங்கச்சிய எதிர்த்தே பேசுறது இல்ல.. குடும்பம் பிரியகூடாதுனு கொட்ட கொட்ட குனிஞ்சு போறாங்க..


நீயும் இப்படி பேசாம அழுதுட்டு, தலைகுனிஞ்சு நின்னேனு வை.. அவங்க நிலைமை தான் உனக்கும்.


எங்க பேசனுமோ அங்க பேசனும்.. அப்போ தான் நமக்கான மதிப்பு கிடைக்கும்.. பேசாம விட்டோம்னா அப்புறம் பேச சந்தர்ப்பம் அமையாது.


என்னையும் வந்ததும் இப்படித்தான் பேசினாங்க ஆனா திருப்பி குடுத்தேன் நான்.. அதனால தான் பல நேரம் என்னை கண்டா அவங்க ஒதுங்கி போவாங்க.


ஆனா உன்விஷயத்துல அப்படி இருக்க மாட்டாங்க.. ஏன்னா அவங்க உனக்கு மாமியார்.. ஒதுங்கி எல்லாம் போக வாய்ப்பே இல்ல. அவங்க மாமியார் பவர தான் காட்ட நினைப்பாங்க.. இப்போவே நிமிர்ந்துரு இல்ல வாழ்க்கை முழுக்க குனிய வேண்டி வரும்.


எதுக்காவும் உன்னோட சுயமதியாதை, படிப்பு, வேலை, ஃபினாஸ்ஸியல் இண்டிபெண்டெண்ட்ல காம்ப்பரமைஸ் பண்ணாத. நீ விஹானோட வைஃப் அந்த இடத்தையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத.


உங்களுக்குள்ள எந்த பிரச்சனை வந்தாலும் அத யார் முன்னாலயும் காட்டாத.. அட்வைஸ் பண்றேன்னு மத்தவங்க உங்களுக்கு நடுவுல வந்து நாட்டாமை பண்ணுவாங்க.. அதுக்கு நீ இடம் கொடுக்கக் கூடாது.


இன்னைக்கு அவங்க உன்னைப் பேசுனதுக்கு நீ தான் பதிலுக்குப் பேசிருக்கனும்.. உனக்காக நானும், விஹானும் பேச வேண்டி இருந்தது. ஒவ்வொரு தடவையும் உனக்கான மவுத்தா நாங்க உன்கூடவே இருக்க முடியாது. அதனால உன் மாமியாரை ஹேண்டில் பண்ண பழகிக்கோ.


சும்மா உட்கார்ந்து பிரிச்சிடுவாங்கனு அழுதினா பிரிக்கத் தான் செய்வாங்க.. அவங்க முன்னாடி சந்தோஷமா வாழ்ந்துகாட்டு” எனக்கூறவும், புரிந்ததோ புரியலயோ மண்டைய ஆட்டினாள் பிரணவிகா. மனதிலோ வாழ்ந்தால் தான் என்ன? என்ற கேள்வியும் முளைத்தது.


******


நட்சத்திர மதுபானக்கடையில் காலையிலே அமர்ந்திருந்தான் சூர்யான்ஷ். நேற்று நடந்த நிகழ்விலிருந்து இன்னனும் அவனால் வெளிவர முடியவில்லை.


பெண்களின் தொடர் துரோகங்களைச் சந்தித்தவனுக்கு சும்மாவே வெறி.. அதிலும் நேற்றே பிரணவிகாவுக்கும், விஹானுக்கும் திருமணம் முடிந்தது என்றே கேட்டபிறகு வெறி இன்னும் கொழுந்து விட்டு எறிந்தது.


நேற்று இரவே பிரணவிகாவும், அவனும் இருக்கும் காணொலியை வலைதளத்தில் பதிவேற்ற கட்டளை இட்டான். பதிவேற்றமும் நடந்தது. ஆனால் விஹானால் அமைக்கபட்ட குழு விழிப்புணர்வுடன் இருந்ததால் பதிவேற்றிய சில நிமிடத்தில் அதைக் கண்டு அதை நீக்கம் செய்துவிட்டனர். இரவே விஷயம் அறிந்த விஹானுக்கு அவ்வளவு ஆத்திரம். ஷிம்ரித்திடம் தெரிவிக்க இதைத் தான் பார்ப்பதாகக் கூறி அமைதி படுத்தினான்.


காலையில் முதல் வேலையாக ஷிம்ரித் தேடி வந்தது மும்பையில் உள்ள சூர்யான்ஷ்ஷின் தந்தையிடம். அவரிடம் முழுவிவரத்தையும் கூறியவன்,


“இதுக்கு மேல எங்க வீட்டு பெண்ணை அசிங்க படுத்துற மாதிரி நடந்தா.. நாங்க அத லீகலா கொண்டு போக நினைக்கிறோம். அப்புறம் உங்க புள்ள ஜெயில்ல தான் களி திங்கனும்”


“நோ.. நோ மிஸ்டர் ஷிம்ரித். அவன் என்னவோ தொழில் பிரச்சனையைத் தப்பான வழியில ஹேண்டில் பண்ணிட்டான். இனி இப்படி நடக்காத மாதிரி நாங்க பார்த்துக்கிறோம். நீங்க எதுவும் பண்ணிடாதீங்க”


“உங்க பையன முடிக்கனும்னு நினைச்சா எங்களால முடியாததா? நானோ, என் மனைவியோ நினைச்சா உங்க பையன் காலத்துக்கும் வெளிய வரவே முடியாது. எங்க பெரியப்பா கண் அசைச்சா போதும் உங்க மகன் உயிரோடயே இருக்க முடியாது.


என் தம்பிங்க இரண்டு பேரும் வெறியில இருக்கானுங்க.. அவங்க கையில உங்க மகன் சிக்கினா என்ன ஆவான்னே தெரியாது. இரண்டு பேர் கிட்டயும் லாஸ்ட்டா சொல்லிட்டு வந்திருக்கேன் உங்கள பார்க்க.. இனி அடுத்து ஒரு பிரச்சனை வந்தா என்னால ஒன்னும் பண்ண முடியாது”


“இல்ல இல்ல இப்போவே அவன மும்பைக்கு அழைக்குறேன்.. இனி அவன தமிழ்நாடு பக்கமே அனுப்ப மாட்டேன். ஐ சுவேர்” எனக்கூற,


“ஓ.கே பார்த்துக்கோங்க.. தொழிலைத் தொழிலா பாருங்க.. இப்படி கீழ்தரமா இறங்கினா நல்லா இல்ல.. இத்தனை வருஷம் தொழில்ல இருக்கோம்.. உங்க மேல நிறைய நல்ல எண்ணம், மதிப்பு இருந்தது. இப்போ ஒன்னுமே இல்லாத மாதிரி ஆக்கிட்டார் உங்க மகன்”


“நான் பார்த்துக்கிறேன் மிஸ்டர் ஷிம்ரித். இனி இப்படி நடக்காது. அவன இப்போவே நான் மும்பைக்கு கூப்பிடுறேன்” என சூர்யான்ஷ்ஷை அழைத்தவர் ஹிந்தியில் வண்ண வண்ணமாகப் பல வசவுகளை பாடி உடனே மும்பைக்கு அழைக்க, அந்தக் கோபத்தில் தான் காலையிலேயே மதுபானத்துடன் அமர்ந்து இருக்கிறான்.
 
Top