Sowndharyacheliyan
Writer
வான்மழை 15
சில்லென்று குளிர்காற்று உடலை சிலிர்த்தெழ செய்ய, அனிச்சை செயலாக உடலை குறுக்கியவளின் கால் பாதல் வலி எடுத்ததில்,
“ம்மா!” என சிணுங்கியவாறே திரும்பி படுத்தாள் வருணாக்ஷி.
இவளது சிணுங்கலின் சத்தம், அறையின் ஓரம் அமர்ந்து, கல்லூரி தொடர்பான வேலையை செய்துக் கொண்டிருந்த கார்முகிலனின் கவனத்தை சிதறடித்தது.
தேர்வு நாள் நெருங்கிய நிலையில், இவன் விடுப்பு எடுத்திருக்க, முடிந்தளவு விடுமுறை தினத்திலயே தேர்வுக்குண்டான வேலையை செய்து முடிக்க திட்டிமிட்டிருந்தவன். சிறுக சிறுக நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்ய ஆரம்பித்திருந்தான்.
வேலையில் ஒரு கண்ணும், தூங்கும் அவன் மனையாளின் மீது மறுக்கண்ணும் வைத்திருந்தவனிற்கு அவளது சிணுங்கலும், வலியில் புரண்டு புரண்டு படுப்பவளின் செயலும் நன்கு கவனத்தில் பதிந்தது.
“ஆயில்மென்ட் போட்டும் சரியாகலைப் போலயே!” என முணுமுணுத்தவன் சிதறிய கவனத்தை இழுத்துப் பிடித்து வேலையில் செலுத்தினான்.
சில பல மணிகள் நீடித்த நிலையில் அவனது லேப்டாப்பை மூடிவைத்து விட்டு எழுந்தவனுக்கு, சிறிது காற்றாட நடந்துவிட்டு வந்தால் தேவலாம் என தோன்றிய நொடி, இன்றைய நாளின் முக்கியத்துவத்தை அலங்கரிப்பட்ட கட்டிலும், அதில் பதுமையென உறங்கி கொண்டிருந்த மனையாளும் உணர்த்தியதில்,
வெட்கச்சிரிப்பில் மலர துடித்த அவனது உதடுகளை உள்ளிழுத்து, வெட்கச் சிரிப்பை தடுத்தவன், அறையில் இருந்த அந்த பெரிய ஜன்னலை திறந்துவிட்டு அதனருகே நின்றான்.
ஜன்னல் வழி வந்து குளிர்காற்று, அவன் மேனியை தாராளமாய் தழுவிட, மெல்ல அவன் பார்வை அவன் மனையாளை மொய்த்தது!
சற்று முன் அறைக்குள் பயமும், பதட்டம் அதனுடன் சேர்ந்து, வலியில் சோர்ந்த போன முகத்துடனும் வந்தவளைக் கண்டவனிற்கு, அவளைக் கண்டு பாவமாய் போய்விட,
படபடப்புடன் வலியை மறைத்தப்படி இருந்தவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி தன்னிடம் இருந்த மருந்தினை அவள் பாதத்திற்கு பூசியவன், அவளை சற்றே நிதானமாக்கும் பொருட்டு,
“கொஞ்ச நேரம் படுத்திரு வருணாக்ஷி. கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்.” என்றவன் தனது வேலையை தொடர்ந்திட, வலித்த பாதத்திற்கு அவன் இட்ட மருந்து இதமாய் இருக்க, மெல்ல கட்டிலில் சாய்ந்தவள், அவளையும் மீறி கண்ணயர ஆரம்பித்திருந்தாள்.
உடலை தழுவிய குளிர்க் காற்றின் மனையாளின் ஞாபகத்தில் இருந்து வெளியே வந்தவன், ஜன்னலின் வெளிப்புறம் பார்வையை திருப்ப!
முழு நிசப்தம்!!!!
அந்த இருள் நிசப்தத்தில் வண்ண விளக்குகளால் பழனி மலை ஜொலித்துக் கொண்டிருந்தக் காட்சி கண்களை பறித்தது.
மலையடிவார ஊர் இவர்களது என்பதால், பழனி மலை நன்கு தெரியும் அவ்வூரில் வசிப்பவர்களுக்கு.கூடுதல் சிறப்பு, கார்முகிலனின் அறையில் இருந்து இன்னும் விசாலமாக மலையினை காணலாம்.
முருகப்பெருமானையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, திடீரென வருணாக்ஷியின் முருகப் பக்தி நினைவில் எழ, அவளிற்கு விளக்குகளால் ஜொலிக்கும் மலையினை காட்டிட ஆர்வம் எழுந்திட,
வேகமாக அவளருகே சென்றவன்,
“வருணாக்ஷி! வருணாக்ஷி!” என எழுப்பிட,
“ம்ம்ம்!” கொட்டியவள் இன்னும் சொகுசாக புரண்டு படுத்திட,
“வரும்மா! எழுந்துக்கோ! உன் முருகரை பாக்கலாம் வா.” என அவன் பேசிய வார்த்தைகள்யாவும் அவளிற்கு கனவுலகில் ஒலித்ததில், இளநகையுடன் “ம்ம்ம்” என்றவாறு இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல,
“ம்ஹீம்! இப்போதைக்கு எழுந்துக்க மாட்டா” என்றபடி தம்கட்டி குண்டு கட்டாக அவளை தூக்கியிருந்தான்.
அது இன்னமும் அவளிற்கு வசதியாய் போய்விட, “ம்ஹீம்!” என சிணுங்கல் ஒலி எழுப்பியபடி, முகிலனின் கழுத்து வளைவில் முகம் புதைத்து உறக்கத்தை தொடர, இவனிற்கு அவஸ்தையாகிப் போனது.
அவளின் சூடான மூச்சுக்காற்று அவன் உடல் எங்கும் பரவியதில், நொடியில் அவனது உள்ளங்கை வேர்த்து, அவளை தாங்கியிருந்த அவனது கைகள் நழுவியதில், சுதாரித்தவன் அவளை இறுக்கமாய் பற்றிக் கொண்டு ஜன்னலருகே வந்தவன்,
அவளை கீழிறக்கி பழனிமலை நன்கு தெரியும்படி நிற்க வைத்து, அவள் பின்புறம் அவளை அணைத்துப் பிடித்தார் போல் நின்றான்.
அவன் தூக்கியதிலே சிறிதாய் உறக்கம் கலைந்தவளுக்கு, அவன் நிற்க வைத்ததும் பாதத்தில் மீண்டும் வலி எடுக்க,
“ஷ்ஷ்ஷ்!” என சத்தமிட்டிருந்தாள்.
“என்னாச்சு?” அவள் முகத்தை தன்புறம் திருப்பி, மூடிய அவள் விழிகளில் அழுந்த முத்தமிட்டு அவன் வினவ,
உறக்கம் மொத்தமும் கலைந்திட, பட்டென விழிகளை மலர்த்தினாள் அவள்.
“என்னாச்சுன்னு கேட்டேன்!” என்றபடி மீண்டும் அவன் முத்த,
அவனது முத்தத்தின் ஈரம் சிலிர்க்க வைக்க, அவன் கைகளுக்குள் நின்றபடியே, அவனிற்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டவள்,
“பாதம் வலிக்குது, ரிசப்சன்ல நின்னதுல!”
“ஓ மருந்து போட்டுமா வலிக்குது?”
“ம்ம் நிலத்துல கொஞ்சம் அழுத்தமா பாதம் பட்டா வலிக்குது.” அவன் கைகளுக்குள் நின்றிருந்தவளுக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
“ம்ம்ம்! சரியாகிடும்.” அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்துக் தன்னுடன் நெருக்கிக் கொண்டு அவன் கூறியதில், உடல் கூசி சிலிர்க்க, வலித்த பாதத்தினை இன்னும் அழுத்தமாக தரையில் பதித்து சிலிர்ப்பை அடக்கினாள்.
அவள் தன்னிலையில் இல்லாததை உணர்ந்தவன், அவளின் புறம் குனிய,
விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.
“உஃப்” சூடான மூச்சுக்காற்றை அவள் முகத்தின் மீது ஊதியவன்,
“கண்ணை திறந்து எதிர்ல பாரு வரு!” கிசுகிசுப்பாய் அவளது காதில் முத்தியவாறே அவன் கூற,
கூசிய காதை அழுந்த தேய்த்து விட்டவள்,
“ம்ம்ம்” என்றபடி கண்களை திறந்தவளிற்கு காட்சியளித்தது மலை மீது வண்ண விளக்குகளால் ஒளிர்ந்துக் கொண்டிருந்த “ஓம்” எனும் பிரணவ மந்திரம்.
சட்டென்று, அது என்னவென்று பிடிபடாமல் இருந்தவளுக்கு சிறிது நேரம் பிடித்தது மலைமீதிருக்கும் முருகனை உணர்வதற்கு.
உணர்ந்த நொடி அவள் கண்கள் பிராகசமடைய, கார்முகிலனின் பக்கம் திரும்பியவள்,
“உங்க வீட்டுல இருந்து பார்த்தா முருகன் மலை தெரியும்னு சொன்னாங்க, ஆனா இவ்வளவு பக்கமா எதிர்பாக்கலைங்க!” என,
“வீட்டுக்கு வெளிய நின்னுப் பார்த்தா இவ்வளவு பக்கம் தெரியாது. ஆனா இந்த ரூமோட அமைப்பு அப்படி நல்லாத் தெரிவாரு உன் முருகரு.”
“நம்ம போவோமா அங்க!” என மலையை கைக்காட்டி அவள் கேட்டிட,
“இப்பவேவா!” இதழ் மடக்கி அவன் கேட்க,
“ம்ம்ம் ஆமா ஏன் இப்போ..! என கேட்டுக் கொண்டே வந்தவளுக்கு இன்றைய நாள் நினைவில் வந்து, வாக்கியத்தை முடிக்காமல் விட,
“இப்போ போக முடியாது! ஒரு ரெண்டு நாள் ஆகட்டும் போகலாம்.” அவன் கூறிட,
“எனக்கு நைட் டைம் மலை ஏறனும்!”
“நைட்டா? அது முடியாதே! கஷ்டமாச்சே!” என அவன் அவள் காதினில் பேசியவாறே முத்த,
அவனின் வார்த்தை ஜாலத்தில் முகம் தன்னால் சிவக்க ஆரம்பிக்க,
“ப்ளீஸ்!” என்க,
சிவந்த அவள் முகத்தை வருடியவன்,
“ம்ம்ம் போகலாம்?” என்றவன், அடுத்து எதுவும் பேசாது அவளை இறுக்கி அணைத்தவாறு மலையையே பார்த்திருக்க, அவளும் அடங்கி நின்றாள் அவனுள்.
எத்தனை மணி நேரங்கள் அவர்களது மோனநிலை நீடித்ததோ!! சாரல் மழை அவர்களை நனைத்து இயல்பு நிலைக்கு திருப்பியது.
“சாரல் அடிக்குது, ஜன்னலை மூடிடலாம். இல்லைன்னா குளிர்காத்து பயங்கரமா வரும் இங்கே.” என்றபடி அவளை சிறிது நகர்த்தி விட்டு அந்த பெரிய ஜன்னலை அவன் இழுத்து மூடினான்.
அவள் சென்று கட்டிலில் அமர, மீண்டும் லேப்டாப் முன் அமர்ந்தவனை அவள் கேள்வியாய் நோக்க!
“கொஞ்சம் வேலை இருக்கு பத்து நிமிசம் ஆகும்.நீ தூங்கு.” என்றவன் பாதியில் அவன் விட்ட வேலையை தொடர,
பத்து நிமிடம் அரைமணி நேரமாகியும் அவன் வராதுப் போக, மெல்ல அவள் கண்கள் சொருகி ஆழ்ந்த நித்திரைக்கு செல்லும் போது, அவன் வந்து உறங்க,
மெத்தையின் அழுத்தத்தில் நித்திரை கலைக்கப்பட்டு விட, பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவள்,
“வேலையை முடிச்சுட்டீங்களா!”
“ம்ம் முடிஞ்சது, உனக்கும் தூக்கம் வரலையா?”
“தூக்கம் வந்துச்சு, ஆனா நீங்க வந்து படுத்த சத்தத்துல தூக்கம் கலைச்சுப் போய்டுச்சு.” என,
அவள் புறம் முழுதாக திரும்பியவன்,
“ஓஹ் அப்போ நான்தான் தூக்கத்தை கலைச்சுட்டேனா.” சிறுநகையுடன் அவன் கேட்க,
“ம்ம்ம்” என மெல்லிய சிரிப்பில் அவள் பதிலுரைக்க, அவள் சிரிக்கும் இதழை சில விநாடிகள் பார்த்தவன்,
“இனி தூக்கம் வருமா!” மெல்ல அவள் கன்னங்களை வருடியவாறு கரகரத்த குரலில் அவன் கேட்டிட,
அவன் குரல் மாற்றமும், பார்வை மாற்றமும் பெண்ணவளிற்கு அவன் நிலையை உணர்த்திட,
“அதெல்லாம் வரும் வரும்” என வேகமாய் கூறியவள் அதையும் விட வேகமாய் மறுபுறம் திரும்ப செல்ல,
அவளது அவசரத்தனத்தில் பெரிதாய் வாய்விட்டு நகைத்தவன்,
“அதெல்லாம் வராது, வராது!” என்றபடி ஒரே சுழற்றலில் அவளை தன்புறம் திருப்பியவன்,
“வரவும் நான் விட மாட்டேன்!” என அவள் கண்களை நோக்கி குறும்பாய் உரைத்தவன், அடுத்த நொடி அவளை தனக்கு கீழே கொண்டு வந்திருக்க,
“அச்சோ! பாதம், பாதம் வலிக்க போகுது.” என அவள் வலி எடுத்திடுமோ என பயப்பட,
“நான் பாத்துக்கிறேன் வரு!” என்றவன் அதிரடியாய் அவள் இதழை நிறைத்திட,
பதறி, துடித்து பின் அவனுக்கு ஒத்துழைத்தவளுக்கு மூச்செடுக்க முடியாமல் போக, அவன் பின்னந்தலை முடியை இறுகப் பற்றி தன்னில் இருந்து விலக்கியவள்,
“மூச்..மூச்செடுக்க… முடியலைங்க!” என அவள் திணற,
“நான் பாத்துக்கிறேன் வரும்மா!” என மெல்லிய சிரிப்புடன் உரைத்தவன், மீண்டும் அவள் இதழ் நிறைத்து, இம்முறை தன் மூச்சுக்காற்றை அவளுக்கு கொடுத்து அவள் சுவாசிக்க வழி செய்தவன், அடுத்தடுத்து அவளுள் சத்தமில்லாமல் நுழைய ஆரம்பித்தான்.
கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவனின் ஈரம் அவளை சிலிர்க்க வைக்க,
“கூசுதுங்க!” என சிணுங்கியவளை,
“நான் பாத்துக்கிறேன்டாம்மா!” என சொல்லி அவளை வாயடைக்க செய்தவன், அடுத்தடுத்து அவன் சொன்னதுப் போலவே அவளை பார்த்து பார்த்தே, அவளையும் பார்க்க வைத்தான்.
மெல்லிய சாரல் மழை நிலத்தை நிறைக்க ஆரம்பிக்க, கார்முகிலாய் வருணாக்ஷியை நிறைக்க ஆரம்பித்தான் அவன். அவளின் சிறு சிணுங்கல் ஒலிகளுக்கு எல்லாம் அவன் மறுமொழியாய் மாறா ஆரம்பித்திருந்தான்.
ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாய், நிறைவாய், நிதானமாய் அவளுள் அவன் ஊடுருவினான். அவள் மேல் அழுந்த பதிய ஆரம்பித்தவனின் அழுத்தம் கூட அவள் பாதவலிக்கு இதமாய் இறங்கிட, மெல்லிய புருவச் சுழிப்புடனும், இதழ் நிறைத்த வெட்கப்புன்னகையுடனும், அவனை தனக்குள் வாங்கி கொள்ள ஆரம்பித்தவளை ஆதுரமாய் தழுவிக் கொண்டான் அவன்.
அவ் நீண்ட இரவு, வருவின் சிணுங்கலிலும், அவனின் “நான் பாத்துக்கிறேன் வரு!” என்ற பேச்சிலும் மேலும் நீடித்தது.