Sowndharyacheliyan
Writer
வான்மழை 16
“ஹப்பா, எவ்வளவு வேலை! கல்யாணம் பண்ணுறது ஊர் கூடி தேர் இழுக்கிறது போல ஆகிடுச்சு. ஒருத்தி வடக்குன்னா, அடுத்தவ தெக்குன்னு நிக்கிறா, இவளுகளை எல்லாம் சமாளிச்சு என் பிள்ளை கல்யாணத்தை முடிக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சுப் போ!” என புலம்பியவாறே திருமண பலகாரங்களை தனித்தனி வாளியில் அடுக்கி கொண்டிருந்தார் முத்துப் பேச்சி.
அவரின் புலம்பலில் சிரித்த மேகலா,
“ஏன் ம்மா வந்த சொந்தமெல்லாம் இரண்டு மூணு நாளுல கிளம்பிட்டாங்க. அதுக்கே நீ இப்புடி சலிச்சிக்கிறியே!” என அவள் வம்பிழுக்க,
“ஏதே! இந்தாருடி என் வாயை கிளறாத சொல்லிப்புட்டேன். வெளியூர் சொந்தம் அம்புட்டும் ஒருவாரத்துக்கு முன்னே வந்தாச்சு, சரி அவளுக தான் அப்புடின்னு பாத்தா, உள்ளூர்க்காரிகளுக்கு எல்லாம் ஒருவாரமும் இங்கதான் அடுப்பு எரிஞ்சது.
ஒருத்தியும் நகர மாட்டேனுட்டாளுக, ஓறங்கி எந்திரிக்க மட்டும் தான் அவளுக வீட்டுக்கு போனாளுக, மத்தப்படி எல்லாம் இங்கத்தான். சரி நம்ம உறொம்பொறை தானேன்னு விட்டா, ஒருத்தியும் வேலைக்கு ஒத்தாசைக்கு வரலை, இதை உங்க அப்பாக்கிட்ட சொன்னதுக்கு, சமையல் ஆளைப் போட்டது தான் மிச்சம்.
சரி கல்யாணம் தான் முடிஞ்சது, கறி விருந்தும் போட்டாச்சே கிளம்புவாளுகளுன்னு பார்த்தா, யாத்தே! இப்போ தான் பழனிக்கு போகணும், கொடைக்கானலுக்கு போகணும்னு செலவு இழுத்துவிட்டாச்சு,
சரி போகட்டும்னு விட்டா, தாலி பிரிச்சு கோர்க்கிற வரை இருக்குற நெனைப்புல இருந்துருக்காளுக போல,
அவ அவ புருசன்காரன் போனைப் போட்டு வள்ளு வள்ளுன்னு விழுகவும், மூட்டை முடிச்சை கட்டியாச்சு, அப்பவும் சும்மா இல்லை கல்யாணப் பலகாரத்தை கையோட வாங்கிட்டு தான் போய்ருக்காங்க. அதுல இன்னும் சில பெருசுக கிளம்பாம உட்காந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்குதுங்க.” என இருந்த கடுப்பில் அவர் அனைத்தையும் கொட்டியிருந்தார்.
“அப்புடி கிளம்பாம இருக்குற கோஷ்டியில, உன் மூத்த சம்பந்தியும்ல இருக்காங்க.” என்றவள் மெல்ல பேச,
“அதான் மேகலா எனக்கும் சந்தேகமா இருக்கு. ஒரு நாள் கூட ராத்திரி தங்காத மனுசி, இப்ப இவ்வளவு நாளா இருக்கிறது ஆச்சர்யம் தான்.”
“எதுக்குன்னு தான் பிடிபட மாட்டிங்கிதும்மா!”
“எந்த ஏழரையையும் இந்தம்மா கூட்டாமா இருந்தா சரி தான்.” என்றபடி பலகாரங்களை அடுக்கி முடித்தவர்,
“இதைப் போயி உன் சித்திக்காரிக்கு கொடுத்துட்டு வந்திடு மேகலா.” என்றபடி அவளை அனுப்பி விட்டு சற்றே காற்றாடா வெளியே அவர் வெளியே வந்த சமயம்,
“பேச்சியக்கா” என்றபடி வந்தார் பின்வீட்டு பங்கஜம்.
அவரின் வரவை கண்ட பேச்சி,
“இவ என்னத்துக்கு இந்நேரம் வர்றா? நேத்தே பலகாரம் எல்லாம் கொடுத்து விட்டாச்சே!” என முணுமுணுத்தவர்,
“வா பங்கஜம், உட்காரு. என்ன இந்த நேரத்துல?”
“சும்மதான்க்கா வந்தேன்.உறவுமொறை எல்லாம் கிளம்பியாச்சா?”
“ம்ம்ம் கிளம்பிட்டாங்க, ரெண்டு மூணு பேரு மட்டும் இருக்காங்க.”
“எம்புட்டு வேலைக்கா உங்களுக்கு! செத்த நேரம் குறுக்க சாச்சிங்களா இல்லையா”
“பின்ன கல்யாணம்னா சும்மாவா பங்கஜம்.”
“அதுவும் சரிதான், எங்க பொண்ணு மாப்பிள்ளையைக் காணோம்?”
“முகி எங்கயே மருமவள கூட்டிட்டு வெளியப் போய்ருக்கான்.” என அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, சுபத்ராவின் தாய் வள்ளியம்மையும் சுபாவமும் அங்கே வர,
“வாங்க சம்பந்தி, நல்ல உறக்கமா?” என பேச்சி அவரை வரவேற்க,
“செத்த லேசா கண்ணசத்துட்டேன் சம்பந்தி அவ்வளவு தான்.” என்றவர்,
சுபாவிடம், “பாத்தியா உன் மாமியா என்னைக் குத்திக் காட்டுறத.”
“ப்ச் இதுல என்ன இருக்கும்மா, அவுங்க சாதாரணமாகத்தான கேட்டாங்க.”
“போடி இவளே, உனக்கெல்லாம் புத்திங்கிறது இருக்கா இல்லையா? அந்தம்மா நாசுக்கா உள்குத்து வச்சு பேசுது. நீ இப்புடியே நம்பிட்டிரு, இப்ப வந்தவளும் நல்லா மொளகாயை அரைப்பா உன் தலையில.” என வள்ளியம்மை அவளை மூளைச்சலவை செய்திட, எரிச்சலாகிப் போனாள் சுபா.
“சுபா, பால் இருக்கு டீ போட்டுக் கொடு அம்மாவுக்கு.” பேச்சி கூற,
“ஏன்? இந்தம்மா போட்டுத் தராதாமா? இதுவே சின்ன மருமகளோட அம்மான்னு இப்புடி சொல்லிருக்கும்மா?” என அவர் முணங்க,
“நீ எத்தனை நாளு, அவுங்களை உன் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வச்சம்மா?” என அவள் கேட்க,
அவளை முறைத்துப் பார்த்தவருக்கு பதிலில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே பதில் சொல்வதற்கு.
தாயை வாயடைக்க செய்து விட்டு கிச்சனுள் சென்று விட்டாள் சுபா.
“உட்காருங்க சம்பந்தி, ஏன் நின்னுட்டே இருக்கீங்க?” என பேச்சி கூறிய பின் தான், தான் நிற்பதை உணர்ந்த வள்ளியம்மை, அவர்களுக்கு சற்றே தள்ளி அருகில் அமர்ந்துக் கொண்டார்.
“அப்பறம் பேச்சியக்கா, சின்ன மருமவளுக்கு பவுனு எம்புட்டு போட்டாங்க.” பங்கஜம் கேட்டிட,
‘அதானே வாயை கிளறி விசயத்தை வாங்க வந்திருக்கா’ என நினைத்த முத்துப்பேச்சி,
“அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது பங்கஜம், எல்லாம் மருமகப்பாடு என் மகன்பாடு.”
“என்னக்கா, இப்புடி சொல்லுறீங்க? மாமியா உங்களுக்கு தெரியாமையா இருக்கும். சும்மா சொல்லுங்க அக்கா, நான் யாருக்கிட்டையும் சொல்ல மாட்டேன். இல்லை, மருமக கொண்டு வந்ததை சொன்னா ஊர் கண்ணு பட்டுடும்னு மறைக்கிறீங்களா.”
‘உன் ஒருத்திக் கண்ணு போதாது!’ என எரிச்சலுடன் நினைத்தவர்,
“நிஜமா அதைப்பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியாது பங்கஜம். முகிலன் வரதட்சனை எல்லாம் கேட்க கூடாதுன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டான். அதனால நாங்க எதுவும் கேட்டுகிடல.”
“நீங்க கேட்கலைனாலும் அவுங்க பொண்ணுக்கு செஞ்சிருப்பாங்கதானேக்கா, நிச்சயத்துல சீர்வரிசை தட்டே அறுபதுக்கு மேல இருந்துச்சு, அப்போ பவுனு மட்டும் கம்மியாவா போட்டுருப்பாங்க.” என அவர் விடாது நகையைப் பத்தியே தோண்டித் துருவ,
“நகைப் பத்தி எல்லாம் பொண்ணு பையன்கிட்டயே பேசிக்க சொல்லிட்டோம்.”
“எப்புடியும் ஒரு அம்பது பவுன் இருக்கும்லக்கா, சீர்வரிசை தட்டுலயே இருபது பவுன் கிட்ட வச்சிருந்தாங்க.”
“அதைப்பத்தி நமக்கு என்ன பங்கஜம், மகனும், மருமகளும் நல்லா இருந்தா போதும் எங்களுக்கு.”
‘சரியான அழுத்தம் இந்தக்கா நகையைப் பத்தி வாயை தொறக்க மாட்டுறாங்களே. சொன்னா என்ன பண்ணிடுவேனாம் நான், இருக்கப்பட்ட ஆளுங்கன்னு பகுமானம் காட்டுறதைப் பாரு.’ என பொருமிய பங்கஜம்,
“சின்ன மருமக வேலைக்கு ஏதும் போகுமா என்ன?”
“அதைப் பத்தி இன்னும் ஏதும் பேசிக்கலை, ஆனா வருணா டீச்சர் படிப்பு முடிச்சிருக்கு எப்புடின்னு தெரியலை.”
“டீச்சர் படிப்புன்னா, நல்லதுதான் அக்கா, பழனில நல்ல ஸ்கூல் எல்லாம் இருக்கு.” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சுபா டீயுடன் வந்து விட,
“எடுத்துக்கோங்க அக்கா” என்றபடி பங்கஜதிடமும் ஒரு டம்ளரை கொடுக்க,
“அட, சுபா எனக்கும் சேர்த்து போட்டுடியா?” என்றபடி எடுத்துக் கொண்டார்.
“எதுனாலும் வருணா, முகிலனோட முடிவு தான் பாப்போம்.”
“அப்புடி எடுத்ததும் எல்லா முடிவையும், அவுங்க கிட்ட விட்டுடாதீங்க அக்கா, அப்பறம் நாளைப்பின்ன எதுக்கும் உங்களை கேட்க மாட்டாங்க.” என மெல்ல பத்த வைக்க முயல்,
“பார்ப்போம், பார்ப்போம்” என பிடிக் கொடுக்காமல் அவர் பேச,
தான் வந்த வேலை நடக்காததில் கடுப்பாகிப் போன பங்கஜம்,
“அதுசரி தான் க்கா, மூத்த மருமக கொண்டு வராதத்துக்கும் சேர்த்து இரண்டாவது மருமக கொண்டு வந்தா சரிதான். நகைக்கு நகையும் ஆச்சு, கொணமான பொண்ணும் ஆச்சு.
முகிலனுக்கு மாமானார் வீடு எல்லாம் இருக்கப்பட்டதுதான் போல, எடுத்து செய்ய மச்சான், மாமா எல்லாம் இருக்காங்க.
பாவம், நம்ம பரணிக்கு தான் அப்புடியில்லை. மச்சானும் இல்லை, மாமானாரும் இல்லை. நம்ம சுபா அம்மா வீடும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
நம்ம சுபா தான் எந்த வேலைக்கும் போகாம வீட்டோட நின்னுடுச்சு, வருணாவாச்சும் படிச்ச படிப்பை வீணாக்காமா வேலைக்குப் போகட்டும்.
சரிக்கா, நான் கிளம்புறேன் பிள்ளைங்க வர நேரமாச்சு நான் கிளம்புறேன்.” என்றபடி வெளியேறியவர், கையோடு கல்யாணப் பலகாரத்தையும் வாங்கிச் சென்றிருக்க,
இங்கே, அவர் பேசிய பேச்சில் முகம் கருக்க அமர்ந்திருந்தனர் சுபாவும் அவளது அம்மாவும்.
“என்னம்மா, பங்கஜம் அக்கா இங்கயா வந்துட்டுப் போறாங்க.” என்றபடி மேகலா வர,
“ஆமா இங்கனதா வந்துட்டு போறா.”
“என்னவாம் அவுங்களுக்கு, ஆளு சும்மா இந்தப் பக்கம் வராதே. என்ன பேசிட்டு போனாங்க?”
“அவ எதுக்கு வருவா, வாயைக் கிளறி பொரணி பேசத்தான் வருவா, வருணாவுக்கு போட்ட நகையை பத்தி கேட்டு வந்தா, நான் பிடி கொடுக்கலைன்னதும் என்னத்தையோ ஆகமாட்டாததை பேசிட்டுப் போறா,
இவ காலடி மண்ணை எடுத்து சுத்திச் போடணும் மொதல்ல, வயித்தெரிச்சல் புடிச்சவ.” எனப் பேசியபடி அம்மாவும் மகளும் உள் சென்றுவிட்டிருக்க, அங்கே சுபாவையும், வள்ளியம்மையையும் கேட்பாரின்றி இருந்தனர்.
“பாத்தியா டி, நான் சொன்னப்போ கேட்டியா? இனி இப்புடித்தான் எதுக்கொடுத்தாலும் உன்னை மட்டம் தட்டுவாங்க. நல்லா அனுபவி.
அந்த பொம்பளை என்னைய முன்ன வச்சுட்டே, இவ்வளவு பேசுது அதுக்கு உன் மாமியாக்காரி வாயை தொறந்து, அந்த பொம்பிளையை ஏதாச்சும் பேசுனாங்களா,
பேச விட்டு அமைதியா வேடிக்கை பாத்திருங்கான்னா, அவுங்க மனசுல ஒண்ணுமில்லாமயா இருக்கும்.
இனி உனக்கும் சரி, உன் புருசனுக்கும் சரி இந்த வீட்டுல மதிப்பு இல்லை, எல்லாம் இரண்டாவது மகன், மருமகளைத் தான் கொண்டாடுவாங்க.
இதுல இனி அந்த இருக்கப்பட்டவ வேலைக்கு மட்டும் போயிட்டான்னு வையி, நீ மொத்தமா வேலைக்காரியா மாறிடுவா இந்த வீட்டுல, இனி அவளுக்கு எடுபுடி வேலை செஞ்சிட்டு இருக்க வேண்டியது தான் நீ, இப்பயாச்சும் என் பேச்சைக் கேட்டு சுதாரிச்சுக்கோ.”
“இப்போ என்னம்மா பண்ணனும்னு சொல்றா, அவ வேலைக்குப் போகாமா தடுக்க முடியுமா என்ன?”
“பண்ணுன்னு தான் சொல்லுறேன். மூத்த மருமக நீயே வீட்டுல இருக்கும்போது அவ எதுக்கு வேலைக்கு போகணும்ங்கிறேன்.”
“உளறாதம்மா இதுல எல்லாம் நான் தலையிட முடியாது. அது வருணா விருப்பம், முகிலன் அப்புடி எல்லாம் என்னை தலையிட விட்டுட மாட்டான்.”
“நீ இப்புடியே நான் சொல்லுறதுக்கெல்லாம் எதிர்த்துட்டே வந்தியின்னா, கூடிய சீக்கிரம் உன் வாழ்க்கை சீரழிச்சுரும் பார்த்துக்க!” என்றவரின் பேச்சில் கோபமுற்றவள்,
“வாயை மூடும்மா, பொண்ணு வாழ்க்கையை பத்தி பேசுற பேச்சு இது, என்ன அம்மா நீயில்லாம்.” என்றவள் கோபத்தில் சீறிட,
“இந்த ரோசத்தை என்கிட்ட காட்டுறதை விட்டுட்டு, இந்த வீட்டுல எப்புடி உன் மதிப்பை தக்க வச்சுக்கலாம்ன்றதுல பாரு. வந்துட்டா சீறிக்கிட்டு, கண்ணுமுன்ன அம்மா வீட்டை ஒருத்தி கேவலமா பேசிட்டுப் போறா, அதை கேக்க துப்பில்லை என்கிட்ட பாஞ்சுட்டு வரா.” என வார்த்தைகளில் குதறிவிட்டு அவர் எழுந்து சென்றிட,
அவர் சொன்ன விசயத்தில் நெற்றி சுருங்க யோசனையானாள் சுபா.
“என்னம்மா உன் மூத்த மருமகளுக்கு அவுங்க அம்மா வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கப் போலயே.” வெளியே வள்ளியம்மையும், சுபாவமும் பேச்சு வார்த்தையில் ஈடுபாட்டிருந்த போது கவனித்து விட்டு மேகலா இங்கே பேச,
“அது ஒண்ணுமில்லை இந்த பங்கஜம் பண்ண வேலை” என்றபடி அவர் பேசிய அனைத்தையும் முத்துப்பேச்சி கூறிட,
“நீ ஏன்ம்மா அவுங்களை திரும்ப பேசாம விட்ட?”
“என்னத்தை பேச சொல்லுற, அவ என் வாயை கிளறனும்னுதான் வந்ததே, இப்போ அவ பேசினதுக்கு நான் பதில் பேசியிருந்தேன்னு வையி, இன்னும இன்னும் பேச்சை வளர்த்து, கலகத்தை தான் உண்டு பண்ணிருப்பா.
இன்னொன்னு, எனக்கு தெரியும் சுபாவை பத்தியும், அவுங்க அம்மா வீட்டைப் பத்தியும். அதை ஒவ்வொருத்தருக்கும் நிருபிச்சுட்டே இருக்க முடியாதில்லையா? பேசுறவங்க பேசிட்டே தான் இருப்பாங்க அதை நாம கண்டுக்க கூடாது மேகலா.”
“அண்ணி ஏதோ தீவிர சிந்தனையில இருக்காங்கப் போலயே, மொகமே சரியில்லைம்மா.” மேகலா கூற,
“அவுங்கம்மா இல்லையா?” இது பேச்சியின் குரல்.
“இல்லைம்மா, காணோம்.”
“அப்போ சுபாவ இங்கன கூப்பிடு. அவுங்கம்மா என்னத்தையாச்சும் பேசியிருக்ககும். இவ அதை மண்டைக்கு ஏத்திக்கிட்டு இருப்பா. இங்கன கூப்பிடு அவளை.” என,
“சுபா அண்ணி!” என இங்கிருந்தே மேகலா கத்தி அழைக்க,
அதில் உணர்வு பெற்றவள்,
“என்ன மேகலா” என குரல் கொடுக்க,
“அம்மா கூப்பிடுறாங்கண்ணி.” என மேகலா கூற,
“இதோ வரேன்!” என்றபடி உள்ளே வந்தவளை கண்ட பேச்சி,
“என்ன சுபா, தனியா உட்காந்துட்டு இருந்த?” என கேள்வி எழுப்ப,
“இல்லத்தை சும்மாதான் வேற ஒண்ணுமில்லை.”
“சரி, சுபா நைட்டுக்கு என்ன பண்ணலாம், மதியம் வச்ச சாதம் கொஞ்சம் இருக்கு.” என அவளை வேலைகளில் உள்ளிழுக்க,
அதில் தன் அதிகாரம் இன்னமும் தன்னிடம் இருப்பதை கண்டு,சிறிது தெளிந்தவள்,
“மாவு இருக்குல்லத்தை இட்லி ஊத்திப்போம். சாதத்தை வச்சும் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.” என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது,
மேகலாவிற்கு, முகிலனிடமும் இருந்து போன் வர,
“சொல்லு முகில், எங்க இருக்கீங்க?”
“*********”
“சரி, சரி, நைட்டுக்கா, மதியம் வச்ச சாதம் இருக்கு, இட்லி ஊத்தலாம்னு இருக்காங்க.”
“************”
“அப்படியா சரி லைன்லயே இரு, நான் பேசிட்டு சொல்லுறேன்.” பேச்சியிடம் வந்தவள்,
“அம்மா, நைட்டுக்கு ஹோட்டல்ல வாங்கிகலாம்னு தம்பி சொல்றான். அவனே எல்லாருக்கும் வாங்கிட்டு வரானாம்.” என,
“எங்கயிருக்காங்களாம் அவுங்க, கொண்டா போனை.” என வாங்கியவர்,
“எங்கயிருக்கிங்க முகிலா, மாவு இருக்கு இட்லி ஊத்திக்கலாம்.”
“***********”
“சரி, சரி இருட்டுறதுக்கு முன்ன சீக்கிரம் வரப் பாருங்க. நேரமாக்கிடாத!” என்றபடி போனை வைத்தவர்,
“சுபா மாவு எடுக்காத வேண்டாம், முகிலனும், வருணாவும் பழனிமலையில இருக்காங்களாம். அவுங்க வரும்போதே எல்லாருக்கும் டிபன் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டான்.”
“ஏன் அத்தை? அதான் மாவு இருக்குல்ல, எதுக்கு வீணாக்கிட்டு, ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் ஹோட்டல் போய்க்கலாம்த்தை, முகில் தம்பியை வாங்க வேண்டாம்னு சொல்லிடுங்க.” என்றபடி சுபா மீண்டும் பழையபடி தனது பேச்சினை அங்கே அனைவரும் கேட்கும்படி, அவர்களுக்கே தெரியாமல் தனது அதிகாரத்தை அவர்களிடம் நிலைநாட்ட முயல,
“இருக்கட்டும் விடு சுபா, வருணா ஏதோ ஆசைப்பட்டிருக்கும் போல வெளியே சாப்பிடனும்னு. நமக்கும் வேலை மிச்சமாகும் விடு.” என்றபடி மாவினை மீண்டும்
ப்ஃரிட்ஜில் வைத்துவிட்டு அவர் வெளியேறிட, அவருடன் மேகலாவும்.
சற்றே தெளிந்திருந்த அவள் மனம், இப்போது அவளது முடிவு மீண்டும் வருணாவால் மீறப்பட்டதில, அவள் மனம் மீண்டும் குரங்காய் தாவ ஆரம்பித்திருந்தது.