எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 28

Privi

Moderator

வீட்டிற்கு சென்ற ருத்ரனோ, நேரே அவன் தாயிடம் சென்று "நேற்று நீங்க கேட்ட கேள்விக்கு என் பதில் “சம்மதம்” என கூறினான்.​

அவன் பதிலை கேட்ட பார்வதியின் முகம் பிரகாசித்தது, "உண்மையவாடா கண்ணா?" என புன்னைகையோடு கேட்டார்.​

அவனும் "ஆம்" எனும் விதமாக தலை அசைத்தான்.​

பார்வதிக்கு சந்தோஷத்தில் இருப்பு கொள்ளவில்லை. ருத்ரன் "அம்மா அவளிடம் நீங்களே இதனை பற்றி பேசுங்கள். அவள் நூறு சதவிகிதம் சம்மதிக்க மாட்டாள். அப்படி சம்மதிக்க வில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள்." என கூறினான்.​

பார்வதியும் சம்மதமாக தலை ஆட்டிகொண்டார். உடனே நீலனுக்கு அழைத்தவர் அவனிடம் இந்த நல்ல செய்துயை பரிமாறி கொண்டார்.​

அதற்கு அவனோ "டார்லிங் எனக்கு இது முன்னமே தெரியும். ஐந்து மணி வாக்கில்தான் நானும் ருத்ரனும் பார்க்கில் சந்தித்து பேசினோம்." என கூறினான் நீலன்.​

"உமையா எப்படி இதனை எடுத்துப்பணுத்த தெரியவில்லை..." என கூறினான் நீலன்.​

அதற்கு பார்வதியோ, “நீ ஒன்றும் கவலை படாதே. நான் அவளிடம் பேசுகிறேன்." என கூறினார்.​

நீலனிடம் கதைத்து விட்டு உமையாளுக்கு அழைத்தார். அழைப்பை ஏற்ற உமையாளோ, "என்ன காத்து இந்த பக்கம் வீசுகிறது? மகனுடன் சமாதானமானவுடன் எங்களை மறந்து விடீர்கள் என்றல்லவா நினைத்தேன்." என பார்வதியை வம்பிழுத்தாள்.​

அதற்கு பார்வதியோ "அப்படிலாம் இல்லை உமையாம்மா... நீ கண்டிப்பா வேலையாக இருப்பாய். உன்னை தொல்லை செய்ய வேண்டாம் என்று தான் அழைக்க வில்லை." என கூறினார்.​

உமையாளோ "வேலைதான் ஆனால் எப்போதும் உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் நினைத்த நேரம் என்னை அழைக்கலாம்." என கூறினாள்.​

அதற்கு பார்வதி " அப்போ சரி நாளை மாலை ஆறுமணியளவில் கோவிலுக்கு சென்று வருவோமா?"என்று கேட்டார் பார்வதி.​

சிறு யோசனையின் பின் சரி என சம்மதித்தாள் உமையாள். அவர்கள் திட்டமிட்டது போல மாலை ஆறுமணியளவில் இருவரும் கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு சென்றவர்கள் முருகனை வணங்கி விட்டு கோவிலில் ஒதுக்குபுறமான ஓர் இடத்தை பார்த்து அமர்ந்தனர்.​

"கோவிலுக்கு வந்தாலே மனம் அமைதியாக இருக்கிறது." என கூறினார் பார்வதி. பார்வதி கூறுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள் உமையாள்.​

பார்வதியோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து உமையாள், "அம்மா... நேரமாகி விட்டது புறப்படுவோமா?" என கேட்டாள்.​

உடனே பார்வதி 'அய்யய்யோ பேச வந்ததை பேசாமல் ஏதேதோ பேசி நேரத்தை வீணாகிவிட்டாயே பாரு.பார் இப்போ அவள் புறப்படுவதற்கு தயாராகிறாள்' என எண்ணி உமையாளிடம் உமையம்மா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்." என கூறினார்.​

உடனே உமையாளோ அவரை புருவம் சுருக்கி பார்த்து "சொல்லுங்க, என்ன பேசணும்?" என கேட்டாள் .​

"ருத்ரன் இருந்தது போலவும் இல்லை, இப்போது இருப்பதை போலவும் இருந்ததில்லை. அவனை நினைத்தால் தான் பயமாக உள்ளது. என் காலத்தின் பின் அவனுக்கு என்று யாரும் இல்லை.​

இருந்தவர்களும் இல்லாமல் போய்விட்டனர். ஒண்டி கட்டையாவே போய்டுவானோ என்று பயமாக இருக்கிறது." என கூறினார்.​

அதற்கு உமையாளோ "அம்மா நீங்க தேவை இல்லாமல் பயப்படுறீங்க. அவருக்கு தெரியும் அவர் வாழ்க்கையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று." என கூறினாள்.​

பார்வதி "நீ சொல்வது கூட உண்மையாக இருக்கலாம் இவ்வளவு வளர்த்தவனுக்கு இனி தன் வாழ்வை எப்படி கொண்டுபோகணும் என்று தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால் பெற்ற மனது கேட்கவில்லையே.' என கூறினார்.​

உமையாளோ "சரி அதற்கு என்ன செய்ய முடிவு எடுத்து உள்ளீர்கள்?" என கேட்டாள்.​

"அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என நினைக்கிறன்." என கூறினார் பார்வதி.​

"பேசுவதை பார்த்தால் பெண் பார்த்தாயிற்று போல, யார் அந்த பெண்?" என ஆர்வமாக வினவினாள் உமையாள்.​

பார்வதி சற்றும் தாமதிக்காமல் "நீதான்" என கூறினார்.​

சிரித்து கொண்டிருந்த உமையாள் முகம் சட்டென மாறியது. சிறு அமைதிக்கு பின் "இல்லம்மா, இது சரி வராது. எனக்கு மறு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் இப்படியே வாழத்தான் ஆசை படுகிறேன். எனக்கு என் பொண்ணு இருக்கிறாள். அது போதும் என கூறினாள்.​

"அதற்கு பார்வதி "எவ்வளவு காலத்திற்கு" என்று பேச வந்தவரை இடைமறைத்து "இந்த விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை, இனி இதனை பற்றி பேச எதுவும் இல்லை.​

உங்கள் மகனுக்கு நீங்கள் தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம் ஆனால் அது என்னோடு நடப்பது என்பது சாத்தியமில்லை. வீண் கற்பனையையும் முயற்சியையும் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை பார்த்து ருத்ரனுக்கு முடியுங்கள்." என கூறி கோவிலிருந்து விறு விறுவென புறப்பட்டு சென்று விட்டாள்.​

ஏனோ அவளால் நிலை கொள்ள முடியவில்லை. இவ்வளவு நாள் நீலன் சொன்னபோது கூட கோபம் மட்டுமே வரும். ஆனால் இன்று பார்வதி பேசும்போது கோபத்துடன் சேர்ந்து அழுகையும் வந்தது.​

போகும் அவளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் பார்வதி. பின் ருத்ரனுக்கு அழைத்து அவர்களிடையே நடந்த உரையாடல் பற்றி கூறினாள்.​

அதற்கு ருத்ரனோ மெலிதாக சிரித்து " சம்மதித்திருந்தால் தான் அதிசயம். சரி விடுங்கள் அம்மா நான் பார்துகொள்கிறேன். என்ன ஆனாலும் சரி அவள்தான் உங்கள் மருமகள் கூறினான். பார்வதியும் மன நிறைவுடன் அழைப்பை துண்டித்தார்.​

வீட்டிற்கு வந்த உமையாளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை மனம் முழுக்க கோபம். யாரிடமும் பேச தோன்றவில்லை. பார்வதி அவளிடம் கேட்டதை மற்றவரிடம் கூறவும் தோன்ற வில்லை. மெளனமாக தனது அறையை நோக்கி சென்றாள்.​

மகிழ் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். உமையாள் மகிழ் அருகினில் சென்று அவளை அனைத்து கொண்டு படுத்து விட்டாள். கண்களை மூடினாள் அருணின் விம்பம். பட்டென கண்களை திறந்தாள். அவள் இதழ் "ஐ ஹெட் யூ " என அசைந்தது, கண்களில் கண்ணீரும் கூடவே வழிந்தது.​

எப்படியும் இந்த விஷயம் நீலனுக்கு தெரிய வரும் என அவளுக்கு தெரியும். 'அவனாக வந்து கேட்டல் பார்த்து கொள்வோம்' என நினைத்து உமையாள் அமைதியாக இருந்தாள்.​

இப்படியே இரு வாரங்கள் கடந்திருக்கும். கயலின் அம்மா காயலிடம் "என்ன புள்ள வந்தாக, சம்மந்தம் பேசுனாக, அப்புறம் வந்து நிச்சய நாள், கல்யாண நாள் சொல்றேன்னு சொன்னாக ஒரு தகவலும் இல்ல.” என அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைத்தெடுத்து கொண்டிருந்தார்.​

“மா சொல்றேன்னா சொல்லுவாங்க மா... உன் அவசரத்துக்கு இங்கும் யாரும் இல்லை.” என தனது தாயிடம் கடிந்து கொண்டிருந்தாள் கயல். ஆனால் கயலின் தாயோ அவள் பேசுவதை காதில் போட்டுக்கொள்ளாமல் உமையாளுக்கு அழைத்து விட்டார்.​

மறுமுனையில் அவர் அழைப்பை ஏற்ற உமையாள் "வணக்கம் அத்தை. நலமா இருக்குறீர்களா"? என குசலம் விசாரித்தாள்.​

அதற்கு அவரோ " நான் நலமாக உள்ளேன் உமையாள், நீதான் வீட்டிற்கு சென்று நிச்சயத்திற்கும், கல்யாணத்திற்கு நல்ல நாள்கள் பார்த்து சொல்வதாக கூறினாய் அதன் பின் எந்த தகவலும் இல்லை." என கேட்டார்.​

"இன்னுமிரு தினங்களில் நல்ல நாளாக பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறேன் அத்தை." என அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து அழைப்பை துண்டித்தாள்.​

அப்போதே கோவிலுக்கு புறப்பட்டவள், நிச்சயத்திற்கும் கல்யாணத்திற்கும் நல்ல நாள் பார்த்து விட்டே வீட்டிற்கு திரும்பினாள்.​

வீட்டிற்கு வந்தவள், நீலனுக்கு வாட்ஸ் ஆப்பின் மூலம் கயல் அம்மா அழைத்தது அவளிடம் பேசியது தொடக்கம், கோவிலுக்கு சென்று நல்ல நாள்கள் பார்த்தவரை அனைத்தையும் கூறி முடித்தாள்.​

அவள் கூறிய அனைத்தையும் கேட்டவனோ "இப்போ என்ன அவ்வளவு அவசரம் அக்கா?" என கேட்டான்.​

அதற்கு உமையாளோ "பெண்ணை பெற்றவர்கள் அப்படிதான் இருப்பார்கள் நீலன். அவர்கள் நிலைமையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்." என கூறினாள்.​

ஒரு பெருமூச்சோடு "சரிக்கா எனக்கு வேலை உள்ளது நான் பிறகு உன்னிடம் பேசுகிறேன்." என கூறி அழைப்பை துண்டித்தான். தொடர்ந்து கயலின் தாயிக்கும் அழைத்து குறித்த நிச்சய தேதியையும் கல்யாண தேதியையும் கூறியிருந்தாள்.​

இப்படியே மூன்று நாட்கள் கழிந்தது. அன்று வெள்ளிக்கிழமை ராமன் ருத்ரனை தேடி அவன் அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.​

அவரின் வீட்டு பணி இப்போது எந்த தருவாயில் உள்ளது. கைவினை பொருட்கள் எல்லாம் செய்தாயிற்றா? என்று கேட்டு கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விக்கு பதில்களையும் அவர்கள் செய்த சில வடிவமைப்புகளையும் காட்டினான். அவருக்கு அதில் திருப்தி ஏற்படவே அவனிடம் இருந்து விடைபெற்றார்.​

அவரை வழி அனுப்பி விட்டு, உமையாளுக்கு அழைத்தவன் "உமையாள் உன்னுடன் பேச வேண்டும் வெளியே எங்கயாவது பார்க்கலாமா?" என கேட்டான்.​

உமையாளோ, 'இப்போது இவரு எதற்கு என்னை பார்க்க வேண்டும்? அவர் அம்மா பேசியதை பற்றி கேட்க கூப்பிடுகிறாரோ?' என யோசித்தவள் அவன் இவள் பதிலுக்காக காத்திருக்கிறான் என உணர்ந்து "என்னை எதற்கு பார்க்க வேண்டும்?" என கேட்டாள்.​

அவனும் விஷமமாக சிரித்து, “நான் பார்த்து பேசினால் தானே உன்னாள் புரிந்து கொள்ள முடியும். அந்த விஷயத்தில் வேறு ஐடியா வர வாய்ப்பிருக்கிறது அல்லவா. நீ எடுத்த முடிவும் மாறலாம்." என கூறினான்.​

தொடர்ந்து ஏன் என்னை சந்தித்தால் உன் முடிவு மாறிவிடும் என்று பயமா?" என பொருள் கூறாது பேசினான். அதற்கு உடனே அவள் "சரி வருகிறேன். எங்கே வர வேண்டும் என்பதை புலனம் மூலம் சொல்லுங்கள்." என கூறி அழைப்பை துண்டித்தாள்.​

அவன் பேசியது ராமன் வீட்டு கைவினை பொருட்கள் செய்யவும் அதோடு அவர்களது திருமணத்தை பற்றியும் தான் ஆனால் பொதுவாக பேசினான்.​

அவளுக்கோ அவன் திருமணத்தை பற்றி பேச கூப்பிடுகிறான் என்றே தோன்றியது. இதில் அவன் பேசியது அவள் மன உறுதியை கேள்வி கேட்பது போல் தோன்றவே அவளும் அவனை பார்ப்பதற்கு சம்மதித்து விட்டாள்.​

மாலை நான்கு மணியளவில் அவள் அனுப்பிய விலாசத்திற்கு வந்திருந்தாள் உமையாள். அது ஒரு வீடு புதுப்பிக்கும் பணி நடத்து கொண்டிருக்கும் இடம் கட்டிய வீட்டை புதுப்பித்து கொண்டிருந்தனர்.​

ருத்ரனும் அங்கே தான் நின்று கொண்டிருந்தான். அவன் அவனுடைய தனி உதவியாளர் விமலிடம் எதையோ காண்பித்து பேசிக்கொண்டிருந்தான். அவர்களை நோக்கி அவளும் சென்றாள்.​

அவள் வருவதை பார்த்த ருத்ரன் அவனுக்கு சில பணிகளை செய்ய சொல்லி அனுப்புவிட்டு அவளை பார்த்தான். அவன் அருகில் வந்த உமையாளோ​

"இதுதான் இப்போது நீங்கள் புதுப்பித்து கொண்டிருக்கும் வீடா? இந்த வீட்டிற்குத்தான் என்னிடம் ஹண்ட்கிராப்ட் கேடீர்களா?" என கேட்டாள்.​

அவனும் "ஆம்" என தலை ஆட்டினான்.​

அவன் பேசிய வார்த்தைகளை அவளுள் மீட்டெடுத்து பார்த்தாள். 'அப்போ இந்த வீட்டை பார்த்தால் புது ஐடியா வரும் அப்போது நான் என்ன யோசனை செய்து வைத்திருக்கிறேனோ அந்த முடிவு மாறலாம் என்று கூறியிருக்கிறார்.​

நான் தான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுள்ளேன் போல' என நினைத்தாள். உடனே புன்னகைத்து அவனுடன் இணைந்து இருவரும் அவ்வீட்டின் வடிவமைப்பை பற்றியும் ஹேண்ட் கிராப்ட் பற்றியும் சரளமாக பேச ஆரம்பித்து விட்டனர்.​

ருத்ரனும் அவள் தெளிந்த முகத்தை பார்த்து, அவளுக்கு தெரிய வண்ணம் அவன் மீசைக்குள் மறைந்த ஒரு மெல்லிய சிரிப்பொன்றை சிந்தினான். ருத்ரன் சில இடங்களை கவனித்து அதற்கு ஏற்றார் போல் சில ஹேண்ட் கிராப்ட் டிசைன்களை கூறினான்.​

அவன் கூறியதை கெட்டவள் அவனை மெச்சுதலை பார்த்தாள். இருவரும் இப்படியே பேச, இருள ஆரம்பித்து விட்டது உடனே ருத்ரன்​

"உமையாள் நான் மதியம் இன்னும் சாப்பிடவில்லை இரவாக போகிறது. எனக்கும் பசிக்க தொடங்கி விட்டது வாயேன் ஒரு ரெஸ்டூரனுக்கு சென்று உணவு உட்கொண்டு டிஸ்கஸ் பண்ணலாம்.” என கேட்டான்.​

அவன் சாப்பிடவில்லை என்றவுடன் அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவனுடன் ரெஸ்டூரனுக்கு சென்றாள்.​

இதற்கிடையில் பார்வதி நீலனிடம் தனக்கும் உமையாளுக்கும் நடந்த சம்பாஷணையை கூறினார். நீலனுக்கோ என்ன செய்வதென்று தெரிய வில்லை.​

தன் திருமணத்திற்கு முன்பு அக்காவின் வாழ்க்கையை சீர் செய்துவிடலாம் என்று நினைத்தால் கயல் அம்மாவோ கல்யாணத்திற்கு நெருக்கடி குடுகிறார்கள்.​

நல்ல முறையில் மரியாதை நிமித்ததுடன் பழகும் பார்வதி அம்மா கேட்டே முடியாது என்று கூறியிருக்கிறாள் என்றாள் இவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்று நீலனுக்கு புரியவில்லை.​

நெடு நேரம் சிந்தித்து, கயலுக்கு அழைத்திருந்தான் நீலன்.​

"கயல் வீட்டில் தானே நிக்கிறாய்? உன்ன அம்மாவும் உன்னுடன் இருக்கிறார்கள் தானே? என்று வினவினான்.​

அதற்கு கயலும் "ஆம்" என்றாள்.​

"நான் இப்போது அங்கு வருகிறேன். உன் அம்மாவிடம் கொஞ்சம் பேச வேண்டும். என கூறி அழைப்பை துண்டிக்க போன சமயம் என்ன நினைத்தானோ காயலிடம்​

"கயல் நான் என்ன செய்தலும் என்ன பேசினாலும் என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா? உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று?" என கேட்டான்.​

அதற்கு கயல் சின்னதாய் புன்னகைத்து "ஐ லவ் யு" என கூறி தொடர்பினை துண்டித்தாள்.​

அவனது இதழிலும் ஒரு மெல்லிய புன்னகை.​

 
Top