IsaiKavi
Moderator
“ தம்பி ”
“ சொல்லுங்க ம்மா? ”
“ உன் அக்காக்கு குழந்தை பிறக்க போகுது ? ” யாதவன் தாய் காந்திமதி கேட்டார்…
இரவு உணவு புட்டும், கிழங்கு பிரட்டலும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் தான் காந்திமதி தன் இரண்டாவது மகள் ஆனந்தியின் குழந்தை பேறு பற்றிய பேச்சை ஆரம்பித்தார்…
சாப்பிட்டு முடித்தவுடன் “ அதுக்கு என்ன செய்யனும் சொல்லுங்க? ” சந்தோஷமில்லாமல் கேட்டான்..
அதை புரிந்து கொண்டவர் பெருமூச்சுடன் “ குழந்தை பிறந்ததும் நானே பாக்குறேன் எண்டு சொல்லிட்டேன் பா..” என்றார்…
சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டு, கதவில் கொழுவி இருந்த துணியில் கையை துடைத்தான்…
“ உங்களுக்கு நல்லாவே தெரியும் ம்மா அக்கா கல்யாணத்துக்கு எவ்ளோ செலவாகிட்டு எண்டு இதுல சீதனம் அவங்க கேட்காமல் இருந்து இருக்கலாம்.. என்னோட கடமைய பிறந்தவளுக்கு செஞ்சி முடிச்சிட்டேன் இதுக்கும் மேல என்ன ம்மா ? என்னோட வாழ்க்கை படிப்பு இது ரெண்டையும் பார்க்கணும்…இப்பவே இருபத்தி எட்டு வயசாகிட்டு வேலைக்கு போய் படிச்சிட்டு இருக்கன்…” என்றான் யாதவன்…
யாதவனின் உழைப்பை பற்றி காந்திமதிக்கு நன்கு அறிவார்.. பெரிய துணிக்கடையில் வேலை செய்கிறான்.. மாதம் எண்பதாயிரம் சம்பளம் அதில் அவன் படிப்பு செலவு, துணிமணி , வீட்டுக்கு தேவையான பொருட்கள், கரண்ட் , தண்ணீர் பில்,தங்கையின் படிப்பு செலவு என அவன் எடுக்கும் சம்பள பணமே முடிவடைந்து விடுகிறது…
இதில் தங்கைக்கு மாதம் மாதம் வங்கியில் பணம் போடுகிறான்…
அவனுக்கு என்று இருக்கும் தந்தை பெயரிற்கு தான் குடும்ப தலைவன் என்ற பெயர் தவிர காலையில் வயின் ஷாப் சென்று குடித்து விட்டு தெருவில் நின்று கத்துவதும் சண்டை பிடிப்பதும் வேலையாக வைத்திருக்கிறார் சிதம்பரம்….
குடித்து குடித்து உடலை வருத்தி கொண்டது தான் மிச்சம்…
ஹாலில் போட்டிருந்த படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார் சிதம்பரம்..நடு ஜாமத்தில் எழுந்து வயின் ஷாப் சென்று குடித்து விட்டு ரோட்டில் கத்திக் கொண்டு இருப்பார்..
தினமும் அவர் கத்துவதை கேட்டு சலித்து போக வேண்டாய் வெறுப்பாய் தாய்க்காகவே தந்தையை சகித்துக்கொள்கிறான்..
எந்த பிள்ளையாவது தந்தை குடித்து விட்டு ரோட்டில் கத்திக் கொண்டு மற்றவர்களின் நித்திரையையும் குடியையும் கெடுப்பதை விரும்புவார்களா? யாதவனுக்கு வெறுத்து விட்டது..
அவன் வெறுக்கும் ஒரு நபர் என்றால் சிதம்பரம் தான்…
“ எனக்கு விளங்காம இல்ல தம்பி , ஆனந்தி வீட்டு மாமியார் வேற இல்ல அவங்க மகளுக்கு குழந்தை பிறக்க போறதால மருமகன் வீட்டுக்குப் போயிட்டாங்க..ஆனந்தி பாவம் தானே தம்பி இரண்டாவது குழந்தை பேறு நாங்க தானே பாக்கணும்..” என்றார் காந்திமதி…
யாதவன் முகம் இறுகியது.. எத்தனை வருடங்களாக வீட்டுக்கு என்றே உழைக்கிறான் கிட்டத்தட்ட பதினொன்று வருடங்கள் சாதாரண பரீட்சை எழுதி எட்டு பாடங்கள் சித்தியடைந்தவன் மேலே அதாவது உயர்தரம் படிக்க முடியாமல் துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான்..
மூத்த சகோதரி ஹரிணியை கல்யாணம் கட்டிக் கொடுத்து , சீதனம் என கடன் எடுத்து செலவு செய்தான்.. இறுதியில் கடனை கட்ட வேண்டிய சூழல் ப்ரைவேட் ஆக படிக்க நினைத்தவன் அதனை ஓரமாக தூக்கி போட்டு விட்டு உழைக்க ஆரம்பித்தான்..சிறிது சிறிதாக கடனையும் கட்டி முடித்தான்..
இருபத்தியொரு வயதில் வேலைக்கு சென்றுக் கொண்டு உயர்தரம் படித்தான்.. ஆறு பாடங்களிலும் தரமான சித்தி பெற்றான் ..
பல்கலைக்கழகம் செல்லும் கனவை ஒதுக்கி வைத்து விட்டு ஐடி பீல்டில் கோர்ஸ் செய்துக் கொண்டு இருக்கிறான்..
வெளிநாடு செல்வதற்காக ஆவது அவனுக்கு சந்தர்ப்பம் அமைந்து விடாதா என்ற நம்பிக்கை தான்..
“ உங்க விருப்பம் எதுவும் செய்ங்க நான் இதுல தலையிட போறதில்ல ” என்று முரட்டு குரலில் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான்..
பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்..யாதவன் நிலைமை அவருக்கு புரியாமல் இல்லை..
பெரிய பாரங்களை சுமக்க சின்ன வயதிலே கொடுத்து விட்டார் இல்லை அதற்கு ஏற்றாற் போல வீட்டு சூழல் அமைந்து விட்டது..வேலைக்கு சென்று வீட்டை பார்த்து அக்காக்களின் திருமணத்தையும் ‘ நீதான் பொறுப்பேற்று நடத்தி முடிக்க வேண்டும் ’ என்று அவர் கூறவில்லை…
அவனாகவே புரிந்து கொண்டான்.. இரு சகோதரிகளுக்கும் திருமணத்தையும் நடத்தி வைத்துவிட்டான்..
ஆனந்தி வேண்டுமென்றே பிள்ளை பேறுக்கு வீட்டுக்கு வருகிறாளோ என்று அவனுக்குத் தோன்றியது…
ஒரு ஆள் படுக்கக் கூடிய கட்டிலில் தலைக்கு இரு கைகளையும் கொடுத்தவாறு கூரையை பார்த்தான்..
மின்விசிறி வேகமாய் சுழன்றுக் கொண்டிருந்தது.. அவனின் வாழ்க்கை ஓட்டத்தைப் போல..
“ கடவுள் கிட்ட கை ஏந்தி கேட்குறோம்..உனக்கு இவ்ளோ தான் அளந்து குடுக்குற நேரம்..கூடுதலாக குடு எண்டு குடுப்பாரா? என் வாழ்க்கை எது நோக்கி பயணிக்குது எண்டு கூட தெரியாம அது பின்னால போயிட்டு இருக்கேன்..என்னால முடிஞ்ச அளவு எல்லாம் செய்வேன் என் குடும்பத்துக்காக இதுக்கு மேல எதிர்பார்த்து நிக்கிறவங்களுக்கு ஒன்டும் செய்ய முடியாது..” என்று தனக்குள் கூறிக் கொண்டான்..
கோடை காலம் என்பதால் இரவில் மின்விசிறியின் காற்று கூட சூடாதல் தான் இருந்தது.. உடலின் புழுக்கம் தாங்க முடியாமல் சிமெண்ட் தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டான்..
சிறிது நேரத்தில் விழிகளும் மெதுவாக நித்திரைக்கு மூடிக் கொள்ள உறங்கிவிட்டான் யாதவன்…
******
காலையில் உணவு செய்துக் கொண்டிருந்தார் சாமந்தி…அப்போது அவரின் அலைபேசி அலறியது..
“ யாரு விடிய கோல் பண்றது? ” கையை துணி ஒன்றில் துடைத்துவிட்டு அலைபேசியை ஏற்றார்..
“ ஹலோ! மாமி நான் சித்ரன் கதைக்கிறன..”
“ ஓ..சித்ரனா இந்த நேரத்துல கோல் பண்ணி இருக்கீங்க, மாமிக்கு ( நாதவேணி) சுகம் இல்லையா? ”
“ அவங்களுக்கு என்ன மாமி நல்லா தான் இருக்காங்க..நீங்க ரது கிட்ட ஃபோனை கொஞ்ச குடுக்குறீங்களா? ”
“ படுத்துட்டு இருப்பா சித்ரன்.. நான் எழுப்பி விட்டு குடுக்குறன் நீங்க லைன்ல இருங்க..” என்றவர் அலைபேசியை எடுத்துக் கொண்டு ராதா அறைக்குள் நுழைத்தாள்..
அவள் நல்ல நித்திரையில் இருந்தாள்..
ராதாவை தட்டி எழுப்பினார்.. இரண்டு மூன்று தடவை தட்டிப் பார்த்தார் அவள் எழவில்லை ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்..
“ நல்லா நித்திரைல இருக்காள் சித்ரன்..” என்றார்..
“ மாமி ஃபோனை அவ காதுல வைங்க என் குரல் கேட்டதும் எழும்பிடுவா..” என்றான்..
அவன் சொன்னதை சாம்மந்தி செய்து விட்டு நகர்ந்தார்..
“ பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே! ” அலைபேசி வழியாக ஜீவி ப்ரக்ஷின் பேச்சுலர் படத்தின் ஒரு சில வரிகளை சித்ரன் தன் இனிமையான குரலில் பாடிக் கொண்டு இருந்தான்..
அவள் செவிதனில் தான் பாடும் பாடலால் தேனாய் தித்திக்க வைத்தான்..
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு எங்கோ ஒரு குழியில் வீழ்ந்த ஒருவன் தொண்டையை கிழித்து ‘ காப்பாத்துங்க ’ என்று பெருங்குரலெடுத்து அலறுவது போலவே இருந்தது சித்ரனின் இனிமையான குரல்..
“ குரங்கு கைல கிடைச்சுதாம் பூமாலை அது மாறித்தான் இன்னைக்கு நான் கிடைச்சேனா மச்சான்..” வாயில் கை வைத்து கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டாள்..
“ ஹாஹாஹா…நான் பாடுன பாட்டு எப்படி இருந்துச்சு? ”
“ ஆஹ்..காது கிழிஞ்சி போச்சி இரத்தம் மட்டும் வரல்ல அவ்ளோதான் மச்சான்.. வடிவான பாடல் வரிகள உங்க வாய்ஸ்ல பாடிடீங்களே? ” சம்மணம் கொட்டி கட்டிலில் அமர்ந்தாள்..
“ சரி விடு.. உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்..”
“ சொல்லுங்க? ”
“ ஒரு நல்ல உடுப்பா பார்த்து வடிவா உடுத்திட்டு வா.. மறக்காம உன்னோட எக்ஸாம் ரிசல்ட் பிறகு சிவி எல்லாத்தையும் ஃபைல் போட்டு கவனமா எடுத்துட்டு நீ எங்க வரணும் எண்டா கீல்ஸ் சூப்பர் மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட்ல ஏழரை மணிக்கு வந்து நில்லு.. ”
“ நான் என்னத்துக்கு வரணும்.. உங்களுக்கு போகத் தெரியாதா ? நீங்க என்ன சின்ன பிள்ளையா? ” என்று அவள் கேட்க..
“ ஷு.. நான் என்ன சொன்னேன் அத மட்டும் நீ செஞ்சா போதும்..கேள்விக்கு மேல கேள்வி கேட்கக் கூடாது விளங்குதா ? ”
“ சரி சரி.. நான் வாறன் நீங்க ஃபோனை வைங்க..” என்றாள்..
“ ஏன் மேடம் ஃபோனை வைக்க மாட்டீங்களோ ? ” சற்றே நக்கலாக அவன் கேட்டான்..
அதற்கு அவளோ “ நீங்க தானே ஃபோன் பண்ணீங்க மச்சான்..அப்ப ஃபோனை யாரு வைக்கணும் நீங்க தானே? ” என்று அவள் கேட்டாள்..
“ என்கிட்ட மட்டும் கதைக்க வாய் இருக்குமாம் மேடத்துக்கு மத்தவங்க கிட்ட கதைக்க அந்த நேரத்துல வாயை நாய் தூக்கிட்டு போயிருமாம்..” பட்டென்று அழைப்பை துண்டித்தான்..
சித்ரனுக்கு பேசியதற்கு பதிலடி வைத்திருப்பால் என்று தெரிந்துக் கொண்டு அவளை பேச விடாது தடுத்தான்..
கண்களும் சிரிக்க அவன் உதடுகள் அலைபேசியை பார்த்து மென்மையாக புன்னகைத்தது..
அலைபேசி (Lock Screen பூட்டு) திரையில் எட்டு வயது சிறுவனாக அவன் கையில் பழூனை வைத்திருக்க..அவன் பக்கத்தில் ஆரஞ்சு நிற குட்டி பார்க் அணிந்து அழுதபடி மூன்று வயது ராதா இருந்தாள்..
சித்ரன் சொன்னது போல பஸ் ஸ்டாண்டில் பழுப்பு நிற நீளமான கவுன் அணிந்து கூந்தலை பின்னல் இட்டு கையில் நீல நிற ஃபைல் பையுடன் நின்றுக் கொண்டிருந்தாள் ராதா…
அவன் சொன்ன நேரத்திற்கு அவள் வந்து விட்டாள்.. அவனைத்தான் இன்னும் காணவில்லை..காலையிலயே வெயில் சுட்டெரித்தது..குடையை கொண்டு வராமல் நெற்றியில் தலை வைத்து சாலையை பார்த்துக் கொண்டு நின்ற போது வெகு தூரத்தில் இருந்து சித்ரன் ஓடி வருவது தெரிந்தது..
சித்ரன் வீட்டில் சொல்லிவிட்டு வருவதற்குள் போதும் என்றாகிவிட்டது..நாதவேணி கேள்வி கேட்டு துளைத்தார் என்றால் வாணி மறுபுறம் இதில் நந்திதா எதுவும் மகனை கேட்கவில்லை..
அவர்களகடம் தப்பித்து மூச்சு வாங்க அவள் முன்பு முழங்கால்களில் கை ஊன்றி குனிந்திருந்தான்..
“ அப்பம்மா கேள்வி கேட்டு இருபாங்களே நான் சொன்னது சரி தானே மச்சான்? ” என்று கேட்டாள்..
அவன் ‘ஆமாம் ’ என்று தலையசைத்தான்..
ஃபைல் பையை திறந்து குட்டி தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்ட, வாங்கி குடித்தான்..
“ ஷப்பா காலையிலேயே என்ன வெயில்? ”
“ நீங்க வரச் சொன்னீங்க வந்துட்டேன்..இங்க வெயில் கதையெல்லாம் செல்லுபடியாகாது மச்சான்..அங்க பா
ருங்க பஸ்ஸும் வந்துட்டு ” என்றாள்..
“ சரி ஏறு ” அவள் ஏறியதும் அவன் ஏறிக் கொண்டு சீட்டில் அமர்ந்து இருவருக்குமான டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டான்..