ருத்ரனும் உமையாளும் ஒரு ரெஸ்டோரனுக்கு சென்று அமர்ந்தனர். ருத்ரன் அவன் உட்கொள்ள போகும் உணவை ஆர்டர் செய்து காத்திருந்தான். உமையாள் ஒரு காபி மட்டுமே ஆர்டர் செய்தாள்.
ருத்ரன் "நீயும் சாப்பிடலாமே" என கூறினான்.
அதற்கு உமையாள் "வீட்டில் மகிழ் காத்திருப்பாள். நான் எப்போதும் அவளுடன் தான் சாப்பிடுவேன்.” என கூறினாள்.
ருத்ரனும் அதன் பிறகு அவளை உணவு உன்ன கூறவில்லை. பின் அவன் வேலை சம்மந்தமாக பேச ஆரம்பிக்க,
"ருத்ரன் உணவு உண்ட பின் பேசலாம். உணவு உட்கொள்ளும் போது வேலை விஷயம் பேச கூடாது." என கூறினாள். அவன் மென் புன்னகையுடன் சம்மதமாக தலை ஆட்டினான்.
அவன் ஆர்டர் குடுத்த உணவு வந்தவுடன் அவன் அதனை உன்ன ஆரம்பித்து விட்டான். அவன் மனதிலோ 'இவளிடம் எப்படி அந்த பேச்சை ஆரம்பிப்பது.' என யோசனை ஓடிக்கொண்டிருந்தது.
அதற்கு தீர்வு கொடுப்பது போல் உமையாளே அந்த பேச்சை ஆரம்பித்தாள். "ருத்ரன் நான் அன்று அம்மாவுடன் கோவிலுக்கு சென்றேன். அவர்கள் உங்களை பற்றி கவலை பட்டார்கள்.
உங்கள் அம்மாவின் காலத்திற்கு பின் உங்களுக்கென்று உறவு இல்லாமல் போயிடும் என மிகவும் வறுத்த படுகிறார்கள். ஏன் நீங்கள் உங்களுக்கென்று ஒரு துணியை தீர்த்தெடுக்க கூடாது? மறுமணம் செய்துகொள்ளலாமே." என கூறினாள்.
ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்குள் ஒத்து வராத காரணத்தினால் பார்வதி அம்மா கண்டிப்பாக அவளிடம் கேட்டதை பற்றி ருத்ரனிடம் கூறி இருக்க மாட்டார்கள்.
என்னதான் அவர்கள் மேல் சிறு வருத்தம் இருந்தாலும் ஏனோ தெரியவில்லை அவர்கள் மேல் பாசமும் மரியாதையும் நிறையவே இருக்கிறது. அவர்கள் அன்று வறுத்த பட்டு பேசியதற்காக தான் இன்று ருத்ரனிடம் பார்வதி அம்மாவுக்காக உமையாள் பேசினாள்.
ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவளே அவனுக்கு வலைக்குள் விழுந்ததை. அவன் ஏதும் சொல்லாமல் உணவு உட்கொள்வதில் மும்முரமாக இருந்தான்.
அவனிடம் இருந்து பதில் வராமல் போனதில் உமையாள் முகம் கறுத்தது. அதன் பின் அவளும் அமைதியாகி விட்டாள். ருத்ரன் உணவு உண்டு முடித்து விட்டு அவள் நோக்கி "என்ன கேட்டாய்?" என கேட்டான்.
"உங்களுக்கும் நான் என்ன கேட்டேன் என விளங்கியிருக்கும் ருத்ரன்." என சற்று மிடுக்காகவே பதிலளித்தாள் உமையாள்.
"ஹ்ம்ம் மறுமணம்... தப்பில்லை ஆனால் நான் இப்போது ஒழுக்கமான ருத்ரன் இல்லை. எனக்கு நிறைய பெண்கள் சகவாசம் இருக்கிறது. என் வாழ்க்கை சிறுது காலம் முன் மது, மாது என்றுதான் இருந்தேன்.
அப்படி உள்ள என்னை யார் திருமணம் இல்லை.. இல்லை.. மறுமணம் செய்ய ஒப்புக்கொள்வார்?" என கேட்டான் ருத்ரன்.
அதற்கு உமையாள் "நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஆனால் நீங்கள் பேசியதில் நான் ஒன்று கவனிசிச்சேன் சில காலத்திற்கு முன் என்று கூறினீர்கள் அப்படி என்றால் இப்போது அந்த பழக்கம் இல்லைதானே? அப்பறம் என்ன?
கண்டிப்பாக இந்த முறை சரியான பெண்ணை பார்த்து பார்வதி அம்மா உங்களுக்கு மனம் முடித்து வைப்பார்." என கூறினாள் உமையாள்.
அவன் மெலிதாக சிரித்து, எனக்கும் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது. ஆனால் அவள் சம்மதிப்பாளா என்று தெரியவில்லை." என்றான்.
அடடே பெண்ணை பார்த்து வைத்துக்கொண்டுதான் சார் இவ்வளவு பேசினீர்களா? சரி சொல்லுங்கள் யார் அந்த பெண்?" என்று வினவினாள்.
உடனே அவன் "நீதான்" என்று பட்டென்று போட்டு உடைத்து விட்டான்.
சட்டென்று முகம் மாற கோபமாக "என்ன அம்மாவும் மகனும் விளையாடுகிறீர்களா? என்னை பார்த்தால் எப்படி உள்ளது? என அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று சீறினாள் உமையாள்.
சுற்றும் முற்றும் பார்த்த ருத்ரன் "உமையாள் ப்ளீஸ் உட்கார். எதுவாக இருந்தாலும் அமைதியாக பேசலாம். இப்படி கத்தாதே." என அவனும் சற்று காட்டமாக கூறினான்.
இன்னும் என்ன பேச வேண்டும். பேசியவரைக்கும் போதும் என்னை பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் எல்லாம் என்னை திருமணம் செய்ய எதிர்பாக்குறீர்கள்? நான் ஒரு குழந்தைக்கு தாய். என்னை போய் கல்யாணம் கட்டுவதற்கு கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லை.
என்னாள் இனி யாரையும் திருமணம் செய்ய இயலாது. செய்யவும் மாட்டேன். திரும்பவும் ஏமாற நான் தயாரில்லை." என கூறியவள் அங்கிருந்து புறப்பட இரண்டடி வைத்தாள்,
உடனே ருத்ரன் "எல்லோரும் அருணை போல் இருக்க மாட்டார்கள் உமையாள்" என கூறினான்.
அருணின் பெயரை கேட்டவுடன் அவள் கால்கள் நின்று விட்டன. திரும்பி ருத்ரனை பார்த்தாள். அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து மீண்டும் அமர்ந்து "அருணை பற்றி என்ன தெரியும்?" என கேட்டாள்.
"உன்னை பற்றி எல்லாமே தெரியும்." என பதில் தந்தான் ருத்ரன்.
"ஓ... அப்போது என்னை பற்றி தெரியும். அப்படித்தானே?" என்று கேட்டாள். மேலும் தொடர்ந்து
“என்னை பற்றி யாரை கேட்டு தெரிந்து கொண்டீர்கள்? அடுத்தவர் வாழ்க்கையை அறிவது அசிங்கமாக தெரியவில்லை." என கேட்டாள்.
அதற்கு ருத்ரன் இடது புருவத்தை மேலே தூக்கி "அசிங்கமா! அப்போது நீ என் கதையை தெரிந்துகொண்ட பொது அசிங்கப்படவில்லையா?" என கேட்டான்.
வாய் அடைத்து போய்ட்டாள். இதற்கு என்ன சொல்வது. அவளும் தானே பார்வதி அவன் கதையை கூறும்போது கேட்டாள். ஒரு நிமிடம் அமைதிக்கு பின்
"தப்புதான் உங்கள் கதையை உங்கள் அனுமதி இல்லாமல் கேட்டது தப்புதான். அதற்காக என்னை மன்னியுங்கள். இனி இந்த பேச்சு வேண்டாம். என கூறினாள்.
அதற்கு ருத்ரனோ "வாய்ப்பில்லை.. நீதான் என் மனைவி என்று முடிவெடுத்து விட்டேன். அதில் நான் பின் வாங்க மாட்டேன். சீக்கிரமே உன் மனதை மாற்றிகொள்." என கூறி இருக்கையிலிருந்து எழுந்தான்.
அவளுக்கோ அவன் சொன்னது இடியை இறக்கிய உணர்வு ஏனோ அவனிடம் ஒரு அளவுக்கு மேல் கத்த முடியவில்லை. அவனை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டே இருந்தாள்.
புறப்பட திரும்பியவன் மீண்டும் அவள் புறம் திரும்பி "மறந்து விட்டேன் இன்னும் இரு விஷயங்கள், ஒன்று இது நம் தனிப்பட்ட வாழ்க்கை. நம்முடைய தொழிலில் இதை கொண்டு வராதே.
இன்னொன்று இதை விட முக்கியம். முன்னமே ஒருவரிடம் சொன்னதுதான் இப்போது உன்னிடம் அதாவது உரிமை பட்டவளிடம் கூறுகிறேன். மகிழினி யார் மூலம் இவ்வுலகிற்கு வந்தாள் என்பது எனக்கு முக்கிய மில்லை.
ஆனால் அவளுக்கு அப்பா என்றால் அது நான் மட்டும் தான். என்னுடைய இளவரசி அவள்.” என இதனை அவன் கூறும்போது உமையாள் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மேலும் தொடர்த்தவன் “அம்மா சொல்லித்தான் குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியும். அதனால் சீக்கிரமே அவளிடம் அவள் அப்பா நான்தான் என்று கூறிவிடு இல்லை என்றால் நானே கூறி விடுவேன்." என கூறி அங்கிருந்து சென்று விட்டான்.
அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை. விருப்பம் இல்லை என்று கூறுகிறாள் அதனை காதில் வாங்காமல் அவன் பாட்டிற்கு பேசிவிட்டு செல்கிறான். சிறிது நேரம் அப்படியே அமர்ந்தவள் தன்னை சுதாரித்து அங்கிருந்து அவளும் புறப்பட்டு சென்றாள்.
இதே சமயம் கயல் வீட்டிற்கு சென்றிருந்தான் நீலன். அவனுக்கு அமோக வரவேற்பை குடுத்தார் கயலின் தாய் கமலம். அவனும் இறுகிய முகத்துடன் சென்று வரவேற்பறை சோபாவில் அமர்ந்தான்.
கமலம் கயலை அழைத்து "கயல் டாக்டர் மாப்பிள்ளை வந்திருக்கிறார் பார் அவருக்கு குடிக்க எதாவது கொண்டுவா." என கூறியவர் உடனே "நான் ஒரு கூறு கெட்டவள் உங்களிடம் என்ன வேண்டும் என்று கேட்காமல் நானே சொல்கிறேன் பாருங்கள். என்ன மாப்பிள்ளை குடிக்கிறீர்கள்?" என முகம் முழுக்க பல்லாக அவனிடம் வினவினாள்.
அதற்கு அவனோ " இல்லை எனக்கு ஒன்றும் வேண்டாம். கொஞ்சம் கயலை கூப்பிடுங்கள். உங்கள் இருவரிடமும் நான் சற்று பேச வேண்டும்." என கூறினான். கமலத்திற்கு ஏனோ வயற்றில் புளியை கரைத்தது.
இருந்தும் அந்த பயத்தை வெளி காட்டாமல் "ஒரு நிமிடம் மாப்பிள்ளை என்று சொன்னவர்.
கயல்...
கயல்..." என பெருங்குரல் எடுத்து அவளை கூப்பிட்டார்.
கயலும் முன் அறைக்கு வந்தாள். வா… இப்படி உட்கார்." என அவன் எதிர்புறம் இருந்த சோபாவை காண்பித்து கயலிடம் கூறினான். அவளும் அவன் சொல் படி அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
"ஆண்ட்டி" என பேச ஆரம்பித்தவனை இடைமறைத்து "அட என்ன மாப்பிள்ளை நீங்கள் யாரையோ கூப்பிடுவது போல் ஆண்ட்டி என்று கூப்பிடுகிறீர்கள். உரிமையாய் அத்தை என்றே கூப்பிடுங்கள்." என கூறினார்.
அவனோ ஒரு கணம் கயலை பார்த்து பின் சரி என தலை அசைத்து "அத்தை நான் இப்போது உங்களிடம் பேசுவது உங்களுக்கு மன வேதனையை குடுக்கலாம், ஆனால் என்னை மன்னியுங்கள்.
எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். கயல் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. சொல்ல போனால் அவன் கூறியதற்கு மெலிதாய் சிரித்தாள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கமலம் அம்மாவின் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்தது.
"என்ன மாப்பிள்ளை இப்படி கூறுகிறீர்கள்? அன்று உங்கள் அக்கா எனக்கு தொடர்பு கொண்டு நிச்சய நாளும் கல்யாண நாளும் கூறினார்கள். நீங்கள் என்ன வென்றால் இப்போது கல்யாணம் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்." என பதறிப்போய் கேட்டார்.
அதற்கு நீலனோ பொறுமையாக "அத்தை இப்போ கல்யாணம் வேண்டாம் என்று கூறினேனே தவிர கல்யாணமே வேண்டாம் என்று கூறவில்லை. நானும் கயலும் காதலித்து கொண்டிருக்கிறோம்.
அக்கா உங்களிடம் வந்து கேட்கவில்லை என்றாலும் உங்களிடம் அவளை கட்டித்தர சொல்லி நானே கேட்டிருப்பேன். என்ன இருந்தாலும் கயல்தான் என் மனைவி.
ஆனால் எனக்கென்று சில கடமைகள் இருக்கிறது அதை நிறைவேற்றாமல் சுயநலமாக என் வாழ்க்கையை மட்டும் என்னால் பார்க்க முடியாது. என் அக்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.
அந்த விஷயம் முடியாமல் என்னால் என் வாழ்க்கையை பற்றி சிந்திக்க முடியாது." என கூறினான்.
அதற்கு கமலமோ "உங்கள் அக்காவின் வீட்டுக்காரர்தான் இறந்து விட்டாரே. திரும்பவும் கல்யாணமா?" என அதிர்ச்சியாக கேட்டார். பதில் கூற வாயெடுத்த நீலனை முந்திக்கொண்டு கயலோ
"என்ன அம்மா பேச்சு இது. ஏன் கணவர் இறந்தால் அவர்கள் அத்துடன் முடங்கி விட வேண்டுமா? மீண்டும் ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு தகுதி இல்லையா? இப்படி உங்களை போல் ஒரு சிலர் பேசுபவர்களால்தான். இன்னுமே பெண்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார்கள்.
அதுவும் பெண்ணுக்கு பெண் தான் எதிரி." என்று எகிறிக்கொண்டு வந்தாள் கயல். நீலன் முகத்தில் தன்னவளை எண்ணி சிறு பூரிப்பு அது அவன் முகத்திலும் பிரதிபலித்தது.
கமலம் அம்மாவும் உடனே "அடியேய் என்னடி இப்படி பேசுறாய். நான் என்னை நினைத்து கொண்டு அப்படி கேட்டேன். உன் அப்பா சென்றவுடன் நான் இல்லையா?" அத்தோடு மறுமணம் செய்து கொண்டால் ஊர் என்ன பேசும்?" என முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கூறினார். “
“சரிதான் அம்மா, அப்பா இறந்தவுடன் நீங்கள் வேறு ஒரு வாழ்க்கையை தேட விலைதான் ஆனால் அப்பா இறந்தபோது போது எனக்கு பதினேழு வயது. உங்களுக்கு நாற்பத்தைந்து வயது.
பாதி வாழ்க்கையை வாழ்த்து விடீர்கள் ஆனால் அண்ணி அப்படியா? அவர் இறக்கும் போது மகிழ் நிறைமாத பிள்ளை. கல்யாணம் ஆகி இரண்டு வருடம் கூட முழுமையாக வில்லை. வாழவே இல்லை அம்மா அண்ணி.
அப்படி இருக்கும் போது அவர்கள் ஏன் புது வாழ்க்கை ஒன்றை வாழக்கூடாது? சரி அதை எல்லாம் விடுங்கள் நாளைக்கே எனக்கு திருமணம் நடக்கிறது. என் கணவர் இதேபோல் இறந்து விட்டார்.” என அவள் கூறி முடிப்பதற்குள் கமலம் நீலனை பார்த்துக்கொண்டே
“கயல்” என சற்று அழுத்தமாக அவளை அதட்டி அடக்க முயன்றார். நீலனுக்கு அவள் உதிர்த்த வார்த்தைகள் எந்த பாதிப்பும் தரவில்லை மாறாக பூரித்துப்போய்தான் அவளை பார்த்து கொண்டிருந்தான். கயலோ கமலத்தின் அதட்டலுக்கு சற்றும் பயப்படாது
அம்மா! நெருப்பென்று சொன்னால் வாய் சுட்டிடாது. அப்படி எனக்கு ஒரு நிலைமை வந்தால் எனக்கு மறுமண செய்து வைக்க முயற்சிப்பீர்கள் தானே? இல்லை இதே போல் என் வாழ்க்கை தனிமையிலே போகட்டும் என விட்டு விடுவீர்களா? என ஆதங்கமாக கேட்டாள்.
எதோ சொல்ல வந்த கமலத்திடம் அவள் கரங்களை கொண்டு நிறுத்தும் படி சைகை செய்து, நீலனிடம் திரும்பி "எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்னால் காத்திருக்க முடியும்.
எனக்கு அண்ணி வாழ்க்கை, அதைவிட மகிழ் வாழ்க்கை ரொம்ப முக்கியம் . நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்து முடித்ததற்கு பின் நாம் இருவரும் கல்யாணம் கட்டிக்கலாம்." என கூறி முடித்தாள்.
மேலும் " நான் உங்களை கேள்வி கேட்டால் மட்டும் தான் நீங்கள் பதில் கூற வேண்டும். மற்ற படி வேறு யார் என்ன" என்று பேச்சை நிறுத்தி ஒருகணம் கமலத்தை பார்த்து
“அது என் அம்மவாக இருந்தாலும் சரி அதற்கு நீங்கள் பதில் கூற தேவை இல்லை. என்று கூறினாள்."வந்த வேலை முடிந்தது என்றால் புறப்படுங்கள் என நீலனை பார்த்து கூறினாள்.
அவனும் எழுந்து அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை தட்டி விட்டு “சென்று வருகிறேன்” என்று கூறி புறப்பட தயாரானான். திரும்பி ரெண்டு எட்டு எடுத்து வைத்தவன்.
கயல் நின்றிருக்கும் புறம் திரும்பி "ஐ லவ் யூ சோ மச்" என்று கூறி அப்படியே கமலம் அம்மாவையும் பார்த்து ஒரு சிறு தலை அசைப்புடன் வெளியேரினான்.
நீலன் சென்ற வுடன் கமலமோ "என்னடி இப்படி பேசிவிட்டாய்." என்றார் இயலாமையுடன். அதற்கு கயலோ
"அம்மா எனக்கு சரி என்று பட்டதை தான் நான் பேசினேன். அப்படி உனக்கு என்னை சீக்கிரம் கட்டி தர வேண்டும் என்றாள், அண்ணி திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன்கிறார்கள். நீங்களே எப்படியாவது அவர்களை சம்மதிக்க வையுங்கள்." என கூறி அங்கிருந்து அகன்று அவள் அறைக்கு சென்றாள்.
கமலம் தான் என்ன செய்வதென்று தெரியாமல் ஓய்ந்து பொய் சோபாவில் அமர்ந்தார். அங்கிருந்து புறப்பட்ட நீலனுக்கோ தன்னவளின் புரிந்துணர்வை நினைத்து சந்தோஷமாக இருந்தது.
அக்காவின் வாழ்வை சீரமைக்கும் முனைப்போடு நீலனும், தன்னவன் அக்கா மேல் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து பூரித்து போய் கயலும், தன் விருப்பத்தை கூறியாயிற்று எப்படியாவது உமையாளை சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியோடு ருத்ரனும், இன்னொரு மண வாழ்க்கையில் செல்ல விருப்பம் இல்லாமல் உமையாளும் என நான்கு பெரும் ஒவ்வொரு மனநிலைக்கு ஏற்றார் போல் அன்றைய இரவை கடந்தனர்.