சுயம் நோக்கு
பெண்ணவளே !
நீ நீயாகவே இரு….
யார் என்ன சொன்னாலும்…
யார் என்ன செய்தாலும்…
உன் சுயத்தை இழக்காதே!
கனமான கணங்கள்
கடக்க முடியாமல்
கடந்தாலும்
கடவுள் நினைத்தால்
கணங்களும் நொடியில்
தவிடு பொடியாகும்…..
சுட்ட பானையே திடமாகும்..
உன்னை பிறர் சுட்ட சொல்லே
புடம் போட்ட பொன் போல் உன்னையாக்கும்….
எண்ணங்களை வண்ணங்களாக மாற்ற குட்டைப் போல் ஓரிடத்தில்
தேங்காமல் …
நதிபோல் ஓடிக்கொண்டிரு….
உன்னால் முடியாது என்று உலகமே சொன்னாலும்..
ஒரு நிமிடம் பெற்றவரின்
கண்ணீரைப் பார்…
அது செய்யும் மாயம்…
உன்னிலிருந்து விலகும் பயம்….
வெற்றி பெற வைக்கும்
உனது சுயம்….
நன்றி