Krishna Dhanu Rathi
Moderator
ஆறறிவு கொண்ட மனிதா!
நீ யாரென்று நீ அறிவாயா?
உன்னால் என்ன முடியுமென்பதை அறிவாயா?
உன் உடலின் சக்தி,
உன் மனதின் வலிமை
உன் மூளையின் திறன் பற்றி முழுமையாய் இதுவரை அறிந்ததில்லையெனில்
இப்போதாவது அதை உன்னுள் நீயே தேடு! உன்னை நீயே படி! உன்னை நீயே உற்றுக் கவனி! உன்னை நீயே திருத்து! உன்னை நீயே செதுக்கு! உன்னை நீயே முழுமையாக உணர்! இறுதியில் உன் சுயத்தை நீயே நோக்கும் நாளதில் உன் மனதிலிருந்த அவநம்பிக்கையும் எதிர்மறை எண்ணங்களும் காணாமல் போய் புதிய நம்பிக்கை பிறக்கும்!
புதிய பாதை தெரியும்! அதில் நீ நடக்கும் போது முயற்சி என்ற வார்த்தை உன் மூச்சாகும்! முடியும் என்ற சொல் உன் திறனாகும்!
அதன் பிறகு நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உனக்கு வெற்றி படிக்கட்டாகும்

நன்றி..
கிருஷ்ண தாணு ரதி

Last edited: