கமலம் அம்மா என்ன செய்வது என தெரியாமல் தவித்து போனார்கள். உமையாளுக்காக தன் மகள் வாழ்க்கை தள்ளிபோவதா? என்ன செய்யலாம் என பலவாறு யோசித்தவர் கடைசியில் உமையாளிடம் அவளின் தம்பியின் முடிவை பற்றி கூறலாம் என தீர்மானித்தார்.
நீலன் செய்து வைத்திருக்கும் குலறுபடிகள் தெரியாமல் மறுநாள் எப்போதும் போல எழுந்து தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு, மகிழுக்கு தேவையானவற்றையும் செய்து முடித்திருந்தாள் உமையாள்.
அன்றைய நாளுக்கான பணியை ஆரம்பிக்க தயாரானாள். அப்போது அவளுக்கு கமலம் அம்மா தொடர்பு கொண்டார். நேற்று அவர்கள் வீட்டிற்கு நீலன் வந்தது முதல் புறப்பட்டு செல்லும் வரை என்ன நடந்ததோ ஒன்று விடாமல் அனைத்தையும் கூறி முடித்தார்.
உமையாளுக்கு மேலும் தலை அதிகமாக வலிப்பது போல் இருந்தது. கமலத்திடம் "அத்தை நான் அவனுடம் பேசுகிறேன். நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் என கூறினாள்.
சில சமாதான வார்த்தைகளை பேசி அவரை சமாதானம் செய்து விட்டு தொடர்பை துண்டித்தாள். நீலனுக்கு அழைத்து பேசுவதற்கு முன் கயலிடம் பேசலாம் என காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து கயல் வீட்டின் அழைப்பு மணியை அடித்தாள். கதவை திறத்தவுடன் கயலை அழுத்தமாக பார்த்தாள் உமையாள். உமையாள் பார்வையிலே கயலுக்கு தெரிந்து விட்டது தனது தாய் அனைத்தையும் போட்டு கொடுத்து விட்டார் என்று.
சிரித்து கொண்டே வீட்டினுள் வந்தாள் கயல். "போதும் பல்லுக்கு வலிக்க போகிறது.” என அவள் பல் தெரிய சிரிப்பதை பார்த்து கடுப்புடன் கூறினாள் உமையாள்.
அதற்கு கயலே “அண்ணி அவர் முடிவு தான் எனக்கும். உங்களுக்கு எப்படி எங்களுடைய வாழ்க்கை முக்கியமோ அதே போல் தான் எங்களுக்கும் உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால் என்னிடம் பேசி எந்த பயனுமில்லை.” என உறுதியாக கூறி விட்டாள்.
உமையாள் ஏதும் சொல்லாமல் அமைதியாக ஆனால் கயலை முறைத்து கொண்டே அவள் அலுவல் அறைக்குள் சென்றாள். அறைக்குள் நுழைந்த உமையாளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பலத்த யோசனைகளை நடுவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அப்போது மகிழ் அங்கு வந்தாள். வந்தவள், "அம்மா கேன் ஐ பிலே வித் மை பிரென்." என கேட்டாள். உமையாளும் அதற்கு சம்மதித்திருந்தாள். மகிழ் மிகுந்த மகிச்சியுடனே பக்கத்து வீட்டு பெண்ணுடன் விளையாட சென்றிருந்தாள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வரவேற்பறையில் நீலனின் குரல் கேட்டது. உடனே அவனிடம் பேச சென்றாள். நீலனோ சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காலை உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான்.
அவன் எதிரில் வந்து அமர்ந்து “நீல என்ன செய்து வைத்திருக்கிறாய். உன்னை யார் போய் கயல் அம்மாவிடம் பேச சொன்னது. உண்டு முடித்து விட்டு அவருக்கு அழைத்து விரைவில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று கூறி விடு.” என கூறி அங்கிருந்து எழ முற்பட்டாள்.
அப்போது நீலனோ சத்தமாக “கயல்….. கயல்…..” என அழைத்தான். கயலும் அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றாள். அவனையே பார்த்து கொண்டிருந்தாள் உமையாள்.
கயலை பார்த்து நீலன் “ நேற்று நான் பேசியதில் உனக்கு ஏதாவது பிரச்சனை உண்டா“ என்று கேட்டான். அதற்கு கயல் நானும் நேற்றே என் பதிலை உங்களிடம் கூறி விட்டேன் அல்லவா” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
நீலன் உடனே உமையாளை நோக்கி “நான் கட்டிக்கா போவது அவளை, அவளுக்கே என் முடிவில் சம்மதம். அப்படி இருக்கையில் வேறு யாருக்கு என்ன பிரச்சனை.” என்று கேட்டான்.
அவனை முறைத்து விட்டு அவ்விடம் விட்டு அகன்று சென்றாள் உமையாள். அவள் செல்வதை கேலியாக பார்த்து கொண்டிருந்தான் நீலன். அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது திறன் பேசியை கையில் எடுத்தவன் "ருத்ரன் அழைக்கிறார்" என கூறினான்.
ருத்ரனின் பெயரை கேட்டு ஒரு வினாடி நின்றவள் பின் சட்டென அவள் அலுவல் அறைக்கு சென்று விட்டாள். எப்படியும் ருத்ரன் தான் பேசியதை நீலனிடம் சொல்ல மாட்டான் என்றே உமையாள் நினைத்தாள்.
ஆனால் இங்கோ ருத்ரன் நேற்று உமையாளை பார்த்தது முதல் அவன் புறப்பட்டது வரை ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தான். நீலனும் நேற்று கயல் வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியிருந்தான்.
அதற்கு ருத்ரனோ " என்ன செய்து வைத்திருக்கிறாய்? நான் தான் சொன்னேன் தானே அவள்தான் என் மனைவி என்று. அப்படி இருந்து உனக்கு ஏன் இந்த வேலை என சற்று கட்டமாகவே கேட்டான்.
நீலனோ " பார்வதி அம்மா எனக்கு கால் செய்து கூறினார்கள் அதான் அவளின் வாழ்வை நினைத்து, இப்படி செய்தால் தான் கொஞ்சமாவது மனம் இறங்கி வருவாள் என்று அப்படி செய்து விட்டேன்." என கூறினான்.
சரி.... இதற்கு மேல் இப்படி எதையும் செய்து வைக்காதே." என கூறினான் ருத்ரன்.
நீலனும் "சரி மாமா" என கூறினான்.
ருத்ரன் உடனே சிரித்து விட்டு "சரி மச்சான்" என கூறி அழைப்பை துடித்தான்.
நீலனின் முகத்திலும் ருத்ரனின் சிரிப்பு பிரதிபலித்தது. என்னதான் ருத்ரன் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னாலும் நீலனுக்கு மனது கேட்க வில்லை.
உமையாளை தேடி அவள் அறைக்கு சென்றான். "அக்கா, ருத்ரன் அழைத்தார்." என கூறினான்.
அவள் அதற்கு "ஹ்ம்ம்" என்று மட்டும் கூறியிருந்தாள்.
அவளுக்கோ 'சொல்லிட்டாரோ' என்று மனதில் நினைத்தாள். அவள் மனம் நினைத்ததற்கு ஏற்ப நீலனும் "அவர் கூறியதை பற்றி யோசித்தய்யா?" என கேட்டான்.
அவன் கேட்டவுடன் உமையாள் கண்களை ஒருகணம் மூடி திறந்து, நீலனை பார்த்து “இதில் யோசிக்க என்ன இருக்கு? என் முடிவு மாற போவதில்லை. நோ மீன்ஸ் நோ.” என்று அழுத்தமாக கூறினாள்.
நீலனோ "உனக்கு என்ன பைத்தியமா" என அவன் பேசும் போதே அதனை இடை மறைத்து "நீல போதும் இதை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை. அவர் கேட்டால் உடனே ஆமாம் என சொல்லி அவர் பின்னே செல்ல வேண்டுமா?
இதனை உன்னிடம் வேறு வந்து ஒப்பித்திருக்கிறார். என்னிடம் பேசினால் என்னோடு நிறுத்த வேண்டும்." என சலித்துக்கொண்டு கூறினாள் உமையாள்.
நீலன் அவளை அழுத்தமாக பார்த்து கொண்டே கூறினான் "அக்கா உன்னிடம் பேசுவதற்கு முன் அவர் என்னிடம் தான் முதலில் பேசினார்." என கூறினான். அவள் அதிர்ந்து அவனை பார்க்க, நீலன் தொடர்து "என்னிடம் முதலில் உன் பழைய வாழ்க்கை, அதில் நீ பட்ட துன்பம், மகிழ் பற்றி நிறைய பேசினார்.
அவர் மகிழுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல அப்பாவாக இருப்பார்." என அவன் கூறுகையில் அவனை பார்த்து முறைத்து "என் மகளுக்கு யாரும் அப்பா எனும் உறவை பிச்சை போடா வேண்டாம்." என கூறினாள்.
அதை கேட்ட நீலனுக்கு ஆத்திரம் எல்லை கடந்து வர "அக்கா" என கத்தியே விட்டான்.
“உனக்குத்தான் வாய் இருக்கிறது என்றும் நீ பேசுவதுதான் சரி என்றும் கோபத்தில் பேசாதே. அக்கா நீ ஒரு சுயநலவாதி. உன் நிலையை நினைத்து மட்டுமே பேசுகிறாயே என்றைக்காவது மகிழை பற்றி யோசித்து இருக்கிறாயா?” என கேட்டான்.
உமையாளுக்கோ அவன் சொன்ன குற்றச்சாட்டில் கண்கள் கலங்கிப் போயின. மேலும் தொடர்த்தவன் “இப்போது அவளை உன் கை வளைவுக்குள் வைத்திருக்கிறாய், அதனால் அவளுக்கு ஒன்றும் தெரிய வில்லை.
ஆனால் அடுத்த வருடம் அவள் பள்ளி செல்ல வேண்டும். அங்கு பல குழந்தைகள் தாய் தந்தையோடுதான் வருவார்கள். அவர்களை பார்த்து 'தனக்கு தாய் மட்டும் தான் இருக்கிறார்களா தந்தை இல்லையா?' என சிந்திப்பாள்.
அப்போது நேரே வந்து உன்னிடம் “யார் அம்மா என் அப்பா?” என கேட்டாள் என்ன சொல்வாய்?
கேட்டாள் என்ன கேட்டாள் அவள்தான் ஏற்கனவே நான் "அபியம் நானும்" படம் பார்க்கும் போது என்னிடம் கேட்டாள் தானே நினைவிருக்கிறதா? “மகிழுக்கு அப்பா இல்லையா மாமா?” என்று கேட்டாள்.
நீ கூட அந்த கேள்வியில் என்ன சொல்வதென்று தெரியாமல் உன் அறைக்குள் சென்று அழுதாயே...
ஒரு திரை படம் பார்த்து கேட்டவள் நாளை பிற குழந்தைகளின் தந்தைமார்களை பார்த்து கேட்க மாட்டாள் என என்ன நிச்சயம். அப்படி கேட்டாள் நீ என்ன பதில் கூறுவாய்?
அவ்வளவு ஏன்? நாளையே எனக்கும் கல்யாணம் நடந்து குழந்தை பிறக்கும். என் பிள்ளை என்னை அப்பா என்றுதான் அழைக்கும். அப்போது நம் மகிழ் மனம் என்ன பாடுபடும் என என்றைக்காவது சிந்தித்திருக்கிறாயா?
எல்லாம் சரிதான் அக்கா. நீ பட்ட துன்பத்திற்கு இன்னொரு ஆடவனை நம்புவது என்பது கடினம் தான். கணவர் வேண்டாம் என்னும் உன் முடிவு கூட ஒரு வகையில் சரிதான் என்றே வைத்து கொள்ளலாம்.
ஆனால் மகிழ் என்ன செய்தாள். அவள் ஏன் அப்பா இல்லாமல் வாழ வேண்டும்? ஒன்று புரிந்துகொள் அக்கா, அப்போது நம்முடைய சூழ்நிலை நீ அருணை திருமணம் செய்தாய்.
அவருக்கு உண்மையாகவும் இருந்தாய். ஆனால் அவர்… என ஒரு பெருமூச்சை விட்டு "ஹ்ம்ம் அதை பற்றி பேச நான் தயாரில்லை. வாழும் வாழ்க்கைக்கு நேர்மை இல்லாமல் போய்ட்டார்.
அவர் அத்தியாயம் முடிந்து விட்டது. அதையே நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை கெடுத்து உன் வாழ்க்கைக்கு நீ துரோகம் செய்கிறாய் என்றால்,
அதில் மகிழையும் சேர்த்து இழுத்து அவளுக்கு கிடைக்க வேண்டிய தந்தை பாசத்தையும் நீ புறக்கணிக்கிறாய். இது உனக்கு நியாயமாக படுகிறதா சொல்? என ஆணித்தரமாக கேட்டான்.
அவள் கேள்வியில் சற்றே ஆடித்தான் போனாள் உமையாள் .
அவளுக்கு தந்தையாக இருக்க ருத்ரனுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. அவர் கோவக்காரர்தான் ஆனால் நல்லவர் அது உனக்கும் தெரியும். உன் பிடிவாதத்தினாலும் முன் கோபத்தினாலும். உனக்கும் மகிழுக்கும் கிடைக்க போகும் நல்ல வாழ்க்கையை இழக்காதே." என கூறி அங்கிருந்து வெளியேறினான்.
அறையினுள் இருந்து வெளியே வந்தவன் கயலை பார்த்து " நான் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டு வருகிறேன். அக்கா கேட்டாள் சொல்லிவிடு." என கூறி வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்ற பின் கையாளும் அவள் வேலையை பார்க்க சென்று விட்டாள். உமையாள் அவள் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். மனது குழப்பங்களை சூழ்ந்து இருந்தது.
அப்போது அங்கு மகிழ் அவள் தோழியோடு வந்தாள். வந்தவள் "அம்மா இதோ பார் ப்ரிங்கு படம் வரைத்திருக்கிறாள். அழகாய் இருக்கிறது தானே?" என அவளிடம் கேட்டுக்கொண்டே அந்த வரைபடத்தை காண்பித்தாள்.
அதில் ஒரு குச்சி குழந்தை கையை வலது புறம் ஒரு ஆண் குச்சி மனுஷனாகவும் இடது புறம் பெண் குச்சி மனுசியாகவும் பிடித்து கொண்டு நின்று கொண்டிருப்பதை போல் இருந்தது.
அந்த வரைபடத்தை பார்த்து சட்டென உமையாள் கண்களில் இரு துளி கண்ணீர் உறுடோடியது. அதனை மகிழ் பார்க்காமல் மறைத்து குரலை செருமி "நன்றாக இருக்கிறது குட்டி. போ நீ போய் விளையாடு என கூறி அவளை அனுப்பி வைத்து விட்டு தலையை இருக்கைகளில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
இப்படியே இரு வாரங்கள் கடந்திருக்கும். உமையாள் என்ன முடிவெடுப்பது என புரியாமல் இருந்தாள். நீலன் மகிழை பற்றி பேசியது அவளை அசைத்துதான் பார்த்தது.
நீலனும் கூட அதன் பிறகு அவளிடம் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை. கயலும் அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள். இந்த இரு வாரங்களில் ருத்ரன் கூட உமையாளுக்கு தொடர்பு கொள்ள வில்லை. எல்லோரும் அமைதியாய் அவர் அவர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர். இதில் அமைதி இல்லாமல் இருந்தது என்னவோ கயலின் அம்மாதான்.
கயல் வீட்டிலோ கயல் அம்மா 'இன்னும் இந்த உமையாள் அவள் தம்பியிடம் பேச வில்லையா?அக்காவும் தம்பியும் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்?
என் மகளை பார்த்தாள் அவர்களுக்கு விளையாட்டாய் உள்ளதா? இன்றே இதற்கு ஒரு முடிவெடுக்கிறேன்.'என நினைத்து உமையாள் வீட்டிற்கு புறப்பட்டார்.
செல்வதற்கு முன் கயலிடம் "கயல் என் மருந்து அட்டவணை காணாமல் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல் மருந்தும் தீர்த்து விட்டது. மருத்துவமனைக்கு சென்று என்ன மருந்து மாத்திரைகள் எனக்கு குடுத்தார்கள் என குறிப்பை எடுத்து விட்டு, அப்படியே அந்த மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு வந்து விடு." என கூறினார்.
அவளும் அன்னையின் மருந்து விஷயம் என்பதால் மறுப்பேது கூறாமல் அவர் இட்ட வேலையை செய்ய போனாள்.
அவள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் உமையாள் வீட்டு அழைப்பு மணி ஓசை எழுப்பியது. உமையாள் சென்று கதவை திறந்தாள்,
வாசலில் கமலம் அம்மா நின்று கொண்டிருந்தார்.
இனி கமலம் அம்மாவால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ!
ஹ்ம்ம்…. கலகம் பிறக்கட்டுமே...
கலகம் பிறந்தால் தானே அதற்கான வழி தன்னாலே கிடைக்கும்.