எல்லையற்ற காதலே
எல்லாம் கடந்தது , முடிந்தது என எனக்கு நானே போட்டுக் கொண்ட வட்டம் அனைத்தும் , சடசடவென்று பெய்த மழையில் கலைந்து கரைந்து ஓடும் கோலமாய் அழிந்து ஓட
நானோ அதன் முன்னே பரிதவித்து நிற்கிறேன் ..
பார்த்துபார்த்து போட்ட வெள்ளைகோலமது மழையில் கரைவதை கண்கலங்கி பார்த்து நிற்க,அவனோ வண்ண நிறதூள்களை என்முன் நீட்டுகிறான்.
புரியா பாவையவள் அவன் விழி நோக்க , விண்ணரசன் பூமியின் மேல் தன் எல்லையற்ற காதலை பொழிவதும் அதில் நிலமகள் குளிர்வதும் ஒரு காலசுழற்ச்சியே , நடப்பதை கடந்தே தீரவேண்டும் ...உன் வெள்ளை கோலமதை தன் காதலால் வான்மகன் கலைத்துவிட அதில் வண்ண கோலமிட பாவையவள் சம்மதம் வேண்டி காத்திருக்கிறேன் நான் , என் எல்லையற்ற காதலுடன் என்பதாய் அவன் விழியசைவு!!
ஊரார் சில நடப்பது நன்றென்று சொல்ல , சிலர் கருமம் என தலையிலடிக்க , அது எதையும் உணரா உணரவிழையா திண்ணத்துடன் தன் பேரன்பை கையில் ஏந்தி என் முன் முட்டிகால்களில் தவமிருக்கிறான் அவன் .
அவனின் கைகள் ஏந்திய பேரன்பை கரம்பற்ற பாவை என்னின் மனம் துடிக்க, கண்களோ அவனின் எல்லையற்ற காதலை கண்டு கலங்குகிறது.
ஆம் எல்லையற்ற காதல் தான் , யாரென்றே அறியா இந்நாட்டின் மக்களுக்காய் தன் உயிரை அர்ப்பணிக்க துணியும் காவல்காரன் அவன் ..
விருப்பமில்லா என்மேல் திணிக்கபட்ட திருமண சடங்கை பொம்மையாய் ஏற்று இன்று அவனையும் நெருப்புக்கு இறையாய் கொடுத்துவிட்ட கைம்பெண் நான்..
எல்லை காக்கும் காவல்வீரனின் எல்லையற்ற காதலை ஏற்க்கும் துணிவின்றி கலையிழந்து நிற்க்கும் என்னை கைப்பிடித்தே தீர்வேன் என தவமிருக்கிறான் அந்த ஜாலக்காரன்.
மழையது நின்றுவிட்ட பின்பும் அமைதியாய் நிற்க்கும் என்னிடம் கண்சிமிட்டி தானே வண்ணகோலம் வரைய அவன் தரையமர ,
அதை தடுக்கும் வேகத்துடன் குனிந்த என் தலையுடன் தன் தலை மோத ..
நான் வாய்திறந்து மனமுரைக்கும் முன்பே
என் வெள்ளைஆடையது அவன் கரம் கொண்ட வண்ணதூள்களை தன் மேனியில் சேர்த்துக்கொண்டு அவனின் எல்லையற்ற காதலுக்கு சம்மதமளித்துவிட்டது.
-யமுனா