எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நேசப் பொருண்மை அழியுமோ

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

"விஸ் யூ ஆல் சக்ஸஸ் சர்"

"பெஸ்ட் ஆப் லக் சர்"

"வாழ்த்துகள் அமுதன் ஆழியன்"

அறை முழுவதும் பூங்கொத்துகளாக இரைந்து கிடந்தன. அனைவரது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டவன் தனது நாற்காலியில் அமரந்தான்.அப்போது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதரன்

"யு டி சேர்வ் இட் டா காங்குராஜிலேஷன்" என்றபடி தன் கையில் இருந்த மலர்கொத்தை தர

"ஸ்ரீதர் நீயுமாடா " என அவன் கையில் இருந்த செண்டை வாங்கி மேசையில் ஓரமாக வைத்தவன் "ஸ்ரீ உட்காருடா ."
எனவும் அமர்ந்தவன்.

"டேய் வைஷ்ணவி உன்ன இன்னிக்கு வீட்டு சாப்பிட வரச்சொன்னா டா நீ வரலை நானும் உள்ளவரப்படாதுன்னு சொல்லியிருக்காடா"

அவனும் வேறு எங்கும் பார்ட்டி அது இது என போவதில்லை. மீறி சூழ்நிலை அப்படி அமைந்தாலும் தலையைக் காட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவான். ஸ்ரீதரன் மட்டும்தான் அவனது பால்ய சினேகிதன்,
"சரி டா வரேன் "
என்று அவனின் ஒப்புதலை வாங்கியபின்பே வெளியே வந்தான் ஸ்ரீதரன்.
"இருடா நானும் வரேன்"
என்று எழுந்து கொண்டான்.ஸ்ரீதரனும் அவனுடன் இணைந்து ஏதோ பேசிக் கொண்டு உணவுக் கூடத்தை தாண்டிச் சென்றனர் .உணவருந்தி கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி

"ஏய் அங்க பாரு அமுதன் ஆழியன் சார் கூட போறது நம்ம ஹெச்ஆர் ஸ்ரீ தரன் தான..."

என்று ஒருவள் கேட்க. அனைவரும் ஒருசேர கை வேலையை நிறுத்தி அவர்களைப் பார்த்தனர். அவர்கள் இவர்களை தாண்டிச் சென்ற பிறகு அவர்களை பற்றி அரைக்கத் துவங்கினர்.

"ஏன் நித்யா நம்ம ஸ்ரீ யும் அமுதனும் ஒரே வயசாடி?"

என்றாள் ஸ்ரீதரனின் லேசாக விழுந்த தொப்பை தனது கண்ணாடி மற்றும் அவனது பதினைந்து வயது மற்றும் பதிமூன்று வயது மகள்களை சென்ற முறை கெட்டு கெதரில் பார்த்ததை நினைவுக்கு கொண்டுவந்த லதா கேட்க நித்யா

"அதென்ன ஸ்ரீ அமுதன் நீயாடி பெயர் வைச்ச மரியாதை கொடுக்கனும்னு தெரியுதா?"

"இதென்னடி வம்பா போச்சு . அவங்கதான சொன்னாங்க"

"என்ன சொன்னாங்க போடா வாடா பொட்ட கண்ணான்னு கூப்பிடுன்னா…ப்ரண்டு மாதிரின்னு சொல்லியிருக்காங்க ப்ரண்டுன்னு சொல்லல புரியதா"

"சரி அத வுடு நித்தி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?"

"என்னடி கேட்ட என்றாள் புளியோதரையில் கைவைத்த படி "

அவளது டிபன் பாக்ஸை பிடிங்கிய லதா

." உனக்கு புளியோதரைய பார்த்தா பூலோகமே மறந்துருமே"

எனவும் டிபன் பாக்ஸில் இருந்து கண்ணை அப்போதும் எடுக்காமல் புளியோதரைக்கு கைநீட்ட லதா இன்னும் தள்ளி வைத்தாள். நித்யாவுக்கு கேள்விக்கு பதில் கூறாமல் அது கிடைக்காது என்பது புரிய

"சொல்லித் தொலை என்ன தெரியனும்?"

"அமுதா சார பத்தி சொல்லு"

"அவரோட முழு பெயர் அமுதன் ஆழியன் வயசு ப்ரட்டி பார்ட்டி ப்ளஸ் , ஒரே ஒரு தடவ கல்யணம் ஆகி
டிவெர்ஸ் ஆகிருச்சி. வீட்ல சாரும் அவங்க அம்மாவும் தான் … ஆனா அப்புறம் எந்த பொண்ணையும் பார்க்கிறது இல்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத எலிஜிபில் பேச்சிலர் . நம்ம எச்ஆரும் அவரும் ஒன்னா படிச்சவங்க. இதுக்கு மேல எதுவும் தேவைன்னா நீ சார்கிட்ட தான் கேட்கனும். "

"இதான் எல்லாருக்கும் தெரியுமே என்ன காரணத்துக்கு டிவெர்ஸ் ஆச்சி "

"அது சரியா தெரியல ஆனா ஒரே வருஷத்தில் டிவெர்ஸ் ஆகி அந்த பொண்ணு இப்ப பாரின்ல எங்கயோ இருக்குறதா கேள்வி. "

"என்ன காரணமா இருக்கும் சர் இருக்கற அழகுக்கும் பிட்னஸ்க்கும் அவ்வளவு பொண்ணுங்களும் ஆசைதான படனும் . எந்த கெட்ட பழக்கமும் கிடையாது வேற ஏன் டிவெர்ஸ் பண்ணா"

"யாரு கண்டா பட் அமுதன் சார பத்தி யாருக்கும் இங்க அவ்வளவா தெரியாது. அவரோட பர்சனல் பத்தி தெரிஞ்சது ஸ்ரீ சர் மட்டும் தான் ஆனா அவரும் எந்த சூழ்நிலையிலும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்."

"ஆமா அவர்கிட்ட கேட்கறதுக்கு சுவத்தில முட்டிக்கலாம். இப்ப எப்படி தெரிஞ்சிக்கறது ". என புலம்பியவாறு சிந்திக்க

"ஆங்...வீட்டுக்கு போய் நேர்ல கேட்டுட்டு வா, கை காயுது எந்திரிடி.இந்த கவலைய அப்புறம் படலாம் முத வேலைய முடிச்சிட்டு நேரங்காலத்தில வீட்டுக்கு போய் உன் புள்ளைய பார்க்கிற வழியப் பாரு"
என்று எழுந்து கொண்ட நித்யா சுற்றிலும் ஒரு பார்வை பார்க்க,

அது லதாவுக்கான வார்த்தைகள் மட்டும் அல்ல என்னவாக இருக்கும் என்று அறிய இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தங்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொண்டவர்கள் தலையை கவிழ்ந்து கொண்டனர்.லதா தனது உணவுப்பாத்திரத்தை மூடியவள்

"ஆமா நித்து வீட்டுக்கு ஹோம் வொர்க் செய்ய வைக்கறதுக்குள்ள சின்ன யுத்தகாண்டமே நடக்குது. என்னால முடியல … நீ அந்த ஸ்கூல்ல அப்ளிகேஷன நாளைக்கு வரும்போது வாங்கிட்டு வாடி அங்க ட்யூஷனும் சேர்த்து பார்த்துக்கறாங்க தான"

என்றவாறு எழுந்து கொண்டாள் . பேசிக்கொண்டே கைகளைகழுவிட்டு பணியிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள்
எதிரில் வந்த ஆழியன்.

" நித்யா, நான் யுகே கிளையன்ட் மீட்டிங்காக போறேன் அந்த டீடெய்ல்ஸ் எனக்கு மெயில் பண்ணுங்க "

"ஒகே சர் வித் இன் ப்யூ மினிட்ஸ்ல "
என்றவள் தனது கேபினை நோக்கி ஓடினாள்.

அந்த உயர்தர ஐந்து நட்சத்திர உணவகத்தில் தனது வாடிக்கையாளர்களுடனான சந்திப்பையும் உணவையும் முடித்தவன். கடிகாரத்தை பார்க்க நேரமாகிவிட்டது புரிய நேரமாகிவிட்டதை உணர்ந்தவன் ஸ்ரீதரனுக்கு அழைத்தான்.

"ஸ்ரீ இங்க இப்பதான் மீட்டிங் முடிஞ்சது. இங்க இருந்து உங்க வீட்டுக்கு வர லேட் நைட் ஆயிடுமேடா"

பதிலுக்கு அவன் ஏதோ கூற

" சரிடா அவ கிட்ட நான் பேசிக்கறேன். சன்டே வரேன்டா ப்ரீயா இருக்கும்."

என்றவன் அலைபேசியை வைத்துவிட்டு எழுந்தான். அவன் முன் அவள் வந்து நின்றாள்.


அமெரிக்காவில்

தனது அறையில் இருந்த வந்த மகரவிழி. நேரே அடுப்படிக்கு சென்று தேனீர் தயாரித்தாள். கூடவே இரண்டு பிரட் துண்டுகளையும் டோஸ்ட் செய்தவள் . தேனீர், ப்ரட் இரண்டையும் மேசை மீது வைத்தவள்.

தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கதவை தட்டியவள் "நிலன்" என்றாள்.

"யா மாம் " என்றவன் வெளியே வந்தான். பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகி இருந்தவன் சீருடையோடு வந்து உணவு மேசையில் அமர்ந்தான். நிலன் தனது பதின் பருவத்தில் இருந்தான். அதிகமாக தாயை ஒத்திருந்தவனின் கண்கள் மட்டும் அவனை ஒத்திருந்தன. எப்போதும் அவனை நினைவு படுத்துவது போல் இப்போதும் படுத்தியது. அதை ஒதுக்கி தன் நினைவுக்கு வந்தவள்

"நிலா மாம்க்கு இன்னிக்கு கிறிஸ்மஸ் கலெக்ஷன்ஸ் வெர்க் இருக்கு நீ இருந்துகறியா ? இல்ல ஆபிஸ் வந்து வெயிட் பண்றியா?"

"எனக்கும் ஸ்கூல்ல கொஞ்சம் ப்ரொஜட் வெர்க் இருக்கு."

"அப்ப உன் ப்ரண்ட் நரேன் வீட்டுக்கு போயிடு. உன்ன அங்க வந்து பிக்கப் பண்ணிக்கறேன்."

"நோ மாம் அங்க போனா, எனக்கு பிடிக்கல ஓவர் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். "

"என்ன ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் பண்ணாங்க எதாவது பேசிட்டாங்களா.?"

" அதிகமா மொபைல் யூஸ் பண்ண கூடாது. அது இதுன்னு "

" நல்லதுக்கு தானடா சொல்லறாங்க.படிக்கும்போது கவனம் சிதறக் கூடாதுன்னு"

"அவங்க யாரு என்ன கண்ட்ரோல் பண்ண? ஐ ஹேவ் மை ஒன் ப்ரீடம். அது மட்டுமில்லாம உங்களையும் டாட்யும் பத்தி தப்பா பேசறாங்க."

என்றவன் விழிகள் நடுவில் தான் நிற்க ஒரு புறம் மேத்யூவும் மறுபுறம் மகர விழியும் இருக்கும் அந்த புகைப்படத்தில் நிலைத்தது.

"எங்கள பத்தி என்னடா தப்பா பேச போறாங்க. அவங்க வேற எதையாவது சொல்லி இருப்பாங்க உனக்கு தப்பா புரிஞ்சிருக்கும் " என்றாள்

ஆனாலும் தனிமனித உரிமையை பற்றி பேச, உள்ளுக்குள் உதறத் தொடங்கியது என்றால் அவன் விழிகள் படத்தில் நிலைத்திருந்ததில் அடுத்து என்னவருமோ என பயம் வந்திருந்தது அவளக்கு, பதின் பருவ குமரக்குழந்தை அவனை கையாளுவது எளிதாக இல்லை.

ஏதேனும் கூறும் முன் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது. மூச்சை உள்ளிழித்து நிலைப்படுத்தியவள்.

"என்ன ஆச்சு நிலன் என்றாள்?"

போன சன்டே அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்ல. நானும் அவனும் பேசிட்டு இருக்கும் போது
நரேன் அம்மா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம அவங்க பாட்டு உள்ள வராங்க. என்ன பேசிக்கறீங்க சொல்லுங்கங்கறாங்க.

"அவன் அவங்க அம்மா கேட்ட உடனே ப்ரொஜெட் பத்தி சொன்னான்."

"இதுல என்ன தப்பு இருக்கு "
அவன் பொய் சொன்னான் மாம் அது வரைக்கும் அவன் அவங்க வீட்டுக்கு தெரியாம லிசி கூட டேட் போனத பத்தி சொல்லிட்டு இருந்தான். "

அவளுக்கு திக் என்று இருந்தது. எவ்வளவு தான் இதைப்பற்றிய தெளிவும் புரிதலும் நிலனுக்கு இருக்கிறது. என்பதை அவனிடம் வெளிப்படையாக மேத்யூ பேசி புரிய வைத்து இருந்தாலும் ஒரு தாய் எனும் முறையில் இதைக் கேட்டு திக்கென்று இருந்தது .தனது மகன் தவறிவிடக் கூடாதே என்று பதட்டம் வந்து சேர்ந்தது.

பட் நான் சொன்னேன் இப்ப சும்மா சுத்தி வரலாம் ஆனா எல்லைய தாண்டி போனா நம்ம ப்யூச்சர் ஸ்பாயில் ஆகும் ன்னு எங்கப்பா சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லைமா இப்படி பேரண்ட்ஸ்ட மறைச்சி செய்ய னற எந்த விஷயமும் பிரச்சினையாத்தான் வரும்ன்னு நீங்க சொன்னத சொன்னேன். "

என்றவனை அனைத்து முத்தம் வைத்தாள். இப்போது குழந்தையாகி விட்டிருந்தான்.

"அன்னிக்கு நரேன் எனக்கு அவங்க அம்மா அப்பா கல்யான ஆல்பம் காட்டினான்."

" அதில் அவன் இல்லை நான் நீ ஏன்டா இல்லைன்னு கேட்டேன் "

" அப்ப அவங்க அம்மா அதெல்லாம் முறைப்படி கல்யாணம் பண்ணி புள்ளய பெத்தா தெரியும் இப்படி பெத்தா எது முறைன்னு எப்படி தெரியும்னு கேட்டாங்க? "

"ஏன் ஆண்டி இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன் .அதுக்குள்ள அவங்க அப்பா வந்து அவ ஏதோ உளறிட்டா நிலன் நீ தப்பா நினைச்சிக்காதன்னு சொல்லி எங்க இரண்டுபேரையும் வெளியபோக சொல்லிட்டாங்க"

"நான் தப்பா பொறந்த பையனா மா?"

இந்த வார்தைகள் தந்த வலியில் முகம் சிவந்து விட அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

" நோ நிலா டாட் ஆல்ரெடி டொல்ட் யூ . அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்தியாவில கல்யானம் ஆகிருச்சி சிம்பிளா. அதுக்கு அப்புறம் இங்க அமெரிக்கா கிராண்டா வெட்டிங் பண்ணிக்கிட்டோம்ன்னு சொல்லி இருக்கேன் தான...அப்புறம் எப்படி நீ முறையில்லாத பையன் ஆவ?"

என தனது மகன் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் மேத்யூ ஹைடன்.அவனது தலையை கோதியவனிடம்
"எஸ் டாட் யூவார்…"
என ஆமோதிதத்தவன்" தென் மாம் ஏன் அழறாங்க"
"அவங்க அவங்க அப்பாவ நினைச்சி அழறாங்க அப்படிதான ஹனி "
எனவும்
"ம் ம் "
என தலையை ஆட்டியவளுக்கு டிஷ்யூவை எடுத்து முகம் துடைத்து விட்டான்.
"ஓ நோ "என்ற நிலன்
என்னாச்சு என்பது போல் பார்க்க
"என் ஹேர் ஸ்டைல் கலைச்சிட்டீங்க திரும்ப கோம்ப் பண்ணிக்கனும் "
என அறைக்குள் ஓடினான்.

"ஈஸி ஹனி அழாத"

என்றவன் அவளை அனைத்து கொண்டான்.
 
அத்தியாயம் 2

இந்தியாவில்

அமுதன் அவளை கடந்து வெளியேற முற்பட அவளோ அவன் பின்னும் முன்னும் குறுக்கே வந்தபடி
"ப்ளீஸ் அமுதன் நான் …சொல்லறத கேளுங்க, ஒரு இரண்டு நிமிஷம்"
என அவனைத் கண்களில் நீருடன் அவனைத் தொடர அதனை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கி விட

" டோன்ட் பாலோ மீ மிஸ்ஸ். அமிர்தசாகரன் ஐ ஹேவ் டு கோ"

என அடக்கப்பட்ட சினத்துடன் கீழ் குரலில் அவளை எச்சரித்தான். அதில் ஒரு நொடி நின்றுவிட்டவள்
வேறு வழியின்றி மீண்டும் அவன் விரைவுக்கு நடந்தவள்

"மகரவிழிய பத்தி சொல்லனும்"என்றாள்.

உயர்வேக வாகனம் செல்லும் வேகத்தில் சட்டென்று திருப்பி நிறுத்தப்பட்டது போல் திரும்பி நின்றான்.. நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது மற்றோர் வாகனம் மோதுவது போல்.அவன் நின்று விட்டதை அறியாது பின்னே வந்தவள் அவன் மீது மோதி நின்றாள்.

"என்ன சொல்லனும் சொல்லு"

"உட்காந்து பேசலாம் அமுதன் " எனவும் வேறு வழியின்றிஆழியன் அருகில் இருந்த லவுன்சில் அமர்ந்தான்.

"ஸாரி ஆழியன் என்னோட சூழ்நிலை"

மன்னிப்பு கேட்கும்படியான தவறை அவள் செய்யவில்லை. இருந்தாலும் வேறு வார்த்தைகள் அவளிடம் இல்லையே … தத்தி தத்தி தான் அவள் கேட்டாள் அதற்குள்ளாகவே அவன்

"ஜஸ்ட் ஸ்டாப் இட் வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க இல்ல கிளம்பறேன்?"

என எழுந்து கொள்ள முற்பட அவள் வேறு வழியின்றி தனது கைப்பையில் இருந்து அந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.அதையும் அவளையும் பார்க்க

"இதுல விழிய பத்தி உங்களுக்கு தேவையான ஒரு விஷயம் இருக்கு இதுக்காகத்தான் நான் வந்தது."

அதை வாங்கக் கூட இல்லை நீ யார் எனக்கு தர உன்னிடம் கேட்டேனா என்பதைப் போல் பார்த்தவனிடம்,

"உங்களுக்கே அவளைப் பற்றித் தெரிஞ்சிருக்க வாய்ப்பு அதிகம். இருந்தாலும் , ஆனா நீங்க அவங்கள பத்தி தெரிஞ்சிக்க விரும்ப மாட்டீங்க அதனால. "

"விரும்பமாட்டேன்னு தெரியுதுதில்லையா அப்ப ஏன் சொல்ல ட்ரை பண்றீங்க " என எழுந்து கொண்டான்.

"ப்ளீஸ் மாமா இத மட்டும் வாங்கிக்கோங்க " எனவும் என்ன நினைத்தானோ அந்த உறையை வெடுக்கென பறித்தவன்

" என்ன பொறுத்த வரைக்கும் நீங்க யாரோ தான் எப்பவும் பட் ஒரு சின்ன அட்வைஸ் ஸாகருருக்காவது உண்மையா இருங்க."

பிறகு நக்கலாக

"ஸாரி நீங்க மிஸஸ்.அமுதன் ஆழியனா இருக்கும்போதே அவருக்கு உண்மையாத்தான் இருப்பீங்க நான் தான் தேவையில்லாம சொல்லிட்டேன் குட் பை "

என்றவன் மடமடவென இறங்கி சென்றுவிட அமிர்தா தான் கழிவிரக்கத்தில் அமர்ந்திருந்தாள். அத்தனையும் தன்னால் தானே... தீர்வு இருந்தும் அதனை செயல்படுத்தாத தனது சுய நலம் கோழைத்தனம் இவற்றின் விளைவு அவன் இழப்பு.

அதனை நினைத்து கண்கள் கலங்க அமர்ந்துதிருந்தாள். அவள் அருகில் அமர்ந்த ஸாகரன் அவள் மீது கரம் போட்டு அனைத்துக் கொண்டான்.
"வருத்தப்படாத அம்ரு சரியாகிடும் நம்ம என்ன செய்ய முடியுமோ அத செய்தாச்சி இனி விதிப்படி நடக்கும். "

"மனசு தாங்கலை என்னாலதான "

"நீ இதையே நினைச்சிட்டு இருக்காத நமக்கு ஈவினிங் ப்ளைட் இருக்கு . பிள்ளைங்க தேடறாங்க வா" என அவளது தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான்.

அமுதன் தனது வாகனத்தை அதற்கு உரிய இடத்தில் நிறுத்தியவன் வாகனத்தை விட்டு இறங்கவே இல்லை. அந்த உறையில் இருந்து அந்த புகைப்படத்தை எடுத்தான். அது தற்போதைய நிலனின் புகைப்படம் ஏதோ கடற்கரையில் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் தோளின் மீது கை போட்டபடி எடுக்கப்பட்டிருந்தது. மேத்யூ தன் உயரத்திற்கு இவனுக்கு இணையாக குனிந்து தன் மகனின் கரத்திற்கு தோள் தந்து இருந்தான். நிலனும் தனது கரத்தை அவன் மீது போட்டபடி நின்றிருந்தான்.

அது தான் இருக்க வேண்டிய இடம் அல்லவா எத்தகைய இன்பம் வரம் அத்தனையும் ...அத்தனையும்…
என மேலும் யோசிக்க இயலாமல் கண்களில் கண்ணீர் மல்க.அந்த ஸ்டீயரிங் வீலில் இரு கரங்களையும் வைத்தவன் அதில் தலையை கவிழ்த்து அமர்ந்து கொணடான்.

எந்த தகப்பனுக்கு கிடைக்கும் இப்படி ஓர் பாக்கியம் தான் அறியாத மகனை தாயின் திருமணத்தில் அறிந்து கொள்ளும் பாக்கியம். அந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏதோ வேலையாக போனவன் சற்று நேரம் இருந்ததால் தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க

வெண்ணிற ஆடை முழுவதும் கற்கள் பதிக்கபட்டு மிக அருமையான தங்க இழை கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மேத்யூ ஹைடன் அவனே பார்த்து வடிவமைத்த அந்த கவுன் அதில் மகரவிழியாளைப் பார்த்தான். இங்கே ஆழியன் அமிழ்ந்து போனான்.

அவளை அப்போதே தேவதூதர்கள் தோன்றி இவள் எங்கள் உலகம் சார்ந்தவள் வழிதவறி விட்டாள் என்று அழைத்துக்கொண்டு சென்று விடுவார்களோ எனும் அச்சம் தோன்றியது போலும் மேத்யூவிற்கு. உடனே அவள் கரம் பற்றி அவள் இருப்பை உறுதி செய்து கொள்ள விழைந்தவன் இத்துடன் எத்தனாவது முறையாக மணமகள் அறைக்குள் நுழைகிறான் என்றால் யாருக்கும் கணக்கு தெரியாது.

தேவதை போன்ற தோற்றப் பொலிவு கொண்ட அவளுக்கு அதுபோல மிகையற்ற தலைஅலங்காரம் செய்து முடித்துவிட்டு
"மேடம் செக் திஸ் ஸ்டைல் இஸ்இட் ஓகே ?"
என அதனை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த அவளிடம் கேட்டாள்.
"ம்"என வெறுமே தலையை அசைத்தவளுக்கு உச்சபட்ச பதற்றம் முகம் சிவக்க கைகுட்டையை அழுத்தி பிடித்தவள் கரங்களை மெல்ல பற்றிக் கொண்டான் உள்ளே வந்த அவன் மேத்யூஹைடன். அவன் உள்ளே வரவுமே ஒப்பனையாளர் முதல் அனைவரும் வெளியேறி இருந்தனர். அவளை ஆதூரமாக தழுவிக் கொண்டவன்
"கூல் கூல் காம்டவுன் ஒன்னும் இல்லை மகரா "
என அவளை அமைதி படுத்தியவன்
"மகரா இங்க நிறைய பேர் இல்லை ஒன்லி டென் டூ ட்வன்டி மெம்பர்ஸ் தான் அதுவும் உனக்கு தெரிஞ்சவங்க தான் "
எனவும் இலேசாக அமைதிப்பட்டவளுக்கு தண்ணிர் கொடுத்தவன்
"அங்கில் கூட வந்துருவியா அங்க வரைக்கும் இல்ல நான் கூட்டிட்டு போக வா நீ இப்படி மெல்ட் டவுன் ஆகிடுவியோன்னு தான் ரிஜிஸ்டர் மட்டும் பண்ணிக்கலாம் சொன்னேன் இப்ப பாரு குழந்தை மாறி பயந்துக்கற வேண்டாம்ன்னு நிப்பாட்டிற வா " என்றதும் சில பழைய நினைவுகள் வர
"நோ நோ மேத்யூ ஐ கேன்" திடமாக உரைத்தவள் டிஸ்யூ பேப்பரில் மூக்கை துடைத்து முகத்தை சீர்திருத்திக் கொண்டவள்
" ஹவ் அயம் ?" எனக் கேட்க
"பரட்டி ஹனி "நுதலில் முத்தமிட்டவன்
வெளியே சென்றான்.

அவளது கரம் பிடித்து அழைத்து வந்து தந்தை அவளை மேத்யூவின் கரங்களில் ஒப்படைக்க அவனுடன் கரம் கோர்த்து இணைந்து நடந்தாள்.அவர்கள் திருமணம் நடத்தி வைப்பவர் முன் நிற்க அவர்களது ஐந்துவயது மகன் நிலன்ஹைடன் மோதிரம் இருந்த பேழையை கொண்டு வந்தான்.
அந்தக் தொலைக்காட்சியில் அதனை ஒலிபரப்பிக் ஒடிக்கொண்டிருந்தனர். பிரபல மாடல் மற்றும் நடிகையுமான மகரா புகழ்பெற்ற பேஷன்டிசைனர் மற்றும் ஸீக்மீ எனும் பெயரில் உலகம் முழுவதும் பரந்துள்ள செயின்ஸ் ஆப் ஸ்டோர் எனும் சங்கிலிதொடர் துணிக்கடை மற்றும் தயாரிப்பாளரான மேத்யூ ஹைடனை மணந்து கொண்டார். என அந்த காணெலியை பதிவிட்டார்கள் அந்த ஐந்துவயது இளம் சிறுவன் நடுவில் இருக்க சிரித்தபடி இருபுறமும் மகராவும் மேத்யூவும் நிற்பது போன்ற புகைப்படம் காட்டப்பட்டது.

அதில் நிலனை பார்த்ததுமே புரிந்து விட்டது. ஆழியவனுக்கு அது யார் மகன் என்பது புரிந்துவிட்டது. உடலில் அத்தனை செல்களும் அவனை ஏந்திக் கொள்ள பரபரத்தது. தன் குழந்தையை எப்படி அவள் மறைக்கலாம் ... எனும் ஆத்திரம் கிளர்த்தெழ ஆவேசம் வந்தது அவனைக் கைக்கொள்ள

பிறகு தான் தன்னிலை தான் செய்த காரியம் நினைவு வர நிமிர்ந்து பார்த்தான். தன் குழந்தையை
சொந்தமில்லாமல் செய்த அன்னையை பார்த்தான். இதற்கு என்னை இந்த நிலைக்கு கொண்டு வரத் தானே இவ்வளவு பாடுபட்டீர்கள்? எனக் கேட்டது.

அன்று தன் மகன் பார்வையில் இருந்த கேள்வியின் வீரியம் தாங்காமல் கண்ணீருடன். இறைவனை நாடினார். செய்வதை எல்லாம் செய்துவிட்டு அதன் விளைவுகள் மனதுக்கு இதமில்லை என்றதும் தான் நாம் செய்தது தான் செய்தது தவறு என்றே புரிகிறது. கடத்தப்பட்ட நிஜங்கள் ,காலம் வைத்திருக்கும் சாட்சியம் அறம் கூறும் நீதி அனுபவித்து தானே ஆகவேண்டும்.

இதோ இன்றும் இனி என்று அவன் தந்தையாவது , இதோ மடியில் மார்பில் தாங்கும் காலம் போனது தோழனாக. தாங்கும் பாக்கியமாவது கிடைக்காதா என ஏங்கும் மனதிற்கு என்ன மாற்று உண்டு. கைகேயி தசரதனிடம் கேட்ட வரத்தை சென்பகவல்லி சீதையிடம் கேட்டாளோ விளைவு இதோ தனதுயிரை தன் பொருளை தான் அறியவில்லை . அறிந்தாலும் உரிமை கொண்டாட முடியவில்லை...

நெஞ்சம் அழுத்த தனது வாகனத்தில் இருந்து இறங்கவில்லை. வந்து சேர்ந்து இவ்வளவு நேரம் ஆகியும் அவன் உள்ளே வரவில்லை என்றதும் அவனது அன்னை செண்பகவல்லி வாசலுக்கு வந்தார்.

"அமுதா என்னப்பா என்ன ஆச்சு அப்பவே கார் சத்தம் கேட்டுச்சே உனக்கு காபி போட்டு கூட வைச்சிட்டேன் உன்ன காணும் , இங்க வந்தா காருக்குள்ளே உட்கார்ந்திருக்க," என பேசிக் கொண்டிருக்கையிலேயே அவரின் முகம் பாராமல் இறங்கி வாகனத்தின் கதவை அடைத்த வேகத்தில் வாகனம் ஒருமுறை குலுங்கி நிற்க சென்பகவல்லி அதிர்ந்து தன் வாயை மூடிக்கொண்டார்.

விடுவிடுவென உள்ளே போனவன் தனது கையில் இருந்த அந்த கவரை டீபாயின் மீது வீச அதில் இருந்து நிலன் விழி மேத்யூ இணைந்து இருக்கும் புகைப்படம் விழுந்தது.
 
அத்தியாயம் 3

தனது அறைக்குள் நுழைந்த ஆழியனுக்கு என்ன முயன்றும் கண்களை கட்டுபடுத்த முடியவில்லை.

சிறு நெருப்பில் திகுதிகுவென எரியும் காய்ந்த சருகாக நினைவுகள் அவனை எரிக்க துவங்கியது. வெப்பம் தாளாமல் எரிந்தவன் தானும் சாம்பல் போல் கரைந்து போய்விட மாட்டோமா என தனது குளியல் அறையில் நீர்த்தாரையின் அடியில் நின்றான்.

ஓடும் நீர்போல் நிகழ்காலம் ஓடி தேங்கிய கடந்தகாலத்தில் சேர்ந்தது. தேங்கிய நினைவு நீரின் அழகு தாமரைத் தடாகம் மனதிற்கு இதம் தரும் சில நேரம் அழுகிய மீன் மிதக்கும் உபயோகமற்ற நச்சு பொய்கை சிலநேரம். நினைவு ஏரியில் படகாய் சில ரசனைகளும் உண்டு முழ்கித் தவிக்கும் பல வேதனைகளும் உண்டு.அவனுக்கும் அவன் மகர விழிக்கும் இடையேயான தொடர்பும் அப்படித்தானே...

குளித்த குழந்தையாய் ஓட முயன்ற மனதை பிடித்து நிறுத்தி துவட்டும் தாயாய் தன் மனதையும் தன்னையும் கட்டுக்குள் கொணர்ந்தவன் நீர் தாரையை நிறுத்திவிட்டு தன்னை தூவாலை கொண்டு துடைத்தபடி வெளியே வந்தான். இதுபோல நினைவுத் தாரைகள் நிறுத்திட இயன்றால் நன்றாகத்தான் இருக்கும் என மீண்டும் ஓடிய நினைவின் பிடியை தளர்த்த அவசரமாக உடையை மாற்றிக் கொண்டவன் கீழே இறங்கினான்.

. உணவு மேசையில் அமர்ந்திருந்தார் சென்பகவல்லி. தனது முன்பு உறையில் இருந்து விழுந்த புகைப்படங்களை பார்த்தவருக்கு மகனின் நிலைமை புரிந்தது.

புகைப்படத்தில் இருந்த நிலனை பார்க்க தனது குடும்பத்து வாரிசாக இருந்திருக்க வேண்டியவனை இப்படி மற்றோர்வனுக்கு மகனாக்கி விட்டோமே பேரனுக்கு மட்டும் வருத்தியவர்.


தான் அன்று நிகழ்தியவைகளை நினைவுக்கு கொணர்ந்தார். ஆழியன் மற்றும் மகரவிழி இவர்கள் இருவரும் ஊழ்வினைக் காதல் மட்டும் உறுதியாய் இருக்க திருமணம் இன்றி கணவன் மனைவியாய் சேர்ந்து இருந்தனர்.

செண்பகவல்லிக்கு இந்த வந்து சேர்ந்த செய்தி
உன் மகன் ஒரு பொண்ணு கூட தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டு இருக்கான் அந்த பொண்ணு ஏதோ மாடலிங் ல இருக்காளாம்.

அவரைப் பொறுத்தவரையில் மாடலிங் என்பது பெண்கள் அரைகுறை உடையணிந்து ஆயிரம்பேர் பார்க்க வலம் வருவது. எனவே அந்த துறை சார்ந்த பெண் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாய் இருக்க மாட்டாள் என்பது அவர் வாழ்ந்த சூழல் விளைவித்த எண்ணம்.

இன்றும் கூட மகர விழி தானாக போகவில்லை அதனை என்பதோ அவளது நிலைக்கு தான் காரணம் அது தான் தன் மகனை திருப்பி தாக்குகிறது என்பதையோ உணரவில்லை . அவர் என்ன காதலையோ காதலின் உண்மை தன்மையை அறிய உளவியல் ஆராய்ச்சியாளாராக வா இருக்கிறார். அன்று தவறு என பிரித்து விட்டார் இன்றும் தவறு தான் என்றாலும் தன் மகனுக்காக ஏற்க திருவுள்ளம் கொண்டிருந்தார்.

மனிதன் எனும் சமுதாய விலங்கு தான் அவர்கள் வாழும் சூழ்நிலை பெறும் அனுபவங்கள் இதிலிருந்து தான் ஒரு குணத்தை தனக்கென வகுத்து கொள்கிறது. விலகி சிந்திப்பவர்களை அது மாற்றுதிறனாளியாக மாற்றிவிடும் அன்றி அறிக்கை செய்துவிடும்.

செண்பகவல்லியின் கணவர் ராஜமாணிக்கம் செண்பகவல்லியை முறையாய் மணந்திருந்தாலும் முறைதவறி சில தொடர்புகள் இருக்கத்தான் செய்தன. அவற்றிக்கு சாம, தான பேத தண்டம் என பலமுறைகளை கையாண்டு கணவனை மீட்டவர் இறுதியில் எமனிடம் ஈந்துவிட்டார்.

மகனும் அதுபோல் ஆரம்பித்து விட்டாடோனோ என்று பயம் சூழ மகனின் மீட்க நடவடிக்கைகளை எடுத்தார் விளைவு ?

ஆழியன் ஒரு கடிமணத்தை மறுதலித்து தன் காதல்சகுந்தலையை பிரிந்து அறமணம் செய்தான் மற்றொறுவன் மங்கையை அவன் மனம் இல்லா அது அவன் மானத்தை விலையாக்கி விடைபெற்றுக் கொண்டது.

இதோ இன்றுவரை இறுதிவரை சீதை வனம் புகுந்த பின் இருந்த ராஜா ராமனாக இருந்தான்.தன் மகனின் இந்த வாழ்வு அவளை வேதனை கொள்ள செய்தது. ஆழியன் அவன் தந்தையைப் போல் இல்லை என நிறுவிவிட்டான். நித்தம் தன் மகனை இப்படி கண்டு அவன் மறுவாழ்விற்காய் எத்தனையோ கூறி அத்தனையும் அவனால் நிராகரிக்கப்பட்டது. தன் மகன் தனிமையில் மறுகுவதை வருடங்களாய் கண்ட தாயுள்ளம் இன்று சிதறிய புகைப்படங்களை கண்டதும் பொறுக்காமல்

"இவ எல்லாம் என்ன பொண்ணு நான் போன்னு சொன்ன உடனே போயிடுவாளா ?

போனவ ஒத்தையா தான இருக்கனும் எப்படி இன்னொருத்தன கல்யாணம் பண்ணலாம் .
அப்புறம் என்ன பெரிய காதல் புண்ணாக்கு காதல் ?
எல்லாம் இவனுகள சொல்லனும் அடுத்தவன் பொண்டாட்டி தெரிஞ்ச அப்புறம் என்ன கல்யானம் ?
இந்த இலட்சணத்தில் இவன் பூலோகம் காணாத காதலி காதல் இவன் வேற இந்த உருகு உருகறான் பதினைஞ்சி வருஷமா.நான் பண்ணி வைச்சிதாவது உருப்படியா இருந்திருந்தா? எனக்கு வயசான காலத்தில் நிம்மதி கிடைச்சி இருக்கும்.

இவள அத்துவுட்டதல என்ன தப்பு இவளுக்கு என்ன நல்லா வாழறா எம்புள்ளதான்
வாழ்கைய தொலைச்சிட்டு நிக்கறான். என புலம்பியபடி இருந்தவருக்கு '

தான் செய்ததில் தவறு என்ன என்றுதான் இன்று வரை புரியவில்லை. அவர் புலம்பியதை கேட்டபடி வந்தவன்

"நீங்க உங்களோட தவறான பார்வை , என்மேல உங்களுக்கு இல்லாத நம்பிக்கை . ஒழுங்கா நீங்க விசாரிக்காதது அதுதான் என்ன என்னோட விழிகிட்ட இருந்து பிரிச்சது."

"ஏன் நீங்க நினைக்கல நான் அவள மறந்துட்டு இன்னோருத்தி கூட சந்தோஷமா வாழனும்னு அத அவள பெத்தவங்க நினைக்க மாட்டாங்க.

அவ எனக்கு துரோகம் பண்ணல காதல்னு ஏமாத்தல உங்களால... உங்களால நான்தான் அதை செஞ்சேன் அனுபவிக்கிறேன்.

நீங்க நினைக்கற மாதிரி மாடலிங் ஒன்னும் கேவலம் இல்லை. எல்லா தொழில் போலவும் அதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான்.
உங்களுக்கு தெரிஞ்சது அரைகுறையும் அலையறது மட்டும் தான் அதையும் தாண்டி அதுல எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா அது அவளோட கனவு அதுக்கு அவ எவ்வளவு கஷ்டப்பட்டா தெரியுமா?"

என்றவன் மனம் கனக்க கூறினான். அதில் சற்று பயந்த சென்பகவல்லி
"நான் தான் யாரவேன்னும்னாலும் இல்லை அவளையே கூட கல்யானம் பண்ணிக்கோ சொல்லிட்டேனே. ஆனா நீதான போகல"

செண்பகவல்லியை பார்த்து விரக்தியான சிரிப்பை உதிர்த்தவன்
"எப்படிம்மா போக முடியும் ? அது மாதிரியான துரோகத்தையா நான் செஞ்சிருக்கேன். "

என்றவன் அவரையும் உணவையும் தவிர்த்துவிட்டு மேசையில் கிடந்த அத்தனை புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு தனது அறைக்கு வந்தான்.தனது மேசையின் இழுப்பறையை திறந்தவன் உள்ளே இருந்த அந்
அந்த ஆல்பத்தை திறந்தான்.


அதில் மகரவிழி பல்வேறு கோணங்களில் பிண்ணணிகளில் இருக்கும்படி மிக அழகாக படமாக்கப்பட்டிருந்தது.
மெல்ல வருடியவன் மனமும் அந்த மெல்லியளாளை அவன் கண்ட தினம் நோக்கி போனது.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் அந்த வீட்டினை பார்த்தவனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. வாடகை சற்று அதிகம் இருந்தாலும் அதையே பேசி முடித்தவன் வெளியே வர அவளைப் பார்த்தான். எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தாள் அவள் அவனது மகர விழியாள். ஒரு ஊதா நிற ஜீன்ஸ் வெளிர் நிற டீசர்ட் ஒரு ஷோல்டர் பேக் காதில் இயர் சகிதம் வந்தவள்.இவனை கவனிக்கவே இல்லை . தனது கூந்தலை அள்ளி முடிந்தபடியே அவனைக் கடந்து போனாள்.

அவளது ஐந்தே முக்காலுக்கு சற்று கூடுதல் உயரமும் கவனமாக பராமரிக்கப்பட்ட உடலமைப்பும் காட்டி கொடுத்தது அவள் ஒரு மாடல் என்பதை ஆழியன் அவள் கடந்ததில் நின்றுவிட விழியாளோ மின்தூக்கியை அடைந்து அதனுள் நுழைந்திருந்தாள். கதவுகள் மூடத் தொடங்க அவள் முகம் காணவேண்டும் எனும் ஆவல் மிக ஓடிவந்து இறுதி நொடியில் மின் தூக்கியில் நுழைந்தான்.அதுவரை அலைபேசியில் கவனமாய் தீடீரென்று உள்ளே நுழைந்தவனை நிமர்ந்து பார்த்தாள்.

எந்தவித ஒப்பனையும் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் அவளது திருத்தப்பட்ட புருவங்களும் பளபளக்கும் மேனியும் கூர்நாசி செதுக்கப்பட்ட முகவடிவும் சிறு காந்தள் மலரிதழ்களும் அவனை ஈர்க்க பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் பார்வை அவளுள் ஏதோ செய்தது. அவளது இந்த துறையில் அவள் பலவித பார்வைகளை அதன் தேடல்களை தாண்டிவிட்டாள்.

சில தவறான பார்வைகளை முதல் சுற்றிலேயே கண்டறிந்து அவர்களை தன்னிடம் இருந்து தகுதி நீக்கம் செய்து விடுபவள் அவளது அந்த கூர்ந்து நோக்கும் திறன் அதனால் தான் இந்த இருபத்து மூன்று வயதில் அதிக ஊதியம் பெறும் மாடலாக விழியாள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளாள்.

அவள் இந்த ஆர்வப்பார்வைகள் சகஜம் அதை எதிர்கொண்டு கடந்துவரும் முறையும் அவள் அறிவாள். ஆனால் இவன் பார்வை உடலில் அதிகமாக பதியவில்லை ஏதோ பல நாட்கள் பிரிந்த ஒருவரை கண்டதும் கண்ணும் நெஞ்சும் ஒருசேர பார்த்து இது அவள் தானா என ஆராய்வதுபோல் முதலில்... பிறகு மகிழ்வின் உச்சியில் இப்போது எப்படி இருக்கிறாய் என்பதுபோல் வருடி அவள் விழி வழி எதையோ தேடி உயிருள் நுழைய மகரவிழியாள் அலமலந்து போனாள் .

' இது ஏதேடா வம்பு' என தனது கூலர்ஸை எடுத்து அணிந்து கொண்டவள் திரும்பிக் கொண்டதில் சற்றே நினைவுக்கு வந்தவன் தரைதளத்திற்கான பொத்தானை அழுத்தி விட்டு நின்று கொண்டான். விழிகள் அவள் மேலிருந்து நகரவில்லை ஆயினும் சிரமப்பட்டு பிரித்து வேறு இடத்தில் பதித்தான்.
 
அத்தியாயம் 4

ஆழியனின் ஆழி போன்ற விழிகள் தன்னை உள்ளே மகரமாக இழுத்து செல்ல முனைவதை உணர்ந்து கொண்டவள் தனது கண்ணாடியை அணிந்து கொண்டு அவனுக்கு தனது பின்புறம் தெரியும் படி சுவரில் சாய்ந்து அலைபேசியை எடுத்து பார்வையிட தொடங்கினாள் தன படபடப்பை அவனை திரும்பி பார்க்கச் சொல்லும் மனதை என்ன 'முயன்றும் கட்டி வைக்க முடியாது தவித்தவள் . தானே திரும்பி அவனை போல நின்று கொண்டு ஓரவிழியை அவன் மீது பதித்தாள்.

அவனுக்கு இதுபோன்ற சங்கடங்கள் இல்லை போலும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் மகிழம்பூவாய் அவள் மனம் அவன்தென்றல் பார்வையில் தானே உதிர்ந்து அவன் வசம் சேர்ந்தது.

இவர்களோ அது எப்படி ஒரே பார்வையில் ஒருவர் மீது காதல் வரும் வெறும் கவர்ச்சி என தான் என்று முடிவு செய்து கொண்டவர்கள் சற்று திடமாக எதிரெதிர் புறம் சென்றனர்.

ஆழியன் அங்கு குடிவந்து சில மாதங்கள் ஆகியிருக்க அவன் அவளையோ இல்லை அவள் அவனையோ நெருங்க முயலவில்லை. தங்கள் நிலையைப் பற்றி இருவருமே உணர்ந்து இருந்தனர். நெருங்கினால் தங்களால் பிரிய இயலாது என்பதனை.ஆனாலும் விதி அவர்கள் நினைப்பது போல் இல்லை.

அன்று மின்தூக்கி பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்க நேரமாகிவிடும் என்று உணர்ந்ததால் வேறு வழியின்றி அவசரமாக படிகளை உபயோகித்து இறங்கினான். வீட்டை பூட்டி சாவியை வைக்கும்போது ஏற்கனவே உள்ளே வைத்திருந்த மோட்டார் வாகனத்தின் சாவி கீழே விழுந்திருந்தது.

அதைக் கவனியாமல் கீழே வந்தவன் சாவிக்காக தனது பையை துழாவஅதைக் காணவில்லை என்றதும் வாகனத்தின் அருகில் விழுந்திருக்குமோ எனத் தேடிப் பார்த்தவனுக்கு
வழியில் விழுந்து இருக்குமோ எனத் தோன்ற மீண்டும் மேலே ஒவ்வோரு தளமாக படி வழியே சென்று தேடவேண்டும் என்ற சலிப்பும் அதற்குள் வேலைக்கு நேரமாகிவிடும் என்ற நினைவும் எரிச்சலைத் தர தரையில் ஒங்கி உதைத்தான்.

அப்போது சாவியை அவன் முன் நீட்டிய மகரவிழி " இது உங்களோடது தான வீட்டு வாசல்ல கிடந்தது."

அதைக் கண்டதும் அடுத்த கனம் கொழுத்தி வைத்த புஸ்வானம் போல ஆனந்தம் பொங்க "ஆமா ஆமாங்க என்னோடது தான் ரொம்ப தேங்ஸ், இவ்வளவு நேரம் இதைத்தான் தேடிட்டு
இருந்தேன்."

"வீட்டு வாசல்ல போட்டுட்டு இங்க தேடினா எப்படி சார்?"

"அது அவசரத்தில் கவனிக்காம வந்துட்டேன்."

என்றபடி சாவியை வாங்கிக் கொண்டான். அதற்குள் அவளுக்கு அலைபேசி அழைக்க மறுமுனை என்ன கூறியதோ

" இன்னும் அரைமணிநேரம் ஆகுமா. அப்ப வேண்டாம்"

என்றவள் வாசலை நோக்கி நடந்தாள். ஆழியன் அவளுக்கு ஏதோ தேவை என்பதை ஊகித்தவனாய் தனது தலைக்கவசத்தை அணிந்தவன் வாகனத்தை இயக்க அதற்குள் அவள் முன்வாசலை கடந்து திரும்பி இருந்தாள். அவன் வாயிலை கடப்பதற்குள் மேலும் வாகனங்கள் பள்ளி குழந்தைகள் செல்ல அவன் சற்று தாமதிக்க வேண்டியதாயிற்று.

இப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் விழியாள் நின்று கொண்டிருந்தாள். கடந்து செல்ல மனம் வராமல் அவள் அருகில் தனது வாகனத்தை நிறுத்தினான். அவன் தன் முன் வாகனத்தை நிறுத்தவும் என்ன என்பதுபோல் அவனைப் பார்க்க ஆழியனோ எங்கே அவள் தன்னை தவறாக நினைத்து விட கூடுமோ என அச்சம் கொண்டு

"ஸாரிங்க உங்களுக்கும் ஏதோ அவசரம் போல அப்படியே விட்டுட்டு போக மனசு வரல. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா சொல்லுங்க நான் டிராப் பண்ணிட்டு போறேன்."

என்றான். மகர விழி எதுவும் பேசாமல் வந்து அவன் பின்னால் ஏறிக்கொண்டாள். அவன் வாகனத்தை செலுத்தினானேயன்றி எங்கே எனக் கேட்கவே இல்லை. அவனுக்கு இந்த சாலைகள் முடியாமல் நீளாதா இந்த கனங்களை காலங்கள் நீட்டிக்க கூடாதா என
வீட்டு பாடம் செய்யாத சிறுவன் ஆசிரியர் வரக்கூடாது என வேண்டுவது போல் ஆசை கொண்டிருந்தான்.

எதிரில் வந்த வாகனத்தின் ஒலியில் நினைவுக்கு வந்தவன் சடுதியில் வாகனத்தை திருப்பி வாகனத்தை நிறுத்தியவன் அப்போதுதான் அவளை தன் மீது உணர்ந்தான்.
இவன் வாகனம் ஓட்டிய அழகில் அவள் வெருண்டு இவன் முதுகோடு பினைந்திருந்தாள்.
நிலவொன்று பின்னிருந்து அனைப்பதுபோல் குளிர்ந்து தகித்தது அவன் மேனி அவளின் அந்த ஒளி வௌளத்திற்குள் முழ்கியவனுக்கு வெண் பணி சாரலில் நின்றது போல் மேனி சிலர்த்திருந்தது. அவளை கண்ட கனத்தில் களவு போயிருந்தது அவனது நிலைத்தன்மை.

தினமும் அவளை எப்படியாவது பார்க்கச் சொல்லும் என்ன காரணத்தை கொண்டாவது அவள் வீடு தேடி போகும் கால்களையும் முன்னிரவில் முயற்ச்சித்து அயர்ந்தது பின்னிரவின் அமைதியிலும் ஆட்கள் இல்லா சாலையின் தெருவிளக்கின் ஒளிபோல அவள் வரவை தேடி அதன் நினைவில் இருந்தவன் அருகில் இன்றவள்


"ஆழியன் கவனமா போங்க நானும் ஏறினதுலர்ந்தது இறங்க வேண்டிய இடத்தை சொல்லிட்டே வரேன் நீங்க கவனிக்கவே இல்லை."

என அவள் படபடத்துக் கொண்டிருந்தாள். அவனோ தன்வயமின்றி போவதை உணர்ந்தவன் .

"ஐ திங் ஐம் இன் லவ் வித் யூ "

என்றிருந்தான். அவனது அதிரடியில் அதிர்ந்தவள்

"வாட் " என்றவள் விழிகளில் என்ன இருந்ததோ.

பிறகு அவன் ஏதோ கூறவர கை உயர்த்தி அவனைத் தடுத்தவள்.

" இது சினிமா இல்ல நீங்க சொன்ன உடனே நானும் ஒகே சொல்லி கட்டி புடிச்சி டூயட் பாட. இது நடுரோடு பீக் அவர்ஸ் மேலும் எனக்கு இன்னிக்கு முக்கியமான ஷோ இருக்கு. நாம இதை பத்தி நாளைக்கு ஈவினிங் பேசலாம். நீங்களும் அதுவரைக்கும் யோசிங்க."

என்றவள் ஆட்டோவை நிறுத்த அவளின் கரம்பிடித்து நிறுத்தியவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு

"உங்ககிட்ட சொல்லற வரை தான் தடுமாற்றம். ஆனா இப்ப இதான் தெளிவு கிடைச்சிடுச்சி அந்த மூச்சடைப்பு போயிருச்சி எனக்கு . நாளைக்கு பேசலாம் இப்ப எங்க போகனும் சொல்லுங்க? "

என்றவன் முகத்தில் கவர்ச்சி திரை விலகி தெளிவு இருந்தது. அதை கவனித்தபடி ஏறியவள். ஒரு வெளிநாட்டு விளம்பர பத்திரிக்கை இருக்கும் இடத்தை சொல்ல
சற்று கூட கவனம் சிதறாமல் மிக அழகாக அவன் வாகனத்தை செலுத்துவதை பார்த்துக் கொண்டே வந்தாள்.

மகர விழியும் தன்னிலை இழந்து தடுமாறினாலும் சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டு இருந்தாள். இல்லையெனில் அவளும் அவனைக் கண்ட நாள் முதல் தன்னுள் தனக்கான நேரங்களில் அவன் நுழைவதை தவிர்க்க இயலாமல் தவிப்பதையும் அன்று முதல் அது காதலோ எனும் ஐயப்பாடு இன்று இவன் அவரசத்தில் கவர்ச்சியோ என்று மாற்று உரைக்க சற்றேனும் அவகாசம் தேவைப்பட்டது.
அந்த உறுதி,பக்குவம் பொறுமை இல்லை எனில் இந்த துறையில் சூப்பர் மாடலாக வலம் வர முடியாது.


அவளது மாடலிங் துறையில் பல தரப்பட்ட மனிதர்களை பார்ப்பதாலும் மேலும் அவர்களைப் பற்றிய புரிதலை அவர்கள் உடல்மொழி பேச்சு கண்களின் மூலம் அனுமானிக்க பயிற்றுவிக்கபட்டு பழகியும் இருந்தாள். எந்த விஷயத்தையும் சற்று கூர்ந்து கவனிக்கும் திறனை வளர்த்துக் கொண்டாள்.
இல்லை எனில் இந்த துறையில் அவள் இத்தனை தூரம் சாதிப்பதோ அல்லது வாய்ப்பிற்காக தரம் இறங்கிவிடாமல் எல்லை மீறாமல் தன்னை காத்து இருக்கவோ இயலாது.
அது போன்ற காரணங்களால் சில வாய்ப்புகள் போனாலும் அதை கவனத்தில் கொள்வதில்லை.

மாடலிங் என்பது மகர விழியினது கனவு . சிறுவயதில் இருந்து விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு அந்த பெண்கள் நடைபயலுவதை பார்ப்பவள் தானும் அது போல முயல்வது என்று இருப்பதை பார்த்த அவளது தாய் மஞ்சுளாவும், ரகுநந்தனும் அவளது ஆர்வத்தை புரிந்து கொண்டு அவளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் தர அவரது துணையோடு பத்தொன்பது வயதிலேயே மாடலிங்கில் நுழைந்திருந்தாள்.

மாடலிங்கில் எடிட்டோரியல் , கமர்சியல், ஸ்போர்ட்ஸ், ஸ்விம் சூட், ப்ரோமோ , ப்ரொடெக்டிவ், பாடி பார்ட்ஸ். ப்ரிலான்ஸ் எனப் பல வகை உண்டு.

எடிட்டோரியல் என்பது ஒரு மாடலுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் பெண்களை ஒப்பந்தம் மூலம் புகழ்பெற்ற பத்திரிக்கை மற்றும் விளம்பர நிறுவனங்கள் தங்களுடைய ஷோக்களுக்கு மட்டும் உபயோகத்து கொள்ளும்
ஒரு ஷோவிற்கு இவ்வளவு அதற்கான தொகை
வழங்கப்படும். அதன் புகழ் மிக அதிகம்.
கமர்ஷியல் என்பது நாம் காணும் விளம்பரங்களில் நடிப்பவர்கள். ஸ்போர்ட்ஸ் என்பது விளையாட்டு மற்றும் பிட்னஸ் எனும் உடற்பயிற்சிக் கானது. ஸ்விம் சூட் மற்றும் நியுட் செக்ஸி வகையிலான பெண்களுக்கு மாடலிங். சில பொருட்களின் ப்ரோமோ விளம்பர தூதர். ப்ரொடக்டிவ் என்பது ஆடை தாயரிப்பு நிறுவனங்கள் தங்களது ரெடிமேட் தயாரிப்புகளுக்காக இவர்களின் அளவுகளின் அடிப்படையில் ஆடை நெய்து இவர்களுக்கு அணிவித்து சரிபார்ப்பது பிறகு ப்ரொடெக்க்ஷனுக்கு தருவது வழக்கம் . பாடி பார்ட்ஸ் என்பது உடலின் குறிபிட்ட பாகங்களை மட்டும் அதாவது கண் கை கால் போன்றவற்றை மட்டும் விளம்பரத்தில் மாடலாக உபயோகிப்பது

இதில் மகர விழி கமர்ஷியில் மாடலாக அறிமுகமாகி இன்று சூப்பர் மாடல்.
எப்போதும் உடன் வரும் மஞ்சுளா ஹார்ட் அட்டாக்கில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இறந்தபின் ரகுநந்தன் வேலையினால் வெளியூரில் தங்க வேண்டியதாயிற்று.

இன்று ஒரு பிரபல பேஷன்பத்திரிக்கையின் எடிட்டோரியல் மாடலாக அந்த ஷோவிற்காகத் கிளம்பியவள் வெளியே வரும்போது ஆழியனின் பைக் சாவியை பார்த்தாள். அதை 'அவனிடம் தந்தவள். தனது வாகனத்தை சர்வீஸுக்கு கொடுத்திருந்தாள். கால்டாக்சியோ நேரமாகும் எனக் கூறிவிட என்ன செய்வது என பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள்.ஆழியன் அழைக்கவும் ஏறிக் கொண்டாள்.


"இன்னிக்கு ஈவினிங் ஷோ இருக்கு முடிந்தால் வாங்க" என ஒரு இன்விடேஷனை தந்துவிட்டு
உள்ளே சென்று விட்டாள்.
 
அத்தியாயம் 5

அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி இருந்தது. அழகிகள் நடைபயின்று வரும் அந்த ராம் வாக் தளத்திற்கு மட்டும் பிரத்தியேகமாய் பிரம்மாண்டமாக அரண்மனை போன்ற தோற்றம் தயார் செய்யப்பட்டு இருந்தது. ஜோத்பூர் அரண்மனையை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது அன்றைய மேடை.

ஒருபுறம் அன்று ஆடை வடிவமைப்பாளர்களுக்கான இறுதி போட்டிக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது.ஒரு மாடல் பேஷன் ஷோ போட்டியில் கலந்து கொள்ள முதலில் அவர்கள் நிறுவனத்திற்கு சென்று தங்கள் பெயரை பதிவு செய்தபிறகு அவர்களுக்கு என்று ஒரு எண் வழங்கப்படும் அதைத் தொடர்ந்து அவர்களது உயரம் பிறகு நடை நிமிர்வுடன் நிற்பது முகத்தில் கண்களில் பிரதிபலிக்கும் உணர்வுகள் என பல கட்ட வடிகட்டல்களுக்கு பிறகு சிலர் தேர்வு செய்யப்பட்டு அந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் உடையை அணிந்து வலம் வர முடியும் இது மாடல்களுக்கு என்றால்

பல ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது வடிவமைப்புகளை தயாரிப்பு நிறுவனங்களுக்கு காண்பித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆடை வடிவமைக்கும் பதவியை பெறமுடியும்.
தங்களது திறமையை பயன்படுத்தி புதுவித உடைகளை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரைந்து பிறகு அதற்கு எந்தவிதமான துணிவகைகளை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்து அந்த உடையை தைத்து பிறகு அழகுபடுத்தி தகுந்த மாடல்களுக்கு தங்களது கற்பனையில் உதித்த அந்த கனவு உடைகளை அணிவித்து உலவ விடுவார்கள்.

இதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களோ பத்திரிக்கைகளோ தங்களது நிறுவனத்திற்கு என்று பிரத்தியேக மாடல்களை வைத்துக் கொள்ள முடியும். அல்லது அதற்கென இருக்கும் கோ ஆர்டினேட்டர்கள் ஏஜென்சிகளை அணுகுவர். அந்த வகையில் மகர விழி ஏற்கனவே இந்த சீக்மீ நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யபட்டிருந்தாள்.

மேத்யூஹைடன் உலகளவில் சிறந்த ஆடை வடிவமைப்பளார்களில் ஒருவன். முதலில் ஆடை வடிவமைப்பாளராக தனது வேலையை துவங்கி தான் வடிவமைத்த ஆடைகளுக்கென ஷோரூம் ஆடை வடிவமைப்பு மற்றும் தாயரிப்பு நிறுவனம் என விரிந்தவன். பல பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் பல்வேறு துறையின் பிரபலங்களுக்கு விருப்பம் மற்றும் விழாக்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுக்கவும் செய்வான்.அவனது நிறுவனம் உலகளவில் தனது கிளைகளை விரித்து இருந்தது. இன்றைய நிகழ்சியில் இந்தியாவின் பல முன்னனி நிறுவனங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பளார்களும் கலந்து கொள்ளும் இறுதி போட்டி இதில் வெற்றி பெறுபவர்கள் ஆடை அணிகல புகைப்பட மாடல்கள் உலகளவில் விற்பனையாகும் அந்த பிரபல பத்திரிகையின் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டும்.

இது அவனுக்கு முதல்முறையன்று உலகளாவிய சிறந்த எனவே வழமைபோல் இன்றைய போட்டிக்கான கருத்துருவின் கீழ் தான் வடிவமைத்த ஆடைகளை கணிணியின் உதவியுடன் சரிபார்த்துக் கொண்டிருந்தான் மேத்யூ ஹைடன்.


உள்ளே நுழைந்த மகர விழியாள் இவனைக் கண்டதும் விரிந்த புன்னகையுடன்
"ஹலோ சர்" என்றதில் கவனம் கலைந்து திரும்பியவன்.

"கால் மீ மேத்யூ மகரா"என்றவன். அந்த ஆடையை அவளிடம் கொடுத்து "வியர் இட் மகரா அப்பதான் எதாவது சேன்ஞ்சஸ் தேவையான்னு பார்க்க முடியும் என்றவனிடம் அந்த ஆடையை வாங்கிக் கொண்டவள் உள்ளறைக்கு சென்று அதை மாற்றிக்கொண்டு வந்து நின்றாள்.

அந்த ஆடையில்
அவளைப் பார்த்தவன் மூச்செடுக்க மறந்து போய் நின்றான் . அவன் பல்வேறு ராஜபரம்பரை மணமக்களின் ஆடையை தனது கருவாய் கொண்டிருந்தான். அவளுக்கு ராஜபுதன பாணி சிவப்பு நிற பட்டுதுணியில் ஆங்காங்கே தங்க இழைகளும் கற்களும் கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. அந்த உடையில் தங்க சிலை என நின்றவளை தன்னை மறந்து ஆழந்து பார்த்தபடி நின்றான். அவன் பார்ப்பதை அறிந்தவளுக்கு அது ஏனோ ஆழியனின் பார்வையை வார்த்தையை நினைவுபடுத்த இதழ்கள் தானாக விரிய கன்னம் சிவப்பேறியது. அதுவே ஒரு சோபையை தர , இன்னும் எனக்கு ஒப்பனை எதற்கு என்ற எண்ணம் பார்ப்பவருக்கு தோன்றும் வண்ணம் அணிகள் அலங்காரம் இன்றியே மகாராணியின் தோரணையில் நின்றாள்.

"வாவ் ப்ரட்டி மகரா " என்பன போன்ற வார்த்தைகளை கூறிவிடத்தான் முயன்றான். எங்கே? அவனது மனம் தான் காற்றில் பறக்கும் எருக்கு செடியின் விதை போல மகரவிழியாளை கண்ட நொடியே வெடித்து பறக்கத் துவங்கியிருந்ததே... விழியாளோ அதை அறியாமல்...
அழுத்தியும் பிடிக்காமல் மெல்ல பிடித்து கைகளில் ஏந்தி தரையிறங்க விடாமல் மெல்ல மெல்ல ஊதி மேலே பறக்க வைத்த படியே விளையாடும் குழந்தைபோல் அவள் பால் சாயத் துவங்கிய மனதை இன்னும் இன்னும் ஈர்த்தபடி இருக்கிறாள்.

மேத்யூவின் மனதோ தன்னை சிரமப்பட்டு கட்டி வைத்திருப்பவனின் கட்டுகளை உடைத்தெறியச் சொன்னது.
அவனது பார்வையை ஏதோ போல் உணர்ந்த மகரவிழியோ அதை தன்மீதிருந்து மாற்றும் வண்ணம்.

"மேத்யூ எப்படி இருக்கு சேன்ச் பண்ணிற வா .."

என்றதில் சுயம் பெற்றவன்.

"ஹ.. ஹான் ஓகே மகரா மேக்கப் முடிச்சிட்டு ட்ரெஸ் போட்டுக்கலாம் "

என்றவன் தன்னை மீட்டுக் கொண்டு மற்றவர்களை கவனிக்க சென்றான். 'சீக்கிரம் தன் காதலை கூறிவிட வேண்டும். ' என நினைத்துக் கொண்டான். அவளுக்காகவே இங்கு வந்தவன்.

ஒப்பனையில் இருந்த மகரவிழி நினைவு முழுவதும் ஆழியனே.
முன்னிரவில் துவங்கியது அணிவகுப்பு பிண்ணியில் இசையுடன் ஒலிக்க பாவைகள் நடக்கும் அந்த தளம் விஷேச விளக்கொளியில் மின்ன அந்த ராஜபுதன உடை மற்றும் அலங்காரத்தில் ராணியாக வந்து நின்றவளைக் கண்ட அமுதனின் கண்கள் மற்றெதுவையும் காணவில்லை.

போட்டி முடிந்தபிறகு தனது ஒப்பனையை கலைத்து வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அப்போது வெற்றி பெற்று பரிசு வாங்கிய மேத்யூ அறைக்குள் வந்தான். பெருவாரிக்கும் அதிகமானவர்கள் வெளியேறி இருக்க தானும்
கிளம்பினாள். இனி வாடகை வாகனம் கிடைப்பது அத்தனை சுலபம் இல்லை. எனவே பொதுப் போக்குவரத்தை நாட வேண்டிய நினைத்த மனம்

'ச்ச அவனையாவது வெயிட் பண்ண சொல்லியிருந்தா இப்படி தனியா போகவேண்டியிருக்காது'

என்று முனுமுனுத்துக் கொண்டவளுக்கு அவன் செய்கை நினைவு வந்தது. மேடையின் பின்புறம் நின்றவளை கண்ட நண்பர்கள் எல்லோரும்
"ஹே யூ லுக் ப்யூட்டிபுல், ப்ரட்டி பெர்பார்மன்ஸ் "
என மெல்லிய அனைப்பை தந்து கூற அதனை ஏற்று சிரித்தபடி நன்றி கூறியவளை ஒரு கரம் இழுத்து வளைத்து அனைத்தது.
முதலில் அவனையும் நண்பன் என நினைத்தவள் "ஹே தேங்யூ "
என்றபடி அணைத்தவனை விலக்க முயல இயன்றால் தானே …
அவனோ சற்று குனிந்து கழுத்தடியில் தனது முகம் புதைய அனைத்திருந்தான். இந்த அனைப்பு
அவனுடையது என உணர்ந்தவளுக்கு இந்த வாசனை திரவியத்தை தாண்டியும் அவனது வாசனையை அறியத் துடித்தது மனம். சூழலில் தன்னை மீட்டுக் கொண்டவள்

"டேய் தள்ளி நில்லு நான் இன்னும் ஒகே சொல்லல "

என்றவளின் கன்னத்தில் அழுத்தமாக ஒற்றை முத்தத்தை பதித்து .

"அதனால என்ன விழி நாளைக்கு நீ ஓகே சொல்லும் போது திருப்பி தந்துடு."
என்றவன் மற்றுமோர் கன்னத்தில் முத்தமிட்டு
" இது இன்னிக்கு காலைல நான் சொன்னதுக்கு."
அவள் சுதாரிக்கும் முன் மீண்டும் இருகன்னங்களிலும் இதழ் பதித்தவன்

"இது நாளைக்கு நீ சொல்லறதுக்கு." என புன்னகைத்தவனை மனதின் உவகை விழியில் தெறிக்க அதை மறைத்து கோபமாக பார்க்க
"இது .." என மற்றுமொரு முத்தமிட அச்சாரம் இட்டவனை
"ம் இது" என புருவங்களை ஏற்றி வினவ அந்த அழகில் மயங்கியவன்
"பார் நோ ரீசன்ஸ் "
என அவள் இதழில் அழுந்த முத்தமிட்டவன் அவள் தோள்சேர்த்து நிறுத்தியவன்
"நான்க்ஷோ முடிஞ்சி நீ வர வரை வெயிட் பண்றேன் விழி சேர்ந்து போவோம்" என்றவனை தள்ளி விட்டவள்

" போடா எனக்கு வரத்தெரியும்"

என்றவளுக்கு மேலும் பேச நேரம் இல்லை.

"கன்குராட்ஸ் மேத்யூ ஸர் பார் யுவர் சக்ஸஸ் நான் கிளம்பறேன் "
என்றவளிடம்
" நாளைக்கு பார்ட்டி எல்லாருக்கும் அரேன்ச் பண்ணியிருக்கேன் வந்துரு மகரா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் "
என்றான். தனது காதலை நாளை உரைத்துவிட முடிவு செய்து இருந்தவன்.

"சாரி சர் நான் பார்ட்டிக்கு எல்லாம் போறது இல்லை. அதுமட்டும் இல்லாம வேற ஒரு ப்ரோகிராம் கூட இருக்கு"

என்றாள். ஆழியனுடான காதலை வாழ்கையை ஒப்புக் கொள்ள முடிவு செய்திருந்தவளுக்கு. இந்நிகழ்ச்சிய.முடியவே பின்னிரவாகியிருக்க சோர்வில் அவளுக்கு பறப்பது போல இருக்க கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வெறும் தண்ணீர் சிறிது ஜூஸ் இதை மட்டுமே சில நாட்களாக அருந்தியவளுக்கு களைப்பு மிகத் துவங்கியிருந்தது. ஏற்கனவே காய்கறி பழங்கள் தண்ணீர் என உண்பவள் சாதம் வெறும் மூன்று ஸ்பூன் எனும் அளவில் நிறுத்தியிருந்தாள்.

ஆழியனுக்கோ இவளிடம் வாகனம் இல்லை என்பதை அறிந்திருந்தவன். பின்னிரவாகிவிட்டதால் அவளையும் அழைத்து செல்ல எண்ணி காத்திருந்தான். இதுவரை அவளைக் காணவில்லை எனவும் மகராவைத் தேடி அவர்களது அறை நோக்கி நடக்கத் துவங்கினான்.

அவளது நிலையறியாத மேத்யூ
" நோ மகரா நான் உங்கிட்ட பேசியே ஆகனும்."
எனவும் அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல்
மயங்கி சரியத் துவங்கியிருந்தாள்.

"மகரா …" என அவளை மேத்யூ அவளை நெருங்கும் முன் அமுதன் ஆழியன் தன் விழியாளை தாங்கியிருந்தான்.

அவளை தாங்கியவன் ஏந்தியபடி வெளியேற முயல, குறுக்கே வந்து மறித்த மேத்யூ

"ஹே ஸ்டாப் ஹீ ஆர் யு , ஹவ் டேர் யூ டு டச் ஹெர் இறக்கிவிடுறா"

என்றவனுக்கு பதில் கூற அவன் நிற்கவில்லை. அதில் கோபம் வரப் பெற்றவன்.
"டேய் ஸ்***** அவளை இறக்கி விடுடா" என ஆழியன் கையை பிடித்து இழுக்க
அவன் பற்றிய கரத்தை உதறிய ஆழியன் அவன் "அவ என் பொண்டாட்டி டா"என்றுரைத்த வார்த்தைகளில் மேத்யூ திகைத்து நின்றுவிட்டான்.
 
அத்தியாயம் 6

மருத்துவமனையில் அமுதன் விழியின் அருகில் அமர்ந்திருந்தான்.அவனிடம் இருந்து தனது கரத்தை உருவிக் கொண்டவள் மறுபுறம் திரும்பிக் கொண்டாள். சற்று நேரம் மௌனம் நிலவியது.
"எப்படி டா அப்படி சொல்லாம் நீ"
என்றாள் அவன் புறம் திரும்பி.

"மறுபடியும் முதல்ல இருந்தா என நொந்து போனான். அப்பொழுதில் அமுதன் எதையும் யோசிக்காமல் தன் பொண்டாட்டி என்று விட அதில் மேத்யூ அதிர்ந்து நின்றவன் அத்துடன் விடவில்லை அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டவன் சில நொடிகளில்

"வாட் த ஹெல் யூவர் சேயிங் ? இப்படி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி அவ நேம கெடுக்க பார்க்குறியா ? "
என்றவன் கைகளில் இருந்தவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான். அதில் அசைவு தெரிய ஆழியன் அவளை தன் மடியில் வைத்துக் கொண்டான். சற்று சிரமப்பட்டு விழிகளை திறந்தவளுக்கு எதுவுமே தெளிவாக
தெரியவில்லை. அவன் யார் என்பதை அவள் வாய் வழி அறிந்து கொள்ள துடித்த மேத்யூ
"ஹனி ஹீ இஸ் திஸ் ?"
என்றான் அதற்கு பதிலளிக்க அவள் வாய் திறக்க அதற்குள் அங்கு வந்த விழியின் நண்பர்களில் ஒருவன்
" தே யார் லவ்வர்ஸ் மேத்யூ " என்றவன் மேடையின் பின்புறம் நடந்தவற்றை கூற அவன் மனம் அந்தக் கணத்தில் நின்றுபோனது.

போர்களத்தில் அருகில் இருப்பவன் இறப்பதை கண்டாலும் தாண்டி முன்னேறும் சகவீரன் போல அவன் மனம் குற்றுயிராக துடித்துக் கொண்டு இருந்தாலும். அப்போதைக்கு அதை தள்ளிவைத்தவன். உப்பு மற்றும் சர்க்கரை சேர்ந்த (ORS) கரைசலை எடுத்து வந்தான் அவளுக்கு புகட்ட போக ஆழியன் அதை மறித்து தான் வாங்கி பருகச் செய்தான்.

கண்விழித்தவளுக்கு இமைகள் பாரமாக சோர்வாக இருக்க ஆழியனின் மடியில் இருப்பதையே அறியதவளாய் தாயின் மடிபோல வெம்மையை உணர்ந்து அவன் மார்பிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். தன்னவளின் கலைந்த முடிக்கற்றையை ஒதுக்கி கன்னத்தில் ஒருகை வைத்து மார்புக்குள் பதித்து மறுகரத்தால் அவளை வளைத்து தனக்குள் பொதிந்து கொண்டான்.

வாடகை வீட்டை சொந்த வீடாக எண்ணி அன்பு வைத்து எங்க வீடு எங்க வீடு என சொந்தம் கொண்டாடும் குழந்தை அதை பிரிந்து செல்ல நேரிடும் போது இது நமது இல்லை எனும் வார்த்தைகளின் வீரியம் தாங்காது அதன் பின்னிருக்கும் விஷயங்களோ புரியாது அழ மட்டுமே செய்யும் . அதுபோல மகர விழியை மனதில் ஏற்றிய மேத்யூவின் மனமும் குழந்தையாய் அரற்றி கொண்டிருந்தது.

மண்ணில் இருந்த பிடிங்கிய இளஞ்செடியாய் வாடிக் கிடந்தவளை பார்க்க பார்க்க மனம் சகியவில்லை அமுதனுக்கு சற்று முன் தான் பார்த்த வின்தாரகை ஒத்த தன் தாரகை தன்னினைவு அற்று கிடக்க அவளை ஏந்தியவனுக்கோ மூளை மட்டுமல்ல உலகமே ஸ்தம்பித்து போயிருந்தது.ஆழியனது நிலையையும் மகரவிழிக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் உணர்ந்த மேத்யூ தன் துயரத்தை புதைத்தவன்

" என்னோட கார்லயே விழிய ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம் வாங்க "

என்றதும் அவளைத்தூக்கிக் கொண்டு அவன் பின்னே சென்றான். மேத்யூ தனது வாகனத்தில் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததோ… வரும் வழியில் அலைபேசியில் மருத்துவருக்கு அழைத்து. தயாராக இருக்க கூறியது எதுவுமே ஆழியனுக்கு கவனத்தில் இல்லை.அவன் கண்களும் உணர்வுகளும் அவளிடத்தில் தான் குவிந்து கிடந்தன.
மருத்துவமனைக்கு வந்தது கூட அறியாமல் அவன் விழியை மடியில்அவளை வைத்திருக்க
மருத்துவர்கள் மற்றும் செவிலியர் அவனிடம் இருந்து அவளைப் பறித்துதான் பரிசோதித்து சிகிச்சை தர வேண்டியிருந்தது.

மறுநாள் காலை விழிக்கு எனக் கொடுக்கப்பட்டிருந்த அறைக்குள் மேத்யூ நுழைந்த போது அவன் எதிர் கொண்டது ஆழியனைத் தான் . அவனது பார்வையின் கூர்மையில் எங்கே தன்னை கண்டு கொண்டானோ எனும் ஐயம் தோன்ற பூங்கொத்தை உயர்த்தி பிடித்தவன்
ஹனி...என்று ஆரம்பிக்க நினைத்தவன் அவள் இவனுக்கு சொந்தம் என்பது புரிய "ஹவ் இஸ் விழி?" என்ற கண்களில் காதலை கண்டவனுக்கு தன் பொருளை தன்னுடைமை என அறிவித்த விட வேண்டும் என்ற பொறாமை கலந்த வேகம் உந்த

"என் பொண்ட்டிய என்ன பார்க்க வந்துருக்கீங்க. ரொம்ப நன்றி உங்க அக்கறைக்கு. பட் அவ இன்னும் முழிக்கலையே"

என்றவன் 'போயிட்டு அப்புறம் வரியா' எனும் வாக்கியத்தை உடல் மொழியில் கூறிக் கொண்டு இருந்தான். இப்போது மேத்யூவிக்கு வேகம் வந்திருந்தது. இதற்காகவேணும் பார்த்துவிட்டுத் தான் போவது என முடிவு செய்தவன்

"ஹலோ நேத்திக்கு இங்க கொண்டு வந்து சேர்த்தது டாகடர்ஸ்ட்ட பேசினது எல்லாம் நான். இது எல்லாத்துக்கும் மேல அவ என்னோட கம்பெனிக்கு எடிட்டோரியல் மாடல். சோ"

என்று விரல்களை மாத்திரம் லேசாகவீசி நகரும்படி சைகை செய்ய ஆழியனுக்கு வந்த ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடிக்க மேற்கொண்டு எதுவும் கூறும் முன்

"மேத்யூ " என்ற மகரவிழியின் குரல் இருவரையும் நிதானம் கொள்ள வைத்தது. அமுதனிடம் இருபுருவங்களையும் ஏற்றி இறக்கியவன் அவனைத் தாண்டி உள்ளே வந்தவன் அவளிடம் அந்த பூங்கொத்தை கொடுத்தான்.
"ப்ரட்டி தேங்யூ" என அதை வாங்கிக் கொண்டவள். அவனை உட்காருங்க என உபசரித்தவள் .
"அமுதன் டாக்டர் வரச்சொன்னாங்க பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பத்தி விசாரிச்சிட்டு வரியா? "
என்றவளின் வார்த்தையை மீற முடியாது வெளியே செல்ல.
"அந்த கதவை கொஞ்சம்… "
என அவள் முடிக்கும் முன் கோபத்தில் கதவை அடித்து சாத்தியவன் மருத்துவரை பார்க்க சென்றுவிட்டான்.

அவன் திரும்பி உள்ளே வரும்போது மேத்யூ இல்லை. ஆனால் அவள் கொதிநிலையில் இருந்தாள்.

"என்னாச்சு மகா"
என்றவனை பிடித்துக் கொண்டாள்.

"உன் பேர் எனக்கு தெரியுமான்னு கூட உனக்கு தெரியாது ஆனா உன்னோட பொண்டாட்டின்னு சொல்லி வைச்சிருக்க என்னடா நினைச்சிட்டு இருக்க நான் இன்னும் உன் ப்ரொப்போசலை அக்சப்ட் பண்ணல."

என பேச ஆரம்பிக்க அவனோ அமைதியாக பழச்சாற்றை பிரித்து கோப்பையில் நிரப்ப துவங்கினான். மனம் வேறு காலையில் அவள் கூறியதைக் கேட்டு மகிழவுடன் இருந்தது.

இன்று அதிகாலையில் அட்டென்டருக்கான படுக்கையில் இருந்த இவன் தலை கோதியவள் "உனக்கு எப்படியோ தெரியலடா அமு எனக்கு உன்ன பார்த்த உடனே பிடிச்சி போச்சி, ஆனா என்னோட ஆசை கனவு எனக்கு புருஷனாக போறவன் இப்படி தடால் லவ் சொல்ல கூடாதுடா. என்ன பார்த்து பழகி என்னோட விருப்பு வெறுப்பு தெரிஞ்சி எனக்கு ப்ரபோஸ் பண்ணி நான் அவன் கூட வாழ்ந்து உடல் சுகத்தை தாண்டி அவன் காதல் என்ன சாய்கனும் அவன கல்யாணம் பண்ணி என் வாழ்கைய வாழனும் டா ஆனா நீ பார்த்த உடனே விட்ட இடத்தில் இருந்து வரைய ஆரம்பிக்கற…
உன்னோட வேகத்தை பார்த்தா என்ன செய்யறதுன்னே புரியலடா " என்றவள் அருகில் இருந்த நீரை எடுத்து பருகியவள் மறுபுறும் திரும்பி படுத்துக் கொண்டாள்.

உரைத்த வார்த்தைகளை அவன் செவியுற்றதை அவள் அறியவில்லை .அவனோ இடையறாது பொழியும் மென்சாரலின் ஊடாக வழியும் வெயிலை அனுபவிப்பதன் இதம்தனை அவர்களது காதலின் சாரலின் இடையில் ஊடலாக அவளது கோபத்தை உணர்ந்து மலர்ந்து கொண்டிருந்தான். இந்த நினைவில் இருந்தவன் அவளைச் சட்டை செய்யவில்லை

விழியாளோ தான் கூறிய எதையும் அவன் காதில் வாங்கியது போல் தெரியவில்லை. என்பது புரிய இதில் சினம் மிக திரும்பிக் கொண்டாள். பழச்சாறை எடுத்து வந்தவன்.
"இந்தா மகா ஜீஸ்"
என அவளை முறைத்தவள் "முதல்ல குடி " என வாயருகே கொண்டுவர வாங்கி பருகியவள் கோப்பையை வைத்துவிட்டு அமுதா … என மீண்டும் முதலில் இருந்து துவங்க அவள் அருகில் அமர்ந்து அமைதியாக அவள் கரங்களை பிடித்து மெல்ல நீவி அழுத்தி சொடுக்கெடுத்தவன்

" மகா இங்க பாரு என்ன பத்தி உனக்கு இல்ல உன்ன பத்தி எனக்கோ எதுவும் தெரியாது. உனக்கு வேனும்னா முதல்ல ப்ரபோசல் அப்புறம் லவ் டேட் கடைசில மேரேஜ்ன்னு வரிசை இருக்கலாம்.ஆனா எதுவும் தெரியாம உன்ன பார்த்த உடனே என் பொண்டாட்டியாதான் மனசு உணர்ந்தது...
ரொம்ப காலம் நாம ஒன்னா வாழந்த மாதிரி ஒரு பீல்.ஏதோ நீ ஊருக்கு போய்ட்டு திரும்பி வீடு வந்த மாதிரி ஒரு உணர்வே தவிர உன்ன புதுசா பார்த்த எண்ணமோ நீயாரோங்கற நினைப்போ வரல. அதையும் தாண்டி பார்த்த உடனே உன் கண்ணுல எனக்கான ஆர்வம் ஆசை காதல பார்த்தேன். இவ்வளவுக்கு அப்புறமும் நீ என் வார்த்தையை தப்புன்னு நினைச்சா …"

என்றவன் மீதியை முடிக்கவில்லை, அவன் இதழ் மீது அவள் விரல்படிந்ததில் வார்த்தைகள் அப்படியே நின்றிருந்தன. மெல்ல இதழ் வருடியவள் அவன் விழி நோக்கினாள். அதில் அமுதன் புஷ்பக விமானமேற ஆயத்தமானான். அவனை இழுத்து அனைத்தவள் தன்னை அவனுடன் இணைத்து பயணித்திருந்தாள்.

பார்வையில் பூத்து பழக்கத்தில் நெருங்கி வாழ்ந்து பார்த்து வாழ்கையை வாழும் வேட்கை அவளுக்கு ...பார்த்ததில் இருந்தே வாழ்க்கையே அவளாக வாழும் வேகம் அவனுக்கு. விடை என்னவோ விதி சொல்லுமோ...
 
அத்தியாயம் 7


யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

எனும் குறுந்தொகை பாடலில் தினைப்புனம் காக்கும் தலைவியும் வேட்டைக்கு வந்த தலைவனும் கண்டவுடன் காதல்கொள்கின்றனர். அவள் ஐயம் கொள்கிறாள்.எங்கே தலைவன் தன்னை நீங்கிவிடுவானோ … என்று ஐயம் கொள்கிறாள். இதை உணர்ந்து கொண்ட தலைவன்

என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
என தலைவன் முன் வழிந்தோடும் நீரோடையை காட்டி தலைவியை ஆறுதல் படுத்தி அவளுடன் கலக்கிறான்.

இந்த சலனம் கூட இல்லாமல் அமுதஆழியனுள் மகரவிழியவள் கலந்திருந்தாள். அவளுக்கு இருந்த வரையரையற்ற வாழ்வியல் விழுமியங்கள் பற்றிய மதிப்பீடு மற்றும் சமத்துவ சுதந்திரம் பற்றிய அவளது நிலைப்பாடு மற்றொறு காரணம்.

அமுதனுக்கோ அவள் தான் மனைவி.என்பதை மனதில் பதிந்திருந்தவன் உறவுக்கு முன் மணம் என்பது ஏன் அவசியம் என்பதனை பற்றியோ? இல்லை அதன் விளைவு என்னவாக கூடும் என்பதை பற்றி கிஞ்சித்தும் எண்ணம் கொள்ளவில்லை. என்று இருந்தாலும் அவள் என்னுடையவள் தானே…

சில நேரங்களில் இரு தலை கொள்ளி எறும்பாய் மனமும் உடலும் தவிக்க சரியென்று ஒரு புறம் தவறென்று மறுபுறம் எரிய…

அவளைக் கண்டாலோ அனுவும் இடையின்றி அவளை நிரப்பிக் கொள்ள அதே மனமும் உடலும் தவிக்க...
தவறையும் சரியாக்க எதைகூற என மறுபடியும் எனயோசித்த அறிவு...
பழங்காலத்தில் கடிமணம் காந்தர்வ மணம் இருந்தது தானே… அதுபோல்தான் இதுவும் என பல பல சமாதானங்களை கைக்கொண்டு குற்ற உணர்ச்சியை குறைத்தான் கூடல்களுக்கு பின் . உணர்வுகளின் உச்சத்தில் எதுவும் தவறாகப்படவில்லை.

உடல் தாண்டி உள்ளம் தீண்டிய காதலின் தேவையை உளம் தூண்ட உடல் தீண்டும் கூடுகையாக்கியது . ஹார்மோன்களின் வேதிவினையோ அன்றி ஊழ்வினை விதியோ,..

ஆயினும் நாளாக நாளாக கேள்விகள் தொலைந்து அவள் விருப்பம் போல் உடல் இச்சையை தாண்டிய நேசம் முளைவிட துவங்கி இருந்தது. அதன் அவன் அவளைத் தாயாக தாங்கினான். அவள் நலம் பேணினான்.

மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்தவன் மெல்ல எழுப்பினான்.
"மகரா எழுந்துக்கறியா?"
தலையனையை துறந்து அவன் மடியில் தலைவைத்து கொண்டவள்
"வை அமு?"
"ஒருஸர்ப்ரைஸ் ஒரு இடத்துக்கு போகுனும் டைம் ஆச்சு இப்ப கிளம்பினாதான் சரியா இருக்கும் "
எனவும்
எழுந்து அமர்ந்தவள் "எங்கடா ?"
"அதான் ஸர்ப்ரைஸ்ன்னு சொல்லறனே"

" சொல்லுடா ப்ளீஸ்" என்றபடி ஆர்வமாக தயாராகி வந்தவளை

"அதான் அங்கயே போறோம்ல போய் தெரிஞ்சிக்கோ"

என வாகனத்தில் அமர வைத்தவன்.அதன் பிறகு எதுவும் கூறாமல் வாகனத்தை செலுத்த அவளே அப்பொழுதில் இருந்து

"எங்க போறோம் அமுதா ?"

என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்வளுக்கு பதில் கூறாமல் வாகனத்தில் கவனமானான். பதில் இல்லை. கிடைக்காது என உணர்ந்து கோபத்தில் அவளும் உறங்கிவிட்டாள். இரண்டு மணிநேரம் கழித்து உறக்கத்தில் இருந்து விழித்தவள்

"எங்க போறோம் அமுதா ?"

என்றவளின் கேள்வியில் திரும்பி பார்த்தான். கூந்தல் பறக்காமல் இருக்க கூந்தல்மாட்டி கொண்டு அடக்கியபடி இவன் பதிலுக்காய் அவள் கண்கள் அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தன. அமுதனோ அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் சாலையில் கவனமானேயொழிய பதில் கூறவில்லை.

"அப்ப நீ சொல்ல மாட்ட அப்படித்தான ?"

என்றவளின் ஆர்வம் ஆர்பரிக்க துவங்கியதை உணர்ந்து கொண்டவனின் கண்கள் கள்ள புன்னகை கொண்டன. இதழ்களோ கள் கொள்ளும் சிரிப்பை சிந்தியது. அதில் அவன் சீண்டலை புரிந்து கொண்டாளோ என்னவோ.

"அப்ப இரண்டு ஒகே வா " என்று பேரம் பேச ஆரம்பித்தாள். அவள் எதைப் பற்றி குறிப்பிடுகிறாள் என்பது புரியாமல் நெற்றி சுருக்க அவன் நெற்றியை தன் விரல் கொண்டு நீவினள். அதில் அவன் வாகனம் சற்று தடுமாறி
வேகம் பெற்றது.

இப்போது சற்று இறங்கிய அவள் சண்பக விரல் மலர் அவன் இதழ் அளந்தது . அந்த விரலை தன் இதழ் சேர்த்து முத்த சமிக்ஞை அவள் காட்டினாள்.

"இரண்டு "

"ம்"

"இரண்டே இரண்டு கஞ்ச பிசினாறி…போடி ஒன்னும் வேண்டாம் "

என்றவன் பிறகு வாகனத்தை செலுத்துவதில் கவனமானான். அவளும் முறுக்கிக் கொண்டு
"வேண்டாம்னா போ" என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
சில நிமிடங்களில் உரிய இடம் வந்து விட வாகனத்தை நிறுத்தியவன். இறங்கப் போன அவள் கரம் பற்றி தன் புறம் இழுத்தான்.

அவள் முகம் பற்றி கூந்தலில் அவன் நுனிவிரல் விளையாட ஒருகர கட்டைவிரல் மட்டும் கொண்டு இதழ்களை வருடியவன் அவள் பிறைநுதலில் தன் நெற்றி பதித்தான். அவன் கண்களைக் கண்டவளுக்கு அது தன்னை உள்ளிழுத்துக் கொள்வது புரிய கண்களை சுகமாய் மூடி அதனை அனுபவிக்க துவங்கினாள்.அந்த இதத்தை கலைக்காமல் அவள் கண்களை மெல்லிய துணி கொண்டு கட்டினான்.

" அமு என்ன செய்யற ?"

" ஸ்ஸ் … பேசக்கூடாது" என்றவன் அவளை கரங்களில் தூக்கிக் கொண்டான்.

அந்தி செய்த செவ்வதனத்தை தன்னில் பிரதிபலித்தபடி தாமரைப் பூக்களையும் செங்கழுநீர் பூக்களையும் பால் கொண்டு அரைத்து. வர்ணகுழம்பு செய்து கலக்கி விட்டது போல் இருந்தது . ஆஸ்திரேலியாவின் அந்த டையரல் ஏரி (lakeTyerrel)

அதன் கரையில் அவளை நிறுத்தி கட்டவிழ்த்தான். கண்களின் முன் இருந்த அந்த அழகைக் கண்டவளுக்கு ஆச்சர்யத்தில் வார்த்தைகள் வரவில்லை. அவள் முன்பு மேலே வேர்விட்டு கீழே விரிந்த தாமரை நின்றது. இத்தனை பெரிய தாமரையா... இல்லை பன்னீர் ரோஜாவை கொண்டு வந்து நிரப்பி விட்டனரா….எனில் இலைகள் எங்கே? ஒரு வேளை தோற்றப் பிழையோ… வேறுகிரத்திற்கு வந்துவிட்டேமோ...கண்களுக்கு ஏதாவது.. என பலவற்றை யூகித்தவள் கண்களை கசக்கிவிட்டு பார்க்க மீண்டும் அந்த புதிதாக பிறந்த குழந்தையின் உடல் காட்டும் இளஞ்சிவப்பு நிறத்துடனே காட்சி தந்தது அந்த ஏரி .

அந்த நீரில் கால் நனைத்திட விரும்பியவள் மெல்ல மணலில் இருந்து நீருக்குள் கால் வைக்க பாதங்கள் நனையவில்லை மாறாக பதிந்தன. ஆம் அவள் நீர் மேல் நடந்தாள்.

விரிந்த தாமரையாய் இருந்த அந்த ஏரியில் பாதம் வரை நீண்ட அந்த சிறு இள ரோஜா பூக்கள் கொண்ட வெள்ளை மேக்ஸியை அணிந்திருந்தாள். அந்த கணத்தில் அவளை படம் எடுத்து பதிந்து கொண்டான்.

நேரம் செல்ல வர்ணங்களின் ஒப்பணை முடிய நிலமங்கை இரவு எனும் ஆடையை புனைய ஆயத்தமானவள் அந்தி சூரியனை பொட்டாக வைத்துக் கொண்டு ஆடியாய் விரிந்த ஏரியில் சரிபார்த்துக் கொண்டாள். அதைத் தொடர்ந்து தன் பிரதிபிம்பத்தையும் மகரவிழி சோதித்து கொண்டாள்.
அங்கேயே இருவரும் தங்கிவிட்டனர்.நள்ளிரவு தாண்ட விண்மீன்களையும் வெண்ணிலவையும் சிறு வெண்மேகத்தையும்
அது தூவிய வெண் பணியையும் கண்ணாடியாய் பிரதிபலித்தது அந்த ஏரி பார்ப்பதற்கு பிரம்மாண்ட அரங்கு ஒன்று போல் தோன்ற அதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளை மடிக்குள் மகவாய் இழுத்து பின்னிருந்து அனைத்துக் கொண்டு அவள் தோளில் நாடி வைத்தவன் காதில் சுவாரஸ்யம் பேசினான்.
"மகா"
"ம் "
" மகரா"
"ம்…"
"வரும் போது கேட்டியே உனக்கு எத்தனை வேணும்னு அதுக்கு இப்ப பதில் சொல்லவா?"

பின்னிருந்து அவளிரு கரம் மீது தன்னிரு கரம் வைத்து கதை பேசும் அவன் முகத்தை அவன் மார்பில் இருந்தே நிமிர்ந்து பார்த்தவள்.

"ம் சொல்லு "

என்றவள் இன்னும் வாகாகப் அவனில் பொருந்திக் கொண்டாள்.

"உனக்கு தெரியுமா மகா கடற்கரைல உள்ள மணல எண்ண ஒரு கன சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில் இருந்த மண்ண எடுத்து அதில் உள்ள துகள்களை எண்ணி ஒரு கனசதுர மீட்டர் உள்ள இடத்தில் இவ்வளவு மணல் இருந்தாஉலக கடற்கரையோட மொத்த பரப்பளவு அதில் குறிப்பிட்ட ஆழம் வரை எவ்வளவு மணல் இருக்க முடியும்னு தோராயாமா கணிப்பாங்க. ஆனா இந்த பேரண்டத்துல இருக்குற வின்மீன்களோட எண்ணிக்கை அந்த இதை விட அதிகமா இருக்காம். எனக்கு அந்த எண்ணிக்கையை விட அதிகமாக வேனும் எனக்கு"

என்றவன் அவள் தந்த முத்த சைகையை செயலாக்கியிருந்தான். ஆனால் அதனைத் தொடர்ந்து அமுல்படுத்தியது என்னவோ மாறனின் சாசனங்களைத்தான். அவன் ஆசையில் தன்னை ஒப்புவித்தவள் இசைந்திருக்க அவன் அவளை இணைத்து இசைத்து வீழ்த்தியிருந்தான். அவிழ்ந்த மலரின் மனம் காற்றில் பரவ காலம் நேரம் பார்ப்பதில்லை. அது போல உளம் கலந்திட்ட காதலில் காமம் பரவும் போது நன்மை தீமை பார்ப்பதில்லை.

லேக் டையரல் ஏரி (lake tyerrel)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் உப்பு ஏரி
தனது பிங் நிற தண்ணீர் மற்றும் கண்ணாடி போன்ற முழு பிரதிபலிப்புக்கு பெயர் பெற்றது.
உப்பு அதிகம் என்பதால் இதன் மீது நடக்க முடியும். அதன் அந்த நிறத்திற்கு அந்நீரில் வாழும் ஒரு ஆல்கே தான் காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
 
மகர விழி போட்டோஷூட்டில் இருந்தாள். கேமராவின் கோணத்திற்கு ஏற்றபடி திரும்பி விதவிதமாக நின்றவளின் அகமும் மலர்ந்திருந்தது. சிறு இடைவெளிக்கு பின்
அவள் கலந்து கொள்ளும் முதல் புகைப்படப்பிடிப்பு சற்று பதட்டமாகத்தான் இருந்தாள்.

உலகளவில் பிரபல பேஷன் பத்திரிக்கை தனது இந்திய விற்பனை பிரதியில் முகப்பு அட்டையில் அவளை பிரசுரம் செய்வதற்காக முடிவு செய்திருந்தது . அதுமட்டுமல்ல அவளது அனுபவங்களையும் வெளியிடுவதற்காக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

ஈட்டிங் டிஸ்ஸாடர் பிரச்சனையில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருந்தாள். அன்று மயங்கி விழுந்ததிலேயே அவளது பிரச்சனையை புரிந்து கொண்ட அமுதன் அவளை குணப்படுத்த முயற்சிகளை எடுத்து
வெற்றியும் பெற்றிருந்தான். மகரவிழி தனது ஒவ்வோரு நாளையும் அனுபவத்தையும் பதிவாக ஏற்றி இருந்தாள்.

முதலில் உணவே ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப் போக்கு என அவதி பிறகு செரிமான உறுப்புகள் வேலை செய்யாமல் வயிறு வீங்கியது. சிறுநீரக செயல்பாட்டு பிரச்சனை
தேவையற்ற மனக்குழப்பம் சோர்வு இவற்றில் இருந்து உள்ளே மற்றும் மேத்யூவின்
துணையுடன் வெளியே வந்து இருந்தாள்.
அதைத் தொடர்ந்து சீரான உடல் நிலை புடன் மீண்டும் மாடலிங்கில் கால் பதித்தாள்.
அதற்கு மேத்யூவும் ஒரு காரணம் மீண்டும் கேட்வாக் வாய்ப்பை தந்திருந்தான்.அவளை ஊக்குவிக்க

ஒப்பனையை சரிபார்த்து முடித்தவள் மீண்டும் கூந்தலை சரி செய்து கொண்டிருந்தாள். இன்றைய தருணத்திற்கு வருவதற்கு எத்தகைய தினங்களை கடக்க வேண்டியிருந்து.
என்பதை நினைவில் வந்தது.
"ஹனி ஆர் யு ஒகே ?"
என்ற மேத்யூவின் குரலில் கலைந்தவள்
"எஸ் மேத்யூ "
"குட் சியர் அப் ஏதாவது "
"ஐ கேன்"
என்ற அவள் தோள்களை மெல்ல அனைத்து விடுவித்தான். மகர விழிக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் தனது இந்த அனுபவப் பகிரல் மற்றவர்களுக்கு உதவக் கூடும் என்பதற்காகவே ஒப்புக் கொண்டாள்.

"மகரவிழி உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள் "

"நன்றி "

"நேரடியாக கேள்விகளுக்குள்ள போயிடலாம்.
ஈட்டிங் டிஸ்ஸார்டர் பிரச்சனையால நீங்க எப்படி பாதிக்கப்பட்டு இருந்தீங்க எப்படி அத தாண்டி வந்தீங்கன்னு சொல்ல முடியுமா ?"

"ஒவ்வோரு கேள்வியா போகாம மொத்தமா கேட்டுட்டீங்க ஓகே இட்ஸ் ஆல்ரைட் என்றவள்"

கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை கூறி முடிக்கவும் .ஆழியன் உள்ளே அவளை அழைத்து செல்ல வந்தான். அவனைப் பார்த்ததும் ஓடி வந்து அனைத்துக் கொண்டாள்.
பதிலுக்கு அவளை தூக்கி சுழற்றி இறக்கினான். ஓஹோ என அனைவரும் ஆர்ப்பரித்ததில் தன் நினைவுக்கு வந்தவன் சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று வெளியேறி இருந்தான்.

இதை பார்த்தபடி நின்றிருந்த மேத்யூ கண்களில் துளிர்த்த நீரை தடுத்தவன் தனது
பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றான்.


அமுதனின் டுகாட்டி நின்றிருக்க அதன் மீது அவள் இரு கால்களையும் ஒருபுறம் போட்டு அமர்ந்திருந்தாள் அவளை ஆரோகணித்து நின்றான் அவன். அலையடிக்கும் கடற்பரப்பில் முன்னால் இவர்கள் நின்றிருந்தனர். இளஞ்சந்திரன் மேல் வானில் பவனி வர சோடியம் விளக்கொளி கீழ்வானில் இன்னும் அந்தி இருப்பது போலும் மாயையை செய்து கொண்டிருந்தது.

அவன் ஏதோ கூற வர அதற்குள் அவளது அலைபேசி அழைக்க யாரென்று பார்த்தவளுக்கு தந்தையிடம் இருந்து என்றதும்
கையும் காலும் பரபரக்க தனது அலை பேசியை எடுத்தவள் அழைப்பை ஏற்பதற்குள் முழுதாக வியர்வையில் குளித்திருந்தாள்

"ஹாய் டாட்"
"எப்படிடா இருக்க?"
" குட் நோ ப்ராப்ளம் நீங்க எப்படி இருக்கீங்க"
"எனக்கு இங்க கொஞ்சம் பிரச்சனை நான் இப்ப அங்க வர முடியாது நீ இங்க வரியா?"
" நோ டாட் இங்க நான் ஒகே ஒன்னும் பிரச்சனையில்லமெதுவா வாங்க நான் நல்லா ரெக்வர் ஆகிட்டேன் மேகஸின் வந்ததும் பாருங்க இல்ல அடுத்த வார ஷோல பாருங்க"

"பாய் டாட்"

என்றவள் அவன் வாயிலிருந்து தன் கரத்தை எடுத்தாள்.

"டாட் க்கு இன்னும் சொல்லல "

"வாய வைச்சிட்டு பேசாம இருன்னா என்ன வரத்து வர "

என்றவள் அவன் அவளை சுற்றிவளைத்ததை அப்போதுதான் உணர்ந்தவள்
"டேய் கைய எடு "
"ஒகே " என்றவன் உடனே ஒத்துக் கொண்டான்.
இவன் அவ்வளவு நல்லவன் கிடையாதே என்று பார்த்தாள்.
அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்
"எஸ் யு ஆர் கரட் மிச்சத்த வீட்ல போய் வைச்சிக்கலாம்."
என்றவன் வாகனத்தை கிளப்ப
"நீ ஏதோ சொல்ல வந்தியே"
எனவும் தனது பாக்கெட்டை தடவிப் பார்த்தவன்
பெருகிய புன்னகையுடன்.

"ம் ஆமா அப்புறமா சொல்லறேன். இப்ப சாப்பிட்டு வீட்டுக்கு போலாம் "
என அவளை திருப்பிவிட்டான். ஆனால் அவன்
கூற நினைத்ததை கூறியிருந்தால்…
எதிர்வருவதை மாற்றியிருக்காலமோ

கடந்த அந்த கனங்களில் தாக்கம் தாளாமல் இதோ இன்றும் எழுந்தவன் அதை எடுத்து திறந்து பார்த்தான். அன்றைய இரவு இன்றைக்கும் அவனுள் புகுந்து அவன் அனுபவித்த சுகத்தை நினைவு படுத்த தேற்ற முயன்று தோற்றவனாய். மீண்டும் கடந்தவற்றையே மனது சுகித்தது.
ஐம்புலனும் ஒன்றினைந்து ஒரு பொருளை அறிகிறது எனில் பின்னாளில் அதையோ அதைப்போல் ஒன்றையோ அது சார்ந்த ஒன்றை ஏதேனும் ஒரு புலன் உணர்ந்தாலும் மனம் தானே அந்த பொருளை உருவகித்து அதுபற்றிய நினைவுகளை மீட்கிறது.
எனில் ஜம்புலனாகவே கன்னியவளை உணர்ந்தவனுக்கு எப்புலனும் எப்படியும் அவளை நினைவு படுத்த தகித்து போனான்.
எழுந்தவன் தண்ணீர் அருந்திவிட்டு வந்தவன் நினைவுகள் அவளிடம் மீண்டும் ஒடியது.



மகரவிழியும் ஹெலனும் இன்னும் சில பெண்களும் அன்றைய ஷோவிற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். தங்களுக்கான ஆடையை அணிந்து கொண்டனர். அது தேவதைகளுக்கான உடைகள் என்னும் கருத்தினை மையமாகக் கொண்டு தேவதைகள் போன்ற அலங்காரத்துடன் உடைகள் தயார் செய்யப்பட்டது . அதில் ஹெலனுக்கான ஆடை மூன்று நாட்களுக்கு முன்பு சற்று உடல்வாகு சரியில்லை ஆனால் அப்போது அது அவளுக்கு கனகச்சிதமாய் பொருந்தியிருந்தது.
"வாவ் எக்சாட் ஜூரோ" என அவர்களுடன் ராம் வாக்கில் நடைபயில இருக்கும் பெண்கள் கூற
வரவழைக்கப்பட்ட புன்னகையை கொடுத்தாள்
இதற்காக ஒழுங்காக என்று கூட இல்லை சாப்பிடாமல் ஜூஸ் மட்டும் என இருந்தாள். ஏற்கனவே டயட்டில் இருக்கும் உடலை அளவுக்கு அதிகமான வொர்க்வுட் என உடற்பயிற்சி மூலம் வெளிர வைத்து ஒப்பனையில் பளிச் ஸிகின்டோனையும் கருவளையங்களை மறைத்தாள். தனது பட படப்பையும் மூச்சு தினறலையும் இரத்தசோகையின் விளைவு என உணராது புறந்தள்ளியிருந்தாள். தனது லைம்லைட் வெளிச்சம் மற்றும் பதிவுகளுக்காக பணத்திற்காக நெஞ்சுவலியை கூறாமல் ராம் வாக் மேடைக்கு தயாரானாள். மகர விழிக்கு அவளிடம் ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு உரைத்தது. ஆனால் இன்னவென்று அறிய முடியவில்லை. அவள் இவளும் நெருங்கிய தோழிகள் அல்லவே.

நிகழ்ச்சி தொடங்க ஒவ்வோருவராக தங்கள் வரிசைப்படி செல்ல முதலில் மகரவிழி சென்று திரும்ப எதிரில் வந்தாள் ஹெலன் . அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மல்லாந்து விழுந்தவள் அப்போதே இறந்தும் போனாள். ஈட்டிங் டிஸ்ஸாடர் எனப்படும் முறையற்ற உணவுப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு இருந்தவள் அதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட அதீத இரத்த சோகையினால் இருதயம் வேலையை நிறுத்தி இருந்தது.

சற்று முன் வரை தன் முன் இருந்தவள் இப்போது இல்லை என்பதும் அதைக் கண்டதும் அவளது அந்த இறப்பு அதன் பின் நடந்தவை மகர விழியினுள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தது.
இவளைப் போல அவளும் அவள் காதலனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்ததும். ஹெலன் இறந்ததும் அவள் வீட்டினர் இறுதி காரியங்களை செய்ய அவள் வீட்டில் அனுமதிக்கவில்லை.
காதலனாக அவன் கதறி அழ கூட முடியவில்லை . அவளது இறுதிகாரியங்களில் கணவன் என்ற உரிமையின்றி பங்கேற்க முடியவில்லை. முடிவு இறப்பில் போராட மனம் இன்றி ஹெலனின் காதலனும் விலகிச் சென்றுவிட்டான்.

"அவ லிவ் இன் டு கெதர் ல இருந்தாள் போல."
"அந்த பையன் வரவே இல்லை"

"எந்த முகத்தோடு வர முடியும்"
"அவன் என்ன தாலி கட்டிய கணவனா சேர்த்துகிட்டவன் தான இன்னேரம் இன்னோருத்தியை தேடி போயிருப்பான்."
"அவன் போயிருந்தா இவ..."
"இவளும் இன்னோருத்தன தேடி போயிருப்பா..."
"கல்யாணம்னு வந்தா குழந்த குட்டி இரண்டு பேர குடும்பம் அதசார்ந்த சிக்கல் பிரச்சனை எல்லாம் இருக்கும் இப்படின்னா எந்த பிக்கல் பிடுங்கலும் இருக்காது. முடிஞ்சவரை வாழந்துட்டு சுலபமா பிச்சிக்கிட்டு போயிடலாம்."

"இதுவே அந்த பெண்ண கல்யாணம் பண்ணியிருந்தான்னா .அந்த உறவுகள் உறுதுணையா இருக்கும். நீ ஆயிரம் காதலிச்சாலும் சமூகத்தால் அங்கீகரிப்படாத எந்த உறவும் இது போல தள்ளித் தான் நிற்க
வேண்டும்."

அவனது நிலை ஒரு அரசன் இறந்துவிடின் மரியாதை அரசிக்கு மட்டுமே காதற் கிழத்திக்கும் கீழேயே இருந்தது. இளமை இருக்கும்வரை அவன் நாடும் அவள் மோகிக்கும் வரை இருவரும் கூடிக் கொள்ளலாம் ஆனால் சட்டமோ சமூகமோ அங்கீகரிக்காத உறவு முறை எவ்வளவு ஆபத்தானது. மேலும் இவர்களது வாழ்கை முறை வேறு குடும்பத்திற்கு தெரியாது. அவன் உண்மையான வருத்தம் கூட களங்கமாக போகும்

"நல்ல வேளை குழந்தை குட்டின்னு எதுவும் இல்லை. இருந்தா அந்த குழந்தையோட நிலைமை."

"அதுக்கு தான இவங்க இப்படி வாழ்கைய தேர்தெடுக்கறது. பணம் சுகம் அலுத்து போனா அடுத்து ஒருத்தன்…"

"இதுகளுக்கும் ஆடுமாடுகளுக்கும் என்ன வித்தியாசம். கட்டுபாடு இல்லாம இஷ்டம்போல வாழ மனுசான எதுக்கு மனுசன்னா இந்த நாகரீகம் பண்பாடு நெறிமுறை இதெல்லாம் இருக்கனும் "

என வெளியே நின்று கொண்டிருந்த
அங்கு இருவர் பேசிக் கொண்டதை
இதைக் கண்டவளுக்கு தன்னைச் சுற்றிய ஏதோ மாய உலகம் அறுபடத் தொடங்கியது.
உண்மை தானே நானும் இந்த நாயை போலத்தானே இருந்துவிட்டேன். எனக்கு என்று எல்லா இருந்தும் என்னை சரியாக வளர்த்திருந்தும் என் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை அறிந்தும் என் காதலை கூறாமல் தடுத்தது எது .அத்துமீறச் செய்தது எது? … எனது சுதந்திரம் வாழ்ந்து பார்க்கும் ஆர்வம் அது மறைந்து இப்போது தவறு செய்துவிட்ட உணர்வு உள்ளே பேயாக ஆட. அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை.
தனது வாகனத்தை எடுத்தவள் வீடு நோக்கி விரைந்திருந்தாள்.

எதுவோ தன்னை துரத்துவது போல் உணர்ந்தவள் அடித்து பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள். வந்தவள் நேரரே ஆழியன் மீது மோதி நின்றாள். விழப்போன அவளை தாங்கி பிடித்தவன் தன்னை சமன் செய்ய முடியாது அருகில் இருந்த சொகுசு நாற்காலியில் சாய அவனோடு அவளும் விழுந்தாள்.அவன் இறுக்கி அனைத்ததும் பதற்றம் குறைந்தது .

" ஈஸி ஒன்னும் இல்ல மகா ஒன்னும் இல்ல "
என்றவன் அவளை அனைத்து முதுகை நீவ முதலில் வளர்ப்பு பூனை விரும்புவது போல வாஞ்சையாகத்தான் இருந்தது, ஆனால்

ஹெலன் முகம் நினைவு வர மறுநொடி தீச்சுட்டாற்போல் விலகியிருந்தாள். இத்தனை நாள் இதத்தோடு இன்பத்தை வாரியிறைத்த அந்த உடல் இப்போது பழுக்க காய்சிய இரும்பு பொம்மையாய் தெரிந்தது. தான் செய்துவிட்ட
காரியத்தின் வீரியம் உணர்ந்தவளுக்கு கண்ணீர் பெருகியது.

நல்ல வசதி நற்பழக்கவழக்கங்களை கற்பித்து வளர்த்த தாய் தந்தைக்கு பிறந்துவிட்டு என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன். என்னை கட்டுபடுத்த முடியாமல் காதலின் பெயரில் காமத்தின் விலங்காக இருந்ததை எண்ணி
இப்போது தன்னை கண்டு தானே அருவருத்தாள் . அதில் தலையைச் சுற்றி வாந்தி வந்துவிட வாயை மூடிக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.

குளித்தவள் வேறு ஆடையை மாற்றிக் கொண்டாள். சூடாக ஏதேனும் குடித்தால் தேவலை என்று பட சமையல் அறைக்குள் நுழைந்தாள்.அன்று சரியாக தெரிந்தவை இன்று தவறாகிப் போன மாயம் என்ன ?

அவளைத் தொடர்ந்து வந்த ஆழியன்.
"மகா எனக்கும் ஒரு காபி" என்றவன் பால்கனியில் இருந்த நாற்காலியில் தனது மடிக்கணிணியுடன் தஞ்சம் புகுந்து இருந்தான்.

காபியுடன் வந்தவள் அவனுக்கானதை வைத்துவிட்டு தன்னுடையதை மட்டும் எடுத்துக் கொண்டவள் மிடறு மிடறாக யோசனைகளின் ஊடே பருக ஆழியனும் அவளை உற்று நோக்கியபடி தான் இருந்தான். எதுவும் பேசவில்லை.

ஹெலன் வீட்டிலிருந்து வந்தது முதல் இவள் சரியில்லை. ஏதோ பெரிதாக வரப்போகிறது என்று புரிய அவள் மௌனம் திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தான்.

மெல்ல அவன் எதிரில் வந்து அமர்ந்தவள்

"நீ என்ன விட்டுட்டு போயிடுவ ?"

"என்ன உளற?"

"ஆமா உனக்கு என்ன கல்யாணம் பண்ற எண்ணமே இல்லை."
இப்போது அழுத்தப்பட்ட கோபத்தில் அவனது வார்த்தைகள்
"ஓஹோ எதை வைச்சி சொல்ற"
அது புரிந்ததா… அவளுக்கு. அவளோ மனமோ பாதுகாப்பு உணர்வற்ற மனநிலையில்

"அதானல தான இது வரைக்கும் நீ எனக்கு மேரேஜ் ப்ரொபொஸே பண்ணல ?"

"ஹான்...சரி அதுக்கு ...இப்ப என்ன தீடீர்ன்னு இந்த ஞான உதயம்…"
என நெற்றி சுருக்கி கன்னம் தடவி யோசித்தவன் ஒரு நொடியில்
" ஹெலன் "
என்றான் ஒற்றை வார்த்தையில். எதுவும் பேசாமல் காப்பி கோப்பையில் நிலைத்த அவள் பார்வை சொல்லியது அதுதான் உண்மை என்று மேற் கொண்டு எதுவோ கூற வந்தான் அதற்குள்

"நீ உன் வீட்டுக்கு போ " என்றிந்தாள்.

இதை கூறியவளிடம் என்னை முறைப்படி திருமணம் செய்து கொள் என்பது தொக்கி நின்றது.
மேலும் அவன் அருகில் இருந்தால் உறவையும் மறுக்க முடியாது எதையும் சிந்திக்க முடியாது. தந்தையிடம் பேச வேண்டும் ஆனால் இப்போது அவளுக்கு தைரியமில்லை. காதல் மட்டும் என்றால் இவரை எனக்கு பிடித்து இருக்கிறது திருமணம் செய்து வையுங்கள் என கேட்கலாம். இப்போது நாங்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்து வருகின்றோம் திருமணம் செய்து வையுங்கள் என்று எவ்வாறு கேட்பது.

ஆனால் அமுதனுக்கு மனைவி என்றே வாழ்ந்துவிட்டவனுக்கு இப்போது அவள் திருமணத்திற்கு கேட்கிக்கிறாள் என்பது புரியவில்லை அவள் தன்னை விலக்கி வைக்கிறாள் என மாற்றி புரிந்து கொண்டவன்

"வீட்ட விட்டு மட்டும் தானா இல்லை வாழ்கைய விட்டு மா"

இந்த வார்த்தைகளை கேட்டவள் விழிகள் அவனை கடைசியில்... நீயும் பொய்த்து போவாயோ?என்ற கேள்வியுடன்

"உனக்கு எப்படி தோனுதோ அப்படி" என்ற பதிலை தந்தன.அடுத்த நொடி கடகடவென்று வெளியேறி விட்டான்.அவன் பின்னோடு சென்றவள் தனது வீட்டிற்குள் சென்று கதவை அடைத்தான். அது இவள் இதயத்தை எதுவோ செய்ய அங்கேயே உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதாள்.

எழுவதற்காக கையை ஊன்ற அங்கே ஒரு மலர்
கொத்து இருக்க இப்போது தான் வீட்டை முழுமையாக பார்க்க வீடு முழுவதும் ஆங்காங்கே மலர்க் கொத்துகள் கொண்டு எளிமையாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது இப்போது எதுவோ உந்த எதிரில் இருந்த அறைக்குள் நுழைய அங்கே மேசை அதன் மீது இதய வடிவிலான பெட்டி இருந்தது.

அதன் அருகில் சென்றவளுக்கு புரிந்து போனது அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்கவே இத்தனை ஏற்பாடும் என்பதை உணர்ந்த இதயம் அமுதத்தில் ஆழ்ந்தது. பெட்டியை திறக்க உள்ளே திருமாங்கல்யம் அதனுடன் இருந்த மோதிரம் இரண்டும் அவளைப் பார்த்து சிரித்தது. கூடவே அவளது வாழ்வும்...

.
 
அத்தியாயம் 9




ஆழியனின் மனம் ஆழ்கடலுள் எரிமலையாக வெடித்து கொண்டிருந்தது அவன் மனம். எதையாவது பேசி வார்த்தைகளை விட்டுவிடக் கூடாதே என்று எண்ணியே அவன் எழுந்து வந்ததும் .
தன் அறைக்கு வந்து கதவடைத்தவனோ

எந்த முகாந்திரமும் இன்றி வெளியேற்றப்படும் தனியார் நிறுவன தொழிலாளி போல் கேட்க ஆளின்றி தன் குமுறல்களை கூற இடம் இன்றி அறியாத வருங்காலத்தையும் எதுவுமே நிகழாத மெளனமான நிகழ்காலத்தையும் கண்டு கலங்குவது போல் கலங்கி நின்றான்.

பார்த்து, பழகி வாழ்ந்து ஒருவரை ஒருவர் உடலையும் அதன் சுகத்தையும் தாண்டி உள்ளம் முற்றாக உணர்ந்து அவளது தேவை உணர்ந்து
செயல்பட்டவன் . இனி வரும் நாட்கள் முழுவதும் அவளுடனே பயணிக்க எண்ணி இருந்தவன் மனம்... கள்ளி செடியில் முள்ளில் கீற கசியும் பாலை போல அவள் வார்த்தை முட்களாய் கீறியதில் கசிய கசிய நின்றிருந்தான். பார்த்து பார்த்து எத்தனை ஏற்பாடுகள் அத்தனையும் ஒரு நொடியில் நின்றுபோன விழாவில் மீந்து போன உணவானதே… எவளோ ஒருவள் இறந்ததில் என் மீதான நம்பிக்கையும் இறந்து போகுமா…


அப்படி நம்பிக்கையில்லாமல் நான் எப்போது தவறி நடந்து கொண்டேன்?. இவள் இருக்கும் போதே வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தேனா? இல்லை வேறு தவறான பழக்கங்கள் இருக்கிறதா? இதுவரையில் அவளுடானான உறவுகளில் ஒரு முறை கூட வற்புறுத்தியதும் இல்லை.

எத்தனை சுளுவாக கூறிவிட்டாள்?
வெளியே போ என்று…இத்தனை நாள் வாழ்ந்ததன் பலன் என்ன?
நான் எப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்?

அவனது காதலை நம்பிக்கையை அவள் கொச்சைபடுத்தி விட்டதில் கழிவிரக்கம் பெருக அமர்ந்திருந்தவனால் அது முடியாமல் போனது. ஜன்னலை பிடித்துக் கொண்டு நின்றவன் கண்கள் வெளியே தெரிந்த இருளையும் அதன் ஊடே மினுமினுக்கும் விளக்குகளும் அந்த மனதின் எண்ணங்களின் வலிகளை மட்டுப்படுத்தாது போனது. விறுவிறுவென முகத்தை கரம் கொண்டு துடைத்தபடி உள்ளே வந்தவன் கைக்கு கிடைத்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் பொத்தான்களை அதற்கான துளைகளுக்குள் நுழைக்க முயன்று இயலாமல் சிலவற்றை விடுத்து சிலவற்றை மட்டும் நுழைத்திருந்தான். பாதங்களை செருப்புகளுக்குள் சொருகியவன் தனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதற்கு கதவை திறந்தவன் கண்களில் அடைத்திருந்த அவளது வீட்டு கதவு விழுந்தது. அதை பார்த்தவன் கால்கள் மகரவிழி அவளை நோக்கி செல்லத்தான் எத்தனித்தது அவளை அனைத்து ஆறுதல் சொல்ல மனமும் உடலும் தவித்தது. கூடவே அவளது வார்த்தைகளும் அவனது தன்மானத்தை சீண்டிய "வெளியே போ" என்ற அந்த வார்த்தைகள் மீண்டும் ஒலிக்க... மின்தூக்கியை கூட எதிர்பாராமல் கடகடவென இறங்கி விட்டான். கதவின் மறுபுறம் எட்டிவிடும் தூரத்தில் அவள் இருப்பதை உணர்ந்துதான் விரைந்து விட்டானோ...
.

அவளுக்கோ இந்த நியதிகளும் நீதிகளும் நேற்று வரை கசந்தது. இன்று சமூக கட்டமைப்பில் இந்த வாழ்கை முறையின் நிஜம் புரிந்தவுடன் இவன் கைவிட்டுவிடுவானோ எனும் அச்சம் அவளை எந்தவித தெளிவும் ஏற்பட. விடாமல் அவளை மருட்டியது.

இதோ இங்கே உட்கார்ந்து அழுவதை விடுத்து எழுந்து அவனிடம் சென்று அமுதன் அவன் மார்பில் புதைந்துவிட ஆசைதான் ஆனால் அவள் பேசிய வார்த்தை அவளை செயல்படவிட வில்லை.

அவன் வருகையை எப்போதும் தன்னில் உணர்பவள் இதோ இப்போதும் தன்னியல்பாக உணர்ந்து வாயிலை நோக்க கீழே கதவடியில் சில நொடி தயங்கிய அவன் நிழல் மீண்டும் விரைவதை கண்டவளுக்கு நெஞ்சம் இற்றுப் போனது. விரைந்து எழுந்து வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்


அன்று பித்தம் கொண்டு உச்சப் பொழுதில் பிதற்றியதையும் இரசித்திருந்த மனம். இன்று பிச்சியவள் அச்சத்தில் பிசகாக கூறிய வார்த்தைகள் கூர்வாளாய் நின்று தாக்க நிலைகுலைந்து போனாள்.

சீரான வேகத்தில் அல்ல உயர்வேகத்தில் எதிரில் வருவது எதையும் கணிக்காத வேகத்தில் வாகனத்தை செலுத்தியவன் தன்னையும் அறியாமல் கடற்கரைக்கு வந்திருந்தான்.அலையடிக்கும் கடலின் குளிர்ந்த அலைகளுக்கு தன்னை கொடுத்தவன். தன் மனம் மெல்ல குளிருமோ எனக் காத்திருந்தான்.

'இதோ இப்போது கூட அவளிடம் கோபம் கொண்டாலும் அவள் மடியைத் தான் தேடுகிறது.ஆனால் இப்போது இருக்கும் நிலைமைக்கு அது கூடலில் முடியும் சாத்திய கூறுகள் அதிகம். பிறகு இதற்குத் தான் வந்தாயா இதற்கு மட்டும் தான் நான் உனக்கு தேவையா? என்று கேட்டுவிட்டால் நிலைமை மேலும் சீர்கெட்டு போகும். அதனை தாங்கும் சக்தி இல்லை மேலும் இதையும் தாண்டிய வாழ்கைக்கு அவள் தேவை என்பதை உணர்த்தியாக வேண்டும். அதற்கு திருமணம் வேண்டும் அதைப் பற்றி பேசினால் வெளியே போ என்கிறாள் பின்னே வந்தால் உதைக்கும் முன்னே போனால் கடிக்கும் இந்த கழுதைக் காதலை வைத்துக் கொண்டு நான் படும் அவஸ்தை இருக்கிறதே…

என்று புலம்பியவன் கண்ணில் அந்தக் காட்சி விழுந்தது. உரச்சாக்குகளை போர்த்திய கூடாரம். அதில் கணவன் மனைவி மற்றும் ஒரு குழந்தை தூக்கத்தில் இருப்பது தெரிந்தது. அவனது ஒரு கரத்தில் மனைவியவள் தலைவைத்து இருக்க மறு கரத்தை அவள் மீது அனைத்தவாறு உரிமையாக போட்டுக் கொண்டு ஒருபுறம் அன்னையில் கதகதப்பில் இருந்த அந்த சிசுவை மறுபுறம் உள்ளங் கையில் தடவியபடி தூங்குவதை கண்டவனுக்கு இது போன்ற பேர் தனக்கு வாய்க்குமா என்று ஏங்கிப் போனான்.

திருமணம் அத்தனை எளிதா? அதன் பின்பான வாழ்கை இது போன்று எளிதா என்ன? அது வாழும் முறைமை அல்லவா அதற்கு என்று சில சட்டதிட்டங்கள் கட்டுபாடுகள் இருக்கத்தானே செய்யும். அதற்கு சுணக்கம் கொண்டு நெடுஞ்சாலையின் விதிமுறைகளின் மேல் நோவு கொண்டு சாலையில்லா வனத்தில் வாகனத்தை செலுத்துவது போல் இருவரும் இந்த நெறிமுறையற்ற வாழ்கை முறையில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற தீர்மானத்தை எடுத்திருந்தனர். என் வாழ்கை என் இஷ்டம் இருவரும் பரஸ்பரம் கருத்தொருமித்து தாங்களே தங்கள் முடிவுகளை செயல்படுத்தியதன் விளைவு … இதோ இன்று ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றி அழுது கரைகின்றனர் எனில் இந்த உறவுமுறையின் பாதிப்புகள் பெண்களுக்கு அதிகம் என்பதை
மகர விழியாள் அறியும் நாளில் என்னவாகுமோ?

வின்னை பார்த்தபடி அங்கேயே அமர்ந்து விட்டான். விடியல் மெல்ல மெல்ல தலை நீட்டியது. விழியை பார்த்து பேச வேண்டும். திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க எண்ணிக் கொண்டான். அவன் எண்ணத்திற்கு எழுந்த ஞாயிறு ஆதரவளிப்பது போல் இருந்தது தன்னை மறந்து அதை பார்த்துக் கொண்டிருந்தான். மெல்லோட்டத்திற்கு என மக்கள் வரத்துவங்கியிருந்தனர். தங்கள் நாளை புத்துணர்வு கொண்டதாக மாற்ற இனியும் இங்கே நின்றால் நேரமாகிவிடும் என உணர்ந்தவன் தனது அலைபேசி அழைக்க அதனை காதில் பொருத்தியிருந்தான்.

"சொல்லுங்கம்மா"
"அமுதா நான் ஸ்ரீ பேசறேன் டா?"
பேசுவது நண்பன் எனவும் சிறு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது.
"என்னடா ஆச்சு அம்மாவுக்கு"
" இல்ல டா அம்மாவுக்கு அட்டாக் மாதிரி இருக்கு நாங்க ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டோம் ஆனா டாக்டர் சர்ஜரி பண்ணனும் சொல்றாங்க
அம்மா உன்ன பார்க்காம எதுவும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றாங்க .நீ உடனே கிளம்பி வரீயா அமுதா."
"அம்மாட்ட பேச முடியுமா டா இல்ல டா ஐசியு ல இருக்காங்க. நீ சீக்கிரம் வாடா " என்றவனிடம்

" ப்ளைட்ல கிளம்பரேன்டா " என்று விட்டு வாகனத்தை உயிர்பித்தான். அடுத்த சில மணி நேரங்கள் எப்படி கழிந்தது. யாரைப் பார்த்தாய் என்றால் பயணச் சீட்டு வாங்கியது. விமானத்தில் ஏறி அமர்ந்தது மட்டுமே நினைவில் இருந்தது. மற்ற எதுவும் கவனத்தில் இல்லை.

இத்தனை விரைபவன் ஒரு முறைக்காகவேனும் அவளிடம் தாயின் நிலையைப் பற்றி கூறியிருக்கலாம். மனைவிக்கு தானே உரிமை மாதவிக்கு ஏது?. சிறுவயதிலேயே தந்தை இறந்திருக்க தாயும் தகப்பனும் தானே என வளர்த்த அன்னையின் உடல்நிலை கவலைக்கிடம் எனவும் காதல் பின்னுக்கு போய்விட்டது.

'நான் இருக்கிறேன் என்னை உபயோகித்துக் கொள்ளேன்…' என்று நெஞ்சத்தில் உருத்தியபடி இருந்த அலைபேசியை எடுத்தான்.
அவள் எண்ணை எடுக்க அது கூடவே அவள் பிம்பத்தையும் காட்டியது. அவளிடம் நேரில் பேசித்தான் சமாதானம் ஆக வேண்டும்.
'அவ கேட்ட வார்த்தைக்கு ஊருக்கு போயிட்டு வந்துதான் பேசனும் அப்பதான் அவளுக்கு பேசினது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியும் . என்னோட காதல் புரியும்'
என்று தனக்கு தானே கர்வ நொண்டி சாக்குகளை சொல்லிக் கொண்டான். அதே அலைபேசியில் நண்பனுக்கு அழைத்திருந்தான் தாயின் உடல் நிலையை 'பற்றி விசாரிக்க… அவன் தயக்கத்தின் ஒவ்வோரு ஷணமும் அவனை அவளிடம் இருந்து நிரந்தரமாக பிரித்துக் கொண்டிருந்தது. வருங்காலத்தில் அவை ஊவா முட்களாய் நின்று உறுத்து போவதை அறிந்திருந்தால் கர்வத்தை ஒதுக்கி கவலையை காதலை பகிர்ந்திருப்பானோ?

,
 
அத்தியாயம் 10

அவன் நிழல் செல்வதை கண்டவள் மனம் நைந்து போனது. அழுது கரைந்தவள் அங்கே கதவடியிலேயே படுத்து உறங்கியும் போனாள். சற்று தாமதமாகவே எழுந்தவள் முகம் கழுவிட்டு
வந்தாள். மீண்டும் முன் தினம் அவளைத் தேடி அவன் வராதது மனதிற்குள் ஏதோ செய்ய
வயிற்றுக்குள் எதுவோ பிறள்வது போல் இருந்தது .

தலை வின் என்று இருக்க தினமும் அவன் தரும் காபியை பருகியதன் விளைவு எனப் புரிந்தது." டேய் அமுதா உன்னால தான்டா இவ்வளவும் மகான்னு வருவல்ல அப்ப இருக்கு. என்ன அழ வைச்சிட்டீல்ல "
எனப் புலம்பியவள்.ஆழியன் ஊருக்கு சென்றது அறியாமல் பாலை குளிர் பதனப் பெட்டியில் தேட அதை வாங்க வேண்டும் என்பது புரிய கூடவே அமுதன் வீட்டுக்கு வந்திருப்பான் . அவன் முன் வந்தால் எப்படி எதிர் கொள்வது எனும் தயக்கமும் தோன்ற கண்ணாடி முன் நின்றவள் தலையை மட்டும் வாரி உயர்த்தி கூந்தல் மாட்டியை சொருகினாள். முன்னும் பின்னும் பார்க்க டிராக் மற்றும் டீசர்ட் பொருத்தமாக இருப்பதாக தோன்ற அதை மாற்ற முயலாமல் கதவை திறந்தாள்.
கீழே வந்தவள் விழிகள் அவன் வந்துவிட்டானா என்பதை அறிய அவன் வாகனம் நிறுத்துமிடத்தை பார்க்க அது அங்கே நின்று கொண்டிருந்தது. "வீட்ல இருந்து கிட்டே ஆட்டம் காட்டறயா எவ்வளவு நேரத்துக்குன்னு பார்க்கறேன். "
தானும் அழைக்க முயலவில்லை. பால் வாங்கி வந்தவள் மீண்டும் வீட்டுக்கு வர அங்கு இருந்த காவலாளி " மகா மேடம்" என்றதில் நின்றவள் திரும்பி அவனைப் பார்க்க
"மேடம் மெயிண்ட்டனஸ் சார்ஜ் தரனும்." எனவும் கைப்பையை சோதித்தாள் அதில் அவ்வளவு தொகை இல்லை என்பது தெரிய...
" வீட்டுக்கு வாங்க தரேன்"
என்றவள் முன்னே நடந்துவிட காவலாளியும் தொடர்ந்தான். தன் வீட்டு கதவை திறந்தவள் காவலாளிக்கு அதற்கு உரிய தொகையை தந்தாள். திரும்பிய காவலாளி ஆழியன் வீட்டை பார்த்தவன்.

"மேடம்…"
"என்ன"
" அமுதன் சாருக்கும் சேர்த்து நீங்களே தந்துடறீங்களா?"
"அமுதன் வீட்ல தான இருக்கான்."
" சார் காலைலயே ஊருக்கு போயிட்டாங்க உங்களுக்கு தெரியாதா?"
இதை கூறியவன் பார்வையில் என்ன இருந்ததோ?

" நேத்து நைட் பைக் எடுத்துட்டு போனாரு. அப்புறம் காலைல தான் வந்தார். வந்த உடனே கிளம்பிட்டார்."

என ஒப்புவித்த அவனுக்கு கையில் பணத்தை கொடுத்தவள்
"மீதி அப்புறம் கொண்டு வந்து தரேன் " என்ற காவலாளியின் வார்த்தைகள் அவளை அடையவே இல்லை. கதவை அடைத்து விட்டு
உள்ளே திரும்பியவள் உயிரற்ற மரமாக அந்த இருக்கையில் விழுந்தாள்.

"போய்விட்டானா…"
"அவ்வளவு தானா?"

நேற்று வரை அவளது செல்ல ஊடல்களை உடைத்தவன்.அன்று அவள் உடல் உபாதையில் உணவை செரிக்க முடியாமல் வயறு கர்ப்பம் தாங்கியிருக்கும் பெண்னைப் போல் வீங்கிஇருக்க அதைக் கண்டவள் மனநிலை பிறன்டவள் போல்
"உன்னால தான் டா என் கேரியர் போச்சு " என திட்டியபடி அவனை அடித்தவள் சோர்வுற்று கீழே விழ அவளைத் தாங்கிக் கொண்டவன்.

கலைந்த அவள் தலையை கோதியபடியே
"ஒன்னும் இல்லை மகா நீ ரொம்ப நாளா ஒழுங்கா சாப்பிடல வெறும் ஜூஸ் தண்ணி ப்ரூட்ஸ் மட்டும் தான் சாப்பிட்டுறுக்க அதனால இப்ப திட ஆகாரங்களை அது சத்துள்ளதா இருந்தா கூட செரிக்கற சக்திய இரைப்பை இழந்திருச்சி அதனால தான் உன் வயிறு வீங்கி இருக்கு"

என்றவன் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல மருத்துவரும் ஆழியன் கூறியதையே உறுதிப்படுத்தியவர் சில மருந்துகளை பரிந்துரைத்தார். அதன் பிறகும் மனம் தெளியாமல் அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் குழந்தைக்கு விளக்கம் சொல்வது போல் சொல்லி தாயாய் தன்னை தாங்கியவன் இன்று
'ஏன்? ஏன் ? எப்படி போகலாம் ? அப்படி என்ன
சொன்னேன். இதுவரை கொள்ளாத கர்வத்தை இப்போது பிடித்துக் கொண்டு தொங்குகிறான்.'

என தனது கைபேசியில் அவனுக்கு அழைக்க போனவள்.

"நான் உனக்கு வேண்டாம்னா …
நீ எனக்கு வேண்டாம்…
நீ என்ன பெரிய இவனா நீ இல்லாம வாழ முடியாதா இதுக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ. அப்படியே இருந்துக்கறேன்"

என உரக்க கூறியபடி எழுந்து கொண்டவளின் கண்கள் மீண்டும் கலங்க துவங்க குளியல் அறைக்குள் நுழைந்தாள். இருந்தாலும் அழுகை கட்டுக்குள் வரவில்லை.

அன்று முன்னிரவில் பால்கனியில் மெல்லிருள் போர்த்தியிருக்க இவள் ஊதா நிற மேக்ஸியும் அவள் கூந்தலும் . என்னவாம் இவளுக்கு? என தங்களுக்குள் உறவாடி புறணி பேசிக் கொண்டிருக்க... அதைக் கவனிக்காதவள் தன் முன் இருந்த அலைபேசியை வெறித்தபடி இருந்தாள்.

அழைக்கவா? அழை அதில் என்ன பிழை? என்றது ஒரு நொடி .வேண்டாம் என்ன பிழை என்று என்னிடம் பேசாமல் ஓடினான்.
என மறு நொடி இது போன்ற எண்ணங்களின் ஊடாகவே காலையில் இருந்து அமர்ந்திருக்கிறாள்.

சட்டென்று அலைபேசியில் ஆழியவன் ஒளிர மகரமவள் வெளிச்சம் பெற்றாள் . அலைபேசியை பார்த்துக் கொண்டே இருக்க அது அழைத்து ஓயந்தது. மீண்டும் அவனே அழைக்க அழைப்பை ஏற்காமல் துண்டித்தவள் என்ன தவறு செய்தேன் என ஊடல் கொண்டாள். அவன் அனைத்து வகையிலும் முயலுவான் என்பது புரிய அவனது என்னை ப்ளாக் செய்தவள் அலைபேசியை அனைத்து வைத்தாள். அவன் அழைப்பை ஏற்ற மறுநொடி
அவள் அவனதாவிடுகிறாளே பிறகு எப்படி தன்மானம் நியாத்தை பற்றி அவனிடம் விளாச…

ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து அழைப்புகள் வரவில்லை. இவள் முயற்சித்தாலும் பலனில்லை அவனும் கோபமாக இருக்கிறான் போல என்று எண்ணிக் கொண்டவள் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.ஆனாலும்
அடி மனது பிசைய தோன்றிய உள்ளுணர்வுக்கு பதில் தேட முனையாமல் அதை ஒதுக்கி விட்டாள் .

இப்படியே வாரம் ஒன்று கழிய வாடிய அன்று
அந்த பூங்கொத்துக்களை எடுத்துப் குப்பையில் போட்டாள். அந்த மோதிரத்தையும் தாலியையும் தட விப் பார்த்தவளுக்கு எல்லாம் சரியாக இருந்திருந்தால் அன்று விடியல் எத்தனை இனிமையாக இருந்திருக்கும். அவன் மனைவி நான் அந்த தினம் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற நினைவில் அவனும் அவளும் மணவறையில் இருப்பது போலும் அவன் கரங்களில் இந்த மாங்கல்யத்தை வாங்கிக் கொள்வது போலும் கனவு விரிய அப்போது கேட்ட அலைப் பேசி அழைப்பில் நனவுக்கு வந்தவள் மனம் கனக்க மீண்டும் அழுகை வந்தது.முயன்று தொண்டைக்குள் விழுங்கியவள்.அந்த பேழையை அலமாரியினுள் வைத்தவள்

அலைப் பேசியை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஷோவிற்கான அழைப்பு இப்படியே இருந்தால் சரிவராது என எண்ணியவள் தனது வேலைக்கான அட்டவனையை பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை என்றதும் ஒப்புக் கொண்டவள் கிளம்பி விட்டாள். தனது வேலை எதையும் மறக்க வைக்கும் என்பதை அறிந்து கொண்டவள்.

இது நாள் வரை அவனில் மூன்றாம் நபர் ஒருவருக்காக ஐயம் கொண்டு சண்டையிட்டது இல்லை என்பதையோ… ஒரு நாளும் அவனிடம் வெளியே போ என்ற வார்த்தையை பிரயோகப்படுத்தியது இல்லை என்பதையோ அவள் யோசிக்கவில்லையா இல்லை விதி அதற்கு இடம் தரவில்லையோ?

ஹெலன் மூன்றாம் நபராக இருந்தாலும் கண்முன் நிகழ்ந்த அவளது இறப்பு தன்னைப் போன்ற அவளது வாழ்வியல் முறையில் அவளும் இருந்தது. இந்த காரணிகள் அவளை மகரவிழியின் மனதுக்குநெருக்கமாக்கியிருந்தது. அவனுக்கோ புரிந்தாலும் எவளோ ஒருத்திக்காகவா எனும் கர்வத்தின் புறம் மனம் மேலோங்கி இருந்தது. ஆனால் வாழ்வோ வீண் கர்வத்தில் கோபத்தில் எனை விரையம் செய்யாதே,! மறுநொடி உனது இல்லை என்பதை வியர்த்தமான உனது வாழ்வு உணர்த்தும் என கதறிக் கொண்டிருந்தது.

இதோ இன்றும் வியர்த்தமாகிப் போன தன் காதலின் அந்த கனங்களை எவ்வாறேனும் மாற்றியமைக்க இயலாதோ என தகிக்கும் அவன் மனதிற்கு ஏது ஆறுதல் அவன் தான் வாழ்கை எனும் புதிரின் வழியில் வந்த புதை குழியில் வீழ்ந்து வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கிறானே.

அன்றைய ஷோவில் ஹெலனின் காதலன் வேறு ஒருவளுடன் இழைந்து கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு மேனியெங்கும் மிளகாயை அரைத்து பூசியது போல் காந்தியது நேற்று வரை அவளது காதலனாக அறியப்பட்டவன் அவள் இறந்த இடத்தின் சூடு கூட இன்னும் ஆறவில்லை . அதற்குள் இன்னோரு பெண்ணுடனா சீ மனிதனா இவன் மிருகம் அல்லவா … பெண் சுகம் இதற்கு தான் சேர்ந்து வாழ்ந்தானா…என நினைத்தவள் அவனிடம் நறுக்கென்று கேட்க எண்ணி கோபத்துடன் சென்றாள்.
 
அத்தியாயம் 11

ஹெலினின் காதலன் அமர்ந்த இருக்கைக்கு அருகில் செல்லவும் அந்த குழுவில் இருந்த ஒருவளுக்கு கூறிய பதில் இவளுக்கு காதில் விழுந்தது.

"வீ ஆர் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ் பட் வீ போத் நீட் அ கம்பனி தட்ஸ் ஒய் வீ ஆர் இன் தட் ரிலேசன். தட்ஸ் ஆல்"

என்று தோளை குலுக்கியவன் தனது இன்றைய இணையுடன் நகர்ந்து விட்டான். மகரவிழி தான் சிலையாக நின்று விட்டாள்.. அவளுடைய வட்டத்தில் நிறைய பெண்கள் வாய்ப்புகளுக்காக இது போன்று நடந்து கொள்வதும் அதற்கு கட்டாயப்படுத்தப்படுவதும் உண்டு, ஆனால் அவளுக்கு அவளது அன்னை அரனாய் இருந்து தடுத்திருந்ததாலோ என்னவோ இது போன்ற அழைப்புகள் வந்ததில்லை. மேலும் இப்போது அமுதன் இருந்ததால் யாரும் நெருங்கி எதுவும் கேட்டதும் இல்லை.


காதல் என்பது சிறிதும் இன்றி இது என்ன மாக்கள் போல தேவைப்படும் வரை ச்சீ.. என நினைக்கும் போதே எப்படியோ வந்தது. போயும் போயும் …. இவர்களுக்காகவா அமுதனிடம் கோபப் பட்டோம் என தன்னை மீண்டும் ஒரு முறை நிந்தித்தவள். அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

யோசிக்க …அதற்காக இல்லை என்பது புரிந்தது. ஒரு பாதுகாப்பற்ற உணர்விலும் தான் என்ன செய்கிறோம் பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிவிட்டதும் செய்ததும் புரிய? கூடவே அவனது பேரன்பும் காதலும் அவளை ஆட்டிவித்தது என்ன செய்வது என்று புரியவில்லை. அவனது பாராமுகம் அதனால் உண்டான பயமும் அதிகமாக தாக்க... அவளது இப்போது அவள் மனம் கோபக் குழந்தை நிலையில் அன்னையின் அமுதம் தேடும் குழவியாக மாறி வீறிடத் துவங்கியிருந்தது.


அதில் கண்கள் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டே தனது வாகனத்தை கிளப்பியவள் வரும் வழி முழுவதும் அவனுக்கு தான் அத்தனை மன்னிப்பு காதல் செய்திகள் அத்தனை அழைப்புகள் ஆனால் எதுவும் அவனை இனி மீட்டுக் கொணராது என்பதை அறியவில்லை அவள்.

" அமு இதுக்கு மேல தாங்காது டா வந்துருடா இல்ல போன யாவது எடு ஐ நீட் யூ இனி உன் கூட சும்மா பேச்சுக்கு கூட கோபப்பட மாட்டேன் டா "

என வாய்விட்டு புலம்பியவள்.

வாகனம் ஒன்றின் ஒலிப்பானிற்கு நினைவுக்கு வந்தவள் அந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கினாள். அப்போது தான் திரும்ப வேண்டிய வளைவை விட்டு தள்ளி வந்து விட்டதை கவனித்தவள். சை எனச் சலித்துக் கொண்டவள் மெயின் ரோட்டை சுற்றிக் கொண்டு மீண்டும் குடியிருப்பிற்குள் வந்திருந்தாள். தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கதவைத் திறந்து இறங்கியவள் அப்படியே ஆனந்தத்தில் நின்றுவிட்டாள்.

எதிரில் வந்த நின்ற வாகனத்தில் இருந்து அமுதன் ஆழியன் இறங்கினான். அவனைக் கண்டதும் மகிழ்சியில் "அமு " என்றவாறு இரண்டு அடிகள் வைத்தவள் அவனைத் தொடர்ந்து இறங்கியவளையும் அவள் கழுத்தில் இருந்த புது மாங்கல்யத்தையும் கண்டவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.
என்னோட அமுதனா? எப்படி ?
என நின்றிருந்தாள். அமுதனும் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான். முதலில் அவள் கண் காட்டிய திகைப்பு பிறகு ஆச்சர்ய மகிழ்ச்சி தொடர்ந்து அதிர்ச்சி அதன் காரணத்தால் கண்கள் கலங்கி கடலில் இருந்து வெளியே எடுத்து போட்ட மகரமாய் அவள் துடிப்பதை பார்த்தவன் கால்களும் கைகளும் தன்னை மீறி அவள் புறம் செல்ல அவனது அன்னை செண்பகவல்லி அவன் கையை பிடித்து

"எப்பா அமுதா வாய்யா வீட்ட காட்டு " என்ற அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒரு கனம் அவளைப் பார்த்தவன் தலையை கவிழ்ந்தபடி சென்றுவிட்டான்.

அவளுக்கு அதிர்ச்சியில் அழக் கூட தோன்றவில்லை. அப்படியே சமைந்து விட்டாள். பொய்யாக இருக்குமோ ஏமாற்றுகிறானோ ? அப்படித்தானோ ? எனும் ஐயத்தை தான்
காவலாளி

"சார் நீங்க ஏன் லக்கேஜ தூக்கிட்டு நான் எடுத்து வரேன். வாழ்த்துகள் வீட்டம்மாங்களா ? அழகா இலட்சணமா மகா லெட்சுமி மாதிரி இருக்காங்கயா? "

என்றவனுக்கு "ஆமாங்க கல்யாணமாகி மூனு நாள் தான் ஆகுது. இது மருமக பேரு அமிர்தா. "


என்ற வார்த்தைகள் எஞ்சியிருந்த அவள் உயிரை வதைபடாமல் கருனைக் கொலை செய்து இருந்தது. அதன் மகர விழிக்கு எப்படி வீட்டுக்கு வந்தாள் என்ன நடந்தது ஒன்றும் நினைவில்லை. இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்று மட்டுமே அவளுக்கு தோன்றியது. சாக வேண்டும் என்றால் கூட உயிர் வேண்டும் உரம் வேண்டும் அதைத் தான் துடைத்தெடுத்திருந்தே நடந்திருந்த நிகழ்வுகள்.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்திருந்தாளோ தெரியாது.கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள்.அங்கே அமுதன் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அவள் கதவை அடைக்கப் போக வெகு சுலபமாக அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான்.
வெளியே தள்ள முயன்ற அவளை திமிற வளைத்து பிடித்தான்.

"இப்பவாது நான் சொல்றத கேளுடி?"

அவனது கெஞ்சல் வெடுக்கென்று அவன் கரத்தை தள்ளியவள்

"சொல்லு…நீ எப்படி என்ன கொன்னனு நீ சொல்லி நான் கேட்கனும் அவ்வளவுதான சொல்லு"


என்றவளின் வார்த்தையில் அதிர்ந்தவன்

"மகா அது வந்து இது…நான்..."

என தயக்கத்துடன் ஆரம்பித்தவன் மேலே எதுவும் கூற முடியாமல் திணற ஆரம்பித்தான். சில வார்ததைகளை கண் மூடி சேகரித்து அவள் முகம் பார்க்க அவை வெளியே வர அடம் செய்தன. இப்போது நிமிர்ந்து கண்களுக்குள் பார்த்தவள்

"முதல்ல நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க மிஸ்டர் அமுதன் ஆழியன்?"

" கல்யானம் ஆகிடிச்சில்ல"

"மகா அது வந்து…" என நிகழந்தவற்றை கூற முயல தயக்கம் இழுக்க அவளோ

"சே எஸ் ஆர் நோ?"

"ம் ஆனா என்ன நடந்துன்னா?"

"அதான் தான் செத்தாச்சே இனி எப்படிங்கற விளக்கம் எதுக்கு எனக்கு?
கல்யானம்ன்னு ஒன்னு ஆனாதான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டியா அப்ப இவ்வளவு நாள் நாம வாழ்ந்த வாழ்கை, காதல் நம்பிக்கை அதுக்கு என்ன டா அர்த்தம் ?. அன்னிக்கு என்னவோ பெரிசா உன் பொண்டாட்டின்னு சொன்னீயே... அது பொய்யா?"


அவள் சீற்றப் பிரவாகம் எடுத்திருந்தாள். அவன் காய்ந்த காதல் சருகென அடித்து செல்லப்பட அதன் மீது உயிர் பயத்தில் தவிக்கும் எறும்பாக இருந்தான். தன் புறம் இருக்கும் ஒதுக்கப்பட்ட உண்மைகளோடு.

"இல்ல மகா "

"அப்ப அத சொல்லியிருக்க வேண்டிய தான டா. நீ எப்படி சொல்லுவ உனக்கு தேவை தீர்ந்து போச்சுல …,?"

என்ன பதில் சொல்வான்? உருகிய இரும்பினை சாட்டையாக செய்து ஓங்கியடிப்பது போல் அல்லவா அவளின் கேள்விகள். அடி விழுந்த அவன் மனம் துடிப்பது போல் பற்றியிருந்த அவள் இதயமும் வெந்து தணிந்தது.

" நாலு பேர் பார்க்க எனக்கு தாலி கட்டல அந்த தைரியத்துல தான இன்னோருத்திய கல்யாணம் பண்ணியிருக்க . உன்ன நம்பி என் புத்திய தான் செருப்பால அடிக்கனும். கல்யாணம் பண்ணாமலே புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்தா இப்படித்தான் என்ன மாதிரி தெருவுல நிக்கனும். இப்படி ஆகிறக் கூடாதேன்னு தானடா பயந்தேன் கடைசில"

என்று அவவை சட்டையை பிடித்து உலுக்கிவளின் கண்கள் பெருக தொண்டை அடைக்க அருகில் இருந்த நாற்காலியில் தலைய கவிழ்ந்து அமர்ந்து விட்டாள்.


கழுத்தில் தாலி இல்லையே தவிர அவளைத் தன் மனையாளாக ஏற்று வாழ்ந்தது உண்மை தானே. ஆனால் எதையும் கூறும் சூழல் அன்று அவனுக்கு இல்லையே…
வாய் இருந்தும் ஊமையாகிப் போனானே..
தன்னை நியாயப்படுத்திட முயன்றவன்

கவிழ்ந்திருந்த அவளுடைய கூந்தலை கோதியவன் அவள் முகத்தை நின்ற வாக்கில் லேசாக தன்னிடையோடு அணைத்துக் கொண்டான்.

" மகா நான் சொல்லறத கேளு இந்த கல்யாணம் என் கைய மீறி நடந்த ஒன்னு அத சொல்லத்தான் "
என்ற வார்த்தைகளில் தான் அவன் மற்றொருத்தியின் கணவன் என்பதும், அவன் அணைப்பினில் இருப்பதையும் அறிந்து தனல் பட்டது போல் விலகியவள் .மடிவெப்பத்திற்கும் வருடலுக்கும் ஏங்கும் பழகிய பூனையாய் தன் உடலும் மனமும் அவனைத் தேடுவதை எண்ணி
தன் மீது அதற்கு காரணமான அவன் மீதும் சினம் மிக

" நீ என்ன சொன்னாலும் கேட்பேன்டா . நீ என்னோட அமுதனா இருந்தா … ஆனா அடுத்தவ புருஷனனோட எனக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. வெளிய போறியா?"

"மகா ப்ளீஸ் … ஒரு தடவை ப்ளீஸ்... "

என்றவனின் இறைஞ்சலில் தன் வசம் இழந்து விடுவோமோ என அஞ்சியவள். கண்ணீர் வழிய இரண்டு கரங்களையும் சேர்த்து குவித்தவள். வெளியே போ என்பதாய் கரம் நீட்ட அதற்கு மேல் எதுவும் பேச இயலாதவனாய் வெளியேறி விட்டான்.

இறப்பு எல்லோருக்கும் வருவது தான் அதற்காக எப்படி இறப்பது என்றோ இறந்தபின் என்ன நடக்கும் என்றோ பரிசோதித்து பார்த்து முடிவு செய்ய இயலுமா?

அதன் பிறகு அவன் அவளைப் பார்த்தது மேத்யூ உடனான திருமண அறிவிப்பில் தான் ...
 
அத்தியாயம் 12


அமெரிக்காவில்...

வாகனத்தில் செலுத்திக் கொண்டு இருந்த ரகுநந்தனுக்கு எங்கே செல்கிறோம் எதற்காக ஏன் என எந்த கேள்வியும் இன்றி சாவி கொடுத்த பொம்மை போல் உட்கார்ந்திருக்கும் மகளைப் பார்க்க பார்க்க மனம் தாங்கவில்லை.

அன்று மகரவிழி வந்து நின்ற கோலம் நினைவு வந்தது. எதில் இருந்தோ தப்பி வருவது போல அத்தனை சோர்வும் சோகமுமாக வந்திருந்தவளை கண்டவருக்கு எதுவோ பெரிதாக இருப்பது புரிந்து உள்ளே என்னவோ பயம் முளைத்தது ஆனாலும் எதுவும் விழியிடம் கேட்கவில்லை.

முதலில் ஒரு வாரம் அறையில் இருந்தே வெளியே வரவில்லை. உணவும் அப்படித்தான் இஷ்டம் இருந்தால் கொறிப்பது இல்லை .
அதுவும் கிடையாது .மகர விழியும் முன்பே தானும் அமுதனும் காதலிப்பதாக பாதி உண்மையை கூறி இருந்தாள். அதன் அடிப்படையில் மகளின் காதலில் ஏதோ பிரச்சனை என்பதை ஊகித்தவர்.எப்படியும் மீட்டாக வேண்டும் என்ற உந்துதலில். வெளியே அழைத்து வந்திருந்தார்.

வந்ததில் இருந்து களைத்து கருத்து கருவிழி விழுந்து மிகவும் மெலிவாக இருந்த மகரவிழியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். பிறகு மனமாற்றத்திற்காக வேறு எங்காவது அழைத்து செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் பெயரை பதிந்துவிட்டு தங்களது முறைக்கு காத்திருந்தனர். அப்போது இரண்டு வயது குழந்தை ஒன்று அவள் அன்னை கரத்தில் இருந்து இறங்கி அங்கும் இங்கும் ஓட அதைப்பார்த்தவள் முகத்தில் லேசாக சிரிப்பு வர அதைப் பார்த்தவர் தானும் புன்னகைத்து விட்டு சற்று இறுக்கம் தளர்ந்திருப்பதை கண்டு மேலும் தளரச் செய்ய

" என்ன ஆச்சு மகி எதாவது பிராபளமா உன்னோட லவ்வர் அவன் பேரு என்ன? ஆங்... அமுதன் அவனுக்கும் உனக்கும் எதாவது சண்டையா ?எனக்கு இந்த மாசத்தோட வேலை முடிஞ்சது. அப்பா இனி எப்பவும் உன் கூட தான் நேரா அவங்க வீட்டுக்கு போறோம் அவங்க அம்மாவ பாக்கறோம் பையன தூக்கறோம் "

என்றவரிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லாதவள். சோகமாய் சிரித்தாள். மேற்கொண்டு ரகுநந்தன் எதுவும் கேட்கும் முன் செவிலியர்

"மகர விழி " என இவள் பெயர் சொல்லி அழைக்க உள்ளே போனார்கள். முதலில் சில
பரிசோதனைகளை செய்தவர்

" வாழ்த்துகள் மகரவிழி நீங்க அம்மாவாக போறீங்க "

எனவும் அதிர்ச்சியில் ரகுநந்தன் எழுந்து விட்டார். தன் மகள் காதலித்து இருப்பாள் ஆனால் திருமணம் ஆகாமலே தாயாகி இருப்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை .
மகர விழியும் அதிர்ந்து போனாள். கூடவே குழம்பியும் போனாள். இதை கவனித்த மருத்துவர்
"என்னம்மா என்ன பிரச்சனை"

"ஆனா எனக்கு சரியா வந்து தே?"

"சிலருக்கு அப்படி இருக்கும் இதை இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்னு சொல்லுவோம் குழந்தை கர்ப்பபையில் பதியும் போது வரும்.
இது உங்களோட வழக்கமான முறைகளில் வருவதால் நீங்க கர்ப்பமா இருக்கிறது உங்களுக்கு தெரியாது"

என்று விளக்கியவர் மகரவிழியை உள்ளறைக்கு அழைத்து சென்றவர் மற்றுறொறு முறை தீர பரிசோதித்து
ஸ்கேன் செய்தவர் மூன்று மாத கரு ஆரோக்கியமாக இருப்பதை
உறுதி செய்தார்.

தனது வயிற்றில் கை வைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது ஆனந்தத்தில்.
"வீட்டுக்கு போகலாம் பா " என்று வாகனத்தில்
ஏறி அமர்ந்து கொண்டவள் வயிற்றை மெல்ல
வருடிய படி அமைதியாக வர அவளைப் பார்த்துக் கொண்டே வந்த ரகுநந்தனுக்கு புரிந்து போயிற்று மகர விழி குழந்தையை அழிக்க மாட்டாள் என்பது.
அடுத்து என்ன செய்வது ? என்பதை ஆலோசிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் அவரும் அமைதியாகி போனார்.

வீட்டிற்கு வந்ததும் மகரவிழி தனதறை நோக்கிப் போக "கொஞ்சம் உட்காரு மகா "
எனவும் ரகுநந்தன் எதைப் பற்றி கேட்க போகிறார் என்பது புரிய எப்படியும் ஒருநாள் எதிர்கொண்டு தானே ஆகவேண்டும் எனும் நினைவில் சற்று தைரியத்துடன் வந்து அமர்ந்தாள்.

"என்ன முடிவு பண்ணியிருக்க மகா?"

" பெத்துக்கலாம்னு"

"குட் அப்ப அப்பா?"

" என் குழந்தைக்கு அம்மா மட்டும் தான்."

"என்ன நடந்தது மகி ?"

என்று நேரடியாக வினவியவரிடம்
"என்ன மன்னிச்சிடுங்கப்பா? நான் அவசரப்பட்டுட்டேன்"

"அப்ப….?"

"அமுதன் …என்ன விட்டு போயிட்டான் பா "

என்று கதறிவிட்டாள். அவள் கூறியது முதலில் ரகுநந்தனுக்கு புரியவில்லை. பிறகு தான் சுதாரித்தவர் அவளை அமைதிப்படுத்துவது முக்கியம் என்று உணர்ந்தவர் முதலில் அவளை
அழவிட்டாலும் பிறகு என்ன நடந்தது என்பதை
அறிந்து கொண்டார்.ஹெலனின் இறப்பு அதன் தாக்கத்தில் தான் கூறிய வார்த்தைகள் அதன் விளைவுகள் பிறகு நிகழ்ந்தவை அனைத்தையும் கூறியிருந்தாள்.

எதிர்க்க ஆள் இன்றி ஒரே பெண் என்பதால் அவள் நினைத்ததே நடந்து பழக்கப்பட்டவள். விட்டு கொடுப்பதன் தேவையை உணரந்ததே இல்லை.

"எனக்கு எப்படிப்பா தெரியும் அவனுக்கு கல்யாணம்னு ? அவன் எங்கிட்ட சொல்லாம போன கோபத்தில இருந்தேன்.
எப்பவும் நான் கோபப்பட்டால் அவன் தான் வந்து பேசுவான் . மஞ்சும்மா இத மாறி கோபப்பட்டா நீங்க தான வந்து பேசுவீங்க,
அது மாதிரி தான் அவனயும் நினைச்சேன் ஆனா அவன் வேற கல்யாணம் பண்ணுவான்னு நினைக்கல."


"அவன் என்ன சொல்ல வந்தான்னு கேட்டுருக்கலாம்ல டா…"

" அன்னிக்கு அவன் போன் பண்ணும் போது எடுக்கல இனி கேட்டு என்ன பிரயோஜனம் நடந்தது இல்லைன்னு ஆகப் போகுதா?"

" எதாவது நியாமான காரணம் இருக்கலாமே?"

"கண்டிப்பா இருக்கும். அவனே எனக்கு இல்லைன்னு ஆன பிறகு அந்த நியாயத்த தெரிஞ்சி நான் என்ன செய்யப் போறேன்."

"இல்லை டா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாமே நான் வேனா அமுதன் இல்ல அவங்க அம்மாட்ட பேசிப் பார்க்கட்டுமா?"

என்றவரை பார்த்தவளுக்கு அவர் கண்களில் தன் மகளின் வாழ்கை பறிபோகிறதே என்ற தவிப்பும் எப்படியாவது சரிசெய்து விட மாட்டோமா என்ற துடிப்பும் தெரிந்தது. ஆனால் அதில் பலன் இருக்காது என்பதை அறிந்தவள்
மனதில் துயரம் கவிழ்ந்தது. அதை விலக்கி வைத்தவள்

"எப்படி அந்த பொண்ண விரட்டிட்டு என்ன கல்யாணம் பண்ணி வைக்க வா? அப்ப அந்த பொண்ணு நிலைமை . அப்படி ஒருத்தி பிச்சை போட்டு வாழ...நான் என்ன அவ்வளவு கேவலமா வா போயிட்டேன். எனக்கு படிப்பு இருக்கு வேலை இருக்கு தனியா வாழற அளவுக்கு உறுதியும் இருக்கு . எவன் கால்லயும் விழுந்து வாழ்கையை பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை."


"என்னை மீறி நீங்க அவங்க கூட பேச முயற்சி பண்ணா நான் உங்களுக்கு இருக்க மாட்டேன்"
என்றவள் எழுந்து சென்று விட்டாள். ரகுநந்தன் தான் கொதிக்கும் எண்ணெய்யின் துளிகள் தன் மீது விழுந்தது போன்று துடித்துப் போனார்.
என்ன செய்வது என்றறியாமல் திகைத்து போனார். ஆனாலும் மனம் மகராவின் வீர்யத்தை பார்த்து அப்போதைக்கு ஒத்தி வைத்தாலும் மெல்லக் கொல்லும் விஷமாய் அவரது இதயத்தை தாக்க துவங்கியிருந்தது.

உள்ளே வந்தவளுக்கு அன்று நடந்தவை நினைவுக்கு வந்தது.

மும்பையில் …

இதய அறுவைச் சிகிச்சை முடிந்து
ஓய்விலிருந்த செண்பகவல்லியும் அதைத் தான் எண்ணிக் கொண்டிருந்தார்.


அன்று…அழைப்பு மணி ஓசை முதலில் அதிர்விலும் அழுகையிலும் இருந்த மகர விழியவள் காதில் விழவில்லை. பிறகு கண்களை துடைத்துக் கொண்டு அழுகையை அடக்கிக் கொண்டவள் கதவை திறக்க அங்கே செண்பகம் நின்றார். என்ன சொல்வது என புரியாமல் கதவை விரியதிறந்து உள்ள வர வழி விட .அவரோ இவளை அளவிடும் பார்வை பார்த்தபடி நின்றார் .கால்கள் உள்ளே வர தயங்கியது என்றாலும்...இப்போது வந்த நோக்கம் நிறைவேற வேண்டுமே... இது நாள் வரை கணவனுக்காக எத்தனையோ இடங்களுக்கு போய் அவர்களுடன் பேசி சில இடங்களில் உறவினர் உதவியுடன் சன்டையிட்டு அவர்களை விலக்கி
கூட்டி வந்திருந்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட அந்த நரக வாழ்கையை சில நேரம் சமூகத்திற்க்காக சகித்தாலும். பல பொழுதுகளில் கட்டறுத்து ஓட ஒலமிடும் மனதை ஆழியனின் வருங்காலத்திற்காக என தாங்கிக் கொண்டிருந்தார்.

செண்பக மனம் உண்மையில் ராஜமாணிக்கத்தின் இறப்பின் பின் நிம்மதியுற்று தான் இருந்தது. ஏனெனில் இனி இது போன்று புருஷன் எவ கூட எவ வீட்டில் இருக்கானோ எப்படி சரிகட்டனுமோ என்ற நினைவில் இருந்து கிடைத்த விடுதலை.

ராஜமாணிக்கத்தின் திரண்ட சொத்துக்காக பின்னால் வந்த பெண்களையும் அதனால் இவருக்கு இருந்த கெட்ட பழக்கவழக்கம் இதிலிருந்து இவரை மீட்பது அவருக்கு இயலாமல் போயிற்று ஆம்பிளைன்னா அப்படி இப்படித் தான் நாம பொம்பளைக தான் அனுசரிச்சி குடும்பம் நடத்தனும் என்று போதிக்கப்படும் சூழலில் வளர்க்கப்பட்டு வாழ்கைப்பட்டவர் . போதிய கல்வியறிவு இன்மையால் அவருக்கு என்று தற்சார்பும் இல்லை. இந்த வாழ்கையை உதறிவிட்டு சென்றால் தாய் வீட்டிலும் ஆதரவு கிடையாது.

வெளியேறினால் தானும் தனது மகனும் கஷ்டபடவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தவர் தனது சுயம் அழிந்தாலும் தன் மகனுக்கு என அந்த சொத்துக்களை காப்பாற்றி நிர்வகிக்க வேண்டியவரானார்.

ஆகையால் தான் ஆழியனுக்கு இது போன்ற தவறான பழக்கங்கள் பெண் தொடர்புகள் தந்தைவழி வந்துவிடக் கூடாது உயர்தர கல்வி விடுதியில் தங்கி படிக்க வைத்தார். ஆழியனும் புரிந்து கொண்டான் என்றே சொல்ல வேண்டும்
சற்று சுதந்திர சிந்தனையில் வளர்ந்தவன் தனக்காக தன்னை பணயம் வைத்த செண்பகவல்லியின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அதுவும் ஒரு முறை பள்ளியிறுதி தேர்வு முடிந்து ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்தவனை ராஜமாணிக்கம் குடித்துவிட்டு அடிக்க வர தடுத்த செண்பகவல்லியை மூர்க்கமாக தாக்கிவிட்டு சென்றுவிட்டார். குற்றுயிருராக கிடந்தவரை மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொண்டவன் பிறகு ஊருக்கு வந்தது ராஜமாணிக்கத்தின் இறப்பிற்கு தான். கல்லூரி
என அனைத்தையும் வெளியூரில் படித்தவன் மும்பை மாநகரில் எம்பியே படித்தவனுக்கு அங்கேயே வேலை கிடைக்க இங்கு வந்து விட்டான்.

அங்கு செண்பகவல்லி அவனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தவர் அமிர்தாவை பேசி முடித்திருந்தார் மகன் மேல் இருந்த நம்பிக்கையில். அமுதனோ விழியோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.. தனது விருப்பத்தை மறுக்க மாட்டார் என்ற உறுதியில்.

ஸ்ரீதர் தனது கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க போயிருந்தான். அப்போது அவனிடம் அமிர்தாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.. ஸ்ரீதருடன் வந்திருந்த ஒருவன்
"அமுதன் தான் அவங்க அப்பா மாறி அங்க ஒருத்திய வைச்சிருக்கானே. அவளும் பெரிய மாடல் நடிகை இரண்டு பேரும் ஒன்னா ஒரே வீட்டுல இருக்காங்க தாலி மட்டும் தான் கட்டல"

என்ற வார்த்தைகளில் தன் மகனா என்று அதிர்ந்தவர் "அமுதா …" என்றபடி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார்.
 
அத்தியாயம் 13

செண்பகவல்லி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரியவும் ஸ்ரீதரன் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமுதனுக்கு அழைத்திருந்தான்.

விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்குத்தான் வந்தான்.

"ஸ்ரீ என்ன ஆச்சு டா"

"முதல்ல அம்மாவ பாருடா "

தனது தோளில் மாட்டியிருந்த பையை அவனிடம் தந்தவன் கால்கள் தளர உள்ளே போனான். செண்பகவல்லியை பார்க்க மருந்துகளின் உபயத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார். சற்று நேரம் அவர் அருகில் இருந்தவன் . பிறகு வெளியே வந்து

"ஸ்ரீ " எனவும் அவன் அருகில் அமர்ந்தவன்

" முத்துப்பாண்டி தான் நீ அங்க ஒரு பொண்ண வைச்சிருக்கறதாவும் தாலி கட்டாம குடும்பம் நடத்துறான் இனி என்ன கல்யாணம்னு பேசிட்டான். அதுல தான்..."

என்றவனுக்கு மேற்கொண்டு என்ன சொல்வது
எனத் தெரியவில்லை.

"வா போய் டாக்டர பார்த்துட்டு வரலாம்."
என அவனையும் இழுத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றான்.

மருத்துவர் "அவங்க இருதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு இருக்கு இம்மிடியட்டா ஆப்பரேஷன் பண்ணணும்."

"ஒகே டாக்டர் பண்ணிடலாம்"
என்று விட்டு வர இங்கே செண்பகவல்லியோ
அறுவைச் சிகிச்சை இப்போது வேண்டாம் என்றும். வீட்டிற்கு போக வேண்டும் என உறுதியாய் நின்றார். வேறு வழியின்றி மருத்துவர்களிடம் பேச மனதை பாதிக்கும் எந்த விடயத்தையும் இப்போது கூற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தனர். மாத்திரை மருந்துகளையும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


அமுதனுக்கோ எது நடக்க கூடாது என்று நினைத்தானோ அதுவே நடந்துவிட்டது இனி செய்வது எனப் புரியவில்லை. ஏற்கனவே ராஜமாணிக்கத்தின் ஒழுங்கீனங்களால் இற்று போயிருந்தவர் எளிதில் மகராவை ஏற்க மாட்டார் என்பதை உணர்ந்து தான் இருந்தான்.
ஆனால் அதற்காக மகராவை ஏமாற்றவோ கைவிடவோ அவன் தயாராக இல்லை.
செண்பகவல்லியிடம் பேசி புரியவைத்து மகராவை மணந்துகொள்ள வேண்டும் எப்படியும் தனக்காக செண்பகவல்லி மகர விழியை ஏற்றுக் கொள்ளுவார். என்று நம்பிக்கை கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்தவனுக்கு அலைச்சல் அதிகமிருக்க குளித்துவிட்டு துண்டை கூட மாற்றாமல் அலைபேசியை எடுத்தவன். மகர விழிக்கு தான் அழைத்தான்.அவள் மீது ஒரு வாரமாவது கோபமாக இருக்க வேண்டும் என்ற அவனது உறுதி அவனைப் பார்த்து சிரித்தது. இவனோ தன்னை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.

அவள் எடுக்கவில்லை என்றதும்
"ஊருக்கு வரேன் ன்னு சொல்லாம வந்தது தப்பு தான் மகா அதான் இப்ப பேசறனே போன எடுடி
சண்டையாவது போடு "
அலைபேசியை பார்த்து வாய் விட்டு புலம்பியவன் மீண்டும் அழைக்க போனான். அதற்குள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து
"உங்கள அம்மா கூப்பிடறாங்க."
என்று வந்து நின்றாள்.
"வரேன்…"
அவர்களுக்கான சமாதானப்படலம் நீண்ட நேரம் எடுக்கும் என்பதை உணர்ந்து
"வந்து உன்ன வைச்சிக்கறேன்"
திரையில் இருந்த அவளிடம் கொஞ்சிக் கொண்டான்.

அமுதன் ஆடை மாற்றிக் கொண்டு இறங்கி வரவும் செண்பகவல்லி
"வா அமுதா " என்று அழைத்தவர். அமிர்தாவையும் அவளது தந்தை சிவசாமியையும் காட்டி
"இந்த பொண்ணு பேரு அமிர்தா நமக்கு சொந்தகார பொண்ணு உனக்கு பேசிமுடிச்சிட்டேன். இது பொண்ணுக்கு அப்பா சிவசாமி இவங்க மீனாட்சி பொண்ணோட அம்மா .வர்ர வெள்ளி கிழமை நம்ம முருகன் கோயில்ல கல்யாணம். அமிர்தா எனக்கு மருமகளா நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் தான் எந்த ஆப்ரேசனும் பண்ணிக்குவேன்."

என மிகத் தெளிவாக தனது முடிவை அறிவிக்க
பதறிப் போனவன்

"அம்மா ஏன் மா இவ்வளவு அவசரம். முதல்ல உங்க ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும் அதுக்கு அப்புறம் இத பத்தி பேசலாம்."

"ஆமா சம்மந்தி உங்க ஆப்பரேஷன் நல்ல விதமா முடியட்டுமே " என்று சிவசாமியும் மீனாட்சியும் கூற

"இல்ல அண்ணே எனக்கு இத மாத்தி வைக்க இஷ்டமே இல்லை. " என்றவர்

"அமுதா இதுவே எனக்கு அதுவே கடைசியா இருந்தா என்ன செய்ய உன்ன கல்யாண கோலத்திலயாவது பார்த்துக்கறேன் அந்த பாக்கியத்தயாவது கொடுய்யா"

என்றவரை மீறி எதுவும் பேசவே முடியவில்லை.
கூட அவன்தான் சிந்திக்கும் சக்தியை இழந்திருந்தானே. மேற்கொண்டு திருமண விவகாரங்கள் பற்றி எது எதுவோ பேச இவர்கள் பொம்மைகளாகத்தான் இருந்தார்கள்.
ஒன்று இவன் என்றால் மற்றொன்று அமிர்தா.
அவளும் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை.

செண்பகவல்லியின் உடல்நிலை ஆழியனது காதலுக்கு எதிராகப் போனது. ஒரு நிமிடத்தில் கூறிவிடலாம். ஆனால் அது அவரை நிரந்தரமாக பிரித்துவிட்டால் அந்த குற்ற உணர்ச்சிக்கு பதில் கூற முடியாது. ஆனால் இன்னொரு பெண்ணை மகராவிற்கு பதில் அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தான் நகரும் விரகின் ஒரு புறம் நெருப்பெரிய மறுபுறம் நகரப் பார்த்தால் அங்கும் நெருப்பே தெரிய நடுவில் நின்ற புழு
அனல் தாங்காது கீழே குதிக்க பார்க்க அங்கும்
தனல் தகிக்க எம்பி குதிக்கவும் அங்கு இருக்கவும் இயலாமல் தவிக்கும் புழுவை ஒத்தவனாகிப் போனான்.
"அமுதா கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்கனும். இன்னும் இங்க பக்கத்தில தெரிஞ்சவுகளுக்கு பத்திரிக்கை வைச்சா போதும் மத்தவுகளுக்கு நான் போன்ல சொல்லிக்கறேன் பத்திரிக்கையை கூரியர் போஸ்ட் பண்ணிடலாம். நம்ம தவசுப்பிள்ளைய சமையலுக்கு சொல்லிட்டேன்."

என்றவரின் முகத்தில் தெரிந்த மகிழ்சியை பார்த்தவனுக்கு இதுவரை இந்த பொலிவை அவரிடம் கண்டது இல்லை. என்பது நன்றாகவே தெரிந்தது.
"நீங்க அமைதியா ரெஸ்ட் எடுங்க மா. நான் பார்த்துக்கறேன் "
என்றவன் வெளியே வந்தான்.இரண்டு தினங்களில் திருமணம் அனைத்து வேலைகளையும் அவனே செய்ய வேண்டும்
தனக்கு தானே சமாதி எழுப்புவது போல் மூச்சு முட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அவனுக்கு அதுதான் விதித்திருந்தது. எதிரிகள் என்றால் வீழ்த்தலாம் உறவுகள் என்றால் விலகலாம் அன்னை என்றால் அன்பில் என்றால் ஆழியன் அமிழ்ந்து கொண்டிருந்தான் நீந்த தெரிந்தும்…

இதில் ஒரு முறையாவது அமிர்தாவை நேரில் பார்க்கவோ இல்லை பேசவோ இல்லை. இதில் ஏதாவது ஒன்றை செய்திருந்தாலும் பின்னாளில் வர இருப்பதை தவிர்த்து இருக்கலாம்.

முருகனின் சன்னதியில் நிற்க எதிரில் அமிர்தா நின்றாள். தாலியை கையில் எடுத்து அவளைப் பார்க்க அவளது கண்ணுக்கு தெரிந்தது என்னவோ மகர விழிதான். அவள் நினைவிலேயே மாங்கல்யத்தை அணிவித்து இருந்தான்.


ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறத் துவங்கியது. மும்பையை நோக்கிய பயணத்தில் பயத்தில் அன்று அவளுக்கு அழைத்தவன் அதன் பிறகு அழைக்கவே இல்லை. என்னவென்று கூறுவான் நான் உன்னை விட்டு விலகிவிட்டேன் என்றா ? எனக்கு திருமணம் என்றா ?

அன்பும் ஆசையும் நேர்மையும் கூட மெல்ல கொல்லும் என்பதை அமுதன் அனுபவித்து தெரிந்து கொண்டிருந்தான். செண்பகவல்லி அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். அதுவும் வாகனத்தில் இருந்து இறங்கியவுடன் அவனது அதிர்வையும் எதிரில்
நின்ற மகரவிழியின் நிலையையும் பார்த்தவர்.

நிரந்தரமாக விழியை அகற்ற எண்ணியே வந்தவர். அவளது அழுத முகத்தையும் கோலத்தையும் கண்டவர் மனதில் சிறு வேதனை எழத்தான் செய்தது. தவறு செய்துவிட்டோமோ என்று மனம் துடித்தது. இருந்தாலும் இவளைப் போன்ற பெண்ணை மருமகளாக ஏற்க முடியாது என்பதும் மனதிற்கு தெளிவாக புரிய . தொன்டையை செருமிக் கொண்டவர்.

"இங்க பாருமா எனக்கு சுத்தி வளைச்சி பேச வராது. நீ என் பையன் வாழ்கைல இருந்து. விலகி நின்னுக்க.அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டா. மீறி நீ வந்தா உன்னோட பெயர் கெட்டுபோகும்.பார்த்து நடந்துக்க புரியும்னு நினைக்கிறேன்.இதுல இருபத்தி லட்சம் இருக்கு. சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு "

என்றவர் வெளியேறப் போக

"ஒரு நிமிஷம் இருங்க. " என்ற மகரவிழி அந்த பேழையை எடுத்து வந்தவள் . இந்தாங்க இதுல
உங்க பையன் எனக்கு கொடுத்த மோதிரம் தாலி இருக்கு. என்றதும் செண்பகவல்லி அதிர்ந்து பார்க்க
"பயப்படாதீங்க கொடுத்தான்னு தான் சொன்னேன் . கட்டிட்டான்னு சொல்லல . எடுத்துட்டு போங்க அப்புறம் போகும் போது இதையும் தூக்கிட்டு போங்க இதுக்காக நான் அமுதன காதலிக்கல. இதுக்காக விலகவும் இல்லை "
என்றவள் கண்கள் அவள் ஏமாற்றப்பட்டதையும்
தாண்டி இவளை குற்றம் சாட்டயது. ஒரு பெண்ணுக்காக துரோகம் செய்யும் நீயும் ஒரு பெண்ணா என குத்தி கிழிக்க அதை எதிர்கொள்ள முடியாதவருக்கு. அவள் இந்த பணத்தை எடுத்துக் கொண்டாலாவது. இந்த
அழுத்தம் குறையுமோ என எண்ணியோ..இல்லை மீண்டும் வந்துவிடக் கூடுமோ ? எனும் அச்சமோ

"எடுத்துக்ம்மா உன்னோட எதிர்காலம்...வாழ்கை. "

என பசப்பினார். மகர விழியோ

" என்னோட எதிர்காலம்… ம்ஹீம்"
என்று விரக்தியாக சிரித்தாள் .அவளது பார்வையோ இனி அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?
எனக் கேட்டது

"வாழ்கை… என் வாழ்கையை பார்த்துக்க எனக்கு தெரியும் உங்க உதவி தேவையில்லை."
'ஆனால் மகன் வந்து பேசினால் மனது மாறிவிட்டால்…' எனும் ஐயம் தீரவில்லை. தனது பணப் பெட்டியை எடுத்தவர் அதை கேட்பதற்காக
''அமுதன்...வந்தா"

"இனி அவனே வந்து கூப்பிட்டாலும் போக நான் இங்க இருக்க மாட்டேன் ..."

என்றவளின் நிமிர்வின் முன்அதற்கு மேலும் அவரால் நிற்க முடியவில்லை . அவளின் கருகிய காதல் புகையாய் சூழ்ந்து மூச்சுமுட்ட விறுவிறுவென வீடு வந்துவிட்டார். அதன் பிறகு தான் அமுதன் விழியை பார்க்க வந்தது.

இதை நினைத்தபடி படுத்திருந்தவளின் கண்ணீர் வழிந்து காது மடல் ஓரமாய் முடியை நனைத்துக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வை தந்தையிடம் சொல்ல அவளுக்கு மனம் இல்லை.அமுதனுக்கோ அதை அறியும் போது நேரம் கடந்து இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு தான் தன் காதலைப் பற்றி கூறும் போது இருந்த மகிழ்வையும் கண்டவருக்கு இப்போது அது முறிந்த விதம் பற்றி மகர விழி முழுமையாக கூறவில்லை என்றாலும் அவள் எதையோ அவரிடம் கூறவில்லை என்பது புரியத்தான் செய்தது. அவளின் மனநிலையை கணக்கில் கொண்டவர் மேலும் எதுவும் செய்ய முடியாது போனார்.
 
அத்தியாயம் 14


சற்று சுழித்து ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றை பார்த்தபடி ஒரு பாறை மீதில் அமர்ந்து இருந்தாள் மகரவிழி. இலேசான காற்று வீச அதில் அவளது காதும் மூக்கும் இன்னும் சிவந்து போனது. கரையில் இருந்த அந்த செர்ரி மரத்தின் பூக்கள் நீரில் வீழந்ததன நீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டன. சில கரை ஒதுங்கியது. சில பாறைகளில் மோதி தேங்கிவிட சில அவை தாண்டி நீரோட்டத்தில் இருந்தது . அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிலும் சில சுழியில் ஆழ்ந்து போனது.

எவ்வளவு நேரமாக இதைப் பார்த்துக் கொண்டிருந்தாளோ அவளது தோளில் கரம் ஒன்று விழுந்தது. அதில் நிமிர்ந்து பார்க்க ரகுநந்தன் தான் நின்றிருந்தார்.
"அப்பா " என்றவள் அவரது கரம் மீது தலை சாய்த்துக் கொண்டாள். இதமாக இப்போது அவளது அருகில் அமர்ந்து கொண்டார். மீண்டும் அந்த காட்சியை பார்த்தவள்.

"இந்த பூ மாதிரி தான் டாட் ஒவ்வோருத்தரோட வாழ்கையும் காதலும் இந்த தண்ணி விதியும்
அது போக்குல இழுத்துட்டு போகுது . சிலருக்கு அவங்க பிடிச்ச இடத்துல கரை சேர்க்குது. சிலரோடது தேங்கிடுது இன்னும் கொஞ்ச பேர் சுழல்ல ஆழ்ந்து போயிடறாங்க…

என்றவளின் அவள் கண்ணில் மின்னிய விரக்தியை பார்த்தவருக்கு நெஞ்சம் கனத்தது. "ஆனா பூக்கள் பூக்காம இருக்குறதில்லை . நீர்ல விழுறதையும் நிறுத்தறதில்லை."
என்றவாறு வந்து நின்றான் மேத்யூ அவனைப்
பார்த்து விரக்தியான சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.

"வீட்டுக்கு போகலாம் வாங்க டைம் ஆச்சி எனவும் "
ரகு நந்தன் " மகா நீ போடா நான் இப்ப தான் வந்தேன் கொஞ்சம் கழிச்சி வரேன் "
என்று அமர்ந்து கொண்டார்.

சரி என்று எழுப்போனவளுக்கு முடியாமல் போகவே சற்று தடுமாறிசரிய பதறியவன்
"ஹே மெல்ல மெல்ல "
எனவும் "கால் லைட்டா மரத்து போச்சு"
எனவும் சட்டென ஒரு காலை மடக்கி மறு காலை நீட்டி மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கால்களை பிடித்து விட்டான். பிறகு அந்த ஷூக்களை மாட்டி விட்டவன். எழுமுயன்ற அவளுக்கு கை கொடுத்து எழுப்பி விட்டான்.

எழுந்து கொண்டவள் மெல்லிய இளஞ்சிவப்பு வண்ண மேக்ஸி அணிந்து இருந்தாள். அவள்
தனது பிரசவ காலத்தின் இறுதியில் இருப்பதை அவளது வயிறு காட்டிக் கொடுத்தது. அவன் கரங்களை பற்றிய படி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடக்க அவளுக்கு ஆதரவாக தனது கரத்தை கொடுத்தவன் அவளுடன் இணைந்து நடந்து கொண்டிருந்தான். வழியெங்கும் செர்ரி மரங்கள் தங்கள் மலர்களை கொட்டி பாதையை போர்த்தியிருந்தது.

அவர்களை பார்த்தபடி இருந்தார் ரகுநந்தன். இனியாவது மகள் வாழ்கை மேம்பட வேண்டும் என எண்ணிக் கொண்டார்.மேத்யூ ஹைடனும் அவனது செய்கையும் நண்பர்களுக்கானது போல் இருந்தாலும் அதையும் தாண்டிய நேசத்தினை உணர முடிந்தது. வாழ்ந்து பார்த்தவர் அல்லவா ஆகையால் மிக எளிதாக கண்டுபிடித்து விட்டார்.

மகர விழியோ கடந்து போன ஆழியனை யாசித்து பார்த்தாள் கால தேவனிடம் கிடைக்காது போக.இனி ஆழியன் அவளவன் இல்லை. எனும் நிதர்சனம் நெஞ்சத்தில் கீறிய ரணத்தில் உப்பு வைப்பது போல் இருந்தது. அவனால் நிரம்பிய வயிறும் மனமும் அவனையே நினைவுபடுத்த தப்புவது எங்கே?

ரகுநந்தன் எதையும் கேட்கவில்லை என்றாலும் ஒரு விலகல் தன்மை அவரிடம் வந்து சேர்ந்து இருந்தது. மகர விழியால் அதை உணரமுடிந்தது. ஆனால் அதைப் போக்க முடியாது ஏனெனில் அவள் செய்த காரியம் அப்படிப்பட்டது. ரகுநந்தனோ மனதில் நொறுங்கியிருந்தார். பார்த்து பார்த்து வளர்த்ததை தவிர என்ன தவறு செய்தேன் என்று மறுகிக் கொண்டிருந்தார் ஆனால் அதை மகரவிழியிடம் கூறவில்லை.

அவளோ தான் நிர்ணயித்தால் போதும் என தனது வாழ்கையை நிர்மாணிக்க... விதியோ எதிர்பாராத படையெடுப்பில் சிதைந்த நகரம் போல் வாழ்வை விளையாடி இருந்தது. தனது முடிவால் ஏற்பட்ட தண்டனையை எண்ணி அவளே கலங்கி இருக்கும் போது... பெற்ற தகப்பனால் எப்படி உணர்ந்துவிட்டவளை உதறி விட முடியும். தண்டனையை அனுபவிப்பவளை எப்படி தள்ளி வைக்க முடியும்…. ஆயினும், சில நேரங்களில் கவிழ்ந்த மேகம்போல மனம் கோபத்தின் வசப்படும்போது இந்த ஒதுக்கங்களாக அவை உருவெடுத்துக் கொள்ளும்.

அன்றும் அது போல் ஒரு மெளனமேகம் கவிழ்திருந்தது. தட்டில் இருந்த உணவை உண்ணலாம் என்றால் முடியவில்லை வயற்றில் இருக்கும் மகவுக்காகவேனும் உண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வோரு வாய் சோறுக்கும் உள்ள பருக்கைகளை எண்ணி மெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தாள்.


எதிரில் அமர்ந்திருந்த ரகுநந்தனுக்கு முதல் நாள் இரவு இவள் உறக்கமின்றி தவிக்க மகர விழியுடன் ரகுநந்தனும் தானும் சேர்ந்து விழித்திருந்தது மேலும் அவளது நிலை எண்ணி உறக்கத்தை தொலைத்தவருக்கு இப்போது சோர்வில் கண்களை சுழற்றியது. அதனை கவனித்தவள்

" நீங்க போய் தூங்குங்க ப்பா? நான் சாப்பிட்டுக்கறேன் " என்று அவரை ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தவள். பெரும் முயற்சி செய்து கொண்டு இருந்தாள் இயல்பிற்கு வர.

அப்போது அழைப்பு மணி ஒலித்தது. அதையே சாக்காக வைத்து அந்த கடைசி கவளங்களை புறக்ணித்து அவள் கையில் இருந்தததை வாயில் திணித்துக் கொண்டாள். வேகமாக கைகளை கழுவிவிட்டு கதவை திறப்பதற்குள் இரண்டு முறை அழைப்பு மணி ஒலித்து விட
சற்று வேகமாக போய் கதவை திறந்தவள் திகைத்து நின்றுவிட்டாள்.

மேத்யூ அவளைத் தேடி வருவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவளது முகத்தில் இருந்து அறிந்து கொண்டவன்.
"உள்ளே வரலமா?"
என்றான்.அவனை எதிர்பாராதவளோ சற்று விலகி வழிவிட்டபடி

" நீங்க எப்படி ?"

என்றாள். அவனோ உள்ளே வந்து அமர்ந்தவன்

" உன்னைப் பற்றிய விஷயம் மகரா எனக்குதெரியாமல் எப்படி இருக்கும்? அதுவும் இத்தனை சிரமமான சூழ்நிலை உதவாமல் ஒதுங்கி இருந்தால் நானே என்னை மன்னிக்க மாட்டேன்."

"இல்லை நானே " என்றவளின் குரல் அவனது ஆதரவில் பிசுபிசுபித்துதான் வந்தது

"ஒரு நண்பனாக கூட என்னை ஏற்க முடியாதா மகரா"

என்றபிறகு அவள் மேத்யூவை எதுவும் கேட்கவில்லை. ரகுநந்தனுக்கும் ஏற்கனவே அறிமுகம் என்பதால் நாட்கள் சற்று சுமுகமாகவே தரைமீது நத்தையென நகர்ந்து கொண்டிருந்தது.

மும்பையில் செண்பகவல்லியை காண அமிர்தாவின் தாயும் தந்தையும் மும்பைக்கு வந்திருந்தனர். அதுவரையில்
தனித்தனி தீவாக இயங்க முடிந்தவர்களுக்கு இப்போது சிரமமாகிப் போனது.

அமுதனோ பொறுத்த வரை உறவினர் ஒருவர்
தங்கியிருப்பதாக மட்டுமே பாவித்து நடத்திக் கொண்டிருந்தான். வேலையின் சுமை ஒரு காரணமாக கிடைத்தது. மற்றொன்று அவனுக்கு தனது திருமணத்தையோ மற்றோருவள் தனது மனைவி என்பதையோ இன்னும் ஏற்கவே முடியவில்லை. செண்பகவல்லி நினைத்தது போல் கவர்ச்சியில் மயங்கி உடல் தேவை மட்டும் பிரதானமாக இருந்திருந்தால் எளிதாக தூக்கி வீசியிருக்க முடியும், இல்லை அவள் துரோகம் செய்திருந்தால் கூட வெறுக்கலாம். ஆனால் அவன் நிழலில் அவனை உணர்ந்தவளை மனைவியாக வாழ்ந்தவளை வீசிவிட முடியவில்லை.

எனவே மணந்தவளை முடிந்தவரை விலகவே பார்த்தான்.அவன் நெருங்கவில்லை என்பதை புரிந்து கொண்டார் செண்பகவல்லி. ஆனால் அதை அமுதனிடம் கேட்க முடியவில்லை, ஏனெனில் எந்த உடல்நிலையை காரணம் காட்டி இவனை திருமணத்தை நடத்தினாரோ அதே காரணத்தை அவனும் முன்வைக்கிறானே என்ன செய்வார்?
"அம்மா உங்களுக்கு இப்ப தான் சர்ஜரி முடிஞ்சிருக்கு பகல்ல நான் உங்க கூட இருக்க முடியாது. சோ நைட் என்னோட பொறுப்பு."

"இல்ல அமுதா இப்ப தான் கல்யானம் ஆகியிருக்கு எனக்கு ஒன்னும் இல்லை."

"அதெல்லாம் இல்லை மா , கட்டாயம் யாராவது இருந்துதான் ஆகனும் என்றவனிடம் அதிகம் பேச முடியவில்லை. "

அமிர்தாவை பார்க்க அவளும் அதை ஆமோதிப்பது போல்
"இப்ப உங்க உடம்புதான் முக்கியம் " என்று விட
அப்போதைக்கு அந்த பேச்சு வார்த்தை முடிந்தது.

அவரும் சில நாட்களாக அவளை கவனித்து கொண்டுதான் இருந்தார். அவன் இருக்கும் வரையில் அவன் கண்களில் படாமல் ஏதாவது ஒரு அறையில் இல்லை வேறு எங்கேனும் தலைமறைவாகிவிடும் அவளை அவரும் ஏதேனும் ஒரு காரணம் வைத்து அவனிடம் அனுப்பினால் அவனோ அவள் முகமே பாராமல் பதில் கூறி அனுப்பி வைத்துவிடுவான்.

தன் மகன் தான் மருமகளை தவிர்க்கிறான். என்று ஒருபுறம் புரிந்து கொண்டவருக்கு. அவளும் அவனது தவிர்ப்பை விரும்பியே தள்ளி நிற்கிறாள் என்பதை அறியாமல் போனார்.

அவரால் செய்ய முடிந்தது. அமிர்தாவிடம் அவனை மாமா என முறை வைத்து அழைக்கச் சொன்னது மட்டுமே. நிலைமை இவ்விதம் இருக்க ஊரில் இருந்து அவளது பெற்றோர் வந்தது செண்பவல்லிக்கு வசதியாகப் போயிற்று.

அமிர்தாவின் தாய் தான் பார்த்துக்கொள்வதாக கூறி இருவரையும் ஒன்றாக்க ஒரே அறைக்குள் அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில்
" ப்ளீஸ் ப்ளீஸ் என்ன எதும் பண்ணிடாதீங்க…" என கெஞ்ச துவங்கி இருந்தாள்.
 
அத்தியாயம் 15

அமிர்தாவுக்கு அமுதனுடன் திருமணம் என்று பேசியதில் இருந்தே என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏனெனில் எதையும் மறுக்கும் நிலையில் அவள் இல்லை.அமிர்தா மனதில் ஸாகரனை வரித்து விட்டதையும் அறிந்த பிறகும் தான் திருமணம் பேசப்பட்டிருக்கிறது. அவளையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த வீட்டில் பொருளாதாரம் நடுத்தரத்திற்கும் வறுமைக்கும் இடையில் .இவளை கடத்தியாக வேண்டும் எனும் அழுத்தம் அவர்களுக்கு. எனவே அவளுக்கு வாய் உண்டு பேச முடியவில்லை, அவர்களது உலகின் உளவியலில் பெண் என்பவள்

"கன்னியா இல்லாம கல்யாணம் மலடுன்னு வார்த்தை இல்லாம ஒரு புள்ள இருக்கனும் ."

என்பது தான் இதோ வெளியே தங்களுக்குள் பேசிக்கொண்டு இருப்பவர்களை புதைக்கபட்டு புழுக்ங்களுக்குள் சிதைக்கப்பட்டதும் அதுதான். எனவே சமூகத்தில் பெண் என்பவளின் அந்த பொறுப்புதுறப்பு தான் அவள் வாழ்வதற்கான இலக்கு என நிர்ணயிக்கப்பட்ட அந்த பிரிவில் ஒருவராக அமிர்தாவின் தந்தை ஓடிக் கொண்டு இருந்தார். மகளாவது நல்வாழ்கை வாழட்டுமே என கல்யானம் அலைய வைத்து பெண்களது ஆசையை மீறி செயல்பட வைத்தது.

ஸாகரன் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருக்க அவன் வருவதற்குள் என்பதை விட பிறர் அறிவதற்குள் திருமணத்தை முடித்துவிட எண்ணியவர்கள் அதனை செயல்படுத்தியும் இருந்தனர். பெரிய இடம் கைநழுவி போய்விடக் கூடாது. அவர் விசாரித்த வரை அமுதன் நல்ல பையன் தீய பழக்கம் எதுவும் கிடையாது. என்பதை அறிந்தவர்கள் நல்ல வசதி பொண்ணு கண்கலங்காம இருக்கும். என்ற நம்பிக்கை வந்திருக்க
திருமணம் செய்து வைத்திருந்தனர்.

இவளோ இரு புத்தியில் இருந்தாள். காதலா? பெற்றோர் அமைத்த வாழ்கையா? என்றதில் பெற்றோர் பக்கம் தராசு சரிய பேசாமல் நின்றுவிட்டாள்.

ஆனால் அவள் எதிர்பாராதது. ஸாகரனின் தற்கொலை முயற்சி அதை அறிந்தவள் துடித்து போய் அவனைத் தொடர்பு கொண்டாள். அவனோ

"உனக்காக தான் நான் பாரின் போனதே நீ இல்லாம நான் வாழறத விட சாகறது மேல் "
என தன் எண்ணத்தில் மாறாமல் நின்றிட

" ஸாகர் எனக்கு கல்யாணம் ஆகிருச்சி நான் இன்னோருத்தர் மனைவி "

"நோ நீ என்னோட அமிர்தா எனக்கு மட்டும் தான் "

என ஆஸ்பத்திரியில் பையத்தியமாய் புலம்பும் அவனிடம் மேற்க் கொண்டு என்ன சொல்ல என்று தெரியாமல் அவனது காதல் நிலை கண்டு குற்ற உணர்ச்சி அரிக்க அவனிடம் அதிகம் பேசலானாள். தன்னுள் உழன்று கொண்டிருந்த அமுதனுக்கோ தன்னை அமிர்தா தொந்தரவு செய்யாமல் இருந்ததே பெரும் வரமாகிப் போனது.

இடையே அவனது காதல் மற்றும் வாழ்கையை பற்றி அறிந்து கொண்ட அமிர்தாவிற்க்கு இன்னும் வசதியாகப் போனது. அமுதனுக்கு துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வும் இல்லை. நிலைமை இவ்விதம் இருக்க இருவரின் பெற்றோரும் சேர்த்து வைக்க முயல்கின்றனர்.


உள்ளே நுழைந்த அமுதனோ மனைவியாக வாழ்நதவளை மறக்க முடியாமல் எப்படி இவளுடன் வாழ்வது என்று தவிக்க திருமணத்திற்கு அதை செய்து வைத்தவர்களுக்காக வேணும் இவளுடன் வாழ்ந்து விட வேண்டும். இது தலை விதி என மெல்ல மெல்ல மனதை மரத்து போக வைத்துக் கொள்ள முடிவெடுத்திருந்தவன் தன்னை பற்றி அமிர்தாவிடம் கூறிவிடுவது பிறகு அவளுக்கு விருப்பம் இருந்தால் வாழட்டும் என எண்ணியவன் இன்னும் கல்லூரியை கூட தாண்டாத பதின்பருவப் பெண் எப்படி புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்துடன் விலகி இருந்தவன்.

இன்று அவளை நெருங்கி அவள் அருகில் அமரந்தவன் அவள் கரம் பற்றி ஒற்றை முத்தம்
வைக்க அவளோ

" ப்ளீஸ் ப்ளீஸ் என்ன எதும் பண்ணிடாதீங்க…
நான் ஸாகர் கூட பேசினது தப்புதான் " என கெஞ்ச துவங்கி இருந்தாள் பயத்தில்.

கண்களில் நீர் வழிய உடல் ஆட இவன் தொட்டுவிடுவானோ தொடர்ந்துவிடுவானோ. என்ற பயத்தில் எழுந்து ஒட முயல் வழியில் அவன் மறிக்க சுவற்றோடு ஒட்டியபடி நின்றாள். அன்று அவனைப் பற்றி தெரிந்த உடன் வந்த குருட்டு தைரியம் இன்று விடைபெற்று போயிருந்தது. அமுதன் கணவனாக அவனது உரிமையில் வந்திருக்கிறான் என்பது உடல் மொழியில் புரிய தான் எத்தகைய சிக்கலில் இருக்கிறோம் என உணர்ந்தவள்
இத்தனை நாட்கள் ஸாகருடனான தொடர்பு தவறு என்பதும் அதை நேர்மையாக கூறி விலகாதன் விளைவு இன்று இவன் தன்னை என்று அவள் நினைத்து முடிக்கும் முன்பு அவளை தன் புறம் திருப்பி அனைக்கவும் .
ஆடிப் போனவள்.

" என்ன மன்னிச்சிடுங்க என்னால உங்க மனைவியா வாழ முடியாது. நான் உண்மைய சொல்லிடறேன் நான் ஸாகர்னு ஒருத்தர விரும்பறேன் "
என்றவள் உண்மையைக் கூற அதைக் கேட்டவன் முகத்தில் என்ன வந்து போனது. என்று கவனிக்க முனையவில்லை அவள். அமுதனோ இன்று காலை இவள் ஸாகருடன் அலைபேசியில் பேசியதை கேட்டு தான் இந்த நாடகத்தை செயல்படுத்தி இருந்தான்.

காதல் மற்றோர்வன் மீதிருக்க கணவனாக அமுதன் இருக்க மனது ஒருவனுக்கு உடல் ஒருவனுக்கு என வாழவது தவறு எனப் புரிய ஸாகரனுக்கு உண்மையாக இருப்பதா இல்லை கழுத்தில் தாலி என்ற ஒன்றை கட்டியதற்காக அத்தனையும் மறந்துவிட்டு இவனுடன் வாழ்வதா என அந்த கன்னிக்கு தெரியவில்லை.

இப்போது தனக்கு கற்பு எனும் ஒன்று இருக்கிறாதா மனதால் அவனுடன் வாழ்ந்து விட்டு உடலால் இவனுடன் கூட முடியுமா? இதை
கள்ளத் தொடர்பு என்றல்லவா வகைப்படுத்துவர் … எனப் பலவாறு சிந்தித்த
அவள்அருகில் அமர்ந்தவன் தண்ணீர் குவளையைத்தர அதைப் பருகியவளுக்கு இது விஷமாக இருக்கக் கூடாதா என்றிருந்தது.

"ஸீ அமிர்தா இதுக்கு மேல என்னாலயும் உன் கூட வாழ முடியாது. அப்படி வாழ்ந்தா அது இரண்டு பேருக்கும் நரகமாத்தான் இருக்கும். நாம டிவொர்ஸ் பண்ணிக்கலாம். அதுக்கு அப்புறம் நீ ஸாகரோ இல்ல யாரு கூட வேணும்னாலும் போ ஐ டோன்ட் கேயர் பட் அது வரைக்கும் நீ எனக்கு மனைவியா இருக்கனும்."

என்றவனை அவள் அதிர்ந்து பார்க்க
"நாட் பிசிக்கலி வெளிய இருக்றவங்களுக்கு "

என்றவனைப் பார்த்து அவன் பின்பகுதி புரியாமல் திரு திருவென விழித்தாள்.
" என்ன புரியலையா?"
என்றதற்கு ஆம் எனவும் இல்லை எனவும் குழம்பி தலையாட்ட .
"அதாவது ரூம்க்கு வெளிய எங்கம்மாவுக்கு மருமகளா எனக்கு மனைவியா இரு. ஒகே "
என்றவனுக்கு தலையாட்டியவளை
" நீ இங்க படுத்துக்கோ" என கட்டிலை பிரித்துக்
கொடுக்க படுக்க போனவளிடம்

"ஒரு நிமிஷம் இனி அவனோட பேசக் கூடாது. அமுதனோட பொண்டாட்டி இன்னோருத்தன் கூட ஓடிட்டா அப்படினு யாரும் பேசக் கூடாது சோ இனி நமக்கு டிவொர்ஸ் ஆகற வரைக்கும் நீ அவன் கூட காண்டாக்ட் ல இருக்கக் கூடாது அதுக்கு அப்புறம் நீ எப்படி போனாலும் அதைப் பத்தி எனக்கு தேவையில்லை. போக மாட்டனு நினைக்கிறேன் மீறிப் போனா காலம் முழுசும் என் பொண்டாட்டியா இங்க இருக்க வேண்டி வரும் கீப் இட் இன் யுவர் மைன்ட்"

அவன் கூறிய விதத்தில் அதன் பொருள் புரிய
அருவருத்தவள் ஆயுசுக்கும் இப்படி வாழ முடியாது என்பது புரிய

"ம் ஆனா ஸாகருக்கு இத சொல்லனும் ல"

"அவன் உன்ன உண்மையா லவ் பண்ணா நீ எப்படி போனாலும் ஏத்துக்குவான். "

தன்னை பெற்றவர்கள் மற்றும் அனைவருக்கும் விவாகரத்து இன்றி ஸாகரனுடன் தான் அமுதனின் மனைவியாக ஓடி வந்திருந்தால் எத்தனை பெரிய கேவலம் என்பதையும் ஸாகரனின் காதலையும் அமுதனை விவாகரத்து செய்த பின் ஸாகரனை மணந்து புரிந்து கொண்டாள் எனினும் அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி அன்றே தான் தைரியமாக மறுத்து இருக்க வேண்டுமோ இல்லை அமுதனது தாய் செய்த வேலையை விவாகரத்துக்கு பின்பு ஸாகரனிடம் கூறியதை
அவனிடம் கூறியிருக்கலாமோ என நினைத்தவள். அன்று மகரவிழியை நேரில் மேத்யூ மற்றும் குழந்தையுடன் பார்த்த பிறகு அமுதனிடம் கூற வந்தாள்?

ஆனால் அமுதன் விவாகரத்திற்கு பின் அவளை சந்திக்கவோ பார்க்கவோ விருப்பமற்றவன் அவளை சந்திக்கவே இல்லை.மனிதர்களின் இந்த மனநிலையை என்னவென்பது ?
தான் விரும்பும் ஒன்றை விரும்பாத ஒன்றின் புறம் தந்து அதை கண் முன் வைத்துத் காத்துக் கொள் என்பதுதோ விதி?

மகராவினது இந்தியத் தொடர்புகள் முற்றிலும் அறுபட்டு போயிருக்க அமுதனும் அவனது விவாகம் ரத்தாகும் வரை மகராவை தொடர்பு கொள்ள அமுதனும் எதுவும் முயற்சிக்கவில்லை. ஆனால்
மகரா மேத்யூவை கணவனாக உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் நிலனை கரங்களில் ஏந்திய முதல் நாளில் இருந்தே அவனது தந்தையாக மாறியிருந்தான்.அதைத் தடுக்க அவளால் இயலவில்லை.
 
அத்தியாயம் 16

மகரவிழி கையில் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் இருந்தது. அவளுக்கு விருப்பமான அந்த ஆடை வடிவமைப்ப பற்றிய படிப்பிற்க்கான உலகின் பிரபலமான கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது.

கையில் சிறு மொட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வது எப்படி படிக்க போவது என குழம்பிப் போய் இருந்தவளிடம் மேத்யூவும் வந்து அமர்ந்தான். அது கூடத் தெரியாமல் இருந்தவளை .
"மகா என்ன ஆச்சு?
இங்க பாரு நிலன் தூங்கிட்டான்"

என்றவன் குழந்தையை வாங்கி தொட்டிலில் இட்டவன் கொசுவலையை போட்டு அங்கு இருந்த பிரகாசமான வெளிச்சத்தை குறைத்து அவன் தூங்க ஏற்ற சூழலை சரிபார்த்து விட்டு மீண்டும் மகர விழியிடம் வந்து அமர்ந்தவன்.

"விழி இட்ஸ் அ குட் சான்ஸ் டோன்ட் மிஸ் இட் , உன்னோட ப்யூசர் அதுமட்டும் இல்லாம நிலனோட ப்யூசரும் நல்லா இருக்கும் அதுமட்டும் இல்லாம இது உன்னோட ஆசையும் கூட "

"ஆனா நிலன்"

"நானும் அங்கிளும் பார்த்துக்கறோம்."

"உன் வேலை கடை ஷோஸ் "

"டோன்ட் வொரி ஐ நோ ஹவ் டு மேனேஜ் மை பிஸ்னஸ்"

கூடவே ரகுந்தனும்

"ஒரு வருஷம் தான படியேன்டா அப்பா பார்த்துக்கறேன்"

என இருவரும் சேர்ந்து அவளைக் கரைத்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். அவளுக்காக கல்லூரி அருகில் வீடு எடுத்து தங்கிக் கொண்டனர். மேத்யூ தனது நிறுவனங்களுக்கு ஏற்கனவே தனித்தனி அலுவலர்களை நியமித்து இருந்தவன் மேற்பார்வையாளர் மூலம் கவனித்துக் கொண்டான்.

தனது அதிகபட்ச நேரத்தை நிலனுக்கு ஒதுக்கி இருந்தான். அவனே தந்தையும் தாயுமாகி அவனைக் கவனித்துக் கொண்டான். மகரவிழியும் ரகுநந்தனும் அதிசயத்து போனார்கள் அவனின் தாயுள்ளத்தை கண்டு அவள் குழந்தை அவளை என்பதையும் தாண்டிய பாசம் நிலை மீதல் இருந்தது மேத்யூவிற்கு.

மேத்யூ ஹைடனும் மகர விழியும்
வாழ்வதாகவும் அதன் விளைவே இந்த குழந்தை என்றும் உலவிய வதந்தியை ஆதரிக்கவோ மறுக்கவோ இல்லை. மௌனம் ஒன்றே மார்க்கமாக கொண்டிருந்தனர். அவளுக்கு அது மற்றவர்களை நெருங்க விடாமல் செய்திருந்தது.அவனோ அதைப் பற்றி கவலையே இல்லாமல் இருந்தான்.

அன்று கல்லூரியில் வகுப்பு இல்லை என்றதும் வீட்டுக்கு வந்தவள் வீடு அலங்கரிக்கப்பட்டு கேக் தருவிக்க பட்டு இருப்பதை பார்த்தவள்
இன்று என்ன காரணமோ என யோசித்தவாறு
உள்ளே நுழைந்தாள்.

பிறகு அவன் முகம் பார்த்து சிரித்தது குப்புற விழுந்தது தவழ்ந்தது நடந்தது
என ஒவ்வொன்றையும் கொண்டாடிக் கொண்டிருந்தான் மேத்யூ.
"எல்லாரும் தான் பிள்ளை பெத்து வளர்க்கிறாங்க மேத்யூ ஆனா இப்படி யா ஒவ்வொன்றுக்கும் விழா எடுப்பது."
என்று ஒருமுறை சலித்துக்கொண்டு கேட்க

"அதெல்லாம் எனக்கு தெரியாது தேவையும் இல்லை. எனக்கு என்னோட நிலனோட ஒவ்வொரு வளர்ச்சியும் ஸ்பெஷல் நான் கொண்டாடத்தான் செய்வேன்."

அந்த அன்பை பார்த்தவள் எதையும் கேட்கவில்லை.

எதிரில் ரகுநந்தன் வர கரங்களில் இருந்த
நிலன் இவளைக் கண்டதும் ம்மா … என்றபடி தாவ தூக்கிக் கொண்டவளை எச்சில் முத்தத்தால் நனைத்து அளவளாவ அவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சமையில் அறையில் இருந்து நிலனுக்கான உணவுக் கின்னத்துடன் வந்தான் மேத்யூ.
விழி அவன் கையில் இருந்த கின்னத்திற்கு கை நீட்டியவள் "நான் கொடுக்கறேன் மேத்யூ "
என
"நல்லவேளை நீயே வந்துட்ட நான் வரனும்ன்னு நினைச்சேன் சீக்கிரம் ரெடியாகிட்டு வா " என்றவன் குழந்தைக்கு உணவை ஊட்ட துவங்கியிருந்தான். வேறு வழியின்றி போய் தயாராகி வந்தவள்

" என்ன விஷயம் மேத்யூ என்றாள். எதுக்கு இப்ப இந்த செலிபரேஷன் "

"ஓ உனக்கு தெரியாதுல்ல "
என்றவன் அங்கே சற்று தள்ளி நிலன் தத்து பித்து என்று ஒழுங்காக இன்னும் தரையில் பாவாத கால்களை வைத்துக் கொண்டு சுருள் முடியும் குண்டு கண்களும் குழியும் கன்னமுமாய் இருந்த அந்த
கவிதை வாயில் எச்சில் ஒழுக மிகத்தீவிரமாய்
தனது நடை வண்டியை தள்ளிவிட்டு சக்கரத்தை
கழற்ற முயன்று முடியாமல் போக வாயை வைத்து முயன்று கொண்டிருந்தான்.அவனை தூக்கியவன் வாயை துடைத்தபடி இவளிடம் வந்தவன்

"நிலன் இது யாரு?" என ரகுநந்தனை காட்டி கேட்க "தாட்டா" என தாத்தாவை குழற்ற ரகுநந்தன் மகிழ்வோடு
"தாட்டா இல்லைடா தாத்தா" என்றார்.
"குட் இது யாரு? " என்றவன்
"ம்மா " என்றவனது மழலையில் மனது குளிர
கன்னத்தில் முத்தம் வைக்க அதுவும் பதிலுக்கு
முத்தம் வைத்தது.
"ஓகே நான் யாரு?" எனவும்
"டாட்" என அவன் கன்னத்தில் வைத்த முத்தத்தில் அவன் கண்கள் பளபளத்தது. அவ்வளவு மகிழ்சி அவன் முகத்தில்

மகர விழியோ அதிர்ந்து போனாள். இந்த நிலை வந்து விடுமோ என்று தானே ஒவ்வோரு சிறு குழந்தையை பெற்றோருடன் பார்க்கும் போதும் உள்ளுக்குள் வைத்து மறுகினாள் தந்தை பற்றி கேட்டால் என்ன சொல்லவது ? உனக்கு தகப்பன் இல்லை என்றா? இருக்கிறான் ஆனால் இங்கில்லை என்றா?
எப்படி வாழ்வில் உதித்தான் என்றா ?
இவளது தவறு தன் மகனுக்கு தகப்பனின்றி செய்து விட்டதே என்று மறுகத் தொடங்கியிருந்தாள். அன்று என் குழந்தை நான் மட்டும் தான் என்றவள் அவன் பிறந்ததில் இருந்து தந்தையை கேட்டால் என்ன செய்வது என காரணங்களை தேடிக் கொண்டிருந்தாள். வளர்ந்த பிறகு ஆயிரம் விளக்கம் சொல்லலாம் ஆனால் குழந்தைக்கு என்ன சொல்வது.
அவனது தந்தையை பறிக்க இவள் யார்?

இதோ அந்த பாசத்தை தந்த மேத்யூவை தகப்பனாக்கி அவன் விடை தந்து விட்டான். ஆனால் அவளுக்கு அது உவப்பாக இல்லையே இவன் தந்தையாக்கி விட்டான் ஆனால் அவன் அவளுக்கு யார்? தங்களுக்கு இடையேயான உறவுமுறைதான் என்ன? இவளுக்கு அவன் கணவன் இல்லை ஆனால் குழந்தைக்கு தகப்பன். ஆனால் இதற்காக அவளால் அவனைத் திருமணம் செய்ய முடியாது.
இப்படியே இருந்தால் கூட நன்றாகத் தான் இருக்கும் . ஒன்றாக வாழ்வதாக ஊர் நம்பும் குழந்தைக்கு தகப்பனாக அவன் தாயாக நான் இப்படியே இருந்து விட்டு போகட்டுமே விட்டு விடு மகரா நிலன் கொஞ்சம் பெரியவனான பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றது ஒரு புறம்

'எனது நலத்திற்காக அவனது வாழ்கையை பாழாக்க வேண்டுமா? தன்னால் மேத்யூவின் வாழ்வும் பாதிக்கப்படுவானேன்' என்றது மறுபுறம்

மகரவிழிக்கு தனது சூழலை மனதின் நினைவை குறித்து சிரிப்பாக வந்தது சிரித்தாள் ஆனால் கண்களில் நீர் வழிந்தது. மனதை இறுக்கியவள் கண்ணீரை நிறுத்தி
மேத்யூவிடம் வந்தாள்

"மேத்யூ நானும் அப்பாவும் பார்த்துக்கறோம் இனி நீங்க உங்க லைப்ப பாருங்க அது தான் நல்லது"

என்று அவன் முகம் பாராமல் ஒப்புவித்தவள் குழந்தையை வாங்கியவள் தோட்டத்திற்கு விலகிச் சென்றுவிட்டாள்.

மேத்யூ என்ன சொல்கிறாள் இவள் எனப் புரியவே அவனுக்கு நேரம் பிடித்தது. பிறகோ கண்களில் நீர் பெருக நின்று விட்டான்.
நிலனை காணாமல் வாழ்வது என்பது காற்றில்லா உலகில் வாழ்வதுபோல்லவா மனதால் தாயும் தந்தையுமாகிவிட்ட அவனுக்கு
இதற்கு அவள் என்னை இறந்து விடச் சொல்லி இருக்கலாம்.

அங்கிருந்து வீடு வந்து வாரம் ஒன்று ஆகிவிடும் நாளையுடன் என நாட்காட்டியில் கணித்தவன் மீண்டும் தன் தனிமையில் நுழைந்தான்.அவனைத் தேடி ஓடும் காலை நிறுத்தியவனுக்கு மனதை எதுவும் செய்ய முடியவில்லை .கொள்ளை சிரிப்பினில் குளிர் விக்கும் அந்த தளிர் முகமும் அதன் தளர் நடையும் எங்கும் வியாபிக்க பித்து பிடித்து போனான் உன்னாமல் உறங்காமல்.

மகராவோ வேறு வழியின்றி நிலனை இவனிடம் தராமல் தானே பார்த்துக் கொள்ள துவங்கினாள்.ஊரார் பேசியதை ஒதுக்க முடிந்தவளுக்கு தனது மகன் தந்தை இடத்தை
இவனுக்கு தந்ததை ஏற்க முடியவில்லை . இவளது மன நிலை காலநிலைக்கு ஏற்ப மாறும் சூழல் போல் மாறும் ஆனால் குழந்தை அது அறியுமா மனிதர்களது மனங்களை அதன் மறைவுகளை வரையறைகளை

நிலன் மேத்யூவை தேடி விடாமல் அழத் தொடங்கினான். விளைவு காய்ச்சல் வந்து உடல் நிலை மோசமாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க இருந்தனர். ரகுநந்தன் மனம் கேளாமல் மேத்யூவிற்கு அலைபேசி வழி செய்தி உரைக்க. அடுத்த நொடி மேத்யூ கிளம்பி இருந்தான்.
இத்தனை வருட காலத்தில் இப்படி ஒரு கோலத்தில் அவனை இப்படி கண்டிராத மகரா அதிர்ந்து போனாள்.
நிலனைப் பார்க்க வந்த மேத்யூ அரை உயிராகத்தான் வந்தான். இன்னும் சில தினங்களில் இவனையும் சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டி இருக்குமோ எனும் அளவுக்கு தோற்றம் நலிந்து போயிருந்தது. போட்டிருந்த இரவு உடையை கூட மாற்றாமல் கலைந்த தலை வளர்ந்த தாடியுமாய் வந்திருந்தான்.


"என்னாச்சி மேத்யூ இப்படி இருக்கீங்க"

என்று மகர விழி விசாரித்தற்கு கூட பதில் வரவில்லை. வந்தவுடன் நேராக சென்று நிலனைப் பார்த்தவன் மனம் இற்றுப் போனது.

ஏன் இப்படி செய்தாய்? எனும் வினா மட்டுமே

" மேத்யூ உங்கள பத்தி" என்றவள் "உங்க லைப் என்னால அவனோட அப்பா"

என விட்டு விட்டு இடறத்தொடங்கவுமே அவள் கூற வருவதை புரிந்து கொண்டவன்.

"எஸ் ஐ லவ் யூ உன்ன பார்த்ததில் இருந்து. நீ அமுதன லவ் பண்ணும் முன்னாடியே நான் உன்ன நினைச்சிட்டு இருக்கேன் பட் எக்பிரஸ் பண்ணல. அதுக்குள்ள உன் சாய்ஸ் அமுதனா இருந்தான். அதுக்கு அப்புறம் என் லவ்வ நான் சொல்லி உன்ன கன்பியூஸ் பண்ண விரும்பல. ஸ்டில் ஐ லவ் யூ பட் ஐ வோண்ட் போர்ஸ் யூ பிகாஸ் ஐ கேன் அன்டர் ஸ்டான்ட் யு "

"ஸி விழி நிலனோட பிறப்புக்கு யார் வேனா காரணமா இருக்கட்டும் . ஆனா அவன கையில்
வாங்கின அந்த நொடில இருந்து அவன் என் பையன் மட்டும் தான். நீ என்ன விட்டு போனா கூட ஐகேன் லிவ் பட் வித்வுட் ஹிம்"

என்றதில் அவள் வாயடைத்து நின்றாள்.
 
அததியாயம் 17


நிலன் மேத்யூவை தந்தையாக அறிவித்த கணத்திற்கு பின் மகரவிழிக்கு ஒன்று மட்டும் தெளிவாகி விட்டிருந்தது, இனி தன் வாழ்வில் ஆழியனுக்கான இடம் இல்லை என்பதை அவள் அறிவு தெளிவாக உரைத்த்து. ஆனாலும் மனம் தொடர் வண்டியின் பயணம் முடிந்த பின்னும் பயணிப்பது போன்ற உணர்வை தருவது போல அமுதன் இல்லை என்றான பிறகும் இறக்க மறுத்தது. அது போல அவனுடன் பயணித்த நினைவுகளுடனே தனது
வாழ்கையும் நகர்த்தி விடலாம் என முடிவு செய்து கொண்டவள் அதன் பிரகாரம் நடக்க துவங்கி இருந்தாள்.

அன்றைய தினத்திற்கு பிறகு மகரவிழி மேத்யூ நிலனைப் பார்க்க வருவதை தடுக்கவோ இல்லை ஆதரிக்கவோ இல்லை. மாறாக ஒதுங்கி நின்று பார்வையாளாராக இருந்தாள். மேத்யூவும் இவளையோ இவளது ஒதுக்கத்தை பற்றியோ கேள்வி எதுவும் எழுப்பவில்லை அவளை தனக்கும் நிலனுக்கும் இடையே உள்ளிழுக்கவும் முயலவில்லை. நிலனுடன் மட்டுமே தனது நேரத்தை ஒதுக்கி இருந்தான்.
இருந்தாலும் அவள் மீதான தனது நேசத்தை அல்ல அவளைத் தொடரும் அவன் பார்வை கூறியது அதையன்றி வேறெதுவும் இல்லை.

மகரவிழிக்கும் கல்லூரியில் இறுதி தேர்வு நெருங்கியிருந்தது. அவள் தன் வேலைகளில் தன்னை முழ்கடித்துக் கொண்டாள். போர் களமோ இல்லை காதல் களமோ
எதிர் நின்றால் போராடலாம் ஆட்டத்திற்கே
வராதவர்களை முதலில் வரவழைக்க வேண்டும் அல்லவா நிலன் அழைத்து வந்துவிட்டான். உள்ளிழுப்பது எவ்வாறு?

அதற்கும் ஒரு நாள் வந்தது.லிவ் இன் ல தான இருக்க எனக்கு இரண்டு நாள் கம்பேனி தாயேன் என உடன் பயலும் ஒருவன் ஒருநாள். நான் உன்ன லவ் பண்ணறேன் நாம வாழ்ந்து பார்ப்போம் மேத்யூவ விட நான் ரிச் என மற்றோர்வன் ஆனால் இதை எல்லாம் தாண்டி அன்று ஒருவன் இவளை கவர தனது பணியனை கழற்றி ஸீ மகரா என தனது படிக்கட்டு உடலை காட்டி அவளை தன்னுடன் அழைக்க வெட்கி போனவள் அறையை விட்டு வெளியே அழுதபடி ஓடி வந்தவள் எதிரே வந்த மேத்யூ மேல் மோதிவிட பதறிப் போனவன்
"வாட் ஹேப்பன்ட் மகரா?"
என கண்களில் நீர் பெருக நின்றவள் என்னவென்று கூறுவது எனத் தெரியாமல் அவன் மீதில் சரிந்து அழ
"ஈஸி ஈஸி மகரா "
மெல்ல அவளைத் தேற்றியவன் உள்ளே சென்று அவனிடம் என்ன பேசினானோ மேத்யூ வெளியே வந்த சில நிமிடம் கழித்து வந்த அவன்
" ஸாரி "
என்று மட்டும் கூறி விலகி விட அதன் பிறகு அவளுக்கு தொந்தரவுகள் குறைந்தன என்பதை விட இல்லை.பிறகு தோழி ஒருத்தி கூறியதில் தான் அவனை மேத்யூ வாயால் இல்லை. கையால் கவனித்து இருக்கிறான் என்பது புரிந்து. மனதில் சில்லென்று ஒரு உணர்வு இன்னதென ஆராய முனையவில்லை அவள் ஆயினும் அனுபவித்துக் கொண்டாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது இதை அறியாதவள் போல் இவள் தனது தொழிலை பிடித்துக் கொண்டு தொங்கினாலும். தன்னுடைய அனைத்து செயல்களிலும் பிரதானமான மேத்யூவைப் பற்றிப் பேசும் மகனை அவளால் ஒதுக்க முடியவில்லை.

அவள் எதைப் பற்றி பேசினாலும் அவனிடமே வந்து நிறுத்தி அதிலும் தந்தையவன் அதை வாங்கிக் கொடுத்தார் அங்கே போனோம் இதைப் பார்த்தோம் இன்று இதைச் செய்தோம் எனப் பிரஸ்தாபிக்கும் மகனிடம் புன்னகை முகமாகவே அவனை அனைத்தபடி கேட்பவளுக்கு அப்படி கேட்பதன் காரணம் புரியவில்லை.

சிலநேரங்களில் அந்த இடம் அமுதனுக்குரியது என்று தோன்றும் அடுத்த நொடி அடுத்தவள் கணவன் என்ற நிதர்சனம் புரிய கண்கள் உடையும். நாட்கள் நகர்ந்து வருடங்கள் என உருமாறி இருந்தது. கல்லூரியில் இருந்து வெளியே வந்தவள் தனக்கென ஓர் அடையாளத்திற்க்கு முயன்று கொண்டிருந்தாள்.

நிலனை மையமாகக் கொண்டு இருவரும் மெல்ல நெருங்கவும் துவங்கி இருந்தனர். அதை அவளை அவள் காதலை அவள் உணரும் நாள் வந்தது.

அன்று நிலனைப் பள்ளியின் விழா ஒன்றிற்கு சென்றிருந்தனர்.பெரும்பாலும் அவன் சில நேரங்களில் இவள் இன்று இருவரும் வந்தே ஆகவேண்டும் என்ற நிலனை மறுக்க முடியாமல் இருவரும் சென்றதில் அவனுக்கு மகிழ்சி பிடிபடவில்லை. சிறு விஷயத்திற்கும் குதூகலம் கொண்டாடும் குழந்தை இந்த மீப் பெரு மகிழ்வில் நண்பா்கள்அனைவரிடமும் கூறியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். நிலனைப் பற்றி பேசிய ஆசிரியரோ "அவர் நல்ல தந்தை மட்டும் அல்ல மிக அருமையான கணவனும் கூட உங்களை எவ்வளவு காதலிக்கறார். புரிந்து வைத்து இருக்கிறார்." என கூற இவள் என்ன கூறுகிறாள் என விழிக்க "இதோ வந்ததில் இருந்து உங்களை கைவளைவுக்குள் வைத்திருப்பதாகட்டும். நிலனுக்கு தருவதுபோல் உங்களுக்கான உணவை கொண்டு வந்து தருவது நீங்கள் அறியும் முன் உங்கள் தேவைகளை நிறைவேற்றி தருவது"

எனவும் தான் இதுவரை தனது எல்லா செய்கைகளிலும் தன்னை இயல்பாகவே உணர வைத்ததோடு அல்லாமல் ஏற்கவும் வைத்திருக்கிறான்.அதுவும் மற்றவர் பொறாமை கொள்ளும் அளவுக்கு அழகாக இத்தனை நாள் நடிப்பு என அவள் நினைத்து இருக்க அவன் தந்தை என கால்பதிக்க வில்லை அவன் மேத்யூ தந்தையாக வாழ்ந்து
கொண்டிருக்கிறான் என்பதும் தான் அவனது
மனைவியாக அறியப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பது புரிய அவளுக்கு தான் என்ன மாதிரி உணர்வில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.முதலில் சில நாட்களுக்கு நடித்தாலும் பிறகு தனது சம்மதத்தின் பேரில் தான் நடக்கிறது. என உறைக்க முதலில் கோபம் வந்தது பிறகு கூடவே மகழ்வும் வர இது என்ன மனோ பாவம்
என விழிக்க காதல் என்றது உள்ளம். காதலா ? மீண்டுமா? நானா ?என்னுள்ளா ?வரலாமா ? பெண்ணா நீ? எனும் கலக்கத்தினூடே வீடு வந்து சேர. அதை அறியாமல் இவள் அமர்ந்திருக்க ஓட்டுநர் இருக்கையில் இருந்து
இறங்கி இவளது பட்டையை அவிழ்த்தான் அதைக் கூட உணரவில்லை

" ஹே மகரா இறங்கு" எனவும் அவள் தன் போக்கில் இறங்கி வீட்டுக்குள் போய்விட்டாள்.
என்னவாயிற்று என்பது போல் பார்த்தவன் பிறகு ரகுநந்தனிடம் கூறிவிட்டு நிலனை வெளியே அழைத்துச் சென்றுவிட்டான்


அறையில் இருந்த மகரவிழிக்கோ அமுதன்ஆழியனின் நினைவுகள் இதயத்தில் வீழ்படிவாக மாறி இருக்க தெளிந்த உள்ளம் தாமரையென இருந்தது.இந்த மனதை மேத்யூ எப்போது எவ்விதம் மலர்த்திட்டான் என மகர விழி அறியவில்லை. ஆனால் இப்போது புரிந்திருக்க அதைக் கூறும் துணிவும் இல்லை.
தன்னை தவறாக எண்ணிவிடுவானோ என்ற பயமும் கூடவே தந்தையின் முடிவு என்னவாக இருக்குமோ என்ற குழப்பமும் சேர ரகுநந்தனிடம் வந்து நின்றவள்

"அப்பா"
என்று ஆரம்பிக்க
"என்னடா எதாவது செய்யனுமா?"
இல்லை என தலையசைத்தவள் விஷயத்தை திக்கி தினறி கூற அவரோ ஆனந்தித்தாலும்
மகளுக்கு புரிதல் முக்கியம் என்றுணர்ந்தவர்

"இதோ பார் மகரா உனக்கும் அமுதனுக்கும் லவ்வ விட அட்ராக்ஷன் தான் அதிகம்னு அப்படி தான் சொல்லுவேன். ஏன்னா நீ என்கிட்ட லவ் பண்றேன் சொன்ன ஆனா லிவ் இன் ல இருக்குறத சொல்லல ஏன்னா அந்த வாழ்கை முறை தப்புன்னு உனக்கு பட்டுருக்கு ஆனா அது எந்த அளவு ரிஸ்க் விபரீதத்தை உண்டு பண்ணும்னு இப்ப நீ அனுபவிச்சி புரிஞ்சிட்டு இருக்க . மேத்யூ மட்டும் இல்லைன்னா என் பேரனுக்கு இந்த உலகத்தில் என்ன பெயர் கிடைச்சிருக்கும். வாழா வெட்டி வேற விதவை விதி விவாகரத்து கைவிடப்படறது இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் சில பிரச்சனைகளால வரது. ஆனால் நீ இப்ப இருக்குற நிலைக்கு என்ன பெயர் ? உனக்கு பிடிச்ச பையன தேர்தெடுக்கற உரிமைய கொடுத்து இருந்தேன் ஆனா நீ கல்யாணத்துக்கு அப்புறம் வாழ வேண்டிய வாழ்கை முறைய காதலா கவர்ச்சியான்னு தெரிஞ்சிக்க முன்னாடியே வாழ்ந்து பார்த்துட்டீங்க. அவன் தன்னோட அம்மா அப்பா அவங்கசமூகம் பத்தி நல்லா தெரிஞ்சவன் அவங்க அம்மாகிட்ட பேசி கல்யாணம் பண்ண
முயற்சி பண்ணி இருக்கனும் ஆனா அவன்
பொண்டாட்டியா நினைக்கறேன்னு உங்கூட குடும்பம் நடத்தி இருக்கான். அவன் தான் அவசரப்பட்டான் பெண் புத்தி பின்னாடி வரத யோசிக்ககூடிய ஸூக் ஷும புத்தி நீயாவது நிதானமா இருந்து இருக்கனும். "

" ஆனா ப்பா சில உறவுகள் நம்பிக்கைல மட்டும் தான் நிர்மாணிக்க கூடியதுப் பா காதலும் அப்படித்தான் அவங்க அம்மா அவர நிர்பந்திக்கும் போது என்ன செய்ய முடியும்?"

"இது மாதிரி நாம எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் இல்லைன்னா ஏமாற்றப் பட வாய்பு இருக்கு அப்படின்னு தான் நாம ஏன் எல்லா நாடுகள்லயும் சமூகத்தால் அங்கீரிக்கப்படனும்
அப்படின்னு ஒரு வரைமுறைய கொண்டு வந்து இருக்காங்க. மகரா "

"ஆனா காதல் இல்லாம எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியும் ?"

"ஆனா வெறும் காதல் புரிதல் இத மட்டும் வைச்சி கல்யாணம் பண்ணாம வாழவும் முடியாதுன்னு உனக்கு இப்ப புரிஞ்சிருக்குமே"

நன்றாக புரிந்து இருந்தது. ஆம் என்பதாக தலையை ஆட்டியவள்

"ப் பா?" என்றபடி நாற்காலியில் இருந்து இறங்கி ரகுநந்தனின் காலருகே அமர்ந்தவள் அவர் மடி மீது தலைசாய்க்க அவளது தலையை
கோதியவர்

" மறுமணம் தவறு இல்லைன்னா மறு காதலும் தப்பு இல்லை டா. "

" அப்பா" என்று நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர். தனது குற்ற உணர்சியை நொடியில் நீக்கிவிட்ட மகிழ்சி அவளுக்கு.

"அப்பா தான்டா, என் பொண்ணுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்ச எனக்கு அவ மனசு என்ன
நினைக்கும்னு தெரியாதா?"
தந்தையைக் கட்டிக் கொண்டவள் கன்னத்தில் முத்தம் வைக்க அப்போது உள்ளே நிலனும் மேத்யூவும் உள்ளே நுழைந்தனர்.

இந்தக் காட்சியை பார்த்த நிலன் " தாத்தா நானும் " என மேத்யூவிடம் இருந்து இறங்கி ஓடிவந்து கட்டிக் கொண்டு முத்தம் வைக்க

"எனி ஹேப்பி நியூஸ் " என மேத்யூ வந்து உள்ளே அமர முகம் விகசிக்க ததும்பும் காதலுடன் அவனைப் பார்த்தவள்

" நீ சொல்கிறாயா? நான் சொல்ல வா? " என ஜாடை செய்த தந்தைக்கு

"ம்ஹூம் " என தலை அசைத்து அறை நோக்கி
ஓடிவிட்டாள்.

தன்னுள் உழன்று கொண்டிருந்த மேத்யூவிற்கு இவளது நிலை பார்வை புரியவில்லை.
 
அத்தியாயம் 18

நிலனை மகராவை பிரியும் வருத்தம் மேலிட சற்று நேரம் அமர்ந்திருந்தவன் ரகுநந்தனிடம்

"அங்கில் நான் பாரீஸ்க்கு ஷோஷ்கு போறேன் வர பதினைந்து நாளாகும். நீங்க மகரா கிட்ட சொல்லிடறீங்களா ?"

'அப்ப கடைசிவரை நீங்களா சொல்ல மாட்டீங்க' என்று எண்ணியவர்

"நீங்களே சொல்லிடுங்க அவளும் எதோ சொல்லனும்னு சொன்னா இருங்க இதோ வரச் சொல்றேன் "

என்றவர் மகராவின் அறைக்குள் நுழைந்தார்.அவள் ஆனந்தமாக இருக்க அடுத்து தான் கூறப்போவதில் அவள் மனம் படப் போகும் வேதனையை நினைத்தவர் இருந்தாலும் வேறு வழியில்லை என்று தேற்றிக் கொண்டவர்.

"மகரா "
" ஆங் என்னப்பா "
"மேத்யூ ஏதோ பாரீஸுக்கு போறானாம்."
" ஓ என்றவளுக்கு இன்னும் சில நாட்களுக்கு அவனைக் காண முடியாதே எனும் எண்ணமே
வருத்தம் தர அடுத்து ரகுநந்தன்
" இனிமே வரவே மாட்டேன் அங்கயே இருக்கப் போறானாம்". கூறியதில் அதிர்ந்து போனவள் ஒருமுறை பேசாமல் தொலைத்தது போல் இம்முறையும் தொலைக்க தயாராக இல்லை இத்தனை நாட்கள் காத்திருந்தவனுக்கு இப்போது என்னவாம் விட்டுட்டு போற அளவுக்கு அவள் ரெளத்திரமாகி இருந்தாள்.

கதவை திறந்தவள் நேராக மேத்யூவிடம் வந்து நின்றாள். இவளிடம் சொல்லி விட்டு செல்வதற்காக காத்திருந்தவன் முன் வந்து நின்றாள்.

"போகப் போறியா ?"
"ஆமா"
"எங்க ?"
" பாரீஸ்"
"எத்தனை நாள் ?"என்ற கேள்வியை அவள் கேட்டதும்.
மேத்யூவால் மூன்று மாதம் என கூற
முடியவில்லை. இவர்கள் இன்றி அவனுக்கு ஒரு நொடியும் கழியாது. இதனாலேயே நிறைய பயணங்களை தவிர்த்து வந்த நிலையில் இது கட்டாயமாகிப் போனது. அவன் முடிந்தவரை இதை தவிர்த்துப் பார்த்தான் . முடியவில்லை இப்போதும் எத்தனை நாட்களில் திரும்பி வருவான் என அறியாத பயணத்திட்டத்தில் அவன் இருக்க என்னவென்று கூறுவான்.

"தெரியவில்லை என்றவன் நிலன் அங்கிள் இரண்டு பேரையும் பார்த்துக்க நிலனுக்கு
நாளைக்கு தடுப்பூசி போடனும் இது டாக்டர் அப்பாயின் மென்ட் அப்புறம் டாக்டர்ட்ட போனா"

" போக முடியாது "
என்றவளால் திகைத்தவன்
" என்ன மகரா "
" என்ன நொன்ன மகரா, நீ பாட்டுக்கு வருவ சொல்லாமலே லவ் பண்ணுவ சொல்ல மாட்ட
ஆனா தாங்குவ தள்ளி போனா விடவும்மாட்ட , இப்பா நான் வாழ ஆசைப்படும் போது விட்டுட்டு
போக ப்ளான் போடுவ பெரிய தியாகி இவரு "

"வாட் நீ என்ன சொல்லற எனக்கு புரியல "

"உன்னய புடிச்சிருக்கு சொல்றேன்டா புண்ணாக்கு உன் கூட ஆயுசுக்கும் வாழனும்ன்னு நினைக்கிறேன்."

"மகரா யு மீன் யு மீன் "

"எஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ டு த ..."

என்றவள் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்
அவளை இழுத்து அனைத்து இருந்தான். அவனது அனைப்பில் அவள் அவனுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.

அவனது ஒரு கரம் அவளை மார்போடு இறுக்கி இருக்க மறுகரத்தால் அவள் முகத்தை தன் முகம் நோக்கி உயர்த்தியவன் அவள் இதழ் உதிர்த்த அந்த வார்த்தைக்களை கேட்க விரும்பியவன்

" மகரா ஒன்ஸ் மோர் " என்று அவள் முகம் பார்க்க அவள் விழிகளோ வெட்கத்தில் மூடிக்கொண்டன " அவள் வெட்கம் பார்த்தவனுக்கு உச்சியில் இருந்து பனியாறு பாயும் உணர்வு
"ஹனி ப்ளீஸ் "
எனவும் மெல்ல முயன்று இதழசைத்து
"லவ் யூ மேத்யூ"
என்றதும் பனியாறு பாயும் போது தடைகள் உதவுவதில்லை . அவனும் அவன் காதலும் பனியாறு தான் போலும் அவள் முகம் முழுவதும் "லவ் யூ , லவ் யூ ஹனி லவ் யூ மகரா " எனப் பிதற்றியபடி அவள் முகம் முழுவதும் முத்திரையிட்டவன் அவள் இதழ்களுக்குள் முற்றுகையிட்டிருந்தான். அவளோ பூத்த மலர் காடாக தள்ளாடும் தனை நிறுத்த தள்ளும் அவனையே பற்றிக் கொண்டாள்.

"ரியலி ஹனி " என அவன் அத்தனை முத்தங்களோடும் அளவில்லாத அனைப்புகளோடும் ஆனந்ததித்தது கொண்டிருந்தான். ஒரு வழியாக அவளை தன்னைப்பில் வைத்தபடி அங்கிருந்த சொகுசு இருக்கையில் அமர்ந்தவன்

"வாவ் இட் ஸ் பீல் லைக் ஹெவன் "

என்றான் .ஆனால் அவளுக்கு அப்போது தான் அது நினைவுக்கு வந்தது.
"என்ன விட்டுட்டு போக மாட்டீல்ல"
"வாட்" என அவன் அவள் கூறுவது புரியாமல் நெற்றியை சுருக்க

"நீ பாரீஸுக்கு போறல்ல".

"எஸ் ஷோவுக்கு போறேன்"

"எப்ப வருவேன்னு தெரியாதுன்னு சொன்னது"
"அது ஷோ எப்ப முடியும் என்னால நிலன உன்ன பார்க்காம எத்தனை நாள் இருக்க முடியும்னு தெரியாதுல்ல" என்று சொல்லிக் கொண்டு வந்தவன்
"ஹே வெயிட் வெயிட் அப்ப நீ என்ன நினைச்ச?"
"நீ போயிட்டு திரும்பி இங்க வரமாட்டனு"

"யாரு சொன்னா அப்படி ?"

"டாட் தான் "
என்றவளுக்கு அப்போது தான் அது ரகுநந்தனின் திருவிளையாடல் என்பது புரிய

"ப்பா " என்று உரக்க அழைக்க அவரோ மனம் நிறைய முகம் கொள்ளாப் புன்னகையுடன் நிலனை கையில் பிடித்தபடி வந்தார்.

"என்னம்மா என்ன ஆச்சு?"
"ஏன் பா இப்படி பண்ணீங்க என்றாள்?".
நிலனுக்கு இடம் விட்டு தள்ளி அமர்ந்தபடி ஆனால் மேத்யூவோ புன்னகையுடன் மகனை மடியில் அமர்த்தியவன் அவளையும் அருகில் இருத்திக் கொண்டான்.விழியிடம் மகிழ்ச்சி மட்டுமே இருந்ததை கவனித்தவர்.

"இப்படி ஏதாவது செய்யலைன்னா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்."

"போங்க ப்பா", எனச் சினுங்கியவள் அவன் தோளில் முகம் மறைத்துக் கொண்டாள்.

அதன் பின்னர் மேத்யூ ஹைடன் திருமணத்திற்கு தாமதிக்கவில்லை. அவனுடைய பெற்றோர்கள் இறந்திருக்க ரகுநந்தன் விழியவளை கரம்பிடித்து தர நிலன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக திருமணம் நடந்தேறியது.

இரவு வர அவளுக்குள் சிறு பயம் ஒன்று முளைவிட்டு இருந்தது. தன்னால் அவனுடன் இயல்பாக தன்னை ஒப்புவிக்க முடியாதோ அமுதனுடான நினைவுகள் வந்துவிடுமோ எனும் எண்ணம் எழ அது இவனுக்கு செய்யும் துரோகம் அல்லவா என கலங்கியவளை மேத்யூ தொந்தரவு செய்யவில்லை மாறாக தன் மகனுடன் உள்ளே வந்தவன் அவனுடன் பேசியபடி ஒருபக்கம் படுத்துவிட மறுபக்கம் இவள் தவித்தபடி அமர்ந்து இருந்தாள்.

விழியருகில் வந்து அவள் கையை பற்றியவன்
"நான் உன்ன எப்பயும் போர்ஸ் பண்ண மாட்டேன் சந்தேகபடவும் மாட்டேன் நீ என் கூட இருக்கிறதே போதும். டோன்ட் ஃபேனிக் ஆனா உன்ன கிஸ் பண்ணும் போது வேறு நினைவு உனக்கு வந்து தா" இல்லை என்பதாக தலையாட்டினாள் ஏனெனில் அன்று முத்தமிடும் போதும் சரி அதன் பின்னும் அமுதனைப் பற்றிய நினைவுகள் அவளுக்கு வரவே இல்லை.இன்னும் சரியாக வென்றால் அவனைப் பற்றிய நினைவுகள் அவளுக்குள் மட்கி வருடங்கள் ஆகின்றன.
"ஹனி நீ அவனை மறக்க ட்ரை பண்ற அதப் பண்ணாத என்ன அவனாக்காத அவன் நானாக முடியாது. நமக்குள்ள எப்ப வேணும்னாலும் நடக்கட்டும் ஆனா இயல்பா
இப்படி போர்ஸ் பண்ணி தவிப்பா இல்லை."

என்றவன் அவளை அனைத்தபடி படுத்துவிட
அன்று தொடங்கி அவன் மெல்ல மெல்ல தனது அனைப்பு சிறுமுத்தம் சற்று அசந்த நேரம் தித்திக்கும் இதழ் முத்தம் தன் ஏக்கத்தை தவிப்பை உணர்த்தும் அவனது இறுக்கிய அனைப்பு அதில் அவள் உணரும் அவன் வாசனை அவள் கழுத்தில் அவன் மூச்சு என்று சிறுகச் சிறுகச் மேத்யூ தன்னை அவளுள் ஊற்றி விட அவளுள் இப்போது அவன் மட்டுமே
இருக்க அவன் நினைத்தது மிக இயல்பாக ஒருநாள் அவள் சாய அவன் தாங்க தன்னை தன் ஒப்புதலை அவள் அனைத்து அவன் இதழ் பதித்து தொடங்க அவன் தொட்டு தொடர்ந்தான்.

இவர்களது திருமணத்தை தொலைக் காட்சியில் பார்த்த ஆழியன் அமுதன் அன்று தான் தன் மகனைப் பார்த்தான். மகரவிழியை விட்டு தள்ளி இருந்தவனுக்கு அதுவும் அவளது நல்வாழ்கைக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்று ஆற்றிக் கொண்ட மனதை குழந்தையை கண்டவுடன் நிறுத்த முடியவில்லை. கூடவே அவள் திருமணம் செய்தன எண்ணி வருத்தமும் கொண்டான். தான் காத்திருக்க தன்னைத் தேடி அவள் வந்திருக்கலாமே அதுவும் அவள் தனியாக இல்லை தனது வாரிசையும் சேர்த்து அல்லவா மறைத்திருக்கிறாள் அவளுக்கு ஏது அந்த உரிமை என கோபம் வேறு வந்தது. ஆனால் தான் மட்டும் அவளை நிறுத்தவில்லை தாயின் பெரு முயற்சியும் கூட இருப்பதை அவரே தன் வாயால் புலம்பியதில் புரிந்து கொண்டான்.

"வயத்துல பிள்ளை இருக்குன்னு சொல்லி இருக்காளா பாரு டேய் ஏதாவது கேஸீ ப் போட்டு புள்ளய மட்டும் வாங்கியாந்துருடா நாள பின்ன தெருவுல நிறுத்திறப் படாது நம்ம வாரிச அவதான் இப்ப இன்னொருத்தன கட்டியிருக்கால்ல அவன் கொடுப்பான் இன்னொன்னு இவன் நம்ம குல விளக்குடா."

"இல்ல நீயும் வேறு ஒருத்திய கல்யாணம் பண்ணு அவ இப்படி போவான்னு தெரியும் அதான் அன்னிக்கே இவள நீக்கி விட்டேன். இல்ல "

"மகராகிட்ட நீ என்ன சொன்ன " என்ற ஆழியனுக்கு

"என்ன சொன்னேன் எம் புள்ளைக்கின்னு ஒருத்தி வந்துட்டா இனி நீ உள்ள வரக்கூடாதுன்னு சொன்னேன். இதுல என்ன தப்பு அந்த அமிர்தா சிறுக்கி ஓடாம உங்கூட ஒழுங்கா வாழ்ந்து இருந்தா இந்நேரம் உனக்கும் இரண்டு புள்ள இருந்து இருக்கும். "

அதைக் கேட்டவன் அப்படியே திகைத்துவிட்டான். உண்மை தானே அமிர்தா அவனைப் பற்றி கூறிய பிறகும் அவனை ஏற்றுக் கொண்டால் அவளுடன் வாழவது என்று தானே முடிவு செய்து இருந்தான். மேலும் அவளுக்கு இவனது விவாகரத்து பற்றியோ வாழவில்லை என்பதோ தெரியாதே அன்றைய சூழலில் மகர விழியின் நிலை தெருவில் ஆதரவின்றி நிற்பது போல் தானே.

ஆயினும் தந்தை செய்த தவறை தானும் செய்துவிடுவேன் என்ற தாயின் பயத்தை பற்றி அறிந்தவன் திருமணத்தை முடித்த பிறகு மகராவை தீண்டியிருக்க வேண்டும் .அன்று அவளின் நம்பிக்கையை சிதைத்தாயிற்று இன்று வருந்தி என்ன பலன் இனி தன் வாழ்வில் இன்னொரு பெண் கிடையாது
விதி பிரித்தாலும் தன் நேசப் பொருண்மை அழியாது என முடிவு செய்து கொண்டான். இறுதிவரை தன்னை இப்படி பார்ப்பதே செண்பகவல்லியின் சூழ்ச்சிக்கு பரிசு.என்று முடிவு செய்தவன் அதையே அமல்படுத்தவும் செய்தான். ஏனெனில் அவள் அவன் தாய் அதுவே அவனுக்கானதும். பெருங்கானகத்தில் பல்வேறு உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தாலும் அதனதன் தனித்தன்மையோடு தான் மிளிர்கின்றன. அது போலத்தானே மனிதனும்.


இதோ வருடங்கள் கடந்து இருந்தன. அவளுடனான நினைவுகள் மட்டும் அவன் சுவாசம் அந்த புகைப்படங்களுடன் தனது நினைவுகளையும் பத்திரப்படுத்தியவன் அந்த உறையில் இருந்த தகவல்களை பிரிக்கவே இல்லை . கிழித்துப் போட்டவன் மறு நாள் காலை தயாராகி சென்றது அந்த இல்லத்திற்கு தான் இவனை கண்டதும் அப்பா என ஓடிவரும் சில நூறு குழந்தைகளுடன் இருந்தான் . அவர்களின் அப்பா என்ற அழைப்பினில் தன் மகனின் முகம் தேடி ஆறுதல் கொள்பவன் அவர்களின் தந்தையாகி இருந்தான். இன்னும் இதை விரிவாக்க அவா்களுக்காக வாழ வேண்டும் என தன்னை தன் வாழ்வை மடை மாற்றி இருந்தான். செண்பகவல்லி காப்பாற்றிய அவனது திரண்ட சொத்து இந்த இல்லத்திற்கு நிதியாக இடமாக உணவாக மாறியது, அவனது தொழிலின் லாபமும் இங்குதான். இது அவனுக்கு அமைதியை தந்திருக்கும் எப்போதும் . இனி மகர விழியாளை நேரில் கண்டாலும் நண்பனாக அல்லது யாரோ போல் கடந்துவிடவோ முடியும் அவனது விழியாள் மகரமாக அமுதனவனின் மன ஆழியில் வாழ்ந்திருப்பாள் எப்போதும்

இதோ நிலனுக்கு வயது பதினைந்து இன்றும் என்றும் நிலன் அவனுடைய மகன் அதே போல் தன்னவள் மேல் அவன் கொண்ட நேசத்தின் பொருண்மையும் அழியாது.

நிலனைப் பற்றிய கூற்றில் அவள் கலங்க அவளைத் தேற்ற அவனருகில் அவள் அவனே அல்லவா எனவே சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டாள் .

அவளை பொறுத்தவரை அமுதனுடான அவளது கூடுகை விதி ஆனால் மேத்யூவை போன்ற ஒருவனின் அழியாத நேசத்தின் பொருண்மை
எதையும் அவளுக்குள் அமுதனை இனி நேரில் கண்டாலும் தன்னுள் அவன் பாதிப்பை ஏற்படுத்த முடியாது எனும் தெளிவை தந்திருந்தது.


பொருண்மை அழிவின்மை விதிப்படி
வேதிக் கூடுகை வினைகளில் வினைபடு பொருட்களின் நிறை. வினை விளை பொருட்களின் நிறைக்கு சமம்
நேசப் பொருண்மை அழிவின்மை விதியும் அப்படித்தான் போல

அல்பெட்ராஸ் எனும் பறவை சிறகை அசைக்காமலே நெடுந்தூரங்களை எளிதாக கடந்து விடுமாம். அது போல எளிதாக கடந்த காலத்தை கடந்து செல்லும் மனங்களும் உண்டு.சிட்டுகுருவி போல் குறிப்பிட்ட எல்லைக்குள் தன்னை அடைத்து கொண்டு சுழலில் விரும்பி சிக்கிக் கொண்டு அதிலேயே அமிழ்ந்து போகும் மனங்களும் உண்டு அவரின் நியாயங்கள் அவரவர்க்கு
 
Status
Not open for further replies.
Top