எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 4

Privi

Moderator

யாருக்கும் காத்திராமல் வெய்யோன் அவன் கடமையை செய்ய காலையிலேயே துயில் எழுந்து உலகிற்கு அவனின் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினான்.​

எதுவும் மாறாமல் நேற்றைய தினம் போலவே இன்றைய தினமும் லில்லிக்கு அமைய. அவள் காலை கடமைகளை முடிந்து விட்டு அவளுக்கான உணவை சமைத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டாள்.​

காவியாவும் அவளுடன் இன்று வேலைக்கு செல்ல இருவரும் லில்லி மேற்கொள்ள போகும் லண்டன் பயணத்தை பற்றி பேசலாயினர்.​

காவிய "என்னடி உங்க ஹவுஸ் ஓனரிடம் லண்டன் போறத பற்றி சொல்லிட்டியா?"​

லில்லி "இன்னும் இல்லடி இன்றுதான் கூறுவேன்."​

காவிய "காலத்த கடத்தாத, உனக்கு கால அவகாசம் இல்லை. இன்னும் ஒரு மாதம் மிஞ்சி இருக்கிறது. நீயும் நிறைய வேலை இந்த ஒரு மாதத்தில் செய்ய வேண்டும்." என்றாள்.​

லில்லி "ஹ்ம்ம் ஆமாம் தலைக்கு மேல் வேலை உள்ளது. ஆனால் இதில் எனக்கு தலை வலி என்ன தெரியுமா? என்னுடன் ராம் வருவதுதான். இங்கு அவன் படுத்தும் பாடு போதாதென்று அங்கு சென்றும் அவனுடன் அல்லல் படவேண்டி உள்ளது." என சலித்து கொண்டாள் லில்லி.​

அதற்கு காவியவோ "என்ன செய்வது அவனுக்கு காதல் பித்து உன்னை கண்டால்" என காவிய கூற​

அதற்கு லில்லியோ "ஹ்ம்ம் காதல் இல்லை காமப்பித்து" என திருத்தினாள்.​

அதற்கு காவிய கிளுக்கென சிரித்து விட்டு "கொஞ்சம் நாகரீகமாக கூறலாமேன்னு நினைத்தேன்." என கூறினாள்.​

அதற்கு லில்லி " அவன் கண்கள் போதும் நம்மை முழுங்கி ஏப்பம் விட. இந்த முறை என்னிடம் ஏதும் வால் ஆட்டட்டும், பிறகு இருக்கு அவனுக்கு." என பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள்.​

இப்படியே பேசி சென்றவர்கள் அவர்களின் பள்ளியையும் அடைத்து விட்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டு வந்த தலைப்பின் நாயகனே அவர்கள் முன் வர காவிய நமட்டு சிரிப்பு சிரித்தாள் லில்லியை பார்த்து.​

லில்லி அவளை பார்த்து முறைக்க அதே சமயம் லில்லியின் வழியை மறித்த வண்ணம் அவள் முன் வந்து நின்றான் ராம். ராம் மராட்டிய மொழியில்​

"லில்லி உனக்காகத்தான் காத்திருக்கேன். லண்டன் பயணத்தில் நீயும் என்னுடன் வர போகிறாய் என்று கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுளே நம் இருவரையும் எப்படி சேர்த்து வைக்கிறார் பார்." என வழிந்து கொண்டு அவளிடம் பேசினான்.​

அதற்கு லில்லி " கடவுள் இல்லை நம் திறமையை பார்த்து டீன் தான் இதனை செய்திருக்கிறார். நாம அங்க போவது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கத்தான்.​

அது உங்கள் நினைவில் இருக்கட்டும்." என சற்று காட்டமாக மராட்டிய மொழியிலே அவனுக்கு பதில் கொடுத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். போகும் அவளின் பின்னழகை ரசித்துக்கொண்டே மனதிற்குள் மராத்தியில்​

'உன்னை அடையாமல் விடமாட்டேன் அழகே' என கூறிக்கொண்டான்.​

பள்ளி முடிந்து வீட்டிற்கு போன லில்லியோ அவள் வேலைகளை முடித்து விட்டு திரு திருமதி ஷுக்லாவிடம் பேசலாம் என முடிவெடுத்து அவர்கள் இருவரையும் காண சென்றாள்.​

அவர்கள் இருவரும் இரவு உணவை முடித்து கொண்டு சற்று ஆசுவாசமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் முன் வந்து நின்றாள் லில்லி.​

அவளை ஏறிட்டு பார்த்த திருமதி ஷுக்லா மராத்தியில் "என்ன மா? என்ன வேணும்?" என வினாவினார்.​

அதற்கு லில்லி "கொஞ்சம் தயங்கிய படி "ஆண்ட்டி, அங்கில் என் மேல் கோபப்படாமல் நான் சொல்வதை கேளுங்கள்." என கூறி டீன் அவள் பெயரை தமிழ் மொழி பாடம் கற்பித்து கொடுக்க லண்டன் பள்ளியில் விண்ணப்பித்து முதல் நேற்று அவள் ஒப்பந்தத்தில் கை எழுத்து போட்டது வரை கூறி முடித்தாள்.​

அவளுக்கும் அன்பான இந்த இரு உள்ளங்களையும் விட்டு செல்வதில் வருத்தம் தான். திருமதி ஷுக்லா கொஞ்ச நாளிலே அவளுடன் நன்றாக பழகி ஒரு அன்னையை போல் மாறி இருந்தாரே.​

மேலும் இன்னும் ஒரு மாதத்தில் நான் அங்கு சென்று சேர வேண்டும்." என கூறி தலையை குனிந்து கொண்டாள். அவளுக்கு குற்றவுணர்வு வேறு மேலோங்கி இருந்தது.​

அவளையே பார்த்திருந்தனர் தம்பதிகள் இருவரும் பின் குரலை செருமி திரு ஷுக்லாதான் பேச ஆரம்பித்தார். "இது உனக்கான நல்ல ஒரு வாய்ப்பு. கண்டிப்பா போ.." என கூறி அவர் தமது அறைக்கு சென்றார்.​

திருமதி ஷுக்லாதான் எதுவும் பேசாமல் தொலைக்காட்சியை அடைத்து விட்டு அவளை முறைத்து கொண்டே திரு.ஷுக்லாவை பின் தொடர்ந்து அறையினுள் புகுந்து கொண்டார்.​

அவர்கள் இப்படித்தான் எதிர்வினை ஆற்றுவார்கள் என தெரிந்தே தான் அவர்களிடம் இது பற்றி கூற வந்தாள்.​

ஷுக்லா தம்பதிகளுக்கு லில்லி என்றாள் ஒரு தனி பாசம். தனிமையில் வாடி இருந்த இருவருக்கும் துணையாக வந்தவள்தான் லில்லி. அவளை என்றுமே வேற்று இனத்தவளாய் அவர்கள் பார்த்ததில்லை.​

அவளும் அங்கு வந்த நாளில் இருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் வந்து உரையாடுவாள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வாள்.​

ஒரு கட்டத்தில் அவர்கள் அவளை மகள் போலவே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சமைத்தால் அதில் கொஞ்சம் கொடுப்பது என எல்லாமே அவளுக்கு செய்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென "நான் லண்டன் போகிறேன்." என வந்து நின்றாள் அவர்களும் தான் என்ன செய்வார்கள்.​

லில்லி லண்டன் பயணத்தை பற்றி கூறி மூன்று நாட்கள் கடந்திருந்தது. அவளும் பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதிலும் புறப்படுவதற்கான வேலைகளை செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.​

திருமதி ஷுக்லாவும் மூன்று நாட்களாக அவள் மீது கோபத்தில் இருந்தார். அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் பேச முயன்றாலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.​

லில்லிக்கோ அவர் பேசாதது மனது என்னவோ போல் இருந்தது. சில வருடங்களே ஆனாலும் பாசமாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கொண்டவர் அல்லவா.​

பொறுத்து பார்த்தவள் ஐந்தாம் நாள் அவளே சமாதானம் செய்ய சென்று விட்டாள். ஐந்தாம் நாள் வேலை விட்டு வந்தவுடன் அவள் போஷனுக்கு கூட செல்லாமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பாத்துக்கொண்டிருந்த திருமதி ஷுக்லா முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தாள்.​

அவளை எதிர்பாக்காதவர் சற்றே அதிர்ச்சி ஆனாலும் சட்டென தன்னை சுதாரித்து கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டார். மண்டியிட்டு அமர்ந்தவள் அவர் கையை இறுக பற்றி மராட்டிய மொழியில்​

கண்கள் கலங்கி " ககு உங்களை விட்ட எனக்கு இங்கு யார் இருக்க. எனக்கே தெரியாது எங்க டீன் இப்படி ஒரு வேலையை பார்ப்பார் என்று. அவர் என்னிடம் மிகவும் தாழ்மையாக கேட்கவும் என்னாலும் மறுக்க முடியவில்லை.​

மூன்று ஆசிரியர்களை தேர்வு செய்து விண்ணப்பித்துள்ளார். அதில் இருவருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நான் ஒருவள்.​

ககு உங்களை விட்டு போகணும் என்றெல்லாம் எனக்கு இஷ்டமில்லை ஆனால் எனக்கு இப்போது அங்கு செல்வதை தவிர வேறு வழியும் தெரியவில்லை." என கண்களில் நீர் மல்க கூறினாள்.​

அவள் கண்கள் கண்ணீர் தேங்கியதை பார்த்தவுடன் திருமதி ஷுக்லாவிற்கு மனம் கேட்கவில்லை. அவள் கண்களை பெருவிரல் கொண்டு துடைத்து விட்டு, அவரும் மராட்டிய மொழியில்​

"அழாதே மா, நீ வருவதற்கு முன் நாங்களும் யாரும் அற்று தான் இருந்தோம். எங்கள் மகள் லண்டன் சென்று விட்டாள். எங்களையும் அவளுடன் வர சொன்னாள் தான் ஆனால் எங்களுக்குத்தான் இந்த ஊரையும் இந்த வீட்டையும் விட்டு செல்ல மனசில்லை.​

எனக்கு அவர் அவருக்கு நான் என்று இருந்த போதுதான் எங்கள் வாழ்வில் நீ வந்தாய். உன் குணம் பிடித்து போக உன்னை எங்ககளில் ஒருவாராய் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.​

உன் மேல் பாசமும் வைத்து விட்டோம். அதனால் தான் நீயும் லண்டன் செல்ல போகிறாய் என்றதும் கோபம் வந்து விட்டது. ஆனால் இங்கு எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. அவர் அவர் வாழ்க்கையை அவர் அவர் வாழ்ந்து தானே ஆகா வேண்டும்.​

சரி இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது நீ கிளம்புவதற்கு?" என கேட்டார் திருமதி ஷுக்லா.​

அதற்கு லில்லி "இன்னும் இருபத்தைந்து நாட்கள் உள்ளது." என கூறினாள்.​

"புறப்படுவதற்கான பொருட்களை எல்லாம் தயார் படுத்தி விட்டாயா?" என கேட்டார் திருமதி ஷுக்லா.​

அவளும் "ஆம்" என தலை அசைக்க,​

திருமதி ஷுக்லா "உன்னுடன் யாரோ வருவதாக கூறினாயே யார் அது? எங்கு தங்க போகிறீர்கள்? என அவளை பல கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்.​

அவளும் சிறு புன்னைகையுடன் " எங்களுக்கு அங்கு தங்குவதற்கு இரு அறைகள் கொண்ட ஒரு வீடு ஏற்பாடு செய்துள்ளனர்." என கூறினாள். பின் "என் கூட வரப்போவது ஆசிரியர் ராம்." என கூறினாள்.​

அதற்கு திருமதி ஷுக்லா "என்ன? அவனா? அதுவும் அவனுடன் ஒரே வீட்டில்?" என கேட்டார்.​

இவளும் முகத்தை சோகமாக வைத்து கொண்டு "ஆம்" என தலை அசைக்க, சட்டென முகம் மாற அவர் திறன் பேசியை எடுத்தார். அடுத்த நொடி அவர் அழைத்தது என்னவோ லண்டனில் வசிக்கும் அவர் மகளுக்குத்தான்.​

அவர் அழைப்பை ஏற்ற அவர் மகளோ "அம்மா என்ன இத்தனை மணிக்கு அழைத்திருக்கிறாய்? என கேட்டாள்.​

அதற்கு திருமதி ஷுக்லா " பூஜா வேலைய இருக்கியா மா? எனக்கு உன்னிடம் ஒரு உதவி வேண்டும்." என கேட்டார்.​

அதற்கு பூஜாவும் "சொல்லுங்க மா" என கூற,​

திருமதி ஷுக்லா "பூஜா நம்ம வீட்டு மேல் போஷனில் தங்கியிருக்கும் பெண் லில்லியை பற்றி சொன்னேன் இல்லையா? என கேட்டார்.​

அதற்கு அவளும் "ஹ்ம்ம்" என சொல்ல,​

திருமதி ஷுக்லா "அந்த பெண்ணிற்கு 6 மாதம் லண்டன் பள்ளியில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் அங்கு வந்து விடுவாள். அவளுக்கு தங்குவதற்கு ஒரு இடம் அதுவும் பிரச்சனை இல்ல நல்ல இடமாகவே பார்த்து தருகிறாய? என கேட்டார்.​

அதற்கு பூஜாவோ " அவர்கள் தங்குவதற்கு இடம் தரவில்லையா?" என அவர் வேண்டுகோளுக்கு பதில் கேள்வி கேட்க​

திருமதி ஷுக்லா "தந்திருக்கிறார்கள் தான், ஆனால் கூட வருவருவது ஒரு ஆன் மகன். இரு அறை கொண்ட ஒரு வீடு, அதுவும் அவன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை. அதனால்தான் கேட்கிறேன்." என இவர் கூற.​

அதற்கு பூஜா "சரிம்மா நல்ல இடம் பார்த்து சொல்கிறேன்." என கூறி பின் அவள் வரும் தேதி, கிழமை, மணி எல்லாம் குறித்து வைத்துக்கொண்டு. அவர்களின் தொடர்பை துண்டித்தாள்.​

திருமதி ஷுக்லா லில்லியிடம் திரும்பி “பூஜா உனக்கு தங்குவதற்கான வீடு பார்த்து கொடுப்பாள். அதில் தாங்கிக்கொள்ள. அவனுடன் எல்லாம் தங்க வேண்டிய தேவை இல்லை. " என சற்று காட்டமாக கூற,​

இவளும் புன்னகையுடன் அவரை அனைத்து கொண்டாள். இப்படியே நாட்கள் பறந்தோட அவள் பயணப்படும் நாளும் நெருங்கி வந்தது...​

 
Top