kani suresh
Moderator
அத்தியாயம் 6
"அத்தை, அவருதான் ராகினியோட அப்பா, நீ கூடக் காலையில பார்த்தன்னு சொன்னியே. அவர்கிட்ட நின்னு பேசி இருக்கலாம் இல்ல." என்று கேட்டான் கவின்.
"எதுக்குடா, நமக்குத் தேவையில்லாத வேலை, வேலியில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கச் சொல்றியா?" என்று சொல்ல,
"பழமொழி நல்லாப் பேசுற அத்தை” என்று சிரித்தான்.
"டேய் அமைதியா வா டா" என்று அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள். அவள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவளது நினைவில் தன்னையும் மீறி அப்பா, மகள் இருவரும் வந்து சென்றார்கள். பேசிக்கொண்டே வீட்டிற்குச் சென்று இருந்தாள்.
இங்கு வினோத் ராகினியை அழைத்துக் கொண்டு வந்தவன், "ஏன் ராகிமா, நீ இன்னைக்கு உன்னோட அந்த ஆன்ட்டியைப் பார்த்துப் பேசலையா?" என்று கேட்டான். தன் அப்பாவைப் பாவமாகப் பார்த்தாள்.
சிரித்த வினோத், "நான் சும்மா தாண்டா ராகிமா கேட்டேன்."
“இல்லப்பா, தெரியல ஆன்ட்டி இன்னைக்கு என்கிட்ட ஒழுங்காவே பேசல. அதுவும் அவசரமா கிளம்பிட்டாங்க" என்று சொன்னாள்.
'என் பொண்ணு கிட்டயும் பேசாம தான் போயிருக்காளா?' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு தன் மகளிடம் கதைகள் பேசிக்கொண்டே வீட்டிற்குச் சென்று தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.
ராகினியும் அன்று நடந்த அனைத்தையும் தன் அப்பாவிடமும், பாட்டியிடமும் சொல்லி மகிழ்ந்தாள்.
"ஏன்டா மா, கண்மணி உன்கிட்டச் சாயங்காலம் பேசல" என்று பத்மா கேட்க,
“ஏன்னு தெரியலையே பாட்டி, ஆனா பேசல" என்றவுடன்,
"உன் அப்பன் எதுவும் திட்டினானா?" என்றவர் நாக்கைக் கடித்துக் கொண்டார். மகன் தன்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தவுடன் அமைதியாகி விட்டார்.
"இல்ல பாட்டி, அப்பா எதுவும் பேசல" என்றாள்.
"உனக்குத் தெரியுமா?" என்று கேட்க, "இல்லையே" என்றாள்.
தன் மகனிடம் சென்றவர், "அந்தக் கண்மணிப் பொண்ண ஏதாவது சொன்னியாடா?" என்று கேட்டார்.
"எனக்கு வேற வேலை இல்ல பாருங்க, அவளப் போய் திட்டுறது தான் வேலை" என்றான்.
"அப்புறம் நீ அந்தப் பொண்ணுகிட்ட ஏதோ பேசினதா ராகிமா சொல்றாளே?"
"அம்மா" என்று முறைத்து விட்டு, "நான் எதுவும் பேசல, பேசணும்னு கேட்டேன். அதுக்குக் கூட அவ எதுவும் சொல்லாமல் எனக்கு வேலை இருக்குன்னு போறா, திமிரு புடிச்சவ. அவளதான் உனக்கும், என் பொண்ணுக்கும் பிடிச்சிருக்கு" என்று முனகி விட்டு நகர்ந்தான்.
'எனக்கும், உன் மகளுக்கும் பிடிச்சவளை, உனக்கும் ஒரு நாளைக்குப் புடிச்சவளா ஆக்கணும்டா, அதுக்கான வேலையை நான் முதல்ல பார்க்கணும். நாளைக்கு உங்க ரெண்டு பேத்தையும் அனுப்பி வச்சிட்டு, உன் வாழ்க்கைக்கான அடுத்த அடியை எடுத்து வைக்கணும்.
அதுக்கு ஃபர்ஸ்ட், கண்மணியோட போன் நம்பர் எனக்குத் தெரியும். கண்மணி கிட்ட இதப்பத்திப் பேசணும்' என்று யோசித்தார்.
‘இதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?’ என்று யோசித்தவரின் மண்டையில் ராகினி புக்கில் உள்ள கண்மணியின் போன் நம்பர் வந்து செல்ல, வேகமாக எதுவும் பேசாமல் தன் பேத்தியிடம் சென்று, “உன்னோட புக் எல்லாம் காட்டு ராகி மா” என்றார்.
ஒவ்வொரு புக்காய் தேடிய பிறகு ஒரு புக்கில் மட்டும் போன் நம்பர் இருக்க, "இது யாரோட போன் நம்பர்?" என்று கேட்க,
"இதுதான் கண்மணி ஆன்ட்டி போன் நம்பர்.” என்றாள் மெதுவாக.
"சரிடா ம்மா” என்று அந்த போன் நம்பரை நோட் பண்ணிக் கொண்டார்.
"எதுக்கு பாட்டி கேட்டீங்க?" என்று கேட்க, "சும்மா தாண்டா " என்று விட்டு அமைதியாகி விட்டார். அந்த போன் நம்பரை அவரது ஃபோனில் எடுத்துக் கொண்டு வந்தவருக்கு, அவளிடம் பேச ஏதோ மனது ஒப்பவில்லை.
'தன் மகனுக்கு முதல் தாரமாகப் பெண் கேட்கப் போகிறோம் என்றால் கூட, நாம் கண்மணியிடம் பேசலாம். இரண்டாம் தாரமாக, அதுவும் கையில் ஒரு குழந்தையுடன் இருப்பவனுக்குப் பெண் கேட்க வேண்டும் என்றால், கண்மணியிடம் பேசுவது சரியாக வராது. அவளது பெற்றவர்களிடம் பேச வேண்டும். என்ன செய்யலாம்? எப்படி அட்ரஸ் தெரிந்து கொள்வது?' என்று யோசித்தார்.
'இதற்கு என்ன தீர்வு?' என்று யோசித்துக் கொண்டே இருந்தவருக்கு, இரவு சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் வேளையில் தான் ஒரு எண்ணம் உதயமாகியது.
‘நாளை பேத்தியுடனே சென்றால், கவினைப் பார்க்க நேரிடும். அவனிடம் அட்ரஸ் கேட்டால் சொல்லுவான்.’ என்று யோசித்தவர், அதை எப்படிச் செயல்படுத்துவது? என்றும் யோசிக்கச் செய்தார்.
மறுநாள் விடியலில் ராகினி ஸ்கூலுக்குக் கிளம்ம்பும் போது, “"ராகி மா, பாட்டியும் இன்னைக்கு உங்ககூட ஸ்கூலுக்கு வரட்டா, நான் உன்னக் கொண்டு வந்து விடட்டா" என்று கேட்டார்.
அம்மாவை மேலும் கீழும் பார்த்தவன்,
"எதற்கு? இவ்வளவு நாளா நான் தானே கொண்டு போய் விட்டுட்டுக் கூட்டிட்டு வரேன்"
"ஏன்டா, ஒரு நாள் என் பேத்தியை நான் கூட்டிட்டுப் போய் விட்டா குறைஞ்சா போயிடுவேன். நான் அப்படியே அவங்க ஸ்கூலுக்குப் பக்கத்துல இருக்க கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்."
"இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையே, என்ன புதுசா கோவில் போறீங்க?" என்றான் தன் தாயை நம்பாத பார்வையுடன்.
"ஏன், வெள்ளிக்கிழமை மட்டும் தான் கோவில் போனுமா? மத்த நாள்ல கோவிலுக்குப் போகக் கூடாதா? ஏதோ, எனக்கு இன்னைக்குக் கோவில் போகணும்னு தோணுது. அவ ஸ்கூல் தாண்டியிருக்க கோவிலுக்கு தான், போலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். இப்போ உன்னால என்னை நம்பி உன் மகளை அனுப்பி வைக்க முடியுமா, முடியாதா?" என்றார் லேசாகக் குரலை உயர்த்தி.
"சரி ஓகே, அவ ஸ்கூல் தாண்டி இருக்க கோவிலுக்கு தான போகணும். நான் அவளைக் கூப்பிட்டுப் போகும்போதே உங்களையும் கூட்டிட்டுப் போய் விட்டுடறேன். வரும்போது வேணும்னா ஆட்டோல வீட்டுக்கு வந்துடுங்க" என்றான்.
"இல்ல, நான் ராகிமாவை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே கோவிலுக்குப் போயிடுறேன். அவள விட்டுட்டு என்னைக் கூப்பிட்டுப் போய் விடணும்னா, உனக்கு வேலைக்கு நேரம் ஆகும் இல்ல" என்றார் லேசான திணறலுடன்.
தன் தாயை மேலும் கீழும் பார்த்தவன், "அம்மா, ஏதாவது வேண்டாத வேலை பார்த்து வைக்காதீங்க?"என்றான்.
தன்மகள் அருகில் இருப்பதை உணர்ந்து விட்டுத் தன் தாயின் அருகில் வந்து, "ஏற்கனவே நீங்க பார்த்த வேலையில் தான் எனக்கும், என் மகளுக்கும் நடுவுல ஒருத்தி வந்திருக்கா. அதுவே இன்னும் என் மனச விட்டு நீங்கல. நீங்க ஏதாவது திரும்பப் பண்றேன் என்ற பேர்ல என்ன வெறுப்பேத்திப் பாக்காதீங்க, அவ்வளவுதான் சொல்லுவேன்.
நீங்களே கூட்டிட்டுப் போயிட்டு வாங்க. ஆனா, ஏதாவது வேலை செய்றீங்க என்று தெரிஞ்சா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. உங்க பையனோட இன்னொரு ரூபத்தைப் பார்க்க வேண்டி வரும்" என்று தன் தாயை மிரட்டிவிட்டு, மகளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு, "சரிடா மா, பாட்டி கூடப் போறியா?" என்று கேட்டான்.
அவளும் குதூகலமாக, "சரிப்பா, ஆனா சாயங்காலம் நீங்க வாங்க" என்றாள்.
"சரி ராகிமா" என்று விட்டு அன்னையை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ஆபீசுக்குக் கிளம்பி விட்டான் வினோத்.
அவன் கிளம்பிய பிறகு ராகினியை அழைத்துக்கொண்டு பத்மா ஸ்கூலுக்குச் சென்றார். அங்கு சென்று கவினைப் பார்த்து, அவனிடம் வீட்டு அட்ரஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணத்துடன் சென்றார்.
ஆனால், அங்குக் கண்மணியைப் பார்க்கக் கூடும் என்று அவர் நினைக்கவில்லை. அப்பொழுதுதான் கண்மணியும் கவினை அழைத்துக் கொண்டு வந்திருக்க, "பாட்டி, கண்மணி ஆன்ட்டி" என்று விட்டு,
"ஹாய் ஆன்ட்டி" என்று வேகமாகக் கண்மணியிடம் செல்ல,
கண்மணி ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்து விட்டு, "என்னடாமா, இன்னைக்கு சீக்கிரமாகவே வந்துட்டீங்க போல." என்று சிரித்தாள்.
"இன்னைக்கு நீங்கதான் கொஞ்சம் லேட் ஆன்ட்டி. அது மட்டும் இல்லாம நான் இன்னிக்குப் பாட்டிகூட வந்திருக்கேனே" என்றுவிட்டுத் திரும்பிப் பார்க்க,
கண்மணியும் ராகினியின் பார்வை போகும் திசையைப் பார்த்தாள்.
அங்குப் பத்மா சிரித்த முகமாகக் கண்மணியைப் பார்த்துக் கொண்டிருக்க,
"நல்லா இருக்கீங்களாமா?" என்று கேட்டாள் மரியாதை நிமித்தமாக. அவரும் சிரித்த முகத்துடன், "நல்லா இருக்கேன் கண்மணி, நீ நல்லா இருக்கியா?” என்றார்.
"என்னம்மா இன்னைக்கு நீங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க, அவங்க அப்பா கூடதான தினமும் வருவா?" என்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் கண்மணி.
அவளது செய்கையைப் பார்த்தவர் மனதிற்குள் சிரித்துவிட்டு, "நான் இங்கப் பக்கத்துல கோவிலுக்குப் போலாம்னு இருந்தேன். அதான் நானே கொண்டு வந்து விட்டிடலாம்னு…" என்றார்.
"ஓ சரிமா, நீங்க பாருங்க. எனக்கு லேட் ஆகுது வேலைக்கு" என்றாள்.
"சரி" என்று விட்டு அவர் அமைதியாகிவிட, "ஆன்ட்டி நீங்க போற வழியில தான கோவிலும் இருக்கு. பாட்டியைக் கோயில்ல விட்டுடறீங்களா? ஆட்டோ புடிச்சு தான் பாட்டி போகணும்." என்று ராகினி கேட்க, "வேண்டாம் "என்பது போல் பத்மா தனது பேத்தியிடம் தலை அசைத்தார்.
ராகினியை ஒருமுறை திரும்பிப் பார்த்தவள், பத்மாவைச் சங்கடமாகப் பார்க்க, "இல்லம்மா நான் பொறுமையாகப் போயிக்கிறேன். எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல, கோவிலுக்கு தானே. நீ போ கண்மணி, உனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகும் இல்ல" என்ற உடன், "சரிமா" என்று தலையாட்டினாள்.
கண்மணி, மூவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப, "என்ன பண்ணிட்டு இருக்க ராகிமா" என்றார்.
"இல்ல பாட்டி, நீங்க கோவிலுக்குத் தானே போகனும். ஆன்ட்டி போற வழியில தான் நீங்க சொல்ற கோவிலும் இருக்கு, அதனால தான்.” என்றாள்.
"அதுக்குப் பாட்டிக்குப் போயிக்கத் தெரியாதா? இப்படி ஒருத்தவங்க வேலையாப் போகும்போது தான் நம்ம இன்னொரு வேலை வைக்கணுமா? இப்படியெல்லாம் பண்ணக் கூடாதுனு அப்பா சொல்லி இருக்கான்ல" என்றார்.
"சாரி பாட்டி" என்று சொல்ல, "சரி விடு, இனிமே இந்த மாதிரிப் பண்ணக் கூடாது" என்று விட்டுக் கவினைப் பார்த்தவர், அவனிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு, "உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுடா, கவின் குட்டி" என்று கேட்டார்.
"எதுக்கு பாட்டி?" என்று கேட்டவன், அவரைக் குறுகுறுவெனப் பார்க்க, அவனைப் பார்த்துச் சிரித்தவர் அவனைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டு,
"ஏன், பாட்டிகிட்ட உன்னோட வீட்டு அட்ரஸ்கூடச் சொல்ல மாட்டியா?" என்றார்.
"தெரியாதவங்க யார்கிட்டயும் வீட்டு அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் தரக்கூடாதுனு அத்தை சொல்லி இருக்கு." என்றான்.
"பாட்டியை உங்களுக்குத் தெரியாதா?"
"தெரியும் தான் பாட்டி, இருந்தாலும்…” என்று தாடையில் கை வைத்து யோசித்தவன், "அத்தை திட்டுச்சுனா…" என்றான்.
"உங்க அத்தை திட்ட மாட்டாங்கடா. ஏன்? உங்க அத்தை என்கிட்ட நல்லா தானே பேசிட்டுப் போறாங்க"
"அத்தை நல்லாதான் பேசுறாங்க, ஆனால், ராகியோட அப்பா?" என்றான் கேள்வியாக.
அவனைப் பார்த்துச் சிரித்த பத்மா, "ராகி யோட அப்பாவுக்கு என்ன டா?” என்றார்.
"ராகி அப்பா அத்தைகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாராம்" என்று சொன்னான்.
"எங்க அப்பா எப்பச் சொன்னாங்க, என்ன சொன்னாங்க?” என்றாள் ராகினி.
"சரி டா கவி, அதுக்கு என்ன? வினோ திட்டிட்டானா உங்க அத்தையை" என்று கேட்டார். "இல்லை" என்பது போல் தலையாட்டியவன்,
"அத்தை தான் பேசவே இல்லையே, அவர்கிட்ட அத்தை பயந்துடுச்சு. பயந்துட்டு என்னை வேகமா கூட்டிட்டு வீட்டுக்குப் போயிடுச்சு" என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
பத்மாவும் சிரித்துவிட்டு, “பிறகு எதுக்குடா என் மகனைப் பார்த்து உங்க அத்தை பயப்படணும், என் மகன் என்ன பேயா? பூதமா?” என்றார்.
"அதான் பாட்டி எனக்கும் தெரியல" என்று சிரித்தான்.
சிறிது நேரம் இருவரிடமும் பேசிக் கொண்டு இருந்தார்.
ஃபர்ஸ்ட் ஹவர் ஸ்டார்ட்டாக பெல் அடித்தவுடன்,
"சரி பாட்டி, எங்களுக்கு நேரம் ஆயிடுச்சு, நீங்க கிளம்புங்க. இதுக்கு மேல இங்க இருக்கக் கூடாது" என்றான் கவின்.
"நீ உன் வீட்டு அட்ரஸ் சொல்லலையே" என்று கேட்டார்.
திரும்பவும் முதலிலிருந்து "எதற்கு பாட்டி, எங்க வீட்டு அட்ரஸ்?" என்று கேட்டான்.
அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு, "ஏன், நான் உங்க வீட்டுக்கு வரக் கூடாதா? உனக்கு ஆசை இல்லையா? நான் வரும்போது ராகிமாவையும் கூப்பிட்டு வருவேன், நீங்க இரண்டு பேரும் விளையாடலாம்" என்றார்.
கவின் சிரித்துக் கொண்டே தன் டைரியை எடுத்து, "இதுல இருக்கு பாருங்க" என்றான்.
"சரி" என்றவர் அதைத் தன் போனில் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு,
"சரிடா தங்கம், ரெண்டு பேரும் நல்லாப் படிங்க" என்று இருவரது தலையையும் கோதிவிட்டு, வீட்டு அட்ரஸ் கிடைத்த சந்தோஷத்தில் வெளியே இருக்கும் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில், ‘எப்படியாவது என் மகனுக்கு இந்தக் கண்மணியைப் பேசி முடிக்க வேண்டும். அதற்கு அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். நீதான் இறைவா, அதற்கு அருள் புரிய வேண்டும்.’ என்று இறைவனிடமும் வேண்டி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார் பத்மா.