எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மௌனப்பெருவெளி

admin

Administrator
Staff member
கிளைகளைக் கொண்டாடும்
பறவைகளாய்ச்
சில நினைவுகளில்
இளைப்பாறிக் கொள்ளும்
எப்போதும் என் தனிமை
இப்போது மட்டும்
உதிரும் பழுத்த இலை
ஒன்றின் மௌனத்தை
தற்காலிகமாய்ச் சூடியிருக்கிறது

ஒரு துண்டு மேகத்தை
ஒரு சொட்டுத் தூறலை
சிற்றோடை வெள்ளத்தை
ஏதேனும் ஒரு தருணத்தில்
முகுழ்வித்து விடுகிறது

சிறு துளி கண்ணீரை
குறு நிறை புன்னகையை
தொடர் ஆழ் சிந்தனையை
அடர் திரழ் ஞானத்தை
புதிது புதிதாய்ப் பற்றிப்படர்கிறது

தகித்தெரியும் மாலையின் மேற்கில்
செந்நிறப் படர்தலுக்குள் இதோ
காணாமல் போகிறதென் தனிமை!

- வேலணையூர் ரஜிந்தன்.
 
Top