அழுகையின் காரணமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மேக்னா. மாலை நெருங்கதான் கண் விழித்தாள். கண்களை கசக்கிய படியே விழித்தவள் கண்கள் மேலும் விரிந்தது.
ஆம் அங்கு அவள் படத்தை இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியான பெண்ணாக வரைந்து வைத்திருந்தான் ராயின். அவனும் அவள் அருகினில் தான் அமர்ந்திருந்தான்.
அவள் அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்க்க ராயினோ "என்னிடம் உன் அம்மா புகைப்படம் இல்லை. எங்களுக்கு என்ன நடந்ததென்று உன்னிடம் சொன்னால் உனக்கு அதனை சரியாக புரிந்து கொள்ள முடியுமா என்றே எனக்கு தெரியவில்லை.
ஆனாலும் நீ கேட்டதற்காக… நானும் உன் அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். அது என்னுடை குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. எங்களை பிரிக்க முயற்சி செய்தார்கள்.
உன் அம்மா வயிற்றில் நீயும் வந்து விட்டாய். பல சோதனைகளை தாண்டித்தான் நானும் உன் அம்மாவும் வாழ்ந்து வந்தோம். நீ பிறந்த அன்று உன் அம்மா உன்னை என்னிடம் கொடுத்து விட்டு, உன்னையும் என்னையும் தனியாக விட்டு இந்த உலகத்திலிருந்து விடை பெற்று சென்று விட்டாள்.
என் உறவுகள் மத்தியில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தான் உன்னை இங்கு அழைத்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." என்று கூறி முடித்தான்.
அவன் கூற கூற அவன் மனக்கண்ணில் அவளுடன் வாழ்ந்த அந்த நாட்களும், கடைசி நொடியில் அவளை கண்டதும் தான் அவனுக்கு நிழல் படமாக ஓடியது. அவள் கண்கள் கூறும் கதை, அவள் சிரிப்பு என யோசித்தவன் சற்றே தன்னை அவள் நினைவலைகளிருந்து மீட்டெடுத்து மேக்னாவை பார்த்தான்.
அவளும் தந்தையின் கண்ணீரை கண்டு வருந்தி அவளும் தந்தையுடன் கண்ணீர் விட்டாள். அவள் கண்ணீரை பெருவிரலால் தொடைத்து விட்டவன், "உன் அம்மாவின் படம் அவள் நினைவுகளாய் பொருட்கள் என எதுவுமே என்னிடம் இல்லை. உன் அம்மா என மனதினுள் மட்டுமே இருக்கிறாள் அதனால்தான் நீ செய்யும் ஒவ்வொன்றும் அவளை பிரதிபலிக்கும் போதெல்லாம் உன் அம்மாவை போல் இருக்கிறாய் என்று கூறுவேன்." என கூறி முடித்தான்.
அவளும் அவனை அணைத்து கொண்டு "அப்பா சாரி... ப்பா இனி நான் அம்மாவை பற்றி கேட்க மாட்டேன். அழாதீங்க ப்பா." என கூறினாள்.
அவனும் தன்னை சமநிலை படுத்தி , அவன் கண்களை துடைத்து விட்டு, அவளை அணைத்து, அவள் உச்சியில் முத்தம் ஒன்றை பதித்தான்.
பின் அவளை அவனிடம் இருந்து பிரித்து "சரி போ, போய் குளித்து விட்டு, கடவுளை வணங்கி விட்டு வா. நாம் இன்று வெளியே சென்று உணவருந்த போலாம்." என கூறினான்.
சரி என தலை ஆட்டி குளிக்க சென்றவள், அவள் அப்பா கூறிய விஷயத்திலேயே உழன்று கொண்டு இருந்தாள். சட்டெனெ 'அம்மாதான் இல்லை நான் ஏன் எனக்கு ஒரு சித்தி தேடக்கூடாது. அவர் சித்தியாக இருக்க அவசியம் என்ன அம்மவாக கூட மாறலாமே.' என யோசித்தவள் பின் குதூகலமாக குளித்து உடை மாற்றினாள்.
அவளுக்குள் அவள் ‘மிஷன் எம் ஸ்டார்ட்’ (Mission M Start) என கூறி கொண்டாள். பின் மகளும் தந்தையும் உணவருந்த சென்றனர். இப்படியே ஒரு வாரம் கடந்த நிலையில், இங்கு லில்லி புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது.
ராம் மற்றும் லில்லி அவர்கள் சுற்றத்தாருக்கு பிரியாவிடை கொடுத்து விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். விமானத்திற்கு காத்திருக்கும் இடத்தில அமர்ந்திருந்த லில்லி, சற்றுமுன் நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தாள்.
அவளை வழி அனுப்ப வந்தனர் திரு திருமதி ஷுக்லா தம்பதிகள் மற்றும் கயல். கயல் அவளை அனைத்து விடுவித்து "எனக்கென்னமோ உன் வாழ்க்கை இனி சிறப்பாக பயணிக்கும் என தோன்றுகிறது. நீ செல்வது கவலையாக இருந்தாலும் ஒரு தோழியாய் உன்னுடைய நல்ல எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என கூறினாள்.
அவளிடம் பேசிவிட்டு திரு திருமதி ஷுக்லாவிடம் வந்தவள், கண்களில் கண்ணீர் தளும்ப நின்ற திருமதி ஷுக்லாவை ஆரத்தழுவி கொண்டாள். திரு ஷுக்லா அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்ய திருமதி ஷுக்லாவை விட்டு பிரிந்து இருவர் கால்களின் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிகொண்டாள்.
இருவரும் அவள் தலை மேல் கை வைத்து அவளுக்கு அவர்களின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்தை கொடுத்து அவளை தூக்கி விட்டனர். திருமதி ஷுக்லா அவளிடம் "உனக்கு அங்கு ஏதேனும் பிடிக்க வில்லை என்றால் உடனே இங்கு வந்து விடு உனக்கென ஒரு வீடும் , அப்பா அம்மாவும் இங்கு இருக்கிறோம்." என மராட்டிய மொழியில் கூறினார்.
இந்த வார்த்தைகளை கேட்ட லில்லயோ பட்டென அழுது விட்டாள். அவள் கண்களை துடைத்த திருமதி ஷுக்லா பின் சற்றே குரலை உயர்த்தி "உனக்கு எந்த பயலும் தொந்தரவு செய்தால் என் பேட்டியிடம் சொல். அவள் பார்த்து கொள்வாள் அந்த கயவர்களை." என்று கூறினார்.
இப்படித்தான் அவளை வலி அனுப்பி வைத்தனர். அவள் எண்ண ஓட்டங்களுக்கு தடை விதிப்பது போல் அவளுக்கான விமானம் தயாராகி விட்டது பயணிகள் தத்தமது உடமைகளை எடுத்து கொண்டு விமானத்திற்கு வரவும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார்கள். அவளும் அவளது கைப்பையுடன் டிக்கெட் மற்றும் பாஸ்ப்போர்ட்டுடன் விமானத்தில் பயணம் செய்து லண்டன் செல்ல தயாரானாள். இங்கு ராமோ அவள் பக்கத்தில் அமர்ந்து பயண செய்ய நினைத்தவன் விமானத்தினுள் சென்ற பின் தான் தெரியும் அவன் ஆகா பின் சீட்டில் அமர வேண்டும், இவள் ஆகா முன் சீட்டில் அமர வேண்டும் என்று.
முகம் வாடிப்போக அவன் அவன் சீட்டிக்கு போக இங்கு லில்லியோ நிம்மதி பெருமூச்சுடன் அவள் சீட்டில் அமர்ந்தாள். பத்து மணி நேர பயணத்தின் பின்பு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தடைந்தாள் லில்லி.
செக் இன் எல்லாம் முடிந்து அவள் தன்னுடன் வர போகிறாள் என நினைத்து கொண்டிருந்த ராமிற்கும் அங்கு காத்திருக்கும் இடத்தில இவன் பெயர் போட்டு ஒருவர் நிற்க, சற்று தூரம் தள்ளி அவள் பெயர் போட்ட பலகையை ஒருவர் பிடித்து நிற்க ராம் சற்று குழம்பி போனான்.
அவள் தன்னுடைய பெயர் பலகையை பிடித்திருப்பவரை நோக்கி நடக்க ராம் அவன் பெயர் பலகையை பிடித்திருப்பவரை நோக்கி சென்றான். அப்போதுதான் அவனுக்கே தெரியும் அவர்கள் இருவரும் வேறு வேறு இடத்தில் தங்க போவது. கோபம் சூள்லென வந்தாலும் அதனை காட்ட முடிய நிலைமையில் அவளை முறைத்துக்கொண்டு அவனை அழைக்க வந்தவர்களுடன் சென்றான் ராம்.
இவளை அழைக்க வந்தது வேறு யாரும் இல்லை திரு திருமதி ஷுக்லாவின் மகள் பூஜாதான். லில்லி தனது பெயர் கொண்ட பலகையை பிடித்து நிற்கும் பூஜாவிடம் வந்து தன்னை அறிமுகம் படுத்தி கொண்டாள்.
பூஜாவும் தன்னை அறிமுகம் படுத்திகொண்டு, லில்லியிடம் அவளின் பயணத்தை பற்றி விசாரித்தாள். பின் திருமதி ஷுக்லாவிற்கு அழைத்து வில்லன் வருகையை பற்றி கூறினாள்.
லில்லயும் அவரிடம் இரு வார்த்தைகள் பேசிய பின் அலைபேசியை துண்டித்தாள். இருவரும் முதலில் சென்றது பூஜாவின் வீட்டிற்குத்தான். பூஜா லில்லியிடம் " லில்லி முதலில் என் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடு பின் நான் உன்னை உன் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்." என கூறினாள்.
இவளும் சரி என ஒத்துக்கொள்ள இருவரும் பூஜா வீட்டிற்கு பயணப்பட்டனர். அமைதியான செல்லும் வாகனங்கள், சுத்தமான சாலை, மிக உயர்ந்த கட்டிடங்கள் என லில்லியின் பார்வைக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.
இருபது நிமிடங்களில் பூஜா வீட்டை வந்தடைந்தனர் இருவரும். அவள் இறங்கி உள்ளே செல்லுமுன் எங்கோ தமிழ் பாடல் ஒலிக்க, அவள் பூஜாவிடம் மராத்தியில் "தீதி எங்கோ தமிழ் பாட்டு கேக்குறதே?" என கேட்டாள். .
அதற்கு பூஜா "இங்கே பக்கத்தில் உள்ள பில்டிங்கில் டான்ஸ் பள்ளி நடக்கிறது அதான் என கூற, இவளும் ஓஹ் என்று கூறி வீட்டினுள் சென்றாள். வீட்டை சுற்றி சுற்றி பார்வையிட்டவள் பூஜாவை பார்த்து "வீடு அழகாக இருக்கிறது" என கூற பூஜாவும் "நன்றி" என கூறினாள்.
ஒரு அறையை காண்பித்து அதில் ஓய்வெடுக்குமாறு கூறினாள் பூஜா. லில்லயும் சென்று அந்த அறையில் ஓய்வெடுத்தாள். மூன்று மணி நேர ஓய்வுக்கு பின் அலுப்பு நீங்க லில்லி குளித்து தன்னை சுத்தம் செய்து விட்டு பூஜாவை தேடி சென்றாள்.
பூஜாவும் அவளை அழைத்துக்கொண்டு லில்லி வீட்டிற்கு சென்றாள். கச்சிதமான சின்ன வீடு அது. கொஞ்சம் நீளமான, ஆகலாமான வரவேற்பறை. அதிலேயே ஒரு ஓரத்தில் காட்டில் போடப்பட்டிருக்க, அதன் அருகில் இருவர் அமரும் சோபா போடப்பட்டிருந்தது.
கதவிற்கு பின்னல் தடுப்பு மாதிரி செய்து அங்கு சமையல் செய்யும் இடமாக மாற்ற பட்டிருந்தது. அதன் அருகினில் கதவு ஒன்று இருந்தது லில்லி அதனை திறந்து பார்க்க அது குளியல் அறை.
ஒருவர் தாராளமாக அங்கு தங்கிக்கொள்ளலாம். வீடு பார்க்க சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. லில்லி பூஜாவை பார்த்து மராட்டியில் "வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என கூறினாள்.
பூஜா அவள் கூறியதற்கு பதிலாக சன்னமான சிரிப்பு ஒன்றை சிந்தினாள். பின் அவள் லில்லியிடம் "வா உனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அப்படியே பக்கத்தில் கடைகள் எல்லாம் எங்கு இருக்கிறது என்றும் உனக்கு காட்டி விடுகிறேன்." என கூறினாள்.
அவளுடன் சென்று தனக்கு தேவையான வற்றை வாங்கி கொண்டு கடைகள் எங்கு இருக்கிறது? எப்படி போக வேண்டும் என எல்லாம் அறிந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
பூஜா " ஓகே நாளைதானே உனக்கு பள்ளி காலையில் நானே உன்னை உன் பள்ளியில் விடுகிறேன் அதன் பின் என்ன எண் பேருந்து எடுக்க வேண்டும். எப்படி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் உனக்கு கற்று தருகிறேன்.
நாளை சந்திப்போம்." என கூறி அங்கிருந்து புறப்பட்டாள். அவள் சென்றவுடன் வாங்கிய பொருட்களையெல்லாம் அதன் இடத்தில வைத்துவிட்டு, முருகன் படத்தையும் அவரின் வேல்லையும் எடுத்து ஒரு அவருக்கென சிறு மேஜை ஒன்றை ஏற்பாடு செய்து சாமி கும்பிடுவதற்கு ஏதுவாக எல்லா ஏற்பாடுகளையும் செய்தாள்.
மீண்டும் ஒருமுறை குளித்து விட்டு அவள் படுக்கையில் விழுந்தாள். தூக்கம்தான் தூர சென்று விட்டது. மீண்டும் தனிமை. அங்கு என்னதான் தனி போஷனில் இருந்தாலும் குரல் கேட்கும் தூரத்தில் தானே திரு திருமதி ஷுக்லா இருந்தார்கள்.
ஆனால் இங்கு யாருமற்ற தனிமை... எதையோ யோசித்து ஒரு பெரும்மூச்சை விட்டு மெலிதான சிரிப்பு ஒன்றை உதட்டில் ஒட்டி விட்டு, அவளுக்கு எப்போதும் துணை இருக்கும் ரமணி அம்மா கதை புத்தகம் ஒன்றை எடுத்து படிக்கலானாள். பல நேரங்களில் அவளுக்கு துணையாகி போவது இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான்.
என்னதான் தனிமை வாடினாலும், தனிமையே மேல் என்று சில சமயம் நம் சுற்றம்தான் நம்மை நினைக்க வைக்கிறதே ... இவளின் தனிமைக்கு மருந்தாக வரப்போவது யார்?