எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெளனப்பெருவெளி.

Kavisowmi

Well-known member
மெளனப்பெருவெளி.

தோள் மீது ஏறி
விளையாடியவன் ஒரு கட்டத்தில்
சற்றே விலக, அங்கே
தந்தை மகனுக்கு நடுவே முதலில்
தோன்றிய மெளனப்பெருவெளி!!

நட்புக்கு நடுவே சில நேரம்,
சிறியதாக வரும் பிரச்சனை,
பூதாகரமாக மாற ,அங்கும் வரும்
இந்த பெருவெளி!!

காதலன் ,காதலியிடம் வருவது
இந்த பெருவெளி சமயத்தில்…
சிறு ஊடல்,சிறு சீண்டல்,
சிறு முத்தம், சமயத்தில் எனைவிடவா உயர்ந்தது..
உன் நட்பு இப்படி தொடங்கி,
காதலன் சமாதானத்திற்கு
காத்திருக்கும் இந்த
மெளனப்பெருவெளி!!!

அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து
அழகாய் தொடங்கிய பந்தம்
உன்னில் நானும் என்னில் நீயும்
சரி பாதி என உரைத்த
பந்தத்தில் கூட சில நேரம்
தோன்றிடும் இந்த
மெளனப்பெருவெளி!!
 
Last edited:
Top