kani suresh
Moderator
கமலி கண்மணியைப் பார்க்கச் சிரித்தாள்.
"சரி" என்றாள் கமலியும். தன் அம்மாவின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு, அத்தையின் காலைக் கட்டிக் கொண்டான் கவின். "சரி" என்று விட்டு அனைவரும் கிளம்பி விட்டார்கள். சிறிது நேரம் கண்மணி இரண்டு குழந்தைகளுடனும் விளையாடிக் கொண்டிருந்தாள். வினோத்துக்கு ஒரு மாதிரி இருந்ததால் ரூமுக்குள் சென்றவன், குளித்துவிட்டு வீட்டில் போடும் டிரஸ் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.
கண்மணி ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். மாலை 5 மணி ஆக வீடுவாசல் பெருக்கினாள். 6 மணிக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் சிறிது நேரம் குழந்தைகளுடன் இருந்தாள். இரவு ஏழு மணி போல் சமையல் செய்யக் கிட்சன் சென்றாள்.
"நான் செய்யறேன் கண்மணி, நீ பசங்க கூட இரு" என்றார்.
"அதான் நான் இருக்கேன் இல்ல, இனி நீங்க எதுவும் செய்ய வேணாம். இவ்வளவு நாள் நீங்க தான செஞ்சீங்க, இப்போ போய் ரெஸ்ட் எடுங்க. இல்ல, பசங்களைப் பாருங்க" என்றாள்.
அவரிடம் பேசி விட்டுக் கண்மணி காய்கறி கட் பண்ணிக் கொண்டு இருக்க, வினோத் உள்ளே நுழைந்தான். கண்மணி என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டு இருக்க, "இ..இல்ல, அ..அது…” என்று வினோத்தும் தடுமாற, "ஏதாவது வேணுமா?" என்று கண்மணி கேட்டாள்.
"இல்ல கண்மணி, மேக்ஸிமம் நானே சமைத்துப் பழகிட்டேன். அம்மாவுக்கு வேலை வைக்க வேணாம்னு சொல்லி. அதனால, அந்த ஞாபகத்துல வந்தேன். ஒன்னும் பிரச்சனை இல்ல, உனக்கு நான் ஹெல்ப் பண்ணுறேன். எது எது எங்க இருக்குன்னு தெரியாது இல்ல" என்று திணலுடன் கூற அவனைப் பார்த்துச் சிரித்தவள்,
"இதுல என்ன சார் இருக்கு, ரெண்டு நாள் திறந்து பார்த்துட்டா எது எது எங்க எங்க இருக்குன்னு தெரிஞ்சிடப் போகுது. ஒன்னும் பிரச்சனை இல்ல, இவ்ளோ நாளா அத்தைக்கு வயசு ஆகுறதால அவங்களால ஒத்த ஆளா, எல்லா வேலையும் செய்ய விட வேணான்னு யோசிச்சீங்க, அதான் இப்போ நான் இருக்கேனே, பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு பசங்களோட இருங்க. இல்லனா, ஏதாவது வேலை இருந்தா பாருங்க. நான் சமைச்சிடுறேன். நல்லா தான் சமைப்பேன், ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
இவ்வளவு நேரம் ஏதோ ஒரு தாக்கத்தில் இருந்தவன், அவளின் இறுதி வார்த்தையில் சிரித்து விட்டான். "ஏதாச்சும் வேணும்னா கேளு" என்று விட்டு வெளியில் வர, பத்மா இதுவரை நடந்த அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தவர், தன் மகன் வெளியில் வந்தவுடன் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்.
"இரண்டு பேரும் விளையாடிட்டு இருக்கற ஐடியாவா? ரெண்டு நாள் ஸ்கூல் போகல. நாளையிலருந்து ஸ்கூல் போகணும், ஞாபகத்துல இருக்கா?" என்றவுடன், "நாளைக்கு தான" என்று சிரித்தார்கள்.
"டேய் என்ன நெனச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். வாங்க படிக்கலாம். ஹோம் ஒர்க் கூட அனுப்பி இருக்காங்க, பாருங்க ஹோம் ஒர்க் பண்ணலாம்" என்றான்.
"என்கிட்ட தான் இங்க நோட்டு இல்லையே, இப்ப என்ன பண்ணுவீங்க?” என்று கவின் சிரித்துக் கொண்டே சொல்ல, "நான் உங்க அப்பாவை எடுத்துட்டு வரச் சொல்லுவனே" என்று அவனும் அதே போல் சொல்லிக் காண்பிக்க ராகினி சிரித்து விட்டாள்.
"கவின் படிக்கிறத இப்பப் படிக்கலாம். எழுதுறத அப்புறமா பாத்துக்கலாம்.” என்று இருவரையும் உட்கார வைத்துப் பாடம் சொல்லிக் கொடுத்தான். கண்மணியும் சமைத்து முடித்திருக்க, அனைவரையும் சாப்பிட அழைத்தாள். சாப்பிட்டுவிட்டு எழுந்தார்கள்.
இப்போது பசங்களைத் தூங்க வைக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று புரியவில்லை. கண்மணி முழித்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தாள். வினோத்துக்கும் உள்ளுக்குள் ஏதோ செய்தது. இப்பொழுது கண்மணி, வினோத் இருவருக்கும் ஒரு தயக்கம். என்னதான் திருமணத்திற்கு இருவரும் சம்மதித்து இருந்தாலும், நடுவில் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. இனிமேல், ஒரே அறையில் ஒன்றாக இருக்கப் போகிறோம் என்று உள்ளுக்குள் இருவருக்கும் ஒரு பதட்டம் வந்து சென்றது.
என்ன செய்வது என்று புரியாமல் இருக்க கமலி போன் செய்து, "இரண்டு குழந்தைகளையும் அவங்க கூடவே தூங்க வையுங்கம்மா. நீங்க தனியா குழந்தைகளை உங்களோட தூங்க வச்சுக்கணும் என்று நினைக்காதீங்க. என்னதான் ரெண்டு பேரும் விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணி இருந்தாலும், தனியா தூங்க அவங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாகவும், பதட்டமாகவும் இருக்கும்" என்று சொல்லி இருந்தாள்.
அவருக்கும் சரி என்று பட்டதால், "டேய், எவ்வளவு நேரம் ஹாலிலேயே உக்காந்து இருக்கிறதா உத்தேசம். நேரம் ஆகுது பாருங்க, சின்னப் பிள்ளைங்கடா அதுங்க, அவங்களைக் கூட்டிட்டுப் போய் தூங்க வச்சுட்டு, நீங்களும் தூங்குங்கடா" என்றவுடன் ஆளுக்கு ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரூமுக்குள் நுழைந்தார்கள்.
இப்பொழுது குழந்தை இருக்கிறது என்ற தைரியம் இருவருக்கும் உள்ளுக்குள் இருந்தது. பெட்டில் ராகினி, கவின் இருவரையும் நடுவில் போட்டுவிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓரமாகப் படுத்து இருந்தார்கள். இருவரும் கதை கேட்க, கண்மணி தினமும் கவினுக்குச் சொல்லும் கதைகளில் ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தாள். அப்பொழுது, ஆபீஸிலிருந்து வினோத்துக்கு போன் வந்திருந்ததால், ஃபோன் பேசிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு போன் எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் போன் பேசி முடித்துவிட்டு வரும் வேளையில், இரண்டு குழந்தைகளும் கதை கேட்டுத் தூங்கி இருக்க, கண்மணி விட்டத்தைப் பார்த்துப் படுத்து இருந்தாள். அவன் ரூமுக்குள்ள வந்தவுடன் எழுந்து உட்கார, "எதுக்கு இப்போ எழுந்திரிக்கற கண்மணி படு" என்றான்.
"இல்ல சார் அது…" என்று இழுத்தாள்.
"என்னைப் பேர் சொல்லியே கூப்பிடு. அது மட்டும் இல்லாம எப்பயும் போல பிரீயா இரு. இனி இரண்டு பேரும் இந்த ரூம்ல தான் இருந்தாகணும். சரியா? உனக்கு சாரி கட்டி இருக்க கம்ஃபர்டபுளா இல்லனா, உனக்கு எது விருப்பமோ அதைப் போட்டுக்கோ. நான் எதுவும் சொல்ல மாட்டேன். அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டாங்க. சரியா?” என்றான்.
அவளுக்குமே சாரி கட்டியிருப்பது ஒரு மாதிரியாக தான் இருந்தது. தினமும் ஆபீசுக்கும் சுடிதார் தான் போட்டுச் செல்வாள். அவளும் சரி என்றவுடன் "நான் கொஞ்ச நேரம் ஹாலில் உட்கார்ந்து இருக்கேன். நீ போயிட்டு டிரஸ் மாத்திக்கோ" என்று கதவை லேசாகச் சத்தம் வராத அளவிற்குச் சாற்றிவிட்டு ஹாலுக்குச் சென்றான். அவளும் வீட்டில் எப்போதும் போடும் உடையைப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்து அவனைப் பார்த்து, “டிரஸ் மாத்திட்டேன், வாங்க உள்ள" என்று அழைக்க "சரி" என்று விட்டு ரூமுக்குள் வந்தான்.
"தூக்கம் வருதா கண்மணி" என்று கேட்டான்.
"அவள் இல்லை" என்பது போல் தலையாட்ட, "சரி வா, கொஞ்ச நேரம் பேசலாம். எனக்கும் தூக்கம் வரல" என்று விட்டு அங்குள்ள சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து விட்டு, அவளுக்கு ஒரு சேர் எடுத்துப் போட்டான். அவளும் அமைதியாக உட்கார்ந்து விட்டு, விரலில் உள்ள நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, "இது என்ன பழக்கம் கண்மணி. சின்னப்புள்ள மாதிரி நகத்தைக் கடிச்சுட்டு இருக்க" என்றான்.
"இல்லை அ..அது ஏதாவது யோசனைல இருக்கும்போது" என்று இழுத்தாள்.
அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு, "இப்ப அப்படி என்ன அந்தக் குட்டி மூளைக்குள்ள பலத்த யோசனை?" என்றான்.
சிரித்தவள், "இதுக்கு அப்புறம் லைப் எப்படி இருக்கும் தெரியல, சுற்றி இருக்கறவங்களுக்காகச் சொல்லிக் கல்யாணம் பண்ணியாச்சு. ஆனா, உள்ளுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி பயமாவும், பதட்டமாகவும் இருக்கு. எனக்கு உங்ககிட்ட அதை மறைக்கத் தோணலை. புதுசா ஒரு லைஃப்குள்ள வந்திருக்கும் போது எனக்குச் சொல்லத் தெரியல" என்றாள் அமைதியாக.
சிரித்தவன், "எனக்கும் அப்படி தான் இருக்கு. உன்னோட சிட்டுவேஷன் புரியாம இல்ல. இனி எதுவா இருந்தாலும், சேர்ந்தே சமாளிப்போம். ஒன்னும் பிரச்சனை இல்லை" என்றான். அதன் பிறகு, இருவரும் அவர்களது வேலையைப் பற்றிச் சாதாரணமாக நண்பர்கள் போல் பேசிக்கொண்டார்கள். இருவருக்கும் தூக்கம் கண்ணைக் கட்ட, "சரி தூங்கலாம். நாளைக்கு நம்மளுமே வேலைக்குப் போகணும் இல்ல" என்றான்.
"நாளைக்கே வேலைக்குப் போனா அத்தை எதும் சொல்ல மாட்டாங்களா?".
"பேசிட்டேன் கண்மணி, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. தூங்கலாம் வா, நேரம் ஆகுது." என்றான்.
"சரி" என்று விட்டு இருவரும் இரண்டு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு தூங்கி விட்டார்கள். மறுநாள் விடியலில் கண்மணி எப்பொழுதும் போல் எழுந்து வாசலில் தண்ணி தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைய வினோத்தும் எழுந்திருந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம் இல்ல சார்" என்று கேட்டாள். அவன் முறைத்துப் பார்க்க, நாக்கைக் கடித்து விட்டு "இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து இருக்கலாம் இல்ல வினோத்" என்றாள்.
சிரித்துக்கொண்டே, "இந்த டைம் எழுந்திருச்சுப் பழக்கம் ஆகிடுச்சு கண்மணி" என்றான்.
"லேட்டா தானே தூங்கவே செஞ்சீங்க" என்று கேட்க,
"நீயும் தான கண்மணி லேட்டா தூங்கின…"
"இல்ல அது..."
"ஒன்னும் இல்ல வா… சேர்ந்து வேலை செய்யலாம். அப்படினாதான், வேலைக்குப் போக கரெக்டா இருக்கும். நேரம் ஆகிடும் பாரு.” என்று விட்டுக் காய்களை கட் பண்ணிக் கொடுத்தான். சிறு சிறு உதவிகள் செய்ய, கண்மணியும் சமையலில் ஈடுபட்டிருந்தாள். பத்மாவும் எழுந்து வந்தவர் இருவரும் நண்பர்கள் போல் பழகுவதைப் பார்த்தவர், 'தான் இப்போது வெளியே சென்றால், இருவருக்கும் ஒருவித அசௌகரியம் உண்டாகுமோ?' என்று எண்ணியவர் ரூமுக்குள்ளே வந்து விட்டார்.
‘இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னமுமா அம்மா எழுந்து வரல. 7மணி ஆகுது.’ என்று எண்ணி விட்டுத் தன் தாயின் அறைக்குச் செல்ல, அவர் எழுந்து அமைதியாக உட்கார்ந்து புக் படித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தவன், "ஏன் மா, ஹாலுக்கு வராம இங்கவே உட்கார்ந்து இருக்கீங்க?" என்றான்.
"இல்லடா கண்மணிக்கு நம்ம வீடு புதுசு இல்ல. என்னைப் பார்த்த உடனே அவளுக்குக் கொஞ்சம் அசௌகரியமா இருக்கலாம் இல்லையா? அதான்" என்றார்.
அவர் எதனால் அப்படி யோசிக்கிறார் என்பதை உணர்ந்தவன், "ஒன்றும் இல்லைம்மா, வாங்க" என்று அழைத்துக் கொண்டு ஹாலுக்குச் செல்ல,
அப்பொழுது இரண்டு குழந்தைகளும் ஒன்றாகவே எழுந்து வர, "டேய் எழுந்துட்டீங்களா, என்ன குடிக்கிறீங்க?" என்று கேட்டாள்.
இருவரும் ஹார்லிக்ஸ் என்று ஒரே குரலில் கூச்சலிட இருவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு, கண்மணி இருவருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களது கையில் கொடுப்பதற்கு முன்பு "பிரஷ் பண்ணிங்களா, இல்லையா?" என்றாள்.
இருவருமே சிரித்த முகத்துடன், "அதெல்லாம் ஆச்சு" என்றார்கள். இருவரின் தலையையும் கோதி விட்டு இருவருக்கும் ஹார்லிக்ஸ் கொடுத்துவிட்டு, "சரி ஸ்கூலுக்குக் கிளம்பலாமா?" என்று கேட்டாள்.
“நான் அவங்களை ஸ்கூலுக்குக் கிளப்பி விடுறேன் கண்மணி. நீ போயி மத்த வேலையைப் பார்த்திட்டு, ஆபீஸ்க்கு கிளம்பு" என்றான். "இல்ல நீங்களும் தானே கிளம்பனும்" என்று சொன்னாள்.
"நான் பார்த்துக்கிறேன்" என்று இருவரையும் குளிக்க வைத்தான். இருவரும் குளித்துவிட்டு வந்தவுடன் டிரஸ் மாற்றி விட்டு விட்டு அவன் குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு வெளியில் வந்தான்.
கண்மணியும் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டுச் சமையல் முடித்துவிட்டுக் குளித்துவிட்டு வந்தாள். அதன் பிறகு, ஐந்து பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். மாத்திரை போட்டுக்கச் சொல்லி ஒன்று இரண்டு முறை கண்மணி, பத்மாவிடம் சொல்லிவிட்டு இரண்டு குழந்தைகளையும் தான் அழைத்துச் செல்வதாக வினோத்திடம் சொல்ல,
அவனும் "சரி" என்று விட்டு ராகினியைப் பார்த்தான். அவள் சிரித்த முகமாகத் தலையாட்ட அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், கவினைப் பார்த்து அவன் தலையைக் கோதிவிட்டு, "இங்கிருந்தே ஸ்கூல் போறீங்களா கவிக்குட்டி" என்று கேட்டான்.
"மாமா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான். ஈவினிங் நான் அப்படியே அப்பா கூட வீட்டுக்குப் போயிடுறேன். அங்க என்ன எல்லாரும் தேடுவாங்க இல்ல" என்றான்.
சிரித்தவன், "சரிடா கவிக்குட்டி, மாமா உன்னக் கொண்டு போய் விடுறேன். இங்க ஈவினிங் அத்தை கூட வீட்டுக்கு வந்துரு, நான் ஆபீஸ்ல இருந்து வந்த பிறகு மாமாவே உன்ன வீட்டுக்குக் கொண்டு போய் விடுறேன். அப்பா, அம்மாகிட்ட மாமா பேசறேன்" என்றான்.
"சரி" என்று தலையாட்ட, கண்மணியுடன் இரண்டு குழந்தைகளும் ஸ்கூலுக்குக் கிளம்பினார்கள். மூவரையும் அனுப்பி வைத்துவிட்டு வினோத் அம்மாவைப் பார்த்து, "சரி மா, நேரமாகுது நானும் கிளம்புறேன்." என்றான்.
"இப்பதான்டா உன்னை இப்படிக் குடும்பமாகப் பார்க்கும் போது மனசுக்குச் சந்தோஷமா இருக்கு." என்றார் சந்தோஷத்துடன்.
"அதான், நீங்க நினைச்சது நடந்துச்சு இல்ல, அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?" என்று அவரது ஆனந்தக் கண்ணீரைத் துடைத்து விட,
"எல்லாமே சீக்கிரமா மாறும் என்ற நம்பிக்கை இருக்கு டா" என்றார். எதுவும் பேசாமல் தன் தாயைப் பார்த்துத் தலையாட்டி விட்டு, தன் வண்டியை எடுத்துக் கொண்டு தன்னுடைய ஆபீசுக்குக் கிளம்பி விட்டான் வினோத்.
கண்மணி இருவரையும் கிளாஸ் ரூமில் விட்டுவிட்டு ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு, "டேய் நானே வந்து சாயங்காலம் கூட்டிட்டுப் போறேன்" என்று கவினிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள்.
போகும் வழியெங்கும் அவளுக்கு வினோத்திடம் பேசிய அனைத்தும் நினைவில் வந்து சென்றது. தலையை உலுக்கிவிட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.
இங்கு வினோத்துக்கும், கண்மணியுடனான உரையாடல் நினைவில் வந்து செல்ல, அதை இப்போதைக்குத் தள்ளி வைத்துவிட்டுத் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தினான். கண்மணி மாலை எப்பொழுதும் போல் வந்து கவினுடன் ராகினியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்குச் சென்று விட்டு சங்கருக்கு போன் செய்து, “அவன் இங்கே என் கூடவே கொஞ்ச நாளைக்கு இருக்கட்டுமே அண்ணா…” என்று கேட்டாள்.
“அவனை அங்கே விட்டுட்டு எங்களால மட்டும் எப்படி இருக்க முடியும் கண்மணி?” என்று கேட்க,
“சரி, அவர் கொண்டு வந்து விடுவார் அண்ணா” என்றாள்.
“எதுக்கு மாப்பிளைக்கு அலைச்சல் தானே, நானே வந்து கூப்பிடுகிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்த வினோத் "உங்க அண்ணனா?" என்று சைகையில் கேட்க,
"ஆமாம்" என்று தலையாட்டினாள். "கொடு" என்று வாங்கியவன், "நானே கொண்டு வந்து விடுறேன் மச்சான்… உங்களுக்கு எதுக்கு அங்கிருந்து அலைச்சல்?"
"இல்லை மாப்பிள்ளை…" என்று சொல்லும்போதே, "நான் கொண்டு வந்து விடுகிறேன் மச்சான்… பிரச்சனை இல்லை" என்று வைத்தவன் ராகினி, கண்மணியையும் கிளம்பச் சொன்னான். இருவரும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க,
"முதல்முறையா போறேன். தனியா போனா நல்லா இருக்காது கண்மணி. நாலு பேருமே போயிட்டு அவனை அங்க விட்டுட்டு நம்ம மூணு பேரும் வந்துடலாம்" என்றான்.
“அப்போ அத்தை?” என்று கண்மணி சொல்லும் போதே, சிரித்த முகத்துடன் பத்மா, "நீங்க போயிட்டு வாங்க டா, எனக்கு என்ன? நான் இங்கதான இருக்கேன். பொறுமையாவே பாத்துட்டு வாங்க" என்று தலையசைத்தார்.
"சரி" என்று விட்டு நான்கு பேரும் ஒரே வண்டியில் புறப்படுவதாக இருந்தது.
குழந்தைகள் இருவரும் நாங்க முன்னாடியே உட்கார்ந்துக்கிறோம் என்று அடம் பிடித்தார்கள். சிரித்த முகத்துடன் சரி என்று கண்மணி பின்னாடி ஏறி உட்கார்ந்து கொண்டாள்.
அவள் ஏறி உட்கார்ந்தவுடன் "போலாமா கண்மணி?" என்றான். "ஹம்" என்று அவளும் தலையாட்ட, கண்ணாடி வழியாக அவளது முகத்தைப் பார்த்துச் சிரித்தான். அவளும் சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். கவின் முன்னாடி இருந்து பின்னாடி திரும்பி "அத்த செம போ…" என்று சிரித்தான்.
முன்னாடி எட்டி அவனை அடிக்கிறேன் என்ற பெயரில் வினோத்தை அடித்திருந்தாள். வினோத் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, வண்டியை உயிர்ப்பித்தான். கண்மணிக்கு தான் லேசாகத் திடுக்கிட்டது. 'தவறாக எடுத்து இருப்பாரோ' என்று. போகும் வழியெங்கும் கண்மணியின் பார்வை வினோத்தை அடிக்கடி தீண்டிச் சென்றது. வினோத் அதைப் பார்த்தும் பார்க்காதது போல் குழந்தைகளுடன் உரையாடிக் கொண்டே கண்மணி வீட்டிற்குச் சென்று இறங்கினான்.