எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே..!

நயனங்களால் பேசாதேடி

என் நச்சினார்க்கினியா!

நா வழி நவிழ்.

வேதபோதனின் உரைகளை

ஓரம் வை!

காதல்தேவனின் கதைகளுக்கு

நியாயம் செய்!

பாய்ந்து வரும் அலக்நந்தாவாம் பத்ரியின் வழி

பாசுரம்‌ பல பாடுதடி

நம் காதலைக் கண்டு!

நாசி வழி வரும் காற்று கூட

நின் நாமத்தையே நவிழுதே...

எதிரே நீ இருக்க

என்னுலகம் உன்னில் சுருங்குதடி

விழி அகற்ற முடியவில்லை!

விருப்பமுமில்லை!

காலம் முழுமையும் வேண்டும் உன்னுடன்!

அவா பெருகுதடி!

ஆயுள் நீளுதடி!

அழகு கூடுதடி!

என் இல்லக் கண்ணாடிக்கூட வெட்கி நாணுதடி

ஏனோ! ரசனை எழவில்லை

நின்முகத்தைப் பார்க்கும் வரை...

உன்னாலே கவிஞனானேன் இன்று

என் கவிதைகளுக்கு உயிர் கொடு வா!

எல்லையில்லா என் காதலே...
 
Last edited:

Fa.Shafana

Moderator
உன்னாலே கவிஞனானேன் இன்று, என் கவிதைகளுக்கு உயிர் கொடு ???????? super
 
Top