priya pandees
Moderator
அத்தியாயம் 2
கிருஷ்ணனை அவன் வகுப்பிலும், கண்ணனை ப்ரிகேஜியிலும் விட்டுவிட்டு, பள்ளியின் அலுவலக அறைக்கு நடந்தாள் மனோரஞ்சிதம். அங்கு தான் அவள் வேலையும்.
"குட் மார்னிங் மேம்! குட் மார்னிங் மனோ மேடம்! குட் மார்னிங் மா! குட் மார்னிங் மிஸ்!" என கடந்து சென்ற மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் இவளுக்கு வாழ்த்த, இவள் எதிர்பட்ட சிலருக்கு வாழ்த்த என தான் அலுவலக அறைக்குள் வந்தமர்ந்தாள். அவளுக்கென தனியறையே அமைத்துக் கொடுத்திருந்தார் சண்முகசுந்தரம்.
கேமரா மானிட்டர் ஆகும் கணினியை தான் முதலில் திறந்து வைத்தாள். மொத்த பள்ளியின் அமைப்பும் அதில் ஓடத்துவங்கியது. பின்னரே அங்கிருந்த பிள்ளையார் சிலை முன்னிருந்த குட்டி விளக்கை ஏற்றி சாமிக் கும்பிட்டுவிட்டு அவள் இருக்கையில் வந்தமர்ந்தாள்.
அந்த அலுவலக அறைக்குள், தாளாளர் அறை தனியாக இருந்தது. அதற்கு அடுத்தே இவள் அறை, அதற்கு வெளியே பொதுவாக நான்கு டேபிள், சேர் மற்றும் அலுவலக கோப்புகள் அடங்கிய அலமாறிகளும் இருந்தது. பள்ளி அலுவலக பணிக்கென இருக்கும் நால்வர் இருந்தனர்.
பள்ளிக்கும் பெற்றவர்களுக்கும் இடையில் ஃபீஸ் சம்பந்தப்பட்ட, பிள்ளைகள் சம்பந்தபட்ட எதுவாகினும் பார்த்துக்கொள்பவள் மகிமா. பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள தொடர்பை மேம்படுத்த விஜி. பிள்ளைகளின் பரீட்சை, வினாதாள் விடைதாள் திருத்தங்கள், தினசரி அட்டவனை, மாணவர்களின் தினசரி பள்ளி வருகைபதிவுகள், ஆசிரியர் வருகை பதிவுகளை சரிபார்த்துக் கொள்பவர் தமயந்தி. மாணவர்கள் சேர்க்கை, பள்ளி விழாகள் ஏற்பாடு, சயின்ஸ் டூர் ஏற்பாடு போன்றவைகளைப் பார்ப்பவள் ராணி என வேலைகள் பிரித்துத் தரப்பட்டிருந்தது.
மனோ பள்ளியில் சேர வரும்போது, ஆசிரியர்கள் சம்பந்தபட்ட மொத்தமும் அவள் கவனத்தில் இருக்க வேண்டும் என்பது தான் அவளுக்கு சண்முகசுந்தரம் கொடுத்த முதல் வேலை. ஏனெனில் அவள் கேட்டதும் அலுவலக பணி மட்டுமே!
பி.எ. எம். எட் ஆங்கிலம் தான் அவளின் கல்வித் தகுதி, ஆனால் படிப்பு முடிந்து எட்டு வருடங்கள் ஓடியிருக்க, பாடமெடுப்பது என்பது சற்று சிரமமாகவே தோன்றியது அவளுக்கு. வீட்டிலேயே இருவரை சமாளிக்க அரும்பாடுபடுவதால் இங்கும் சிறுபிள்ளைகளை சமாளிக்க முடியும் என்று அவளால் நினைக்கக் கூட முடியவில்லை. அதனாலயே அலுவலக வேலையை ஏற்றிருந்தாள்.
"இப்படியே இருக்கப் போறியா மனோ? நானும் மூணு வருஷமா கூப்பிட்டுட்டு தானே இருக்கேன்?" என ஒருநாள் ஞானத்தோடு அவர்கள் வீட்டிற்கு வந்தபோது சண்முகசுந்தரம் கேட்டுவிட்டார். அவருக்கு ஞானம் மூலம் அவள் வாழ்க்கை நிலவரம் முழுமையாகவே தெரியும். அவருக்கு மட்டுமா, அது சிறிய ஊர் ஒருவருக்கு ஒருவர் சொந்தம் வைத்து நன்கு பழகக் கூடியவர்கள், அது சில நேரங்களில் தொந்தரவு தான் என்றாலும் பிறந்து வளந்த ஊரையும் மக்களையும் ஒதுக்கி வைத்துவிட முடியவில்லை அவளால், அரசல்புரசலாக மொத்த ஊருக்கும் இவள் அவளின் கணவனோடு வாழப்போகவில்லை என தெரிந்திருந்தது. காரணங்கள் மட்டும் அவரவர் விருப்பப்படி இன்றுவரை உலவிக் கொண்டிருக்கிறது.
மனோவும் இனியும் இப்படி இருக்கப் போவதில்லை என அந்நாட்களில் முடிவுக்கு வந்திருக்க, நேரில் வந்தவரிடம், "எனக்கு வேலை வேணும் மாமா. ஆனா நா ஆபிஸ் வேலை தான் பார்ப்பேன். எனக்கு அங்க உள்ள ஸ்டாஃப்ஸ்கு என்ன சம்பளம் குடுப்பீங்களோ அதே குடுங்க" என்றிருந்தாள்.
"அந்த ஸ்கூலயே உங்கப்பன எடுத்துக்கோ, நீ எடுத்து பாரு, என்னால முடியலன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்குறான். எனக்கு என்ன பிள்ளையா இருக்கு, இங்கனாலும், நீயும் உன் அண்ணனுமா அடுத்து பார்த்துப்பீங்க. எடுத்துக்கோடான்னு சொல்லுதேன் கேட்கமாட்டேங்குறான். நீ என்னன்னா குடுக்குற சம்பளம் போதும்னு சொல்லுற. உன் ஸ்கூலுன்னு பார்க்க மாட்டியா நீ?" என உரிமையாகவே அதட்டினார்.
"என்னவோ என்கிட்ட அவ்வளவு தெம்பு இருக்கும்னு தோணல மாமா. இவனுங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல, திணற விடுறானுங்க. அதனால தான் நா க்ளாஸே வேணாங்குறேன். இதுல மொத்த பொறுப்பக் கட்ட நல்ல ஆள் பார்த்தீங்க நீங்க" என சிரித்தே மலுப்பியிருந்தாள்.
"ஒரு எம்.எ.பி.எட் மாதிரி பேசு மனோ"
"ஆபிஸ் வேலை மட்டும் தாங்க மாமா"
"நீ நாளைல இருந்தே வா. நா சொல்லித் தரேன் எல்லாத்தையும்" என்றவர், கடந்த ஒரு வருடத்தில் மொத்தப் பள்ளியையும் பழக்கிவிட்டிருந்தார். முதலில் ஆசிரியர் பொறுப்பு, பின்பு மாணவர்கள் பொறுப்பு, பின்பு மொத்தப் பள்ளியின் பொறுப்பு என்றாகிவிட்டிருந்தது. அவளே அறியாமல், இன்று அந்தப் பள்ளியின் மொத்த விபரமும் அவளைத் தாண்டி மற்றவர்கள் பார்வைக்கு செல்லும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருந்தார் சண்முகசுந்தரம். அவருக்கு அந்தப் பள்ளியை நிரம்பப் பிடிக்கும், ஆசை ஆசையாக எழுப்பிய கனவு அந்தப் பள்ளி. இவருக்குப் பின் அதை அப்படியே அள்ளிக்கொள்ள அவரின் சொந்தங்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஞானத்திடம் ஒப்படைத்துவிட்டால், தன்னால் அவர் பிள்ளைகள் கைக்கு சென்றுவிடும் என்ற எண்ணத்தில் அவர் இருக்க, அவர் சொந்தங்களைக் கண்டு பயந்தே ஞானம் வேண்டாம் என நிற்கிறார்.
ஞானம் அதே ஊரில் இருந்த அரசாங்கப் பள்ளியில் தாளாளராக இருந்து பணி நிறைவு பெற்றவர். இன்றும் அவர் வேலைப் பார்த்தப் பள்ளி சம்பந்தமாக அரசாங்கத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு இவர்தான் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு நேர்மையாகப் பணியாற்றி விருது வாங்கி வெளி வந்தவர் அவர். அதில் வந்த ஓய்வூதியத்தை வைத்தும், சில நிலங்களை பேங்க்கில் வைத்தும், இந்தப் பள்ளியை கைமாற்றிக் கொள்ளலாம் தான், பிள்ளைகளுக்கும் சொத்தாகிவிடும் என்ற எண்ணமும் ஞானத்திடம் உண்டு. ஆனால் சண்முகசுந்தரத்தின் சொந்தங்கள் இவர்களை நிம்மதியாக அந்த சொத்தை வாங்க விடவே மாட்டார்கள் என்பது அவ்வளவு திண்ணம். அதனாலேயே ஞானம் பிடிகுடுக்கவில்லை.
இதோ இப்போது சண்முகசுந்தரம் இவர் மகளை அங்கு முழுமையாக நிரப்பிவிட, மகள் மூலம் அது தெரிந்தும் அமைதியாக தான் இருக்கிறார். சொந்தக் கவலையை விட்டுவிட்டு அவள் மாற்றாக வேறு சிந்திக்கிறாள் என்பதே அவர் அமைதிக்குப் பின் இருக்கும் முக்கிய காரணம்.
ஆனால் மகள் பலவற்றை உள்ளேபோட்டு அடக்கி அடக்கி அவள் மனது பஞ்சடைத்த தலையணையாக வீங்கி நிற்கிறது என்பதை இன்னும் யாரும் அறிந்திருக்கவில்லை. அறிந்து கொள்ள வேண்டியவன் வந்திறங்க வேண்டுமோ என்னவோ!
"இந்தா மனோ! ஒரு பேரண்ட், டிசி கேட்டு அப்ளிகேஷன் குடுத்துட்டுப் போயிருக்காங்க. என்னனு பார்த்து முடிச்சு விடு" என ஒரு ஃபைலை வந்து வைத்துவிட்டு நின்றார் தமையந்தி. அந்த பள்ளியிலேயே வேலையில், வயதில், அனுபவத்தில் என அனைத்திலும் மூத்தவர். சண்முகசுந்தரத்தின் தூரத்து உறவினர். ஒருவகையில் அந்த பள்ளியில் அடுத்து தான்தான் அனைத்தும் என அவர் நினைத்திருக்கையில் தான் இவள் இங்கு வந்து சேர்ந்தது.
அதுவே இவளை அவருக்குப் பிடிக்காமல் செய்துவிட்டிருக்க, 'நா வேலை பாக்க நீ அத சரி பார்ப்பியோ? உனக்கு வேலையே நா சொல்லுவேன் நீ செய்யணும்' என மற்றவர்கள் முன் காட்டவே இவ்வாறு பல நேரங்களில் நடந்து கொள்வார்.
கிளம்பவிருந்தவரை, "நில்லுங்க மேடம்!" என்றவள், "மகிமா!" என கொஞ்சம் சத்தமாக அழைக்க, மகிமா உள்ளே வந்தாள்.
"இந்த அப்ளிகேஷன் யாரு என்னனு பாருங்க. எதுக்கு அவங்களுக்கு டிசி வேணும்னு ரீசன் கேளுங்க. அவங்க சன்னோட ப்ராக்ரெஸ் மொத்தமும் ரெடி பண்ணிடுங்க. ஈவினிங் த்ரிக்கு இங்க நேரா வர சொல்லிடுங்க. நா பேசிடுறேன்" என்றுவிட்டு, "இனி என்கிட்ட குடுக்கணும்னு முடிவு பண்ணிட்ட வேலைய ட்ரைக்டா எனக்கே ஃபார்வேர்ட் பண்ணிடுங்க, நீங்க அப்ளிகேஷன் வந்தப்பவே என்ட்ட அனுப்பியிருந்தீங்கனா நா அந்த பேரெண்ட்ட அப்பவே பேசிருப்பேன் ஒரே டைம்ல வேலை முடிஞ்சுருக்கும். இப்ப மகிமாக்கும் நா வேலை வைக்கிற மாதிரி இருக்கு மேடம். இனி என்ட்டையே அனுப்பிடுங்க நா ட்ரைக்டா டீல் பண்ணிக்கிறேன். ஓகே தானே மேடம்?" எனவும் கேட்க, தலையசைத்து சென்றுவிட்டார் அவர்.
'இப்ப இவ என்ன செஞ்சா? உன் வேலையத்தான் அந்த மகிமாட்ட குடுக்குறேன்னு சொல்லிக் காட்றாளா? இல்ல, நீ சொன்னா நா செய்யணுமான்னு திமிரு காட்றாளா? நா பாத்துக்குறேன் உன் வேலைய பாருன்னு சொல்லாம சொல்றாளா? புரியலையே? உன்ட்ட சொன்னா நீ ஏன் அவகிட்ட சொல்றன்னு கூட என்னால கேட்க முடியல, ச்சை என்ன பொழப்பு என்னோடது!' என மனதினுள் புலம்பிக் கொண்டே தான் அவர் சீட்டில் சென்று அமர்ந்தார்.
அனைத்து வேலைகளையும் அப்படித் தூக்கிக் கொடுத்துவிடவும் மாட்டார், ஏனெனில் அனைத்தும் அங்கு கேமராவில் பதிவாகிக் கொண்டிருக்கிறது, எதையாவது மனோ பதிவு செய்து சண்முகசுந்தரத்திடம் போட்டுக் காண்பித்துவிட்டால், "வேலையே செய்யாம உட்கார்ந்திருக்க உனக்கு எதுக்கு நா சம்பளம் தரணும்?" என தயவுதாட்சியம் பார்க்காமல் வெளியேற்றிவிடுவார் என்ற பயம் இருந்தது அவருக்கு. அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுத்து சில வேலைகளை மட்டும் தூக்கிச் சென்று கொடுத்துவிட்டு அவளை சீண்டிவிட்டால் அர்ப்ப சந்தோஷம் கிடைக்கும் என செல்வார், மனோ அலட்டிக்கொள்ளாமல் அதை செய்துவிட்டு, 'அடுத்து என்ன?' என பார்க்கும்போது சப்பென்றாகிவிடும் இவருக்கு.
அவர் சென்றதும், "மகிமா. ஸ்டூடண்ட் லெட்ஜர்ல கரெக்ட்டா ஒன்ஸ் செக் பண்ணிடுங்க, எந்த ரிமார்க்கும் இல்லாம இருக்கணும். அந்த பேரெண்ட், ஷார்ப் த்ரி ஸ்கூலுக்கு வந்திடணும்னு மறக்காம சொல்லுங்க"
"தெரியும் மனோ மேடம். ஃபோருக்கு கிளம்பிடுவீங்களே நீங்க"
"ம்ம்!" என மனோ சிரிக்க, மகிமாவும் சிரித்துத் தலையசைத்து வெளியேறிவிட்டாள்.
அடுத்த வேலையாக அரசாங்கத்திலிருந்து வந்த அட்டவணைகளை சரிபார்த்து அதில் தங்கள் பள்ளிக்கு தேவையானதைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டிருந்த போது, மனோவின் அலைபேசி அதிர்ந்தது. எட்டி எடுத்துப் பார்த்தாள், அவள் மாமியார் எண் அது. பார்த்துவிட்டு மீண்டும் மேசையிலேயே வைத்துவிட்டாள், முதலில் கணவனை மட்டும் தான் தடைசெய்து வைத்திருந்தாள், இப்போது, மாமியார், நாத்தனார், நாத்தனார் கணவர், கணவனின் தாய்மாமா குடும்பம் என யார் அழைத்தாலும் எடுப்பதில்லை.
இவள் இவ்வாறு எடுக்காமல் இருப்பதற்கு, அவர்கள் எல்லாரும் எப்போதோ நேரில் வந்து நின்றிருக்க வேண்டும், வெளிநாட்டில் அமர்ந்திருப்பவன் அடக்கி வைத்திருக்க, அதனாலேயே இன்னும் வராமல் இருக்கின்றனர் என புரிந்தது அவளுக்கு. அதிலெல்லாம் கெட்டி அவன், இருந்த இடத்தில் இருந்தே இங்குள்ளவர்களை ஆட்டிப் படைத்துவிடுவான். அப்படித்தானே முதல் மூன்று வருடம் ஏமாந்து மாமியார் வீடே கதி என கிடந்தாள் இவளும்.
மீண்டும் அலைபேசி அதிர்ந்தது, இப்போது ஆண்டாள் அழைக்க, பேனாவை நோட்டினுள் வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்து "சொல்லும்மா?" என எடுத்தாள்.
"என்ன பண்ற மனோ?"
"ஸ்கூல்ல இருக்கேன்மா, என்ன பண்ணுவேன்?"
"உன் மாமியார், இப்ப அப்பா நம்பருக்கு கூப்பிட்டாக மனோ?"
"ஓ! அப்பா பேசுனாங்களா?"
"ஆமா! அவங்க, உன்ன பேச சொல்ல சொன்னாங்க, பேரனுங்கள தேடுதாம், கூட்டிட்டு வர சொன்னாங்க, அதுக்கு நம்ம அப்பா, எதுனாலும் உங்கப் பையன முதல்ல வந்து பேச சொல்லுங்கன்னு சொல்லிட்டு வச்சுட்டாங்க"
"ம்ம்!"
"என்னடி ம்ம்ங்குற. நீ என்ன நினைக்குறன்னு சொல்லேன்? இப்டியே விட்டுட்டு இருக்கவா அவங்கள?"
"நா என்ன நினைக்க? நினைச்சு மட்டும்?" என சிரித்தவள், "பாப்போம்மா என்ன தான் நடக்குன்னு, இப்ப வைக்கவா? வேலை இருக்கு எனக்கு" எனக் கூற,
"உன் அண்ணி மூஞ்சத் தூக்கிட்ருக்கா, அந்தக் குழந்த பொம்மையத் தூக்கிட்டு வந்து யார் உடைச்சான்னு கேட்டா, சின்னப் பிள்ளைக இருக்க வீட்ல யாரு உடைச்சான்னு கேட்குறா! வெளில அவ்வளவு சவுண்ட் கேட்டப்ப ரூமுக்குள்ள தானே இருந்தா? இப்ப வந்து ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்டா, நானும் அப்பதான் அது உடைஞ்சுருக்குறதையே பாத்தேன், அதனால ஒன்னுமே சொல்லல, கோச்சுட்டா போல, பிள்ளையையும் தூக்கிட்டு உள்ள போய்ட்டா" என்றார் சோகமாக.
"நா வேற ஆர்டர் போட்டுட்டேன்மா, நாளைக்கு வந்துரும்"
"எப்படியும் நாளு நாளைக்கு மூஞ்சத் தூக்கிட்டு தான் சுத்துவா" மனோக்கும் என்ன பதில் சொல்லவென தெரியாமல் நெற்றியை அழுத்தி நீவி விட்டுக்கொண்டாள்.
அப்போது, அங்கிருந்த கேமரா கண்காணிக்கும் கணினியில், விளையாட்டு திடலில் ஒரு மாணவன் ஓடிவருகையில் விழுந்துவிட, மற்றவர்கள் ஓடி சூழ்ந்து கொள்வது தெரிய, "நா கூப்பிடுறேன்மா வை" என வைத்துவிட்டு வெளியே வந்தவள், "மகிமா நர்ஸ அலர்ட் பண்ணுங்க, க்ரௌண்ட்ல ஒரு பையனுக்கு இன்ச்சூரி" என்றவள் பேசிக்கொண்டே வெளியேறி இருந்தாள்.
மகிமாவும் எழ, "ஹே எங்க போற. அவ இன்னைக்கு வரல, உடம்பு முடியல" என பதறித் தடுத்தார் தமயந்தி. அங்கு பள்ளிக்கென்று இருக்கும் செவிலியர், முதலுதவிக்கென்றே பள்ளி சார்பில் வேலைக்கு இருப்பவள் சியாமா. தமயந்தியின் மகள்.
"லீவா?" என்ற மகிமா, அடுத்து என்ன செய்ய என மனோவிடம் கேட்க ஓடிவிட, கையைப் பிசைந்து கொண்டு நின்றார் தமயந்தி.
செவிலியர் முன்பே சொல்லிவிட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும், அவசர விடுமுறை தேவை என்றாலும், மாற்றாக அன்றைக்கு வேறு யாரையும் அந்த பொறுப்பில் இருப்பவர் தான் அனுப்பிவிடவேண்டும், இது அந்த வேலைக்கு வரும் யாராக இருந்தாலும் பொது விதி தான். இந்த கட்டுப்பாட்டில் தான் சியாமாவை வேலைக்கே எடுத்தனர்.
அவள் விடுப்பு சொல்லிவிடுகிறேன் என்றதற்கும், "நம்ம ஸ்கூல்டி அது. எவன் கேட்பான்? என்னைய கேட்கட்டும் பாக்றேன், நீயே பாதி நாள் சும்மா பொழுதே போகலன்னு புலம்புற, இன்னைக்கு ஒருநாள்ல அங்க ஒன்னும் ஆகிடாது, நீ உன் மாமியார் வீட்டு பங்ஷன அட்டன் பண்ணு அது தான் முக்கியம், இல்லனா என்கிட்டயே மூஞ்ச காட்டும் அந்தம்மா!" என்றுவிட்டு வந்துவிட்டு இப்போது விழித்து நிற்கிறார்.
அங்கு விழுந்து வாரியிருந்தது கிருஷ்ணன், கணினியில் சரியாக பார்க்கவில்லை அவள், இப்போது அங்கு நெருங்குகையில் தான் கிருஷ்ணன் வகுப்பு மாணவர்கள் சுற்றி நிற்பதே தெரிந்தது, இன்னும் நடையைக் கூட்டி சென்று பார்க்க, உடற்கல்வி ஆசிரியர் பிடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான் கிருஷ்ணன். வலது பக்க முன் தலையில் அடித்து ரத்தம் வேறு வந்தது, மனோவிற்கு அதைப் பார்த்ததும் படபடவென்று வந்துவிட்டது.
இவளைக் கண்டதும், "ம்மா ம்மா!" என தேம்பித் தேம்பி அழுது கட்டிக்கொண்டான்.
"மனோ மேம் ஹாஸ்பிடல் போயிடலாம்" என பிடி மிஸ் பிடித்துத் தூக்க வர, அவன் வரமாட்டேன் என அழுது சத்தத்தைக் கூட்ட, ஒன்றும் தோன்றமாட்டேன் என்றது அவளுக்கு.
அங்கு வந்த மகிமா, "மனோ மேடம். நர்ஸ் இன்னைக்கு லீவாம். தமயந்தி மேடம் இப்பதான் சொல்றாங்க" என்றவள், "நா ஸ்கூட்டி எடுக்குறேன், நீங்க கிருஷ்ணாவ கூட்டிட்டு வாங்க" என வேகமாக நகர, பிடி ஆசிரியர் உதவியுடன் வந்து வண்டியில் அமர்ந்து, அவள் சேலையோடு அவனை சுற்றிப் பிடித்துக்கொண்டாள். பயந்து, வலியில் அவள் கைக்குள் அடங்க முடியாமல் திமிறிக்கொண்டு தான் இருந்தான் கிருஷ்ணன்.
வண்டிக் கிளம்பிய நொடி, மனோ ஞாபகம் வந்தவளாக, "ஒ ஒரு நிமிஷம் மகிமா" என அவளைப் பதறி நிறுத்தி, திரும்பி உடற்கல்வி ஆசிரியரிடம், "சுலோஷனா மேடம், கண்ணா இங்க இருக்கான். ப்ளீஸ் அவன" என சொல்கையில், உள்ளுக்குள் பதட்டம் பதட்டம் மட்டுமே.
"நா பாத்துக்குறேன் மேடம். நீங்க போங்க" என சுலோஷனா தைரியம் குடுக்க, மகிமா வண்டியை எடுத்துவிட்டாள்.