எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
பேசும் பெண்மையேயுன்
மென்மையிலும் வன்மை
கலந்தே பேசு....!

அவ்வுண்மையிலும்
மெய்மையென்னும் மையைக்
கொண்டே பேசு....!

ஆண்மையின் மீது வீசும்
வீண் அவதூறுகளை
கலைந்து கடந்தே பேசு....!

பெண்மையை போற்றும் நீ
ஆண்மையை ஆக்கும் சக்தியென உணர்ந்தே பேசு....!

ஆண்மையை களங்கப்படுத்திடும்
நொடி பொழுதே... அதன்
விளைநிலமான...உன்
பெண்மையையும் சேர்ந்தே
களங்கப்படுவதை காண்....!

பெண்மையின் மகத்துவமே
ஆண்மையை அங்கீகரித்து
போற்றுதலிலேயே ஆண்மை
அலங்கரிக்கப்பட்டு...அதுவே
ஆளுமையின் வன்மைகளை
தகர்த்து தரணியில்
ஆசீர்வதிக்கப்படுகின்றன....!

தேடிச் சென்று பதர்களுக்கு
தீ வைத்திடும் நீயே...
பசுமை நல்வித்துக்களுக்கு
ஏனடி, விரோதம்
பாராட்டுகின்றாய்....?

ஆக,

பெண்மையை பேசு
பெண் உயர்வென்றல்ல...
ஆணுக்கு சமமென்றல்ல...
இருவரும் சகமனிதர்களேயென்று....!

அவனினுள்ளும் பெண்மையின்
மென்னுணர்வுகளுண்டு...
உன்னிலும் ஆளுமையின்
வன்மையுணர்வுகளுண்டு....!

உன் கூர் உணர்வுகளால்
உலக மெய்மை மட்டுமே
கலந்து பேசடி கண்மணியே....!

- Vidhya Ganga Durai
 
Top