எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 4

priya pandees

Moderator

மனோ பள்ளியிலிருந்து கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு நேராக மருத்துவமனை வரவுமே, அவளைப் பார்த்தவர்கள் சிலர் ஞானதிற்கும், ஆண்டாளுக்கும் அழைத்துக் கூறிவிட்டனர்.

மனோவின் அண்ணன் பாலா ரயில்வே துறையில் ரயில் ஓட்டுநராக(லோக்கோ பைலட்) இருக்கிறான் அவன் மனைவி மல்லிகா சேலத்தில் கலெக்டர் ஆபிஸில் ஸ்டெனோவாக இருக்கிறாள். பாலா மூன்று நாட்களுக்கு ஒருமுறை வருபவன் இரண்டு நாட்கள் விடுமுறை மறுபடியும் மூன்று நாட்கள் வேலை என அலைபவன். பிள்ளை பிறப்பிற்காக கிடைத்த ஒருவருட விடுமுறை தான் தற்போது மல்லிகா பிள்ளையுடன் இங்கிருப்பதற்கான காரணம். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு திசையில் இருக்க, மகளும் புருஷனுடன் செல்ல முடியாமல் இருக்க, திண்டாடிக் கொண்டு வந்தனர் ஞானமும் ஆண்டாளும். கல்யாணம் முடித்து வைத்துவிட்டால் கடமை முடிந்தது என்று மூச்சுவிட முடியாத அபாக்கியசாலிகள் இருவரும்.

இப்போதும் இவ்வாறு அழைப்பு வரவும், ஆண்டாள் கணவரிடம் சென்று நிற்க, "எனக்கும் இப்பதான் சுந்தரேஷன் ஃபோன் போட்டான். நா ஸ்கூலுக்கு போய் சின்னவன கூட்டிட்டு வரேன், நீ முன்ன ஆஸ்பத்திரி போ" என்றுவிட்டு அவர் கிளம்பிவிட,

கதவை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த மல்லியைக் கதவைத் தட்டி அழைத்தவர், நின்ற இடத்திலேயே சேலையை திருத்தி கட்டிக் கொண்டிருந்தார், கதவைத் திறந்து கொண்டு, எதுவும் கேட்காமல் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவர், "அவசரமா கிளம்புறேன்னு பாக்றல்லமா என்னன்னு கேட்டா என்ன?" என்க,

"என்னன்னு சொல்லுங்க?" என்றாள் மாமியாரின் கோவத்தில் கொஞ்சம் முறைப்பு போய் பயம் வந்திருந்தது, சாதாரணமாக கோபபடுபவர் இல்லை என தெரியுமே அவளுக்கும்.

"கிருஷ்ணா கிழ விழுந்துட்டானாம். மனோ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்கா, மாமா ஸ்கூல் போய் கண்ணன கூப்பிட போயிருக்காங்க. நீ கதவ பூட்டிட்டு இரு. பிள்ளைய பார்த்துக்கோ" என படபடவென கூறி முடித்து வெளிவாசல் இறங்கி செருப்பை மாட்ட துவங்கயிருந்தார்.

"என்னாச்சு? அடி பட்ருக்கா?" என பின்னயே வந்து கேட்டவளிடம் உண்மையான பதட்டம் தான். அவர்கள் பண்ணும் சேட்டையில் கோபிப்பாள் தான் எரிச்சல் கொள்வாள் தான் அதற்காக அடிபடட்டும் என்று நினைக்குமளவிற்கு மோசமானவளும் இல்லை.

"தெரியல போய் பார்த்தா தான் தெரியும்" என்றவரிடம் அவசரம் தான்.

"நானும் வரவாத்த?"

"வேணாம். கை பிள்ளையத் தூக்கிட்டு வந்து என்ன செய்யப் போற? நீ இரு நா பார்த்துட்டு ஃபோன் பண்ணுதேன்" என கிளம்பியேவிட்டார்,

இருவரும் மருத்துவமனை வந்து சேருகையில், கிருஷ்ணனுக்கு முதலுதவி செய்து முடித்திருந்தனர். வலிக்காமல் இருக்க மருந்து கொடுத்திருந்தும் அவ்வளவு துள்ளி அழுதான் கிருஷ்ணன். கண்ணன் வரவும், கிருஷ்ணாவை அம்மாவிடம் இருந்து விளக்குவதிலேயே குறியாக இருந்தான், இரண்டு பேரையும் சமாளிப்பத்றகுள் விழி பிதுங்கியது மூவருக்கும்.

இரவு வரை அதே போராட்டத்தில் கழிய, 'எங்கு நகர்ந்தால் கிருஷ்ணன் அம்மா மடியில் படுத்து விடுவானோ' என அஞ்சி, மனோவை விட்டா இறங்கவே மறுத்து அழுதான் கண்ணன், அதையும் மீறி மனோ இருமுறை கிருஷ்ணனின் பாவமான அழுகையில் அவனிடம் சென்று விட்டதற்கு மருத்துவமனை என்றும் பாராமல் தரையில் கிடந்து உருண்டுவிட்டான்.

மற்ற நேரம் போல், கிருஷ்ணனை அப்பாவுடன் வெளிய கூட அனுப்ப முடியாத சூழ்நிலை, கண்ணனும் இறங்க மாட்டேன் என அடம்பிடித்து அழ, கிருஷ்ணனும் பயத்தில், வலியில், மருத்துமனை சூழலில் பாவமாக அம்மாவை பார்த்து அழ, தாத்தா பாட்டி இருவர் இருந்தும், துவண்டு தான் போனாள் மனோரஞ்சிதம். திருமணம் செய்ததே தவறோ என்றே அந்நொடி தோன்றிவிட்டது அவளுக்கு.

"அழுதாலும் பரவால்ல, கொஞ்ச நேரம் சின்னவன தூக்கிட்டுப் போங்க, கிருஷ்ணா அவகிட்ட இருக்கட்டும்" என சொல்லி தான் வீட்டிற்கு தூக்கிச் சென்றதும், அவன் விடாமல் கத்தி அழுததில், வேறெதுவும் இழுத்துக் கொள்வானோ என மீண்டும் கூட்டிக்கொண்டு வந்ததும் நடந்தது, இரவு மல்லிகாவின் துணைக்காக ஆண்டாள் வீட்டிலிருந்துவிட, ஞானம் மகளுடன் இருந்தார்.

இவ்வளவு அலப்பறைகளின் பின் அவள் தொய்ந்து அமர்ந்திருந்தபோது நிதானமாக அழைக்கிறான் அவள் கணவன். இங்கு நடந்த எதுவும் அவனுக்கு தெரியாதே, தெரிந்தாலும் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையும் விட்டுப் போயிருந்தது அவளுக்கு.

சில நொடிகள் பார்த்தே இருந்தவள், அந்த பாட்டின் வரிகளில் மனதில் பாரம் அழுத்த, மகனை இறுக பற்றிக்கொண்டு பின்னால் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள். அழுத அழுகைக்கு கண்ணனும் அந்த சத்தத்தில் விழிக்கவில்லை, கிருஷ்ணனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் எழும்பவில்லை.

அவளின் இறுக மூடிய விழிகளிலிருந்து இரு சொட்டு கன்னத்திற்கு இறங்கிவிட, அப்படியே தான் இருந்தாள். அவனை அவ்வளவு தேடியது அவள் மனம், அவனைக் கட்டிக்கொண்டு அவனிடம் பொறுப்பைக் கொஞ்ச நேரமாவது ஒப்படைத்துவிட்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சமே கொஞ்சம் தூங்க வேண்டும் போலிருந்தது.

'வரமாட்டானே! அவன் சுதந்திரம் முக்கியம்' என இருப்பவனிடம் தன்மானத்தை விட்டு எத்தனை முறை தான் கெஞ்ச முடியும். இதுவரை கடந்து வந்ததுபோல் இனியும் செல்ல முடியும், சென்றுவிடவேண்டும் என மனதை திடபடுத்தினாள். ஆனால் அவனைத் தேடி அழும் மனதை திடபடுத்துவற்குள் மீண்டும் தொய்ந்து தான் போனாள்.

ஞானம் தான் அவள் ஃபோன் சத்ததிற்கு வேகமாக உள்ளே வந்தார்.

சுவற்றில் சாய்ந்திருக்கும் மகளும் அவள் கண்ணீரும் கருத்தில் பட்டாலும், மகனை நினைத்து அழுகிறாள் என எண்ணியவர், அடித்து ஓய்ந்திருந்த அவளின் ஃபோனை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தார். யார் அழைத்திருந்தாலும் திரும்ப அழைத்தால் மூவரும் விழித்துவிட கூடும் என்றே எடுத்து வந்திருந்தார்.

அங்கு அழைத்துவிட்டு காத்திருந்தவன், அவள் எடுக்கவில்லை என்றதும், அங்கிருந்த மரம் போன்ற அமைப்பிலிருந்த பலகையில் அமர்ந்தான். சுற்றி வெளிநாட்டு முகங்கள், ஏதேதோ பேசியபடி கையில் கேமராவுடன் சுற்றி வந்து கொண்டிருக்க, இவன் நிதானமாக அளவிட்டபடி இருந்தான். மனதில் மனைவியின் முகமும் உறுத்தியபடி இருந்தது.

இதற்கு முன்னும், பெரியவன் கீழ விழுந்துட்டானாம், சின்னவனுக்கு நல்ல காய்சலாம், பெரியவனுக்கு கால்ல ஏதோ புண்ணு மாதிரி இருக்காம், தோல் டாக்டர்ட்ட காட்டிட்டு வந்துருக்காங்களாம், சின்னவனுக்கு கீழ விழுந்து முன் பல்லு தெறிச்சுருச்சாம், இப்படி பல அவன் காதுக்கு வரும்போதும் சிரிப்பு தான் வரும் அவனுக்கு, ரகசியமாக பிள்ளைகளின் சேட்டையை ரசித்துக் கொள்வான்.

காதால் கேட்பதற்கும் உடனிருந்து அதை அனுபவிப்பதற்கும் உள்ள வித்தியாசம் அவன் உணர தயாராக இல்லை. அப்போதெல்லாம் அவன் மனதில், மனைவி அவளுக்கு பிடித்த இடத்தில்(அம்மா வீட்டில்) பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறாள், அவன் அவனுக்கு பிடித்த இடத்தில் இருக்கிறான் என்ற எண்ணம் தான். அதனாலேயே கிருஷ்ணனை அவள் ஊரில் அவள் படித்த பள்ளியில் சேர்க்க அவன் மறுப்பேதும் சொல்வதில்லை. எப்போதாவது, அவளை அவன் அம்மாவிடம் சென்று பிள்ளைகளை காட்டி வா என்பான், நல்ல நாட்களுக்கு, பள்ளி விடுமுறைகளுக்கு, நெருங்கிய உறவுகளின் விஷேசங்களுக்கு போய்வா என்பான், அதற்கெல்லாம் தான் சண்டையே வரும்.

"இதெல்லாம் ஒரு சண்டைன்னு மூஞ்சத் தூக்கிட்டுப் பேச மாட்டாளாம். போடி" என்றவன் இப்போதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்திருக்க, மூன்று மணி நேரம் சென்று, இப்போது அங்கு நடுசாமம் என தெரிந்தும் அழைத்தான்.

"எடுக்கமாட்டாளோ?" என புருவத்தை நீவி விட்டபடி ஃபோனை பார்த்திருக்க, எடுக்கப்பட்டுவிட்டதற்கான நிமிடங்கள் ஓடத்துவங்கவும், அவள் குரலை கேட்டுவிட எண்ணி வேகமாக காதில் வைத்தான்.

"ஹான், சொல்லுங்க மாப்ள! என்ன இந்நேரத்துல கூப்பிட்ருக்கீக?" என கேட்ட மாமனாரின் தூக்க கலக்கமான குரலில், ஓங்கி அந்த மர பெஞ்சில் குத்திவிட்டான். அவ்வளவு எதிர்பார்த்தானா அவள் குரலை என்பது அப்போது தான் அவனுக்கே புரிந்தது.

அந்த நொடி நேர, 'ஏமாற்றம்!' அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை அவனால். கோபம் அவ்வளவு கோபம் வந்தது.

"மாப்ள?"

"எப்டி இருக்கீங்க மாமா?"

"இருக்கோம் மாப்ள. பிள்ளைக சந்தோசமா இருந்தா தான மாப்ள எதுவும்?" என்றார் அவனிடமே.

"சரிதான் மாமா. கிருஷ்ணாக்கு என்னாச்சு? இப்ப எப்படி இருக்கான்? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?"

"நாளைக்கு தான் பண்ணுவாங்க மாப்ள. ரொம்ப ப்ளட் போயிருச்சு. வலில ஃபீவர் வேற வந்து வந்து போகுது, அதான் அட்மிட் பண்ணிட்டாங்க. நாளைக்கு பாத்துகிட்டு தான் அனுப்புவாங்க"

"ஓ இப்ப ஹாஸ்பிடல்லயா இருக்கீங்க? எப்டி ஆச்சு மாமா?" என்றவன் அங்கு நேரம் எப்படியும் மூன்றை தாண்டியிருக்கும் என தெரிந்தும் பேச்சை வளர்த்தான். எங்காவது பின்னால் மனோ குரல் கேட்கிறதா, எனவும் அவன் காதுகள் கூர்மையாக கவனித்தது.

"விளையாடும்போது கீழ விழுந்துட்டான் போல"

"ஓ! மனோ எங்க மாமா?"

"உள்ள கிருஷ்ணா, கண்ணாவோட இருக்கா, லேட்டாதான் கண்ணசந்தா, தூங்குறா"

"கண்ணனும் இங்க தான் இருக்கானா?"

"ஆமா அவள விட்டுட்டு இருக்க மாட்டான்"

"ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல்ல சமாளிச்சுக்க முடியுமா?"

"வேற வழி இல்லையே மாப்ள? அவ தானே பார்த்தாகணும். வயசான நாங்க என்ன செஞ்சிட முடியும் மாப்ள?" என்றார், விசாரிக்கும் நேரத்தை பார் என்ற கடுப்பில்.

"ஹாஸ்பிடல்கு எவ்வளவு ஆச்சு மாமா?"

"அத மனோ தான் கட்டினா அவகிட்ட தான் கேட்கணும் மாப்ள" எதற்குமே பிடி கொடுக்கவில்லை அவர், அவனை மாப்பிள்ளை என அழுத்தி அழுத்தி அழைப்பதையும் நிறுத்தவில்லை.

"மனோ எழுந்ததும் எனக்கு பேச சொல்லுங்க மாமா" என்றான் அவனும் கொஞ்சமும் இளக்கம் காட்டாமல்.

"இங்க ஒரு ஒன்பது மணி ஆகைல நீங்களே கூப்பிடுங்களேன் மாப்ள?" மகள் தானாக அழைக்க மாட்டாள் என தெரிந்திருக்கவே, இவ்வாறு கூறிவிட்டார்.

'நா நல்ல நேரம் பார்த்து கூப்பிட்டா மட்டும் எடுத்துட்டு தான் மறுவேலை பாப்பா உங்க மக' என மனதினுள் கறுவியவன், "அப்ப நா கூப்பிடும்போது நீங்களும் கூட இருங்க மாமா, ஹாஸ்பிடல்ல ரெண்டு பசங்களும் இருக்கும்போது அவளுக்கு ஃபோன் பேசவும் சிரமமா இருக்குமே?" என்றான் சமாளிப்பாக,

"சரிங்க மாப்ள" என்றுவிட்டார் ஞானம்.

அதன்பின் அவனுக்கு எதுவும் ரசிக்கவில்லை, கிளம்பி அப்பார்ட்மெண்ட் வந்துவிட, இன்னும் தூங்கிக் கொண்டுதானிருந்தான் திருவள்ளுவன்.

"அவனவன் எவ்வளவு டென்ஷன்ல இருக்கான் இவனுக்கு இன்னுமு தூக்கம்" என முனங்கியவன், டிவியில் தனது ஃபோனை இணைத்து பாட்டை அலற விட, பதறி உருண்டு சோஃபாவிலிருந்து கீழே விழுந்திருந்தான் திரு.

"மறுபடியும் குட்மோர்னிங் வள்ளுவா"

"ஏன்டா நீ இன்னும் போகலையா?" என பாவமாக கேட்க,

"நா போய்ட்டே வந்துட்டேன், நைட்டு எக்ஸ்ட்ரா ஒரு ரெண்டு மணிநேரம் முழிச்சதுக்கு இன்னைக்கு ஃபுல் டே தூங்குவியா நீ? எந்திரி சாப்பாடு ஆர்டர் போட்டுட்டு, ப்ளே ஸ்டேஷன் எடுத்துட்டு வா ஒரு கேம் விளையாடுவோம்" என சோபாவில் சரிந்து படுத்தவனை விசித்திரமாக பார்த்தான் திரு.

"என்னடா?"

"இதெல்லாம் என்ட்டையா சொல்ற?"

"நீ மட்டுந்தான இங்க இருக்க? தனியா பேச நா என்ன லூசா?"

"தனியாத்தான பேசிட்டு திரிவ இன்னைக்கு என்ட்ட எல்லாம் செய்ய சொல்ற, விளையாட வேற கூப்பிடுற அதான் எனக்கு டவுட்டே வருது" என்றான் குறுகுறு பார்வையுடன்.

"இப்ப நீ வர்றியா இல்லையா?"

"எப்பவும் நா கூப்பிட்டா நீ வரமாட்டல்ல, இப்ப என் டர்ன் வரவேமாட்டேன் போ" என்கவும், மார்க் திரும்பி முறைத்தவன், எழுந்து சென்று கதவை படாறென்று அறைந்து மூடிக்கொண்டான்.
 
Last edited:
Top