எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

கனவிலும் கண்டதில்லை
கண்ணுக்கும் தெரிந்ததில்லை
கற்பனைக்கும் எட்டியதில்லை
கதைகள் பேச ஒரு துணையாய்
கண்ணீர் துடைக்க ஒரு தோழனாய்
நீ வந்த தருணம்
வாழ்வில் இன்னொரு ஜனனம்
உன் மார்பில் நான் அலைந்திட வேண்டும்
என் மார்பில் நீ புதைந்திட வேண்டும்
இனிமைகள் தொடரும்
இரவுகள் நீளும்
கைகள் உலாவும்
கால்கள் விறையும்
உன் கைகளில் என் உலகம் அடங்கும்
உள்ளங்கள் இணையும்
வார்த்தை இல்லாமல் மொழி உணரும்
கவிதைகள் பொய் ஆகும்
நாம் என்பது மட்டும் மெய் ஆகும்
உன் மூச்சு காற்று பட்டு
வாடிய பூவும்
மலர்ந்த நானும்
காத்திருந்த சொந்தம் இணையில்லா பந்தமடா
காதல் ஆசை இன்னும் நீளுமடா
நித்தம் நூறு கவிதைகள் உரைப்பேன்
ஒரு வேளை நான் கவியாய் பிறந்திருந்தால்

இப்படிக்கு
கணவனின் காதலி
 
Last edited:
Top