எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மோகப் பொற்கொடியே முழ்காத தாமரையே -கதை திரி

kalaisree

Moderator
அத்தியாயம்-01

வெளுத்துப்போன மஞ்சள் நிற பலகையில் பஞ்சவர்ணபுரம் என்ற கருநிற எழுத்துக்கள் உதிர்ந்து போய் அந்த ஊரின் நிலையைப் பறைசாற்றியது.

பேருக்கு தார் ரோடு என்று இருக்க,நூறு மீட்டருக்கு ஒரு முறை குண்டும் குழியும் தங்கள் வருகையை பறைசாற்றியது.

அந்த உயர்தரக் கார் மேடு பள்ளங்களை அனாசியமாக கடந்தது.

ஆனால், காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் வதனமோ ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களுக்கும் கோபத்தில் சிவந்தது.

ஸ்டேரிங் வீலினை பற்றி இருந்தக் கரத்தின் அழுத்தத்தை கூட்டினான்.

மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு இவ்விதமானப் பயணமே தொடர அதற்கு மேல் முடியாமல், "அம்மா என்ன கண்றாவி ரோடு இது " என்று எரிச்சலுடன் சிடுசிடுத்தான் .

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் ஆத்ரேயன்.

ஆறடி உயரம், தேவையற்ற சதைகள் இல்லாதக் கட்டுக்கோப்பான தேகம்.நெற்றியில் அலை என புரளும் கேசத்தை ஜெல் வைத்து அடக்கி இருந்தான்.

கரு நாவல் பழ நிற சர்ட் அவனின் மாநிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டியது.

அளவான மீசை தாடி. கருப்பு நிற பிரேம் உடன் கூடிய மெல்லிய கண் கண்ணாடி.வசீகரமான முகம் என அவன் இயக்கம் திரைப்பட ஹீரோவிற்கு சளைக்காமல் மிளிர்ந்தான்.

தென்னிந்தியாவின் வெற்றி இயக்குனரில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களாக உள்ளான்.

வருடம் இரண்டு படங்கள் கண்டிப்பாக வந்து விடும். ஆக்சன் மசாலா படங்களில் பின்னி எடுப்பவன் உணர்வுகளுடன் கூடிய காதல் கதைகளில் கண்ணீரை வரவழைத்து விடுவான்.

ஒரே மாதிரியான கதைகளை செய்யாமல் முரணான கதைகளையும் தேர்ந்தெடுத்து அதை வெற்றி படமாக மாற்றும் திறமை கொண்டவன்.

திரைக்கு வந்து இரண்டே வருடத்தில் தேசிய விருதைப் பெற்றப் பெருமையும் இவனை சாரும்.

தெலுங்கு மற்றும் தமிழில் பெரும் புகழை பெற்ற இயக்குனர்களில் ஒருவன்.

முன்னணி நடிகர்களே இவனின் கதைக்காக காத்துள்ளனர்.

முதல் படம் மட்டுமே தந்தையின் புரொடக்ஷன் மூலம் உருவானது மற்ற அனைத்துமே அவன் திறமையை தேடி வந்த வாய்ப்புகள்.

அதை சரியாகப் பயன்படுத்தி இப்போது திரைத்துறையில் கொடிகட்டி பறக்கிறான்.

குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுப்பதிலும் வல்லவன். இரண்டு மாதத்தில் சூட்டிங்கை முடித்து விடுவான்.

ஐந்து மாதம் ஒரு படத்திற்காக கடுமையாக வேலை பார்ப்பவன் ஒரு மாதம் முழுக்க ஓய்வை எடுத்துக் கொள்வான்.

அந்த நேரத்திலே அவனுக்கு அடுத்த கதைக்கானக் கருவும் கிடைத்து விடும்.

அடுத்த கதைக்கான அனைத்தையும் இறுதி பத்து நாட்களில் முடித்து விடுவான்.

முதல் 10 நாட்கள் முழுக்க முழுக்க அவனுக்கான ஓய்வு நாட்கள்.

அந்த நாளில் தான் அவனின் தாய் அன்னபூரணி அவனை மொட்டை காட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.அந்த கோபம் குறையாமல் தாயிடம் காட்டினான்.

"அதுக்கு நான் என்ன பா பண்ணுவேன்" என்று அவன் எரிச்சலுக்கு முற்றிலும் மாறான சாந்தமான குரலில் பதில் அளித்தத் தாயை இயன்றவரை முறைத்து தள்ளினான்.

பாதையில் கண்களைப் பதித்தவன்.

எரிச்சலுடனே, "அஞ்சு மாசம் சரியா அஞ்சு மாசம். ராத்திரி தூக்கம் இல்லாமல் ஒழுங்கான சாப்பாடு இல்லாமல் இராப்பகலா கஷ்டப்பட்டு,இப்போதான் ஒரு மாசம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு.அதில் ஒரு நாளை கூட முழுசா அனுபவிக்க விடாமல் இப்படி ஒரு மொட்டை காட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. இது நியாயமா? "என்றதும்,

அவர் முகத்தை பாவமாக வைத்து கொள்ள இன்னும் எரிச்சலுடன், " சிக்னல் இல்லை சரியான ரோடு இல்லை, ஒன்றரை மணி நேர டிராவலில் ஒரு பெட்டிக் கடை கூட இல்லை "

" இந்த ஊரை தான் பொன்விளைகிற பூமி, எங்க ஊரு மாதிரி வருமானு அப்பா கிட்ட ஃபிலிம் ஓட்டிட்டு இருந்தீங்களா "என்று எரிச்சலுடன் நக்கல் அடித்தான்.

" கோபப்படாதே டா".

" கோபப்படாமல் என்ன பண்ண சொல்றீங்க" என்று அதற்கும் எரிந்து விழ,

அவரிடம் இருந்து சத்தம் வரவில்லை என்றதும் திரும்பிப் பார்க்க, கண்கள் கலங்க அவர் அமர்ந்திருப்பதை கண்டதும் பெருமூச்சுடன் சாந்தமான குரலில், மாம் என்று அழைக்கவே அதற்காகவே காத்திருந்தது போல்,

" ஒரு வருஷம் சரியா 365 நாளும் சென்னை தான். அதை தாண்டி எங்காவது போய் இருக்கேனா. ஃபாரின் சூட்டிங் எல்லாம் நீ கூப்பிட்ட போதும் வரலை. ஏன்? " தலைசிறந்த இயக்குநர் இடமே அவன் தாய் ரீல் ஓட்ட ஆரம்பிக்க,

கண்களை சுருக்கி அவரை ஆராய்ச்சியுடன் பார்த்துக் கொண்டே "ஏன் "என்றான்.

"உங்க அப்பா இறந்த இந்த ஐந்து வருஷத்தில் எங்கேயும் வெளியே போக பிடிக்கலை. நான் உண்டு என் கேட்டரிங் பிசினஸ் உண்டுன்னு இருக்கேன்"

"அப்படிப்பட்ட நான்.. க்கும்... நான் ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் என்ன தங்கமா வைரமா.. ஒரே ஒரு தடவை பொறந்த ஊருக்கு போகணும்.அதுவும் எதுக்காக கேட்டேன் சும்மா சுத்தவா. என் தம்பி பொண்ணு கல்யாணத்தை பாக்கணும்னு தானே... அவன் கூட பேசியே பல வருஷம் ஆச்சு. சரி பழையக் கதை எல்லாம் எதுக்கு".

"அவனும் எனக்காகவே உன்னோட லீவு நாளைப் பார்த்து கல்யாணத்தை வச்சிருக்கான். அப்படிப்பட்டவனோட பொண்ணு கல்யாணத்தைப் பார்க்க ஒரு ரெண்டு நாள், ஒரு ரெண்டு நாள் மட்டும் உன்னால் ஒதுக்க முடியலயில்லை" என்று மூக்கை சிந்த ஆரம்பிக்க,

அவருடையது அப்பட்டமான நடிப்பு என்று தெரிந்த போதிலும் மறுத்து பேச முடியாமல் "சரி ம்மா புலம்புதீங்க" என்று தன் வாதத்திலிருந்து பின்வாங்கினான்.

மற்றவரிடம் பேசுவது போல் கறாராகப் பதில் அளிக்க முடியாமல், தாய் பாசம் கட்டி போட்டது.

மௌனமாக காரை ஓட்ட ஓரளவு ஊர் வந்ததும், அன்னபூரணி கார் கண்ணாடியை திறக்க மகனின் உஷ்ண பெருமூச்சு புரிந்தாலும்,

" ஈஈ ஊர்வாசத்தை சுவாசிக்கணும்டா. எத்தனை வருஷம் ஆச்சு" என்று சிறுபிள்ளை என பல்லை காட்டியவரிடம், கோபப்பட முடியாமல் அவன் பாதையில் கவனத்தை செலுத்த,

சில நிமிடங்களிலே காதினருகே அணுகுண்டு வெடிப்பு ஏற்பட்டது போல், இரைச்சலுடன் ஸ்பீக்கரில் இருந்து பாடல் கேட்க,மகனின் கோபம் புரிந்து ஜன்னலை ஏற்றி இருந்தார்.

"என்ன லூசு தனம் இது" என்று அவன் பொரிய,' சமாளிச்சுட்டோம்னு நினைச்சோமே' என்று எண்ணியபடி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவர்.

" விடுடா ஊர் கல்யாணம் இல்லை. அப்படி தான் இருக்கும் "என்றதும், அவன் முறைக்க அவர் சிரிக்க, அவரை மேலே கடிய மனம் இல்லாமல் எரிச்சலுடன் காரை செலுத்தியவனுக்கு தலைவலியே வந்து விட்டது.

கடுப்புடனே பந்தல் இடப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் முன் காரை நிறுத்தினான்.

கதவை திறந்ததும் பாடல் காதின் செவிப்பறையை அதிரசெய்ய எரிச்சலுடன் நிமிர்ந்தவன்.

என்னடா எய்ட்டீன்ஸ்க்கு வந்துட்டோமா என்று எண்ணும் அளவு அத்தனை பழைய மண்டபமும், திருமண அலங்காரமும்.

சலிப்புடன் தலையாட்டி கொண்டவன். தாயும் அந்த சத்தத்தை தாங்க முடியாமல் காதை பொத்தியபடி இறங்குவதை கண்டு மெல்லிய சிரிப்புடன், அவர் கரங்களை பற்றியப்படி மண்டபத்திற்குள் நுழைந்தான்.

வரவேற்பவர்களின் பேச்சு சத்தம் கூட கேட்காத அளவு ஸ்பீக்கர் ஒலிக்கவே மண்டபத்தில் பார்வையை சுழற்றினான்.

50 அல்லது 60 பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு அதில் அனைவரும் அமர்ந்திருக்க எதிரே, நடுநாயகமாக மணமேடை அமைக்கப்பட்டு ஓமக் குண்டம் எரிந்து கொண்டிருந்தது. ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.

வலப்புறம் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பவர்கள் தங்களின் பணியை செய்வெனே செய்து கொண்டிருக்க,அந்த மொத்தக் காட்சிகளும் பாரதிராஜாவின் படங்களை தான் நினைவு படுத்தியது.

என்ன அப்படங்களை பார்க்கும் போது வரும் இதம் வராமல், இப்போது தலைவலி வந்தது.

கோபத்துடன் இன்னும் மண்டபத்தில் பார்வையை சுழற்ற,பழைய செட்டப்புடன் இருவர் ஒலியின் அளவை கூட்டுவதும் குறைப்பதுமாக அமர்ந்திருந்தனர்.

அழுத்தமாக அவர்களைப் பார்த்திருக்க, அவன் விழிவீச்சை உணர்ந்தது போல் திரும்பியவர்கள்.

அவன் சத்தத்தை குறைக்கும் படி சைகை காட்டவும் அவனின் முறைப்பையும் தோரணையும் கண்டு பயத்துடன் பாடலை நிறுத்தினர்.

தாயைக் காண அவர் உறவுகளுடன் ஐக்கியமாகிவிட்டதைக் கண்டு, ஒரு பெருமூச்சுடன் மேல் பட்டனை கழட்டி விட்டவாறு மண்டபத்தின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

டக் டக் என்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க எப்பொழுது வேண்டும் என்றாலும் உயிரை விடும் நிலையில் சீலிங் ஃபேன் மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது.

கடுப்புடன் பல்லை கடித்தவன். தனது மொபைலை எடுத்துக் கொண்டான்.

படத்திற்கான கதை தோன்றியதுமே மொபைலில் அல்லது கையடக்க நோட்டில் குறித்து வைத்துக் கொள்வான்.

திருமணத்தில் கவனத்தை செலுத்த விருப்பமில்லை என்பதால், இப்பொழுது தயார் செய்து வைத்த தனது திரைக்கதையை சரி பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த சில நிமிடத்திலே அதில் ஒன்றிப் போனான்.

சுற்றிலும் நடக்கும் கூச்சல், குழப்பம், காற்று இல்லாத அறை, உஷ்ணத்தை தெறிக்கும் காற்று எதையும் கண்டுகொள்ளாமல் முழு கவனமும் திரைக்கதையின் திருத்தங்களை மேற்கொள்வதில் படிந்தது.

"கண்ணா" என்ற சத்தத்துடன் தோளை உலுக்கிய தாயின் செயலில் தான் உணர்வு பெற்று, " என்னமா" என்றப்படி நிமிர்ந்தான்.

அவனிடம் மஞ்சள் தாலியை கொடுத்து "இந்த டா" என்க,

" மாம் எனக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பிடிக்காது. நீங்களே தாலி எடுத்து குடுங்க " என்று விட்டு மீண்டும் அவன் போனில் முழ்க போக,

"கண்ணா விளையாடாதே. ஒழுங்கா இந்த தாலியை பொண்ணு கழுத்தில் கட்டு "என்றதும் விக்கித்து போனான்.

"அம்மா" என்று அதிர்ந்து போய் அழைக்க," எதுவும் பேசக்கூடாது.இப்பவே இந்த தாலியை திகழ் கழுத்தில் கட்டு" என்றார் அடமாக.

திகழா என்ற முணுமுணுப்புடன் மேடையை பார்க்க தலைகுனிந்தபடி கழுத்தில் மாலையுடன் ஒடிசலாக ஒரு பெண் அமர்ந்திருக்க, அவளின் அருகில் அன்னபூரணியின் தம்பி அம்மையப்பன் சட்டை கிழிய நின்றிருந்தார்.

'இதெல்லாம் எந்த நேரத்தில் நடந்தது' என்று எரிச்சலுடன் நெற்றியை பிடித்துக் கொண்டவனுக்கு திருமணம் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை.

எனவே, " மாம் பி சீரியஸ். நான் டைரக்ட் பண்ற படத்தில் கூட இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் வரலை. என் வாழ்க்கையிலும் வரவச்சடாதீங்க. ஐ அம் நாட் இன்ட்ரஸ்ட் இன் மேரேஜ்" என்று திட்டவட்டமாக மறுத்தான்.

" டேய் கண்ணா. அம்மா வாக்கு கொடுத்துட்டேன். ஒழுங்கா வந்து தாலி கட்டு இல்லைனா" என்றதும்,

"போதும் எமோஷனல் ட்ராமா எல்லாம் பண்ணாதீங்க" என்று அவர் பேச்சை கத்திரித்தான்.

"முதலில் இந்த தாலியை எங்கே எடுத்தீங்களோ.அங்கேயே வெச்சுட்டு ஒழுங்கா என்கூட வாங்க. போலாம். இங்கே வந்து உங்களுக்கு மூளை குழம்பிடுச்சு" என்று எரிச்சலுடன் படப்படத்தான்.

" ஆமாடா ஆமா. நான் பைத்தியம் தான். ஆனால் உன்னை பெத்தவ நான் தானே. ஒழுங்கா வந்து தாலி கட்டு. இல்லைனா இந்த அம்மாவை பிணமா தான் பார்ப்ப".

"அம்மா சம்பந்தம் இல்லாமல் பேசி தொலையாதீங்க கடுப்பாகுது"என்று எரிச்சலுடன் கத்த, உடனே அவன் கையைப் பற்றியவர்.

" தப்புதான் உன் மனநிலை புரியுது. ஆனால் வேற வழியில்லை. வாழ்வா சாவானு தம்பி குடும்பமே தவிக்குது. மாமாவை ரொம்ப அசிங்க படுத்திட்டாங்க. இப்போ திகழுக்கு கல்யாணம் நடக்கலைன்னா, இன்னும் அசிங்கமா போய்டும். அம்மா உன்கிட்ட இனிமேல் எதுவும் கேட்க மாட்டேன் இது மட்டும் பண்ணுடா கண்ணா ப்ளீஸ்டா. காலா நினைச்சுக்கறேன் டா " என்று கையை அழுத்தமாக பற்ற, அம்மா என்ற சத்துடன் கையை உதறியவன்.

சுற்றிலும் பார்வையை பதித்தான்.

அனைவரின் கவனமும் தங்கள் இருவரின் மீது இருப்பது, இன்னும் எரிச்சலை தந்தது.

"என்னதான் பிரச்சனை".

"அதெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை முதலில் தாலியை கட்டுடா. முகூர்த்த நேரம் முடிய போகுது".

" மாம் கடுப்பை கிளப்பாதீங்க. ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க ".

" ஃப்ளாஷ் பேக் போக நேரமில்லை கண்ணா. முதலில் தாலியை கட்டு. அப்பறம் பொறுமையா சொல்றேன். இப்பயும் உன் மனசு மாறலைன்னா சொல்லு காலில் விழறேன்" என்று அவர் முன்னேற,

எரிச்சலுடன் அவர் கையில் இருந்த தாலியை பற்றியவன்.

" அநியாயத்துக்கு ஆக்டிங் பண்றீங்க மா.வொஸ்ட் ஆக்டிங் ஆனால்..." என நெற்றியில் அறைந்து கொண்டவன்.கோபத்துடன் மணமேடை ஏறினான்.

அம்மையப்பன் நன்றியுடன் அவன் கையை பற்ற போக, "எங்க அம்மாவுக்காக மட்டும் தான்".

அவரின் கையை உதறி கொண்டு மனையில் அமர வர,"தம்பி செருப்பு போட்டுட்டு உக்காரக்கூடாது" என்ற அர்ச்சகரின் குரலில் இன்னும் கடுப்பு ஏற, செருப்பை உதறி தள்ளி விட்டு அமர்ந்தான்.

அருகில் அமர்ந்து இருந்தவளோ விட்டால் அக்னியில் தலையை கொடுத்து விடுவாள் போல அந்த அளவு குனிந்து இருந்தாள்.

அதில் இன்னும் எரிச்சல் பெருக,

"இன்னும் கொஞ்சம் தலையை தள்ளு அப்படியே தலை பொசுங்கி போகட்டும். அடி ச்சி ஒழுங்கா உட்காரு" என்று எரிந்து விழ,

ஐயர் மந்திரத்தை நிறுத்திவிட்டு அவனை அதிர்ந்து பார்க்க, " உனக்கு என்னய்யா ஒழுங்கா ஓது " என்று அவரின் மீதும் கோபத்தைக் காட்டினான்.

கலிகாலம் என்று நொந்து கொண்ட படி, "மாங்கல்யம் தரணம் பண்ணுங்கோ கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்றதும் கையில் இருந்த தாலியை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றவன்.

" இப்பயாவது நிமிர போறியா இல்லை. மாட்டுக்கு மூக்கணா கயிறு கட்டுற மாதிரி தான் கட்டணுமா " என்று பற்கள் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

கல்யாண மேக்கப் என ஐந்து கோட்டிங் பெயிண்டை வாரி இரைத்து அவள் உண்மையான அழகை மறைத்து இருக்க,கண்களிலும் உதட்டிலும் பூசி இருந்த அழகு சாதன பொருட்களோ தன் உயிரை விட்டிருந்ததில் அவன் திகைத்து,

"காஞ்சூரிங் பேய்க்கே டஃப் கொடுக்க போல" என்று அவளிடமே கூற, அதிர்ந்து அவனைப் பார்க்க தாலியை கட்டப் போனவன்.

"உனக்கு விருப்பமா இல்லையா" என்று கடுப்புடன் கேட்டான்.

"வாழவே வழியில்லாதவளுக்கு தேர்ந்தெடுக்கிற உரிமை இல்லை" என்று அவள் விரக்தியாக மொழிய, " அப்ப சரி "என்றப்படி அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக்கி கொண்டான்.




 

Attachments

  • ei5INZX3667.jpg
    ei5INZX3667.jpg
    792.1 KB · Views: 0

kalaisree

Moderator
அத்தியாயம்-02

தாலி கட்டி முடித்ததுமே மனையை விட்டு எழுந்தவன்.

" யோவ் ஐயரே.இனி ஏதாவது சடங்குன்னு சொன்னால் வாயிலே குத்துவேன் "என்று மிரட்டி விட்டு, தாயை தேட அம்மையப்பனின் அருகில் நின்றிருந்தார்.

மண மேடையை விட்டு இறங்கியவன்.
இன்னும் அப்படியே அமர்ந்திருக்கும் பெண்ணை கண்டு," ஒய் மண பொண்ணே மாப்ள நான் இங்க இருக்கேன். அங்கே என்ன பூஜை பண்ணிட்டு இருக்க.எழுந்து வா" என அதட்டினான்.

தாய் அருகில் நெருங்கி, " இதுக்கு மேலே ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. ஒழுங்கா கிளம்பலாம்".

" டேய் கண்ணா சாப்பிட்டு தம்பி வீட்டுக்கு போனதும் உடனே கிளம்பிடலாம்.ப்ளீஸ்டா" என்று மெல்லிய குரலில் மன்றாட,

"கண்ணா கண்ணா இனி எதுவுமே கேக்க மாட்டேன் இதை மட்டும் செஞ்சு கொடுடா " அன்னபூரணி கூறியது போலவே சொன்னவன்.

"இந்த மாதிரி சொன்ன என் அற்புத தாயை பார்த்தீங்களாமா" என்று எரிச்சலுடன் வார்த்தைகளை கடித்து துப்ப,

" சரி நான் எதுவும் உன்னை கேக்கலை. அதே நேரத்தில் என்னை கூப்பிடாத நீ கிளம்பு " என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ள, அவர் செயலில் எரிச்சல் அடைந்தவன்.

" கடுப்பாகுது ம்மா" எனத் தலையை அழுத்த கோதியப்படி தன் அருகில் நின்றிருந்த பெண்ணை பார்த்து,'இவ வேற ' என்று எண்ணியவன்.

ஒரு பெருமூச்சுடன், "வாங்க சாப்பிட போலாம்" என்ற கடுப்புடன் நடக்க, அவனின் கரம் அழுத்தமாக பற்றப்படவே சோர்வுடன் என்னம்மா என்றான்.

" கோபத்தை சாப்பாட்டில் காட்டாதடா" என்றார் மன்றாடும் குரலில்.

"ம்மா நாலு மணி நேரம் பச்ச தண்ணி கூட பல்லுல படாமல் வந்திருக்கேன். பசி வயித்தை கிள்ளுது. நீங்க கடுப்பேத்தாமல் வாங்க "என்று விட்டு முதல் பந்தியில் அமர்ந்தான்.

மண்டபம், அலங்காரம்,மணப்பெண்ணே இப்படி இருக்க உணவு எப்படி இருக்குமோ என்று நினைக்கும் போதிலே வாழை இலை போடப்பட்டு, உப்பு அளவு ஊறுகாய், குழந்தையின் உள்ளங்கை அளவு வடை அப்பளம் சாதம் காய்கறிகள் போட்ட சாம்பார் ஊற்றப்பட்டது.

இன்னைக்கு உனக்கு வச்சது இதுதாண்டா என்று மணப்பெண்ணையும் உணவையும் பார்த்தபடி ஒரு வாய் வைத்தவன். அதன் சுவையில் அசந்தான்.

நல்லா தான்டா இருக்கு என்று எண்ணிய படியே வைத்த உணவை உண்ண ஆரம்பிக்க,சார் போட்டோ என்று வந்தவனை கண்டு கடுப்பில் முறைத்தவன்.

"இவ்ளோ நேரம் எங்கடா இருந்த ஒழுங்கா ஓடிப் போய்டு.எரும சரியா சாப்பிடுற நேரத்துக்கு வந்து இம்சை பண்ணிட்டு இருக்கான் "என்று மிரட்டியதில் தன் குட்டி கேமராவை எடுத்துக்கொண்டு ஓடி இருந்தான்.

"டேய் கண்ணா பொண்ணுக்கு ஒரு வாய் ஊட்டி விடுறா "என்றதும் அப்பளத்தை கொறித்தப் படி தாயை முறைக்க, அவரோ உடனே இலையில் தலையை நுழைத்து கொண்டார்.

மணப்பெண்ணை பார்க்க, கரங்கள் உணவில் அலைபாய்ந்தது.

"ஹலோ மேடம்" என்றதும் அவள் அதிர்ந்து பார்க்க, "முதலில் இந்த முழியை மாத்து. என்னமோ உன்னை ரேப் பண்ண வர மாதிரி ரியாக்சன் கொடுக்கிற".

அதில் இன்னும் அவள் அதிர, "உன்னோட முடியல. நாலு மணி நேரம் டிராவல். நடுவில் எல்லாம் வண்டி நிறுத்த மாட்டேன். பசி தாங்குவியா ஒழுங்கா சாப்பிடு" என்றவன். அதன் பிறகு அவள் புறம் திரும்பவே இல்லை தன் உணவில் தான் கவனத்தை செலுத்தினான்.

ஒரு பெருமூச்சுடன் இலையில் இருந்த உணவை மட்டும் முடித்தாள்.

உணவை ஒரு வழியாக முடித்து மண்டபத்தின் வாயிலிற்கு வந்தனர்.

அவன் தாயின் இறைஞ்சலான பார்வையை கண்டு வேறு வழியில்லாமல் அம்மையப்பன் வீட்டிற்கு அவனின் காரில் சென்றனர்.

மண்டபத்தின் நிலையை விட வீடு மோசமாக இருந்தது.

கூடத்தில் கல்யாண ஜமக்காளம் விரிக்கப்பட்டு இரண்டு பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருக்க,அதில் அமர்ந்தவன்.

அருகில் அமர்ந்த தாயிடம், " பத்து நிமிஷம் தான் அதுக்கு மேல் ஏதாவது டிராமா பண்ணீங்க கடுப்பாகி ரெண்டு பேரையும் விட்டுட்டு போயிடுவேன்" என்று காதில் சன்னமாக எச்சரித்தான்.

பத்து நிமிடங்களுக்கு மேல் தங்க முடியாத அளவில் தான் வீடும், அம்மையப்பனின் மனைவி மாதங்கியின் முகம் இருந்தது.

மாதங்கியை ஒட்டி கொண்டு அவளின் மகளும் இருக்க ஏதோ சரி இல்லாததை கண்டு கொண்டார்.

"மாது வந்தவங்களுக்கு காபி பலகாரம் எடுத்து வை"என்று வீட்டாளாக அம்மையப்பன் உபசரித்தார்.

"அதெல்லாம் வேண்டாம். இப்போ தானே சாப்பிட்டோம்.தண்ணி மட்டும் கொடுங்க "என்று அங்கு இருக்க பிடிக்காமல் பேச்சைக் கத்தரித்தான்.

அதில் அவர் முகம் சுருங்கி போக, மாதங்கி ஆத்ரேயாவை முறைத்தார்.

அதை அவன் கவனிக்கவில்லை என்றாலும் அன்னபூரணி கண்டு கொண்டார்.

தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த தோரணையும் சரியில்லை.

அதில், அவருக்கும் அங்கே இருக்க பிடிக்காமல் போகவே,"திகழை ரெடியாக சொல்லுங்க கிளம்பறோம் " என்றார்.

"என்ன அக்கா.இருந்து தங்கிட்டு போங்களேன்" என்று அம்மையப்பன் தயக்கத்துடன் மறுக்க,

"இல்ல அப்பு திடீர்னு ஏதேதோ ஆகிடுச்சு.சூழ்நிலை கொஞ்சம் சுமுகமாகட்டும்.அப்பறம் மேற்கொண்டு பேசலாம் "என்றதும் மறுக்க மனம் இருந்தாலும் சூழ்நிலை இல்லாததால் மௌனமானார்.

ஆத்ரேயனுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

அவன் நிலை முள்ளில் அமர வைக்கப்பட்டது போல் இருந்தது.

இப்பொழுதே கிளம்பி சென்றால் தேவலாம் என்று இருக்கவே,"மா அவளை ரெடி ஆயிட்டு வர சொல்லுங்க" என்று மறுபடியும் காதில் பொறுமையற்று ஓத, சூழ்நிலையை புரிந்தவரும் மாதங்கியை பார்க்க, அவரோ ஏற்கனவே திகழை அங்கிருந்த ஒற்றை அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.அவர் அழைத்து சென்ற தோரணையே சரியில்லை.

மண்டபத்தை விட மோசமாக ஃபேன் சுற்ற அதன் புழுக்கம் தாங்க முடியாமல் எழந்தான்.

அவன் மாமாவும் எழ அவரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே வெளியே நின்று கொண்டான்.

இடைவெளியே இல்லாமல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது.

ஆங்காங்கே தலைகள் தெரிய அனைவரின் பார்வையும் தன் மீது இருப்பதை உணர்ந்தவன் கண்டு கொள்ளவில்லை.

நிமிடங்கள் கழிய, " கிளம்பலாமா" என்று திரும்பியவன்.தாயுடன் வந்த பெண்ணை புரியாமல் பார்த்தப்படி சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன்.

"எங்கம்மா அவ ".

" யாரைடா கேட்கிற" என்று புரியாமல் வினாவினர்.

தன் தாயின் கையில் உள்ள லக்கேஜை கண்டு அவர் கையில் இருந்த பெட்டியை வாங்கியபடி, "நீ எதுக்கு தூக்குற அவ எங்க" என்றான் மீண்டும்.

"அடேய் யாரடா கேக்குற" என்று அவர் நொந்து போய் வினாவ, " ஹ உன் தம்பி பெத்த தகரம் சாரி தங்கம்".

அதில் பொய்யாக அவனை முறைத்தவர்.

" நக்கல் டா உனக்கு இதுதான் உன் பொண்டாட்டி " என்க, மேக்கப்பை கலைத்துவிட்டு மெலிதான பட்டுப்புடவை உடுத்தி அளவான அழகுடன் இருந்தவளை தலை முதல் கால் வரை அளந்தவன்.

"பரவாயில்ல. பேய் மாதிரி எல்லாம் இல்லை. ஓரளவுக்கு பாக்குற மாதிரி தான் இருக்கு.இனி மேக்கப் பக்கமே போயிடாத" என்றவன்.

அவள் கையில் இருந்த பெட்டியையும் வாங்கி கொண்டு முன்னேறினான்.

" இருடா சொல்லிட்டு போவோம் "என்றதும் பெருமூச்சுடன் அப்படியே நின்றான்.

"நீ அவன் பக்கத்தில் நில்லு " என்று மருமகளை தன் மகன் அருகில் நிறுத்திவிட்டு,

அவர் கொல்லைப்புறம் செல்ல கணவனுக்கும் மனைவிக்கும் காரசாரமாக உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

அவர்களின் விவாதத்தை கேட்க விரும்பாமல் தொண்டையை செரும, இருவரும் பட்டென்று வார்த்தையாடலை நிறுத்தினர்.

அம்மையப்பன் தயக்கத்துடன் அவரை ஏறிட, மாதங்கியோ யாருக்கு வந்த விருந்தோ என்று அலட்சியமாக நின்று இருந்தார்.

"அப்போ கிளம்பறோம் பா" என்றதும் தமக்கை அருகில் வந்தவர்.

அவர் கைகளை பற்றி கொண்டு," இந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன் அக்கா. என் பொண்ணு உங்க பொறுப்பு. பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கேன் ஆனால் யாரோ மாதிரி வழி அனுப்ப வேண்டியதா இருக்கு. என்னால் எதுவும் செய்ய முடியலை. என் நிலைமை அப்படி" என்றார் வருத்தத்துடன்.

"ஏண்டா பெரிய ஐயா கொடுத்த வீட்டை கூட வித்துட்டு இந்த மாதிரி வீட்டில் இருக்க" என்றார் வருத்தம் கலந்த கோபத்துடன்.

தம்பியின் மீது கட்டுக்கடங்காத கோபம். கிட்டத்தட்ட தொடர்பு அறுந்து 25 வருடங்கள் ஆயிற்று.

சொந்தங்களுக்கு விருப்பமில்லாத செயலை செய்தாலும் ஏதோ சொந்த ஊரில் நலமாக இருப்பான் என்று பார்த்தால் சொத்துக்களை இழந்து கடன் சூழ்ந்த நிலையில் தம்பி இருக்கிறானே என்று ஒரு பக்கம் வருத்தமும்,மறுபக்கம் அடங்காத கோபமும் பெருகியது.

அதுவும் திகழை திருமணம் முடிக்க நினைத்தவன் எப்பேர்பட்ட சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டு சென்றிருக்கிறான்.

அனைத்தும் தம்பியின் முட்டாள்தனமான செயல்களால் தான் என்று புரிந்தாலும் அவனை எண்ணி பரிதாபமே மிஞ்சியது.

மா போலாம் என்று மீண்டும் மகன் அழைக்கவே, பற்றி இருந்த கரத்தில் அழுத்தத்தை கொடுத்து, "திகழ் என்னோட பொறுப்பு அவளை பத்தி கவலையை விடுங்க. கடன் எல்லாம் அடைத்து விட்டு நல்ல வாழுற வழியைப் பாருங்க" என்று இருவருக்கும் பொதுவாகவே கூறிவிட்டு அங்கிருந்து அகன்றவருக்கு மனம் எல்லாம் யோசனை.

" போலாம் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது" என்று கடிந்து விட்டு அவன் முன்னேற, மற்றதை மறந்து திகழின் கரங்களை ஆதரவாக பிடித்துக் கொள்ள உற்றுத்துணை என அவளும் அவர் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

டிக்கியை திறந்து லக்கேஜ்களை தூக்கி எறிந்தவன்.டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

தாய்காக முன்னேறுக்கை கதவை திறக்க,வந்து அமர்ந்ததோ அவன் சற்று நேரம் முன்பு தாலி கட்டிய மணவாட்டி.

தாய் பின் இருக்கையில் அமர்வதை கண்டு, "மா என்ன இது ஒழுங்கா வந்து முன்னால் உட்காருங்க" என்று அதட்டலாக கூற, திகழ் அவன் கத்தலில் உடல் தூக்கி போட அதிர்வுடன் அவனை பார்த்தாள்.

கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன் "ஒழுங்கா போய் பின்னால் உட்காரு".

அதில் ஒரு விசும்பலுடன் அவள் கதவை திறக்க போக," திகழ் நகரதே" என்று அன்னபூரணியின் குரல் கட்டளையாக ஒலித்தது.

அதில் ஆத்ரேயன் தாயையும் அவளையும் ஒருசேர முறைக்க இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு புரியாமல் விழித்தாள்.

" கண்ணா இனி உன் பொண்டாட்டி தான் உன்கூட உக்காருவா ".

"மா கோபத்தை ஏத்தாதீங்க. வரும்போது என் கூட ஒண்ணா தானே வந்தீங்க.ஒழுங்கா வந்து முன்னால் உட்காருங்க"

"அதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னால இப்போ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. உன்னோட மொத்த அட்டென்ஷனும் உன் பொண்டாட்டி மேல தான் இருக்கணும்".

" மா அதெல்லாம் எனக்கு தெரியாது ஒழுங்கா வந்து உட்காருங்க".

"டேய் உன் அப்பா கூட கார்ல போகும்போது நான் எங்கடா உக்காருவேன்".

"ஆமா முன் சீட்டில் தானே உக்காருவீங்க அதேதான் இப்பயும் சொல்றேன். வந்து முன்னால் உக்காருங்க" என்று அவனுக்கான பாயிண்டை பிடிக்க,அவன் தாயோ ஒரு படி மேலே சென்று,

" அதேதான் கண்ணா. புருஷன் கார் ஓட்டும் போது பொண்டாட்டி தான் பக்கத்தில் உக்காரனும். குழந்தையா இருந்தாலும் பின்னால் தான். காரணம் பொண்டாட்டிக்கு தான் முன்னுரிமை. முன்னிறுக்கை. இப்போ உனக்கு பொண்டாட்டி வந்தாச்சு. வாயை மூடிட்டு ஓட்டுடா" என்று விட்டு அவர் உண்ட மயக்கத்தில் கண்களை மூடி தளர்வாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

" ரெண்டு மணி நேரத்தில் ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு மாற்றம் " என்று சலித்தபடியே காரை இயக்கினான்.

திகழ் பார்வையோ வீட்டின் வாசலை நோக்கியது.அது வெறுமையாக இருக்கவே இதழ்களில் விரக்தி புன்னகை.




 

kalaisree

Moderator
அத்தியாயம்-03

அந்த ஊரைத் திரும்பி கூட பாராமல் காரை உயர் வேகத்தில் சென்னையை நோக்கி செலுத்தினான். நாலரை மணி நேர நீண்ட பயணம். வழியில் எங்கும் நிறுத்தவில்லை.

அன்னபூரணி தூங்கியது,ஆத்ரேயனுக்கு வசதியாகப் போயிற்று.

நடுவில் ஒரு கணம் கூட மனைவியின் மீது பார்வையை ஆணவன் செலுத்தவில்லை.

அவ்வப்போது அன்னபூரணியை மட்டும் பார்த்துக் கொண்டான்.

திகழ் முட்ட முட்ட முழித்தப் படி அமர்ந்து இருந்தாள்.

களைப்பின் காரணமாக உடல் ஓய்விற்கு கெஞ்சினாலும் மனதின் அலைபுறுதல் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டே உறங்குவது, காரை ஓட்டுபவனுக்கு உறக்கத்தை வரவழைக்கும் என்பதால் தூங்காமல் விழித்திருந்தாள்.

கார் சென்னையில் அவர்களின் பீச் ஹவுஸின் முன் நின்றது.

அப்பொழுதுதான் கண்விழித்த அன்னபூரணி, " கண்ணா இங்கே எதுக்கு வந்திருக்கோம் "என்று புரியாமல் வினாவினார்.

சிறு மௌனத்திற்கு பிறகு, "கொஞ்ச நாள் இங்கே இருக்கலாம்" என்றான் முடிவாக.

" விளையாடுறியா பா. கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்குப் போகாமல் இங்கே எதுக்கு. கல்யாணம்தான் அவசரகதியில் நடந்தது. திகழ் முறையாக நம்ம வீட்டுக்குள் நுழையணும்னு ஆசைப்படுறேன். ஆனால் நீ பீச் ஹவுஸிற்கு கூட்டி வந்திருக்க. இதெல்லாம் நல்லா இல்லை பா" என்று தன் பிடித்தமின்மையைக் காட்டினார்

"அம்மா ப்ளீஸ் சென்டிமென்ட்னு சொல்லிப் படுத்தாதீங்க.இப்போ வீட்டுக்கு போனால் நியூஸ் ஸ்ப்ரேட் ஆகிடும்".

"ஏன்டா நீ என்ன பெரிய ஹீரோவா டைரக்டர் தானே. என்ன பெருசா நியூஸ் ஸ்ப்ரேட் ஆக போகுது. அப்படியே ஆனாலும் இப்போ அதில் என்ன குறை. கல்யாணமானது மத்தவங்களுக்கு தெரிய வேண்டாமா?.என்ன முடிவில் இருக்க நீ" என்று படபடத்தார்.

மனமோ பலவிதமாகக் கற்பனை செய்தது. திகழை தன் மகன் மறுத்து விடுவானோ என்று இதயம் முரசு கொட்ட ஆரம்பித்தது.

அவர் கூற்றில்," அம்மா மூச்சு விடாமல் பேசாதீங்க " என்று அவரைக் கடித்தவன் .

பெருமூச்சுடன் தன் மனைவியை பார்க்க, அவளோ யாருக்கோ வந்த விருந்துப் போல் வெளியில் பார்வையை பதித்திருந்தாள்.

அதில், அவளை ஆழ்ந்து நோக்கி விட்டு,"மா எனக்கு கொஞ்சம் டைம் தேவை" என்றான்.

"அது இல்லை டா " என்று மேலே கூற வந்தவரை தடுத்தவன்.

" அந்த வீட்டில் வேலைக்காரங்க செக்யூரிட்டிஸ் இருப்பாங்க. நேரடியா எதுவும் கேட்கவில்லை என்றாலும் பார்வை நம்ப மேல் தான் இருக்கும். யாராவது நியூசுக்கு சொல்லவும் சான்ஸ் இருக்கு. அதெல்லாம் பேஸ் பண்ண இப்போ என்னால் முடியாது. நான் செம டயர்டா இருக்கேன்"

"என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்க. ப்ளீஸ் இதுக்கு மேல் ஆர்கியூ பண்ணாதீங்க மா "என்று அவன் இறுதியில் கோபத்துடன் முடிக்கவும் அதற்கு மேல் அன்னபூரணி பேசவில்லை.

ஆத்ரேயன் அடங்கும் ஒரே இடம் தாய் என்றாலும் அதற்கும் அளவு உண்டு.

இன்று தன் மகனை அதிகம் படுத்தி விட்டோம் என்பதை உணர்ந்தவருக்கு அவன் பொறுமையின்மை புரிய,தயக்கத்துடன் திகழை பார்க்க அவள் இயல்பாக தான் இருந்தாள்.

ஆனாலும் மனம் கேட்காமல்," திகழ் உனக்கு ஓகேவா "என்றதும் புரியாமல் விழித்தாள்.

அவள் நினைப்பதா நடக்கிறது. வாழ்க்கை கூட்டி செல்லும் திசையில் பயணிக்கிறாள்.இப்பொழுது மட்டும் என்ன கருத்து சொல்ல என்று அவள் மௌனம் காக்க,

"மா அவளே புதுசா இப்போ தான் வந்திருக்காள். அவள் கிட்ட கேட்டால் என்ன தெரியும். நீங்க தான் கூட இருக்க போறீங்க.பார்த்துக்கோங்க" என்று விட்டு அவன் வீட்டிற்குள் நுழைய, செக்யூரிட்டி பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டார்.

திகழின் கரம் பற்றி அழைத்து வந்த அன்னபூரணிக்கு அனைத்தும் சீராக நடந்து விட வேண்டுமே என்ற எண்ணம் பெரிதாக இருக்க மனம் கேட்காமல், அவளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆரத்தி எடுத்து முறையாக உபசரித்து மகன் கைப்பற்றி வரவேண்டிய மருமகள் தனியாக வருவது மனதை சங்கடப்படுத்தியது.

மஞ்சள் நிற விளக்கு ஒளியில் சிவலிங்கம் காட்சி அளிக்கவே, மனம் சிறிது சமன்பட, " எல்லாம் நல்லா நடக்கணும்னு வேண்டிகிட்டு விளக்கு ஏத்துமா " என்று தீப்பெட்டியை கையில் கொடுத்தார்.

அவளின் இஷ்ட தெய்வம் தான். ஆனால் இப்பொழுது மனம் வெறுமையாக இருக்க வேண்ட தோன்றாமல் அன்னபூரணியின் கூற்றுக்கு இணங்க, கண்களை மட்டும் மூடி திறந்தவள். நிர்மலமான மனத்துடன் விளக்கு ஏற்றினாள்.

விளக்கு பிரகாசமாக எரியவும் அன்னபூரணியின் இதழ்களில் புன்னகை பரவியது.

"அம்மா ஐயா சொன்ன பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்" என்ற செக்யூரிட்டியின் குரலில் திரும்ப, ஒரு வாரத்திற்கு தேவையான
மளிகை பொருட்கள் காய்கறிகள் அவர் கையில் இருக்கவும், "வெச்சிட்டு போங்க".

" இப்போ சமைக்க முடியாது.நான் ஆர்டர் பண்ணி விடுறேன் ப்ரஷ் ஆகிவிட்டு சாப்பிடு திகழ் "என்றவர்.

ஒரு அறையை காட்ட, அவள் தயக்கத்துடன் நின்றாள்.

"என்னம்மா" என்று பரிவுடன் வினாவ," டிரஸ் மாத்தணும்" என்றாள் சங்கடமாக.

அவளின் பெட்டியை தேட விருந்தினர் அறை வெளியே வைக்கப்பட்டு இருக்கவும் சங்கடமாக எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவர்.

"இதோ இங்கே இருக்கு மா" என்று அவரே எடுத்து அவள் கையில் கொடுத்தார்.

மென் சிரிப்புடன் தனக்கு அளிக்கப்பட்ட அறைக்குள் சென்று முதலில் குளித்து உடை மாற்றியவள். ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கண்டு பெருமூச்சு விட்டாள்.

"வாழ்க்கை எதை நோக்கி என்னை இழுத்துட்டு போகுதுனே தெரியலை. எப்பயும் நான் கேட்கிறது தைரியத்தை மட்டும் தான்.அதை அந்த தைரியத்தை என்னை இழக்க வச்சிடாதீங்க" என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டவள்.தலைவாரி பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

டைனிங் ஹாலில் ஆத்ரேயன் உண்டு கொண்டிருந்தான். அதில் இன்னும் தயக்கம் உண்டாக அப்படியே நின்று விட்டாள்

பரிமாறிக் கொண்டிருந்த அன்னபூரணி அவளை கவனித்து,"ஏன் மா நின்னுட்டு இருக்க வந்து உட்காரு" என ஆத்ரேயன் அருகே இருக்கையை காட்ட,

அதில் தாயை ஒரு கணம் பார்த்து விட்டு உணவில் கவனத்தை செலுத்தினான்.

தயக்கத்துடன் அமர்ந்து அளவான உணவுடன் எழுந்து விட்டவளை கண்டு, " அவ்வளவுதானா. போதுமா" என்று அன்னபூரணி ஆச்சரியமாக வினாவ,

" இல்லை அத்தை பழகிடுச்சு. இதுவே போதும் "என்றவளை இப்போது ஆத்ரேயன் வித்தியாசமாக பார்த்தான்.

கை அலம்பிவிட்டு அவள் தயக்கமாக நிற்க," திகழ் இது உன் புருஷன் சுயமா சம்பாதிச்சு வாங்குன வீடு. தயக்கம் இல்லாமல் இரு " மகனுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகவே கூற, அதில் திகழ் சங்கடமாக நெளிந்தான்.

ஆத்ரேயன் தாயை அழுத்தமாக பார்த்தபடி தனது அறைக்கு சென்று அடைந்தான்.

" ஏன் அத்தை " என்று சங்கடமாக அவள் கேட்க, "அதெல்லாம் அவன் ஒன்னும் நினைக்க மாட்டான். நீ போய் தூங்கி ரெஸ்ட் எடு இல்லை துணைக்கு வரவா "என்றதும்,

" இல்ல அத்தை. தனியா படுத்து பழக்கம் தான்" என்று புன்னகையுடன் கூறியவள். தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.

மீண்டும் சிவலிங்கத்தை நோக்கியவர்.எல்லாம் சீராக மாற வேண்டும் என்று வேண்டிய படியே மற்ற வேலைகளை கவனித்தார்.

ஆத்ரேயன் முதல் மூன்று படங்களுக்கான சம்பளத்தை வைத்து தான் இந்த பீச் ஹவுசினை தனது விருப்பத்திற்கு ஏற்றபடி கட்டினான்.

முழுக்க முழுக்க அவனின் உழைப்பு என்பதால் இந்த வீடு எப்பொழுதுமே அவனுக்கு பிடித்தம் மற்றும் உணர்வுடன் கலந்தது.

மகன் பெரிய வீட்டிற்கு அழைத்து செல்லாமல் இங்கு வந்ததற்குக் கோபம் கொள்ளாமல் அவர் இருந்ததற்கு கூட காரணம் அதுதான்.

பலவிதமான யோசனைகள் அடுத்து என்ன என்று எதிர்காலம் பற்றிய கேள்வி என்று பலவித குழப்பங்கள் மூவரின் முன்னால் இருந்தாலும்,உண்ட உணவின் காரணமாக உறக்கம் கண்ணை சுழற்ற முதலில் நித்ரா தேவியை சரணடைந்தனர்.

மதியம் மூன்று மணிக்கு படுத்தவள் ஆறு மணிக்கு தயாராகிய வெளியே வர அன்னபூரணி இரவு உணவுக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தார்.

" நானும் ஹெல்ப் பண்ணவா" என்றதும் காய்கறிகளை கொடுக்க இலாவகரமாக வெட்டியவளை ஆச்சரியமாக பார்த்தவர்.

அவளிடம் பேச்சை கொடுக்க, திகழும் மற்றதை நினைக்காமல் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

சமையலும் விரைவாக முடிந்தது.

சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டக் கதைகளைப் பேச ஆரம்பித்தனர்.

மணி ஒன்பதை கடக்க, "வா மா சாப்பிடலாம்" என்றதும் அவள் தயக்கமாக ஆத்ரேயன் அறைப்பக்கம் பார்வையை பதிக்க, அன்னபூரணிக்கு மனம் நிறைந்தது.

" அவனே எழுந்து வருவான். தூக்கத்துக்கு நடுவில் எழுப்பினால் கத்துவான். அவனுக்கு காத்திருந்தால் வேலைக்கு ஆகாது. நேரத்திற்கு சாப்பிடணும் இல்லனா அதுக்கும் சண்டைதான் போடுவான்".

அவளும் தயக்கம் நீங்க, இருவரும் உண்டு முடித்தனர்.

உணவை முடித்ததும் அறைக்கு போக போனவளை தடுத்து ஒரு புத்தகத்தை தந்து அமர வைத்துக் கொண்டார்.

சில நிமிடங்கள் கடக்க, புத்தகத்தின் பக்கங்களை திருப்பியவள்.ஒரு பெருமூச்சுடன், "அத்தை ஏதாவது என்கிட்ட பேசணுமா?".

அவளிடம் பேசுவதற்காகக் காத்திருந்தவர்.அசட்டு சிரிப்பு சிரிக்க,"சொல்லுங்க அத்தை என்கிட்ட என்ன தயக்கம் " என்றாள் இதமாக,

அதில் தைரியம் வரப்பெற்றவர்.

"இந்த கல்யாணம் எதிர்பார்க்காமல் நடந்ததுதான். உன் விருப்பம் கேட்காமல் திடீரென முடிவெடுத்து எல்லாம் செஞ்சுட்டோம். அந்த நிலையில் என் தம்பியை அப்படி பார்க்க முடியலை. அவன் மேல் வருத்தம் இருந்தாலும் சபை முன்னால் கூனிக் குறுகி நின்ன போது பார்க்க முடியலை".

"கௌரவத்தை காப்பாத்திக்க உன் மனசில் இருந்த எதிர்பார்ப்புகளை கொன்னுட்டோமா, அந்தப் பையனை பற்றி நல்லவிதமா யாரும் சொல்லலை இருந்தாலும் உன் மனசில் ஏதாவது எண்ணம் இருந்ததாம்மா "என்று மறைமுகமாக அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் மீது விருப்பம் இருந்ததா என்று கேட்டார்.

இப்பொழுது அவள் வாழ்க்கையோடு மகனின் வாழ்க்கையும் பிணைந்து விட்டது.எனவே அச்சத்துடன் வினாவினார். அவர் மகனின் வாழ்க்கையும் முக்கியமல்லவா.

சில கணங்கள் மௌனத்தில் கழிய," அந்த மாதிரி எந்த எண்ணமும் இதுவரை யார் மேலும் வந்ததில்லை அத்தை. நடக்க இருந்த கல்யாணம் என்னோட விருப்பம் இல்லை. அப்பா சூழ்நிலை கல்யாணம் பண்ணிக்க சொன்னார் சம்மதிச்சேன். மத்தபடி எந்த எண்ணமும் இல்லை "என்று அவள் தெளிவாக விளக்கவும் அன்னபூரணியின் மனம் லேசானது.

ஒப்பனை இல்லாத ஓவியமாக இருந்த பெண்ணவளை வாஞ்சையாக பார்த்தவர்.இருவரின் வாழ்க்கையும் மலர செய்யுங்கள் என இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.




 

kalaisree

Moderator
அத்தியாயம்-04

பால்கனி வழியாக வீசிய மெல்லியப் பனி காற்று ஆணவனை உணர்வடைய செய்தது.

நீண்ட நேரமாக லேப்டாப்பில் மூழ்கி இருப்பது புரிய, கழுத்தை தேய்த்தவாறு நிமிர்ந்தவன்.தான் எழுதியக் கதையை சேமித்து விட்டு லேப்டாப்பை மூடினான்.

காலையிலிருந்து நோட்புக்கில் குறிப்புகளை எழுதுவதும், திருப்தியாக இருந்தவற்றை லேப்டாப்பில் பதிவேற்றுவதும் முழுக்க தன் பணியில் மூழ்கிப் போனான்.

நோட்பேடில் எழுதியதில் பிடிக்காததை தூர கிழித்து போட்டதில்,அவன் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் சுருண்ட காகிதங்களாக கிடக்க, வேலையாட்களை அழைக்காமல் தானே அதனை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான் .

இன்றைய மனநிலைமைக்கு வேண்டாம் என்று தூக்கிப் போட்டாலும், எதிர்காலத்தில் உதவும் என்று எப்பொழுதுமே தான் எழுதிய குறிப்புகளை சேகரித்து வைப்பான்.

சோம்பலாக இருக்கவே ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, உடனே சமையலறை இன்டர்காமிற்கு தொடர்பு கொண்டான்.

மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டாலும் மௌனம்.

அதை கருத்தில் கொள்ளாமல், "ஸ்ட்ராங்கா ஒரு காபி" என்று விட்டு வைக்க, அடுத்து ஐந்து நிமிடத்தில் கதவு மெல்லிதாக தட்டப்பட்டது.

கம்மிங் என்றபடி எழுந்தவன்.

காபி கப்புடன் நின்றிருந்த தன் திடீர் மனைவியை கண்டு ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தினான்.

அப்பொழுதுதான், அவள் வாசலிலே நிற்பது கண்டு வார்த்தைகள் இன்றி தலையை மட்டும் உள்ளே வா என்று அசைத்தான்.

அவள் உள் நுழைவதைக் கண்டு வேறு புறம் திரும்பி கொண்டவன். சோம்பல் முறித்தான். காபியை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து அகல பார்த்தவளைக் கண்டு, " நில்லு " என்றான்.

ஒரு வாரம் சவரம் செய்யப்படாத தாடியை தேய்த்தவாறு அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளவெடுத்தான்.

சந்தன நிறப்புடவை அணிந்து மெல்லிய தங்க நகைகளுடன் பளிச்சென்று இருந்தாள். நீண்ட கூந்தலை மல்லி சரம் மறைத்தது.

அனைத்திற்கும் மேலாக அவன் கட்டிய தாலி மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று பல்லைக் காட்டியது.

அதை முறைத்தபடி அவளை நோக்கி வந்தவன், சிறு இடைவெளி விட்டு நின்று கொண்டான்.

அவளோ அவன் அருகில் வந்ததுமே தலை குனிந்து கொண்டாள்.

தொண்டையை செருமியபடி அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட, அவள் இன்னும் தரை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு ஒரு பெருமூச்சுடன், " எனக்கு இந்த மேரேஜ், கமிட்மெண்டில் சுத்தமா விருப்பமில்லை " என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

அவளிடம் அவன் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இல்லை.

அப்படியே அவள் முகம் மாறாமல் நின்று இருக்க, கடுப்புடன், " திரும்ப சொல்ல வைக்காதே.எனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பம் இல்லை. ஏத்துக்கவும் முடியாது இங்க இருக்கிறதே மூச்சு முட்டுது. என்ன புரியுதா" என்று அதட்டலாக கேட்க, தலை மட்டும் மெல்ல அசைந்தது.

எந்தவித உணர்வுகளும் இல்லாமல் சிலை போல் இருப்பவளை அழுத்தமாகப் பார்க்க, அவளும் அவனை கடுப்பேற்றியது போதும் என்று எண்ணியது போல் அவனைப் பார்த்தாள்.

அப்பார்வையில்,'இப்போது என்ன' என்ற பாவனை மட்டும் தான் இருந்தது.

'எங்க அம்மாவை விட,இவ ரொம்ப என்னை டார்ச்சர் பண்ணுவா போலயே' என்று எண்ணியவன்.

" வந்து சேர்வதெல்லாம் இப்படியே இருக்கு" என்று வாய்க்குள் முணுமுணுத்தும் கொண்டான்.

அதற்கும் அதே அப்பாவி பாவனை தான்.

"காட் இந்த ரியாக்ஷன மாத்து" என்று அவன் கோபத்துடன் அதட்டினான்.

அவளோ," இப்போ நான் என்ன பண்ணனும்" என்று அவன் அதட்டலால் சிறிதும் பாதிப்பு இல்லாத சாந்தமான குரலில் கேட்க,

"என்ன பண்ணணுமா..... தாயே நீ எதுவுமே பண்ண வேண்டாம்.கல்யாணம்னு என் தலையில் மிளகாய் அரைத்தது வரை போதும். என் அம்மா பிளான் எல்லாம் எனக்கு நல்லா தெரியும். அவங்க கூட கூட்டு சேர்ந்து என்னை நெருங்க முயற்சி பண்ணா சாவடிச்சிடுவேன். புருஷன் என்று அட்வான்டேஜ் எடுத்தினால் பல்லை கழட்டி கையில் கொடுத்துடுவேன். உன்னை தலைகீழாகக் கட்டிப்போட்டு அடிச்சாலும் உன் புருஷன் நான் என்பதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. என் பேரை நீ எங்கேயுமே யூஸ் பண்ண கூடாது" என்றான் கட்டளையாக.

அவளோ எதனையோ யோசிப்பதை கண்டு, " என்ன புரியுதா" என்றான் இன்னும் சத்தமாக,

" அதில்லை உங்க பேர் என்ன "என்று அவன் முகம் பார்த்து கேட்க,

" என்ன சொல்ற என் பெயர் உனக்கு தெரியாதா..... சும்மா ஆக்டிங்...."என்று நக்கலாக கூறிக்கொண்டு வந்தவன்.

அவள் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு, " என்ன உண்மையா... என் பேரு கூட உனக்கு தெரியாதா? " என்று அதிர்ச்சியுடன் கேட்டிருந்தான்.

அவளோ முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, இல்லை என்று தலையசைக்க, ஓ காட் என்ற தலையை அழுத்த பற்றி கொண்டு அவளைப் பார்க்க,அவள் இன்னும் யோசிப்பதை கண்டு இப்பொழுது என்ன குண்டு வரப் போகிறதோ என்று பார்க்க,

"உங்க அம்மா நீங்க ஏதோ படம் எடுப்பீங்கன்னு சொன்னாங்க.போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கீங்களா? "என்று கேட்டதில்,இடப்பக்க நெஞ்சை அழுத்தமாக பற்றி கொண்டவன்.

"ஒழுங்காக இங்கே இருந்து போ... போடி" என்று கத்த, "இல்லை காபி " என்ற அவள் தயங்க," உங்க அப்பன் அம்மையப்பன் தலையில் ஊத்து போடி முதலில் நீ" என்று அவள் கையை பற்றி தர தரவென்று இழுத்து வந்தவன்.

அறையின் வெளியே தள்ளிவிட்டு கதவை அழுத்த சாற்றி இருந்தான்.

திகழ் ஒன்றும் புரியாமல் மூடிய கதவை பார்த்தபடி கீழே வர, அவளுக்காகவே காத்திருந்த அன்னபூரணி, "என்ன ஓகேவா "என்று அவள் கை பிடித்தபடி ஆர்வமாக கேட்க, அவன் தந்த அதிர்விலிருந்து விலகாமல்," என்ன அத்தை கேக்குறீங்க "என்று புரியாமல் திகழ் வினவ,

"அடியே காபியை கையில் கொடுத்து பக்கம் பக்கமா வசனம் சொல்லிக் கொடுத்தேனே.எதுவும் ஞாபகம் இல்லையா" என்றதும் அவள் புரியாமல் விழிக்க,

"சரியான மக்கு பொண்ணா இருக்க. நான் உனக்கு பண்ணிவிட்ட அலங்காரத்துக்கும் இந்த மல்லிகை பூவுக்கும் நான் சொல்லிக் கொடுத்த டயலாக்கை யூஸ் பண்ணி இருந்தால், அவன் இந்த நேரம் உன்னை சுவிட்சர்லாந்துக்கு கூட்டி போயிருப்பான்" என்று புலம்பியவர்.

"எங்க பெத்ததும் தத்தியா இருக்கு, அதை கட்டிக்கிட்டதும் தவக்களையா இருக்கே "என்று ஒரு புறம் புலம்ப, அவரை புரியாமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து கையில் ட்ராலி பேக் உடன் ஆத்ரேயன் மாடிப்படி இறங்கி வந்தான்.

மகன் வரும் கோலம் கண்டு மருமகள் புறம் திரும்பி ," அடி கள்ளி என்கிட்டே சொல்லலை பாரு. என்ன வெக்கமா. இருக்கட்டும் இருக்கட்டும் புதுசா கல்யாணம் ஆனவங்க தானே.எக்ஸ்ட்ரா நாலு பிட்டு போட்டியா. இவ்வளவு வேகமா வரான் "என்று காலை தரையில் தேய்த்தபடி நகம் கடிக்க,

வந்த ஆத்ரேயன் தாயின் பாவனையில்," என்னம்மா ஆச்சு வயிற்றுக்கு சேராதது ஏதாவது சாப்பிட்டீங்களா" என்றதும்,

அன்னபூரணி, "போடா படவா.எப்பவும் விளையாட்டு தான் "என்றார் வெட்கம் கலந்த புன்னகையுடன்.

அதில் கடுப்புடன் தாயையும் மனைவியையும் பார்க்க, அன்னபூரணியே,"சரி சரி போய் உன்னோட பெட்டியை எடுத்துட்டு வா" என்று அவளை பிடித்து தள்ள,

" குட் டிஷ்யூஷன் நான் வரதுக்குள்ள இவளை பேக் பண்ணி அனுப்பி வைங்க" என்று விட்டு அவன் ட்ராலி பேக்கை நகர்த்த அதனை எட்டி பிடித்த அன்னபூரணி, " மருமகள் வரவரையும் வெயிட் பண்ணுடா" என்று சலுகையாக கடிந்தார்.

"அவள் வரும் வரை நான் எதுக்கு வெயிட் பண்ணனும். நான் என்னோட கார் எடுத்துட்டு போறேன் அவளை டிரைவர் கூட அனுப்பி வைங்க"

"டேய் பைத்தியமா டா நீ.ஹனிமூன் சேர்ந்துதானே போகணும். நீ ஒரு காரில் அவ ஒரு காரில் என்ன டா இது கேட்க நல்லாவா இருக்கு" என்று அவனை கடிந்தவர்.

மருமகள் அப்படியே நிற்பதைக் கண்டு, " நீ என்ன அப்படியே நிக்கிற.போய் உன்னோட டிரெஸை பேக் பண்ணி எடுத்துட்டு வா" என்றார்.

அவள் இறைஞ்சலுடன் அன்னபூரணியை பார்க்க, மருமகள் மகனுக்காக பயப்படுகிறாளோ என்று எண்ணி, "அப்பப்ப அவங்க அப்பா புத்தி வந்துரும். நீ போ "என்று சமாதானப்படுத்த அதில் பல்லை கடித்தவன்.

"அம்மா இதுக்கு மேலே முடியாது இட்ஸ் என்ஃப். அவளை பேக் பண்ணி அனுப்புவீங்களோ இல்லை நாலா மடிச்சு உங்க முந்தாணியில் சுருட்டி வைப்பீங்களோ .அது உங்க பிரச்சனை.எனக்கு நாளையிலிருந்து ஷூட்டிங்.நான் அதை கவனிக்க போறேன். இன்னும் ரெண்டு மாசத்துக்கு என்னை காண்டாக்ட் பண்ணாதீங்க. நானே டைம் கிடைக்கும்போது கூப்பிடுறேன்" என்று விட்டு நகர பார்க்க இன்னும் அழுத்தமாக அவன் ட்ராலி பேக்கை பற்றிக் கொண்டார்.

அதில் அவன் அழுத்தமாக தாயை பார்க்கவும், "டேய் கண்ணா என்னடா சொல்ற. இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்க நாள் இருக்கே" என்று அவன் கோபம் உணர்ந்து இறைஞ்சலுடன் வினவ,

" போதும். நான் ரிலாக்சேஷன்காக லீவு எடுத்ததும் போதும். நீங்க என் தலையை உருட்டினதும் போதும்" என்று விட்டு திரும்பியும் பாராமல் அவன் செல்ல,

அன்னை மகன் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்தவளின் கைப்பற்றி இழுத்து கொண்டு மகனின் பின்னால் ஓடினார்.

இப்பொழுது மூவருமே வீட்டிற்கு வெளியே வந்து விட்டனர்.

பேக்கை டிக்கியில் போட்டு விட்டு முன்னால் வர அவனின் தாயோ கதவை மறைத்தபடி நிற்பதை கண்டு," டென்ஷன் படுத்தாதீங்க. நகருங்க "

"டேய் டேய். நான் என்ன வேணும்னா பண்ணினேன் "

"இல்லை நான் வேண்டாம்னு பண்ணீங்க "என்று கடுப்புடன் மொழிய,

" சூழ்நிலை கண்ணா " என்று அவர் மேலே விளக்க வர, "உங்க சூழ்நிலையும் வேண்டாம் சுண்டக்காவும் வேண்டாம் முதலில் வழி விடுங்க".

" மறுபடியும் என்னை தனியா விட்டுட்டு போறியா" என்று பாவம் போல் கேட்க,

கண்ணில் மாட்டி இருந்த கூலரை கழட்டி டி -ஷர்டில் மாட்டியவன்.

" அதுதான் இல்லாத தகிடுதத்தம் பண்ணி மருமகளை கூட்டி வந்துட்டீங்களே.அதான் என் பொண்டாட்டி.... உங்களை பார்த்துக்க இருக்காளே போதாதா" என்று அவன் நக்கல் மிகுந்த குரலில் கேட்க,

"கண்ணா இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு.அதுக்குள்ள தனியா போகணுமா " என்று விளையாட்டு தனத்தை விட்டு விட்டு அவர் இயல்பான வருத்தத்துடன் கேட்க, அவரின் அந்த குரலுக்கு இளகி கோபத்தை தள்ளி வைத்துவிட்டு,

" மா என்னை போட்டு பிரஷர் பண்ணாதீங்க... ஐ நீட் டைம். இந்த வீட்டில் அது கிடைக்காது. நான் யோசிக்கணும் என்னை கொஞ்ச நாள் ஃப்ரீயா விடுங்க. அப்புறம் தனியா எல்லாம் விட்டுட்டு போகலை. இப்போ உங்களை பார்த்துக்க உங்க மருமகள் இருக்கா. என்ன பார்த்துப்ப தானே" என்று கேள்வியை திகழை நோக்கி செலுத்த, வேகத்துடன் தலையை ஆட்டினாள்.

இவளோட என்று மனதிற்குள் அவளை கடிந்து கொண்டவன். தாயைப் பார்க்க அவர் கலக்கத்துடன் தன்னை பார்ப்பதை கண்டு "அம்மா மறுபடியும் ஆரம்பிக்காதீங்க "என்று அவர் தோளில் கையை போட்டுக் கொண்டவன்.

"புரொடக்சனில் இருந்து நேத்து தான் கால் வந்தது.அடுத்த இரண்டு மாதத்தில் ஷூட்டிங் எல்லாத்தையும் முடிக்க ப்ரஷர்.
ஒரு ரெண்டு மாசம் என்னை விடுங்க" என்றான் அழுத்தமாக.

அன்னபூரணியும் அதற்கு மேல் முரண்டு பிடிக்காமல் நகர காரில் ஏறியவன்.

தாய்க்கு கையைக் காட்டி விட்டு அருகில் இருந்தவளை பார்க்க,அவளோ அன்னபூரணி சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

'நல்லா அமைஞ்சிருக்காங்க' என்று எண்ணியபடிக் காரை செலுத்தினான்.
 

kalaisree

Moderator
அத்தியாயம்-05

"என்ன இன்னைக்கு சார் ரொம்ப உக்கிரமா இருக்கார் போல," என்ற சத்தியனின் கேள்விக்கு அவனை முறைத்த விமல்,

"ஏண்டா, நீ வேற. இன்னைக்கு எடுத்த நாலு சீனையும் கேன்சல் பண்ணிட்டாரு. சீன் நல்லா இல்லைன்னு ஒரே திட்டு. இன்னைக்கு மிட்நைட் ஆனாலும் ஷூட் முடியாது போல," என்று புலம்பலுடன் தன் மனப் புழுக்கத்தையும் வெளிப்படுத்தினான், ஆத்ரேயனின் அசிஸ்டன்ட் டைரக்டர்களில் ஒருவனான விமல்.

"ஷாட்டிற்கு எல்லாம் ரெடியா?" என்ற ஆத்ரேயனின் குரலில் ஏற்கனவே விரைந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரொடக்‌ஷன் டீம் இன்னும் தங்களின் வேகத்தை அதிகரித்தனர்.

நாயகிக்கான டயலாக் பேப்பரை வைத்துக் கொண்டிருந்த விமலோ, ஏமாற்றத்துடன் அதனைப் பார்த்தான்.

தெலுங்கில் பிரபல நடிகை. தமிழ் ஒழுங்காக வராமல் அவனின் உயிரை எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஏதோ நடிப்பு நன்றாக இருப்பதால் ஆத்ரேயன் அவளின் இந்தக் குறையை கண்டுகொள்ளாமல் இருக்கிறான்.

ஆனால், இன்று இருக்கும் கடுப்பிற்கு எப்படியும் நாயகியின் மீது வரும் கோபத்தை தன் மீதுதான் இறக்குவான் என்ற எச்சரிக்கை உணர்வு எழுந்ததில், நாயகியிடம் ஐம்பதாவது முறையாக டயலாக் பேப்பரை வாசித்துக் காட்டினான்.

"ஷாட்... கேமரா... ரோலிங்... ஆக்‌ஷன்!" என்ற ஆத்ரேயனின் குரல் ஒலித்ததும், ஒட்டுமொத்த டீமும் அமைதியாகிவிட்டது.

கேமராவும் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டது. நாயகி உருக்கமான வார்த்தைகளால் நாயகனுக்குத் தன் காதலைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

கதையில் இது மிக முக்கியமான காட்சி. நாயகிக்கு நீண்ட உரையாடலைக் கொண்ட ஒரே பகுதி இதுதான்.

அனைவரின் முழு கவனமும் நாயகி மற்றும் நாயகனின் மீது இருக்க, ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, "கட்!" என்ற கர்ஜனையில் அனைவரின் கவனமும் அவன் மீது குவிந்தது.

"விமல்!" என்று உச்சபட்ச சத்தத்துடன் அவன் அழைக்க, பதறிக்கொண்டு ஓடி வந்தவன் மீது அழுத்தமாகப் பார்வையை பதித்தான்.

"சார், டயலாக் எல்லாம் மறுபடியும் ஒரு தடவை சொல்லித்தரேன். சாரி சார்," என்றவன் பதற்றத்துடன், நாயகி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டினான்.

கோபத்துடன் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட ஆத்ரேயன், காபியை வரவழைத்துப் பருகினான்.

ஐந்து நிமிடத்தில் மீண்டும் காட்சிக்கான செட் அமைக்கப்பட்டு, கேமரா ஓட ஆரம்பித்தது.

இம்முறையும் கதாநாயகி சாந்தவி மீண்டும் சொதப்ப, கோபம் எல்லையைக் கடந்தது.

"இது எத்தனாவது ஷாட்? என்ன பிரச்சனை உங்களுக்கு?" என்று ஆத்ரேயன் நேரடியாக அவளிடமே சத்தமிட, "சார், டப்பிங்கில் மாத்திக்கலாமே. அவ்வளவுதான் வருது சார்," என்று குழைந்த குரலில் கூறினாள். நாயகிக்கு குடையையும் ஃபேனையையும் பிடித்துக் கொண்டிருந்த நபரை ஆத்ரேயன் முறைத்ததில் அப்படியே விலகினான்.

அவளை அழுத்தமாக பார்த்தபடி,, "அவ்வளவுதான் முடியுமென்றால் இங்கே நடிக்க வந்திருக்கக்கூடாது! டைரக்டர் சொல்வதை உள்வாங்கி நடிக்க முடியவில்லை என்றால், எதற்கு இந்தப் படத்தில் வந்தே ஆகணும்னு பிரஷர் போடணும்? எங்க தலையை உருட்ட வந்துடுவீங்க?. அடுத்த ஷார்ட் ஒழுங்கா வரலைன்னா..." என்று கிட்டத்தட்ட மிரட்டி விட்டு, அவன் கேரவனுக்குள் புகுந்து கொள்ள, சாந்தவிக்கு முகம் கருத்தது.

சாந்தவியின் மேக்கப் ஆர்டிஸ்ட் சாதனா தன் அலங்காரப் பொருட்களுடன் வரவும், தரையை கோபத்துடன் உதைத்துவிட்டுக் கேரவனுக்குள் புகுந்துகொண்டாள்.

"இன்னைக்கு நடு ராத்திரி வரை ஷூட்டிங் இருக்கும் போலயே," என்று நொந்தபடி புரொடக்‌ஷனைச் சேர்ந்தவர்கள் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

நாயகிக்கான கேரவேனில் கொதித்து போய் அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் ரோஸ் பவுடரை சாதனா பூசிக் கொண்டிருந்தாள்.

"கோபத்தை விடு,மா" என்று அவளின் தாயான ஜெயா சமாதானப்படுத்த, "மாம், ஓவரா பேசுறான். எல்லார் முன்னாடியும் எவ்வளவு அசிங்கப்படுத்திட்டான் தெரியுமா? இதுக்காகவா புரொடியூசர் சொன்னதெல்லாம் செஞ்சேன்?" என்று தெலுங்கில் கோபத்துடன் கீச்சுக்குரலில் அவள் கத்த,

காதம்பரி "அமைதியா இருடி" என்று அதட்டிவிட்டு சாதனாவை வெளியேற்றினார்.

"அம்மு, நான் சொல்றதக் கேளு. தெலுங்கிலும் தமிழிலும் உன்னோட மார்க்கெட் ரொம்ப டவுன் ஆயிடுச்சு. இருக்கிற ஒரே ஆப்ஷன், ஆத்ரேயன் பண்ற படத்தில் நடிச்சு மறுபடியும் மார்க்கெட்டை வரவைக்கிறது, இல்லைன்னா, அவர் பொண்டாட்டியாகி லைஃப்ல செட்டில் ஆகுறது."

"மா, சும்மா பக்கத்தில் டவுட் கேட்கப் போனாலும் வல்லுன்னு எரிஞ்சு விழறவன், அவன் என்னை கல்யாணம் பண்ணிப்பானா?" என்று பூசிக் கொண்டிருந்த லிப்ஸ்டிக்கைத் தூர வீசி விட்டு தாயிடம் எகிற ,

"முதலில் இந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்து!" என்று மிரட்டியவர்,

குரலைத் தாழ்த்திக்கொண்டு, "இந்த புரொடியூசரை கைக்குள் கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட்டோம். இதுதான் நமக்கான இறுதி வாய்ப்பு. அதை ஒழுங்கா பயன்படுத்திப் பிழைக்கப் பார், சாந்தவி. ஒரு தடவை சினிமாவில் விழுந்தால் மறுபடியும் வரவே முடியாது," என்று கூறி அவள் தோளில் அழுத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் வெளியேற, கண்ணாடியில் தெரியும் தன் முகத்தையும் உடலையும் கண்டவளின் இதழ்களில் கர்வப் புன்னகை ஒட்டிக்கொண்டது.

"தன்னுடைய அழகுக்கும் இளமைக்கும் விழுகாமலா போய்விடுவான்," என்று எண்ணியவள். கர்வமாக சிரித்துக் கொண்டாள்.

மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட, இம்முறை சாந்தவி தவறு இல்லாமல் செய்து முடிக்க, ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் ஆசுவாசம் அடைந்தது.

அவர்கள் எதிர்பார்த்ததுக்கு மேலே அவள் நடித்திருக்க, ஆத்ரேயனிடமிருந்து ஒரு தலையசைப்பும், "நெக்ஸ்ட் ஷாட் ரெடி பண்ணுங்க," என்ற கட்டளையும் மட்டுமே வந்தது.

சாந்தவி "இந்த ஷூட்டிங் முடிவதற்குள் உன்னை என் வசப்படுத்துகிறேன்," என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

"நாளை காலை 3 மணிக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்," என்று மைக்கில் அறிவுறுத்திவிட்டு ஆத்ரேயன் அங்கிருந்து அகல, அப்பொழுதுதான் மொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் நிதானத்திற்கு வந்தது.

அனைத்தையும் பேக் பண்ணி எடுத்து வைத்து, வேலைகளை முடிக்கவே 11 மணியைக் கடந்திருந்தது.

ஆத்ரேயன் தனக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டலுக்கு வந்தவன் குளித்துவிட்டு உறக்கத்தைத் தழுவினான்.

அடுத்த நாள் இன்னும் பரபரப்பாக ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று மணி நேரத் தொடர் படப்பிடிப்புக்குப் பிறகு அனைவருக்கும் ஓய்வு கிடைக்க, காலை காபியும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

ஆத்ரேயனும் காபியைக் குடித்துவிட்டு, "யாரு கேட்டரிங்?" என்றான்.

"புரொடியூசரோட மச்சான் சார்," என்றதுமே அவனுக்குப் புரிந்து போயிற்று.

அந்தக் காபியை ஒதுக்கிவிட்டு மீண்டும் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

ஒரு மணி போல் மதிய உணவு இடைவேளை விட, உணவுகள் வந்த பாடு இல்லை.

"என்ன ஆச்சு?" என்று ஆத்ரேயன் புரொடக்ஷன் மேனேஜர் இடம் வினவ சத்தியனோ,

, "அவர் கால் பண்ணா எடுக்கவே இல்லை சார்," என்றதும்,

உடனே வேறு ஒரு ஹோட்டலில் அனைவருக்கும் ஆன உணவுகளை ஆர்டர் செய்தான்.

300 பேருக்கான உணவு என்பதால், ஒரே ஹோட்டலில் ஆர்டர் செய்ய முடியாமல் இரண்டு மூன்று ஹோட்டல்களில் கலந்து ஆர்டர் செய்தான்.

புரொடியூசருக்கு உடனே கால் செய்து நடக்கும் குளறுபடிகளைக் கூற, சில நிமிட யோசனைக்குப் பிறகு, "உங்களுக்கு ஏதாவது ஆப்ஷன் இருந்தால் சொல்லுங்க சார், கேட்டரிங் மாத்திடலாம்," என்றார்.

"இதெல்லாம் உங்க சாய்ஸ். என்னோட ஸ்டாப்ஸ் இதனால் பாதிக்கப்படக்கூடாது. எதுவா இருந்தாலும் சீக்கிரம் ரெடி பண்ணுங்க," என்று ஆத்ரேயன் அழுத்தமாக கூறிவிட்டு வைத்தான்.

இரவு ஷூட்டிங் முடிய ஒரு மணி ஆக, களைப்புடன் ஹோட்டலுக்கு வந்தவன், ஒரு குளியலை போட்டுவிட்டு அலைபேசியை எடுக்க, அவன் தாயிடமிருந்து ஏகப்பட்ட அழைப்புகள்.

அவரின் அழைப்புக்கான காரணம் புரிந்தது.

சென்னை வந்து இதோடு 10 நாட்கள் ஆகிறது. முதல் ஒரு மாதம் வட இந்தியாவில் ஷூட்டிங் இருந்தது.

இப்பொழுதோ சென்னையில் இருக்கும் செட்டில்தான் படப்பிடிப்புகள் எல்லாம் காட்சியாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

தாயும் மனைவியும் அவன் கிளம்பிய அடுத்த இரண்டு நாட்களில் பீச் ஹவுஸில் இருந்து தங்கள் வீட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதும் புரிந்தது.

ஆனாலும் கேட்டுக்கொள்ளவில்லை; அவனின் தாயும் இதைப் பற்றி பேசவில்லை.

வாரத்திற்கு இரண்டு முறை "என்ன செய்கிறார்கள்" என்பதை மட்டும் கேட்டுவைத்து விடுவான்.

அன்னபூரணியும் அதற்கு மேல் பேச முயற்சிக்கவில்லை. அது ஒரு மாதிரி உறுத்தினாலும், வேலை பழுவில் அதனைப் புறந்தள்ளிவிட்டான்.

இப்போதும், சென்னை வந்தும் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் ஹோட்டல் அறையிலே தங்கி இருக்கிறான்.

அதைப்பற்றி மேலும் சிந்திக்காமல் லேப்டாப்புடன் ஐக்கியமாகி விட்டான்.

இரண்டு நாட்கள் தொடர் இரவு ஷூட்டிங் என்பதால் அடுத்த இரண்டு நாட்கள் பகலில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான்.

காலை 9:00 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட, அவன் எதிர்பார்த்ததை விட காட்சிகள் அனைத்தும் வேகமாகவும் எடுக்கப்பட்டது. சிறப்பாகவும் வந்தது.

சாந்தவியின் காட்சிகள் கூட அவள் சிறப்பாக செய்து விடவே, அடுத்தடுத்த காட்சிகளில் கவனத்தை செலுத்தினான்.

அவனிடமிருந்து ஏதாவது பாராட்டு வரும் என்று எதிர்பார்த்தவள் சோர்ந்து போனாள்.

11 மணிக்கு பிரேக் விடப்பட, காபியும் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டது.

கேரவனில் அமர்ந்திருந்த ஆத்ரேயனுக்கு காஃபி வர, அதை எடுத்து ஒரு மிடறு பருகியவன்,

"நைஸ்!" என்று மெச்சிக்கொண்டபடி முழுவதையும் குடித்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்தான்.

திவாகர், கதையின் நாயகன். வளர்ந்து வரும் கதாநாயகன். நடித்த ஐந்து படங்களும் வெற்றியைப் பெற்று அவனுக்கு நல்ல மதிப்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தன.

ஆத்ரேயனின் இயக்கத்தில் அடுத்த படம் என்றதும் இன்னும் ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் இப்படத்திற்கு ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

"திவா, இன்னும் ஃபேசியல் எக்ஸ்பிரஷன் காட்டலாம். எதோ ஹோல்ட் பண்ணிட்டு இருக்க மாதிரி இருக்கு. பி ரிலாக்ஸ்," என்றவன் பின்னணியில் நின்று கொண்டிருந்த துணை கதாபாத்திரங்களையும் திருத்த, லைட்டிங்கை சரிபார்க்க, கேமராவில் பதிவாகும் காட்சிகள் அவனது விருப்பத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்று அனைத்தையும் பார்த்து, கேமரா மேன் உடன் உரையாடி அனைத்தையும் சரி செய்து ஷூட்டிங்கை மீண்டும் ஆரம்பித்தான்.

அடுத்து நான்கு மணி நேரம் இடைவிடாமல் காட்சிகள் படமாக்கப்பட்டது. லைட்டிங் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் சோர்ந்து போயினர்.

இறுதியில் ஆத்ரேயன் நினைத்த அளவு காட்சிகள் படமாக்கப்பட்டதும் தான் அனைவரையும் கவனித்தான்.

"காய்ஸ், லஞ்ச் முடிச்சுட்டு பேக்கப் பண்ணிக்கலாம்," என்றதும் அனைவர் முகத்திலும் அத்தனை ஆசுவாசம்.

"நாளைக்கு 5:00 ஓ கிளாக் ஷூட்டிங். சோ என்ஜாய் யுவர் மீல்ஸ்," என்று விட்டு நகர்ந்தவனின் கண்ணில் "அன்னபூரணி கேட்டரிங்" என்ற வார்த்தைகள் விழ, தன் பின்னால் வந்த அசிஸ்டன்ட் விமலைப் பார்க்க,

"ஆமா சார், மேம் கிட்டத் தான் ஆர்டர் கொடுத்திருக்காங்க," என்றதும் தலையசைத்தான்.

ஏற்கனவே சில புரொடக்‌ஷனுக்குத் தாய் கேட்டரிங் வழங்கிக் கொண்டிருப்பது தெரியும் என்பதால் சாதாரணமாகவே இருந்தான்.

அவனுக்கு உணவு எடுத்து வந்து விமல் கேரவனில் கொடுக்க, "நீயும் உட்கார்ந்து சாப்பிடு," என்று விட்டு உணவை சுவைத்தவன்,

"சம்திங் டிஃபரண்ட்," என்று முணுமுணுக்க, அருகில் இருந்த விமல் "என்ன சார்?" என்றான்.

"ஒன்னுமில்ல," என்று விட்டு உணவை முழுவதும் காலி செய்தான்.

கேரவனிலிருந்து வேறு உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவன். பெரும் உணவுப் பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பணியாட்களிடம் பேசிக் கொண்டிருந்த தன் மனைவியை ஆச்சரியம் விலகாமல் பார்த்தான்.

"இவ எங்க இங்கே?" என்று வாய்க்குள் முணுமுணுக்க, அவனின் பின்னோடு வந்த விமல், "பூரணி கேட்டரிங் மேனேஜர் சார். உங்களுக்கு தெரியாததா?" என்றான்.

"ஆமா, தெரியாதுதான்," என்று விட்டு அவளை நோக்கி சென்றான்.


 

kalaisree

Moderator

அத்தியாயம்-06

"மேம் சார் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார் " என்று நடிகர் திவாகரின் அசிஸ்டன்ட் கூற ,சம்மதமாக தலையசைத்தவள்.

ஆத்ரேயன் அவளை நெருங்கும் முன் அங்கிருந்து அகன்றாள் .

"ஓ காட் இவளுக்கு இருக்கு வெச்சிக்கிறேன்" என்று எரிச்சலில் முணுமுணுக்க,அவனை பின் தொடர்ந்து வந்த விமலுக்கு இது கேட்டு விட ,"ஐயோ சார்" என்று அலறி இருந்தான் .

அதில் கடுப்புடன் அவன் புறம் திரும்பியவன் .

"உனக்கு என்ன டா " என்று அதட்ட ,சார் என்று விமல் அவனை அதிர்ச்சியுடன் அழைக்கவும் தான். தான் கத்தியது புரிந்தது .

உடனே தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன். "இப்போ என்ன போய் வேலையை கவனி .போ ஸ்கிரிப்ட் பேப்பரை சாந்தவி கிட்ட கொடுத்து எக்ஸ்ப்ளைன் பண்ணு. நாளைக்கு சின்ன மிஸ்டேக் கூட வரக்கூடாது" என்று ஏவ ,

"சார் பேக்கப் சொல்லிட்டீகளே" என்றான் பாவமாக.

"ஏன் பேக்கப் சொன்னால் வேலை செய்யமாட்டியா?" என்று அதற்கும் எகிற ,

"ஐயோ சார் அப்படியெல்லாம் இல்லை "என்றவன். ஆத்ரேயன் மேலும் கூறும் முன் அங்கிருந்து அகன்றான் .

ஆத்ரேயன் பார்வை செட்டை வட்டமிட்டது .உணவு நேரம் என்பதால் தங்கள் குழுக்களுடன் அவர்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட இடத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருந்தனர் .

சார் சார் என்று கூவியப் படி விமல் வர,என்ன என்று சலிப்புடன் அவனை ஏறிட்டான் .

"சார் சாந்தவி மேம் கிட்ட டயலாக் பேப்பர் கொடுத்து எஸ்பிளான் பண்ணினேன் .அவங்களுக்குப் புரியலையாம் .உங்களைப் பார்க்கணும் சொன்னாங்க " என்று மேல் மூச்சு வாங்க கூறினான் .

"பச் விமல் .இங்கே வர சொல்லு .எல்லாம் நானே தான் சொல்லனுமா?. சின்ன விஷயத்தை கூட ஹாண்டில் பண்ண முடியாதுன்னா எனக்கு எதுக்கு அசிஸ்டன்ட் "என்று கடுகடுத்தான்.

அவனின் குற்றச்சாட்டைத் தாங்கமுடியாமல் ,"சார் நான் பலதடவை எஸ்பிளேன் பண்ணிட்டேன்.உங்களை மீட் பண்ணக் கேட்டப் போது கூட இங்கதான் வர சொன்னேன். ஆனால்,பேக்கப் பண்ணும் போது டஸ்ட் வரும். எனக்கு அலர்ஜி. டைரக்டர் சாரை வர சொல்லுன்னு மறுத்துட்டாங்க "என்றான் பாவமாக .

ஓ என்றப் படி தாடையை தேய்த்தவன் .அசையாமல் நின்று விட ,விமலுக்கு இப்போ என்ன செய்ய என்ற மனநிலைமை தான் .

"சாப்பாடு எல்லாம் ஓகே வா" என்று மௌனம் களைந்துக் கேள்வி கேட்க ,'இதெல்லாம் இவர் கண்டுக்க மாட்டாரே 'என்று எண்ணினாலும்,

"உங்க கேட்டரிங் ஆச்சே.அதில் என்ன சார் குறை " என்று விமல் சிலாகித்து கூற ,ஆத்ரேயன் கேள்வியாக ஒற்றை புருவம் உயர்த்திய விதத்தில் பயந்து போனான்

"சார் உண்மையா தான் சார் "என்றான் அழாக் குறையாக,

"என்னோட மெனு சொல்லிட்டீயா?".

"எஸ் சார்".

"பழைய மெனு வேண்டாம்".

"ஓ மெனு மாத்தணுமா சார் .ஓகே நீங்க சொல்லுங்க நான் மிஸ் .திகழ் கிட்ட இன்போர்ம் பண்றேன் ".

"மிஸ்.." என்று இவ்வார்த்தையை மட்டும் இழுக்க ,

"சார்" என்று புரியாமல் விமல் மீண்டும் கேள்வியாக அவன் முகம் பார்க்க ,மிஸ் என்று அழுத்தமாக அவன் அவ்வார்த்தைகளை உச்சரிக்கப் புரிந்தது.

"ஓ..அவங்க பேர் மிஸ்.திகழினி அம்மையப்பன் சார்"

"சௌண்ட்ஸ் குட் இதையே பாலோவ் பண்ணிக்க சொல்லு" என்று விட்டு அவன் அங்கு இருந்து நகர ,'ங்கே' என்று விழித்தப் படி ,விமல் நின்று விட்டான் .

திவாகரின் கேரவனில்,திகழ் அவன் கூற மெனுவை குறித்து கொண்டு ,அங்கு இருந்து விலக ,திஅவன் போகும் அவளையே பார்த்து கொண்டு இருப்பதைக் கண்ட அவன் ஸ்டைலிஸ்ட் சார் என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

"பல்லைக் காட்டாமல் வேலையை பார்" என்று அவனை அதட்டினான் .

"என்ன மேம் எல்லாம் முடிச்சுதா "என்று கேட்டரிங் சூப்பர்வைசர் சந்தான மூர்த்தி கேட்க,

"இல்லை சார் இன்னும் டைரக்டர், ஹீரோயினி கிட்ட மெனு வாங்கணும் "என்று தன்னிடமிருந்தக் கையடக்க நோட் பேட்டை பார்த்தபடி கூறினாள்.

"பார்த்தீங்களா ராம். முன்னெல்லாம் என்னென்ன வேணும்னு மெனு மட்டும் தான் வரும். இப்போ என்னன்னா ஒவ்வொன்றுக்கும் நாம போய் பார்க்கிறதா இருக்கு" என்று தன் சக ஊழியரிடம் சலித்துக் கொண்டார்.

"அட ஏன் பா இது எவ்வளவு பெரிய ப்ரொடெக்ஷன் தெரியுமா. அதிலிலும் புரொடியூசர், மேடம் கிட்டையே ஷூட்டிங் நடக்க போற 30 நாளும் நீங்க தான் பார்த்துக்கணும்னு ரிக்வெஸ்ட் பண்ணி இருக்காங்க. அதனால் தான் இவ்ளோ கவனிப்பு" என்ற தங்களுக்குள் பேசிக்கொள்ள,அதை காதில் வாங்கிய படி அங்கிருந்து அகன்று ஹீரோயின் கேரவனிற்கு வந்தாள்.

சாந்தாவியின் அசிஸ்டன்ட் இடம் அனுமதி கேட்டு காத்திருக்க, "ஐந்து நிமிடம் கழித்து உள்ளே செல் " என்று விட்டு அவளோ அவசர வேலை என்று அங்கிருந்து சென்றாள்.

கை கட்டிய படி நின்று கொண்டவள். செட்டை ஆச்சரியமாக பார்த்தாள்.

இதுவரை ஷூட்டிங் என்ற ஒன்றை பார்த்ததே இல்லை. இப்பொழுது ஆர்வத்துடன் பார்த்தவள் நேரம் கடந்து விட்டதை உணர்ந்து கதவை தட்ட உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை.

மீண்டும் ஒருமுறை கதவை தட்டி விட்டு திறக்க, அங்கிருந்த ஒற்றை சோபாவில் கையில் ஒரு மாத இதழைப் புரட்டியபடி ஆத்ரேயன் அமர்ந்திருந்தான்.

சத்தம் கேட்டு அவன் நிமிரவும் அவன் முன் சாந்தவி கவர்ச்சிகரமான உடையில் வந்து நின்றாள்.

" பாருங்க சார் எவ்வளவு லூசா இருக்குன்னு.இதை தான் காஸ்ட்யூம் என்று கொடுத்து கண்டிப்பா போடணும்னு உங்க காஸ்டியூம் டிசைனர் சொல்றார். கேட்டால் டைரக்டர் இதைத்தான் அக்சப்ட் பண்ணி இருக்காருன்னு கண்டிக்கிறார். நீங்களே சொல்லுங்க இந்த ட்ரெஸ் எப்படி நான் போடுவேன்" என்று உடலை வளைத்த கொண்டே குழைந்த குரலில் கேட்டாள்.

அதில் முகம் சுளித்து வேறுபுறம் திரும்பியவனின் பார்வையில் திகழ் விழிந்தாள்.

'இவ எதுக்கு இங்கே வந்தாள்' என்று அவளைக் கேள்வியாக பார்த்தான்.

திகழ் பளிங்கு தேகத்துடன் மின்னிக்கொண்டிருந்த சாந்தவியை ஆச்சரியமாக பார்த்தாள்.

ஆத்ரேயன் பார்வை வேறு புறம் இருப்பதை உணர்ந்து திரும்பியவள். திகழை கண்டு அதிர்ந்தாள்.

"யூ இடியட் யாரை கேட்டு உள்ளே வந்த" என்று கத்தியப் படி,ஓவர் கோட்டை போட்டு தன் உடலை மறைத்துக் கொண்டாள்.

அவள் சத்தத்தில் தெளிந்து, "சாரி மேம் உங்க அசிஸ்டன்ட் தான் பைவ் மினிட்ஸ் கழிச்சு உள்ளே போக சொன்னாங்க. நான் டோர் நாக் பண்ணேன்" என்றதும்,

" யூ இடியட்" என்று அவள் கத்தப் போக,விடுங்க என்றவன் அவளை அழுத்தத்துடன் பார்த்தான்.

அதில் சாந்தவியின் இதழ்கள் கப் என்று மூடிக்கொண்டது.

திகழை தலை முதல் கால் வரை அலட்சியமாக பார்த்தப்படி, "என்ன வேணும்" என்று கேட்க,

" பூரணி கேட்டரிங் மேனேஜர் மெனு கேட்க வந்தேன்" என்றதும் தனக்காக உணவை கூற அனைத்தையும் குறித்துக் கொண்டவள்.

"டைரக்டர் உங்களதும் சொல்றீங்களா "என்றதில், சில கணங்கள் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு எழுந்தபடியே, " தேவையில்லை என் வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரும்" என்று கூறியவன் அங்கிருந்து விலக பார்க்க,

" இந்த டிரஸ்" என்று சாந்தவி மீண்டும் கீச்சுக் குரலில் ராகம் இழுக்கவும்,

" நான் இந்த டிரஸ் ஓகே பண்ணலை. கரணும் என்னோட மூவியில் இந்த மாதிரி டிரஸ் எல்லாம் கொடுக்க மாட்டார். நான் அவர்கிட்ட பேசுறேன்" என்றதும்,

தன் குட்டு வெளிப்படும் என்று பயத்தில், "அதெல்லாம் தேவையில்லை நான் அவர்கிட்ட பேசுகிறேன்" என்றவளை விசித்திரமாக பார்த்துவிட்டு,

அவன் திரும்ப அதற்குள் திகழ் அங்கிருந்து சென்று இருந்தாள்.

மூடிய கதவை பார்த்தவன் தன் அருகில் நெருங்கியவளை பார்வையால் தள்ளி நிறுத்தியவன்.

" ஏதாவது டவுட்னா விமல் கிட்ட கேளுங்க " என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியேற, கேட்டரிங் வேன் கேட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.

செட் பிராப்பர்ட்டியை அனைவரும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க," விமல் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிப்பியா" என்றதும்,

" சார் நான் பார்த்துக்கிறேன் "என்றான்.

அதில் தலையசைத்து அங்கிருந்து விடை பெற, சாந்தவி தாயோ மகளை வாட்டி எடுத்து விட்டார்.

நேரே தனது வீட்டிற்கு வந்தவன்.

தாய் சோபாவில் அமர்ந்து ஹெட் போனில் ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதை கண்டு கடுப்புடன் அவர் ஹெட்செட்டைப் பறித்தான்.

"வாங்க வாங்க. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு "என்று இயல்பு போல் நக்கலாக அவர் அழைத்ததில் கடுப்புடன் முறைத்தவன்.

"எங்க அவ " என்றான் அதட்டலாக.

"எவ" என்று அவன் அதட்டலுக்கு பணியாத குரலில் வினாவ, தாயின் முகத்தில் இருந்த அமைதியில் நிலை பெற்றான்.

தன் மீது கோபத்தில் உள்ளார். வைத்து செய்ய பார்க்கிறார் என்பது புரிய, அதற்கு மடங்க கூடாது என அழுத்தமாக நின்றிருந்தவன்.

"எங்க உங்க மருமக".

"ஏன் இந்த நேரம் உனக்கு தெரிஞ்சிருக்குமே " என்று அதைவிட அலட்சியமாக அவர் பதில் அளிக்க,

"மாம் எதுக்கு இந்த வேலையெல்லாம் அவள் கிட்ட கொடுக்குறீங்க.அதுவும் ஸ்ட்ரைட்டா மேனேஜர் வேலை இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை" என்றான் ஆதங்கமாக.

" எனக்கு அப்புறம் அவதானே வாரிசு "என்றதில் மா என்று அலறி இருந்தாள்.

" உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு".

" என்னடா" என்று சலிப்பாக அவர் கேட்க,தாய் வேண்டுமென்றே தன்னிடம் வார்த்தை ஆடுகிறார் என்பதை புரிந்தவன்.

" மாலா அக்கா ஒரு காபி" என்று சத்தமாக கேட்டான்.

தாயிடம் பேசுவது வீண் என சோபாவில் அவன் அமர, அவரோ மீண்டும் ஹெட் செட்டை போட்டுக் கொண்டு பாட்டு கேட்க,

"திமிர் எல்லாமே திமிர் " என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்.

காபியை பருகி விட்டு, காத்திருக்க நேரம் தான் கடந்ததே தவிர அவனின் திடீர்னு மனைவி வந்தது போல் தெரியவில்லை.

அதில் தாயை கடுப்புடன் முறைத்து விட்டு மேலே தன் அறைக்கு செல்ல, அங்கு பெண்ணவளின் பிரசன்னம் நன்கு தெரிந்தது.

இந்த அம்மாவை என்று கடுப்புடன் பல்லை கடித்தவன்.

தனது அலமாரியை திறக்க அதில் பாதிக்கு பாதி அவளின் உடைகள் வீற்றிருந்தது.

அதில் உடல் பற்றி ஏரிய கோபத்துடன் அவள் உடைகளைக் கலைத்துவிட்டு தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியப்படி அவன் வெளியே வந்த போது உடைகளை கலைந்து கொண்டு இருந்த மனைவி கண்ணில் பட ஏய் என்று அலறினான்.

அதில் அவளும் பதட்டத்துடன் புடவையை தன்னுடலில் சுற்றிக் கொண்டவள்.

அவனை அதிர்வுடன் நோக்க, " ஹே லூசு இங்கே என்ன பண்ற ஒழுங்கா வெளியே போ" என்று அவளை மிரட்ட, "இப்படியே வா" என்று தன்னை குனிந்து பார்த்தவள். அவனை இறைஞ்சல் உடன் நோக்க,

"ஒரே இம்சையா போச்சு" என்று வாய் விட்டே புலம்பியபடி அறையை விட்டு வெளியேற போக, " ஐயோ நில்லுங்க" என்று பதட்டத்துடன் அவனை நிறுத்தினாள்.

"இப்போ என்னடி" என்று எரிச்சலுடன் அவள் புறம் திரும்பியவன்.

காற்றின் காரணமாக விலகிய புடவையின் வழியே தெரிந்த வெற்று கைகளைப் பார்த்து வேறு புறம் திரும்பி கொள்ள," நீங்க.... நீங்க டிரஸ் பண்ணலையா" என்றாள் தரைப் பார்த்தபடி.

அப்பொழுதுதான் வெறும் டவலுடன் நிற்பது புரிந்தது.

அதில் முகத்தில் மொத்த ரத்த ஓட்டமும் பாய, அவளை உறுத்து பார்க்க,அவளோ தலை குனிந்து படி வேறெங்கோ பார்வையை பதித்து இருந்தாள்.

அதில் கடுப்புடன் அலுவல் அறைக்கு சென்று கதவை அடித்து சாற்றினான்.

அதில் உடல் தூக்கி வாரி போட,தன் உடைகளுடன் வேகமாக சென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


 

kalaisree

Moderator
அத்தியாயம்-07

"அம்மா " என்ற கத்தலுடன் வந்து நின்றவனை நிதானமாக ஏறிட்டு பார்த்தவரின் செய்கையில் கடுப்பாகி போனவன்.

" அவ என் ரூமில் என்ன பண்றா" என்றான் எரிச்சலுடன்.

" எவ? " என்று கேள்வியாக அவனைப் பார்க்க,

"அதன் உங்க ஆஸ்தான மருமக" என்றான் சிடுசிடுப்புடன்.

"அதான் நீயே சொல்லிட்டியே. என்னோட மருமகள்னு. அப்படின்னா என் மகனோட பொண்டாட்டி தானே. அவளை மகன் ரூமில் விடுறது தானே நியாயம்" என்று தத்துவம் பேசியவரைக் கண்டு முறைக்க மட்டுமே அவனால் முடிந்தது.

"என்ன இது. தலையைக்கூட ஒழுங்கா துவட்டாமல் வந்து நிக்கிற" என்று மற்றதை விடுத்து அவனை அக்கறையாகக் கடிந்தார்.

"எல்லாம் நீங்க பண்ணி வச்ச வேலைதான்" என்று முணுமுணுத்தப் படி சோபாவில் அமர்ந்து கொள்ள, திகழ் நிதானமாகப் படி இறங்கி வந்தாள்.

தயக்கத்துடன் அன்னபூரணி அருகில் நிற்க, "ஏன்டா நின்னுட்டு இருக்க. போய் உட்காரு" என்று ஆத்ரேயன் அருகில் உள்ள இருக்கையை சுட்டிக்காட்ட, அவன் முறைப்பில்,

" கிச்சனில் வேலை இருக்கு. வந்துருறேன் அத்தை " என்று விட்டு அவள் செல்ல போக, " அவனோட டயட் ஃபுட் கொண்டு வாடா" என்று அன்னபூரணி குரல் கொடுக்க, தலையசைத்தவள். ஓடியே விட்டாள்.

" ஷூட்டிங் எல்லாம் எப்படி போச்சு " என்று அவர் கேட்கவும் மற்றதை மறந்து அவரிடம் இயல்பாக பேசியவனுக்கு சிறு குறுகுறுப்பு.

ஏதோ யோசனையில் அப்படியே அமர்ந்து விட, " கண்ணா வா சாப்பிடலாம் " என்ற தாயின் குரலுக்கு தலையசைத்தவன்.

டைனிங் டேபிளில் அமர, இரண்டு சப்பாத்தி காய்கறிகளுடன் ரோல் செய்யப்பட்டு இருக்க,வேக வைத்த முட்டை, ஃப்ரஷ் ஜூஸ் அழகாக அவன் முன் பரிமாறப்பட்டது.

ஒருவாய் உண்டதுமே புரிந்தது.

தாயின் சமையலும் அல்ல. சமையல் அம்மாவின் சமையலும் இல்லை என்றதும் நிமிர்ந்து பார்க்க,

அன்னபூரணியின் கேள்விகளுக்கு பதில் அளித்தபடி உண்டு கொண்டிருந்தவளின் இதழ் கடையோரம் மெல்லிய புன் சிரிப்பு.

பெருமூச்சுடன் தன் உணவை முடித்துவிட்டு தன்னறைக்கு சென்றவன்.படுக்க மனம் இல்லாமல் அலுவலக அறையில் நுழைந்து கொண்டான்.

ஏனோ அவன் அறையே அன்னியமாகி போனது போல் ஒரு பிம்பம்.

அதை யோசித்தபடி சில நிமிடங்கள் கழிய, தன் எண்ணப் போக்கை கண்டு நொந்து கொண்டவன்.

படம் முடியும் தருவாயில் இருக்கும்போது அதில் கவனத்தை செலுத்துவோம் என்று தனது மேக் புக் உடன் மூழ்கி போனான்.

அனைத்தையும் சரிபார்க்க நேரமும் அதில் கழிந்தது. கழுத்தைத் தேய்த்தபடி எழுந்தான்.

உறக்கமும் வந்திருக்க,சோம்பல் முறித்தவாறு வந்து பெட்டில் விழுந்தவனுக்கு,அதன் பிறகு தான் திகழின் ஞாபகமே வந்து பதறி கொண்டு எழுந்தான்.

டேபிள் லம்பின் ஒளி மட்டுமே இருக்க விடிவிளக்கை போட்டவன்.சுற்றிலும் தேட,அவள் இருப்பதற்கான சுவடே தெரியவில்லை.

"எங்கே போன இவ" என்று வாய் விட்டே புலம்பிய படி பெட்டை விட்டு எழுந்தவன் பாதம் தரையில் படாமல், திகழின் இடையில் பட பதறி கொண்டு அவன் காலை எடுக்கவும் திகழ் வேகமாக எழவும் சரியாக இருந்தது.

அப்பொழுதுதான் அவள் படுத்திருக்கும் இடத்தைப் பார்த்தான்.

தரையில் மெத்தை விரித்து அதில் படுத்து இருந்தாள்.

எதுவும் பதில் பேசாமல் அவள் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டு, நெற்றியை பிடித்துக் கொண்டவன்.

"அப்போ நீ பெட்டில் தூங்குறது இல்லையா" என்று ஆச்சரியத்துடன் வினாவ,

அவளோ இல்லை என்று மௌனமாக தலையசைக்க, இதற்கு என்ன கூறுவது என்று புரியாமல் அவன் விழிக்கும் போதே,

"வேற ஏதாவது வேணுமா" என்றாள். அதில் அவன் புரியாமல் பார்க்க,

"ஏதாவது வேணுமா?" என்று மீண்டும் மெல்லிய குரலில் அவள் கேட்கவும்,

" அப்படி என்ன கிடைக்கும்" என்றவனின் பேச்சில் சிறு கள்ளத்தனம் புகுந்து கொண்டது.

அதை உணராதவள். " காபி டீ ஏதாவது" என்று அவன் சிவந்தக் கண்களைப் பார்த்தபடி கேட்க,

தேவையில்லை என்றதும், திகழ் தலையசைத்து விட்டு, போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அவளை சில கணங்கள் வெறித்தவன். டேபிள் லாம்பை அணைத்து விட்டு படுத்தான். மனதில் அவளின் செய்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணியது.

அடுத்த நாள் அவன் விழித்து பார்க்கும்போது பெண்ணவளும் இல்லை.அவள் படுத்திருந்த மெத்தையும் அங்கு இல்லை.

சோம்பல் முறித்தவாறு எழுந்தவன்.லேம்ப் டேபிளில் இருந்த சுடச்சுட கிரீன் டீயை கண்டு,மெச்சதலாக ஒற்றைப் புருவம் உயர்த்தினான்.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன். கிரீன் டீயுடன் பால்கனி கதவை திறந்ததும் முகத்தில் விழுந்த நீர் திவளைகளில் பச் என்றபடி கண்ணை மூடி திறக்க,

"சாரி உங்களை கவனிக்கலை" என்றவளின் பதட்டமான விளக்கத்தில் அவளை நன்றாக பார்த்தான்.

குளித்து முடித்து, ஈரம் சொட்டும் அவளின் கார்கூந்தலை வெயிலில் உலர்த்திக்கொண்டு இருந்தாள்.

அவன் இமைக்காமல் பார்க்கவும் அங்கிருந்து விரைந்து திகழ் செல்ல, "டிரையர் யூஸ் பண்ணிக்கலாம் இல்லை" என்றான். பால்கனி கம்பியில் சாய்ந்த படி.

அவளின் வேகநடை அதில் நின்றது. முகத்தை மட்டும் அவன் பக்கம் திருப்பி, " பழக்கம் இல்லை" என்று விட்டு செல்ல,யோசனையாகப் பார்த்தவனின் கை சுட்டதில் நினைவுக்குத் திரும்பினான்.

"ரொம்ப வித்தியாசமா இருக்கா" என்று முணுமுணுத்தவன். அந்த இளங்காலைப் பொழுதை ரசித்தபடி கிரீன் டீயை முடித்தவன்.

டீ டேபிளில் அவன் படிக்கும் மேகசினும், செய்தித்தாளும் இருக்கவே, அதில் ஆழ்ந்து போனவன்.நேரமாவதை உணர்ந்து குளிக்க சென்றவன். எச்சரிக்கையாக உடைமாற்றி விட்டே வந்தான்.

திகிழ் இருப்பதற்கான சுவடே இல்லாமல் இருக்கவும்,விமலுக்கு அழைத்தான்.

எதிர்புறம் அழைப்பு எடுக்கப்பட்டதும் மெல்லிய சாம்பிராணியின் வாசம் நாசியில் ஏற, திரும்பிப் பார்க்க அவள் தான் அறைக்கு சாம்பிராணி போட்டுவிட்டு அவனைக் கண்டதும், தயக்கத்தோடு உடனே வெளியேறி இருந்தாள்.

"சார் சார்" என்று விடாமல் ஒலித்த விமலின் குரலில், "என்னடா உனக்கு பிரச்சனை. எதுக்கு கத்திட்டு இருக்க " என்று கடிய,எதிர்ப்புறம் இருந்தவனோ புரியாமல் விழித்தான்.

"சார்" என்று அதிர்ந்து போய் அவன் அழைக்கவும் தான், " பச் மூவிக்கான கவர் பிக் புதுசு வேணும்" என்றான் கட்டளையாக.

" சார் ஏற்கனவே எடுத்து ரிலீஸ் ஆக ரெடியா இருக்கே " என்றவன் பெரும் தயக்கத்துடன் கூற,

"நோ,நான் வேற மாதிரி யோசிச்சு இருக்கேன் ப்ரொடியூசர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கு. அப்படியே ஸ்டைலிஷ் கரன் கிட்டையும்".

எப்பொழுதும் போல் ஆத்ரேயனின் திட்டம் எதுவென்று புரியாமல் குழம்பி மண்டையை பிய்த்துக் கொண்டாலும், அவன் கூறுவதை செய்ய ஆயத்தமானான்.

தயாராகி கீழே வந்த ஆத்ரேயன் புறப்பட்டு தயாராகி நின்றிருந்த திகழை, கண்டு கேள்வியாக புருவம் உயர்த்த, தாயின் குரலில் அவரின் மீது கவனத்தைப் பதித்தான்.

" ஆர்டர் டெலிவரி ஆகி அவங்க ஓகே சொன்ன உடனே பேமெண்ட் வாங்கிடு திகழ். பேர்தான் பெத்த கம்பெனி. ஆர்டர் டெலிவரி ஆனா உடனே பேமெண்ட் போடுவதே இல்லை.ஒன் வீக் கழிச்சு நாமளே கேட்டால் மட்டும் தான் பேமென்ட் போடுறாங்க. வார்னிங்கும் கொடுத்தாச்சு. இதுதான் லாஸ்ட் டைம் இப்பயும் பேமென்ட் டிலே பண்ணினால் கண்டிப்பாக அவங்க ஆர்டரை எடுக்கவே கூடாது.ஆள் இருப்பாங்க இருந்தாலும் நீ கூட போறது நல்லது டா " என்றார்.

திகழும் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டாள்.

தொண்டையை செரும்பியப்படி வந்து அமர்ந்தவனை, இருவருமே கண்டு கொள்ளவில்லை.

அதில் முறைப்புடன் இருவரையும் பார்க்க முதலில் நிமிர்ந்த அன்னபூரணி, "சாப்பாடு எடுத்து வைக்கவா கண்ணா ".

அவருக்கு பதில் அளிக்காமல் திகழை பார்க்க,அதை உணர்ந்து,"நீ இப்போதைக்கு இந்த வேலையை மட்டும் முடிச்சிடுடா. அப்படியா கண்ணாக்கு சாப்பாடு வை நான் பூஜையை முடிச்சிட்டு வரேன்" என்று நாசுக்காக அங்கிருந்து விலக,

தயங்கினாலும் அவனுக்கு பரிமாறியவள்.

அப்படியே நின்று இருக்க, " சாப்பிடுற ஐடியா இல்லையா" என்றவன் கேள்வியில் அவனை புரியாமல் பார்த்தாள்.

" இப்போ கிளம்பனும் தானே. சாப்பிடு" என்று விட்டு அவன் உணவில் கவனத்தை செலுத்த அவனை விட்டு ஐந்து இருக்கைகள் தள்ளி அமர்ந்து உணவை போட்டுக்கொண்டு உண்ண ஆரம்பித்த வளையும், தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியும் கண்டு புருவம் சுருக்கியவன்.

தன் அருகில் அமர்ந்த தாயைக் கடுப்புடன் நோக்கினான்.

அவன் பார்வையில், " என்ன கண்ணா சட்னி வேணுமா " என்று அவன் புறம் கிண்ணத்தை நகர்த்த பற்களை கடித்தவன். அந்த சட்னியையும் தட்டில் போட்டு உண்ண ஆரம்பித்தவனுக்கு தாயையும் அவர் தன் தலையில் கட்டிய திகழையும் எண்ணி கோபம் பெருக்கெடுத்தது.

அதே கடுகடுப்புடன் உண்டு விட்டு எழுந்தவன். உங்க அருமை மருமகளோட போன் நம்பர் வேணும் என்றான் சத்தமாக.

"மருமக போன் நம்பர் கூட இன்னும் வாங்காமல் இருக்கியே. என்ன டைரக்டரோ போ" என்றதில்,

" இப்போ எதுக்கு இதை இழுக்குறீங்க" என்று அவன் கடுப்புடன் கடிய, அதைக் கண்டுகொள்ளாமல்,

"திகழ் உன் புருஷன் போன் நம்பர் உன்கிட்ட இருக்கு தானே" என்றதும் அவள் தலையசைக்க, பார் என்று அவர் முகத்தை தூக்கியதில் திகழை முறைத்தான்.

அதில் அவள் தலை குனிந்து கொண்டதில் இன்னும் கோபம் அதிகரிக்க தலையை அழுத்தக் கோதி கொண்டவன்.

தலைகுனிந்து நின்றிருந்தவளை பார்த்தபடி,"லஞ்ச் என்னோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு வந்து தர, ஸ்னாக்ஸும் ஆளுங்க கிட்ட கொடுத்து அனுப்பி விடு. நைட் சூட்டிங் முடியலன்னா டிரைவர் கிட்ட சாப்பாடு கொடுத்து விடு" என்று கூறியவன்.

தாயிடம் தலையசைத்துடன் விடை பெற, அன்னபூரணி இதழ்களில் திருப்தி புன்னகை உருவாக, திகழ், ' என்ன இது' என்ற பதறிப் போய் தன் மாமியாரை நோக்கினாள்.

"பொண்டாட்டி கையில் சாப்பிடணும்னு ஆசைபடுறான். என் தங்கம். ஒரே நாளில் அவனை மாத்திட்டியே.உன் கை பக்குவம் மறக்குமா நாக்கில் அப்படியே ஒட்டிக்கிச்சு போல. இதுதான் சந்தர்ப்பம் அவனை உன் கைக்குள் போட்டுக்கோ திகழு " என்று அவளை தோளோடு அணைத்து சந்தோஷத்துடன் கூறிவிட்டு செல்ல, ஆத்ரேயனிடம் ஓட்டிய ரீலை, தன்னிடமும் ஓட்டிய மாமியாரை அசந்து போய் பார்த்தாள்.

அவன் குரலில் இருந்த கடுகடுப்பை பொருட்படுத்தாமல் ஏதோ ஆசையாக கேட்டது போல் கூறிய மாமியாரை எண்ணி சிரிப்பும் வந்தது.

 
Top