எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

கிழக்கே தோன்றும் சூரியனும் பெண்ணே உனக்கு வலிமை தரும்
இரவில் தோன்றும் நிலவும் பெண்ணே உனக்கு சோறூட்டும்
ஓடி விளையாடிய மண்ணும் பெண்ணே உன்னை ஆசீர்வதிக்கும்
அடங்கிப் போ என்ற குரலும் பெண்ணே உன்னிடம் அன்பூட்டும்
பேதை என்ற வாயும் பெண்ணே உன்னை மேதை என போற்றும்
வானவில்லும் பெண்ணே உன் வண்ணத்தைக் கெஞ்சி கேட்கும்
வீழப் பிறக்கவில்லை ஆளப் பிறந்தோம் என நினைவு கொள்
அகங்காரம் இல்லாத ஆசை கொள்
வெற்றிகள் உன்னை வரவேற்க பூக்களுடன் கையசைக்கும்
 
Top