எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
ண்டத்தின் பிண்டமாய்
அன்னையின் கருவில் உருவாகி…!

ஆழி என்னும்
பார்க்கடலில் ஆதியின்
அரசியாய் பிறந்து…!

இமயம் தொடும்
காரிகையாய் வளர்ந்து…!
ஈரவன் போல் ஒளிவீசி…!

உரியவனிடம் உயிர்மெய்
ஒன்றாகி உருவாகும்
தன் சேயிடத்தில்…!

ஊணாக தன் உதிரம்
கொடுத்து…!

எந்திரனுக்கே
எந்திரனாய் எதிர்நீச்சல்
போட்டு முன்னேறி…!

ஏகதேவனின் ஆசியுடன்
அகிலம் போற்றும்
அணுகருவாய்…!

ஐயம் திரிபற
அனைவரும் அறிவார்
அவளின் நாமத்தை…!

ஒளியோன் போல்
ஒளிவீசும் உலகின்
விடியலும் அவளே…!

ஓவியனால் தீட்டப்பட்ட
மிகச்சிறந்த ஓவியமும்
அவளே…!

ஒளதசியம் போல்
பால் மனம் மாறா
பாவையும் அவளே…!

உயிர் கொண்டு வடிக்க
முடியாமல் உயிர்
எழுத்தால் வடிக்கிறேன்
உன்னை......

உயிரும் மெய்யும்
கொண்ட உலகின் உயிரெழுத்தானவளே......

மொழிகள் போதவில்லை
அவளை உரைப்பதற்கு.....

மௌனமும் அடம்பிடிக்கும்
அவளைப்பற்றி
பேசுவதற்கு.....

பிரம்மன் படைத்த
கலைக்கூடமே அவள்......

❤பெண்மை❤

அன்புடன்
மு. மோனிஷா ❤❤❤❤
 
Top