subageetha
Moderator
Manjam 26
தன் அம்மாவின் சிரிப்பில் சற்றே மிரண்டு போனான் நிரஞ்சன். அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி இருந்தாலும் தன் அம்மாவுக்கு தான் அதிதியை கை பிடிப்பதில் கொஞ்சமும் இஷ்டமில்லை என்பது தெரியும். எப்படி அவரை சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டு வந்தவனுக்கு, அதிதியிடம் தான் எனும் தன் மனதை திறக்கவில்லை என்பது பெரிய தவறாய் இந்தக் கணம் தோன்றுகிறது. ஆனால்,'எடுத்தேன் கவிழ்த்தேன் 'என்று அவள் மனதை புண்படுத்த முடியாது. மிக நிதானமாக கையாள வேண்டிய கண்ணாடிப் பாத்திரம் போன்ற நிலையில் அதிதி இப்போது இருக்கிறாள். மணப் பெண்ணின் சம்மதம் இல்லாமல் மணவறை நோக்கி எப்படி பயணப்பட முடியும்? ஆனால் அவளிடம் தன் விருப்பத்தை தெரிவிப்பதற்கு இது சரியான நேரம் இல்லை என்பது நிரஞ்சனுக்கு நிச்சயம்.
நிரஞ்சனின் அம்மா, ‘' சரி நிரஞ்சன், இதைப்பற்றி நீயேன் இன்னும் சுமனாகிட்ட பேசல ?உன் வாழ்க்கையில் பங்கு எடுத்துக்க நினைக்கிற ரெண்டு பொண்ணுங்க கிட்டயும் நீ இன்னமும் உன்னோட மனசுல இருக்குற நினைப்பை பத்தி சொல்லல... சுமனா உன்ன ரொம்ப விரும்புறா. உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பம் இருக்கு. அதனாலதான் அவங்க அப்பாவ கூட்டிக்கிட்டு வந்து பேசி இருக்கா. அதிதி உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்வாளான்னு நிச்சயம் இல்லை. அப்படியே அவ சரி சொன்னாலும் அவ சம்மதிக்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்னு தெரியாது. நீ விரும்புற பொண்ண விட உன்னை விரும்புற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறது புத்திசாலித்தனம். என் பிள்ளை புத்திசாலின்னு நினைக்கிறேன்.'’ என்றுவிட்டு அவன் முக உணர்வுகளை ஆழம் பார்த்தாள் நிரஞ்சனது அம்மா.
நிரஞ்சன் பதிலேதும் பேசாமல் தனது கை விரல்களின் நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான். சற்றுநேரம் காத்திருந்தவருக்கு, பொறுமை எல்லை மீற, நிரஞ்சன் நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... என்ற அம்மாவை ஒருகணம் உணர்வுகள் அற்ற பார்வை பார்த்தவன் உன்னோட புள்ள அவ்வளவு புத்திசாலி எல்லாம் இல்லம்மா. எனக்கு அவளத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்.”
'’ஒருவேளை அவ சம்மதிக்கல்லன்னா என்ன பண்ணுவே நிரஞ்சன்?'’
நிரஞ்சனிடம் மீண்டும் மவுனம்.
தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன், “கல்யாணமே பண்ணிக்க மாட்டேம்மா…” என்ற அவனின் பதிலில் அதிர்ந்து விழித்தாள் அவனின் அம்மா.
“ஒத்த புள்ள பெத்துட்டு அவன் தனியா நிக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டேன் நிரஞ்சன்?” அவன் அம்மா கண்களிலிருந்து கண்களில் தாரை தாரையாக வழிந்தது.
“நீங்க நிறைய தியாகங்கள் எனக்காக பண்ணி இருக்கீங்கம்மா... அதுக்கு என் வாழ்க்கையே உங்களுக்கு செருப்பு தைச்சு போடலாம்.
பட் என்னே புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க... அதி தவிர இன்னொருத்திய மனைவிங்கற நிலைல நிறுத்தி பார்க்க என்னால முடியாது. என்னோட குழந்தைகளுக்கு அதி மட்டும்தான் அம்மாவா இருக்க முடியும். மனசு ஒன்னும் சுண்டல் இல்லம்மா... கேட்கிறவங்களுக்கு எல்லாம் விநியோகம் செய்ய”.
“அப்ப சுமனா நிலைமை?”
“அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தல. அவ அவங்க அப்பாவ கூட்டிக்கிட்டு வந்தா... உண்மைதான்! அப்பவும் நான் எதுவும் கமிட்டடா சொல்லல. பரீட்சையை நல்லபடியாக முடிக்கட்டும். அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்னு தான் சொன்னேன். விருப்பமில்லாத என்னை கல்யாணம் பண்ணிகிட்டா அதனால அவளுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது.
இத நேரடியா அவ கிட்ட சொல்லாம அவளை அவாய்ட் பண்ணா அவளே புரிஞ்சுப்பான்னு நினைச்சேன் நானு. அவ என்னன்னா உங்களுக்கு போன் பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல.”
விடுவதாக இல்லை நிரஞ்சனை பெற்றவர் '’அப்ப நீ தானே சொன்னே, ஒரு பொண்ணு ஆபீஸ்ல என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டு இருக்கா.அது பற்றி யோசிக்கிறேன்னு.?'என்று கேட்க...
‘'ஆமாமா சொன்னேன்... அப்போ அதி தன்னுடைய கணவன் கூட சந்தோஷமா வாழறான்னு நெனச்சேன். அடுத்தவன் பொண்டாட்டி பத்தி யோசிக்காதடா மடையா... இதிலிருந்து நீ வெளில வந்துதான் ஆகணும்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு யோசிச்சேன். இப்ப அவள் திரும்பியே வந்துட்டா.
இனி, அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்மா'’ என்றவனை எந்த வழியில் மடக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தவள், சட்டென்று “நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். என்னோட ஒரே புள்ள நீ. ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தும் வாங்கிட்டு வந்தவளை கல்யாணம் பண்ணிக்க என்னோட மனசு ஒத்துக்காது என்னிக்குமே!”என்றுவிட்டார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட நிரஞ்சன் கண்களில் நீர் கோர்த்து விட்டது. “ஏம்மா, ஆம்பள ரெண்டாம் கல்யாணம் செஞ்சுக்கலாம். திரும்பவும் குழந்தைக்கு அப்பா ஆகலாம். இரண்டாவது பொண்டாட்டியையும் பிள்ளையையும் ஒதுக்கி வைக்கலாம். ஆனா விவாகரத்து வாங்கிட்டு வந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க கூடாதா... அவள் மட்டும் எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வச்சிட்டு துறவறம் வாங்கிக்கனுமாம்மா?”என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் அம்மாவுக்கு புரியவில்லை. தன்னை தான் எடுத்துக்காட்டாக முன் வைக்கிறான் என்று தெரியும்.
“அப்படி இல்ல நிரஞ்சன்... அவள மாதிரியே விவாகரத்தான, இல்லன்னா மனைவியை இழந்த யாரையாவது கல்யாணம் செஞ்சுக்கலாம் அந்த பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகாத உன்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் என்ன?”
“அப்ப நீங்க ஏன் அப்பாவ கல்யாணம் பண்ணிட்டீங்க? உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகல. அப்பாவுக்கு கல்யாணமாகி ஆறு வயசுல சுகுமார் இருந்தான். உங்களுக்கு என்னமா தலையெழுத்து?”
“எங்க வீட்ல நான் மூணாவது பொண்ணு நிரஞ்சன். அப்பா கிடையாது. மாமா மாமி வீட்ல தான் வளர்ந்தேன். அவங்க கை காமிச்ச வரன். வாயை திறக்காமல் உட்கார்ந்தேன். அதுக்காக இன்னிவரைக்கும் அழறேன். இன்னிக்கு இளமை வேகத்தில் நீ பண்ற வேலை, கொஞ்ச வருஷம் கழிச்சு உனக்கு வருத்தத்தை கொடுக்கலாம். ஏற்கனவே கல்யாணமான பொண்ணு. கல்யாணம் பண்ணிகிட்டா வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்லை. அவளாள அவளுடைய பழைய வாழ்க்கையை விட்ட மனசளவுல வெளிய வரவும் முடியாது. முதல் புருஷன மறக்கவும் முடியாது. இன்னி வரைக்கும் உங்க அப்பா மனசுல அவரோட முதல் மனைவிதான் மனைவி. நான் சும்மா ஊர் உலகத்துல காமிக்க வச்சிருக்கிற பொம்மை.”
“பின்ன நீங்க இங்கிருந்து வர வேண்டியதுதானே?நான் உங்களுக்காக தானே மூணு பெட்ரூம்ல வீடு வாங்கி வச்சிருக்கேன்? “
“கல்யாணம் ஆனவங்க அப்படியெல்லாம் சட்டுனு நினைச்சபடி வரமுடியாது நிரஞ்சன். நான் அங்கேயே தங்க வந்துட்டா நம்ம ரெண்டு பேருக்கும் இந்த குடும்பத்தோட இருக்குற ஒட்டுறவு முழுசா அறுந்துடும். என்னால அத ஜீரணிக்க முடியாது.
உனக்கு கல்யாணம் ஆகுற வயசுல, நா அவர பிரிந்தாலும் ஊர் உலகம் தப்பா பேசும்.”
இவ்வளவு தானா என்று பார்வை பார்த்தவனுக்கு,’'என்னாலயும் அவர விட்டு வரவும் முடியாது நீரு. 'புரிஞ்சுக்கோ’', என்ற தாயின் குரல் சொன்ன செய்தியில் திகைத்து விழித்தது ஒரு கணம் தான். தன்னை சுதாரித்து கொண்டவனுக்கு, தான் வேறுதான் என்று தோன்றிவிட , ‘'ஆல் ரைட்,நா கல்யாணம் செஞ்சுகிட்டா அதி கூடத்தான். உங்களுக்கு உங்க மகனுக்காகன்னு ஏதாவது செய்ய தோணினா நா உங்கள ஒதுக்கி வைக்க மாட்டேன் ‘'. இப்போ கிளம்புறேன், என்றுவிட்டு மாடிப்படி இறங்கிவிட்டான். அவன் அம்மா அவன் சொல்வதை உள்வாங்கிக்கொள்ள கஷ்டப்பட்டார். அவர் கண்களில் இருந்து நீர் இறங்கியது.
கீழே அவன் அப்பா மீது சுகுமாரின் உட்கார்ந்து குழந்தை யானை சவாரி செய்ய, சுகுமார் சாதம் கிண்ணம் கையில் வைத்திருக்க, அவன் மனைவி குழந்தைக்கு ஊட்டிக்கொண்டு இருந்தாள். இந்த காட்சியை கண்ட நிரஞ்சன் முகம் சற்றே இளகியது. சட்டென்று தானும் அதிதியுமாக இவ்வாறான ஒரு தோற்றம் கண்முன் தோன்றி மறைய, அதை நிஜமாக்கும் முயற்சியில் இனியும் தாமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தவனாக அதி வீடு நோக்கி தனது காரை செலுத்த தொடங்கினான்.அவன் மனதில் அம்மாவை முன்னிறுத்தி பேசியது தவறு எனும் எண்ணம் அலைக்கழித்தது.
அதே சமயம் வீட்டில், அதி தனது புத்தகங்களில் ஆழ்ந்திருந்தாள். அவள் எண்ணங்கள் முழுவதும் நிரஞ்சனை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தது. அவன் வீட்டில் இல்லாதது ஏதோ ஒன்றை இழப்பது போன்ற ஒரு உணர்வை அவளுக்குள் ஏற்படுத்தியது. இவ்வளவு நாட்களாக வார இறுதிகளில் தன்னை வெளியே கூட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தான் நிரஞ்சன்.
இன்று அதிதியின் அம்மா வித்யா அவளை ஏதாவது கோவிலுக்கு சென்று வரலாம் வா என்று அழைத்தாள் தான்.
அதிக்குத்தான் செல்வதற்கு விருப்பமில்லை. படிப்பதற்கு நிறைய இருப்பதாக கூறிக் கொண்டு தன் அறையிலேயே முடங்கி விட்டாள். வித்யாவும் விஸ்வமும் மேற்கொண்டு தூண்டித்துருவாமல் விட்டுவிட்டார்கள்.
அதியின் காதுகள் நிரஞ்சனது கார் வரும் சத்தத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. அவள் மனமும் நிரஞ்சன் இங்கு இருக்கிறான். அதனால் அவனை எதிர்பார்க்கிறேன். அவன் வேலை சமயத்தில் பெங்களூரு திரும்ப சென்று விட்டால் என்ற கேள்வி மனதில் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாள். அதற்கு அவளிடம் விடை இல்லை. மனதிற்கு சமீபகாலமாக சாய்ந்து கொள்ளும் தூண் போல் அருகிலேயே இருப்பவன் நிரஞ்சன். அவனை விட்டு பிரிந்து இருக்க வேண்டும் என்றாலே வேப்பங்காயாக கசந்து வழிகிறதே... அது ஏன்? அவளின் எண்ண போக்கு அவளுக்கே புரியவில்லை. அதை நோக்கிய அடுத்த எட்டு எடுத்து வைக்கவும் அவள் தயாரில்லை.
........
சியாட்டல் :
அத்தனை பெரிய பிரம்மாண்ட வீட்டில் தனிமை விநயனை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவனை அதிகம் அதிதியை பற்றி யோசிப்பதில்லை. அவன் பெற்றோரிடம் பேசி இருக்கிறான் மீண்டும் பெண் பார்ப்பது பற்றி. இங்கேயே ஏதாவது பெண் கிடைத்தால் பரவாயில்லை திருமணம் செய்து கொண்டு விடுவேன் என்றும் சொல்லியிருக்கிறான். அவன் பெற்றோருக்கு இவ்வளவு சீக்கிரத்தில் மகனுக்கு இன்னொரு திருமணம் பற்றி யோசிப்பது அவ்வளவு சரியாக தோன்றவில்லை. விவாகரத்து பெற்று ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அடுத்த திருமணம் என்றால் பெண்ணை பெற்றோர்கள் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதற்கும் யோசிக்கக் கூடும். ஆனால் இதைப்பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் வினையன் இல்லை.
அவனுக்கு ஸான் டியாகோவில் ஒருமாத பயிற்சிக்காக ஏற்பாடாகி இருக்கிறது. அங்கு நடாலி வரக்கூடும் என்றுகூட அவன் மனதில் ஒரு ஆசை. அவள் ஏன் தன்னைத் சட்டென்று உதறித் தள்ளினாள் என்பது இன்றுவரை அவனுக்கு புரியாத மர்மம் தான். அதைப்பற்றி கேட்பதுடன் அவளுடன் இந்த ஒரு மாதமும் இருக்க முடிந்தால் என்று உள்ளூர ஆசைகளுடன் தாது பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான் அவன்.
ஆனால் அங்கு நடாலி அவனுக்கு கொடுக்கப்போகும் அதிர்ச்சி, எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அவளைப் பற்றி சிந்திக்காமல் கூட இருந்திருப்பான்.
பயிற்சிக்காக சென்றவன் நடாலியை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்க்கவே முடியவில்லை. அவள் இவனை விட பல படிகள் மேல் நிலையில் இருக்கிறாள். அந்த உண்மையை அவன் இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவனின் எதிர்பார்ப்பு ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்று யோசிக்கிறேன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த நடாலி, இவனை தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லை. ஒரு ஞாயிறில் அவளிடம் பேசியே தீரவேண்டும் என்று அவாவை அடக்கமுடியாமல் அவள் தங்கி இருக்கும் அறைக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி நேரயே சென்று விட்டான் .
அங்கு அவன் கண்டது, நடாலி தனது முதல் கணவனுடனும் தனது பதிநான்கு வயது பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக அந்த நாளைக் கழித்து கொண்டிருப்பதுதான். இதையெல்லாம் அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அங்கு அமர்ந்திருப்பவன் அவளது முதல் காதலன் கணவன் என்பது முதலில் அறிந்து கொள்ளாத விநய்க்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது. பிறகு அவள் அறிமுகப்படுத்தி வைக்கவும், உறை நிலைக்கே சென்று விட்டான்.
நடாலி விநயனை பார்த்த பார்வையில் அதிருப்தியும் வெறுப்பும் தெரிந்தது. அந்த நிமிடம் அவள் சகஜமாக பேசி அனுப்பி விட்டாலும், அவளது அதிருப்தி அவனை எந்த நிலைமைக்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை பற்றி அவன் இன்னமும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் அறையிலிருந்து கிளம்பி, தன் அறைக்கு வந்தவனுக்கு, மனம் முழுவதும் எழும்பிய கேள்வி இதுதான், பிரிந்து வந்துவிட்ட பிறகு கணவன் மனைவி எப்படி இவ்வளவு நட்பாகவும், நெருக்கமாகவும் பழக முடியும்? அந்தப் பெண்ணின் கண்களில் நட்பையும் மீறி காதல் வழிகிறதே ... இது எப்படி சாத்தியம்?
அப்படி என்றால் நான் கூட மீண்டும் அதியுடன் சகஜமாக வாழ்க்கையை எடுத்துச் செல்ல முடியுமா... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.