ஜாஸ்மின் ஹால் எனும் பெயரில் அக்கட்டிடம் நிமிர்ந்து நின்றது. அக்கட்டிடத்தின் முன் கேட்டின் வாயிலில் தோரணமும் வாழை மரமும் கட்டப்பட்டிருந்தது. நுழை வாயிலில் இளைய வயது பெண்கள் கையில் பன்னீர் தட்டுடன் நிற்க, அவர்களின் பக்கத்தில் பேனர் ஒன்றில்
'நீலகண்டன் (எ) நீலன் வெட்ஸ் கயல்விழி (எ) கயல்' என பொறிக்கப்பட்டிருந்தது.
வாசலில் கமலம் அம்மா முகம் முழுக்க புன்னகையயை தேக்கி வைத்து கொண்டு எல்லோரையும் இன் முகத்துடன் வரவேற்றார். கல்யாண வேலைகளை அமர்க்களமாக செய்து கொண்டிருந்தார் பார்வதி அம்மா.
ஐயர் எள் எனும் முன் பார்வதி அம்மா எண்ணையாக நின்றார். மணமகள் அறையில் பட்டு சேலை உடுத்து, தலையில் மல்லிகை பூ கொண்டையிட்டு, சேலைக்கேத்த ஆபரணங்கள் போட்டு, கை கால் செவக்க மருதாணி போட்டு, கல்யாண பெண்ணுக்கே உரிதான வெக்கத்தை முகம் எங்கும் சூடி கொண்டு, மனதில் சந்தோஷத்தோடு அமர்ந்திருந்தாள் கயல்விழி.
இங்கு மாப்பிள்ளையோ முகத்தில் சிறு கடுப்பு சூழ அவன் முன் இருந்த இருவரை எரித்து விடுவது போல் பார்த்துகொண்டிருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை ஏழுமாத கருவை சுமந்து கொண்டிருந்த அவன் அக்கா உமையாளையும் அவளுக்கு சேவகம் செய்து கொண்டிருந்த அவன் மாமா ருத்ரனையும் தான்.
உமையாள் கொசுவம் கொஞ்சம் கலைந்திருக்க அதனை கீழே அமர்ந்து சரி படுத்திக்கொண்டிருந்தான் ருத்ரன். அவனை சன்ன சிரிப்புடனும் சிறு வெட்கத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ருத்ரனும் சேலையை சரி செய்து கொண்டே தலையை மட்டும் நிமிர்த்தி அவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்தான். இதனை கண்ட நீலனுக்கு எரிச்சலாக இருந்தது.
"ஹெலோ இந்த எபில நான்தான் ஹீரோ. இதுலயும் நீங்களே பெர்போர்ம் பண்ண நாங்க என்ன பன்றது" என சிறு எரிச்சலுடன் கேட்டான்.
அதற்கு ருத்ரனோ " டேய் இந்த ரைட்டர் எனக்கே சீன் குடுத்த நான் என்ன செய்றது" என சிரித்து கொண்டே கேட்டான்.
சாரியை சரி செய்து எழுந்தவன், உமையாள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
உமையாள் அவனை மையலுடன் பார்த்து "ஐ லவ் யூ" என கூறினாள்.
"மி டூ" என சொன்னவன், எழுந்து அவள் கை பற்றி " சரி வா உன் தம்பி நம்மை எரிப்பதற்குள் ஓடிறலாம்" என கூறி பக்கத்தில் நின்ற நீலனின் கன்னதில் தட்டி விட்டு மனைவியுடன் அங்கிருந்து சென்றான்.
கன்னத்தை தட்டி விட்டு செல்லும் இருவரையும் முறைப்புடன் பார்த்தாலும் அவன் இதழ்களோ அதற்கு நேர் எதிரே புன்னகையை சிந்தியது. அவன் ஞாபகங்கள் எட்டு மாதம் பின்னோக்கி சென்றது.
வாழ்க்கையை வாழ தொடங்கிய இருவரும் அதன் பின் அந்நியோன்னியமாக வாழ்ந்தார்கள். அனைவருக்கும் இருவரையும் கண்டு மனம் சந்தோஷமாக இருந்தது.
இவர்களின் அந்நியோன்னியத்திற்கு மறுமாதமே கிடைத்த பரிசுதான் அவள் கருவுற்று இருப்பது.
அன்று காலை நேரம் உடல் சோர்வாக இருக்க மெத்தையில் படுத்திருந்தாள் உமையாள். அன்று அவள் வேலைக்கும் செல்ல வில்லை. ஒரு முக்கியமான கைவினை பொருளை அவள் முடிக்க வேண்டும் ஆனால் அவள் சோர்வு காரணமாக அதை காயலிடம் கூறி, முடிக்க சொல்லி விட்டாள்.
கயலாலும் அதை முடிக்க முடியவில்லை. வாடிக்கையாளர் கேட்ட பொது இன்னும் அந்த கைவினை பொருள் தயாராக வில்லை என்ற பதிலே அவருக்கு வழங்க பட்டது.
அவர் ருத்ரன் பரிந்துரைக்கப்பட்டு வந்த வாடிக்கையாளர் என்பதால், அந்த வாடிக்கையாளர் ருத்ரனுக்கே அழைத்து கூறிவிட்டார். அவனும் ஏதேதோ காரணம் கூறி இன்னும் இரண்டு நாட்களில் அக்கைவினை பொருளை முடித்து தருவதாக வாக்குறுதி குடுத்து அவரை சமாதானம் செய்தான்.
பின் உமையாளுக்கு அழைத்தான் ஆனால் அவள், அவன் அழைப்பை ஏற்கவில்லை. பின் கயலுக்கு அழைத்தான். கயலோ இன்று உமையாள் வேலைக்கு வாராததையும் அவள் காயலிடம் அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னதையும் கூறினாள்.
கயல் கூறியதை கேட்ட ருத்ரனுக்கு ஏனோ மனம் பிசைய அவளை காண வீட்டிற்கு புறப்பட்டான். வீட்டிலோ தனது அறையில் சோர்வாக படுத்திருந்தாள் உமையாள். பார்வதியும் இரண்டு மூன்று முறை அவளை பார்த்து விட்டு தான் வந்தார்.
லெசாக காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. அவரும் அவளுக்கு சுட சுட மிளகு ரசம் தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்தான் ருத்ரன். சமையல் அறையில் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்க்க, பார்வதி அம்மா மும்முரமாக சமைத்து கொண்டு இருந்தார்.
ருத்ரன் "அம்மா என்ன செய்து கொண்டு இருக்குறீர்கள்?" என கேட்டான்.
பார்வதி " சீக்கிரமாக வந்துட்டியா பா... மிளகு தட்டி போட்டு மிளகு ரசம் வைத்து கொண்டிடுக்கிறேன். உமையாவுக்கு கொடுக்க உடல் லெசாக காய்வதை போல் இருக்கிறது." என கூறிக்கொண்டு அவனை திரும்பி பார்க்க அவன் அங்கு நின்றாள் தானே..
தனது அம்மா, உடல்நிலை சரி இல்லாமல் இருந்தால் மட்டுமே மிளகு ரசம் வைப்பார் என அறிந்து வைத்திருப்பவன், அவர் மிளகு ரசம் என்று கூறிய உடனே தன்னவளை காண சென்று விட்டான்.
போர்வையால் தன்னை முழுதாக போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள் உமையாள். அவள் பக்கத்தில் அமர்ந்தவன் போர்வையை விளக்கி அவள் நெற்றி தொட்டு பார்த்தான். தன்னவன் கை சூட்டை அறிந்தவள், கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள்.
ருத்ரன் அவளை பார்த்து "என்னடி செய்து, வா மருத்துவமனைக்கு செல்லலாம்." என அழைத்தான்.
உடனே மெல்ல எழுந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டு "வேண்டாம் ... என்னை கிளினிகுக்கு கூட்டி செல்லுங்கள்." என்றாள் உமையாள்.
அவனும் சரி என அவளை எழுப்பினான். கட்டிலை விட்டு மெல்ல எழுந்தவள் அப்படியே மயங்கி அவன் மீதே சரிந்தாள். அவளை தாங்கி பிடித்து கொண்டான். சட்டென பயந்தவன் அவள் கன்னத்தை கொஞ்சம் வேகம் கொடுத்து தட்டினான். சைட் மேசையில் உள்ள தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்.
கொஞ்சமே கொஞ்சம் கண்களை சிமிட்டினாள். மீண்டும் அவன், அவள் கன்னத்தை தட்ட மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். அவன் அவளை அவன் நேஞ்சோடு அனைத்து
"பயந்துட்டேன் டி... இப்போ ஓகே வா..." என கேட்டான் .
அவளும் மெலிதாய் தலை அசைக்க "சரி வா கிளினிக் போகலாம்." என கூறினான்.
மெல்ல அவளை கை தாங்களாக கிளினிக்குக்கு அழைத்து சென்றான். கிளினிக் சென்ற இருபது நிமிடத்தில் கூறி விட்டனர் அவள் கருவுற்றிருக்கிறாள் என்று. அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.
அத்தோடு அங்கு மகிழ்ச்சிக்கு குறைவில்லை. மகிழினி தனக்கு தம்பி பாபா வர போவதை எண்ணி ஆனந்தமாக வளம் வந்தாள். இதனிடையே நீலனுக்கும் கயலுக்கும் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவானது...
நீலனும் இவை அனைத்தையும் நினைத்து சிரித்து கொண்டிருந்தவன், ஐயர் குரல் கேட்க மனமேடை செல்ல தயாரானான். அவனை அழைத்து செல்ல ருத்ரனும் உமையாளும் வந்தனர்.
ருத்ரன் "வாங்க மாப்பிள்ளை போகலாம்." என்று கூப்பிட்டேன்.
அவனும் வெக்கம் கலந்த புன்னகையுடன் அவர்களுடன் சென்றான். பின் பெரியோர் முன்னிலையில் அவர்களின் ஆசீர்வாதத்துடன் நீலன் கயல் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.
அவர்களின் திருமணம் இனிதே முடிந்தது. இருவரையும் அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று அடுத்து நடக்கவிற்கும் சடங்குகளை செய்தார்கள். அவர்களின் அறையில் நீலன் காத்திருக்க, அலங்காரத்துடன் அறையினுள் வந்தாள் கயல்.
அவள் வெக்கம் கலந்த பதட்டத்துடன் அறையினுள் வர, அவளையே இமைசிமிட்டாது பார்த்துக்கொண்டிருந்தான் நீலன். அவள் கொண்டு வந்த பால் சொம்பை வாங்கி பக்கத்தில் இருந்த சிறு மொடா மீது வைத்து விட்டு அவளை பக்கத்தில் அமர வைத்தான்.
"சந்தோஷமா இருக்கியா?" என கேட்டான் நீலன்.
அதற்கு கயலோ "ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கேன்." என்றாள்.
உடனே நீலன் "அப்போ ஆரம்பிக்கலாமா?"
கயல் "எதை? எனக்கு புரியலையே."
நீலன் "அடியே... ரொம்ப நாளா உனக்காக காத்திருக்கேன் டி.. குட் பாய் ஆஹ் வாழ்த்தது அவ்ளோ குத்தமா? எதைனு கேக்குற?"
கயல் மௌனமாக சிரித்து கொண்டே " பேசிக்கிட்டே இருந்த டைம் தான் போகுது. எனக்கும் தூக்கம் வருது..." என இழுக்க
அதற்கு நீலன் "நான் தூங்க விட்ட தானடி" என்று கூறி கொண்டே அவளின் இதழ்களை சிறை செய்தான்.
பின் அங்கு நடந்த அனைத்திற்கும் இருவரும்தான் சம பொறுப்பு. இப்படியே இரு மாதங்கள் ஓடி உமையாள் அவளின் ஒன்பதாம் மாதத்தில் நின்றிருந்தாள்.. ருத்ரனும் பார்வதியும் சேர்ந்து அவளுக்கு பிரமாண்டமாக வளைகாப்பு செய்ய திட்டம் போடா, அது உமையாளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
ருத்ரன், உமையாளிடம் பல போராட்டங்கள் செய்து கடைசியில் எளிமையாக வளைகாப்பு செய்தால் அவளுக்கு சம்மதம் என கூறி விட்டாள். அதன் படியே நெருங்கிய சுற்றமும், உறவும், நட்பையும் மட்டும் அழைத்து எளிமையாக வளைகாப்பு நடத்தினார்கள்.
வளைகாப்பு முடிந்து இரண்டு நாட்களில் உமையாளுக்கு பிரசவ வலி வந்து விட்டது. ருத்ரன் அவளை மருத்துவமனையில் அனுமதிக்க, அடுத்த அரை மணிநேரத்தில் ருத்ரனின் தவப்புதல்வன் பூமியில் ஜனித்து விட்டான்.
நீலன், கயல், பார்வதி அம்மா, கமலம் அம்மா என அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. பூ துவாலையில் சுற்றி தாதியர் ஒருவர் ருத்ரனின் இளவரசனை தூக்கிக் கொண்டு வந்தார்.
அவரிடம் இருந்து அவன் மகனை ஏந்தி கொண்டான் ருத்ரன். அவனுக்கு இனம் புரிய சந்தோசம். அவன் பக்கத்தில் மகிழினி நின்றிருந்தாள்.
அவளிடம் "உன் தம்பிமா." என கூறி காட்டினான் அவளும் அவனின் பிஞ்சி கைகளையும் கால்களையும் தொட்டு பார்த்து மகிழ்ந்தாள்.
பின் மகனை தூக்கிக்கொண்டு உமையாள் இருந்த அறைக்கு சென்றான். அவனுடன் மகிழும் சென்றாள். குழந்தையை உமையாளிடம் கொடுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
ருத்ரன் "தேங்க்ஸ் டி... கடவுள் எனக்கு குடுத்த வரம் நீ ... அதே மாதிரி நீ எனக்கு குடுத்த வரம் இந்த இளவரிசியும் இந்த இளவரசனும்... உங்கள் மூவரை எப்போது என் கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பேன்.” என கூறினான்.
அவளும் அவனை கிட்ட இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். பின் இருவரும் அவர்களின் தலையை முட்டிக்கொள்ள மகிழ் உமையாளுக்கும் ருத்ரனுக்கும் நடுவில் அமர்ந்து அவள் தம்பியை மடியில் ஏந்தி ஒரு குடும்பமாக காட்சியளித்தனர். அவர்களின் வாழ்க்கை இனிதே மகிழ்ச்சியாக இன்னும் பல வருடம் பயணிக்க நாமும் கடவுளை வேண்டிக்கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெறுவோம்.
நன்றி
உங்களை இத்துடன் எனது அடுத்த கதையில் சந்திக்கிறேன்...